Advertisement

தீண்டல் – 26(2)

“மகாபிரபு, இங்கயே வந்துட்டீங்களா? செல்லம்மே…” என அவரின் தோளை பற்ற முனீஸ்வரனுக்கு பேரதிர்ச்சியாக போனது. மருமகன்கள் முன்னாள் குடித்துவிட்டு இவன் என்ன செய்கிறான் என்கிற அதிர்ச்சியும், ஒரு வெளிய மருமக்க பிள்ளைகளும் இந்த பழக்கத்தை வைத்திருக்கின்றனரோ என்கிற கவலையும் அவரை அப்படியே நிற்க வைக்க,

“டார்லிங் சனீஸ்,

உன் கண்ணுல இருக்கு பனீஸ்,

அதை என் ட்ரிங்க்ஸ்ல போட்டுக்கறேன் மினீஸ்,

இனி நீ தான் என் குரு முனீஸ்,

என் இதய கனீஸ்…” என பிதற்றி அவரின் கன்னம் பற்ற,

“போச்சு, என்னடா பன்றான் இவன்?…” என்ற பிரபுவின் பார்வை “அவனா நீ” என்னும் சந்தேகத்துடன் பார்க்க,

“புகழ் போய் கூட்டிட்டு வா…” வசீகரன் சொல்ல,

“நான் மாட்டேன், ஸ்மெல் அடிச்சுடும்…” அவன் மறுத்துவிட வசீகரனே சென்று சூர்யாவை இழுத்து பிடித்தான்.

“விடுங்கடா என்னிய, என் செல்லத்துக்கு, ஒரு டீப் கிஸ்ஸி, டைட் ஹக்கி…” சூர்யா துள்ள,

“சாரி மாமா, பீர் தான் குடிச்சான். ஒத்துக்கலை…” வசீகரனின் மன்னிப்பும், மாமா என்ற அழைப்பும் முனீஸ்வரனின் கோபத்தை மட்டுப்படுத்த,

“குடிச்சா வரைமுறை தெரியாம போய்டுமா? ஆள் கூடவா தெரியாது?…”

“ஐயோ ஃபேர்&லவ்லி போட்ட அங்கிள் மல்லிப்பூ மலர்ந்தே தீரும்…” சூர்யா அடங்காமல் துள்ள,

“அடேய்…”

“மல்லிப்பூ இல்லியா? அப்ப முல்லையா? மலரும் மலரும்…” என தலையை ஆட்ட கோபச்சூட்டுடன் வசீகரனை பார்த்தவர்,

“இங்க பாருங்க மாப்பிள்ளை, இது நல்லாயில்ல. வந்த இடத்துல இப்படித்தான் சலம்பல் பன்றதா? பார்க்கறவங்க நமக்கு வீடு குடுத்தவங்க என்ன நினைப்பாங்க? இதெல்லாம் அவுகவுக ஊருப்பக்கம் வச்சுக்கோங்க…” என கோபமாய் சொல்லிவிட்டு கீழே இறங்க,

“செல்லோ ஐ லவ் யூ…” என சொல்லிக்கொண்டு அவரின் பின்னால் போக இருந்தவனை கீழே உருட்டி அனைவருமாக மொத்தத்தொடங்கினர் சிரிப்புடன்.

செல்லோ என்ற குரலில் வேகவேகமாய் கீழே ஓட்டம்பிடித்த முனீஸ்வரனுக்கோ  தலையில் அடித்துக்கொள்ளலாம் போல வந்தது.

காலையில் அனைவரும் தேர் இழுக்கும் இடத்திற்கு செல்லவேண்டி தயாராக சூர்யா விடியற்காலை அறைக்குள் நுழைந்தவன் வெளியே வருவதாக தெரியவில்லை என்பதால் மற்றவர்களை கிளம்ப சொல்லிவிட்டு விஷ்வாவும் வசீகரனும் வீட்டில் இருந்தனர்.

“வசீ கதவை தட்டிடலாம். தூங்கறான் போல இன்னும்…” என விஷ்வா சொல்லவும் தான் வசீகரனும் எழுந்து சென்று கதவை தட்ட அணு தான் வந்து கதவை திறந்தாள். அவள் கிளம்பி தயாராக தான் இருந்தாள்.

“என்ன அனு? எல்லாரும் கிளம்பிட்டாங்க, இன்னும் என்ன பன்ற? அதுவும் கிளம்பிட்டு…”

“அங்க பாருங்க நீங்களே…” என வழியை விட்டு விலகி நிற்க தலையில் போட்ட துண்டுடன் அரண்ட முகத்தோடு சூர்யா சோகச்சித்திரமாய் அமர்ந்திருந்தான்.

“சூர்யா?…” என விஷ்வா உலுக்கவும் பதரிப்போனவன்,

“ஐயோ யாரு கதவை திறந்தா? ஏய் அணு, கதவ பூட்டு. பூட்டுன்றேன்ல…” என கத்த,

“எதுக்குடா கத்தற? வீட்ல யாருமே இல்லை. எல்லாரும் கோவிலுக்கு கிளம்பியாச்சு. நாங்க மட்டும் தான். உன்னை கூட்டிட்டு போக வெய்ட் பன்றோம்…” என்றவனை முறைத்த சூர்யா,

“எங்கடா அவன?…”

“எவன?…” சூர்யாவின் கடுப்பு புரிந்தாலும் வேண்டுமென்றே விஷ்வா கேட்க,

“பாண்டிச்சேரிக்காரன. அவன் தான் எல்லாத்துக்கும் காரணம்…”

“எப்டி எப்டி? சாரு குடிச்சது தப்பில்லையாம். அவர் வாங்கிட்டு வந்தது தான் தப்பாம். இம்புட்டு பயந்து நடுங்கறவரு எதுக்கு அத கையால தொடனும்?…” என அணு வரிந்துகட்டிக்கொண்டு சண்டைக்கு நிற்க,

“அட என்னதான் ஆச்சுன்னு சொல்லுங்கப்பா…” வசீகரன் புரியாமல் எரிச்சலாக,

“இங்க பாரு அவன் செஞ்சுவச்சிருக்கற வேலையை…” என தன் மொபைலை எடுத்து காண்பிக்க அதில் முதல்நாள் இரவு சூர்யா பண்ணிய ரகளைகள் அனைத்தும் காட்சிகளாய் படமாகியிருந்தது.

“டேய் யார்ரா இந்த வேலையை பார்த்தா?…” வசீகரன் திகைத்துபோக,

“பாரு பிரபு தான் நம்ம க்ரூப்ல அனுப்பியிருக்கான். ஸீ மை ஸ்டீல் பாடி ஹீரோன்னு….” விஷ்வாவிற்கு அப்படி ஒரு சிரிப்பு. அடக்கிக்கொண்டு நின்றான்.

“இந்த க்ரூப் ஆரம்பிச்சு வச்சதே நீ தானடா, எல்லாரும் டச்ல இருப்போம்னு…” வசீகரனும் கிண்டலாய் பேச,

“நேரம்டா, அனுப்பினது கூட குத்தமில்லை. ஆனா என்னைய அந்த மனுஷன்ட்ட கோர்த்துவிட்டு வேடிக்கை பார்த்தீங்க பாருங்க. மன்னிக்கவே மாட்டேன்…” என முறைப்பாய் பார்க்க,

“இதென்னடா வம்பா போச்சு? நாங்களா போய் அந்த அங்கிள் அதான் உன் செல்லத்துக்கிட்ட போய் ப்ரப்போஸ் பண்ண சொன்னோம்?…” என்ற வசீகரன் விஷ்வாவுடன் ஹைபை அடித்துக்கொள்ள,

“இப்ப கிளம்ப சொன்னா மாட்டேன்னு சொல்லிட்டு இருக்காரு. நீங்க தான் கிளப்பி கூட்டிட்டு வாங்க. நான் ஹால்ல இருக்கேன்…” என்ற அனுபமா அறையை விட்டு வெளியேற சூர்யாவை வம்படியாய் கிளப்பி தங்களுடன் அழைத்துவந்தனர் வசீகரனும், விஷ்வாவும்.

“இதெல்லாம் நியாயமே இல்லடா. அவர் கையில சிக்கினேன் அந்த ஏழரை கூட பரவாயில்லைடா. விட்டா இப்படியே பொடிநடையா பஸ்டாண்டுக்கு போய் வர பஸ்ஸ பிடிச்சு உசுரோட ஊர் போய் சேர்ந்திருவேன்…”

வரும் வழியெல்லாம் புலம்பிக்கொண்டே வந்தவன் பிரபுவை பார்த்ததும் இருவரையும் விட்டுவிட்டு வேகமாய் அவனை நெருங்கியவன் வாய் திறக்கும் முன்,

“பெரிய சம்பவம் பண்ணிட்டீங்க ஜி. நீங்க பெரியாளு ஜி…” என்று பிரபு சூர்யாவை கட்டி தழுவ,

“கூட கொஞ்சம் நேரம் அந்த மனுஷன் இருந்திருந்தா அந்த சம்பவத்துல சத்தமே இல்லாம என் ஆத்மா சாந்தியாகிருக்கும்டா. வெசம் வெசம்…” என அவனின் தலையில் கொட்டி இடுப்பில் வலிக்கும்படி கிள்ளியவன்,

“உன்ன நம்பி குடிச்சா என் சோலிய முடிக்க பார்த்தியே?…” என சொல்ல வசீகரனும் விஷ்வாவும் வயிற்றைபிடித்துக்கொண்டு சிரித்தனர். பிரபு பொங்கிவந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு அப்பாவியை போல சூர்யாவை பார்க்க,

“நடிக்காதடா, இம்புட்டு அப்ராணி தான் வீடியோவை க்ரூப்ல போட்டுவிட்டியாக்கும்?…” என்று எகிற இவர்களை பார்த்துவிட்டு முனீஸ்வரன் இவர்களை நோக்கி வர,

“உசுரே உசுரே தப்பிச்சு எப்டியாவது ஓடிவிடு, ஆஹா வருதே சனீஸ் வருதே?…” என்று பாடிய சூர்யா,

“ஆஹா இவனுங்க பக்கத்துல இருக்கும் போதா பாடனும்…” என்றவன்,

“எல்லாத்தையும் ரெக்கார்ட் பண்ணுவியா? பண்ணுவியா?…” என சொல்லிக்கொண்டு பிரபுவை துரத்த ஆரம்பித்தான்.

“இப்ப தெரியுதா ரேவதி இவனுக்கு ஓவர் ரூல்ஸ் ஏன் போடறான்னு?…” வசீகரன் சொல்ல,

“நாமல்லாம் முரட்டு ஜூசர்ஸ்டா…” என விஷ்வா சொல்ல,

“என்ன?…” வசீகரனுக்கு புரியவில்லை.

“பிரபு சிங்கிள்ஸ், முரட்டு சிங்கிள்ஸ் மாதிரி நாம வெறும் ஜூசர்ஸ் இல்லை. முரட்டு ஜூசர்ஸ்…” என சொல்ல மீண்டும் இருவரும் ஒரு ஹைபை தட்டிக்கொள்ள இதை கண்களில் நிரப்பியபடி வந்த முனீஸ்வரனுக்கு அத்தனை பெருமிதம்.

தன் இரு பெண்களின் கணவர்களும் இத்தனை ஒற்றுமையாக இருப்பதை கண்டு உள்ளுக்குள் சில்லாகித்தவர் அதை காட்டிக்கொள்ளாமல்,

“எல்லாரும் கோவிலுக்குள்ள இருக்காங்க. வந்தீங்கன்னா பூஜை முடியவும் சாப்பிட்டு கிளம்பிடலாம்…” என்று சொல்லிவிட்டு திரும்ப அவருடன் நடந்தவர்கள் புவனையும், புகழையும் தேட இருவரும் சோகமான முகத்தோடு ஓரமாய் நின்றிருந்தனர்.

என்னவென பார்வையால் வசீகரன் கேட்க அவர்கள் முனீஸ்வரனை காண்பிக்க புரிந்தது என்பதை போல தலையாட்டி சிரித்துக்கொண்டனர். முதல்நாள் சம்பவத்தை கொண்டு அத்தனை மண்டகப்படி கிடைத்திருந்தது அனைவருக்குமே.

அனைவரும் சாமி கும்பிட்டுவிட்டு ஊர்களுக்கு கிளம்ப ஒருபுறம் விஷ்வாவும் சந்தியாவும் கிளம்பிவிட மற்றவர்கள் சென்னையை நோக்கி வந்தனர்.

அதற்கடுத்த நாட்களில் வசீகரனுக்கும் சந்நிதிக்கும் இடையில் ஒரு நல்ல புரிதல் கலந்த உறவு வலுப்பட்டது. கணவனாய் அவளை அணுகும் அவனின் சின்ன சின்ன தொடுகைகளுக்கும் அவனின் அணைப்பிற்கும் பழக்கப்பட்டிருந்தாள் சந்நிதி.

அவனின் முகம் பார்த்து அவனை அவனின் உணர்வுகளை அவதானிக்க பழகியிருந்தாள் அவனறியாமல்.

அவர்களின் உறவில் அடுத்தக்கட்டத்திற்கு செல்லும் அளவிற்கு சந்நிதியின் மனதில் மாற்றம் வந்திருந்தது. ஆனால் வசீகரனுக்கு அது மட்டும் போதாதே? அவளிடம் இன்னும் ஒரு உணர்வை எதிர்பார்த்தான். அதற்குள் அடுத்த தடையாய் மீண்டும் அவர்களின் வாழ்வில் முனீஸ்வரன்.

முதல்நாள் காலையில் இருந்து அவனின் பாராமுகம் அவளை அளவிற்கதிகமாய் வாட்ட உம்மென்று முகத்தை தூக்கிவைத்துக்கொண்டு இருந்தாள் சந்நிதி. இரவு உணவிற்கு வந்தவன் அவள் இன்னும் சாப்பிடவில்லை என்றதும் வேகமாய் மேலே வந்தான்.

அங்கே தங்களின் வெடிங் ஆல்பத்தை பார்த்துக்கொண்டிருக்க காதலாய் மலர்ந்துபோனான் வசீகரன். அவளருகே நெருங்கியவன்,

“வா சாப்பிடலாம்…” என சொல்ல அவனை திரும்பி பார்க்காமலேயே,

“நீங்க சாப்பிடுங்க…” என்றாள்.

“ஸ்ட்ரைக்?. ஒஹ் மை காட்…” என கேலி குரலி பேச ஆல்பத்தை கட்டிலில் வைத்தவள்,

“நான் சாப்பாடு வேண்டாம், சாப்பிடமாட்டேன்னு உங்கட்ட சொன்னேனா?உங்களோட சாப்பிடமாட்டேன்னு தான் சொன்னேன்…” கோபமாய் அவள் சொல்ல ஒரு விரிந்த புன்னகை இவன் முகத்தில்.

“அதான் நான் பேசிட்டேன்ல. என்ன கோவம் உனக்கு இன்னும்?…” என்றதும் சலுகையாய் அவனின் பக்கம் வந்து நின்று அவனின் கையை பிடித்தவள்,

“இன்னைக்கு பேசுவீங்க. திரும்பவும் நாளைக்கு நேத்து சொன்னதை சொல்லுவீங்க…”

“இப்பவும் சொல்வேன். உங்கப்பாக்கிட்ட நான் இதை பத்தி பேசப்போறதில்லை நிதி. நீ நீதான் பேசனும். பேசுவன்னு நினைக்கேன்…” கொஞ்சமும் இளகாமல் அவன் பேச சந்நிதிக்கு தான் தொண்டைக்குள் முள் சிக்கிய உணர்வு.

“வா சாப்பிடலாம்…” என அவளின் கை பிடித்து அழைத்து வர சூழ்நிலை கைதியாய் சந்நிதி.

அவளின் தவிப்பு அவனுக்கு புரிந்தாலும் அனைத்திற்கும் தன் பின்னால் எத்தனை நாள் நிற்பாள் இவள் என்னும் எண்ணம் அவனை பிடிவாதம் பிடிக்க வைத்தது.

Advertisement