Advertisement

Tamil Novel

அத்தியாயம்—–3

குழந்தையைய் நடுவில் படுக்க வைத்து இருபுரமும் படுத்தவர்களுக்கு  ஒரு பொட்டு  தூக்கம் தான் வருவேனா என்று அடம் பிடித்து இருந்தது.

இருவரும்கடந்த கால நினைவுகளை என்ன தடுத்தும்  நினைக்காமல் இருக்க முடியவில்லை.

வல்லரசு  சின்ன வயதில் இருந்தே தன்தந்தையோடு கடைக்கு வந்ததால் படிப்போடு தொழிலில் தான் அவன் ஆர்வம் இருந்தது. அதற்க்காக  படிப்பு வராது என்று எல்லாம் இல்லை. படிப்பு எதற்க்கு…..? வேலை தேட.

 அது தான் கைய் வசம் தாயாராய் இருக்கே  என்று நினைத்தவன். B.B.A   வோடு தன் படிப்பை முடித்துக் கொண்டு தன் இருபதாவது வயதிலேயே முழுமூச்சோடு தொழிலில் இறங்கி விட்டான்.

 தன் தாத்தா மைலாப்பூரில்  வைத்த கடையைய் கொஞ்சம் டெவலப் செய்ததோடு அதை மட்டுமே சுகவனம் திறம்பட நடத்தி வந்தார் என்றால்

வல்லரசு மைல்லாப்பூரில் மட்டும் இல்லாது கோடாம்பாக்கம், தி. நகர், வேளச்சேரி. என்று தன் இருபத்திஏழாவது வயதிலேயே மூன்று இடத்தில் தன் கடையின் கிளையைய் பரப்பி  தங்கள் அந்தஸ்த்தை உயர வைத்த வல்லரசுவை நினைத்து சுகவனம்,சுந்தரி இருவருக்கும் பெருமை தான்.

அந்த பெருமையிலேயே சுகவனம்   மொத்த பொறுப்பையும் தன் மகனிடம் ஒப்படைத்து விட்டு தன் ஓய்வு வாழ்க்கையைய் ஆனாந்தமாய் கொண்டாடி கொண்டு இருந்தார்.

வல்லரசு முதன் முதலில் தன் மனைவி ஸ்ரீயைய் பார்த்தது தங்கள் கடையின் மெயின் பிரான்சான மைலாப்பூரில் தான். கட்டில் வாங்க தான் தங்கள்  கடைக்கு  திருவேங்கடத்தின் குடும்பம் வந்தது.

ஐந்து அடுக்கு அமைப்புள்ள தன் கடையில் வல்லரசு நுழையும் போது வாடிக்கையாளர்கள் அமர   என்று ஐந்து மாடிக்கும் படிக்கட்டும்,பக்கத்தில் லிப்ட்டும்  இருக்கும் கீழ் தளத்தில்  ஏராளமான சேர் போட்டு இருக்க  ஸ்ரீ அதில் அமராமல்   அப்போது தான் லோடு வந்திறங்கிய ட்ரஸ்ஸிங் டேபில் முன் நின்று  அதில் தன் முகத்தை பார்த்து கலைந்த  தன் தலையைய் சரி படுத்திக் கொண்டே ….தன் அன்னையிடம்  பேசியவளை  அவளின் பின் நின்ற வல்லரசு கண்ணாடி வழியே அவள் முகத்தை பார்த்து விட்டு அடுத்த அடி எடுத்து வைக்காது அப்படியே நின்று விட்டான்.

 நின்று கண்ணாடி வழியே அவள் முகத்தையே பார்த்திருந்த போது தான்  அவள் அன்னையோடு அவள்  பேசியதும்  வல்லரசுக்கு கேட்டது.

அம்மா இங்கு எல்லா பொருளும் கிடைக்குமாம்மா…..?” என்று தன் சந்தேகத்தை கேட்க.

ஆமான்டி பக்கத்து வீட்டு பரிமளா கூட சொன்னா . பொண்ணு பெத்தவா பணம்  இருந்து அந்த கடைக்கு போனா கல்யாணத்துக்கு உண்டான எல்லாத்தையும் மொத்தமா அங்கேயே வாங்கிட்டு வந்துடலாமுன்னு…” என்று சொன்னவரிடம்.

கலீர் என்று ஒரு சிரிப்பு சிரித்தவள். “மாப்பிள்ளையும் இங்கேயே கிடைத்து விடுமா…..?” என்று தன் அன்னையிடம் குறும்புடன் கேட்க.

அவள் சிரிப்பின்  அழகை  வல்லரசு கண்ணாடி வழியாக கண்டு களித்தான் என்றால் அவள்  பேச்சை கேட்டு உனக்கு மட்டும் அந்த ஆபர் இருக்கு குட்டிம்மா  என்று தன் மனதோடு செல்லம் கொஞ்சி மகிழ்ந்தான்.

வந்த உடன் தன் அறைக்கு செல்லும் முதலாளி செல்லாமல்  இருப்பதை பார்த்த அந்த பிரான்ச்சின் மேனஜர் வல்லரசுவின் அருகில் வந்துஎன்ன சார். இங்கேயே நின்னுட்டிங்க.” என்று கேட்ட அவர் கேள்விக்கு பதில் அளிக்காது.

ஸ்ரீ,அவள்  அம்மாவை காண்பித்துஅவங்க என்ன வாங்க வந்து இருக்காங்க…..?“ என்ற கேள்வியில் அந்த மேனஜர் குழம்பி போனாலும் தனக்கு தெரியாவிட்டாலும் முதலாளி கேட்டால் சொல்லி தானே ஆகவேண்டும் என்று நினைத்து. “இதோ சார் கேட்டு வந்து சொல்லி விடுகிறேன்.” என்று சிறிது நேரத்துக்கு எல்லாம் வந்தவர்.

வெரும் கட்டில் தான் சார். அதையே மூன்று மணி நேரமா பார்த்துட்டு இருக்காங்க.” என்ற அந்த மேனஜரின்  பேச்சில் அவரை ஒரு முறை முறைத்தவன்.

கஸ்ட்டமர் தான் நமக்கு  முதலாளி. அதே மாதிரி எல்லா  கஸ்ட்டமரும் நமக்கு ஒன்று தான். எனக்கு என்ன மரியாதை கொடுக்கிறிங்களோஅதே தான் அவங்களுக்கும் கொடுக்க வேண்டும்.” என்று தன் மேனஜருக்கு ஒரு குட்டு வைத்தவன்.

தன் அறைக்கு செல்லாது பில் போடும் இடத்துக்கு சென்று அவரை எழுப்பிகொஞ்ச நேரம் நான் பார்த்துக்குறேன்.” என்று அவனை அனுப்பியவன்.

மேனஜரிடமும்….”நீங்களும் உங்க வேலைய பாருங்க.” என்று சொல்லியும் மேனஜர் தயங்கி நிற்க.

உங்க வேலைய பாருங்கன்னு சொன்னனே…..” என்றதுக்கு.

சார் ஏதாவது தாப்பா ஆயிடுச்சா…..?” எப்போதும் இல்லாது வல்லரசுவின் நடவடிக்கையைய் பார்த்து பயந்து கேட்க.

அவரை தேற்றும் பொருட்டுசேச்சே அதெல்லாம் இல்ல.  ஒரு சேஞ்சுக்கு தான் இங்கு உட்கார்ந்தேன். அதுவும் இல்லாது கஸ்ட்டமரை நம் நேரடி கண்காணிப்பு பார்ப்பது நல்லது தானேஅப்போ தானே அவங்க ரசனை என்ன என்று தெரிஞ்சிக்க முடியும்.” என்று சொல்லி அவரை அனுப்பி வைத்தவன்.

ஸ்ரீ குடும்பம் பில் போடுவதற்க்காக காத்திருக்கும் சமயத்தில் ஏகப்பட்ட பில்  வல்லரசு போட்டு  முடித்திருந்தான்.

அவன் கேஷ் கவுண்டரில் உட்கார்ந்து ஒரு மணிநேரம் கடந்த பிறகு தான் திருவேங்கடம் பில் போடவே வந்தார். பில்லின் தொகை பன்னிரெண்டாயிரம் இருக்க.

பில் போடுவதற்க்கு முன்காடா….?கேஷா….? என்று கேட்டு விட்டு கேஷ் என்றதும் பில் போட்டு கொடுத்தவன்.

கைய்யோடு ஒரு கூப்பனையும் கொடுக்க. இது என்ன என்பது போல் பார்த்த திருவேங்கடத்திடம் ….

இது அதிர்ஷ்ட்ட கூப்பன் சார். இதில் உங்க வீட்டு அட்ரஸ் உங்க போன் நம்பர் எழுதி  அதோ அந்த பெட்டியில் போட்டால் இந்த மாதம் முடிவில்  அந்த பெட்டியில் உள்ள  கூப்பனை குலுக்கி  மூன்று அதிர்ஷ்டசாலிகளுக்கு பரிசளிப்போம்.” என்று அவன் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே

அவர்களின் பேச்சை கேட்டுக் கொண்டு இருந்த ஸ்ரீ….ஆசையோடுஎன்ன பரிசளிப்பிங்க.” கண்கள் மின்ன கேட்க.

அவன் மனதோ நீ ஆசை பட்டால் இந்த கடையே பரிசளிப்பேன் என்று நினைத்தவன். வெளியில் நல்ல பிள்ளையாக.

 “முதல் பரிசு உங்க ஹாலுக்கு தேவையான பர்னிச்சர். இரண்டாம் பரிசு உங்க படுக்கை அறைக்கு தேவையான பர்ன்னிச்சர். மூன்றாம் பரிசு உங்கள் சமையல் அறைக்கு தேவையான பர்னிச்சர்.” என்று சொல்ல.

அதற்க்குய்  மீனாட்சி…”சமையல் அறையில் என்ன பர்னிச்சர் தேவை பட போகிறது.” என்று கேட்டதுக்கு.

இங்கு மாடன் கிச்சன் ரெடிமெடில் இருக்கு.அதை அப்படியே உங்க சமையல் அறையில் பிக்ஸ் செய்தா போதும்.” என்று சொன்னதோடு. ஒரு கேட்லாக் புக்கையும் எடுத்துக் கொடுத்தான்.

ஸ்ரீயோ தங்களுக்கு பரிசு விழுந்து விட்டது என்ற நினைப்போடு அந்த கேட்லாக்கை பார்க்காது அங்கு இருக்கும் ட்ரஸ்ஸிங் டேபிலை பார்த்துஅம்மா சமையல் அறை பர்னிச்சர் வேண்டாம்மா. படுக்கை அறை  பர்னிச்சர் தான் வேண்டும் அப்போது தான் அந்த  ட்ரஸ்ஸிங் டேபில் கிடைக்கும்.”  சொல்லும் போதே அவளின் கண்கள் ஆசையோடு அந்த ட்ரஸ்ஸிங் டேபிலை தழுவியது.

கொஞ்சம் சும்மா இருக்க மாடிங்கலாஎன்னவோ பரிசே விழுந்தா மாதிரி பேசுறிங்க.” என்று  அதட்டிய திருவேங்கடம்வல்லரசு கொடுத்த கூப்பனை நிறப்ப பேனா எடுத்து எழுதும் போது அது மக்கர் செய்ய.

அந்த கூப்பனை வாங்கிக் கொண்ட வல்லரசு…. “உங்க அதிர்ஷ்ட்டமான பேரை சொல்லுங்க.” என்றதும்.

எனக்கு அதிர்ஷ்ட்டம் என்றால் என் பெண் ஸ்ரீ தான்.” என்று  சொன்னவர். பின் தன் முகவரியைய் சொல்லி  முடிக்கும் தருவாயில் திருவேங்கடத்துக்கு போன் அழைப்பு வந்தது.

அதை எடுத்து பேசிக் கொண்டே கொஞ்சம் தூரம் சென்றவரை கூப்பிடாது அங்கு நின்றுக் கொண்டு இருந்த ஸ்ரீயிடன் நிறப்பிய கூப்பனை கொடுத்து   “உங்க கையெழுத்து போடுங்க.”  என்று சொல்லி கூப்பனையும் பேனாவையும் கொடுக்க.

கையெழுத்து இட்டதும்  கூப்பனோடு பேனாவையும் வல்லரசு பக்கம் நகர்த்தியவள்

 அன்னை தந்தை அருகில் சென்று விட. அந்த கூப்பனை எடுத்து பார்த்த  வல்லரசுஅதில்  கூப்பனின் அடியில் ஸ்ரீமதி என்று இடம் பெற்று இருந்தது.(ஆம் வல்லரசு விரும்பியது ஸ்ரீமதியைய் தான்).

அந்த கூப்பனை அந்த பெட்டியில் போடாது தன் சட்டை பையில் போட்டதை பார்த்த மேனஜர் இது தான் கஸ்ட்டமரை கவனிப்பதா…..? என்று மனதில் கிண்டலாய் நினைத்தாலும் வல்லரசுவை  தவறாக நினைக்கவில்லை.

அவர் அந்த கடையில் அவன் தந்தை காலம் தொட்டு பணியாற்றிக் கொண்டு இருக்கிறார். சின்ன வயது தொட்டே வல்லரசுவை பார்த்துக் கொண்டு தானே இருக்கிறார்.

பெண்களை தவறாக ஒரு பார்வை பார்த்து அறியார். அதுவும் சில வயது பெண்கள்  கஸ்ட்டமராய் வரும் போது இவனிடம் ஆர்வமாக பேசும் போது கூட தேவைக்கு அதிகமாய் பேசாது  ஒரு கஸ்ட்டமருக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ அப்படி பேசி அனுப்பி விடுவான்.

அப்படி இருக்கும் போது இந்த பெண்ணின் மீது முதலாளியின் பார்வை போகுது என்றால் கண்டிப்பாக அந்த பெண் தான் தங்கள் வருங்கால முதலாளியம்மா என்று மரியாதையாக மதியைய் ஒரு பார்வை பார்த்துக் கொண்டே தன் வேலை பார்க்க சென்றார்.(எல்லோருக்கும் மதி என்றால்  நம்ம ஹீரோ சாருக்கு மட்டும் ஸ்ரீயாகவே இருப்பாள்.)

வல்லரசு அங்கு இருக்கும் ஒரு வேளையாலை அழைத்து ஸ்ரீ ஆசைப்பட்ட அந்த ட்ரஸ்சிங் டேபிலை தன் வீட்டில்  வைத்து விட சொல்லி திருவேங்கடம்  குடும்பம் சென்றதும் அவனும் தன் வேலையைய் பார்க்க சென்று விட்டான்.

வீட்டுக்கு வந்த  வல்லரசுவுக்கு உணவு பரி மாறிக் கொண்டேஇப்போ எதுக்கு அந்த ட்ரெஸ்ஸிங் டேபிலை வீட்டில் வைக்க சொன்ன அரசு.” ஹாலில் இறக்கி வைத்து விட்டு போன ட்ரெஸ்ஸிங் டேபிலை பார்த்துக் கொண்டே கேட்டார்.

அதற்க்கு என்ன சொல்வது என்று அவன் யோசிக்கும் போதே சுகவனம்அது தானேஏற்கனவே நம்ம இரண்டு பேரு அறையில் மட்டும் இல்லாது கெஸ்ட் அறையிலும் ட்ரஸ்ஸிங் டேபில் இருக்கு. உங்க அம்மா கண்ணாடி முன்ன நின்னே  வருஷ கணக்கா ஆயிடுச்சி.”   ஏன் அந்த ட்ரெஸ்ஸிங் டேபிலை வீட்டில் இறக்கினாய் என்றதோடு சுகவனம் தன் ஆதாங்கத்தையும் சேர்த்து சொல்ல.

ஆமா இப்போ தான் நான் வயசு பொண்ணு பாருங்க. ட்ரெஸ்ஸிங் டேபில் முன்னாடி நின்னு ட்ரஸ் பண்ண.” என்று தன் கணவனை அடக்கிய சுந்தரி.

திரும்பவும் மகனிடம்எதுக்கு அரசு இங்கே இறக்க சொன்ன.” என்று  கேட்டதும்.

அது தான் சொன்னிங்கலேம்மா வயசு பொண்ணுங்க தான் ட்ரஸ்ஸிங் டேபில் முன்னாடி ட்ரஸ் பண்ணுவாங்கன்னு. முதல்ல ட்ரஸ்ஸிங் டேபிலை இறக்கிட்டு அப்புறம் அதில் ட்ரஸ் பண்ண வயசு பொண்ணை இறக்கலாம் என்று இருக்கேன்.” என்று சொல்லி விட்டு தன் உணவினை தொடர்ந்தான்.

அவன் பேச்சு புரிய இருவருக்கும் ஒரு சில நிமிடங்கள் தேவைபட்டது. புரிந்த பின் மகிழ்ந்துஅரசு பொண்ணு யாருடா…..? என்று இருவரும் ஒரு சேர  கேட்க.

தன் பேக்கட்டில் இருந்த அந்த கூப்பனை எடுத்தவன் கொடுக்காது அதில் உள்ள முகவரியைய் மட்டும் சொன்னவன் பின் அந்த கூப்பனை தன் சட்டை பையிலேயே வைத்துக் கொண்டான். அதில்  தன் மனம் கவந்தவளின் கையெழுத்து இருந்ததால்.

அங்கு தான் விதி அவன் வாழ்க்கையில் விளையாடா ஆராம்பித்ததோஆமாம் ஆராம்பித்து தான் இருந்தது, ஏன் என்றால் அதற்க்கு அடுத்து நடந்தது எல்லாம் விதியின்  விளையாட்டு என்று தான் சொல்ல வேண்டும்.

முகவரியைய் கொடுத்தவன் தன் மனம் கவர்ந்தவளின் முழு பெயரையும் சொல்லாது தன் மனதில் பதிந்த பெயரானபொண்ணு பேரு ஸ்ரீ  அவங்க அப்பாக்கு ராசியான பொண்ணாம்.” என்று கூடுதல் தகவலும் சொன்னான்.

 

Advertisement