Advertisement

மேலும் ஒரு வருடம் கழித்து..

 மாறனும் செழியனும் சற்றும் எதிர்பாராதவிதமாக சிறந்த விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் என்கிற அவார்டை மதுரை மாவட்ட கலெக்டர் மகேஷ்வர்மாவின் கையால் கொடுக்க பட உள்ளதாக ஒரு கடிதம் வந்தது மாறனுக்கும் செழியனுக்கும் தனித்தனியாக வந்தது..

 அதைப் பார்த்து இருவரும் குதூகலித்து அந்த சந்தோஷத்தை குடும்பத்துடன் கொண்டாடித் தீர்த்தார்கள்..

 அவர்களுக்கு அவார்ட் கிடைக்கும் நாளும் அழகாக விடிந்தது..

குழந்தைகளுக்கு தற்போதுதான் ஒரு வயது முடிந்து இருந்தபடியால் எழிலும் அன்பும் அவர்களுடன் செல்ல முடியவில்லை என்ற கவலையுடன் குழந்தைகளுடன் வீட்டில் இருந்தார்கள்..

அவர்களுக்கு துணையாக பூமணியும் ராசாத்தியும் இருந்தார்கள்.. மற்ற அனைவரும் காரில் மதுரைக்கு சென்று விட்டார்கள்..

 நேரம் காலை 10 மணி பாராட்டி பரிசளிக்கும் நிகழ்வு கலெக்டர் மகேஷ்வர்மாவின் வரவால் அழகாக ஆரம்பித்தது..

  •  கலெக்டர் மகேஷ் வர்மா பேசினான்.. ” இங்கு கூடியிருக்கும் மக்கள் அனைவருக்கும் எனது இனிய காலை வணக்கம்.. நமது இன்றைய நிகழ்வின் நாயகர்கள் மிஸ்டர் மணிமாறன் மிஸ்டர் அன்புச் செழியன்.. அவர்கள் புரிந்த சாதனையான ஒரு விஷயத்தைத் தான் இன்று நாம் பாராட்டி சிறந்த இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் என்கிற பட்டத்தை அவர்களுக்கு கொடுக்கப் போகிறோம்..

  •  அது என்னவென்றால் தற்காலத்தில் விவசாயத்தில் அதிகம் உட்செலுத்தப்படும் நவீன மருந்துகள் பூச்சிக்கொல்லிகள் போன்ற ரசாயன உரங்கள் மற்றும் கிருமி நாசினிகளை வைத்து விவசாயம் மற்றும் நெற்செய்கை  மற்றும் மரக்கறி வகைகள் போன்றவற்றை தயாரிப்பில் கிடைப்பவற்றை உட்கொண்டு நாம் பாரிய ஒரு நோய் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு எதிர்காலத்தில் நோயாளர்கள் அதிகமானோர் அடையாளம் காணப்படுகின்றனர்..

  • அதை பற்றி தீவிரமாக சிந்தித்து அவர்களால் முடிந்த அளவு அவர்களது இந்த ஊரையாவது அந்த நோய்களில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று முயற்சி செய்து இயற்கையாக விவசாயத்திற்கு உரங்களை தயாரித்து அவர்களே இயற்கை முறையில் புது வகையான நெல் பயிரை மன உறுதியோடு செய்து இன்று நமக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறார்கள்..

அவர்களைப் போன்று மற்றைய இளைஞர்களும் விவசாயத்தில் ஈடுபடுவார்கள்  என்றால் நம் நாட்டில் விவசாயத்தால் பாதிக்கப்படும் ஏழை மக்கள் குறைந்து போவார்கள்.. எதிர்கால சந்ததியினரும் ஆரோக்கியமான உணவை உட்கொண்டு நோயிலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியாக வாழ முடியும்..

 அவர்கள் செய்த புதுவகையான நெல் பற்றி மேலும் விவரங்கள் அவர்களே கூறுவார்கள்..” என்று கூறி மகேஷ் தனது உரையை நிறைவு செய்துவிட்டு இருக்கையில் அமர்ந்தான்..

அதன்பின் மாறனை அழைக்கவும் மாறன் பேசினான்..  ” இங்கு கூடியிருக்கும் அனைத்து விவசாய பெருமக்களுக்கும் எனது வணக்கம்..

நாங்க சுயமா எந்தவித சாதனையும் செய்யவில்லை.. நமது முன்னோர்கள் நமக்கு செய்து காட்டிய விவசாய முறையை பின்பற்றி தான் நானும் எனது மாமா அன்புச்செழியனும் இணைந்து இயற்கை முறை விவசாயத்தை ஆரம்பித்தோம்..

நான் ஒரு விவசாயி என்பதை மிகவும் மகிழ்ச்சியாகவும் புத்துணர்ச்சியுடனும் கூறிக்கொள்கிறேன்.. விவசாயத்தை பத்தி தான் படித்துள்ளேன்..

 கலெக்டர்   சார் சொன்னது போன்று இனிவரும் இளைஞர்களும் விவசாயிகள் என்று மார்தட்டிக் கொள்வதை நான் பெருமையாக நினைக்கிறேன்..

 நான் கூறும்  இந்த விஷயம் யாரையும் புண்படுத்துவதற்காக இல்லை..

உணவே மருந்து எனும் காலம் கடந்து மருந்தே உணவாகிவிட்டது…

 நாம் பிரதானமாக உண்ணும் உணவு சாதம்.. அதில் ஏன் அழகும் பாலிஷும் எதிர் பார்க்கிறார்கள் மக்கள் என்று எனக்கு தெரியவில்லை..

உண்ணும் உணவு ஆரோக்கியமாகவும் அதனால் பக்க விளைவு ஏற்படாமலும் இருந்தாலே அது நமக்கு வரம்.. இவ்வாறு நினைக்காமல் பாஸ்மதி என்ற வெளிநாட்டு அரிசியை அதிகம் மக்கள் நம் நாட்டிலும் பயன்படுத்துகிறார்கள்..

 வாரத்தில் ஒருநாள் குடும்பமாக சேர்ந்து பிரியாணி செய்து சாப்பிட்டு மகிழ்ந்தால் சரி.. ஆனால் சில மக்களோட தினமும் உணவே அந்த பாஸ்மதி அரிசி தான்..

 பாஸ்மதி அரிசி பார்ப்பதற்கு ஊசி போன்று அழகாகவும் பாலிஷ் ஆகவும் இருக்கும்.. சமைத்து உண்டால் மேலும் மேலும் அதிகமாக  சாப்பிட தோணும்..

 அது நம்மளை பாரிய ஒரு நோய் நிலைமையில் கொண்டு தள்ளும் என்பதை யாரும் உணர்வதில்லை… வாயில் வைத்தால் வழுவழுப்பாக மெதுவாக தொண்டையில் வழுக்கிக் கொண்டு செல்லும்.. இளைஞர்களும் சரி பெரியவர்களும் சரி அதை அதிகம் உண்கிறார்கள்..

  •  இதன் பக்க விளைவாக நீரழிவு நோய். புற்றுநோய். சர்க்கரை நோய்… ஆண்களோ பெண்களோ அதிகம் உடல் பெருத்தல்.. ஆண்களுக்கு அதிகம் தொப்பை போடுதல்… போன்ற நோய் நிலைமைகளையும் உடல் அமைப்புகளையும் மாற்றி நம்மை மிகவும் சிக்கலுக்கு உள்ளாக்குகின்றது…

பாஸ்மதி அரிசி மட்டும் இவற்றை செய்வதில்லை..  வெள்ளை அரிசிகள் அனைத்தும் இவ்வாறான நோய் நிலைமைகளை நம்மிடம் பரப்புகின்றது..

இனியாவது நாம் எதை உண்ண வேண்டும் இதனால் நமக்கு என்ன பயன் என்று ஆராய்ந்து நாமும் உண்டு நமது சந்ததியினருக்கும் அதையே எடுத்துச் சென்று வழிகாட்டுவோம்..

சிவப்பு அரிசி அதாவது தென்னிந்தியா பக்கம் கருப்பரிசி என்றும் கூறுவார்கள்.. இலங்கையில்  தவிட்டு அரிசி என்றும் கூறுவார்கள்..

 நாங்கள் செய்த நெல் பயிற்செய்கையும் சிவப்பு அரிசி வகையைச் சார்ந்த ஒன்று தான்..

 சிவப்பு அரிசி  பற்றிய பயன்களை எனது மாமா அன்புச்செழியன் உங்களுக்கு விவரமாக எடுத்துக் கூறுவார்.. ” என்று மாமனுக்கும் வழிபட்டு தனது உரையை முடித்துக் கொண்டு இருக்கையில் அமர்ந்தான் மணிமாறன்..

திடீரென அவன் இவ்வாறு  கூறுவான் என்று எதிர்பார்க்காத செழியனும் முதல் முதலாக இவ்வளவு சன கூட்டங்களில் பேச போவதை நினைத்து சற்று பதட்டமாக உணர்ந்தான்.. மாமனின்  நிலையை அறிந்த மாறன்.. தட்டி ஆறுதல் படுத்தி அவன் உடன் இருப்பதாக தைரியம் கூறி பேசுவதற்கு அனுப்பி வைத்தான்..

 செழியனும்  தைரியமாக எழுந்து சென்றான்..

” இங்கு கூடியிருக்கும் அனைவருக்கும் எனது வணக்கம்.. இதற்கு முன் கலெக்டர் சாரும் எனது மருமகன் மணிமாறனும் நிறைய விஷயங்கள் விவசாயத்தை பற்றி கூறினார்கள்..

நாம் உண்ணும் உணவு நமக்கு மருந்தாக இருக்கவேண்டும்.. நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி தற்காலத்தில் நாம் ஒரு கரோனா என்னும் கொடிய தொற்று  நோயால் போராடுவதற்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் அவசியமானது.. நாம் உண்ணும் உணவுகள் இயற்கையானதும் மருத்துவமானதமாகவும் இருக்க வேண்டும்..

 சிறந்த பல நோய்களை எதிர்க்கும் மருத்துவ குணம் படைத்த உணவே நாம் தினமும் உண்ணும் சாதமாகும்..

 அதைப் பற்றிதான் தற்போது பார்க்க போகின்றோம்..

 நமது முன்னோர்கள் நமக்கு ஆரோக்கியமான உணவு வகைகளை தான் தந்து நமது உடல் ஆரோக்கியத்தையும் உள ஆரோக்கியத்தையும் சீராக கவனித்துக் கொண்டார்கள்.. நூறு வருடத்தையும் கடந்தும் ஆரோக்கியமாக வாழ்பவர்களும் இருக்கின்றார்கள்.. அதற்கு ஒரே காரணம் இயற்கை முறை உணவு வகைகளே.. 

 நாம் தற்போது நார்ச்சத்தும் பல நோய்களை எதிர்க்கும் சக்தியும் கொண்ட சிகப்பு அரிசி பற்றி பார்க்க போகிறோம்..

 பாரம்பரிய   சிவப்பு அரிசி வகைகளும் அதன் பயன்பாடுகளும்..

 சிவப்பு அரிசி அதிகமாக தென்னிந்தியாவில் பயன்படுத்தப்படுகிறது..

  • மாப்பிள்ளை சம்பா..

 ஆண்களுக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் அதிகமாக ஊட்டச்சத்தை கொடுக்கக்கூடிய ஒரு வகையான பாரம்பரிய சிவப்பரிசி வகை..

  •  பூங்கார் அரிசி..

இது அதிகமாக கர்ப்பிணிப் பெண்களுக்கும் பூப்படைந்த பெண்களுக்கும் கொடுக்க படுகின்றது..

பெண் கருவுற்று குழந்தை ஆரோக்கியமாக பிறந்தது முதல் பாலுட்டும் வரை கொடுக்கப்படும் பத்திய உணவு வகையில் இது பெரும் பங்கு வகிக்கின்றது..

 பெண்களுக்கு  பிரசவத்தை மிகவும் எளிதாகவும் பெண்களையும் குழந்தைகளையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கும் இது மிகவும் உதவுகின்றது..

  •  ஒட்டுடையான் அரசி..

 இது சீனாவில் விளையும் கருப்புகவுணி எனும் சிவப்பு அரிசியை ஒத்த அரிசி ஆகும்..

 நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும்..  உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.. மேலும் பல நுண்ணூட்ட சத்துக்களை கொண்ட அரசி வகையாகும்..

  •  வாலன் சம்பா..

 இந்தியாவில் சிறப்பு வாய்ந்த சிறப்பு அரசியல் இதுவும் ஒன்று.. 300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட கடைமடை விவசாயிகள்   இதை பயிரிட்டு பலன் அடைந்து வருகிறார்கள்..

 உண்ணும் உணவு விரைவாக சமிபாடு அடைய உதவுகிறது..

 மேலும் ஆண்கள் பெண்கள் இருபாலருக்கும் எலும்புகளை பலப்படுத்தும் மிகவும் உறுதுணையாக உள்ளது..

  •  குழியடிச்சான் அரிசி..

 இந்த அரிசி வகையை பயிரிட்டு ஒரு மழை பெய்தால் போதும்.. அறுவடைக்கு தயாராகிவிடும்.. இது பூங்கார் அரசியின் பலன்களை ஒத்தது..

  •  சுரக்குருவை அரசி..

இது தமிழ் நாட்டை பூர்விகமாகக் கொண்ட அரிசி வகையாகும்..

எலும்பு சத்துக்கள் மற்றும் உடலை எப்போதும் புத்துணர்ச்சியாக வைத்திருப்பதற்கு உதவுகிறது..

உடல் வலி கால் வலி மற்றும் மூட்டு வலி போன்றவற்றிற்கு இது மருந்தாக இருக்கிறது.. அத்தோடு புற்று நோய் மற்றும் சர்க்கரை நோய் களையும் கட்டுப்படுத்துகிறது..

  •  சிவப்புக்கவுனி அரிசி..

 இதில் சிவப்பு அரிசி வகைகளில் மிகவும் சிறப்பானது..

 இதயத்தை  பலப்படுத்துவதற்கும்..

 ரத்தக்கொதிப்பை குறைப்பதற்கும் உதவுகிறது..

 இது பல வெள்ளை அரிசிகளிலும் பார்க்க மிகவும் அதிக சத்து வாய்ந்தது..

 குறிப்பு.. இதை கர்ப்பிணி பெண்கள் மட்டும் உண்ண கூடாது..

  •  குடவாழை அரிசி..

 இது பண்டைய பாரம்பரிய அரிசி வகைகளில் ஒன்று..

 குடலிலுள்ள அசுத்தங்களை சுத்தப்படுத்துவதே இதன் சிறப்பான தொழில்பாடாகும்..

 இதில் புரதச்சத்து நார்ச்சத்து தாதுச்சத்து உப்புச்சத்து. போன்ற சத்து வகைகள் அதிகம் காணப்படுகிறது..

 மேலும் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி உடலை எப்பொழுதும் புத்துணர்வாக வைத்துக்கொள்ள உதவுகிறது…

  • நவரா அரிசி..

 இது மேற்கு தொடர்ச்சி மலையிலும் கேரளாவிலும் அதிகம் பயிர் செய்யப்படுகிறது..

 இந்த அரிசி வகை ஆயுள்வேத  அரிசி வகை என அறியப்படுகிறது..

 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவர்களுக்கு  பிடிக்கும் சளி மற்றும் இருமலை இலகுவில் இந்த அரசி வகை உணவு குணப்படுத்தும்..

  • அறுபதாம் குருவை அரிசி..

 இது குறுகிய 60 நாட்களில் விளைச்சலை தரும் அரசி வகையாகும்..

 இதுவும் சமைத்தபின் மிகவும் மென்மையாகவும் இலகுவில் செரிமானம் அடையக் கூடியதும் ஆகும்..

 மேலும் அதிக வேலைப்பளுவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சோர்வினால் ஏற்படும் உடல் அசதியைப் போக்கி மீண்டும் புத்துயிர் கொடுத்து இளமையில் ஏற்படும் முதுமை தோற்றத்தை அடியோடு தடை செய்யும்..

  •  காட்டுயாணம் அரசி..

இந்த அரிசியை பயிர் செய்த மூதாதையர்கள் பயிர் செய்த பின் மீண்டும் அறுவடைக்கு மட்டுமே சென்று அறுவடை செய்து வருவார்கள்..

 உடலுக்கு அத்தியாவசியமான வைட்டமின் மினரல்ஸ் மற்றும் பாஸ்பரஸ் பொட்டாசியம் மெக்னீசியம்..போன்ற ஊட்டச்சத்துக்கள் இதில் அதிகம் உள்ளது..

பெண்களுக்கு ஏற்படும் எலும்பு தேய்மானத்தை மிகவும் குறைக்கின்றது..

  •  குள்ளக்காரர் அரிசி..

 இந்த அரிசி வகை வறட்சி காலத்திலும் அதிக விளைச்சலை கொடுக்கும்..

 பருவத்திற்கும் நிலத்திற்கும்  ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு விளைச்சலைத் தரும்..

அதிகப்படியான மழை மற்றும் அதிகப்படியான வறட்சியையும் தாங்கும்..

 இப்படி நமது நாட்டு சொத்துக்களான இந்த வகையான சிவப்பரிசி களை நாம் தினமும் உணவுகளில் உட்கொண்டால் மேற்குறிப்பிட்ட நோய்களில் இருந்து நம்மை காப்பாற்றும்.. அதற்கு இது உதவி நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும்..

 இதில் நாங்கள் ஒரு வருடமாக மூன்று போகத்தில் இயற்கையாக உரம் தயாரித்து முன்னோர்கள் மற்றும் தேடலின் மூலம் அறிந்து கொண்ட தகவல்களை வைத்து நாங்கள் செய்த நெல் வகை பூங்கார் எனும் சிகப்பரிசி நெல்லாகும்..

 அதனைத் தொடர்ந்து இனி எங்களது விவசாய நிலத்தில் மேற்குறிப்பிட்ட வகையான நெல் வகைகளை தேடி பெற்றுக்கொண்டு  ஒவ்வொரு வருடமும் 3 போகதிற்கும் ஒரு நெல் வகை என பயிர் செய்ய உள்ளோம்..

 எங்களை முன்னுதாரணமாகக் கொண்டு இளைஞர்கள் இந்த வகையான ஆரோக்கியமான விவசாயத்தில் ஈடுபடுவார்கள் என்றால் அவர்களுக்கு எங்களால் இயன்ற விளகங்களையும் உதவிகளையும் செய்து தர முடியும்..

 நாம் உண்ணும் உணவு நமக்கு பயனுள்ளதாகவும் மற்றும் மருத்துவ குணம் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும் என கூறிக்கொண்டு நானும் விடை பெருகின்றேன்..” என்று செழியனின் அவனது உரையை முடித்துக் கொண்டு இருக்கையில் அமர்ந்தான்..

அதன்பின் மகேஷ் வர்மா எழுந்து..

” மிகவும் ஆச்சரியத்திற்கு உள்ளான விஷயம்.. சிவப்பரிசி வகைகளில் எத்தனை வகைகள் அரிசி இருக்கின்றது என்று தீவிரமாக ஆராய்ந்து அதன் பலன்களையும் மக்களுக்கு தெரியப்படுத்தி அதை பயிர் செய்து விளைச்சலை பயனையும் பெற்று நமக்கு மாபெரும் உதவியாக இருக்கின்றார்கள் இருவரும்..

  இனிவரும் காலத்திலும்  அவர்களது சேவையும் ஆராய்ச்சியும் மேலும் வளர்ச்சி அடைந்து நமது நாட்டிற்கு நல்ல உதாரணமாக திகழ வேண்டும் என்று நாம் வாழ்த்தி அவர்களுக்கான சிறந்த இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் என்று  பாராட்டி பரிசளித்து  மகிழ்ச்சி அடைவோம்…

 வாங்க மிஸ்டர் செழியன் மற்றும் மாறன்.. ” என அவர்களை அழைத்து பதக்கத்தை அணிவித்து.. பாராட்டு சான்றிதழ் கொடுத்து..  பாராட்டி மதிய விருந்தும் மகேஷ் உடன் இணைந்து உண்டுவிட்டு அந்த நாளே மிகவும் மகிழ்ச்சியான நாளாக மாற்றி விட்டு அங்கிருந்து இருவரும் வீட்டிற்கு சென்றார்கள்..

 வீட்டிற்கு சென்றதும் அங்கு நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் கவி அனைவருக்கும் அவனது கைபேசியில் வீடியோவாக படம் பிடித்து வைத்திருந்ததை போட்டு காட்டினான்..

 அனைவரும் மாறனையும் பாராட்டிவிட்டு செழியன் இந்த அளவிற்கு பேசுவான் என்பதை புதிதாக பார்த்து ஆச்சரியப்பட்டார்கள்..

 அதன்பின் மாறனை அவனது சுண்டெலி ஃபுல் மீல்ஸ் பிரியாணியுடன் மிகவும் சிறப்பாக  கவனித்தாள்..

 செழியனின் சூப்பியோ  அன்பு மற்றும் பாசம் காதல் பாராட்டு என அனைத்தையும் வாரி வழங்கி அவளது மாமனை மிகவும் மகிழ்ச்சி கடலில் தள்ளினாள்..

Advertisement