போலீஸ் கண்ட்ரோல் ரூமுக்கு அழைத்து ஷாலினியின் அலைபேசி சமிக்ஞை மாறினால் தனக்கு தெரிவிக்குமாறு மாறன் கூறினாலும் அலைபேசியை அவள் வீட்டிலையே விட்டு விட்டு அவளை கடத்தி இருந்தால் என்ன செய்வது என்று சிந்தித்தவன். ஷாலினியின் வீட்டிலிருந்து செல்லும் அனைத்து பாதையையும் முடக்கி வாகனங்களை தரவாக பரிசோதிக்குமாறு உத்தரவிட்டவாறே ஷாலினியின் வீட்டை நோக்கி வண்டியை செலுத்தி இருந்தான்.
மாறன் ஷாலினியின் வீட்டை அடையும் பொழுது இருட்ட ஆரம்பித்திருந்தது. வண்டியை நிறுத்திய மாறன் ஓடாத குறையாக வீட்டையடைய கதவு திறந்துதான் இருந்தது.
ஷாலினினியின் அன்னை ஷாலினி பிறந்த உடனே இறந்து விட தந்தை காலேஜ் படிக்கும் பொழுது இறந்து விட அவளுக்கு எல்லாமே மாலினிதான்.
மாலினி இறந்த பிறகு தனியாகத்தான் சொந்த வீட்டில் வாழ்கிறாள். அவளுக்கு ஏதாவது ஆபத்து வரக் கூடும் என்று அன்று அவளை வீட்டு வாசலில் இறக்கி விட்ட பொழுது கூட நினைத்து பார்க்கவில்லை.
மாலினி ஏன் தற்கொலை செய்தாள் என்று தெரியாதவரை ஷாலினிக்கு ஆபத்து இருக்குமா? இல்லையா என்றும் தெரியாது. இதோ இன்று என்ன நடந்தது என்று கூட தெரியவில்லை.
மாறன் உள்ளே செல்லும் பொழுது வீடே கும்மிருட்டில் இருக்க, கையில் துப்பாக்கியை ஏந்திக்கொண்டு மாறன் மெதுவாக அடியெடுத்து வைத்தான்.
அவன் இரண்டு அடியெடுத்து வைத்திருப்பான். மின்குமிழ்கள் அனைத்தும் எரிந்து பிறந்தநாள் வாழ்த்து ஒலிக்கலானது. ஷாலினி கையில் கேக்கோடு நின்றிருந்தாள்.
இன்று மாறனின் பிறந்தநாள் என்பதையே அவன் மறந்திருந்தான். அவன் மட்டுமல்ல அவன் குடும்பமே மறந்துதான் போய் இருந்தனர். அதற்கு காரணமும் வெற்றியின் மரணம்தான்.
இருவரும் இரட்டைகள் ஒருவன் இல்லாத நிலையின் மாறனின் பிறந்தநாளை எப்படி கொண்டாடுவது. வெற்றியை நியாபகப்படுத்தும் எதையும் மாறனிடம் பேசக்கூடாது என்பது பூபதியின் கட்டளையாக இருக்க லதாவால் பெத்த மகனுக்கு வாழ்த்துக் கூட சொல்ல முடியவில்லை. அது போதாததற்கு காலையில் மாறன் மயங்கி விழும் முன் நடந்த நிகழ்வால் கோவில் பிரசாதம், திருநீர் என்று எல்லாவற்றையும் மறந்து விட்டாள்.
“உன்ன யாரோ கடத்திட்டங்கன்னு நான் பதறி துடிச்சிகிட்டு வந்தா நீ கேக்கோட நிக்கிற” துப்பாக்கியை இடுப்பில் சொருகியவன் “நீ ஏன் தனியா இங்க இருக்கணும். ஹாஸ்டல்ல இருக்கலாமே”
மாறனால் அவளோடு இருபத்தி நான்கு மணித்தியாலமும் இருக்க முடியாது. அவளுக்கு ஆபத்து இருக்கா? இல்லையா? என்று தெரியாமல் பாதுகாப்புக்கு ஏற்பாடும் செய்ய முடியாதே. அவள் மீதிருந்த அதீத அக்கறையில்தான் கூறினான்.
“என்ன பாத்துகிட்டு இருக்க வா வந்து கேக்க கட் பண்ணு” ஷாலினி அழைக்க அவளை முறைக்க முடியாமல் அவள் சொல்வதையெல்லாம் செய்யலானான் மாறன்.
இதுவே வேற யாராவது இப்படி செய்திருந்தால் அறைந்திருப்பான். ஆனால் அவள் மீது அவனுக்கு கோபமே வரவில்லை. அவனை கண்டதும் அவள் முகத்திலிருந்த சந்தோசத்தை பார்த்ததும் அவன் மனதில் காதல்தான் ஊர்றேடுத்தது.
ஷாலினி வெற்றியின் காதலி அவள் இருக்கும் திசை பக்கமே திரும்பக் கூடாது என்று மாறன் எடுத்த முடிவெல்லாம் அந்த கணம் மறந்து அவள் சொன்னதையெல்லாம் செய்ய துணிந்தான்.
அவள் கொடுத்த கத்தியை வாங்கிக் கொண்டவன் கேக்கை வெட்டி அவளுக்கு ஊட்டி விட்டான். ஷாலினியும் அவனுக்கு ஊட்டி விட்டு சாப்பிட எடுத்து வைத்தாள்.
“நானே என் கையாள சமாச்சது. ஹாஸ்டல்ல இருந்தா இந்த மாதிரி சமைச்சி கொடுக்க முடியுமா? கல்யாணத்துக்கு முன்னாடி இப்படி தனியாத்தான் சந்திக்க முடியுமா?” கண்ணடித்தவள் பரிமாற மாறனும் சிரித்தவாறே சாப்பிட ஆரம்பித்தான்.
ஷாலினியை திருமணம் செய்துகொண்டு அவளோடு சந்தோசமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தால் எப்படிப்பட்ட மனநிலையில் இருந்திருப்பானோ அப்படியொரு மனநிலையில் இருந்தான் மாறன்.
அவளோடு இருக்கும் ஒவ்வொரு நொடியும் தன்னையே மறந்து அவள் சொல்வதையெல்லாம் செய்யலானான்.
“ஆமா நீ என்ன வேல பாக்குற?”
“பாருடா சாருக்கு இப்போதான் நான் என்ன பண்ணுறேன்னு கேக்க தோணி இருக்கு. அதெல்லாம் சொல்ல முடியாது. நீ போலீஸ் தானே நீயே கண்டு பிடி” கண்சிமிட்டி சிரித்தவள் சாப்பிடலானாள்.
சத்தமாக சிரித்தாள் ஷாலினி. அவளை பொறுத்தவரையில் மாறனுக்கு எல்லாம் மறந்து போய் விட்டது. என்னதான் மறந்து போனாலும் அவன் போலீஸ் மூளை இங்கிருக்கும் பொருட்களை வைத்து கண்டு பிடித்து விடும் என்று அவள் மனம் சொல்ல கண்டுபிடிக்க சொன்னாள்.
இவன் என்னடான்னா மூளையை உபயோகிக்காமல் மூக்கை உபயோகிக்கின்றான் என்றுதான் சிரித்தாள்.
“உனக்கு எல்லாம் மறந்தாலும் நீ மாறவே இல்ல வெற்றிமாறா” ஷாலினி வாய் விட்டே கூற, மாறனுக்கு அவள் வெற்றி என்று அழைத்ததில் உண்மை சுட இதயத்தில் ஈட்டி பாய்ந்த உணர்வில் தலையில் சுர்ரென்று வலி ஏறி துடிக்கலானான்.
“என்னாச்சு மாறன்?” ஷாலினி பதற
“ஒண்ணுமில்ல” கைகழுவியவன் தனது கால்சட்டையினுள் வைத்திருந்த மாத்திரையை எடுத்து அருந்திவிட்டு கண்மூடி சோபாவில் சாய்ந்தான்.
“ஷாலினி அவன் தலையை இதமாக பிடித்துவிட அவள் மடியிலையே தலைவைத்து தூங்கி இருந்தான் மாறன்.
எவ்வளவு நேரம் தூங்கினானோ அவன் கண்விழிக்கையில் அவன் எதிரே அமர்ந்து ஷாலினி ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தாள்.
“சாரி…” சங்கடமாக உணர்ந்தான் மாறன். அவளை விட்டு விலக நினைத்தாலும் அவனால் முடியவில்லை. அவளை பார்த்தது வரமா? சாபமா? தெரியவில்லை.
“ஆர் யு ஓகே. காபி ஏதாவது வேணுமா?” அவன் மன்னிப்பை கண்டுகொள்ளலாம் ஷாலினி ஏறிட
“ஷுவர்” என்றவன் முகம் கழுவ சென்றான்.
மாறனுக்கு தனக்கும் காபியோடு வந்த ஷாலினி “எக்சிடண்ட்டுக்கு பிறகு அடிக்கடி தலை வலிக்குமா? எப்படி உன்ன வேலைல ஜோஇன் பண்ண ஒத்துக்கிட்டாங்க” என்று கேட்க,
காபியை வாங்கி ஒரு மிடறு குடித்தவன் அந்த ஹாலையே கண்களால் அலசியவாறு “எங்க அப்பாதான் நியுரோசார்ஜண்ட் ஆச்சே எனக்கு ஒன்னும் இல்லனு அவரே சர்டிபிகேட் கொடுத்துட்டாரு. அதனாலதான் என்னால ஜோஇன் பண்ண முடிஞ்சது” என்றான்.
“எக்சிடண்ட் ஆனா… அந்த இன்ஸிடண்ட் சம்டைம்ஸ் மறக்க முடியாம போகும் சைக்காட்ரிக்ஸ் கிட்ட அனுப்புவாங்களே தலைல வேற அடிபட்டிருக்கு” சந்தேகமாக கேட்டாள் ஷாலினி.
“ஆனா நான்தான் நீ என்ன வேல பாக்குறேன்னு கண்டு பிடிக்கல” சோகமானான் மாறன்.
“நீ பொய் சொல்லுற. இங்க இருக்குற டெக்ஸ்டாப் மற்றும் ஸ்டூடெண்ட்டோட ஹோம்ஒர்க் புக்ஸ் பார்த்த உடனே புரிஞ்சிருக்கும். ஆனா சொல்லாம அமைதியா இருந்துட்ட. காரணம் நான் தோற்க கூடாது இல்லையா?” புன்னகை மாறவே இல்லை.
“நீ இவ்வளவு அறிவாளியா இருந்திருக்கக் கூடாது” மாறனின் முகத்திலும் சட்டென்று புன்னகை மலர்ந்தது.
“சரி நான் கிளம்புறேன் நேரமாச்சு” மாறன் எழுந்துகொள்ள
“தான் பாசம் வைத்த தனது சகோதரி இறந்து போன வீட்டில் இவளால் எப்படி இருக்க முடிகிறது? என்ன பெண் இவள்? என்ன மாதிரியான மனநிலையில் இருக்கிறாள்?” என்ற யோசனையிலையே தலையை ஆட்டுவித்திருந்தான் மாறன்.
கண்களில் கண்ணீரோடு அவன் கையை பிடித்து மாலினியின் அறைக்கு அவனை அழைத்து சென்றவள் இதோ இந்த கட்டிலில்தான் கைய அறுத்துகிட்டு இறந்து கிடந்தா. பக்கத்து அறைல நான் இருந்தும் அவ என்ன மனநிலைல இருக்கான்னு எனக்கு தெரியாம போச்சு.
உனக்கு ஒன்னு தெரியுமா மாறா… என் அக்காக்கு பிளட்ட பார்த்தா மயக்கமா வரும். அவ போய் கைய அறுத்துகிட்டானா? உன்னால நம்ப முடியுமா?” அவன் சட்டையை உலுக்கிக் கேக்க,
“ரிலேக்ஸ் ஷாலினி. தற்கொலை செய்ய துணியிறவங்க அவங்க பயத்தையும் தாண்டித்தான் ஸ்டேப் எடுக்குறாங்க. உயரத்த கண்டாலே பயப்படுறவங்க எத்தனை பேர் குதிச்சி தற்கொலை பண்ணி இருக்காங்க. உங்க அக்காவும் அப்படித்தான்” மாறன் அவளுக்கு புரிய வைக்க முயன்றான்.
“நீ என் மாறன் இல்ல” என்று ஷாலினி அவனை தள்ளி விட்டதும் மாறன் மட்டும் தடுமாறவில்லை அவன் மனதும் சேர்ந்து தடுமாறியது.
அவளை விட்டு விலக எண்ணினாலும், அவள் அருகாமை இதத்தை கொடுக்க, அவள் இதயத்தில் அவனுக்கு இடம் வேண்டும் என இவன் இதயம் துடிக்க தான் வெற்றிமாறன் இல்லை என்று மட்டும் சொல்ல நா வரவில்லை. இந்த நேரத்தில் அவள் அப்படி சொன்னதும் எங்கே அவள் தனக்கு கிடைக்காமல் போய் விடுவாளோ என்ற அச்சம் மேலோங்க மீண்டும் தலையில் சுளீரென்று வலி பரவுவது போல் பிரம்மை தோன்றலானது.
கண்களில் கண்ணீர் ஊர்றேடுக்க “நீ என் மாறனாக இருந்தால் உனக்கு எல்லாமே நியாபகம் இருந்திருக்கும். என் அக்கா இடது கை பழக்கமுடையவள் என்பது கூட உனக்கு நினைவிருந்திருக்கும். அவ எப்படி தன்னோட இடது கைய அறுத்துகிட்டான்னு சந்தேகப்பட்டு இது தற்கொலையல்ல இது கொலை என்று சொல்லி இருப்ப. எல்லாத்தையும் மறந்து. என்னையும் மறந்துட்டல்ல மாறா” பாய்ந்து அவன் நெஞ்சில் சாய்ந்து கதறி அழ ஆரம்பித்தாள் ஷாலினி.
“என்னது மாலினி இடதுகை பழக்கமுள்ளவங்களா?” ஷாலினியின் முதுகை நீவியவாறே கேட்ட மாறனின் மூளை பலவாறு சிந்திக்கலானது.
அவளை வாசலுக்கு அழைத்து வந்து தண்ணீர் புகட்டியவன் அமரவைத்து அலைபேசியை கையில் எடுக்க
“நான் எதோ பொறாமைல போன புடுங்கினியோனு நினச்சேன்” மாறனின் முகத்தில் புன்னகை விரிய
“அய்யோடா… அந்தம்மாக்கு கல்யாணமாகி ரெண்டு கொழந்த இருக்குறதுக்கு எங்களுக்கு தெரியும். இந்த சிடுமூஞ்சிய அந்தம்மா திட்டுறதும் எங்களுக்கு தெரியும். என்ன தவிர உன்ன யாரும் லவ் பண்ண மாட்டாங்க மாறா. உன்ன வச்சிக்கிட்டு குப்பை கொட்ட என்னால மட்டும்தான் முடியும். ஓவரா பண்ணாம வா வந்து தூங்கு” ஷாலினி எழுந்துகொள்ள, அவன் சீண்டியதில் அவள் தன்னை காதலிப்பதை ஒப்புவித்ததில் அவளை இழுத்து தன்னோடு அணைத்து இதழோடு இதழ் பொருத்தி இருந்தான்.
மாறன் அனைத்தையும் மனைவியிடம் கூறி விட்டானோ என்ற பதை பாதைப்பில் இரவு வீடு வந்த பூபதி பாண்டியன் மாறன் இன்னும் வீடு வரவில்லை என்ற நிம்மதியில் தூங்கி எழுந்து மருத்துவமனைக்கு செல்ல தயாராகி வர லதா அழுது கொண்டிருந்தாள்.
மகனை பற்றித்தான் பேசுகிறாள் என்று பூபதிக்கு புரியாமலில்லை. தன்னோடு பேசிவிட்டு சென்றவன் வீடு வரவில்லையென்றால்? தன்னிடம் கோபம் கொண்டு வீட்டை விட்டு சென்று விட்டானா? என்ற எண்ணம்தான் பூபதிக்கு தோன்றியது. வீட்டை விட்டு சென்றவை எங்கே என்று தேடுவது? அக்கணம் அவர் ஏற்பாடு செய்திருந்த டிடெக்டிவ் சோமசுந்தரத்தையும் மறந்துதான் போனார். ஒருகணம் குழம்பியவர் உடனே மாறனின் காவல்நிலையத்துக்கு அழைத்து மாறன் வந்துவிட்டானா என்று விசாரித்தார்.
“சார் வந்துகிட்டே இருக்காரு” என்ற ஏட்டு ஆறுமுகம் ரிசீவரை மாறனிடம் கொடுக்க
யார் என்று கூட கேளாமல் “ஹலோ” என்றான் மாறன்.
“மாறன் நான் அப்பா பேசுறேன்டா.. என் மேல இருக்குற கோவத்துல வீட்டுக்கு வராம இருந்துடாதடா… உங்கம்மா பாவம்டா..” ஏதேதோ உளற ஆரம்பித்தார்
மேலும் அவர் என்ன பேசி இருப்பாரோ “யோவ் நிறுத்து நிறுத்து. கண்டதையும் கற்பனை பண்ணிக்காத. எங்கம்மாவ கஷ்டப்படுத்துற மாதிரி எதையும் நா பண்ண மாட்டேன். அம்மாகிட்ட போன கொடு”
தள்ளி சென்று பேசியவர் ஓடி வந்து அலைபேசியை லதாவிடம் கொடுக்க “அம்மா முக்கியமான கேஸ் விஷயமா வெளிய போய் இருந்தேன். நைட் ஆச்சு. பிரெண்டு வீட்டுல தூங்கிட்டேன். நான் ஒன்னும் வீட்டை விட்டு ஓடி போகல. கண்ண கசக்காம சாப்பிடு. எனக்கு நிறைய வேல இருக்கு” லதாவின் பதிலையும் எதிர்பார்க்காமல் அழைப்பை துண்டித்தவன் தனது அறைக்குள் நுளைந்தவாறே இன்ஸ்பெக்டர் நந்தகோபால் மற்றும், எஸ்.ஐ மஞ்சுளாவை அழைத்தான்.
அவனது அறையிலிருந்த வெள்ளை பலகையில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்ட பெண்களின் புகைப்படங்கள் அடங்கிய இடத்தில் மாலனியின் புகைப்படத்தையும் ஒட்டியவன் “இவங்க பேர் மாலினி. ஸ்கூல் டீச்சர்” என்றவாறே கோப்பை எடுத்து நந்தகோபால் கையில் கொடுத்தவன் “கையை அறுத்துகிட்டு தற்கொலை செஞ்சிகிட்டு இருக்காங்க” என்று கூற
“இந்த கேஸுக்கும் நம்ம கேஸுக்கும் என்ன சார் சம்பந்தம்?” கோப்பில் அடங்கிய புகைப்படங்களை பார்த்தவாறு கேட்டது மஞ்சுளாதான்.
“அவங்க இடது கை பழக்கமுள்ளவங்க. ரெத்தத்த பார்த்தா மயக்கமாவாங்க. அப்படிப்பட்டவங்க அவங்களோட இடது கைய கட் பண்ணிக்கிட்டு தற்கொலை செஞ்சி கிட்டாங்கன்னா நம்ப முடியுமா?” மாறன் புருவம் உயர்த்தி கேட்க,
“சார் நிச்சயமாக இது கொலை சார்” என்றான் நந்தகோபால்.
“எக்ஸட்லி” மாறன் மேசையை பலமாக தட்ட
கொஞ்சம் அதிர்ந்து நின்ற மஞ்சுளா “சார் இந்த கேஸுக்கும் நம்ம கேஸுக்கும் என்ன சம்பந்தம்னு இன்னும் எனக்கு புரியல” என்றாள்.
“காலேஜ் பொண்ணுக மட்டும் இல்ல. ஸ்கூல் பொண்ணுங்க, வேலைக்கு போற பொண்ணுக, குடும்ப பொண்ணுங்க என்று ஒரு பொண்ணையும் இவனுக விட்டு வைக்கல. அவனுகளுக்கு தொந்தரவா இருக்குற பொண்ணுகள் கொலை செய்யுறானுங்க” கோபத்தில் கத்தினான் மாறன்.
“சார்…. என்ன சார் சொல்லுறீங்க?” நந்தகோபாலுக்கு வியர்க்கவே ஆரம்பித்திருந்தது.
“ப்ளாடி… ப….ர்ஸ். பாலியல் தொழில் பண்ணுற பொண்ணுகளை அரெஸ்ட் பண்ணுறப்போ ‘வேற வேலை பார்க்கலாம்ல இந்த வேலைதான் கிடைச்சதா?’ என்று ஆரம்பிச்சு வாய்க்கு வந்ததெல்லாம் சொல்லி திட்டி இருக்கேன். பொதுவா எல்லா பொண்ணுகளும் சொல்லுறது “நான் என்ன விருப்பப்ட்டா சார் இந்த தொழிலுக்கு வந்தேன். பெத்த அப்பவே அறியா வயசுல குடிக்க காசு வேணும்னு ஒரு கிழவன்கூட படுக்க சொன்னான். தாலி கட்டின புருஷனே வீட்டு செலவுக்கு காசு வேணும்னு தெருவுல நிக்க சொல்லுறான். அப்பா அம்மா இல்ல சார். மாமா, சித்தப்பா, அத்தனு உறவுகளை நம்பி மோசம் போய்ட்டோம். இது ஒருவழிப் பாதை சார் திரும்ப முடியாது. நாங்களே வெளிய வரணும்னு நினைச்சாலும் விட மாட்டாங்க”
அவங்க நிலைமையை புரிஞ்சிகிட்ட பிறகு அரெஸ்ட் பண்ணுறது விட்டு உதவிதான் பண்ணேன். எந்த பெண்ணும் அந்த நிலைக்கு போக்க கூடாது என்று நினைக்க ஆரம்பிச்சேன். ஆனா இன்னக்கி எவனோ தே… பசங்க அவனுகளோட சுயநலத்துக்காக அப்பாவி பொண்ணுங்க வாழ்க்கையோட விளையாடி, தற்கொலைக்கும் தூண்டி, அவனுகள எதிர்க்கிற பொண்ணுகளை கொலையும் பண்ணுறானுங்க. இவனுகள எல்லாம் என்கவுண்டர்தான் பண்ணனும்” கோபம் தலைக்கேறி மாறன் அறைக்குள்ள நடந்தவாறே பேச, மஞ்சுளா மற்றும் நந்தகோபாலுக்கு கூட வெறி ஏறி இருந்தது.
“சார் இவனுகள எப்படி சார் பிடிக்கிறது?”
மஞ்சுளா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் “மினிஸ்டர் பொண்ண பத்தி விசாரிக்க சொன்னேனே என்ன ஆச்சு” உறுமியவாறு கேட்டான் மாறன்.
“சார் மினிஸ்டர் பொண்ணு பேர் யாமினி” மஞ்சுளா சொல்ல
“இருந்துட்டு போகட்டும்” மேல சொல்லு என்னும் விதமாக மாறன் முறைக்க
“மாசத்துக்கு ஒரு நாள் மனநல காப்பகத்துக்கு போய் சுதாவ பார்த்துட்டு வராங்க சார்”
நந்தகோபால் சொன்னதும் “குணமாகவே கூடாது என்று சாபம் கொடுக்க போறாளா?”
“இல்ல சார். சுதாவ குளிப்பாட்டி சாப்பாடு கொடுத்து, கண்ணீர் வடிக்கிற சீசீடிவி புட்டேஜ் இந்த பென்ட்ரைவ்ல இருக்கு” இன்ஸ்பெக்டர் நந்தகோபால் கூறியவாறே அந்த காட்ச்சிகளை ஓட விட்டான்.
“அப்படினா சுதாவோட இன்றைய நிலைமைக்கு யாமினி காரணம் இல்லனு சொல்ல வாரீங்களா? இல்ல அவ செஞ்ச தப்ப உணர்ந்துட்டான்னு சொல்ல வாரீங்களா?” தீவீரமாக மஞ்சுளாவை பார்த்தான் மாறன்.
“காலேஜ் படிக்கிறப்போ போட்டி இருந்திருக்கு. யாமினிக்கு பொறாமை கூட இருந்திருக்கு. செகண்ட் இயர்லயே யாமினி பெர்ஸ்ட் வர ஆரம்பிச்சதும் சுதாவ கண்டுக்கல. ஆனா சுதாக்கு இப்படி ஆனதுக்கு பிறகு நல்லா படிக்கிற பொண்ணுக்கு என்ன ஆச்சுன்னு தேடி பார்க்காம விட்டது தன்னோட தவறு என்று மினிஸ்டர் கிட்டயே சொல்லி விசாரிக்கவும் செஞ்சி இருக்கா” அத்தனை தகவலையும் கூறியது இன்ஸ்பெக்டர் நந்தகோபால் தான்.
“அப்போ யாமினியால சுதா இந்த நிலமைல இல்ல. அவங்கப்பன் அந்த மினிஸ்டர்தான் தான் பொண்ணு வாழ்க்கைல சுதா குறுக்கிட கூடாதுனு எல்லாம் பண்ணி இருக்கான்னு சொல்ல வாரீங்களா? கோபால்”
“இல்ல சார். அவரும் ஏ.சி.பி அன்வர் கிட்ட சொல்லி விசாரிக்க சொல்லி இருக்காரு” என்றாள் மஞ்சுளா.
“அன்வர் கிட்டயா? அவன் சின்சியர் பொலிஸாசே. அப்போ மினிஸ்டர் மகள சமாதானப்படுத்த விசாரிக்க சொல்லல. உண்மையாத்தான் விசாரிக்க சொல்லி இருக்காரு” மஞ்சுளாவை பார்த்தவாறே மாறன் சொல்ல
“மேற்கொண்டு என்ன நடந்ததுன்னு அன்வர் கிட்டாதான் கேட்கணும்” என்று முடித்தான் நந்தகோபால்.
“உன்ன கேட்டா இவ பதில் சொல்லுறா. இவள கேட்டா நீ பதில் சொல்லுற. உங்க ரெண்டு பேரையும் பார்த்து பார்த்தே என் கழுத்து வலிக்குது. அந்த மினிஸ்டரையும், அவன் பொண்ணையும் புடிச்சா நந்தினி கேஸ் முடியும்னு பார்த்தா அனுமார் வால் மாதிரி போய் கிட்டே இருக்கு” என்றவன் ஏட்டு ஆறுமுகத்தை அழைத்து தனக்கு டீ வாங்கிக் கொண்டு வருமாறு உத்தர விட்டான்.
மாறன் தங்களை ஒருமையில் பேசியதை அதிர்ச்சியில் பாத்திருந்த இன்ஸ்பெக்டர் கோபாலும், எஸ்.ஐ மஞ்சுளாவும் அவன் டீ கேட்டத்தை அதிசயமாக பார்த்திருக்க, ஆறுமுகம் செல்லாமல் அங்கேயே நிற்பதை பார்த்து “என்னய்யா?” எரிச்சலானான் மாறன்.
அன்வர் மாறனுக்கு சீனியர்தான். டி.ஐ.ஜியை சந்திக்க சென்ற பொழுது சந்தித்திருக்கின்றான். அவரே அன்வருக்கு மாறனை அறிமுகப்படுத்தி இருக்கின்றார். அதுவும் எப்படி? “அன்வர் இவன் கையும் உன்ன போல படு சுத்தம் ஏதாவது ஹெல்ப் வேணும்னா பையன தயங்காம கேளு” என்று.
தன்னை பையன் என்றதில் மாறன் கடுப்பானாலும் மூவறிலும் அவன் தான் வயதிலும் சின்னவன். அனுபவமும், என்கவுண்டர் எண்ணைக்கையும் கம்மி என்பதைத்தான் அவ்வாறு குறிப்பிடுகிறார் என்பது மாறனுக்கு புரிந்ததால் முகத்தை விறைப்பாக வைத்திருந்தான்.
டி.ஐ.ஜியின் கிண்டலுக்கு எல்லாம் அன்வர் சிரிக்கவில்லை. “ஓகே சார்” என்றவன் தனது அலைபேசி எண்ணை மாறனிடம் கொடுத்து மாறனின் அலைபேசி எண்ணையும் பெற்றுக்கொண்டிருந்தான்.
மாறனின் எண்ணை பார்த்ததும் “ஹலோ” என்ற அன்வர் எதற்காக அழைத்தாய் என்று நேரடியாக விசயத்துக்கு வந்திருந்தான்.
“மினிஸ்டர் லக்ஷ்மிகாந்த் உங்க கிட்ட மனநல காப்பகத்துல இருக்கிற சுதா என்கிற பொண்ண பத்தி விசாரிக்க சொல்லி இருந்தாரே. அத பத்தி பேசனும்” மாறனும் நேரடியாகவே விசயத்துக்கு வந்தான்.
சற்று நேரம் அமைதி நிலவ மாறனின் பொறுமை பறந்தது.
“என் வீட்டுக்கு வர முடியுமா? எட்டு மணிக்கு வாங்க. நீங்க மட்டுமா? கூட யாரவது?” அன்வர் இழுக்க
“மூணு பேர்” என்ற மாறன் மஞ்சுளாவையும், நந்தகோபாலையும் பார்த்த பார்வையில் “நீங்க ரெண்டு பேரும் என் கூட வரணும்” என்றிருந்தது.
இன்றும் வீடு செல்ல முடியாவிட்டால் லதா பதறுவாள் என்று அன்னையை அழைத்து தான் வர நேரமாகும் என்று கூறியவன். ஜீப்பில் ஏறியதும் மஞ்சுளாவை கண்டதும் ஷாலினி சொன்ன “அவங்களுக்கு கல்யாணம் ஆகிருச்சு. ரெண்டு கொழந்த வேற இருக்கு” என்பது நியாபகம் வர “மஞ்சுளா வீட்டுக்கு போக எத்தனை மணியாகுமோ தெரியாது. உங்களுக்கு ரெண்டு சின்ன பசங்க இருக்காங்க இல்ல. நீங்க வேணா இறங்கிக்கோங்க” என்றான்.
ஒருநாளும் மாறன் அவ்வாறு கூறியதில்லை. ஆச்சரியமாக அவனை பார்த்த மஞ்சுளா “அம்மா இருக்காங்க சார். அவங்க பாத்துப்பாங்க. என்ன விட அம்மாவைதான் தேடுவாங்க. இல்லனா போலீஸ் வேல பார்க்க முடியுமா?” மஞ்சுளா புன்னகைக்க
“ஆமா சார் ஒரு கொழந்த போதும்னு மஞ்சுளா அடம்பிடிச்சிருக்கா இவங்க ஹஸ்பன்தான் இன்னொரு கொழந்த வேணும் இல்லனா போலீஸ் வேலைய விடுனு சொல்லி அடம்பிடிச்சி சாதிச்சிகிட்டாரு” நந்தகோபால் சிரிக்க,
“இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்” மிரண்டாள் மஞ்சுளா.
“சரக்கு உள்ள போனா உண்மை மட்டும்தான் வெளிய வரும் மேடம். போன மாசம் உங்க பொண்ணு பர்த்டே பார்ட்டிக்கு என் பேமிலியோட வந்தோமே அப்போ கறந்துட்டேன்”
“அட பாவி மனிஷா” மஞ்சுளா கணவனை மனதுக்குள் வசை பாட
“சும்மா சொல்ல கூடாது சார் எஸ்.ஐ மேல அவ்வளவு லவ்வு அவங்க வீட்டுக்காரருக்கு”
“என்ன மஞ்சுளா லவ் மேரேஜா” மாறன் கண்ணாடி வழியாக ஏறிட்டு கேட்க