Advertisement

அத்தியாயம்—-6

வரவேற்பில் நின்றுக் கொண்டு இருந்த வல்லரசுக்கு  இந்த விழா முடியும் வரை நம்மால்  இங்கு நிற்க முடியுமா என்பதே அவனுக்கு சந்தேகமாய் இருந்தது. அதுவும் அக்காவுக்கு உதவி செய்கிறேன் என்று  ஸ்டேஜிக்கு வந்து போக இருந்தவளை அவளுடைய அம்மா “அக்கா பக்கத்திலேயே நில்.  கொடுக்கும் பரிசை எல்லாம் வாங்கி வைய்.” என்று விட்டு போக.

அக்கா பக்கத்திலேயே நின்றுக் கொண்டு இருந்த ஸ்ரீமதியைய் பார்க்க …பார்க்க…. எங்கே தன் கட்டு பாட்டையும்  மீறி கத்தி விடுவோமோ என்று கூட பயந்து விட்டான்.

ஒரு மாதமாய் இவள் தான்  தன் மனைவி என்று இருக்க. அவள் இல்லை அவள் அக்கா தான் என்று ஒரு மணி நேரத்துக்கு  முன் தன் மனதில் பதிய வைத்து  வந்தாலும்…..இங்கு அவளை கடவுளே என் விரோதிக்கு கூட இந்த நிலை வந்து விட கூடாது என்று தான் நினைக்க தோன்றியது.

மகனின் நிலை புரிந்தவராய் ஒரு பெண்ணை கைய்யோடு அழைத்து வந்த சுந்தரி.  ஸ்ரீமதியிடம் “மதி வாசலில் வரவேற்க யாரும் இல்லை பார். சின்ன  பசங்க தான் நிக்குறாங்க. பன்னீரை நிறைய  தெளித்து வர்றவங்க ட்ரசை எல்லாம் ஈரம் படுத்துடுறாங்க . நீ போய் அங்கு நில்லுமா…..” என்று சொல்ல.

தன் அக்கா கொடுத்த பரிசை வாங்கி வைத்துக் கொண்டே “அம்மா பரிசு வாங்கி வைய் என்று சொன்னாங்க அத்தை.” என்று சொன்னவளிடம்.

அதற்க்கு … “இதோ இவ என் மச்சின பொண்ணு தான் இவ வாங்கி வைப்பா நீ போய் வாசலில் நில்லுமா….” அந்த இடத்தை விட்டு மதியைய் அகற்றுவதிலேயே  குறியாக இருந்தார்.

தயக்கத்துடன் தான் இருந்த இடத்தில் அந்த பெண்ணை நிற்க வைத்த மதி தயங்கி கொண்டு தான் அங்கு இருந்து செல்ல பார்த்தாள். அவள் அப்பாவுக்கு இது போல் கல்யாணத்தில் வரவேற்க நிற்பது எல்லாம் பிடிக்காது.

அவள்டென்த்  படிக்கும் போது இது  போல்  ஒரு கல்யாணத்துக்கு நின்றதுக்கே அந்த கத்து கத்தினார். இப்போது என்ன சொல்வாரோ…? என்று  நினைத்தவள்.

சொல்வதுக்கு இல்லை சம்மந்தி தான் சொன்னார்கள் என்றால் அமைதியாகி விடுவார் என்று நினைத்துக் கொண்டே அந்த இடத்தை விட்டு ஒரு இரண்டு அடி எடுத்து வைத்தவள்.

தன் இடது கையில் பணம் கவர் இருப்பதை பார்த்து திரும்பி அதை அந்த பெண்ணிடம் கொடுக்கும் போது.

வல்லரசு அவன் அம்மாவிடம்  நன்றி தெரிவிக்கும் வகையில் சைகையில்   சொல்வதை பார்த்து  அந்த இடம் என்ன அந்த மண்டபத்தை விட்டே சென்று விட்டால் நன்றாக இருக்கும் என்று  தான் தோன்றியது.

ஆனால் செல்ல முடியாதே நடப்பது அவள் அக்கா திருமணம் ஆயிற்றே…..அதனால் மனமகள் அறைக்கு சென்றவள் கதவை அடைத்து கவிழ்ந்து படுத்தது தான்.

தன் அன்னை கதவை  தட்டவும் தான் திறந்தாள். “என்ன மதி இங்கு வந்து படுத்துட்டு இருக்கே…?நான் உன் அக்கா பக்கத்தில் தானே நிக்க சொன்னேன்.” என்று சொல்லிக் கொண்டே வந்தவர்.

பெண்ணின் அழுத முகத்தை பார்த்து பதறி  போய் … “என்ன மதி யாரு  என்ன சொன்னா….? என்று கேட்டதுக்கு.

எப்போதும் அக்கா தங்கை தான் ஒளிவு  மறைவின்றி இருப்பார்கள் என்பர். ஆனால் ஸ்ரீமதி விஷயமே வேறு. அவள் தன் அக்காவிடம் தேவைக்கு தவிர அதிகமாக ஒரு வார்த்தை பேச மாட்டாள். அதே போல் தான் ஸ்ரீவள்ளியும்.

ஆனால் அன்னையிடம் அனைத்தையும் ஒப்பித்து விடுவாள். அது போல் அனைத்தையும் ஒரு முழு மூச்சில் சொல்லி முடித்தவள்.

“அது என்னவோ அத்தானுக்கு என்னை பிடிக்கலேம்மா….” என்று சொல்லி முடித்தவளின். கலைந்த தலையைய் ஒதுக்கி வைத்தவர்.

“அது எல்லாம் இருக்காதும்மா….மாப்பிள்ளை  ஏதோ  நினச்சி அவர் அம்மா கிட்ட சைகை செய்து இருப்பாரு. நீ இது உனக்குன்னு  தப்பா புரிஞ்சி இருப்ப….

போ போய் முகத்தை கழுவிட்டு கொஞ்சம் பவுடர் போட்டுட்டு வா. அழுதது அப்படியே தெரியுது பாரு. அப்புறம் வந்த சொந்தக்காராங்க எல்லாம் ஆள் ஆளுக்கு ஒரு காரணத்தை சொல்ல போறாங்க.” என்று சொல்லியும் கூட போகாது.

“இல்லேம்மா அத்தானுக்கு என்னை பிடிக்கலே…அது நல்லா தெரியுது.ஆலம் சுத்தும் போது  கூட பார்த்துட்டு தானே இருந்திங்க.” என்று அதுக்கு மேல் என்ன சொல்லி இருப்பாளோ…

“ஏய் வாயைய் மூடுடீ . ஆலம் சுத்தும் போது உங்க அக்காவை கூட தான் திரும்பி பாக்காம போனாரு. அவர் அம்மா தான் சொன்னாங்கலே… இப்போ தான் ஊரில் இருந்து வந்தாரு. ஊரிலும் வேலை ஜாஸ்தின்னு. போ கண்டதை நினச்சி மனசை குழப்பிக்காம ரெடி ஆயிட்டு மேடைக்கு வா….” என்ற அம்மாவின் வார்த்தை தான் சரியோ நான் தான் கண்டதை போட்டு குழப்பி கொள்கிறோனோ என்று நினைத்தவள் பாத்  ரூமுக்கு சென்று விட.

மகளை சமாதானம் படுத்தி அனுப்பி விட்டாலும் மீனாட்சிக்கு ஏதோ   வித்தியாசமாகவே பட்டது. திருமணம் நிச்சயம் ஆனதில் இருந்து பெண்ணிடம் மட்டும் பேசாது மாமா, அத்தை என்று தன்னிடம் கூட நன்றாக தானே போனில் பேசினார்.

ஆனால் இப்போது மேடையில் ஏதாவது வேலை என்று போனால் கூட சின்ன சிரிப்பு தான்.அதுவும் அந்த சிரிப்பு மனதை ஒட்டாது தான் இருந்தது. 

கடவுளே உன்னை நம்பி தான் இருக்கிறோம். நீ தான் நல்ல படியாக இருக்க செய்ய வேண்டும் என்று கடவுளுக்கு ஒரு மனுவை போட்டுக் கொண்டு இருக்கும் போதே…

“மீனா….” என்ற திருவேங்கடத்தின் குரலுக்கு.“தோ வர்றேங்க.” என்று அடுத்த வேலையைய் பார்க்க சென்று விட்டார்.

இப்படி அனைவரும் ஒரு வித பதட்ட  சூழ்நிலையில்  இருக்க தான் வல்லரசு, ஸ்ரீவள்ளியின்,  திருமணம் நடந்து முடிந்தது.

வல்லரசுவின் நிலை உணர்ந்து அன்று  இரவு  நடக்கும்  மூகூர்த்தத்தை  பற்றி  சுந்தரி  மீனாட்சியிடம் “எங்கவீட்டிலேயே வைத்துக் கொள்கிறோம்.” என்று சொல்ல.

“பெண் வீட்டில் செய்வது  தானேங்க முறை….” என்று சொல்லும் மீனாட்சியிடம்.

“நமக்குள்  முறை  என்ன இருக்கு சம்மந்தி. உங்க வீட்டில் ஒரு வயசு பொண்ணு இருக்கும் போது இது எல்லாம் வேண்டாமே….அது தான் என் வீட்டில் வைத்துக் கொள்ளலாம் என்று சொல்றேன்.” என்ற சுந்தரியின் பேச்சு  சரி தான் என்பதால்  திருவேங்கடம் , மீனாட்சி இதற்க்கு ஒத்துக் கொண்டனர்.

ஆனால் அதன் பிறகு கூட மாப்பிள்ளை தங்கள் வீட்டுக்கு வராதது தான்  மீனாட்சியின் மனதை பலமாக தாக்கியது. திருவேங்கடத்துக்கு அது எல்லாம் பெரிய விஷயமில்லை என்பது போல் மீனாட்சி “ என்னங்க மாப்பிள்ளை பெண் ஜோடியா வரவே மாட்டேங்குறாங்க.” என்று குறை படும் போது எல்லாம்.

“மாப்பிள்ளை  என்ன நம்ம மாதிரி காலையில் போனா மாலை வரும் உத்தியோகம் என்று நினச்சியா…?சொந்தமா கடை வெச்சி நடத்துறாருடீ….அதுவும் ஒன்னு இல்ல நாளு, அதோடு மைசூரில் வேற புதுசா கடை  வேலை நடக்குது நமக்கு தெரிந்தது தானே…

அது தான் போன தடவை  நம்ம ஸ்ரீ வரும் போது சொன்னாளே….அந்த கடை திறப்பதற்க்கு தான் மாப்பிள்ளை  சென்னைக்கும், மைசூருக்கு நடையா நடக்குறாருன்னு.” தன் மருமகனின் புகழ் பாட.

மீனாட்சிக்கு தான் தலையில் அடித்துக் கொள்ள வேண்டும் போல் இருந்தது. திருவேங்கடத்தை பொருத்த வரை தன் பெரிய மகள் அதிர்ஷ்டதேவதை. அது தான் வசதியான இடம் வீடு தேடி வந்தது. மாப்பிள்ளை தங்க கம்பி. இது தான் அவர் பேச்சாய் இருந்தது.

மீனாட்சிக்கு என்ன என்றால், நம்  வசதி பார்த்து தானே நம் வீட்டில் பெண் எடுத்தார்கள். இது வரை மாப்பிள்ளை தன் வீட்டுக்கே வராது போனால் அக்கம் பக்கத்தவர் என்ன நினைப்பார்கள்.

ஏற்கனவே எதிர் வீட்டு பார்வதி “இதுக்கு தான் நமக்கு சமமா பொண்ணு எடுக்கனும் பொண்ணு கொடுக்கனும் என்பது. வசதி  பார்த்தா இப்படி தான் நம்ம பசங்கல ஜோடியா கூட பார்க்க முடியாது போயிடும்.” என்று குத்தல் பேச்சி கேட்டதில் இருந்து  மாப்பிள்ளை ஒரு தடவை வந்து போனால் நல்லா இருக்கும் என்று சம்மந்தியம்மாவிடம் சொல்லிய பிறகு தான் இரண்டு தடவை வந்து சென்றது. அதுவும் ஒரு கப் காபியோடு “எனக்கு வேலை இருக்கு அத்தை ஈவினிங் காரை அனுப்புறேன் வள்ளியைய் அனுப்பி வெச்சிடுங்க.” என்று சொன்னவன்.

மீனாட்சி அதற்க்கு ஒற்றுக் கொண்டாரா…இல்லையா…? என்று  கூட கேட்காது போய் விடுவான். இன்னும் ஒன்று மீனாட்சிக்கு புரியாதது ஸ்ரீக்கு வள்ளி என்று கூப்பிடாலே பிடிக்காத ஸ்ரீ மாப்பிள்ளையின்  இந்த அழைப்பை எப்படி ஏற்றுக் கொள்கிறாள் என்பதே…..

ஸ்ரீவள்ளியின் திருமணம் நடந்து முடிந்ததில் இருந்து பட படத்த நெஞ்சம்  மூன்று மாதத்தில் “அம்மா நாள் தள்ளி போய் இருக்கு…” என்று சொன்ன ஸ்ரீவள்ளியின் பேச்சில் தான் அமைதி கிட்டியது என்று சொல்லலாம். ஆனால் அந்த சந்தோஷமும் நிலைக்காது இப்படி அல்ப ஆயுசில் அவள் போய் சேருவாள் யாரும் நினைத்துக் கூட பார்க்கவில்லை.

ஸ்ரீ மதியோ  ஜெய்யின் மீது கைய் போட்ட வாரே…. சின்ன வயதில் இருந்து  அவள் கொலுசு, வாட்ச், ஏன் அவள் ஆக்ஸிடண்ட் ஆகி இறந்த வண்டி கூட தனக்காக வாங்கியது தான்.

அப்பாவிடம் “அப்பா என்னுடையதை  மதி எடுத்துக்கட்டும்பா அவளுடையதை நான் எடுத்துக்குறனே….” என்று தலையைய் சாய்த்து கேட்கும் போது பார்க்க எனக்கே நன்றாக தான் இருந்தது.

ஆனால்  எது என்றாலும் அவள் உபயோகித்தது தான் நான் உபயோகிக்க வேண்டுமா….?என்ற எண்ணம் தலை தூக்க. “அப்பா இது  எனக்குன்னு தானே வாங்கியது. அதனால் நான் தரமாட்டேன்.” என்று எப்போதும் எல்லாமும் விட்டு கொடுத்தவள். இதுக்கு அழிச்சாட்டியம் செய்ய.

“உன் கிட்ட இப்படி ஒரு செயலை எதிர் பாக்கலே மதி. “ என்று சொல்லி அப்பா ஆபிசுக்கு சென்று விட்டார்.

அன்று முழுவதும் உண்ணாவிரதம் இருந்த ஸ்ரீயைய் பார்க்க முடியாது அன்று இரவே வண்டியின் சாவியைய் அவளிடம் கொடுத்து “நீயே வெச்சிக்கோ….” என்று  விட்டாளும், மனது என்னவோ  போல் ஆகிவிட்டது.

தன் தோழிகளிடம் எல்லாம் நாளை நான் புது வண்டியில் காலேஜ் வருவேன் என்று விட்டு இப்போது எப்படி அக்கா வண்டியைய் எடுத்து செல்வது என்று யோசித்து அக்கா வண்டியில் செல்லாது எப்போதும் போல் காலேஜ் பஸ்ஸிலேயே சென்றவளை  பார்த்து…

”என்ன மதி புது வண்டி எங்கே ….?”என்று கேட்டதுக்கு. “வாங்கிட்டேன். ஆனா அப்பா இவ்வளவு தூரம் கொடுக்க பயப்படுறாரு.” என்று தோழிகளிடம் சமாளித்து விட்டாலும், தன் மனதை சமாளிப்பது தான் அவளுக்கு பெரும் பாடாய் இருந்தது.

அதுவும் தனக்காக வாங்கிய வண்டியைய் அவள் காலேஜூக்கு எடுத்துக் கொண்டு போகும் போது என்ன தான் அக்கா என்றாலும் மனம் வலிக்க தான் செய்தது.

அதே வண்டியால்  தான் அவள் உயிர் இறந்ததை பார்த்ததும், தான் மனம் வந்து அவளிடம்  அந்த வண்டியைய் தந்து இருந்தால் நன்றாக இருக்குமோ என்று நினைக்காத நாளும் இல்லை என்று சொல்லலாம்.

இப்போது வரை புரியாத ஒன்று தன்னிடம் எப்போதும் தள்ளியே இருக்கும் அக்கா இறக்கும் போது மட்டும் குழந்தையைய் பார்த்துக் கொண்டே  இவனை ஏன் தன்னிடம் கொடுத்து விட்டு இறந்தாள் என்பதே….குழந்தை சிணுங்கலில் நினைவு கலைந்தவள். பசிக்குமோ என்று குழந்தையைய் தோளில் தட்டிக் கொண்டே  மதி சமையல் அறைக்கு செல்ல.

தூங்காது முழித்து இருந்த வல்லரசு குழந்தையைய் தட்டி கொண்டே செல்லும் ஸ்ரீயையே பார்த்துக் கொண்டு இருந்தான்.

இப்படியாக தங்கள் கடந்தகால நினைவுகளோடு அந்த  இரவு முடிவுற்றது.

 

Advertisement