Twitter Vimeo VKontakte Youtube
Sign in
  • Home
  • Book Store
  • Contact Us
Sign in
Welcome!Log into your account
Forgot your password?
Password recovery
Recover your password
Search
Sunday, May 11, 2025
  • Sign in / Join
  • Connect
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.
Tamil Novels and Stories
  • Home
  • Book Store
  • Contact Us

மேகம் கறுக்குது… இதழ் 02 ‘இவ எங்கே போனா’ என்றவாறே வெளியில் வந்தவள் அதிர்ந்து இரண்டடி பின்னால் போனாள் ” அண்ணா…அ…அது வந்து…” என திக்கி தினறியவள் கையில் இருந்த பிஸ்கட் பாக்கெட்டை தனக்கு பின்னால் மறைத்துக்கொண்டாள். “ஆத்மி… நீ ஒன்றும் மறைக்கத்தேவையில்லை. அதை முதலே நான் பார்த்து விட்டேன். அம்மா கேக் தானே கொடுக்கச்சொன்னார்கள். நீ என்னடா என்றால் பிஸ்கட் அதுவும் என்ன பிஸ்கட் என்று கவனிக்காமல் நாய்க்கு போடுற பிஸ்கட்டை எடுத்து கொண்டு வந்து நிற்கின்றாயே…” என கூறவும் தான் அவள் அதை முன்னுக்கு எடுத்து பார்த்தவள் திகைத்து நின்றவள். “அண்ணா சாரி நான் வேணும் என்று இதை எடுத்துவரவில்லை என தினறினாள். “இட்ஸ் ஓகே ஆத்மி. நம்ம ரைகர் அளவுக்கெல்லாம் அவளுக்கு இங்கே மதிப்பு கிடையாது. அதனால் நீ டோன்ட் வொறி.” என அவன் கூறவும் அவனுக்கு பின் இருந்த இருவரில் ஒருவர் முகம் வேதனையையும், மற்றவர் முகத்தில் என்ன? இருக்கின்றது என கண்டறிய வண்ணம் இறுகியபடி இருந்தது. “சரி நீ உன் றூமுக்கு போ. நான் என்னுடைய றூமுக்கு போகின்றேன்.” என கூறியபடி திரும்பியவன் கண்டது கலங்கிய அவன் தாயின் கண்களையும், எந்த உணர்ச்சிகளையும் காட்டாது நின்ற அவள் முகத்தையும் தான். “அம்மா…” என்றவாறு அருகில் சென்றவன். தாயின் முன் நிற்கவும், மேகனா எதற்காக திரும்பி வந்தாளோ…? அந்த வேலையை பார்த்துக்கொண்டு உள்ளே சென்றாள். மறுபடியும் பூரிக்கு குழைத்து வைத்த மாவை ப்ரிஜ்ஜுக்குள் வைக்க மறந்து விட்டதை உணர்ந்து திரும்பி வந்தால். அவளை விட நாயை உயர்த்திக்கூறி சிறந்த ஒப்பிடல். இது என்ன? புதுசா? அவளிற்கு. இந்த ஐந்து வருட வாழ்வில், தானே ஐந்தறிவாக மாறிவிட்டதை உணர்ந்தாள். இப்படி எத்தனை முறை வார்த்தைகளால் ‘துடிக்க துடிக்க’ வதை பட்டாயிற்று. இப்போது மரத்து போன மனதுக்கு எங்கிருந்து வலி தோன்றும். மாவை உள்ளே வைத்து விட்டு, அவள் வெளியேறினாள். அவளது அத்தை அழுவதும், அவரை அவளது கணவன் சமாதானப்படுத்துவதும் அவளது பார்வை வட்டத்திற்குள் விழத்தான் செய்தது. ஆனால் அவளால் அருகில் பேய் ஆறுதல் கூறமுடியுமா… ? இல்லை. அதனால் ஒன்றும் பேசாது வெளியேறி விட்டாள். தன் இடத்தில் வந்து உடம்பு கழுவி படுக்கை விரித்து படுத்தவளிற்கு பசி வயிற்றை கிள்ளியது. பசி தூக்கத்தை துரத்தி விட்டது. எழுந்து ஏதாவது உண்பதற்கே இருக்கின்றதா? என பார்த்தவளிற்கு ஏமாற்றமே…! நல்ல வேளை தண்ணீர் போத்தலுக்குள் தண்ணீர் இருக்கவும், அவ்வளவு நீரையும் குடித்து விட்டு போத்தலை கீழே போட்டவள் வயிற்றை இரண்டு கைகளாலும் இறுக அமத்தி வைத்துக்கொண்டு சுருண்டு படுத்துக்கொண்டாள். உடம்பு அசதியும், பசி மயக்கமும் சேர்ந்து சிறிது நேரத்திலே… தூக்கம் தழுவியது. இங்கே வேண்டாம். மேலே போகலாம் என தாய் கூறிவிட்டு செல்ல, மூன்றாவது மாடியில் அவனது அறையோடு சேர்ந்திருந்த பெரிய பல்கணியில் தாய்க்கும், மகனுக்கும் நேரம் கடந்தும் வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது. “ஏன்? ஆதி ஏன்? நீயா…? இப்படி ஈவு, இரக்கமில்லாமல் பேசுவது. இப்படியே வாழ்க்கை முழுவதும் அவளை குதறிக்கொண்டே இருக்கப் போகின்றாயா…? அவ எப்படி இருக்க வேண்டிய பெண், அப்படிப்பட்டவளிற்கு சம்பளம் கொடுத்து… வீட்டோடு வேலைக்காரியாக வைத்திருக்கின்றாய். ஏன்? என்று யாராவது கேட்டால் உடனே வீட்டை விட்டு வெளியேறுவேன் என்று பிளாக்மெயில் பண்ணுவாய். தொழில் முழுவதையும் நீயே பார்த்துக்கொண்டிருப்பதனால் உனக்கு கீழே நாங்கள் எல்லோரும் பணிந்து இருக்க வேண்டும் என்று நினைக்கிறாயா…? உன், சித்தப்பா, அத்தை, எல்லோரும் எவ்வளவு வருத்தப்படுவார்கள் என்று தெரிந்தே வேணும் என்று பண்ணுகின்றாயா…? இப்படியே உன் இஸ்ரத்துக்கு எல்லாத்தையும் செய். அதை எல்லாம் பார்க்க நான் இருக்க மாட்டேன் அவ்வளவு தான். ” “என்னம்மா… மறுபடியும் என்னை பிளாக்மெயில் பண்ணலாம் என்று நினைக்கிறீர்களா…? உங்க ரேன் முடிஞ்சுது. இப்போது என் ரைம். இப்படி எல்லாம் ஆகக்கூடாது என்று தான் தலைபாடா அடிச்சுக்கிட்டேன்… நீங்க எல்லோரும் நினைச்சதை நிலையா நின்று சாதிச்சுட்டிங்க. இப்ப அனுபவிக்கிறீங்க… எனக்கும் இப்படித்தான் வலிச்சுது. இப்பவும் என்னை காதலிச்ச பாவத்துக்கு அனுராதா கல்யாணம் கூட பண்ணாமல் என்னை நினைத்துக்கொண்டே… தான் இருக்கிறா…!” “அவளை தவிர என் மனதில் யாருக்கும் இடமில்லை. அடம்பிடிச்சு, அடாவடித்தனம் பண்ணி கட்டிக்கிட்டா… அனுபவிக்கட்டும்… சரியான இம்சை. நான் இல்லாத நேரத்தில எல்லோரும் சேர்ந்து அவளை தலைக்கு மேல் வைத்து கொண்டாடுகிறீங்க… கும்மாளம் போடுறீங்க… நான் இருந்தாலும் கண்ணால பேச்சு வார்த்தை நடாத்திக்கொண்டு தானே இருக்கீங்க…! பிறகு என்ன? இதுக்கு மேலே அவ சம்மந்தப்பட்ட எதுவும் என் காதுக்கு வரக்கூடாது… வந்தால் ஆதவனின் இன்னொரு கோணத்தை பார்ப்பீங்க அம்மா… ” என்றான். ‘பய எமாதகனா இருக்கின்றானே…!’ என நொந்தவர். “அப்படியா….? நானும் சொல்லுறதை நன்றாக கவனி… ஆதி… நான் உன்னை மேனகா பின்னால் அவளுடைய காதலை யாசகம் கேட்டு அலைய வைத்து… அவளுக்கும் உனக்கும் பிறக்கும் பேரக்குழந்தைகளை கொஞ்சி விளையாடவில்லை தி கிரேட் பிஸ்னஸ்மன் ஆதியோட அம்மா…. சரிதாசரவணன் இல்லை. இது என்னோட சபதம்டா… ” “சரி… பார்க்கலாம். இப்போது பேய்கள் உலவும் நேரம். நீங்கள் போய் படுங்கள் ஏற்கனவே உடம்பு சரியில்லை. ” “தேவையில்லை உன்னோட அக்கறை எனக்கு.” என்றவாறு தன் அறைக்குள் சென்று மறைந்தார். ‘ச்சே… இவளை முதல்ல பணத்தை குடுத்தாவது இடத்தை காலி பண்ண வைக்கணும்.’ என்றவாறு தூங்குவதற்காக சென்றான். அடுத்த நாள் விடிந்து மேகனா வீட்டுக்குள் நுழையும் போதே, வீடே பதற்றத்தில் இருந்தது. அவளுக்கு என்னவென்று புரியவில்லை. யாருக்கு என்ன? என்று வேலைக்காரம்மா… காந்தாவை அவள் விசாரிக்கவும் “என்ன? மேகா புள்ள உனக்கு தெரியாதா… ? சரிதா அம்மாக்கு உடம்பு சரியில்லை. ரொம்ப சீரியசாக இருக்கு என்று பிரைவேட் ஆஸ்பத்திரிக்கு கொண்டு பேய் இருக்காங்க. ” “உடம்புக்கு முடியவில்லையா…! உடம்புக்கு என்ன? என்று தெரியாதா? காந்தா… ?” “சரியான வயிற்றுவலி… ரொம்ப முடியாமல் தான் பிரைவேட் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனார்கள். ” “அப்படியா… அத்தை வலி தாங்கமாட்டார்களே…!” என நினைக்கும் போதே அவள் கண்கள் கலங்கின. சற்று நேரம் கழித்து வீட்டுக்கு வந்த அவளது மாமனார் சோர்ந்து போய் ஷோபாவில் இருக்கவும் ஸ்ரோங்காக ஒரு இஞ்சி ரீயுடன் அவர் அருகில் சென்று மண்டியிட்டு அமர்ந்தாள். “மாமா… அத்தைக்கு ஒண்ணுமில்லை தானே… டாக்டர்ஸ் என்ன? செயலாளர்கள். ” என்றாள். “தெரியல்ல… ஸ்கான் றிசல்ட் இன்னும் வரல்ல… மயக்கமா தான் இருக்கிறா… சேலைன் ஏத்தி விட்டிருக்கு. ஆப்ரேசன் பண்ண வேண்டி வரும் என்று சொன்னதால் அதற்கான சாமான்களை எடுத்துப்போக வந்தேன்.” என்றார். “மாமா… இதை குடியுங்கள். அத்தைக்கு, அவங்க நல்ல மனசுக்கு… அவங்களுக்கு எதுவும் ஆகாமல் கடவுள் பார்த்துக்கொள்வார்.” என்றவள் பெட்சீட், தலையணை, ப்ளாஸ்க்,என தேவையான பொருட்களை எல்லாம் பையினுள் வைத்து கொடுத்து அனுப்பியவளுக்கு பதட்டமாகவே இருந்தது. ****** “ஹாஸ்பிட்டலில் ஆதவனை டாக்டர் அழைத்து அமரச்சொன்னவர் “மிஸ்டர் ஆதவன் பேசண்ட் உங்களுக்கு என்ன? உறவு.” “என்னுடைய அம்மா… டாக்டர்.” என்றவனுக்கு பதட்டத்தில் உடம்பெல்லாம் நடுங்கியது. “ஓகே… அவங்களுக்கு கற்பப்பையில் இரண்டு கட்டிகள் அவற்றை ஆபரேசன் பண்ணி எடுப்பது உயிருக்கே ஆபத்தாக கூட முடியும். அதனால் கற்பபையையே எடுக்க வேண்டிய நிலையில் இருக்கின்றது. போர்மாலிட்டீசை ஆரம்பிக்கலாமா?” என டாக்டர் கேட்டார். “டாக்டர் பயப்படுகின்றன மாதிரி எதுவும் இல்லையே…! ” “யங்மேன் டோன்ட்வொறி இப்போது இருக்கின்ற லேட்டஸ்ட் ரெக்னிக்கல் மெடிசின்ல இதெல்லாம் ஜுஜுபி மாட்டர். ஆனால் உடம்பு தேற கொஞ்சநாளாகும்.அதுமட்டுமல்லாது கூடியளவு ரெஸ்ட் தேவை. பாரதூரமான வேலைகள் செய்யக் கூடாது. ஆனால் பேசன்ட்க்கு பிபி குறைந்தால் தான் ஆபரேசன் பண்ண முடியும். இன்று ஈவினிங்கே ஆபரேசன் பண்ணலாம். ஆனால் அவங்க மனசில் எதோ பெரிய கவலை இருப்பது போல் இருக்கின்றத. அதை தீர்த்து வைக்க முயற்சி பண்ணுங்கள். அவங்க கட்டி வெடிக்கும் ஸ்ரேஜில் இருக்கு.” என்றவர் சென்று விட்டார். அவன் வெறித்தபடி அமர்ந்திருந்தான். அவரது மனதை அரிக்கும் விடயம் அவனுக்கு தெரியாதா…? ஆனால் அதனை எவ்வாறு அவன் தீர்த்து வைப்பான் என்று தான் தெரியவில்லை. தலையை பிடித்தபடி அமர்ந்திருந்தவனுக்கு தலை ‘விண்விண்’ என்று வலித்தது. இதற்கு சீக்கிரமாக ஒரு முடிவு காணவேண்டும் என மனதிற்குள் நினைத்துக்கொண்டான். தாயருகே அமர்ந்திருந்தவன், அவர் மயக்க நிலையிலும் ‘மேகா… மேகா’ என புலம்பியபடி இருந்தவரை பார்த்தவன் செய்வதறியாது திகைத்து நின்றான். றவுண்ட்ஸ் வந்த டாக்டர் அவரை பரிசோதித்து விட்டு, “ஆதவன் நீங்க ஏன் இப்படி முயற்சி செய்து பார்க்க கூடாது. இவங்க யாரையோ நினைத்து புலம்புவதால் அவங்களையே இவர் அருகில் கொண்டு வர முயற்சி செய்யுங்கள். சிலவேளை பிபி குறைவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றது. ” என கூறிச்சென்றார். அவனது தாய் முதல் நாள் இரவு பேசிய வார்த்தைகள் எல்லாம் அவன் மண்டைக்குள் இருந்து மணியடித்தன. அம்மாவுக்காக மேகாவை கூட்டிக்கொண்டு வந்து குடும்பம் நடத்தலாமா…? என்று கூட யோசித்தவன், பின்பு தந்தைக்கு ஃபோனை போட்டு “அப்பா வரும்போது மேகாவையும் கூட்டிக்கொண்டு வாருங்கள்.” என பணித்து விட்டு, கைவிரல் நகங்களை கடித்த வண்ணம் யோசனையில் ஆழ்ந்தான். சரவணனும், மேகாவும் மிகவும் அடித்துப்பிடித்துக்கொண்டு வரும் போது சரிதா ஆபரேசன் தியேட்டருக்குள் கொண்டு செல்லப்பட்டிருந்தார். “ஆதி ஈவினிங் தானே… ஆபரேசன் என்று சொன்னார்கள். இப்போது ஏன் உள்ளே கொண்டு போனார்கள். செல்லு ஆதி.” என தகப்பன் ‘படபட’த்தார். அவரை சமாதானப்படுத்தியவன் “திடீரென மறுபடியும் வலி தொடங்கிய விட்டது. லேட் பண்ணினால் ஆபத்தாக முடியக்கூடும் என டாக்டர்ஸ் சொன்னதால் உடனே ஆபரேசன் பண்ண வேண்டியதாக போய்விட்டது, அப்பா நீங்கள் ரென்சனாகாதீங்க…” “மாமா… வாங்க. வந்து இந்த இடத்தில் உட்காருங்கள், அப்புறம் உங்களுக்கும் பிபி ஏறினால் எங்கள் எல்லாரையும் பார்த்துக்கொள்வது யார்? மாமா. அத்தைக்கு எதுவும் ஆகாது.” என்று கூறியபடி அவரை அழைத்துக்கொண்டு போய் அமரவைத்தவள்,தானும் அவரருகில் அமர்ந்து கொண்டாள். கிட்டத்தட்ட நான்கைந்து மணித்தியாலங்கள் பலத்த போராட்டத்துக்கு பின் சரிதாவின் ஆபரேசன் வெற்றிகரமாக முடிந்தது. அதுவரையும் ஆதி குறுக்குநெடுக்காக நடந்தபடியே தான் உலாவிக்கொண்டிருந்தான். அவனை இரு என்று சொல்ல யாரால் முடியும். வழமையாக டாக்டர்ஸ் சொல்லும் அதே வார்த்தைகளை தான் “ஆபரேசன்சக்சஸ், பேசன்ட் நோர்மல், வாட்டுக்கு மாற்றப்பட்டு விட்டார். இப்போது மயக்கத்தில் இருக்கின்றார். மயக்கம் தெளிய குறைந்தது பன்னிரண்டு மணித்தியாலமாகும்.” என கூறி விட்டு சென்றனர். “மாமா இப்போது உள்ளே விடமாட்டார்கள். நீங்கள் போய் சாப்பிட்டு விட்டு வாருங்கள். அவரையும் கூட்டிக்கொண்டு போங்கள். ஏதாவது அவசரம் என்றாலும் நான் இங்கே இருக்கின்றேன்.” என கூறவும் அவர்கள் மறுப்புச்சொல்லாது கிளம்பி கன்ரீனுக்கு போனார்கள். அவளை பேச்சுக்கு கூட வருகின்றாயா? என கேட்கவில்லை. இரவு ஒன்பது மணிவரை தாய் கண்விழிப்பார் என காத்திருந்தவர்கள் இதற்கு மேல் தொல்லை பண்ணாது அவளை ஹாஸ்பிட்டலில் ‘விட்டுவிட்டு’ வீட்டுக்கு சென்றனர். இவளுக்கு தலையைசுத்தி, மயக்கமாக வந்தது. நேற்றிரவில் இருந்து இன்றிரவு ஒன்பது மணி வரை எதுவும் சாப்பிடவில்லை. அங்கிருந்த வோட்டர்கானில் இருந்த தண்ணீரை ‘மாறி மாறி’ குடித்துவிட்டு அமர்ந்திருந்தாள். வசதியெல்லாம் இருந்தும் பட்டினியால் இருப்பது எவ்வளவு கொடுமை. அவளது தாய், தந்தை இருந்திருந்தால் அவளை பட்டினி போட்டிருப்பார்களா…? அவர்களை நினைத்தவுடன் அவள் கண்கள் கசிந்தது. தனது முழங்காலில் தலையை கவிழ்த்து இருந்தவள் அப்படியே உறங்கிக் போனாள். காலையில் சீக்கிரமாக எழுந்து அத்தை விழித்து விட்டாரா… என பார்த்து விட்டு தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு அவசரமாக அவரருகில் வந்து அமர்ந்திருந்தவளுக்கு உடம்பெல்லாம் வலித்தது. அவள் சரிதாவையே பார்த்துக்கொண்டிருக்கவும் அவர் ‘சிறிது சிறிதாக’ கண்ணை அசைத்தவர் கொஞ்ச நேரத்தில் கண்ணைதிறந்ததார். கண்ணை திறந்து அவளை பார்த்ததும் அவர் கேட்ட முதல் கேள்வியே… “மேகாம்மா… சாப்பிட்டியா… ?” அவர் கேட்ட கேள்வியில் அவள் கண்களில் இருந்து ‘பொல பொல’வென்று கண்ணீர் வழிந்தது. “அத்தை… உங்களுக்கு ரொம்ப வலிக்குதா…? எனக்கு உங்களை விட்டால் இப்போதைக்கு யாருமில்லை… நீங்க உங்களுக்கு உடம்பு முடியல்ல என்றால் சொல்லக்கூடாதா… ” என அழுதாள். “நான் கேட்பதற்கு சரியான பதில் செல்லு மேகா. நீ… சாப்பிட்டியா… ? இல்லையா… ? என் மேல் சத்யம் உண்மையை சொல்லு” என்றார். அவள் இல்லை என்பதாய் தலையசைக்கவும், அவர் தன் கண்களை இறுக்கி மூடினால். மூடிய கண் வழியே கண்ணீர் வழிந்தோடியது. அதை துடைத்து விட்டவள், “அத்தை அழாதீங்க உங்களுக்கு உடம்பு சரியில்லை என்றவளும் அவருடன் சேர்ந்தழுதாள். எத்தனை நேரம் அழுவது என நினைத்தவள் தன்னை சமன் செய்து கொண்டு,சரிதாவை சுத்தப்படுத்தினாள். அவள் தன் வேலையை முடித்துக்கொண்டு மாமியார் அருகில் இருந்து கொண்டு அவருக்கு ஹோர்லிக்சை பதமாக ஆற்றி பருக்கியவள் வாயை தொடைத்து விட்டு அவரருகில் அமர்ந்து கதை பேசிக்கொண்டிருந்தாள். அப்போது அடித்துப்பிடித்துக் கொண்டு ஆதி உள்ளே வந்தான். “தாயைப்பார்த்து, அம்மா இப்போது உங்களுக்கு பரவாயில்லையா…? ரொம்ப வலிக்குதாம்மா…” என்றவனது கண்கள் கலங்கின. அவனது பேச்சை கேளாதவாறு தாய் முகத்தை திருப்பி, கண்ணை இறுக்கமாக மூடிக்கொண்டார். அவரது செயலால் அறை வாங்கியவன் போல திகைத்தவன், தான் கொண்டு வந்த உணவுப்பையை வைத்து விட்டு, அம்மாவுக்கான சாப்பாடு என்றவாறு அருகிலிருந்த கதிரையை இழுத்துப்போட்டு அமர்தவன், அவரது கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்தவன், மறுபடியும் “அம்மா என்கூட பேசமாட்டீங்களா… ?” என மறுபடியும் அவன் அழுவாரைப் போல கேட்டும் அவனது தாயார் திரும்பியும் பார்க்கவில்லை. தாய், மகனது சம்பாசனைக்கு நடுவில் அவள் செல்லாது, அவன் கொண்டு வந்த பையினுள் இருந்த உணவை எடுத்து தட்டில் வைத்தாள். பசியை மறந்திருந்த அவளது உணர்வுகள் விழித்துக்கொண்டது. ஆபரேசன் செய்த உடம்புக்கு இலகுவாக சமிபாடடையக்கூடிய வகையில் இடியாப்பமும், பாற்சொதியும் வைத்து அனுப்பப்பட்டிருந்தது. உணவுதட்டை மேசைமீது வைத்து விட்டு சாரதா அருகில் வரந்தவள் “அத்தை உங்களை எழுப்பி இருத்தட்டுமா?” எனக்கேட்க அவர் ஆம் என்பது போல தலையசைக்கவும் அவளை தலையணைகளை வாகுவாக அடுக்கச்சொல்லிவிட்டு, அவன் மிக மிருதுவாக பூமாலை போன்று தூக்கி அவரை தலையணைகள் மீது சாய்வாக அமர்த்தினான். அவள் சாப்பாட்டை பிசைந்து அத்தை வாயை திறவுங்கள் என்று ஒரு பிடியை வாயருகில் கண்டு செல்லவும் தலையை திருப்பி தனக்கு வேண்டாம் என்பது போல் போர்க்கொடியை தூக்கினார். “என்ன? அத்தை இது…! சின்னக்குழந்தை மாதிரி பிடிவாதம். உங்களை உடம்பு இப்ப வீக்காக இருக்கின்றது. ப்ளட் வேற நிறைய வெளியே போயிருக்கு. அத்தை சாப்பிட்டு தான் உடம்பை தேத்தணும். ப்ளீஸ் என் செல்லக்குட்டி அத்தை வாயை திறவுங்க.” என்று கெஞ்சி,மிஞ்சி எவ்வளவு வாதாடியும் வாயை திறக்கவில்லை. “அம்மா… என்னுடன் பேசவில்லை என்றாலும் பரவாயில்லை. நீங்க சாப்பாடு சாப்பிடாமல் நானும் இந்த இடத்தை விட்டு அசையப்போவதில்லை.” என தாயும், மகனும் போட்டிக்கு பிடிவாதத்தை காட்டினர். இவர்களது மெளன யுத்தம் தொடங்கி பத்து நிமிடம் முடியுமுன்னர் கதவை திறந்து உள்ளே வந்தார் சரவணன். வந்தவர் மனைவியின் கரங்களைப்பற்றி “சரிதா” என்றவரது குரல் தழுதழுத்தது. சரிதா கணவனை பார்த்து “நீங்கள் மேகாவுக்கு சாப்பாடு கொண்டு வந்தீர்களா…?” எனக்கேட்க அவர் இல்லை என்பது போல தலையசைக்கவும், மனைவி அவரைப்பார்த்து “எனக்கு பணம் கொடுங்கள்.” என்றார். “என்ன? சரிதா உனக்கு எதற்கு பணம். ஏதாவது வாங்கி வரவேண்டுமா?” “எனக்கு பணம் வேண்டும் என்றால் உங்களிடம் விளக்கம் சொல்லித்தான் வாங்க வேண்டும். அப்படித்தானே…” “இல்லம்மா… இந்தா…” என தனது பாக்கெட்டுக்குள் இருந்த பணத்தை எடுத்து மனைவியின் கையில் வைக்கப்போனவரை தடுத்தவர், “இந்தப்பணத்தை மேகாவிடம் கொடுங்கள்” என்றார்.

257
nithyasiva
ADVERTISEMENT:
© mallikamanivannan.com
error: Content is protected !!