Advertisement

அத்தியாயம்—-9
பூஜை அறையில் இருந்த  சுந்தரி குழந்தையின் அழுகுரலில்  தொடர்ந்து பூஜையில் ஈடு பட முடியாது  அந்த அறையைய்  விட்டு வெளியில் வந்தவர்.
“மேல் நோக்கி “மதி…மதி…” என்று  மருமகளை அழைத்து பார்த்து பதில் வராது போக.
“அரசு …அரசு.” என்று தன் மகனை அழைக்க.
அங்கு டீப்பாயைய் துடைத்துக் கொண்டு இருந்த வேலையாள்…”இப்போ தான் சின்ன அய்யா வெளியில் போனாங்க  அம்மா.” என்ற பதிலில் தானே படியேறியவர்.
அங்கு கண்ட காட்சியில்  அப்படியே உறைந்தது சில நொடி தான். பின் தன் மருமகளின் நிலை உணர்ந்து அவசர அவசரமாக  தரையில் விழுந்து கிடந்த    அவள் அருகில் சென்று அவளை உலுக்கி பார்க்க.
எந்த அசைவும் இல்லாது போனது மட்டும் இல்லாது நெத்தியில் வழிந்த  குறுதியில் பயந்து அறை விட்டு மாடி படியில் இருந்து கீழ் நோக்கி  “என்னங்க…என்னங்க…” என்று தன் கணவரை அழைத்தவர்.
இன்னும் அதே டீப்பாவையே துடைத்துக் கொண்டு இருந்த  வேலையாளிடம்.” தண்ணீ எடுத்துட்டுவா…..” என்று அவனை அனுப்பி விட்டு திரும்பவும் விழுந்து கிடந்த மருமகளிடம் அமர்ந்து.
“மதி மதி…. எழுந்துடுமா….” என்று அறற்றியவர்.வாய் தன் பாட்டுக்கு “அய்யோ கடவுளே….நாங்க என்ன பாவம் செஞ்சோம். ஏன் எங்க குடும்பத்துக்கே இப்படி சோதிக்கிற….” என்ற கதறிய குரல்.
மாடி ஏறி வந்த சுகவனம் காதில் வந்து மோத…எதோ என்று மெதுவாக மாடி ஏறிக் கொண்டு இருந்தவர்.
அவசரமாக  படிக்கட்டை கடந்து தன் மகன் அறைக்கு புகுந்தவருக்கு  தரையில் அமர்ந்து இருந்த தன் மனைவின்  முதுகுப்புறம் மட்டும் தான் தெரிந்தது.
“என்னம்மா…..?” என்று கேட்டுக் கொண்டே அருகில் செல்ல தான் மருமகளை பார்த்ததும் அவரும் பதறி  மனைவியின் அருகில் அமர்ந்து வேலையாள் கொண்டு வந்த தண்ணீரை தெளித்ததும்  முகத்தில் அசைவு தெரிய அப்போது தான் கணவர், மனைவி இருவருக்கும் கொஞ்சம் ஆசுவாசம் கிட்டியது.
“மதி…மதி…” என்று  சுந்தரி மதியையைய் தட்டி எழுப்ப. சுயநினைவுக்கு வந்த மதி மாமாவின் எதிரில் இப்படி படுத்திருப்பதை கூச்சமாக கருதி அவசர  அவசரமாக எழ பார்க்க.
மருமகளின் மனநிலை உணர்ந்த சுகவனம் தன் மனைவியிடம் ஜாடை காட்டி விட்டு அகன்று   டாக்டருக்கு  அழைத்து  விட்டு  பின் தன் மகனுக்கு போன் போட்டு…  “அனைத்தையும் சொல்லி  வீட்டுக்கு வா…” என்று  சொல்லி விட்டு மகன் என்ன என்று கேட்பதற்குள் போனை வைத்து விட்டார்.
மருமகளை கைய் தாங்கலாய் பிடித்து கட்டிலில் படுக்க வைத்த சுந்தரி. வேலையாளிடம் அவ்வளவு நேரம் அழும் குழந்தையைய் கொடுத்து “கீழே அய்யா கிட்ட குழந்தைய கொடுத்துட்டு  …சூடா காபி கொண்டா….” என்றவர்.
பின்  மதியின் பக்கம் திரும்பியவர்…. “சொல்லும்மா உனக்கும் அவனுக்கும் என்ன பிரச்சனை….?” என்று  கேட்டவரிடம்.
“பிரச்சனையா… இல்லையே….? என்று மதி மறுப்பு சொல்லிக் கொண்டு இருக்கும் போதே….அடுத்த தெருவில்  வசிக்கும் அவர்கள் குடும்ப டாக்டர் வந்து விட.
அவர் பரிசோதனை செய்து காயத்துக்கு ட்ரஸ்ஸிங் செய்து விட்டவர். சுந்தரியிடம் “எதுக்கும்  தலையில் ஒரு ஸ்கேன் எடுத்துடலாம். சுயநினைவு இல்லாம இருந்தாங்கன்னு சுகவனம் சொன்னாரு அதனால் தான்.” என்று சொல்லி விட்டு அவர்  கிளம்பி சென்றதும்.
திரும்பவும் “சொல்லு மதி உனக்கும் அவனுக்கும் என்ன பிரச்சனை…” திரும்பவும் மறுத்து பேச வந்த மதியிடம்.
“எனக்கு உண்மைய சொல்லு மதி. ஒரு மாதம் காலமா அமைதியா போகுது. கூடிய சீக்கிரம் சரியா ஆகிடுமுன்னு  நினச்சேன்.  என் கிட்ட சொல்லாது எங்கும் போகாத என் பையன் இன்னிக்கி  போய் இருக்கான்னா….சொல்லு என்னை அம்மாவா நினச்சி சொல்லு.”
சுந்தரியின் அம்மா என்ற வார்த்தை ஏதோ மந்திரம் செய்ததோ…இல்லை அவளுக்கே யாரிடமாவது தன் மனதில் இருப்பதை கொட்ட வேண்டும் என்று தோன்றியதோ…மனதில் இருப்பதை கொட்ட ஆராம்பித்தாள்.
“அத்தானுக்கு முதலில் இருந்தே என்னை பிடிக்காது. அது ஏன்னு எனக்கு இன்ன வரை தெரியல.தோ இப்போ நான் அத்தான்னு சொல்றனே இப்படி கூப்பிடுவது கூட அவருக்கு பிடிக்காது. நீங்க அவருக்கு வேறு பெண்ணை  திருமணம் செய்து இருக்கலாம்.” என்று சொல்லி கொண்டே வந்தவள்.
“இல்லை இல்லை. பாவம் அந்த பொண்ணு. எனக்காவது பழகி போச்சி. அந்த பொண்ணு…” ஏதோ நினைத்து.
 “வேண்டாம்…. வேண்டாம்…” என்று தன் கைய் ஆட்டி சொல்லிக் கொண்டு இருந்தவளின் முகத்தில் அப்படி ஒரு வலி.
ஏதோ பெரியதாக நடந்து இருக்கிறது. சின்ன விஷயத்துக்கு எல்லாம்  இவள் தன்னை இப்படி  வருத்திக் கொள்பவள் இல்லை. இந்த மூன்று ஆண்டு பழக்கத்தில் அறிந்தவராய்….
“எதுக்கு அந்த பொண்ணு வருத்தப்படும் மதிம்மா….”
ஏதோ நினைவில் மூழ்கி தன்னையே வருத்திக் கொண்டு இருந்தவள். அத்தையின் கேள்வியில் தன் மனதில் உள்ளதை சட்டென்று சொல்லி விட்டாள்.
“ எந்த பெண்ணுக்கும்   தன்னை அணைக்கும் போது மற்ற பெண்ணின் பெயரை சொன்னால் வலிக்க தானே செய்யும்.” தன் நெஞ்சை  தொட்டு காட்டி சொல்ல.
“உன்னிடம் அப்படி எந்த பெயரை சொன்னான் அரசு.”
மதியின் பேச்சியில் நடந்த விஷயத்தை கிரகித்து கொண்டவர் .அது  பற்றி  கேட்டு மேலும் மதியைய் சங்கடத்தில் ஆழ்த்த விரும்பவில்லை.  ஒன்றில் மட்டும் உறுதியாக இருந்தார்.
இந்த பெண் தான் ஏதோ தவறாக புரிந்து இருக்கிறாள். தன் மகன் விரும்பும் பெண்ணை அணைக்கும் போது எப்படி வேறு  பெண்ணின் பெயரை சொல்லி இருப்பான்.
தன் மாமியார் தான் சொன்னதை நம்பவில்லையே என்ற ஆதாங்கத்தில் மூக்கை உறிஞ்சுய தி…”அவர் தப்பா வேறு யாரு பேரையும் சொல்லலே…ஸ்ரீன்னு தான் சொன்னாரு.”
அவள்  எதை நினைத்து சொல்கிறாள் என்று புரிந்த…”ஸ்ரீ தானே சொன்னான். அப்புறம் என்ன மதிம்மா….?” என்ற மாமியாரை புரியாது பார்த்தாள் மதி.
“இவர் என்ன தெரிஞ்சு பேசுறாரா…இல்ல தெரியாம பேசுறாரா…ஒரு சமயம் ஸ்ரீ என் அக்கா  தானே …என்று நினைத்து பேசுகிறாரோ…..என்று நினைத்தவள்.
 “ஸ்ரீ எனக்கு அக்கா தான் இருந்தாலும்….” இதற்க்கு மேல் எப்படி ஒரு வயதானவரிடம் பேசுவது என்று நினைத்து தயங்கியவளிடம்.
“ அவன் ஸ்ரீ….” என்று மேலும் ஏதோ சொல்வதற்க்கும் முன் அங்கு வந்த மகனை பார்த்து மேலும் ஏதும்  பேசாது தன் மகனின் தோளை தொட்டு ஆறுதல் படுத்தியவராய் அந்த இடத்தை விட்டு அகன்று விட்டார்.
தன் அன்னை அமர்ந்த இடத்தில் அமர்ந்த வல்லரசு…தன் மனைவியின் கையைய் பற்றி…
“இப்போ சொல்லு…..” என்ற கணவனை பயத்துடம் பார்த்து.
இவன் என்னத்தை சொல்ல சொல்கிறான். நான் அத்தையிடம் பேசியதை கேட்டு விட்டானா…. அதை நினைத்த நொடி இன்னும் அவள் முகத்தில்  பயம் கூட.
தான் நினைத்தது சரி என்பது போல்… “எங்க அம்மா  கிட்ட மனச விட்டு பேசுவது கூட என் கிட்ட பேச முடியல … இதுக்கும் நான் தான் காரணம் எனக்கு தெரியும் ஸ் ” என்று ஒரு பெரும் மூச்சு விட்டவன்.
பின் “ நான் எது சொன்னா….நீ என்னிடம் உன் மனதை திறந்து பேசுவ.” தான்  இவ்வளவு பேசியும் தன் மனைவியின்  முகத்தில் பயம் தெளியாததை பார்த்து.
“சரி நீ எதுவும் உன் மனதில் இருப்பதை  சொல்ல தேவையில்லை. நான் சொல்லலாம்லே….இது நீ எப்படி எடுத்துப்பியோ…..உன் வீட்டுக்கு பெண் கேட்டு என் அப்பா அம்மாவை அனுப்பியது உனக்காக தான்.” என்ற வல்லரசுவின் வார்த்தையில் பேசாத மதியின் வாய் பேச வைத்தது.
“என்னது எனக்காகவா….?” தன் மனைவியின் முகத்தில் தோன்றிய மாற்றத்தை கவனித்துக் கொண்டே பற்றி இருந்த அவள் கைய்யில் அழுத்தம் கூட்டியவன்.
“ஆமாம் உனக்காக தான்.” என்று திரும்பவும் அழுத்தம் திருத்தமாக சொல்லியவனின் பேச்சிக் பேதை அவள் அதிசயத்து பார்த்தவள்.
ஏதோ நினைவு வந்தவளாய்….அவளின் தெளிந்த முகம் திரும்பவும் கூம்ப.
“என்ன ஸ்ரீ எது இருந்தாலும் கேளு. கேட்டா தானே நீ என்ன நினைக்கிற என்பது எனக்கு  தெரியும்.”
அவனின் ஸ்ரீ என்ற அழைப்பில் மனது துடித்தவளாய் படுத்து இருந்தவள் எழுந்து அவனிடம் பேசுவதற்க்காக எழ பார்த்தவளை பிடித்திருந்த கையைய் விடாது.
“இப்போ எதுக்கு எழுந்துக்குற படுத்த வாக்கிலேயே பேசு.” என்ற அதட்டியவனின் பேச்சு காதில் விழாது போல ஒரு வைராக்கியத்துடன் எழுந்து அமர்ந்தவள்.
“இப்போ எதுக்கு என் கிட்ட பாசம் இருப்பது போல் நடிக்கிறிங்க.உங்களுக்கு என்னை எப்போதும் பிடிக்காது தானே….அப்படியே இருங்க. அட்லீஸ்ட் எப்போவும் நீங்க  நீங்களா…. இருக்கிங்க என்ற பேராவது மிஞ்சும்.”
இது வரை பயந்து பயந்து இருந்தது போதும். என்ன வாழ்க்கை இது. என்ற எண்ணம் தான் மதிக்கு அவனிடம் பயம் இல்லாது பேச வைத்தது.
வல்லரசுவுக்கு இந்த பயம் இல்லாத பேச்சால் வாயடைத்து நின்றது ஒரு சில நொடி தான். பின் அவள் பேச்சில் வாய் விட்டு சிரித்தவன்.
“நீ இது மாதிரி உரிமையுடன் பேசனும், திட்டனும், கோபப்படனும், என்ற என்னுடைய ஆசை இப்போது தான் நிறைவேறியது. தேங்ஸ் கண்ணம்மா….”
ஆனா அதுக்கு அப்புறம் நான் சமாதானம் படுத்தியவுடம் அடுத்து நான் நினச்சது நடப்பது எப்போன்னு தான் தெரியல.” என்ற வல்லரசுவின் பேச்சு மதிக்கு சுத்தமாக புரியவில்லை.
எனக்கு தானே தலையில் அடிப்பட்டது. ஆனா மண்டை குழம்பி பேசுவது பார்த்தா….இவனுக்கு அடிப்பட்டது போல் அல்லவா இருக்கு.
நான் பேசிய பேச்சுக்கு அடிப்பான். இல்லை குறைந்த பட்சம் சத்தமாவது போடுவான்னு  பார்த்தா…..இவன் என்னவோ காதலி கிட்ட பேசுவது போல் பேசி வைக்கிறானே என்று  நினைத்துக் கொண்டு இருக்கும் போதே…
“அவனின் “ஸ்ரீ…” என்ற  அவனின் அழைப்பில்… அவன் என்ன என்ன செய்வான் என்று எதிர் பார்த்தாளோ…அத்தனையும் அவள் செய்ய போதுமானதாக இருந்தது.
“ ஸ்ரீன்னு கூப்பிடாதிங்க என் பெயர் மதி.” என்று அழுத்தம் திருத்தமாக சொல்ல.
‘என்ன ஸ்ரீ உன் பெயர் கூட எனக்கு தெரியாதா…?” என்ற அவன் பேச்சில் அவளின் கோபம் எல்லையைய் கடந்தது என்று சொல்லலாம்.
என்ன செய்கிறோம் ஏது செய்கிறோம் என்ற எண்ணம் கூட இல்லாது. தன் நெற்றியில் ஒட்டிய கட்டை பிரித்து எறிந்தவள்.
“அவள் எனக்கு அக்கா தான். அதுக்காக அவளை நினைத்து தான் எனக்கு எல்லாமே என்றால்…எனக்கு எதுவும் வேண்டாம்.” சிறு வயதில் இருந்து எல்லாவற்றிலும் தான் இரண்டாவதாக கருதப்பட்ட ஆதாங்கம் இப்போது மொத்தமாக அவனின் ஸ்ரீ என்ற அழைப்பு தாக்க கதறி சொல்பவளின் பேச்சு சத்தியமாக  அவனுக்கு புரியவில்லை.ஆம் அவனுக்கு புரியவில்லை தான்.
மதி பயந்தது போல்  அன்னையிடம் மனைவி பேசியது எதையும் அவன் கேட்கவில்லை. கேட்டிருந்தால் புரிந்து இருப்பானோ…ஏதோ பேசுகிறார்கள் என்ற அளவு நினைத்து தான் என் அம்மாவிடம் பேசுவதை என்னிடம் பேச மாட்டாயா…? என்று கேட்டான்.
 தன் மனைவியிடம்  தன் காதலை சொல்லலாமா….?வேண்டாமா…? என்ற அவனின் குழப்பம் காலையில் மனைவியுடனான நெருக்கம் ஒரு முடிவுக்கு கொண்டு வந்தது. சொல்லி விடலாம் என்று.
முதலில் அவள் இதழ் ஒற்றலிலேயே தன் விருப்பத்தை சொல்லி விடலாம் என்று தான் நினைத்தான். ஆனால் மனைவியின் இழைவு அவனை பித்தனாக்கி விட்டது என்று தான் சொல்ல வேண்டும். இத்தனை ஆண்டுகள் அவள் மீதான விருப்பம் அவளிடம் இழைய தான்  தூண்டியதே தவிர. தன் காதலை விளக்கி பின் தொடரலாம் என்று எண்ணாது இப்போதே அவளை ஆண்டு முடித்து விட நினைக்கும் தருவாயில் அவளின் விலகல் அவனை வெறிக் கொள்ள வைத்து விட்டது.
இங்கு இருந்தால் அவளின் விருப்பம் இல்லாது அவளை தொட்டு விடுவோமோ என்ற பயத்தில் தான்  என்ன செய்கிறோம் என்று சிறிதும் யோசியாது அவளை  தள்ளி விட்டு சென்றான்.
அடி பட்டு இருக்கும் என்று நினைத்துக் கூட பாராது சென்றவனுக்கும் மனது நிம்மதி துளியும் இல்லாது தான் இருந்தான். முதலில் தன் அணைப்புக்கு மயங்கி தானே இருந்தாள்… பின் ஏன் அந்த விலகல்.
 ஒரு சமயம் தன்னை அவளுக்கு பிடிக்கவில்லையா…? என்று யோசித்தவன் பின் அந்த நினைவே தவறு என்றும் கருதினான். பிடிக்காதவன் தொட்டால் கண்டிப்பாக அவளிடம் இந்த ஒத்துழைப்பு இருக்காது.
அவ்வாறு அவன் நினைக்கும் போதே…அவளின் உடல் தன் மீது உரசும் போது தன்னிடம் ஏற்பட்ட மாற்றம் இப்போதும் தன்னுள் எழுவதை பிரமிப்போடு உணர்ந்தான்.
தன் மனைவி வள்ளி என்று ஆன பிறகு கணவனுக்கு உண்டான கடமை என்று தான் அவளிடம் வாழ்ந்தானே தவிர. மனதால் இல்லை.
மனதுக்கு பிடித்த பெண்ணின்  எல்லை கடக்காத இந்த அணைப்பு தன்னுள் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துக்கிறது. இனி தாங்காது தன் மனதை அவளிடம் வெளிப்படுத்தி விட வேண்டும் என்று நினைக்கும் போது தான் தந்தையின் அழைப்பில் மனைவியின் நிலை உணர்ந்து துடித்து விட்டான்.
அவன் தந்தைக்கு எப்படி அவள் விழுந்தால் என்று தெரியாது. ஆனால் தள்ளி விட்ட அவனுக்கு தெரியும் தானே…அந்த  குற்றவுணற்ச்சியில்  வந்தவனுக்கு ஸ்ரீயின் இந்த கோபம் கூட புரியாது.
தன் கட்டை பிரித்தவளின் கைய் பற்றி “வேண்டாம் ஸ்ரீ பிரிக்காதே…அய்யோ ரத்தம் கொட்டுதே…” என்று பதற.
இப்போதும் அவனின் ஸ்ரீ அழைப்பில் வெறிக் கொண்டவளாய் ஏதோ பேச வந்தவள். கையில் பாலோடு அந்த அறைக்கு வந்த அத்தையின் வருகையில் வாய் திறவாது அமைதி காக்க.
மாடி ஏறும் போதே மதியின் பேச்சை கேட்டுக் கொண்டே வந்த சுந்தரிக்கு அவள் ஏன் கோபப்படுகிறாள் என்ற காரணம் புரிந்து விட்டது.
தன் அக்காவின் பெயரை வைத்தே  தன் கணவன் தன்னை கூப்பிடுவது பிடிக்காது தான் அமைதியான மதியைய் இப்படி பொங்க செய்கிறது என்று .
பாலை மதியின் கையில் கொடுத்து “குடி…” என்றவர். அவள் குடிக்கும் வரை அமைதியாக இருந்தவர். மதி பிரித்த கட்டை திரும்பவும் கட்டியவர்.பின் தன் மகனை பார்த்து… “நீ ஏன் மதியின் அக்காவை வள்ளின்னு கூப்பிட்ட அரசு. அவள் வீட்டில்  அவளை ஸ்ரீன்னு தானே கூப்பிடுவாங்க. அதுவும் அந்த பொண்ணு எனக்கு வள்ளின்னு கூப்பிட்டா பிடிக்காது. எங்க வீட்டில் ஸ்ரீன்னு தான் கூப்பிடுவாங்க.
நீங்களும் என்னை அப்படியே கூப்பிடுங்கன்னு அத்தனை முறை கேட்டும்.  கூடிய மட்டும் வள்ளின்னு  கூப்பிடுவதை  தவிர்த்தாயே  தவிர ஸ்ரீன்னு ஏன் கூப்பிடல அரசு.” சுந்தரியின் பேச்சு தன் மகனிடம் இருந்தாலும் பார்வை முழுவதும் தன் மருமகளிடம் வைத்தே பேச.
இவ்வளவு நேரம் இருந்த கோப முகம் மாறிய மதி. தன் கணவனை பார்த்து… “நீங்க அக்காவை ஸ்ரீன்னே கூப்பிட்டதே…. இல்லையா….?”
இது வரை ஏன் கோபப்படுகிறாள் என்று தெரியாது இருந்த வல்லரசுக்கு அப்போது தான் தன் மனைவியின் கோபத்துக்கு உண்டான காரணம் பிடிபடலாயிற்று… காலை தன் அணைப்பில் இருந்தளின் விலகலுக்கும்   தான்.
தெரிந்த நொடி அவனுக்கு அப்படி ஒரு ஆனந்தம் மனதில். தன்னை பிடிக்காது இல்லை. வள்ளியைய் நினைத்து அணைத்தான் என்று தான் தன்னை விட்டு விலகி இருக்கிறாள்.
தானும்  கோபப்படாது பேசி இருந்தால் தன் மனைவிக்கு இந்த அடி பட்டு இருக்காதே….என்று நினைத்தவன்.
தன் மனைவி தன் பதிலுக்காக தன் முகத்தையே ஒரு எதிர் பார்ப்போடு பார்த்திருப்பதை பார்த்து “இல்ல  வள்ளின்னு தான் கூப்பிடுவேன்.” தன் மகன் மருமகளுக்கு இடைஞ்சல் இல்லாது போகும் தன் அன்னையைய் பார்த்துக் கொண்டே…
அவர் போனதும் தன் மனையின் அருகில் அமர்ந்து “நான் முதல்ல சொன்னதை நீ நம்பலையா…நான் உனக்காக தான்  என் அம்மா, அப்பாவை அனுப்பினேன்னு….”
“ஆனா அத்தை, மாமா, ஸ்ரீ…” என்று ஏதோ பேச வந்தவளை தடுத்தவன். எழுந்து மூன்று ஆண்டு கடந்தும் பொக்கிஷம் போல் பாது காத்து வைத்திருந்த அந்த கூப்பனை எடுத்து அவளிடம் கொடுத்து விட்டு அவள் முகத்தையே பார்த்திருந்தான்.

Advertisement