ஹாய் டியர்,
நானும் வந்திட்டேன்... எனக்கு பிடிச்ச ரொம்ப ஷார்ட் அண்ட் ஸ்வீட் ஸ்டோரி டியர்...
ரொம்ப எளிமையான கதை தான் ஆனா அழுத்தமா சொல்லியிருக்கடா... கோடி ரொம்ப ஸ்வீட் கண்டதும் காதல்ன்னு தொபுகடீர்ன்னு விழுந்தவன் திரும்ப அவளை தேடாமலே விட்டுட்டான் எனக்கும் அவன் மேல அந்த விஷயத்துல கோபம் தான்.
பாவம் எங்க பிள்ளை உமா தவியா தவிச்சு போயிட்டு பாவம்... கோடி ரொம்ப தான்டா உனக்கு பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டு இப்படி ஒரு வருஷம் கழிச்சு அதுவும் அவளா தான் உன்னை தேடி வந்திருக்க போல ஆகிட்டு... எப்படியோ சுசியால தான் ஆளு உன்னை வந்து பார்த்திருக்கா கோடி...
ரொம்ப நல்லவன்டா நீ தூரத்தில இருந்தே பார்த்தாராம் இவரு, அந்த பிள்ளை உன்னைய நினைச்சுட்டு இருந்திருக்கு நீரு அதைவிட்டு லுக் மட்டும் விட்டுகிட்டு இருந்திருக்கீரு... உமாவோட அந்த அழுத்தம் எனக்கு ரொம்ப பிடிச்சுது, பிடிச்சிருக்கு அப்படிங்கறதயும் சொல்லவும் முடியாம மெல்லவும் முடியாம தவிச்ச தவிப்பு அதை கோடிகிட்ட அவ வெளிப்படுத்தின விதம் எனக்கு ரொம்ப பிடிச்சுது... இன்னும் கொஞ்சம் கேரளாவை எங்களுக்கு சுத்திக்காட்டி இருக்கலாம்ன்னு ஒரு பீல் இருக்கத் தான் செஞ்சுது...
அப்புறம் கடைசியா ஒண்ணு எங்க செல்ல குட்டி அபி... சோ ஸ்வீட் பேபி அபி கண்ணா நீங்களும் உங்கப்பா மாதிரியே அம்மாவை தேடுறீங்களே உங்கப்பா கண்ணுல லைட்டா பொறாமை தெரியுதுடா தங்கம்...
நல்ல கதைடா சக்தி வாழ்த்துக்கள்...