ஊட்டி குளிர் சூரியனை தூங்க வைத்துக் கொண்டிருந்த காலை நேரம் இன்ஸ்பெக்டர் மணிமாறனின் அலைபேசி அடிக்கலானது. வீடு வர அதிகாலையானதால் இழுத்துப் போர்த்தியவாறு தூங்கிக் கொண்டிருந்தவன் கண்களை திறவாமலே அலைபேசியை இயக்கி காதுக்கு கொடுத்து “ஹலோ” என்றான்.
அந்தப்பக்கம் என்ன சொன்னார்களோ மணிமாறனின் மூளை விழிப்படைந்து, கண்கள் கூர்மையாகி “எங்க? இதோ வரேன்” என்றவன் அடுத்த பத்து நிமிடங்களில் காக்கிச் சட்டையினுள் நுழைந்து வண்டியில் ஏறி பறக்கலானான்.
வண்டி அவன் கைகளில் சீறிப்பாய்ந்து அந்த தெருவுக்குள் நுழைந்த போது, இருள் சூழ்ந்திருந்த அந்த காலை பொழுதில் அந்த வீட்டின் முன் சிலர் நின்றிருக்க, அவர்களை தனது கழுகுக் கண்களால் நோட்டமிட்டவாறே வண்டியை நிறுத்தி உள்ளே நடக்க, சப் இன்ஸ்பெக்டர் பாரிவள்லல் அவனருகில் நின்றிருந்தான்.
“சார் பாமிலில ரெண்டு குழந்தையோட மொத்தம் அஞ்சி பேர். நாலு பேர் டெட் பாடி உள்ள இருக்கு. கொலை செய்யப்பட்ட ரவியோட சிஸ்டர் உயிரோட இருக்காங்க. அவங்களுக்கு எந்த காயமும் இல்ல. ரவி குடும்பத்த ரொம்ப ப்ரூடலா மர்டர் பண்ணியிருக்காங்க சார். சின்ன பசங்க…”
மணிமாறன் வாசற்கதவை வந்தடையும் வரை நிலைமையை எடுத்துக் கூறிய பாரிவள்லல் அதிகாலையிலையே தான் கண்ட காட்ச்சியின் தாக்கத்தில் கடைசியாக சொல்லும் பொழுது குழந்தைகளை எண்ணி வருந்தியவனாக முடித்தான்.
பாரிவள்ள சப் இன்ஸ்பெக்டராக பதவியேற்று மூன்று மாதம் கூட இல்லை. அவன் பார்த்த முதல் கொலை வழக்கு இதுவாக இருக்க, கதிகலங்கித்தான் போயிருந்தான். காவலனாக தன் கடமையை செய்ய வேண்டியதால் உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டிருந்தவன் மணிமாறனிடம் விவரிக்கும் பொழுது கொஞ்சம் சுயத்தை இழந்து விட்டான்.
ஆனால் மணிமாறனோ பல கொலை வழக்குகளை பார்த்திருந்தமையால் அமைதியாக பாரிவள்லல் கூறியவைகளை உள்வாங்கியவன் பதிலேதும் கூறாமல் உள்ளே நுழைந்தான்.
வாசலில் ரவியின் மனைவி நிர்மலா கழுத்து அறுபட்டு கீழே விழுந்திருக்க, சற்று தள்ளி ரவி அவனது அறை வாசலில் மண்டை உடைபட்டு விழுந்து கிடந்தான். குழந்தைகளின் அறையில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகளின் கழுத்தும் அறுபட்டு இறந்து கிடக்க, தடயவியல் நிபுணர்கள் அவர்களின் வேலையை கனகச்சிதமாக செய்து கொண்டிருந்தனர்.
“காலிங் பெல் அடிச்சிருக்கணும் மிஸிஸ் நிர்மலா கதவை திறக்கும் பொழுது அட்டாக் பண்ணையிருக்கணும். சத்தம் கேட்டு ரவி வந்திருக்கணும், சுத்தியால அடிச்ச மாதிரி இருக்கு. அப்போ வந்தது ரெண்டு பேர்” இதுதான் நடந்திருக்கும் என்று மணிமாறன் கணிக்கும் பொழுது இடை புகுந்தான் பாரிவள்லல்.
“சார் லாக்கர் உடைக்கப்பட்டிருக்கு. நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கு. எவ்வளவு என்று ரவி சிஸ்டர விசாரிச்சா தெரியும்”
“கொள்ளையடிக்க மட்டும் வந்திருந்தா கொலை செய்யபட்டிருக்க மாட்டாங்க. வந்தது தெரிஞ்சவங்க எங்குறதாலதான் கொலை நடந்திருக்கு. மர்டர் வெப்பன் கிடைச்சதா? மிஸிஸ் நிர்மலாக்கு ரேப் நடந்திருக்கா?” அருகில் இருந்த காஸ்டபல் ஷோபாவை ஏறிடாமல் கேட்ட மணிமாறன் ரவி விழுந்து கிடக்கும் நிலையை யோசனையாக பார்க்கலானான்.
“நோ சார்” என்றாள் ஷோபா.
“மர்டர் வெப்பன் கிட்ச்சன் நைப் வாசல்ல இருந்தது. சிகியூர் பண்ணிட்டோம். சுத்தியல் இருக்கல சார்” சுத்தியால் அடித்தார்களா அல்லது வேறு ஏதுமா என்று தெரியவில்லை. அலசி ஆராய்ந்ததில் கத்தியை தவிர இரத்தம் படிந்த வேறெந்த ஆயுதமும் கிடைக்கவில்லை. என்பதை இவ்வாறு கூறினான் பாரி
“குட். பாரி.. மிஸ்டர் ரவியோட தலையில வலது பக்கம் அடிச்சிருக்குறத பார்த்தா?”
“கொலைகாரன் இடது கை பழக்கம் உள்ளவனா இருப்பான் போல சார்” என்றான் பாரி.
“இல்ல சார் காயத்த பார்த்தா பக்க வாட்டுல இருந்து அடிச்சிருக்கணும். கொலைகாரன் ரைட் ஹாண்ட் தான்” தன் அனுபவத்தை விவரித்தார் தடயவியல் நிருபர் பரத்.
“எனக்கும் அதே சந்தேகம் தான். உள்ள வந்தவங்க ஏன் நேரடியாக தாக்காம, காலிங் பெல்ல அடிச்சிருக்கணும்?” மணிமாறன் யோசனைக்குள்ளாக,
“ஒருவேளை ரெண்டு கொலைகாரனாக இருக்கலாம். இல்ல கொலைகாரன் உள்ள இருக்குறது தெரியாம வேறு யாராவது காலின் பெல்ல அடிச்சிருக்கலாம்” என்றான் பாரி.
“நோ… நோ… மிஸிஸ் நிர்மலாவோட கழுத்த ரைட் ஹாண்ட் பேர்சன் தான் அறுத்திருக்கான். கதவை திறக்கும் பொழுது தான் அட்டாக் நடந்திருக்கணும்” நிர்மலாவின் கழுத்தில் விழுந்த வெட்டு வலது பக்கம் ஆழமாக இருப்பதை பார்த்தவாறே கூறினான் மணிமாறன்.
“மிஸ்டர் ரவியும், மிஸிஸ் நிர்மலாவும் தூங்காம இருக்குறத பார்த்து அட்டாக் பண்ண யோசிச்சு உடனே திட்டம் போட்டு ரவியை வெளிய வரவைக்க காலிங் பெல்ல அடிச்சிருக்கணும். வந்தது நிர்மலா என்றதும் ஈஸியா கழுத்த அறுத்திருப்பான். சத்தம் கேட்டு ரவி வந்ததும் உள்ள இருந்தவன் அடிச்சிருப்பான். சடன் அட்டாக் ரவி கொலப்ஸாகி இருப்பான்” என்ற மணிமாறன்,
“பாரி.. ரவிக்கு எதிரின்னு யாராவது இருக்காங்களான்னும் விசாரிங்க. உடனே அக்கம் பக்கத்துல இந்த பாமிலிய பத்தி விசாரிக்கணும். வந்தவங்க தனியா பண்ண சான்ஸே இல்ல. வீட்டுல உயிரோட இருந்த தங்கச்சிய விசாரிக்கணும். அவ உடந்தையா இருப்பான்னு தோணுது. ரவி, நிர்மலா போன்கால் ரெகார்ஸ்ஸோட, அவ போன் கால் ரெக்கோர்ட்ஸும் எடுங்க. ஆமா… எங்க அந்த பொண்ணு?”
அண்ணன் குடும்பமே கொலையுண்டு கிடக்க, அழும் சத்தம் கூட இல்லாமல் ஒருத்தி அமைதியாக இருக்கின்றாளென்றால் அவள் தான் காரணமாக இருக்க வேண்டும் என மாறனின் முழு சந்தேகமும் அவள் மீது பாய்ந்திருந்தது.
“அந்த ரூம்ல இருக்காங்க சார்” என்று ஷோபா சொல்லி முடிக்கவில்லை அந்த அறைக்குள் நுழைந்திருந்தான் மணிமாறன்.
கண்களில் ஒரு துளி கண்ணீர் இல்லை. “சோகம்” என்ன விலை என்று கேட்பது போலவே அமர்ந்திருந்தாள் அவள்.
மணிமாறன் அவளை பார்த்தான். அவன் மனம் துடித்தது. “இவள்… இவள எங்க பார்த்தேன்….” சட்டென்று அவன் ஞாபகத்தில் வரவில்லை. அவன் சிந்தனையை கலைக்க அமர்ந்திருந்த அவள் நின்றிருந்தாள்.
“உன் பேர் என்ன?”
“இவனா…” என்று அவனை பார்த்தவள் அவன் கேட்ட கேள்வியில் அலட்ச்சியமாக “அலர்விழி மங்கை” என்றாள்.
அவள் பெயர் அவன் காதில் விழுந்த நொடி அவள் யார், எங்கே சந்தித்தான் என்பது அவன் மனக்கண்ணில் நிழலாடியது.
அன்று கூட இதே பார்வை, இதே போல தான் நின்றிருந்தாள் என்றெண்ணியவன் “ஆமா… இது அவதான். அன்னைக்கி எந்த எவிடேன்ஸும் கிடைக்கல. அதனால நீயும் கூட்டுன்னு நிரூபிக்க முடியல. ஆனா இன்னைக்கி வசமா சிக்கிட்ட” மனதில் நினைத்தவன் “நைட் என்ன நடந்தது? கொஞ்சம் விலாவாரியா சொல்லுறியா?” அவன் பேச்சு சட்டென்று ஒருமைக்கு மாறியிருந்தது. அது அவள் மீது உரிமை எடுத்துக் கொள்ளுமாறு அவன் புத்தி அவனை வலியுறுத்தும் மொழி. அவன் அதை கவனிக்கும் மனநிலையில் இல்ல. அவள் மீது அவன் மனம் என்றோ சாய்ந்திருந்தது. அது அவளை அவன் பார்த்த நொடியென்று அவனுக்கு யார் சொல்வது? அவளை சந்தித்த தருணம் சந்தேகப் பார்வை பார்க்க நேர்ந்ததில் அவன் மனதை அறிய முயற்சிக்காதவன் மீண்டும் சந்தித்த பொழுது யோசிப்பானா? அவள் உன்னவள் என்ற அவனது இதயத்தின் கூக்குரலை தாண்டி காவலன் விழித்துக்கொள்ள அவன் முகம் கடுமையை தத்தெடுத்தது.
“வளமைய போல எல்லாரும் எட்டு மணிக்கு சாப்பிட்டுட்டு அவவங்க ரூமுக்கு போய்ட்டோம். மார்னிங் அஞ்சி மணி போல கீழ வந்தேன். அப்போதான் அண்ணி…” என்றவள் தான் பார்த்த காட்ச்சியை கண்களுக்குள் கொண்டு வந்து பெருமூச்சு விட்டாள்.
“அஞ்சு மணிக்கு எதுக்கு கீழ வந்த?” சந்தேகமாக அவளை மணிமாறன் ஏறிட, அவளும் இவனை “என்ன?” என்பது போல் பார்த்தாள்.
“இல்ல… இந்த ஊட்டிக் குளிருல எட்டு மணி தாண்டியும் பெட்ட விட்டு எழும்ப தோணாது. நீ அஞ்சி மணிக்கே எந்திருச்சான்னு சொன்ன. அதான் விசாரிக்கிறேன்” நான் காவலன். உன்னை விடமாட்டேன் என்பது போலவே இருந்தது அவன் பேச்சு.
தூக்கம் என்பதை அவள் தொலைத்து பல காலங்களாகிவிட்டது என்று அவனிடம் சொல்வதா? “வளமையா நான் அஞ்சி மணிக்கு எந்திரிச்சிடுவேன். கிறீன் டி குடிப்பேன். குளிர், சூடுன்னு பார்த்தா அன்றாட வேலைய பார்க்க முடியுமா?” என்றாள் அலர்விழி தெனாவட்டாக.
“கண்டிப்பா…. திட்டம் போட்டு செயல்பட்டா, எல்லாம் பக்காவா பண்ணலாம். ஆனா க்ரைம் மட்டும் பண்ண முடியாது. எப்போ வேணா மாட்டலாம்” உன் கதையை நான் நம்பவில்லை என்று பேசினான் மாறன்.
“நீ அன்றும் என்னை நபவில்லை. இன்றும் நம்பப் போவதில்லை. உன் வேலையை நீ பார். என் வேலை என்னவென்று எனக்குத் தெரியும்” என்பது போலவே பார்த்தாள் அலர்.
“சார்… நாங்க கிளம்புறோம். தடயவியல் நிபுணர் பரத் வந்து நிற்க,
“வீ வில் ட்ரை அவர் லெவல் பெஸ்ட்” என்றவாறே விடைபெற்றான் பரத்.
“பாரி சுத்தி இருக்குற சீசீடிவி எல்லாம் செக் பண்ணு” பாரிக்கு உத்தரவிட்டவன் மனதுக்குள் “நீதான் அக்யுஸ்ட் என்று ஒரு சின்ன க்ளூ கிடைக்கட்டும் உன்ன வச்சி செய்யிறேன்” என்று மாறன் அலர்விழியை நோக்க, அவளோ வீட்டிலிருந்து எடுத்து செல்லப்படும் பிணங்களை பார்த்திருந்தாள்.
“ரூபா… ரூபா… எங்க?”
“ரூபா யாரு”
“யாரு ரூபா…” என்று மணிமாறனும், பாரிவள்ளலும் ஒரே நேரத்தில் கேட்டிருக்க,
அவர்களுக்கு பதில் கூறாது மாடிப்படிகளில் ஓடினாள் அலர்.
ஒரு அறைக்கதவை அவசர அவசரமாக திறந்தவள் அங்கே யாருமில்லாததை கண்டு திகைத்து நிற்க, அவள் பின்னால் ஓடிவந்த மாறன் அறையில் யாருமில்லாததைக் கண்டு “ரூபா இந்த வீட்டு நாயா?” என்று கேட்கலானான்.
“அண்ணியோட சிஸ்டர். நேத்து காலைல தான் வந்தா” மணிமாறனை பாராமல் அலமாரியை குடைந்தவள் “அவ துணிப்பை கூட இல்ல” என்றாள்.
ரூபா என்று யாருமில்லை. தன் மீது சந்தேகம் வந்து விடக் கூடாதென்று அலர்விழி கதை கட்டுவதாக எண்ணினான் மணிமாறன்.
அலர்விழியின் கண்கள் பயத்தை நிரப்பிக் கொண்டு பதட்டத்தோடு வீட்டை அலசின்னாள்.
“இல்லாத ரூபாவை எப்படி தேடுறா பாரு” அவளை வெறுப்பாக பார்த்தான் மாறன்.
அதே நேரம் வாசலில் ஒரு பெண் பெரும் குரலெடுத்து கதறுவது கேட்கலானது.
அலர்விழி கீழ் தளத்தை நோக்கி விரைந்திருக்க, மாறன் அவள் பின்னால் சென்றான்.
“ஐயோ என் பொண்ணு குடும்பத்தோட போய்ட்டாளே” என்று கதறியவள் அலர்விழியை பார்த்ததும் “இவள் தான்… இவள்தான் எல்லாதுக்கும் காரணம். இவளை புடிச்சி ஜெயில்ல போடுங்க. இவதான் என் பொண்ண குடும்பத்தோட கொன்னுட்டா” என்றவாறே அலர்விழியின் மீது கையை ஓங்கியவாறு பாய்ந்திருந்தாள் நிர்மலாவின் அன்னை பரமேஸ்வரி.
பரமேஸ்வரி வைக்கும் குற்றச்சாட்டு ஒன்றும் அலர்விழிக்கு புதிதல்லவே! இதற்கு முன்பும் பலர் சொல்லியிருக்கிறார்கள். அமைதியாக நின்றிருந்தவள் பரமேஸ்வரி அடிக்கக் கையை ஓங்கவும் பின்னாடி நகர்ந்தாள்.
அவள் பின்னாடி வந்த மணிமாறன் இடது கையால் அலர்விழியின் தோளை தொட்டு நிறுத்திய கணமே வலது கையால் அலர்விழியின் மேல் பாய்ந்த பரமேஸ்வரியின் கையையும் தடுத்திருந்தான்.
“எதுக்கு சார் தடுக்குறீங்க? இவளெல்லாம் உசுரோடவே இருக்கக் கூடாது. சொத்துக்காக குடும்பத்தையே கொன்னை பிசாசு. இப்போ என் குடும்பத்த காவு வாங்க வந்திருக்கா” பரமேஸ்வரியின் கூக்குரல் சூரியனின் வெளிச்சம் பரவும் வேகத்தை விட ஒலித்திருக்க, இன்னும் கொஞ்சம் தூங்கலாம் என்றிருந்த வீடுகளில் உள்ளவரையும் எழுப்பி விட்டிருந்தது.
அலர்விழி வெறுமையாக பார்த்திருந்தாளே ஒழிய பதில் பேசவில்லை. பேசி புரிய வைக்க கூடிய ஆளுமல்ல பரமேஸ்வரி. இந்த கணம் என்ன பேசினாலும் செவிடன் காதில் ஊதும் சங்கின் கதை தான் என்று அறிந்தமையால் தன் தோள் மீது இருந்த மாறனின் கையை எடுத்து விட்டவள் ஒதுங்கி நின்றாள்.
“எவிடன்ஸ் இல்லாம என்னால யாரையும் அரஸ்ட் பண்ண முடியாது மேடம்” அலர்விழியை பார்த்தவாறு பரமேஸ்வரிக்கு பதில் கூறியவன் “நீங்க மிஸிஸ் நிர்மலாவோட அம்மா தானே நான் கேட்கிற கேள்விகளுக்கு பதில் சொன்னா, உங்க பொண்ணையும் அவங்க குடும்பத்தையும் கொண்றவங்கள கண்டுபிடிக்க முடியும்” என்றான்.
“நான் சொல்லுறேன் இல்ல சார். இதோ இவ தான் கொலை பண்ணி இருக்கணும். தரித்திரம் புடிச்சவ பொறக்க முன்னாடியே அப்பன காவு வாங்கிட்டா. பொறந்த உடனே அம்மாவ கொன்னுட்டா. ஏதோ ஒரு மகராசன் ஐயோ பாவம் என்று இவள தத்தெடுத்தாரு. அவரையும் கொன்னுட்டா. இப்போ சமீபத்துல தான் சம்பந்தி பாவம் என்று வீட்டில சேர்த்தாரு. சம்பந்தியும் சம்பந்தியம்மாவும் போன வண்டி ஆக்சிடென்ட் ஆகி அப்பவே மேல போயிட்டாங்க. இவதான் ஏதாவது பண்ணி இருப்பான்னு நான் எவ்வளவோ சொல்லியும் மாப்புள காது கொடுத்து கேட்கலையே. இதோ இப்ப குடும்பத்தையே கொன்னுட்டு குத்து கல்லாட்டம் இருக்கா பாருங்க” புடவை முந்தியால் கண்களை ஒற்றியவாறே அலர்விழியை முறைத்தாள் பரமேஸ்வரி.
“இவள் கொலை செய்திருக்க மாட்டாள்” என்று மாறனின் மனம் ஓலையிட்டும் அதை கண்டு கொள்ளாது “எதனால இவங்கதான் கொலை பண்ணியிருப்பான்னு சொல்லுறீங்க மோட்டிவ் இல்லாமல் எந்த கொலையும் நடைபெறாது என்ற அவனது அனுபவத்தில் கேட்டாலும், அவளை ஒருமையில் பேசியவன் பரமேஸ்வரியிடம் மரியாதை பண்ணிமையில் விழித்தது கூட அவன் கவனத்திற்கு வரவில்லை.
“வேற எதுக்கு சொத்துக்காக தான். அதான் எல்லாரும் போயிட்டாங்களே! இனி இவ ராஜ்ஜியம் தானே” என்றாள் பரமேஸ்வரி வெறுப்பாக
அலர்விழியிடம் திரும்பிய மாறன் “மோட்டிவ் சரியாகத்தான் இருக்கு. கத்தியில கைரேகை மட்டும் கிடைக்கட்டும் பார்த்துக்கிறேன்” என மிரட்டினான்.
“நான் கொலை செஞ்சிருந்தா, கத்திய அப்படியே போட்டிருப்பேனா? அதுவும் கைரேகையோட? இவனுக்கு அப்படி என் மேல என்ன வெறுப்பு” அலர்விழியும் பதிலுக்கு முறைத்தாள்.
“இந்த உலகத்தில பெர்ஃபெக்ட் க்ரைம் என்று ஒன்று இல்லவே இல்ல. அப்படி நினைச்சுத்தான் சில முட்டாளுங்க தான் தான் உலகத்திலேயே சிறந்த அறிவாளின்னு திட்டம் போட்டு ஏதோ பண்ணி வைக்கும். ஆனா கடைசில மாட்டிப்பாங்க” அவள் மனதை படித்தது போலவே பேசினான் மாறன்.
வெளியே மீடியா படையெடுத்து பாரிவள்ளலை சுற்றி வளைத்து கேள்வி கேட்கும் சத்தம் கேட்கலானது.
அது பரமேஸ்வரியின் கவனத்தில் இல்லை. “உங்களுக்கே புரியுதில்ல சார். இவதான்னு ஜெயில்ல போடுங்க சார்” மாறனிடம் கெஞ்சினாள்.
“ஆமா உங்களுக்கு இன்னொரு பொண்ணு இருக்காளா?”
“ஆமா… ரூபா…”
“இப்போ அவங்க எங்க? அவங்ககிட்டயும் விசாரிக்கணும்”
“அவ கூட படிக்கிறவங்களோட டூர் போய் இருக்கா” மூக்கை சிந்தலானாள்.
சட்டென்று அலர்விழியை பார்த்த மாறன் “ஆமா… ரூபா இங்க வந்ததா சொன்னீங்களே மிஸ் அலர்விழி. அது பொய்யா?” எனக் கேட்க,
“அதான் சீசீடிவியை செக் பண்ண சொன்னீங்களே நீங்களே பார்த்து தெரிஞ்சிக்கோங்க” என்றாள் கடுப்பாக.
“போலீஸ் கேள்வி கேட்டா பொறுப்பா பதில் சொல்லணும்” என்றவாறு ஷோபா கையை ஒங்க,
“ஷோபா…” என்று மாறன் சீற, அதிர்ந்தவாறு ஒதுங்கினாள் ஷோபா.
அவன் எதற்காக கோபப்பட்டானென்று அவனுக்கே புரியவில்லை. சில வினாடிகளில் தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தவன் எதோ வேலை கொடுத்து ஷோபாவை அனுப்ப,
அவன் குரலில் மிரண்டு விழித்த பரமேஸ்வரி “ரூபா இங்க வந்தாளா?” என அலர்விழியை ஏறிட்டாள்.
“உங்க பொண்ணுக்கு போன் போடுங்க” என்று மாறன் கூறவே
“நாங்க இங்க வர முன்னாடில இருந்து அவளுக்கு விசயத்த சொல்ல போன் பண்ணிகிட்டே இருந்தேன் சார். அவ எடுக்கவே இல்ல” ஒரு கணம் அதிர்ந்தவள் “ரூபாவை என்னடி பண்ண?” மீண்டும் எகிறிய பரமேஸ்வரி அலர்விழிமீது தாவியிருந்தாள்.
அவளை தன் புறம் இழுத்த மாறன் பரமேஸ்வரியை தடுக்கலானான்.
அவன் இழுத்த வேகத்தில் மாறனின் நெஞ்சோடு மோதி நின்ற அலர்விழி அவன் மார்பிளையே சரணடைந்திருக்க, அவன் இதயத்துடிப்பு எகிறிக் குத்தித்து ஓடும் சத்தம் அவள் காதுகளுக்கு நன்றாகவே எட்டியது.
அவனிடமிருந்து தன்னை பிரித்தெடுத்த அலர்விழி “சும்மா சும்மா கைய நீட்டாதீங்க. நான் கைய நீட்டினா அது உங்களுக்கு அசிங்கம்” அமைதியான குரலில் பரமேஸ்வரியை மிரட்டினாள்.
“சொன்னதை செய்வேன்” என்றிருந்த அவள் பார்வையை பார்த்த மாறன் ஷோபாவை அழைத்து பரமேஸ்வரியை விசாரிக்கும்படி உத்தரவிட்டவன் அவர்கள் நகர்ந்ததும் அலர்விழியின் பக்கம் திரும்பினான்.
“அப்பொறம்… எப்படி திட்டம் போட்டு உன் குடும்பத்தை கொன்னன்னு சொன்னா, இந்த கேஸ் இப்பவே முடிஞ்சிடும்” என்றான்.
அவனை வெறுமையாக பார்த்தவள் “நான் தான் கொலை பண்ணேன்னு முடிவு பண்ணிட்டு கேஸ விசாரிக்காதீங்க இன்ஸ்பெக்டர். எவிடான்ஸோட வந்து பேசுங்க” என்று முறைத்தவாறே மாடிக்கு சென்றாள்.
மாறனுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. “திமிர் திமிர் அன்னைக்கும் இப்படித்தான் பேசினா. பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவாண்டி…” என்றவாறே வெளியே கிளம்பிச் செல்ல, கூட்டம் கலைந்திருந்தது.
மாறன் காவல்நிலையம் வரும் பொழுது மொத்த ஊடகங்களும் அவனை சுற்றி வளைத்து கேள்வி கேட்க, எந்த பதிலையும் கூறாமல் உள்ளே சென்றான்.
“என்ன இது போலீஸ் ஸ்டேஷன்ல வைட் பண்ணுங்க பிரெஸ் மீட் கொடுக்குறேன்னு சொன்னாரு. எதுவுமே சொல்லாம போறாரு” என்று அவர்களுக்குள் முனகிக் கொண்டிருந்தனர்.
சின்ன விஷயத்தையே ஊதி, ஊதி பெரிதாக்கும் ஊடகங்கள். கொலை வழக்கு என்றால் என்னவெல்லாம் பேசுவார்கள். அதுவும் பரமேஸ்வரி போய் அலர்விழியை பற்றி தப்பு, தப்பாக சொன்னால் தீனி போட்டது போல், அவள் செல்லுமிடமெல்லாம் சுற்றி மொய்ப்பார்கள் என்றுதான் ஷோபாவை ஏவிவிட்டான்.
எதற்காக இவளுக்கு உதவ வேண்டும் என்று சிந்திக்கக் கூட இல்லாமல் உதவியவனுக்கு அவள் மீது இருக்கும் காதல் மட்டும் புரியவில்லை.
ஆம் அவனுக்கு அவள் மீது இருப்பது காதல் தான். அதுவும் முதல் சந்திப்பில், முதல் பார்வையிலையே அவன் மனம் அவளிடம் சரணடைந்திருந்தது. முதல் கோணல் முற்றிலும் கோணல் என தவறான நேரத்தில், தவறான இடத்தில் அவளை பார்த்து விட்டான். சந்தேகக் கண் கொண்டு பார்த்தத்தினால், தனக்குள் ஏற்படும் மாற்றம் கூட அவள் குற்றவாளி என்பதினால் என்று தன்னையே ஏமாற்றிக் கொண்டிருக்கின்றான் மாறன்.
என்று அவள் நிரபராதி என்று அவன் மனம் ஏற்றுக்கொள்ளுமோ, அன்றாவது அவன் அவளை காதலிப்பதை உணர்வானோ?
“புள்ளனா பொறுப்பா காலைல வேலைக்கு போய் மாலைல வீட்டுக்கு வரணும். இவன் என்னடான்னா சூரியன் வரும் பொழுது வீட்டுக்கு வாரான். வந்த உடனே போய்டுறான். எப்ப வாரான் போறான்னே தெரியல. முதல்ல இவனுக்கு ஒரு கல்யாணத்த பண்ணனும். அப்போவாச்சும் வீட்டுக்கு அடங்கி இருப்பான்” மணிமாறனின் அன்னை லதா அவளுடைய தந்தை தர்மதுரையிடம் புலம்பிக் கொண்டிருந்தாள்.
அதை காதில் வாங்கியவாறே உள்ளே வந்த மணிமாறன் “நான் பாக்குற வேலைக்கு எப்போ வீட்டுல இருப்பேன்னு எனக்கே தெரியாது. இதுல நீ வீணா புலம்பி உன் ப்ரெஷர் ஏத்திக்காத. பசிக்குது சாப்பாடு எடுத்து வை” என்றவாறே அமர்ந்தான்.
“ஆமா… இவனுக்கு ஆக்கிப் போடத்தான் நான் இருக்கேன்” சத்தமாக முணுமுணுத்த லதா “உனக்குன்னு ஒருத்திய கொண்டுவா, அவளுக்கு சொல்லு உனக்கு சேவகம் செய்ய” திருமண வயதில் நிற்கும் மகனுக்கு வரன் பார்க்கவில்லையா என்று சொந்தபந்தங்கள் கேட்பதும், வரும் வரங்களை மகன் தட்டிக் கழிப்பதும் லதாவின் கோபத்திற்கு காரணமாகிப் போக, தன் ஆதங்கத்தை இவ்வாறு பேசித் தீர்த்துக்கொள்வாள்.
“உனக்கென ஒருத்தி” என்று அன்னை சொன்னதும் மாறனின் அனுமதியின்றி அலரின் முகம் அவன் கண்களுக்குள் வந்து போக, “கொலை நடந்த வீட்டுல நைட்டுல தனியாக இருக்க அவள் ஒருத்திக்குத்தான் முடியும்”
“க்ரைம் ஸீன் இங்கே இருக்கக் கூடாது” அவள் அங்கிருந்தால் தடயங்களை அழிக்கக் கூடும் என்று இவன் அவளை கிளப்ப முயற்சிக்க,
“கீழ் தளத்தில் தானே கொலை நடந்தது. நான் மேலே தங்கியிருக்கேன்” என்றவளை முறைத்துப் பார்த்தவன், இரண்டு காவலர்களை காவலுக்கு வைத்து விட்டு வந்திருந்தான்.
“என்னப்பா… மேலத் தெரு மொத்தக் குடும்பக் கொலைல ஒரு க்ளுவும் கிடைக்கலையா? வண்டிய வேறு விட்டுட்டு வந்திருக்க? லதா போய் சாப்பாடு எடுத்து வை” மகளை துரத்துவதற்காகவே பேரனிடம் கேள்வி கேட்டார் தர்மதுரை.
காலையிலிருந்தே ஊடகங்கள் மொத்தக் குடும்பமும் கொலையானதை தானே செய்தியாக ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தனர்.
தான் பார்க்கும் வழக்குகளை பற்றி வீட்டில் பகிராதவனுக்குத் தெரியாதா, தாத்தா எதற்காக கேட்கிறாரென்று.
“டீவிலையே பார்த்து தெரிஞ்சிக்கோங்க” சிரித்தவாறே நகர,
“கேள்வி கேட்டா பதில் சொல்றானா? பாருங்க” லதா வசை பாடியவாறு சமயலறைக்குள் நுழையலானாள்.
“அவன திட்டாம இவளுக்கு பொழுது போகாது. அம்மாவ சீண்டாம இவனுக்கு பொழுது போகாது. என் காதுதான் பஞ்சர் ஆகுது” தனக்குள் புலம்பினார் தர்மதுரை.