Advertisement

தீண்டல் – 26(1)

         அந்த மயக்கமும் நெருக்கமும் அந்த சில நொடிகள் தான். கூச்சமாய் உணர்ந்தவள் அவனின் கைகளை விலக்க பார்க்க,

“ப்ச் நிதி…”

“விடுங்க நான் எழுந்துக்கனும்…” அவளின் பார்வையில் ஒரு அவஸ்தை தெரிய அவனின் கண்களில் குளுமை.

“ப்ச், இப்ப எதுக்கு என்னை டிஸ்டர்ப் பன்ற மாதிரி பார்க்கற?…”

“நானா? எப்போ?…” அவனிடமிருந்து எழுந்தே ஆகவேண்டும் என அவள் முயற்சிக்க,

“இதோ இப்போ இந்தா பார்க்கற இல்ல. இதத்தான் சொன்னேன். ஏன் பார்க்கற?…” சிறிதும் அசையாத பார்வையை அவளுக்கு கொடுத்துக்கொண்டே கேட்க நிதியிடம் திகைப்பு.

“பார்க்காதன்னு சொல்லிட்டே இருக்கேன். திரும்ப திரும்ப பார்க்கற நீ…”

“நான் எங்க பார்த்தேன். சும்மா தான்…” அவன் கைகளுக்குள் அவள் திணற,

“அதான் சும்மா சும்மா பார்த்து பாண்டிச்சேரி மேரேஜ்ல ஆரம்பிச்சு இப்ப இங்க வந்து நிக்குது….” என அவளின் கழுத்திலிருந்து ஒற்றை விரலால் திருமாங்கல்யத்தை எடுத்து அவன் காண்பிக்க சுத்தமாய் மயக்கம் தெளிந்தது.

அவன் சற்றே நெகிழ்ந்திருக்க அவனை தள்ளிவிட்டு எழுந்து நின்றவள் அவனை முறைக்க சிரிப்புடன் எழுந்து அவளருகே வந்தான்.

“சிரிக்காதீங்க, என்னை பேசவே விடலை. நீங்க என்னை இழுத்துவிட்டு டைவர்ட் பன்றீங்க…” அவனை குற்றம் சாட்ட,

“நீ ஏன் நான் இழுத்ததும் வர? வேணும்னா ஒரு தரை குடேன். நீ இழுத்து பாரு, நான் எவ்வளோ ஸ்ட்ராங்கா நிக்கறேன் பாரு…” என அவளை சீண்ட அவள் என்ன இது என்று பார்க்க,

“முடியாதுன்னா சொல்லிட்டு போ. திரும்பவும் ஏன் பார்க்க?…” என்றதும் ஏக கடுப்பானவள் அவனை பிடித்து இழுக்க இழுத்ததை விட அதிவேகத்துடன் அவளின் மேல் விழ இதை சற்றும் எதிர்பாராத நிதி தடுமாற இருவருமாக கீழே விழுந்தனர். தரையில் அவள் விழுந்துவிடாமல் தன் மேல் தாங்கிக்கொண்டவன்,

“ஓகே, ஒத்துக்கறேன். நீயும் என்னை மாதிரியே ஸ்ட்ராங் பர்சனாலிட்டின்னு ஒத்துக்கறேன்….”

தீவிரமான முகபாவனையோடு அவன் சொல்ல அவனின் சந்நிதிக்கோ குழப்பம்.

“இலகுவாக தானே இழுத்தோம். பின்னே எப்படி இப்படி?” என குழம்பியவள் அவனின் கண்களில் தெரிந்த குறும்பில்,

“பிராட், பிராட்…” என அவனின் மார்பில் அடிக்க,

“இந்த மாதிரி சின்ன சின்ன பிராட் பண்ணனும் நிதி. இதெல்லாம் இல்லைன்னா இந்த காதல் உலகம் நம்மை மதிக்கவே மதிக்காது…”

“எது இப்படி பொய் சொல்றதா?…”

“என்ன பொய்ன்னு இவ்வளோ ஈஸியா சொல்லிட்ட? அதை சொல்ல எத்தனை கஷ்ட்டபடனும் தெரியுமா? பொண்டாட்டி அழகா இருக்கன்னு சொல்லனும், உயிருக்கும் மேல லவ் பன்றேன்னு சொல்லனும். அவ இல்லாம வாழமுடியாதுன்னு சொல்லனும்…” என அவன் வரிசைப்படுத்த சந்நிதியின் முகம் கோபத்தில் சிவந்துபோனது.

“அட இருங்க மேடம், உடனே ஹாட் தான். இதை எல்லாம் நாங்க சொன்னா நீங்க அதை முழுமனசோட ரசிச்சு ஏத்துக்கனும்.  அந்த லைப்ல பிராட்த்தனம் இருந்தாலும் ரொம்ப இன்ட்ரெஸ்ட்டிங்கா இருக்கும். லைப் ஸ்மூத் மூவிங். அங்கங்க கொஞ்சமா வைல்ட்…”

“நான் போகனும்…”

“போகலாம். நானும் தான் கிளம்பனும். உண்மையில் உன்னோட வாடின முகம் என்னை ரொம்பவே  டிஸ்டர்ப் பண்ணுது நிதி. இங்க எப்பவும் ஹேப்பியா இருக்கனும்…”  என சொல்லி அவளை விடுவித்து எழுந்துகொண்டவன்,

“அதோட இந்த மாதிரி சின்ன சின்ன அணைப்புக்கும், முத்தங்களுக்கும் உன்னை நீ பழக்கப்படுத்திக்கனும். நான் உன்னோட ஹஸ்பன்ட். இதை நீ மைண்ட்ல வச்சுட்டா உன்னால எதையும் சுலபமா ஹேண்டில் பண்ண முடியும். இவ்வளோ கூச்சம் ரொம்ப கஷ்டம். இன்னைக்கு எதுவும் நடந்திடும்னு இல்லை. ஆனா எப்ப வேணும்னாலும் நடக்கும் இல்லையா?…” என்றவன் அவளின் கன்னத்தில் சிறு முத்தத்தை பதித்துவிட்டு சென்றுவிட அசையாமல் நின்றாள் சந்நிதி.

அவளுக்கும் புரியத்தான் செய்கிறது. திருமண வாழ்க்கையில் உள்ள அர்த்தங்களும், அந்தரங்களும் என்னவென்று.  சில குழப்பங்களால் அவளே அவளை குழப்புவதும் தெளிவதுமாக இருக்கிறாள்.

ஏனோ கீழே அவனின் பின்னே செல்ல மனம் வரவில்லை. பிடித்தும் ஏற்கமுடியாத தவிப்பும் கட்டிலில் சென்றுபடுத்தவள் கண்களை மூடிக்கொண்டு அனைத்தையும் அலசிப்பார்க்க விழைந்தாள்.

அவனின் காதலில் கரைந்துவிடாமல் எதுவோ அவளை தடுப்பதாக உணர்ந்தவளுக்கு அது தன்னுடைய எதிர்காலத்தின் மீதான பயம் என்று புரியாமல் போனது.

எப்பொழுதும் குழப்பமென்றால் சந்தியாவை நாடும் சந்நிதி இப்பொழுது தனிமையை நாடினாள். அவளுக்கு அவளே தெளிவாக்கிக்கொள்ள நினைத்தாள். இதில் யாரின் நுழைவையும் அவள் விரும்பவில்லை. தன் வாழ்க்கை இன்னொருவரின் அறிவுரை தேவையில்லை. சரியோ, தவறோ தானே முடிவெடுப்பது என்ற முடிவிற்கு வந்தாள்.

ஒருவழியாய் யோசித்து யோசித்து இப்பொழுது எந்தவித வாதங்களும் இன்றி வாழ்க்கையை அதன் போக்கில் நகர்த்த முடிவுசெய்துகொண்டாள்.

அவளின் இறுதி முடிவு அதன் பின்னர் வசீகரனிடம் கூட ஓரிரு வார்த்தைகள் முகம் கொடுத்து பேசவும், சிறு சிறு புன்னகைக்கும் வழிவகுக்க சுமூகமாய் செவதை போல தான் இருந்தது அவர்களின் வாழ்க்கை.

அந்த வார இறுதியில் திருச்சி அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில் வசீகரன் குடும்பத்தின் குலதெய்வ கோவிலிற்கு செல்ல முடிவு செய்யப்பட்டது.

அதன்பொருட்டு அம்பிகாவும் குகனும் தங்களுடன் வர சொல்லி  நீதிமாணிக்கம், முனீஸ்வரன், கம்பன் குடும்பத்தையும் அழைக்க சம்பந்தி குடும்பத்தினரின் முதல் அழைப்பு. நிராகரித்தால் மரியாதையாக இருக்காது என்று நீதிமாணிக்கம் தன் தம்பியை வற்புறுத்தி அழைத்துவந்திருந்தார்.

கம்பனும் ராதாவும் வரமுடியாத சூழல் என்றுவிட்டதால் ரேவதியும், பிரபுவும் இணைந்துகொண்டனர். உடன் சூர்யா அனுபமா.  

சந்தியாவிடம் சண்டையிட்டு கெஞ்சி கொஞ்சி அவளை வரவழைத்திருந்தாள் சந்நிதி. விடுமுறை கிடைக்காது என்று முறைத்த விஷ்வேஷ்வரன் வேறு வழியின்றி நேராக ஊருக்கே வந்துவிடுவதாக சொல்லிய பின்பு தான் விட்டனர் வசீகரனும், சந்நிதியும்.

அங்கே ஊர்த்தலைவர் மூலமாக தங்குவதற்கு ஒரு வீட்டை ஏற்பாடு செய்திருந்தனர். ஊரே திருவிழாக்கோலம் பூண்டிருக்க அனைவருக்கும் அத்தனை மகிழ்ச்சி.

திருவிழாவிற்கென்று அவர்கள் வர முடியும் சூழ்நிலை வாய்ப்பதில்லை என்பதல இந்த முறை அதனையும் சேர்த்தே கொண்டாட முடிவு செய்தனர். இரண்டுநாட்கள் அங்கே தான் இருப்பு.

காலையிலேயே கோவிலுக்கு சென்றுவிட்டு வந்து சாப்பிட சரியாக மதிய நேரம் வந்து சேர்ந்தனர் விஷ்வாவும், சந்தியாவும். அந்த ஊரை சுற்றிப்பார்த்துவிட்டு வந்திருந்தனர்.

இரவு உணவு முடிந்து அனைவரும் உறங்க சென்றுவிட இளையவர்கள் அனைவரும் சத்தமில்லாமல் மாடிக்கு சென்றனர்.

வசீகரன், விஷ்வேஷ்வரன். புகழ், புவனேஸ்வரன், பிரபு, சூர்யா என பெரும்கூட்டணி அமைந்துவிட மாடியே  அல்லோலகப்பட்டது.

பிரபு வேறு பாண்டிச்சேரியில் இருந்து வரும் பொழுது பீர் பாட்டில்களை புகழ், புவன் கேட்டதன் படி வாங்கி வந்திருக்க சூர்யா அதில் ஒரு பாட்டிலை மொத்தமாய் தன் தொண்டைக்குழிக்குள் சரித்தான்.

“அடேய்…” என தலையில் கைவைத்து பிரபு பார்க்க வெறும் குளிர்பான டின்களை வைத்துக்கொண்டு வசீகரனும், விஷ்வாவும் என்னவென கேட்டனர்.

“அதுல சரக்கு மிக்ஸ் பண்ணிருக்கேன்…” என்று ஒரு குண்டை தூக்கி போட,

“மாப்ள…” என அதிர்ச்சியாகி பார்த்தான் புகழ்.

“அடங்குடா, பீர்க்கும், சரக்குக்கும் ரொம்ப வித்யாசம் கண்டுட்ட. இவ்வளோ பயப்படறவன் இதை தொட கூடாது.  ஏன் குடிச்ச?…” விஷ்வா கேட்க,

“அப்பாவுக்கு தெரிஞ்சா…”

“ரொம்ப நல்லவனுங்கடா நீங்க, இது மட்டும் அப்பாவுக்கு தெரிஞ்சா கொஞ்சுவாராமா?…” வசீகரன் கலாய்க்க இவர்களை கண்டுகொள்ளாத சூர்யாவிற்கு போதை தலைக்கேறியது. தத்துபித்தென உளற ஆரம்பித்தான்.

“அவனை அடக்குடா…” என்ற வசீகரன் பிரபுவை முறைக்க,

“சாரிடா வசீ, இந்த ரேவதி இப்பலாம் ரொம்ப ரூல்ஸ் போடறா. அதுவும் ப்ரெண்ட்ஸ் கூட சேர்ந்து குடிக்க சுத்தமா விடறதே இல்லை. புகழ் சொல்லவும் ரொம்ப ஹேப்பியாகிடுச்சு. அதான் எனக்கு மட்டும் மிக்ஸ் பண்ணி கொண்டுவந்தேன்…”

“நல்லா பண்ண போ. அவனுக்கு பீரே ஒரு அளவுக்கு மேல போனா ஒத்துக்காது…” என வசீகரன் சொல்ல,

“டேய், சும்மா தொணத்தொணக்காம போய் தூக்கிட்டு வாங்கடா அந்த செல்லத்த…” என சத்தமாய் கத்த,

“யாரடா…”

“ஓ சித்தப்புவ, சாமிடா, ஏன்னா மனுஷன், கும்பிடறேனுங்க சாமி சொல்லனும்…” சூர்யா பிதற்ற,

“டேய் மெதுவாடா…” என யார் சொன்னாலும் கேட்கும் நிலையில் இல்லை அவன்.

“ஆனாலும் தலைக்கு தில்ல பார்த்தியா? சித்தப்பா மேல பயம் அத்து போச்சு. எல்லாம் சரக்கு செய்யும் மாயம்…” புகழ் கேலி பேச லேசான அழுகை போல சூர்யாவின் குரல் கேட்க,

“போச்சு…” என வசீகரன் தலையில் கை வைத்தான்.

“மச்சா உன் தங்கச்சி மதிக்கவே மாட்டிக்காடா. என் பேச்சை அவ கேட்கறதே இல்ல.பொண்டாட்டி கன்ட்ரோல்ஸ் மை ஹேண்ட் எப்படின்னு உன் மாமனார்ட்ட கத்துக்கனும்டா. எம்புட்டு செலவானாலும் பரவாயில்ல மச்சா. நீ பார்த்துப்ப…”

“எவனாச்சும் அவன்கிட்ட பேச்சு குடுத்தீங்க அவ்வளோ தான். கதை கேட்டோம் இன்னைக்கு நமக்கு சிவராத்திரி தான். ஒருத்தனும் கீழே போக வேண்டாம். அனுவுக்கு தெரிஞ்சா செத்தான் இவன். பேசாம இங்கயே படுங்க…” வசீகரன் சொல்ல,

“நான் போய் பில்லோ, பெட்ஷீட்ஸ் இன்னும் நாலு எடுத்துட்டு வரேன். இவனை சத்தம் போடாம பார்த்துக்கோங்க…” என விஷ்வா கீழே சென்று மேலே வர அதுவரை உறங்காமல் விழித்திருந்த முனீஸ்வரன் அவனின் பூனை நடையில் பின்தொடர்ந்து மாடிக்கு சென்றார்.

“வந்துட்டேன்டா…” என கொண்டுவந்ததை விரித்துவிட முனீஸ்வரன் மேலே வரை வராமல் தூங்கபோகிறார்கள் என நினைத்து கீழே இறங்க,

“டேய் என் செல்லத்த தூக்கிட்டு வாங்கடா…” என்று மீண்டும் கத்திய கத்தலில் மீண்டும் மாடிக்கு வந்துவிட்டார்.

அவரை எதிர்பார்க்காத மற்றவர்கள் அதிர்ச்சியாக சூர்யாவை முனீஸ்வரன் உக்கிரமாய் முறைத்துக்கொண்டிருந்த நேரத்தில் புகழும், பிரபுவும் பாட்டில்களை அப்புறப்படுத்த விஷ்வாவும், வசீகரனும் மறைவாய் நின்றுகொள்ள புவனிற்கு குடித்த அனைத்தும் வெளியே வந்துவிடும் அளவிற்கு பீதியாகி போனது.

அதற்குள் தட்டு தடுமாறி தள்ளாடிக்கொண்டு முனீஸ்வரனிடமே சென்றுவிட்டான் சூர்யா.

“ஐயோ…” என்று பார்த்தவர்களுக்கு அருகில் சென்று அழைக்க தோன்றவில்லை. புகழ் வசீகரன் கையை பிடித்திருக்க, பிரபுவும் விஷ்வாவும் புவன் அருகில் நின்றனர்.

Advertisement