25.. உன்னை கைவிடுவேனோ காதலே..

என் உயிர் நீ தானடி..

நீ இன்றி நான் ஏதடி…

அலுவலகம் செல்ல பரபரப்பாக தயாராகிக் கொண்டிருந்த மனைவியை, பின்னிருந்து அணைத்துக்கொண்ட அமுதேவ். “ எதுக்கு  இவ்வளவு டென்ஷனா இருக்க?, “ என்றான்.

“ மறந்துட்டியா!, இன்னைக்குதான் ப்ராஜெக்ட் டிஸ்கஷன், என்னோட பிரசன்டேஷன் அவங்களுக்கு பிடிக்குமோ பிடிக்காதோன்னு. கொஞ்சம் டென்ஷனா இருக்கு அம்மு. “ என்றாள் விஷல்யா.

ஒருவித பதற்றத்துடன்  பேசியவளை தன் புறம் திருப்பி கண்ணனைப் பார்க்க செய்தவன், “ கண்டிப்பா உன் பிரசன்டேஷன் நல்லா இருக்கும். நீ நினைச்ச மாதிரி எல்லாம் நடக்கும். பயப்படாம போ ” என்று ஆறுதலாய் கூறி நெற்றியில் முத்தமிட…

“ என்னவோ தெரியல அம்மு,     படபடப்பா இருக்கு,  தப்பு பண்ணுற மாதிரி மனசு ரொம்ப பாரமா இருக்கு. என்னனு தெரியல டா… “  என்று கணவன் தோள்களில் விஷல்யா சாய்ந்து கொள்ள..

அவளை மேலும் இறுக அணைத்துக் கொண்டவன், “  நீ போற பாதை சரியா தப்பான்னு உனக்கே குழப்பமா இருக்கு அதனாலதான் இப்படி ஃபீல் பண்ற, சில நேரங்கள்ல எனக்கும் இப்படித்தான் குழப்பமா இருக்கும். ரொம்ப தடுமாற ஆரம்பிக்கும்போது கண்ண மூடிட்டு எனக்குள்ள நானே நான் செய்றது சரிதான்னு திரும்பத் திரும்ப சொல்லிக்குவேன். அப்போ டென்ஷன் கொஞ்சம் குறையும். செய்ற வேலையை தெளிவா செய்ய முடியும்” என்று அறிவுரை வழங்கினான் அமுதேவ்.

“ அப்படிங்கிற அதனாலதான் அடிக்கடி.. தயக்கமே இல்லாம தப்பு பண்ணுறியோ… “ என்று சிரித்தபடி கணவனின் காலை வாரினாள் விஷல்யா.

“ ஆமா அப்படி பண்ணுன பெரிய தப்பு தான் நம்ம கல்யாணம்.. “  என்று அவனும் அவள்  பாணியிலேயே பதில் தர… “ கல்யாணத்துக்கு முதல் நாள் மண்டபத்துல இருந்து நீ எஸ்கேப்பானப்பவே நான்   உஷாராகி இருந்தா இந்நேரம் நான் தப்பிச்சிருப்பேன்” என்றாள் விஷல்யா.

“  தப்பிச்சிருப்பியா!… ஒரு தடவை தேடி வந்துட்டேல… அதுக்கப்புறம் உன்னை விலகிப் போக விடுவேன், எங்க போய் ஒழிஞ்சுக் கிட்டாலும், தேடி வந்து  தாலி கட்டிருப்பேன்… “ என்று அவன் கட்டிய தாலியை  ஒருவிரல் கொண்டு பற்றி இழுத்து தன்னருகில் கொண்டு வந்தவன்… “ நீ இல்லாத வாழ்க்கை  எப்படி இருக்கும்னு ஒரு தடவை அனுபவிச்சு பார்த்துக்கு அப்புறம் மறுபடியும் உன்னை எப்படி இழப்பேன் ஷாலு… “ என்று காதலுடன் கூறினான் அமுதேவ்.

“ உன்னோட இந்தக்  கண்மூடித் தனமான காதல். என் மொத்த வாழ்க்கையையும் மாத்திடுச்சு அம்மு” என்று விஷல்யா சிணுங்க..

“ உன்  மேல இருக்கிற அளவில்லா அன்பு தான் என் வாழ்க்கைக்கு அர்த்தத்தை  சேர்ந்திருக்கு ஷாலு… “ என்று சிணுங்கியவள் இடை வருடி மேலும் கிறங்கடித்தான் அமுதேவ்.

இருவருக்கும் உண்டான நெருக்கமும் இதமான உரையாடல்களும் விஷல்யாவின் படப்படமான மனநிலை சற்று  மாற்றியது. 

வெட்கத்துடன் அமுதேவ் கண்களைப் பார்க்க தயங்கியவள், பார்வையை வேறு புறம் திருப்பிட…   அருகில் இருந்த மேஜையில் கிடந்த புத்தகம் கண்ணில் பட்டது… “ அப்புறம் அம்மு சொல்ல மறந்துட்டேன், நம்ம அந்தமான் ட்ரிப் போயிருந்தப்போ.. கண்ணன் கமலின்னு ஒரு  ஃகப்லை  மீட்  பண்ணுனோம் ஞாபகம் இருக்கா.  அவங்க நமக்கு மேரேஜ் ஃகிப்ட்டா ஒரு புக் அனுப்பி வச்சிருக்காங்க. நேத்து ஈவ்னிங் தான்  கொரியர்ல வந்தது, நேத்தே  உன்கிட்ட சொல்லனும்னு நினைச்சேன்,  பிரசன்டேஷன் ஃபிரிப்பர் பண்ணினதுல பிஸியா இருந்ததால சொல்ல மறந்துட்டேன்.” என்று புத்தகத்தை எடுத்துக் காட்டியவள், “  நேரம் இருக்கும் போது படிக்கணும். நம்மள அவங்க வீட்டுக்கு இன்வைட் பண்ணி இருந்தாங்க ஞாபகம் இருக்கா, ஒருநாள் அவங்க வீட்டுக்கு போகணும்.  அதே மாதிரி அவங்களையும் நம்ம வீட்டுக்கு பதிலுக்கு இன்வைட் பண்ணனும்” என்றாள் விஷல்யா.

“ கண்டிப்பாக அழைப்பு விடுக்கப்படும் மகாராணி “ என்று சேவகன் போல் இடை வரை குனிந்து நிமிர்ந்தான் அமுதேவ்.

“ மகாராணியா கேக்க நல்லாத்தான் இருக்கு, அப்படியே ஆகட்டும் சேவகா” என்று அவனைப் போலவே கூறி கேலி செய்தாள் விஷல்யா.

“ சேவகனா!, அடிப்பாவி உன் காதல்  ராஜ்ஜியத்துல ஒரு மந்திரி பதவி கூட எனக்கு கிடையாதா?” என்று சோகம் போல் அமுதேவ் இதழ் சுளிக்க…  

சுளித்த இதழை  வலிக்கும் படி சுண்டியவள், “    மந்திரி  பதவியை வைச்சுட்டு சார், என்னப் பண்ணப் போறீங்க..? ”  என்று கிண்டலுடன் வினவினாள் விஷல்யா.

அவள்  வலிகொடுத்த இதழுக்கு அவள் இதழ்களிலே இதம் தேடும்  விதமாய்..  தன்னவள் இடை பற்றி தன்னருகில் இழுத்தவன்… 

சர்வாதிகாரி போல்

எனை ஆட்கொண்டு

காதல் செய்கிறாய் நீயடி.. 

என் சர்வமும் 

நீ என  உன்னுள் 

ஒடுங்கி போகிறேன் நானடி…

என்று  கவிதை வரிகள் கூறி..  வரிகளில் அவள்  வியந்து நின்ற நேரம்… இதழோடு இதழ் பொருத்தி முத்தத்தை  வழங்கிவிட்டு நிமிர்ந்தான் அமுதேவ்.

வெட்கம்  போல்  கண் மூடி நின்றவள்… “ இப்படி நீ கவிதை சொல்லி எத்தனை நாளாச்சு!, இதை  ரொம்பவே மிஸ் பண்ணுனேன் அம்மு”  என்றாள் விஷல்யா.

“ அப்படியா ரொம்பவே மிஸ் பண்ணுனியா!, சொல்லவே இல்ல… “ என்று மீண்டும் இதழ் நோக்கி   அமுதேவ் குனிந்திட..

“ நான் இதை சொல்லல மண்டு, உன் கவிதையை சொன்னேன்… “ என்று தன்னை முழுதாய் கிறங்கடிக்கும் முத்த  யுத்தத்துக்கு தடை விதித்து அரையடி விலகி நின்றாள் விஷல்யா. 

“ மிஸ் பண்ணுனேன்னு சொல்லிட்டு இப்படி மிஸ்ஸாகி   போனா  நல்லாவா இருக்கு மை மிசஸ்…” என்று மீண்டும் நெருங்கியவன்… அவள் காது அருகில் மெதுவாய்… 

ஒரு முத்ததுடன்..

முடித்துக்கொள்ள

முற்படுகிறாய்..

நீயடி..

இதழ் ரேகை..

எண்ணிக்கையை

முந்திவிடும்..

வேகத்தில் 

நானடி..

“ பாருடா,  பழைய ஃபார்முக்கு வந்துட்ட போல… “ என்று  சிரித்தவள்…  முத்தமிட முன்னேறியவனை தடுக்கும்  விதமாய் அருகில் இருந்த புத்தகத்தை எடுத்து தன்னை மறைத்துக் கொண்டாள் விஷல்யா. 

“ என்ன ஷாலு இது… ரொம்ப டென்ஷனா இருந்தியே கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணலாம்னு… பார்த்தா இப்படி பண்ற?” என்று   தன்னை தடுப்பதற்காக பயன்படுத்திய  புத்தகத்தை பறித்தவன்….  அதை திரும்பியும் பாராது, “ கமலி மேம் எழுதின புக் தானே  இது..” என்று  விசாரிக்க..

“ புக் அனுப்பி இருக்காங்கன்னு தான் சொன்னேன்,  அது அவங்க எழுதின புக்குன்னு நான் சொல்லவே இல்லையே!, நீ எப்படி கண்டுபிடிச்ச?” என்று  வியப்புடன் வினவினாள் விஷல்யா.

  “ அது வந்து,  அவங்க ஒரு ரைட்டர், சோ புக்கை கிப்ட்டா அனுப்பி வச்சிருக்காங்கன்னு சொன்னா அது அவங்களோட ரைட்டிங்ல ரிலீஸான புக்கா தானே இருக்கும். இது சிம்பிள் லாஜிக் இதுக்கு போய் இவ்வளவு பில்டப் பண்ற?” என்று அசட்டையாக பதில் கூறி அட்டைப்படத்தை திரும்பி பார்த்தவன் “ தாய்மையைப் போற்றுவோம்.. தலைப்பு நல்லா இருக்குல… “ என்று விசாரிக்க..

“ நல்லா இருக்கு… ஆனா உனக்கு சூட் ஆகாது” என்றாள் விஷல்யா.

“ ஏன், ஏன் எனக்கு சூட் ஆகாதுன்னு சொல்லுற..?”  என்று வினவியவன் குரலில் பதற்றமும்  பயமும் கலந்திருந்தது.

“ நீ தாய்மையை போற்றுற ஆள் இல்லையே, தூற்றுற ஆள், அப்புறம் உனக்கு எப்படி இந்த ஹெட்டிங் சூட் ஆகும்” என்று சிரித்தாள் விஷல்யா.

“ போற்றுற மாதிரி நடந்துகிட்டா..  எதுக்கு தூற்ற போறோம்” என்று அமுதேவ் வேண்டாவெறுப்பாக பதில் தர…

“ உனக்கு என்ன தான்   பிரச்சனை அம்மு.  நீயா உனக்கான பதிலை தேடி போக மாட்டேங்கிற,  அவங்களே தேடி வந்து உன் குழப்பத்துக்கு எல்லாம் விளக்கம் கொடுத்தாலும் காது கொடுத்து கேட்க மாட்டேங்கிற!, எனக்கு நீ செய்றதெல்லாம் பார்க்கும்போது எப்படி இருக்கு தெரியுமா… உனக்கு நீயே கருப்பு துணிய வச்சு கண்ணை கட்டிக்கிட்டு, இந்த உலகம் உன்னை  இருட்டுல நிக்க வைச்சுடுச்சுன்னு குறை சொல்ற மாதிரி இருக்கு. முதல்ல உனக்கு நீயே கட்டி வச்சிருக்க கண் கட்டை கழட்டு, உன் அம்மா கிட்ட போய் பேசு, உண்மையிலேயே நடந்தது என்னன்னு தெரிஞ்சுக்கோ” என்று வார்த்தையால் வற்புறுத்தினாள் விஷல்யா.

“  என்ன நடந்ததுன்னு எனக்கே தெரியும்போது அவங்க கிட்ட எதுக்கு நான் விளக்கம் கேட்கணும்.  அப்படியே நான் போய் விளக்கம் கேட்டாலும் அவங்க அவங்களுக்கு சாதகமா பொய் சொல்வாங்களே தவிர அதுல கொஞ்சம் கூட உண்மை இருக்காது.  உண்மையில்லாத விளக்கம் எனக்கு எதுக்கு?” என்றான் அமுதேவ்.

“ ஹுஹும்…  உனக்கு பயம், எங்க நீ போய் கேள்வி கேட்டு, அதுக்கு அவங்க சொல்ற பதில் ஒருவேளை உன்னை  சமாதனப் படுத்திடுச்சுன்னா,  இத்தனை வருஷமா வம்படியா பிடிச்சு வைச்சிருந்த உன் ஈகோவை  விட்டுட்டு அவங்க கிட்ட பேச வேண்டியதாகிடுமேன்னு  பயப்படற.. “ என்று  அமுதேவ் தயங்குவதற்கான  காரணமாக தான் உணர்வதை  கூறினாள்  விஷல்யா.

“ ஈகோவா எனக்கா!, உண்மையிலேயே நீ  சொல்ற மாதிரி  ஈகோவோட இருக்கிறது உன் அத்தை தான். சரி பாட்டி இருக்கிறப்பதான் என்னை பார்க்க விடாம  தடுத்தாங்கன்னு சொன்னாங்க… பாட்டி இறந்ததுக்கு அப்புறம் எதுக்கு என்னை  தேடி வரல, இத்தனை வருஷத்துல  ஒரு தடவை கூட  என்னை அப்ரோச் பண்ணி அவங்க தரப்பு நியாயத்தை விளக்க முயற்சி பண்ணல, அது சரி அவங்க பக்கத்துல ஏதாவது நியாயம் இருந்திருந்தா தானே அதுக்கு விளக்கம் கொடுக்க முடியும். “ என்று அவமதிப்பது போல் பேசினான் அமுதேவ்.

“ சரி அவங்க தேடி வரல, நீ போய் அவங்களை பார்த்து பேசி இருக்கலாம்ல. “ என்று விஷல்யா வினவ… “ என்னை வேணான்னு ஒதுக்கிட்டு போனவங்கள தேடிப்போய் பேச நான் என்ன சூடு சொரணை இல்லாதவனா!”.. என்று அதுவரை கையாண்ட பொறுமையை கைவிட்டு சட்டென்று கோபத்துடன் வினவினான் அமுதேவ்.

“ இதுக்கு பேர் தான் ஈகோ.. “ என்று விஷல்யா மீண்டும் விவாதத்தை துவங்க… “ தயவு செய்து மறுபடியும் ஆரம்பிக்காத உனக்கு மீட்டிங்க்கு லேட்டாச்சு, கிளம்பு.. “ என்று பேச்சை  மாற்ற முயன்றான் அமுதேவ்.

“ உன் அம்மாவைப் பத்தி பேசினாலே போதும், உடனே பேச்சை மாத்திடுற… எத்தனை நாளைக்கு தான் இப்படி தப்பிக்கிறன்னு நானும் பாக்குறேன், என்னைக்காவது ஒரு நாள் என் வழிக்கு நீ வந்து தான் ஆகனும். அன்னைக்கு  இருக்கு உனக்கு” என்று சிறு கோபத்துடன்  சிடுசிடுத்து விட்டு,  அலுவலகம் கிளம்பிச் சென்றாள் விஷல்யா.

‘ ஃஷப்பா, இவ என்ன அம்மாவை பத்தி பேச ஆரம்பிச்சா இந்த கிழி கிழிக்கிறா.. இவ டார்ச்சர் தாங்காம நானே  அவங்க கால்ல போய் விழுந்துடுவேன் போல… அந்த அளவுக்கு இம்சை பண்ணுறா’ என்று தன் மனைவியின் செயலை எண்ணி தனக்குள் புலம்பிக் கொண்டவன், விஷல்யா வீட்டை விட்டு வெளியேறி விட்டதை உறுதி செய்து கொண்டு, தனது அலைபேசியை எடுத்து… குறுந்செய்தி ஒன்றை அனுப்பி வைத்தான்.

அதேநேரத்தில்… அமுதேவ்  வீடு இருந்த தெருமுனையில் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து உடற்பயிற்சி மேற்கொண்டு… இறுகிப்போன உடலுடன், ஆறடிக்கும் மேல்  வளர்ந்திருந்தவன்,    தன் அலைபேசியை எடுத்து பார்த்துவிட்டு மீண்டும் உள்ளே வைத்தான்.

சற்று நேரத்தில் வீட்டை விட்டு வெளியேறிய விஷல்யா  தெருமுனையில் காத்திருந்தா தலைக்கவசம் அணித்தவனை  கடந்து செல்ல…  அவளது    காரை பின் தொடர்ந்து சென்றான் இருசக்கர வாகன ஓட்டி.

வீட்டில் இருந்து கிளம்பியவள் முதலில் தனது அலுவலகத்திற்கு வந்து தனக்கு வேண்டிய சில ஆவணங்களை எடுத்துக்கொண்டு, புதிய தொழில்  ஒப்பந்ததாரரை சந்திக்க அவர் அலுவலகம் நோக்கி சென்றாள். 

சில மணி நேரம் கடந்தபின்… புதிய தொழில்  ஒப்பந்ததாரருடன்  வெளியே  வந்தவள், காரை நோக்கி செல்ல… உடன் வந்த நபர்… அவளை எதற்கோ வற்புறுத்த… வேறு வழியின்றி  அவரது  காரில் ஏறி அமர்ந்தாள். 

இவை யாவையும் தூரத்திலிருந்து கவனித்துக் கொண்டிருந்த தலைக்கவசம் அணிந்தவன், தனது அலைபேசியில் எடுத்து செய்தி ஒன்றை  அனுப்பினான்.  எதிர்முனையில் இருந்து உடனே  பெறப்பட்ட பதிலை பார்த்ததும் வேறு எதைப் பற்றியும் யோசிக்காமல்  மீண்டும் விஷல்யாவை பின்தொடர்ந்தான்.

விஷல்யாவை ஏற்றிச் சென்ற வாகனம்… மகாபலிபுரம் கடற்கரை  சாலையில் வழுக்கி  கொண்டு சென்று… அங்கிருந்த உயர்ரக உல்லாசப் போக்கிடத்திற்குள்(resort) நுழைந்தது.

அதுவரை அவர்களை  பின்தொடர்ந்து வந்தவன்…  தற்போது  இருக்கும் இடத்தின் விபரத்தை அலைபேசியில் செய்தியாய் அனுப்பிவிட்டு… தலைகவசத்தை  விலக்கி… விஷல்யா மற்றும் அவளுடன் சென்ற நபரை பின்தொடர்ந்தான்.

இருவரும் தனியறை போல்  பராமரிக்க பட்ட…  இடத்திற்குள்  சென்றதும்,  சற்று நேரத்தில் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளருடன்  உடன் வந்த எடுபிடிகள்,   உள்ளிருந்து வெளியே வந்து யாரையும் உள்ளே அனுமதிக்காத படி,  அந்தக் கதவுக்கு காவல் நின்றனர். 

உள்ளே நடப்பது என்னவென்று அறிய முடியாமல்… தலைக்கவசம் அணிந்தவன் தவிப்புடன் அமர்ந்திருக்க… இருவரும் சென்ற தனியறையில் இருந்து… பெரும் சப்தம் கேட்டது. உடனே  எடுபிடிகள்… உள்ளே செல்ல…  சற்று நேரத்தில்  தலையில்   இரத்தக் காயத்துடன்…  கையில் சிறு  கத்தியுடன், வெளியே வந்தாள் விஷல்யா.

விஷல்யாவை பின்தொடர்ந்து வந்தவன், அவளை அந்த நிலையில்   பார்த்ததும் பதறித் துடித்த படி.. “மேடம்… என்னாச்சு?” என்று அவசரமாய் நெருங்கிட…  அவனையும்  கையாள் என்று   எண்ணிய விஷல்யா, “ அங்கயே நில்லு.. பக்கத்துல வந்த…   உள்ள இருக்கிறவனுக்கு ஏற்பட்ட   கதி தான் உனக்கும்” என்று மிரட்டினாள் விஷல்யா.

கூடிநின்ற மக்கள் கூட்டம் தங்களுக்குள் சலசலத்து கொண்டு அங்கங்கு நின்று வேடிக்கை பார்க்க. சூழ்நிலை கைமீறிப் போனதை உணர்ந்த உல்லாசப் போக்கிடத்து உரிமையாளர்கள்..  சம்பந்தப்பட்டவர்களை தவிர மற்றவர்களை அங்கிருந்து வெளியேற்ற  முடிவெடுத்தது.

“ இங்க என்ன நடக்குது?” என்று விடாமல்  கேள்வி எழுப்பிக் கொண்டே இருந்த மற்ற வாடிக்கையாளர்களை “ இந்த பொண்ணு தான் தேவை இல்லாமல் பிரச்சினை பண்ணுது,   போலீஸுக்கு இன்ஃபார்ம் பண்ணியிருக்கோம்.  அவங்க வந்து இதை ஹாண்டில்  பண்ணிக்குவாங்க,  நீங்க கிளம்புங்க, போலீஸ் வர நேரம் நீங்க இங்க இருந்தா, உங்க கிட்டயும் தேவையில்லாம கேள்வி கேப்பாங்க,  அப்புறம் போலீஸ் கோர்ட்டு கேஸ்ன்னு அலைய வேண்டியதா இருக்கும்” என்று எச்சரிக்கை கொடுத்து கூடி நின்ற கூட்டத்தை அங்கிருந்து கலைக்க முயன்றார் அவ்விடத்தின் மேலாளர். 

நமக்கு எதற்கு வம்பு என்று கூடி நின்றவர்கள் அமைதியாக விலகி சென்றுவிட,   விஷல்யாவை அங்கிருந்து நகர விடாமல் காவலுக்கு ஆள் வைத்துவிட்டு. காவல் துறை அதிகாரிகள் வருகைக்கு காத்திருந்த நேரம்…   ரோந்துப் பணியில் இருந்த… சில காவல் அதிகாரிகள்… அவ்விடம் வந்து சேர்ந்தனர்.

  அதுவரை தனக்கு காவலென கையில் ஏந்தி இருந்த சிறு  கத்தியை காவலர்கள் வசம் ஒப்படைத்தாள் விஷல்யா.

“ என்ன நடந்தது?” என்று வந்தவர்களில் ஒருவர் விஷல்யாவை நோக்கி கேள்வி எழுப்ப… அவள் வாய்  திறக்கும் முன்    அவ்விடத்தின் மேலாளர். “ பிரச்சனைன்னு போன் பண்ணி உங்கள வர வச்சது நாங்க… நீங்க என்னடான்னா அவளுக்கு பண்டிதம் பார்த்துட்டு இருக்கீங்க. இவளால எங்க ரிசார்ட்டோட பேரு கெட்டுடும் போல, உள்ள எங்களோட ரெகுலர் கஸ்டமர்  ரத்த இரத்த வெள்ளத்துல கிடக்காரு, முதல்ல அவரை வந்து பாருங்க..” என்று அதிகாரிகளை அந்த  தனியறைக்கு அழைக்க, விஷல்யாவையும்  அழைத்துக்கொண்டு   சற்று முன்பு சப்தம் கேட்ட அறை வாசலுக்கு வந்தனர் காவல் அதிகாரிகள். 

விஷல்யாவை பின் தொடர்ந்து வந்த  இரு சக்கர வாகன ஓட்டி  அவர்களுடன் உள்ளே செல்ல முயல… “  வந்ததுல இருந்து பாத்துட்டு இருக்கேன், இந்தப் பொண்ணுக்கு பக்கத்திலேயே ஃபாடிகார்டு மாதிரி நிக்கிற, யாரு நீ…      இவங்களுக்கு  தெரிஞ்சவனா… ” என்று விசாரிக்க…

“ ஆமாம் நான் அவங்களுக்கு ஃபாடிகார்டு தான்” என்றான் அவளை பின்தொடர்ந்து வந்தவன். 

அவன் பதிலால் குழம்பி நின்றவளை நோக்கி, “ விஷல்யா மேம், நான் மாதேஷ்,  அமுதேவ் சார்  ஆஃபீஸ்ல தான்  ஒர்க் பண்ணுறேன்” என்று  அதுவரை தன்னை வெளிப்படுத்திக்கொள்ள  விரும்பாதவன், தன்னை அறிமுகம் செய்து கொள்ள.. அமுதேவ் எனும் கணவனின் பெயர் பெண்ணவள் மனதிற்கு புது தெம்பை தந்தது.

“ நீங்க  அவருக்கு போன் பண்ணி இங்க வரச் சொல்ல முடியுமா? “ என்று விஷல்யா படபடப்புடன் கூறிட..

“ யூ டோன்ட் வொரி  மேம், சார் கிட்ட ஏற்கனவே விபரத்தை சொல்லிட்டேன், இன்னும் கொஞ்ச நேரத்துல  வந்துருவாரு, “ என்று  நம்பிக்கை கூறினான் மாதேஷ்.

“ இன்னும் இங்கே என்ன சார் விசாரிச்சுட்டு இருக்கீங்க, அங்க எங்களோட கஸ்டமர் உயிருக்கு போராட்டிட்டு இருக்காரு, உள்ள வாங்க சார்” என்று காவல் அதிகாரியை உணவக சிப்பந்தி ஒருவன் அவசரபடுத்திட… மாதேஷ் புறம் திரும்பி… “ நீ உள்ள வரத் தேவையில்லை” என்று அறிவித்துவிட்டு விஷல்யாவை மட்டும் அழைத்துக்கொண்டு உள்ளே சென்றனர் காவல் அதிகாரிகள். 

ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடுகிறார், என்பது எல்லாம் உச்சபட்ச வர்ணனை வார்த்தைகள் என்று உணர்த்துவது போல்.. அலங்கோலமாய் கிடந்த அறையில், உணவக  மேஜை ஒன்றின் முன் ஒய்யாரமாக அமர்ந்திருந்தார்.  எஸ்பி கட்டிட நிறுவனத்தின் உரிமையாளர் ஜெகப் பிரதாபன்.

ஊருக்குள் பெரும் புள்ளியாய் வலம் வரும் ஜெகப் பிரதாபனை ஏற்கனவே அறிந்திருந்த ஒரு காவல் அதிகாரி… “ சார் நீங்களா, உங்களுக்கு தான்  பிரச்னையின்னு சொல்லி இருந்தா உடனே ஓடி வந்திருப்போம்ல சார், என்ன சார் இரத்தம்?, ஆம்புலன்ஸ்க்கு போன் பண்ணுனீங்களா?.” என்று படபடப்புடன் விசாரித்தார்.

“ அதெல்லாம் ஒன்னும் இல்ல சின்ன கீறல் தான், எல்லாம் இவளால வந்தது,  முதல்ல இவக் கதையை முடிக்கணும்” என்று கோபத்துடன் விஷல்யா புறம் கை நீட்டி கத்தினான் ஜெகப் பிரதாபன்.

“ விடுங்க சார், அதான் நாங்க வந்துட்டோம்ல…  இனி நாங்க பார்த்துகிறோம்” என்று விசாரணையில் அதிகப்படி ஆர்வம் காட்டினர்  வந்திருந்த காவல் அதிகாரிகள்.

விஷல்யா தரப்பு   வாதங்கள் எதையும் காதில் வாங்காது, ஜெகப் பிரதாபன் மற்றும் அவனது  எடுபிடிகள்,  வாக்கு மூலம்  மட்டும் ஒரு தலை பட்சமாய் தங்கள் அலைபேசியில் பதிவு  செய்துக் கொண்டிருந்தனர் காவல் அதிகாரிகள்.

அவசரமாய் அங்கு ஓடிவந்த அமுதேவ்வை கண்டதும், அவனருகில் வந்த மாதேஷ், “ சார் நான் எவ்வளவோ பேசிப் பார்த்தேன் யாரையும் உள்ள அல்லோ பண்ண மாட்டேங்கறாங்க, மேடம் மட்டும் இப்போ உள்ள தனியா இருக்காங்க “ என்று படப்படத்தான்.

விசாரணை நடக்கும் இடத்திற்குள் அமுதேவ்  செல்ல முயல அவனைத் தடுத்து நிறுத்தினர் உணவக சிப்பந்திகள், “ சீ இஸ் மை வைஃப்.. அவளுக்கு மட்டும் ஏதாவது தப்பா நடந்தது,  இங்க இருக்க ஒருத்தனையும் சும்மா விடமாட்டேன். “ என்று எச்சரிக்கை விடுத்து கொண்டிருந்த நேரம்..   காவல் துறை வாகனம் அவ்விடம்  வந்தது. 

அதில் இருந்து இறங்கிய, சில காவல் அதிகாரிகள், அமுதேவ்வை  யாரென்று விசாரிக்க…  அவனும் தன் விபரம் முழுவதையும் கூறி முடித்தான்.

அதன் பின்  அவனையும் அதுவரை விஷலயாவிற்கு காவல் இருந்த   மாதேஷையும் உள்ளே அனுமதித்தனர்.

அமுதேவை கண்டதும் கலங்கிய விழிகளுடன்  நின்றிருந்த விஷல்யா முகத்தில்  புது நம்பிக்கை பிறந்தது.

புதிதாக வந்து சேர்ந்த உயர்  காவல்  அதிகாரிகள்..  அவர்களுக்கு முன் வந்த காவல் பணியாளர்களிடம் நடந்ததை விசாரிக்க துவங்கினர்.

“ சார் தப்பு இந்த பொண்ணு மேல தான் சார், ஜெகப் பிரதாபன் சார் கூட பிசினஸ் டீலிங் பேச வந்தவங்க தான் இந்த விஷல்யா. அவங்க எதிர்பார்த்தபடி பிசினஸ் டீலிங் சரியா முடியாம போகவும், அட்ஜஸ்ட்மெண்ட்க்கு ரெடின்னு சொல்லிருக்காங்க, அதுக்கு சார் ஒத்துக்கல, இருந்தும் கட்டாயப்படுத்தி இருக்காங்க.. உடனே சார் டென்ஷனாகி இங்கிருந்து வெளியே போகச் சொன்னதும், சாரை பழிவாங்க நினைச்சு, டேபில இருந்தா கத்தியை எடுத்து  சார் கையில கிழிச்சுட்டு, வெளிய வந்து அவர் தன்கிட்ட  தப்பா நடந்துக்க முயற்சி பண்ற மாதிரி ஃபோர்ட்ரேட் பண்ண ஆரம்பிச்சு இருக்காங்க. நடந்த சம்பவத்தை  நேருல  பார்த்த சாட்சி இவங்க இரண்டு பேரும் தான் சார், ஒருத்தர் இந்த ரிசார்ட்டில் வேலை பார்க்கிறவர், இன்னொருத்தர் சாரோட பிஏ. “ என்று விசாரணை என்ற பெயரில் இதுவரை சேகரித்த விவரங்களை கூறி முடித்தனர்.  முன்பு வந்த காவல் பணியாளர்கள்.

“ இது தான் நடந்ததா… இதுக்கு நீ என்னமா பதில் சொல்லுற.. ?” என்று காவல் உயரதிகாரிகள் விஷல்யாவிடம் கேள்வி எழுப்ப..  காவல் அதிகாரிக்கு நேரடியாக பதில் கூறாமல் தன் கணவன் புறம் திரும்பிவள்.. “ இதுதான் நடந்திருக்கும்ன்னு நீயும் நம்புறியா அம்மு?” என்று வறண்ட குரலில் வினவ…

“ கடவுளே வந்து உனக்கு எதிரா சாட்சி சொன்னாலும் நான் நம்ப மாட்டேன் ஷாலு. என் ஷாலு என்னைக்கும் களங்கம் இல்லாதவ.. அவளால தப்பு செய்யவும் முடியாது,  அடுத்தவங்க தப்ப அனுமதிக்கவும் முடியாது… “ என்று நம்பிக்கையுடன்  தலை நிமிர்ந்து கர்வமாக அறிவித்தான் அமுதேவ்.

இதழில் மெலிதாய் புன்னகை விரிந்து மலர.. காவல் உயர் அதிகாரி புறம் திரும்பியவள், “ என்ன நடந்ததோ அதை அப்படியே மாத்தி சொல்றாங்க, இந்த போலீஸ் ஆபீஸர் கூட… அந்த பொறுக்கியோட கையாள். அவனை தப்பிக்க வைக்கிறதுக்காக என் மேல அபாண்டமா பழி போடுறாங்க. சட்டத்துக்கு வாய் வார்த்தையை விட சாட்சி தான் முக்கியம்னு  தெரியும். எனக்கு எதிரா சாட்சி சொன்ன ரெண்டு பேர்ல ஒருத்தன் அவனோட ஆள். இன்னொருத்தன்  இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் உள்ளேயே வந்தான்.  என்னை கட்டாயப்படுத்தி இங்க வர வச்சிட்டு மத்தவங்கள வெளியே நிக்க சொன்னதும் எனக்கு சந்தேகம் வந்துடுச்சு, அதனால தான் இந்த ஸ்பை கேமராவை ஆன் பண்ணி, நடக்கிறதை ரெக்கார்ட் பண்ண ஆரம்பிச்சேன். “ என்று தன் சுடிதார் பட்டனில் பொருத்தி இருந்த சிறு ரகசிய பட்டன் கேமரா வை எடுத்து நீட்டினாள் விஷல்யா.

அதை கையில் வாங்கி கொண்ட காவல் அதிகாரி அருகில் இருந்த இன்னொரு காவலரிடம் கொடுத்து,” இதுல  இருக்கிற மெமரி கார்டை எடுத்து மொபைல்ல போடு, நடந்த உண்மை என்னன்னு நாம  பார்த்தே தெரிஞ்சுக்குவோம்.” என்றார் எவர் பக்கமும் சாயாத நேர்மையான காவல்துறை உயர் அதிகாரி.

மிகத் தெளிவாக உருவமும் குரலும் பதிவாகி இருந்த அந்த நினைவக அட்டையில் நடந்த சம்பவம் அனைத்தும் பதிவாகி இருந்தது.

“ இது எவ்வளவு பெரிய பிராஜெக்ட் தெரியுமா? இதுக்காக எத்தனை பேர் லைன்ல நிக்கிறாங்கன்னு உனக்கு தெரியுமா?” என்றான் ஜெக பிரதாபன்.

“ எத்தனை பேர் வந்தாலும் திறமைக்கு தான நீங்க..  முன்னுரிமை தருவீங்க” என்று மிடுக்காக கூறினாள் விஷல்யா.

“ திறமையா…!” என்று   சிரித்தவன், “பொதுவா  பொண்ணுங்க கிட்ட நான் என்னைக்கும் திறமையை எதிர்பார்க்க மாட்டேன். அழகை தான் எதிர்பார்ப்பேன், அது உன்கிட்ட நிறையவே இருக்கு அதனால தான் இந்த வாய்ப்பு உன்னை தேடி வந்து இருக்கு… “ என்று வழிந்தபடி வாயாரப் புகழ்ந்தான் அந்த பெண் பித்தன்.

“ வொர்க் நடக்கப்போற சைட்டை பாத்துட்டு,  அதுக்கப்புறம் பிளான் டிஸ்கஸ் பண்ணலாம், என்னோட டிசைன் பிடிச்சிருந்தா அக்ரிமெண்ட் பத்தி பேசலாம்னு சொல்லி தான்  என்னை கட்டாயப்படுத்தி  கூட்டிட்டு, இப்போ என்னடான்னா ப்ராஜெக்ட்டுக்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாம கண்டதையும் உளரிட்டு இருக்கீங்க… “  என்று விஷல்யா சிடுசிடுக்க..

“ உன்கிட்ட பெருசா டிசைன் இல்லனாலும் அதை பத்தி எனக்கு கவலை இல்லை, என்ன பண்ணனும்னு மட்டும் எங்க ஆளுங்க கிட்ட சொல்லிட்டு நீ ஒதுங்கியே இரு..  இந்த வேகாத வெயில்ல நீ எதுக்கு அலையனும்.. அப்புறம் பலப்பலன்னு  இருக்கிற இந்த சருமம் பாழாப் போகிடாது. அழகு போச்சுன்னா… அப்புறம் எப்படி அடுத்தடுத்து என்ன மாதிரி பெரிய கம்பெனி கிட்ட இருந்து பிராஜக்ட் கிடைக்கும். “ என்று விஷல்யா கன்னத்தை தொட கயவன் முயன்றிட… வெடுக்கென்று  எழுந்து நின்றவள், “ அழக காட்டி சம்பாதிக்க நான் அந்த மாதிரி தொழில்  பண்ணுறவ இல்ல… அந்த மாதிரி பொண்ணுங்க உன் வீட்ல இருக்காங்களான்னு போய் பாரு” என்று அங்கிருந்து வெளியேற நகர்ந்தாள் விஷல்யா.

“ ஏய் நில்லுடி… என்னையே அவமானப் படுத்தி பேசிட்டு போறியா..?, நீ இந்தப் ஃபீல்டுலயே இல்லாத படி செஞ்சுடுவேன். “ என்று அவன் மிரட்ட…

“ ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாடி ஒரு பொண்ணு இருக்கிறதா பழமொழி சொல்லுவாங்க.. அதை இனிமே    ஒவ்வொரு பொண்ணோட திறமையும் வெளிய தெரியாம போறதுக்கு பின்னாடி  உன்னை மாதிரி  அசிங்கமான எண்ணம் இருக்கிற ஆம்பளைங்க இருக்காங்கன்னு திருத்தி எழுதணும் போல. இன்னும் எத்தனை நாளைக்குடா பொண்ணுகளோட அழகை மட்டும் பார்ப்பீங்க அவங்களுக்குள்ள இருக்கிற திறமையும் பார்த்து தொலைங்கடா  முட்டாப் பயலுகளா. ” என்று பதில்  தந்தவள் அவனை சற்றும் மதியாது.. அங்கிருந்து நகர… 

“ டேய் அவள புடிடா.. “ என்று அவர்கள் அருகில் இருந்தவனுக்கு கட்டளை  பிறப்பித்தான் ஜெகப் பிரதாபன்.

தன் எஜமானனின் கட்டளைக்காக காத்திருந்தவன் போல சட்டென்று விஷல்யாவை நெருங்கி அவள் கையை இறுகப் பற்றினான் ஒருவன்.

“கடவுள் பொண்ணுகள  படைச்சதே… ஆம்பளைகள சந்தோஷப்படுத்தி பிள்ளை குட்டி பெத்து போடுறதுக்கு தான். வீட்டுப் படியை தாண்டி வெளி வேலைக்கு வந்த பிறகு இந்த மாதிரி எல்லாத்துக்கும்  அட்ஜஸ்ட் பண்ணி தான் போகணும்.  எத்தனை பொண்ணுகள என் வலையில விழ வெச்சிருக்கேன்னு தெரியுமா?, உன்னை மாதிரி பிடிவாதம் பிடிச்சவள்கள உருத்தெரியாம அழிச்சிருக்கேன்.” என்று அத்துமீறி விஷல்யா மீது கை வைக்க முயல…  தனது முழு பலத்தையும் திரட்டி தன்னை இறுகப்பற்றி இருந்தவன் பிடியிலிருந்து விலகியவள், அருகில் இருந்த மேஜையில் இடித்துக் கொண்டாள், அதன் பிறகும் அவன் விடாமல் தொட முயற்சிக்க..,  தன்னைக் காத்துக் கொள்ளும் முயற்சியாய் உணவு மேஜையில் இருந்த  சிறு கத்தி போல கூர்மையாய் இருந்த ஒன்றை எடுத்து  தவறான எண்ணத்துடன் தன்னை நெருங்கியவன்  கிழித்தவள்… அக் கத்தியை காட்டி மிரட்டிய படியே அவ்வறையை விட்டு வெளியேறினாள்.

நடந்த அனைத்தையும் ஆதாரத்துடன் நிரூபித்த விஷல்யா… “ இந்த பொறுக்கிய காப்பாத்துறதுக்காக, உங்கள மாதிரி பெரிய ஆபீஸர் வந்து கேள்வி கேட்டா என்ன மாதிரி பதில் சொல்லணும்னு, இங்க இருக்குறவங்களுக்கு ட்ரைனிங் குடுத்துட்டு இருந்தாரு, இந்த ஆஃபீசர், அதற்கான ஆதாரமும்  வீடியோவா அதுலேயே இருக்கும்” என்று தன்னை குற்றமற்றவள் என்று நிரூபித்து விட்டு  கணவன் அருகில் சென்று நின்றுகொள்ள… 

“ அந்த பொறுக்கி செஞ்ச தப்புக்கு கண்டிப்பா தண்டனை கிடைக்கணும், நான்  அவன் மேல கேஸ் ஃபைல் பண்றேன்” என்றான் அமுதேவ். 

“ நீங்க ஸ்டேஷன் வந்து நடந்ததையெல்லாம் எழுதி குடுத்து,  அபிஷியல்லா ஒரு கம்ப்ளைன்ட் ரைஸ் பண்ணிடுங்க , அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கையை நாங்க பார்த்துகிறோம்,  இந்த ஒரு ஆதாரம் போதும், இவனை உள்ள தள்ள… “ என்றார் உயர் அதிகாரி. 

“ உங்கள மாதிரி ஆட்கள் இருக்கிறதாலதான், போலீசுக்கே கெட்ட பெயர் வருது. உங்களோட இந்த கேவலமான காரியத்துக்கு கண்டிப்பா உங்களுக்கு பனிஷ்மென்ட் கிடைக்கும் “ என்று பாகுபாடு பார்த்து விசாரணை செய்த காவல் பணியாளர்களை கண்டித்து விட்டு, மேலாளர் புறம் திரும்பியவர்.. “ உங்களோட ரெகுலர் கஸ்டமர்னா.. அவன்  என்ன பண்ணுனாலும் அதை  மறைக்க  அடுத்தவங்க மேல பழி போடுவீங்களா?, இதுதான் உங்களுக்கு லாஸ்ட் வார்னிங் இனிமே இந்த மாதிரி வேலையெல்லாம் இங்க நடக்குதுன்னு தெரிஞ்சது லைசன்ஸ கேன்சல் பண்ண வச்சுருவேன். அடுத்து இங்க  ரிசார்ட் இருக்காது. ஞாபகத்துல வச்சிக்கோ. “ என்று  மிரட்டினார் அதிகாரி.

அனைத்து விபரமும் ஆதாரத்துடன் சிக்கிவிட்ட காரணத்தால் எப்படி தப்பிப்பது என்று வழி தெரியாது..” நான் என் லாயர் கிட்ட பேசணும்..” என்று தட்டுத்தடுமாறி கூறினான் தவறிழைத்த ஜெக பிரதாபன்.

“ உனக்கு எதிரா ஆதாரம் ஸ்ட்ராங்கா இருக்கு, சோ நீ யார்கிட்ட பேசினாலும் தப்பிக்க முடியாது “ என்று ஜெகப் பிரதாபனை கைது செய்து அங்கிருந்து இழுத்து சென்றனர்.

மாதேஷை அருகில் அழைத்து… “ வெல்டன் பாய், உன் ஒர்க்கை சரியா செஞ்சு முடிச்சிருக்க… இன்னொரு சின்ன ஹெல்ப் பண்ணனும்  “  என்று விஷல்யா கார் சா

வியை  அவனிடம் நீட்டி, “ ஷாலு காரை கொண்டுவந்து வீட்டுல விட்டுடு” என்று  மீண்டும் ஒருமுறை அவன் உதவிக்கு நன்றி கூறிவிட்டு,  அதுவரை தனிமையில் தவித்துக் கொண்டிருந்த தன் மனைவியின் தோள்களில் ஆதரவாய் கரம் பதித்து… உனக்கு உறுதுணையாய் என்றும் நான் இருப்பேன் என்று  சொல்லால் சொல்லாமல் செயலால் நிரூபித்தான் அமுதேவ்.

ஆறுதல் கூற 

நீ இருக்கும் 

தைரியத்தில் தான் 

கண்ணீர் துளிகள் 

என் கன்னம் கடக்கிறது…