P17 Uppuk Kattru

Advertisement

ramyarajan

Writers Team
Tamil Novel Writer
Will come with the epi tomorrow friends :)


ரோஜாவின் மனநிலை கருதி திருமணத்திற்கு பிறகு வரவேற்பு போல எல்லாம் நிற்கவில்லை. சர்ச்சில் திருமணம் முடிந்து, அங்கே மட்டும் சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு, மதிய உணவை முடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்துவிட்டனர்.
ரோஜாவும் அவள் அப்பாவை நினைத்து கண்கள் கலங்கியபடி தான் இருந்தாள்.
“உன்னை நான் ரொம்ப கஷ்ட்டபடுத்துறேன் இல்ல... எனக்கு வேற வழி இல்லை ரோஜா புரிஞ்சிக்கோ....” அருள் சொன்ன போது, “நான் இப்ப ஒன்னும் சொல்லலையே... நீங்க ஏன் வீணா கஷ்ட்டப்படுத்திகிறீங்க? நான் நல்லத்தான் இருக்கேன்.” என்றாள் பதிலுக்கு.
இருவரும் அருள் வீட்டில் இருந்தனர். ராத்திரிக்கு உணவு எடுத்து வருகிறேன் என்ற ஸ்டெல்லாவிடம் மறுத்து இருந்தனர்.
மதிய திருமண விருந்தே மிஞ்சி இருந்தது. ஆனால் அருள் அதை மற்றவர்களை பகிர்ந்து எடுத்துக்கொள்ள சொல்லி இருந்தான். அங்கிருந்தவர்களும் சந்தோஷமாக எடுத்துக் கொண்டு சென்றிருந்தனர்.
*********************************************************************************************


“தாத்தா, இங்க ஏற்கனவே நிச்சயமான பெண்ணோட, நேத்து எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு.” என்றான் மறையாது.
அருள் சொன்னதைக் கேட்டதும் சாரதிக்கு அப்படியொரு அதிர்ச்சி. அன்று தாங்கள் சொன்ன போது... அருள் அமைதியாக இருந்ததே, அவருக்கு சந்தேகமாகத்தான் இருந்தது. ஆனால் அவன் இவ்வளவு வேகமாக இருப்பான் என அவர் எதிர்ப்பார்க்கவில்லை.
“ஏன் பரத் இப்படி பண்ண?”
“நீங்க எல்லாம் என்னை பரத்தா மட்டும் தான் பார்க்கிறீங்க. நான் அருளா இருந்ததை மறந்துடீங்க.”
“நீங்க எங்களை பிரிச்சிடுவீங்களோன்னு பயத்தில நான் இப்படி அவசரமா கல்யாணம் பண்ணலை...”
“என்னை யாரும் அப்படி பணிய வைக்கவும் முடியாது.”
“இந்தக் கல்யாணத்தை பத்தி நான் பேசி, நீங்க மறுத்து, நமக்குள்ள விரிசல் தான் அதிகமாகும். நான் கல்யாணத்துக்கு கேட்டு நீங்க சம்மதிக்கலைன்னா, அது எனக்கு வருத்தம். நான் உங்க பேச்சை மீறி கல்யாணம் பண்ணா, அது உங்களுக்கு வருத்தம். அதுதான் நான் யார்கிட்டையும் சொல்லலை... பவித்ரா கிட்ட கூட சொல்லலை.”
“நான்தான் விரும்பி ரோஜாவை பெண் கேட்டேன். இப்ப அவளையே கல்யாணம் நான் கல்யாணம் பண்ணிகிட்டேன்.”


******************************************************************************************************

“நீயா இப்படி பண்ண என்னால நம்பவே முடியல....உனக்கு என்கிட்டே சொல்லனும்ன்னு கூட தோணலையா அண்ணா.”
“எனக்கு இருக்கிறது நீ மட்டும் தான் பவி. நீ இல்லாம கல்யாணம் பண்ண எனக்கு எவ்வளவு கஷ்ட்டமா இருந்திருக்கும். நான் வேற யாரும் வரணும்ன்னு நினைக்கலை... நீ மட்டும் இருந்தா போதும்ன்னு தான் இருந்தேன். ஆனா நீ எனக்கு சப்போர்ட் பண்ணி இருப்பியா?”
“நான் உன் காதலுக்கு எதிரி இல்லை அண்ணா...ஆனா அதே சமயம் நீ கஷ்ட்டப்படுறது என்னால பார்க்க முடியாது.”
“என்கிட்டே பணம் மட்டும் தான் பவி இல்லை. பணம் மட்டுமே வாழ்க்கை ஆகிட முடியாது.”
“உனக்கு நான் இப்ப என்ன சொன்னாலும் தப்பத்தான் தெரியும்.”
“இல்லை... நீ என் நல்லதுக்குத்தான் சொல்றன்னு எனக்கு புரியாம இல்லை. என் மேல நம்பிக்கை வை பவி.... ஒருநாள் உங்க அண்ணனும் பெரிய ஆளா வருவான்னு நம்பிக்கை வை... நான் இப்படியே இருந்திட மாட்டேன் என்னை நம்பு.”
 

Joher

Well-Known Member
:love::love::love:

என்னை யாரும் அடிபணியவைக்க முடியாது (y)(y)(y)
அருள் ரோஜாக்கு மட்டும் தான் :love:

அச்சச்சோ....... ரோஜா தாத்தா தங்கை எல்லோருக்கும் விளக்கம் சொல்லும் நிலை அருளுக்கு :rolleyes:
ரோஜா புரிஞ்சுக்குவா........
தாத்தா சொன்னதும் சித்தப்பா அத்தை ரேஷ்மா என்ன பண்ணுவாங்களா???
பவியை மாதவன் சரிபண்ணிடுவான்.....
சித்தப்பா இதான் சான்ஸ் னு சொத்தை அமுக்க try பண்ணுவார்......
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அப்பாடா
ஒரு வழியா ரோஜாவுடன் மேரேஜ்
ஆனதை தாத்தா and பவித்ராவிடம்
அருள் சொல்லிட்டான்
இனி அருள் சென்னை போகப்
போவதில்லையா?
வேளாங்கண்ணியிலேயே இருந்துடப் போறானா?
இங்கே இருந்து பழையபடி மீன் பிடிக்கப் போவானா?
இல்லை சென்னையில் செய்ததை
இங்கே தொழில் செஞ்சு தங்கையிடம் சொன்ன மாதிரி முன்னேறுவானோ?
தாத்தா சாரதி என்ன செய்யப் போறார்?
பரத்தின் அப்பாவுக்கு உரிய பங்கு சொத்தை அருளிடம் கொடுப்பாரா?
அருளுக்கு ஒரு யூனிட் கொடுப்பதாக சொன்னாரே
கொடுப்பாரா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top