ஒத்த கல்லு மூக்குத்தி ஜொலிக்குதடி
முத்தமிடும் போது வந்து தடுக்குதடி
நான் முத்தமிடும் போது வந்து தடுக்குதடி
முத்தமிடக் கூடாத திருமணமா
மூக்குத்தி பஞ்சணையில் தடை செய்யுமா
இந்த மூக்குத்தி பஞ்சணையில் தடை
செய்யுமா
முத்தமிடும் போது..........
(ஒத்த கல்லு)
கள்ளோடு பூவிரண்டைக் கிள்ளியெடுத்துச்
சிறு கல்யாணக் கதைகளை சொல்லிக்
கொடுத்து
உள்ளூற உள்ளூற எண்ணிக் களித்து (2)
நான் உறக்கத்தில் விழிப்பேன் உன்னை
நினைத்து (2)
(கள்ளோடு)
(ஒத்த கல்லு)
வெள்ளரிப் பழம் பிளந்த பிள்ளைச் சிரிப்பு (2)
இன்று வேரோடு பூப்பறிக்க வந்த நினைப்பு (2)
முள்ளிருக்கும் பூவுமுண்டு பெண்களிடத்தில் (2)
அதை முன்னாலே சொல்லி விட்டேன்
கண்களிடத்தில் (2)
(ஒத்த கல்லு)