Advertisement

அத்தியாயம்—-4

முகவரியைய் கொடுத்ததோடு மட்டும் அல்லாது திருவேங்கடத்தின் செல்ல மகள் ஸ்ரீ என்றவன் அடுத்த நாளே….மைசூர் போகஇருப்பதால் “அப்பா நாளையே போய் பொண்ணு கேட்குறிங்கலா….?” தயக்கத்துடன் என்றாலும் தன் மனதின் ஆசையைய் சொல்லி விட.

 

“என்னப்பா இப்பவே  அந்த பெண்ணிடம்   மொத்தமா விழுந்துட்ட இனி நாங்க எல்லாம் கண்ணுக்கு தெரிவோமா…..?” என்று கிண்டல் செய்யும் அன்னையைய் பார்த்து.

“ஆமாம் நீங்க யாரு…..?” என்று பதிலுக்கு கிண்டல் செய்தவன். பின் சீரியசாக “அம்மா அந்த பெண்ணை பிடித்து இருக்கு தான் . ஆனா அவளை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால்…வேண்டாம்.” என்று சொல்லி நிறுத்தியவனின் காதை பிடித்து திருகிய சுந்தரி.

 

“சரி அந்த பெண்ணை  வேண்டாம் சொல்லிட்டு நாங்க  காமிக்கிற பெண்ணை கல்யாணம் செய்துப்பியா…..?” அவன் மனம் அறிய கேட்க.

 

“கண்டிப்பாமா…உங்களுக்கு நான் ஒரே பிள்ளை. எனக்கு கல்யாணம் செய்து வைத்து பேரன், பேத்தி .பார்க்க உங்களுக்கு ஆசை இருக்காதா….?அதனால் கண்டிப்பா கல்யாணம் செய்துப்பேன்.” என்று சொல்லும் மகனின் தோளை தட்டிய சுகவனம்.

 

“எனக்கு தெரியும் அரசு. ஆனா அந்த பொண்ணோடு நீ வாழும் வாழ்க்கையில் உயிர்ப்பு இருக்காது. அது போல் வாழ்க்கையைய் கண்டிப்பாக நாங்க உனக்கு அமைத்து தர மாட்டோம். நீ ஊருக்கு போ அரசு நீ ஊரில் இருந்து வரும் போது …”கையில் உள்ள முகவரியைய் காட்டி ….

 

“இந்த  வீட்டில் இருக்கும் பெண்ணை உனக்கு பேசி  முடித்து இருப்போம்.” என்ற தன்  வாக்குறுதியைய்  சுகவனம்  நிறைவேத்தி தான் கொடுத்தார். ஆனால் எந்த வாழ்க்கை உனக்கு கொடுக்க மாட்டேன் என்று சொன்னாரோ…அந்த உயிர்ப்பு இல்லாத வாழ்க்கையைய் தான் தன் மகனுக்கு அவரால் ஏற்படுத்தி கொடுக்க முடிந்தது.

 

மைசூரில் தங்கள் கடையின் கிளையை திறக்க வேண்டும் என்ற தன்னுடைய நீண்ட நாள் ஆசையைய் நிறைவேத்த தான் வல்லரசு மைசூருக்கு  சென்றான். தன் மகன் கொடுத்த முகவரியில் இருக்கும் வீட்டின் கதவை தட்டிய  சுகவனம் சுந்தரி தம்பதியரை  கதவை திறந்து  வரவேற்றது மதி தான்.

அவர்களும் இவள்  தான் பெண் என்று நினைத்து அவளை ஆவாளுடன் பார்க்க. யார் இவர்கள் ஏன் என்னை இப்படி பார்க்கிறார்கள் என்று நினைக்கும் போதே…

வீட்டின்  உள்ளிருந்து “மதி யாரு வந்து இருக்கா…..?” என்ற  மீனாட்சியின்  குரலில் வந்தவர்களை  அமர வைத்து சிட்டாக வீட்டுக்குள் மதி போக.

 

சுந்தரியோ “பொண்ணு இவ இல்லேங்க.  நம்ம பையன் ஸ்ரீன்னு தானே சொன்னான். இந்த பொண்ணு பேரு மதிங்க.” என்றதும்.

சுகவனமும் “ஆமாம்.” என்று ஆமோதித்தார்.

புடவையில் கையைய் துடைத்துக் கொண்டே வந்த மீனாட்சி வந்திருந்தவர்களை கையெடுத்து கும்பிட்டு கொண்டே…..”மன்னிக்கனும் யாருன்னு தெரிஞ்சிக்கலாமா…..?” என்று மீனாட்சி விசாரித்துக் கொண்டு இருக்கும் போதே…

 

தண்ணீரை எடுத்து வந்து கொடுத்த மதியிடம் இருந்து  வாங்கி பருகி  மதியைய் பார்த்து பார்த்து புன்னகைத்துக் கொண்டே….

 மீனாட்சியிடம்  “வீட்டில் சார் இல்லிங்கலா….? என்று கேட்டுக் கொண்டு இருக்கும் போதே…

உள்ளே நுழைந்த திருவேங்கடம் குழப்பத்துடம் அவர்களுக்கு ஒரு வணக்கத்தை செலுத்திக் கொண்டே தன் மனைவியிடம் கண் ஜாடையில் யார் என்று வினவ.

 

அவர் கண் ஜாடையைய் அவர் மனைவி பார்த்தோரோ இல்லையோ சுகவனம் பார்த்து விட்டு “உங்க வீட்டு அம்மாவுக்கும் நாங்க யாருன்னு தெரியாது. இப்போ தான் அவங்களும் விசாரிச்சிட்டு இருந்தாங்க. அதுக்குள்ள நீங்கலே வந்திட்டிங்க.

இதுவும் நல்லதுக்கு தான் பொண்ணு பெத்தவங்க இருவர் கிட்டேயும் தானே பொண்ணு கேட்கனும். உங்க அதிர்ஷ்ட்ட பெண் ஸ்ரீயைய் எங்க வீட்டுக்கு மருமகளா அனுப்பி வைப்பிங்களா…..?” தன் மகன் சொன்ன வார்த்தையே அச்சு பிசகாமல் சுகவனம் சொல்லி வைக்க.

சுகவனம் தம்பதியரின் தோற்றம். வெளியில் நிற்கும் கார் இதுவே அவர்களின் வசதியைய் பறை சாற்ற… “நீங்க யாருன்னு….?” என்று திருவேங்கடம் முடிப்பதற்க்குள்.

 

“பார்த்திங்கலா நான் யாருன்னு சொல்லாமலேயே பொண்ணு கேட்குறேன்.” என்று  சொல்லிக் கொண்டே தன்னுடைய விசிட்டிங் கார்டை எடுத்து கொடுத்தார்.

அதை வாங்கி பார்த்த திருவேங்கடம் வாயை பிளந்து இருக்க.

தந்தையின் பின் பக்கத்தில் நின்றுக் கொண்டு இருந்த மதி விசிட்டிங் கார்டில் இருப்பதை சத்தமாக படிக்க ஆராம்பித்தாள்.

 

“எஸ்.வி.அன்.கோ என்று முழுவதும் படிக்க மீனாட்சிக்கு கூட தலை சுத்தி தான் போனது.

முயன்று தன் நிலைக்கு வந்த திருவேங்கடம் “நேத்து தான் உங்க கடைக்கு வந்தோம்.” என்று அவர் இழுக்க.

“ஆ பையன் சொன்னான். உங்க பொண்ணை பார்த்ததும் அவனுக்கு பிடித்து விட்டது. அவன் தான் உங்க வீட்டு முகவரியைய் கொடுத்து  பெண் கேட்க சொன்னான்.” என்று சொல்லி முடித்தவருக்கு என்ன பதில் சொல்வது என்று தடுமாற்றத்துடன் தன் மனைவியைய் பார்க்க.

மீனாட்சியும் அப்போது தன் கணவரை தான் பார்த்துக் கொண்டு இருந்தார்.

 

இருவரின் பார்வை பரிமாற்றத்தை பார்த்த சுந்தரி. “அவசரம் இல்லை. வீட்டில் கலந்து பேசியே உங்க முடிவை சொல்லுங்க. உங்க முடிவு எங்களுக்கு சாதகமா இருந்தா நல்லது. எதுக்கும் எங்க பையனை பத்தி விசாரிச்சே சொல்லுங்க.

 

ஏன்னா திடு திப்புன்னு இப்படி பொண்ணு கேட்குறது உங்களுக்கு பயமா தான் இருக்கும்.  பொண்ணை பெத்தவங்க நாளும் விசாரிக்கிறது நல்லது தானே….” என்று சொன்னதோடு தன் மகனின் போட்டோவை   கொடுத்து விட்டே சென்றனர்.

 

அவர்கள் சென்றதும் முதல் வேலையாக தனக்கு தெரிந்தவர்களிடம் போன் மூலம் வல்லரசுவை பற்றி விசாரிக்க அனைவரும் நல்ல பையன் என்றே சான்றிதழ் வழங்கினர்.

 

மதியும் தன் பங்குக்கு “அப்பா நேத்து இவர் தானே கூப்பன் கொடுத்தார். நான் கூட அங்கு வேலை பார்ப்பவரோன்னு தான் நினச்சேன். அத்தான் சிம்பிளி சூப்பர் அப்பா.” என்று சொல்ல.

பிறகு என்ன ஸ்ரீ வள்ளியிடம்  வல்லரசுவின் போட்டோ காட்டபட. பார்க்க அழகனாகவும் வசதியில் உயர்ந்தவனாகவும் இருப்பதோடு தன்னை விரும்பும் ஒருவனை வேண்டாம் என்று மறுக்க ஸ்ரீ வள்ளிக்கு என்ன கிறுக்கா பிடித்து இருக்கு. அவளும் தன் சம்மதத்தை சொல்லி விட.

 

இரண்டு நாளிலேயே இருவரின் ஜாதகமும் பொருத்தம் பார்க்க. “வல்லரசுவின் ஜாதகப்படி இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் முடித்து விட வேண்டும். இல்லை என்றால் மூன்று வருடம் கழித்து தான் திருமணம் யோகம் இருக்கு.” என்றதும்.

 

வரும்  முகூர்த்தத்திலேயே  வல்லரசு, ஸ்ரீவள்ளியின் திருமணம் நிச்சயிக்கப்பட்டு விட்டது.

 

சுந்தரி தன் மகனிடம் “அரசு நீ வரும் அடுத்த நாளிலேயே திருமணம்டா….” என்று சொன்னதும்.

“என்னமா ஏன் இவ்வளவு அவசரமா கல்யாணத்தை முடிக்கிறிங்க. நான் அந்த பெண்ணிடம் பேச  கூட இல்லையே…?” தன் ஆதாங்கத்தை வெளியிட.

“நீ தானே அரசு அட்ரெஸ் கொடுத்து முடிக்க சொன்ன….”

“ஆமாம் ஆனால் இப்படி வந்த உடன் கல்யாணம் என்றால்  எப்படி…..? இன்னும் அவள் என்ன படிக்கிறா…?படிச்சு முடிச்சிட்டாளா….? என்று எந்த விவரமும் தெரியல.” என்று சொல்லி  முடித்த மகனிடம்.

“இது தான் உன் குறையா….? அந்த பொண்ணோட போன் நம்பரை உனக்கு உங்க அப்பாவை அனுப்ப சொல்றேன். நீ என்ன கேட்கனுமோ கேட்டுக்கோ….” என்று போனை வைத்தவர்.

மகனிடம் சொன்னது போல் கணவரின் மூலம் மகனுக்கு ஸ்ரீ வள்ளியின் போன்  நம்பர் தரப்பட்டது.

ஸ்மதி என்று நினைத்து ஸ்ரீ வள்ளிக்கு அழைத்த வல்லரசு அந்த பக்கம் போன் எடுத்ததும்.”நான் வல்லரசு பேசுறேன்.” என்று சொல்லி அமைதியாகி விட.

 

இங்கு ஸ்ரீவள்ளியும் எப்படி தான் பேச்சை ஆராம்பிப்பது தயங்கி பேசாது இருந்தாள். ஸ்ரீ வள்ளி  அவன் போட்டோவின் மூலம் தான்  அவனை பார்த்தாள். அவன் தானே தன்னை பார்த்து ஆசை பட்டு பெண் கேட்க அவன் பொற்றோரை அனுப்பினான்.

 

 அதனால் அவனே பேச்சை ஆராம்பிக்கட்டும் என்று அமைதி காக்க.வல்லரசு ஸ்ரீ வள்ளியிடம் பேசிய முதல் பேச்சு. “ என்னை பிடித்து இருக்கா….?” என்பது தான். அத்தோடு விடாது “அம்மா அப்பாவுக்காக எல்லாம் சொல்லாதே….உனக்கு பிடித்து இருக்கா….?உன் முழுசம்மதம் தான் எனக்கு வேண்டும்.” என்று சொல்லி அவள் பதிலுக்காக அவன் காத்திருக்க.

 

ஒரு பெண்ணுக்கு இதோடு என்ன வேண்டும் பெண்ணின் மனதுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்மகனை தானே ஒவ்வொரு பெண்ணும் விரும்புவாள்.

முதலில் வீட்டில் பார்த்து வைக்கும் மாப்பிள்ளை மறுக்க எந்த காரணமுன் இல்லை. M.SC  எக்ஸாம் எழுதி விட்டு ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறாள்.

மேல் படிக்கும் ஐடியாவும் இல்லை. வேலைக்கு செல்லும் எண்ணமும் இல்லை. அப்படி இருக்கும் போது திருமணம் செய்து  வாழ்க்கையிலாவது செட்டிலாகலாம் என்ற எண்ணத்தோடு மட்டுமே இந்த வரனுக்கு ஸ்ரீவள்ளி சம்மதம் சொன்னது.

 

 ஆனால் வல்லரசுவின் இந்த பேச்சு இந்த காரணத்துக்காக மட்டும் அல்லாது தனக்கு முக்கியத்துவம் கொடுத்து கேட்கும் குணத்தில் கவரப்பட்டவளாய்…“சம்மதம் …” என்று சொல்லி முழுமனதாய் சம்மதித்தாள்.

 

அன்றிலிருந்து தினம் தோறும் போனின் வழியாக அவர்களின் பேச்சு தொடர்ந்தது.அதுவும் வல்லரசுவோடு ஸ்ரீவள்ளி அவனின்  அழைப்பை எதிர் பார்த்தாள் என்று தான் சொல்ல வேண்டும்.

எத்தனையோ முறை வல்லரசு ஸ்ரீவள்ளியிடம் “வீடியோ காலுக்கு வா ஸ்ரீ.” என்று கேட்டதுக்கு.

 

“ இந்த அறையில் நான்  மட்டும் இல்லை என் தங்கையும் இருக்கா….எப்படி வீடியோ காலுக்கு வருவது. இதுமாதிரி போன் பேசுவதே எனக்கு ஒரு மாதிரியா இருக்கு. இதோ இப்போ கூட பெட்சீட்டை போர்த்திட்டு தான் பேசுறேன். நீங்க ரா கோழி மாதிரி எப்போவும் ராத்திரி தான் போன் போடுறிங்க. ” என்று மெல்லிய குரலில் கிசு கிசுக்க

அவனுக்கும் பகல் முழுவதும் புதிய கிளை திறப்பதில் வேலை இருப்பதாலும், கல்யாணத்துக்குள் வேலையனைத்தும் முடித்தால் தான் தன் மனைவியுடன்  நேரம் செலவழிக்க முடியும் என்ற எண்ணத்தால் பகல் முழுவதும் வேலையில் மூழ்கிவிட இரவில் தான் அவனால் போன் பேச முடிந்தது. அதனால்

அதற்க்கு மேல் வற்புறுத்த வில்லை.

 

இதில்  என்ன கொடுமை என்றால்….?யாரும் சின்ன பெண்ணின் பெயரை குறிப்பிடாது பேசியது தான். ஸ்ரீ வள்ளி தன் தங்கை என்றும். அவனின் தாய் தந்தை “உன் மச்சினியோடு தான் இன்னிக்கி ஷாப்பிங் செய்தேன்.” என்றும் கூறியதால் … அவனுக்கு   ஸ்ரீமதியின் பெயர் தெரிவிக்கபடாமலேயே போனது. அது மட்டும் அல்லாது ஸ்ரீ வள்ளிக்கு வள்ளி என்ற  பெயரே பிடிக்காது. அதனால் பத்திரிகையில் ஸ்ரீ என்று மட்டும் தான் போட வேண்டும் என்று திட்டவட்டமாக சொல்லி விட.

எப்போதும் மகளின் ஆசையைய் நிறைவேற்றும் திருவேங்கடம் இந்த ஆசையும் நிறைவேத்தி விட்டார். தன் வீட்டின் மூலம் பத்திரிகையைய் பார்த்த வல்லரசு கூட .

 “என்ன ஸ்ரீ பத்திக்கையில் உன் முழுபெயர் போடவில்லை.” என்றதுக்கு. “என் முழுபெயர் கர்நாடகமா இருக்கும் அதனால் எப்போது எல்லோரும் என்னை ஸ்ரீ என்று மட்டும் கூப்பிடுங்க என்று நான் ஸ்டிட்டாக சொல்லி விடுவேன். ஆனால் நீங்க தான் நான்  சொல்ல வேண்டிய அவசியத்தை கூட  தராமல் ஸ்ரீ என்று கூப்பிடுவது.” என்ற ஸ்ரீயின் பேச்சு வல்லரசுக்கு குழப்பத்தையே ஏற்படுத்தியது.

“என்ன ஸ்ரீ அப்படி ஒன்னும் ஸ்ரீ…..”என்று  அவள் முழுபெயர் சொல்வதற்க்குள்…

“வேண்டாம் அரசு. வேன்டாம் என்று சத்தம் போட.” சரி என்று வல்லரசுவும் விட்டு விட்டான்.

 

தங்கை, மச்சினிச்சி என்று சொல்லாது  மதி என்று யாராவது சொல்லி இருந்தால் யோசித்திருப்பானோ….? மொத்தத்தில் பார்த்து காதல் வயப்பட்டது ஒரு பெண்ணிடம் என்றால்…. அந்த காதல் பயிரை  வளர்த்தது மற்றொரு பெண்ணிடம்.

 

திருமணத்துக்கு முன் தினம்  மாலை மூன்று மணியளவில் தான் சென்னை வந்திறங்கினான். வந்த உடனே ஸ்ரீக்கு அழைப்பு விடுக்க.

“வீட்டில் பந்தகால் வைத்த பிறகு வெளியில் வரக் கூடாது அரசு. இன்னும் மூன்று மணிநேரத்தில் தான் பார்த்துக் கொள்ள போகிறோமே….” என்று சொன்னதும்.

எந்த பேச்சும் பேசாது வைத்து விட்டு கொஞ்ச நேர ஓய்வுக்கு பிறகு  தனக்கு எடுத்து வைத்த கோட் சூட்டில் ரெடியாகி விட. தன் பெற்றோருடன் திருமண  மண்டபத்துக்கு  செல்ல காரில் ஏறியவன்.

ஸ்ரீக்கு அழைத்து “கல்யாண மண்டப வாசலில் வந்தாவது வரவழைப்பாயா….?” என்று ஏக்கத்தோடு கேட்க.

அவன் தன்னை பார்க்கும் காட்டும் அவசரம் பெண்ணான அவளுக்கு கொஞ்சம் கர்வமாகவே இருந்தது. தன்னவன் தனக்காக ஏங்குவதை நினைத்து மகிழ்ந்தவள்.

“சாரி அரசு. இப்போத்திக்கு உங்க மச்சினிச்சி தான் உங்களை வரவேற்ப்பாள்.” என்று சொன்னவள் மீது  கோபம் கொண்டு போனை அனைத்து விட.

பக்கத்தில் அமர்ந்து இருந்த அவன் பெற்றோர்  இந்த செயல் அனைத்தையும்  பார்த்தும்பார்க்காதது போல் இருந்தனர்.

திருமணம் மண்டபத்தின் வாசலில் மாப்பிள்ளை வீட்டின் காரை பார்த்த திருவேங்கடம் தன் மனைவியைய் பார்த்து “ ஆரத்தி எல்லாம் கரச்சி ரெடியா இருக்கா….?”  என்று பதட்டத்துடன் கேட்க.

“இதோங்க பாருங்க மதி எடுத்துட்டே வந்துட்டா….” என்று மீனாட்சி சொல்லுக்கு  ஏற்ப.

கரைத்த ஆலத்தை கையில் ஏந்தி  வாசலில் நிற்க.காரை விட்டு இறங்கிய வல்லரசு வாசலில் தன் தேவதை தன் சொல்லுக்கு மதிப்பு  கொடுத்து வந்திருப்பதை பார்த்து  மகிழ்ந்து போய் விறுவிறுவென நடக்க.

 

அவன் கைய் பற்றிய சுகவனம் “கொஞ்சம் பொருமையாவே போடா…நம்ம குடும்ப மானத்தை வாங்காத.” என்று தன் கைய் பிடிக்க. மறு கையைய் சுந்தரி பிடித்துக் கொள்ள.

 

பெற்றோர் இருவரின் நடுவில் நின்றுக் கொண்டே தனக்கு ஆலம் சுற்ற வந்த மதியைய் பார்த்துக் கொண்டே  திருவேங்கடத்திடம்.

“மாமா பெண்ணையும் மாப்பிள்ளையும் சேர்த்து சுத்தலாம் இல்லையா….?” பெண்ணோடு தான் இந்த திருமண மண்டபத்தில் நுழைய இருக்கிறேன் என்று தன் ஆசையைய் வெளியிட.

 

 மாப்பிள்ளையின் முதல் ஆசையைய் நிறைவேற்றா விட்டால் எப்படி….? மீனாட்சியிடம் “போய் ஸ்ரீயைய்  கூட்டிட்டு வா….” என்று சொல்ல அதற்க்காகவே  காத்திருந்தது போல் அங்கு மறைவில் நின்று  தன்னவனை பார்த்திருந்த ஸ்ரீவள்ளி  யாரும் அழைக்காமலேயே வல்லரசுவின் எதிரில்  நின்று காதல் பார்வை பாக்க.

 

திருவேங்கடம் “போம்மா போய் மாப்பிள்ளை பக்கத்தில்  நில். மதி நீ ஆலம் சுத்து.” என்றதும்.

 

வெக்கம் பட படப்போடு வல்லரசுன் பக்கத்தில் வர தன் மகனின் கையைய் பிடித்திருந்த சுந்தரி விலகி அந்த இடத்தில் தன் மருமகளை நிற்க வைத்து தன் கையால் திருஷ்ட்டி சுத்தி போட்டவர்.

மதியைய் பார்த்து “சுத்து மதி.” என்றதும் தங்கள் இருவருக்கும்  ஆலம் சுற்றும்  ஸ்ரீ மதியைய்யே வெறிக்க பார்த்தான்.

 

 

Advertisement