Advertisement

Tamil Novel

 

அத்தியாயம்—-2

 முருகன் கோயில் சந்நிதியில் மணமக்களாய்   மாலை கழுத்தோடு வல்லரசு ,ஸ்ரீமதி கைய் கூப்பி வணங்கி இருக்க.. சுந்தரி இருவரையும் அழைத்து சென்று மணவரையில் அமரவைத்ததும்  முக்கியமானவர்களை மட்டுமே  அழைத்திருந்தவர்களின் ஆசியோடு அந்த மங்கல நானை அய்யர் நீட்ட.

அதை கைய் நடுக்கத்தோடு வாங்கிக் கொண்ட வல்லரசு மதியின் கழுத்துக்கு கொண்டு போகும் சமயத்தில் மீனாட்சியின் கையில் இருந்த ஜெய்….அப்பா. மதிம்மா என்று தன் மழலை குரலில் கைய் நீட்டி அவர்களிடம் செல்ல துடிக்க.

 மதியின் கழுத்தை சுற்றி தாலி கயிறைக் கொண்டு சென்ற வல்லரசுவின் கைய் முடிச்சி போடாது இருப்பதை பார்த்த சுந்தரி. “அரசு கட்டுப்பா…..” என்று சொல்லியும் கட்டாது குழந்தையைய் பார்க்க.

இது வரை தலை குனிந்து இருந்த மதி தலை நிமிர்ந்து  வல்லரசுவையும், ஜெய்யையும் மாறி மாறி பார்த்தவள். கைய் நீட்டி தன் அன்னையிடம் “குழந்தைய  தாங்கம்மா…..” என்று சொல்ல.

“இல்ல மதி …” என்று ஏதோ சொல்ல வந்த மீனாட்சியைய் தடுத்து. “ தாங்க…..” என்று அழுத்தி சொல்ல.

அதற்க்கு மேல் ஒன்றும் சொல்லாது குழந்தையைய் மதியின் மடி மீது வைத்த பின் .  தான் வல்லரசு மதியின் கழுத்தில் மூன்று  முடிச்சி இட்டு  அவளை  தன்  மனைவியாக்கிக் கொண்டான்.

இதை வருத்தத்துடன் மீனாட்சி பார்த்தார் என்றால் மற்ற மூன்று பேரும்  சந்தோஷத்துடன் பார்த்தனர். பின் அழைத்தவருக்கு அருகில் உள்ள ஸ்டார் ஓட்டலில் உணவுக்கு சுகவனம் ஏற்பாடு செய்து இருந்ததால் அவர்கள் அனைவரையும் அழைத்து செல்ல.

வல்லரசு…கழுத்தில் உள்ள மாலையைய் கழட்டி அன்னையிடம் கொடுத்துக் கொண்டே…. “நான் வீட்டுக்கு போறேன்.” அந்த குரலே  இதுக்கு தடை விதிக்காதிங்க என்று இருந்தது.

“சரிப்பா…..” என்று சொன்ன சுந்தரி . பக்கத்தில் இருக்கும் திருவேங்கடத்திடம் “அவங்க வீட்டுக்கே  போகட்டும் சம்மந்தி.” என்றதற்க்கு எந்த மறுப்பும்   சொல்லாது தலையாட்டிய கணவனை  மீனாட்சி வெறுமையான பார்வை  பார்க்க மட்டும்  தான் முடிந்தது.

மனைவியின் பார்வைக்கு அர்த்தம் புரியாதவராய்…”என்ன மீனா அது தான் சம்மந்தி சொல்லிட்டாங்ல.. பொண்ணு, மாப்பிள்ளையும் அவங்க வீட்டுக்கு போகட்டும். நம்ம  சொந்தகராங்களை கூப்பிடு.” என்று சொன்னவர்.

தன் மகளிடம் இருந்து குழந்தையைய் வாங்க கைய் நீட்டி. “நீ மாப்பிள்ளை கூட போம்மா. இரண்டு நாளுக்கு குழந்தை எங்க கூட இருக்கட்டும்.” என்று சொன்னதுக்கு.

மதி அரசு இருவரும் ஒரு சேர…” குழந்தை எங்க கிட்டயே இருக்கட்டும்.” என்றவர்களை பார்த்து. ஏதோ சொல்ல வந்தவரைய் தடுத்த அரசு “எங்க கிட்டயே இருக்கட்டும் மாமா.” என்றதும்.

அதற்க்கு மேல் பேச முடியாது தன் சொந்தகாரர்களை உபசரிக்க சென்று விட. தன் மகளின் கைய் பற்றி எதுவும் பேசாது இருக்கும் மீனாட்சியைய் பார்த்து.

அவர்களுக்கு தனிமை கொடுத்து வல்லரசு குழந்தையைய் வாங்கிக் கொண்டு  சென்று விட்டான்.

“நீங்க வீணா மனச போட்டு குழப்பிக்காதிங்கமா….. “ என்று தனக்கு ஆறுதல் அளிக்கும் மகளின் முடி கோதியவர். “  பழச நினச்சி நீ குழப்பிக்காம இருப்பியா…..?” என்று  கேட்டதுக்கு.

“இருந்து தானேம்மா ஆகனும்.” என்று அவள் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே அந்த இடத்துக்கு வந்த சுந்தரி.

“ சம்மந்தி நல்ல நேரம் முடிய போகுது. அதுக்குள்ள அவங்க வீட்டுக்கு போகட்டும். “ என்று சொன்னதோடு விட்டு இருந்தால் பரவாயில்லை.

“என்ன சம்மந்தி பயம். புதுசாவா பொண்ணை குடுக்குறிங்க. ஏற்கனவே உங்க வீட்டு பெண்ணை கொடுத்து இருக்கிங்கலே அப்புறம்  என்ன பயம்.” அந்த வார்த்தையைய் கேட்ட மீனாட்சி  பதட்டத்துடம் தன் மகளை பார்க்க. அவர்  நினைத்த மாதிரியே மதியின்  அடிப்பட்ட பார்வையில் கண் கலங்கியவராய் சென்றார்.

வேலைகாரர் பூக்கூடை தூக்கி வர .அவருடன் ஏதோ பேசிக் கொண்டு செல்லும் சுந்தரியைய் தடுத்த அரசு.  பூ கூடையைய் காமித்து அடக்கப்பட்ட கோபத்துடன். “என்னமா இதெல்லாம்…..” என்று  பல்லை கடித்து கேட்க.

அரசுவின் குரலிலேயே அவன் கோபம் தெரிந்தாலும். அதை காட்டிக் கொள்ளாமல்….”இன்னிக்கி ராத்திரி நடக்கும் சடங்குக்கு அரசு.” என்று அவனிடம் பதில் சொன்னவர்.

வேலையாளை கண் காமித்து மேலே போ என்று ஜாடை காட்ட. அவனை போக விடாது தடுத்து. “வேனாம் இதை எங்கு எடுத்தியோ அங்கேயே வெச்சிடு.” அவனை அனுப்பி விட்டு தன் தாயைய்  பார்த்து முறைத்துக் கொண்டே…

“என்னவோ எனக்கு இது தான் முதல் கல்யாணம்   மாதிரி பூ அலங்காரம் எல்லாம் பண்றிங்க.” தன்  ஆதாங்கத்தை வார்த்தைகளாய் கொட்ட.

“அந்த பொண்ணுக்கு இது முதல் கல்யாணம் தானே அரசு. அவளுக்கும் ஆசை, எதிர் பார்ப்பு இருக்கும் தானே …..” மகனிடம்   அவளுக்கும் ஆசை ,கனவுகள் இருக்கும்  அவள் கணவனாய் நடந்துக் கொள் என்று மறைமுகமாக அறிவுறுத்த.

தன்  தாயிடம்  அவன் தான்  தனக்கு இது முதல் கல்யாணமா……? அதனால் இது மாதிரி சடங்குகள் வேண்டாம் என்று சொன்னது. அதற்க்கு தன் தாய் அவளுக்கு இது முதல் தானே என்று சொன்னது மனதை நெருட.

அந்த கோபத்தை எங்கு காமிப்பது என்று தெரியாது .அப்போது தான் சமையல் அறையில் இருந்து ஒரு கையில்  பீடிங் பாட்டிலில் பாலை நிரப்பிக் கொண்டும் மறு கையில் குழந்தையும் வைத்துக் கொண்டு வருபவளை முறைத்துக் கொண்டே….

“ இரண்டாம் தாரம் என்று தெரிந்து தானே பண்ணிக்கிட்டா…..?அப்புறம் ஆசை , மண்ணாங்கட்டி என்று என்ன வேண்டியிருக்கு.” என்று பேச்சு தன் தாயிடம் இருந்தாலும் பார்வை கோபத்துடன் மதியைய் பார்த்துக் கொண்டு இருந்தது.

சமையல் அறையில் இருந்து  வந்த மதி. வல்லரசு தன் அன்னையிடம் ஏதோ கோபமாக பேசுகிறான் என்று அவன் முகத்தை வைத்து தெரிந்துக் கொண்டாலும்… அவர்கள் பேச்சு காதில் விழாததால்….

என்ன கோபம் ….?யார் மீது கோபம்….? என்று தெரியாது பயத்துடன் சுந்தரி அருகில் சென்றவள்.

தான் எங்கு உறங்குவது என்று  கேட்டால் தப்பாக படுமோ…..? அதனால் குழந்தையைய் எங்கு படுக்க வைப்பது என்று கேட்போம் என்று நினைத்து தான்.

சுந்தரியிடம்…. “அத்த குழந்தைய எங்கு படுக்க வைப்பது.” என்று கேட்டாள். குழந்தை  அருகில் தானே அவள் தூங்க வேண்டும் அதனால் இப்படி மாற்றி கேட்டாள்.

ஏற்கனவே கோபத்தில் இருந்த அரசு இந்த பேச்சு கடுப்பேத்த…. “என்ன குழந்தைய உன் கூட படுக்க  வெச்சிக்க மாட்டியா…..?” என்று கேட்டவன்.

பின் அன்னையிடம்… “மத்தவளா  இருந்தா எப்படியோ…அதே மதியா இருந்தா  குழந்தைக்கு தாயா இருப்பான்னு சொன்னிங்க. பார்த்திங்களா….குழந்தைய எங்கே படுக்க வைக்கனுமுன்னு   கேட்குறா….” என்று  தன் அன்னையைய் கடிய.

கலங்கிய கண்ணை மறைக்க தலை குனிந்த மதி. பின் தன்னை தேற்றியவளாய் அரசுவை பாராது சுந்தரியிடம்…. “நான் ஜெய்யைய் தனியா படுக்க வைக்க போறேன்னு  சொல்லவே இல்லையே அத்த.” என்ன தான் அழுகையைய் காட்ட கூடாது என்று மறைத்தாலும் அவள் குரல் காட்டி கொடுக்க.

அப்போதும் அவன் கோபம் அடங்காது. “அப்போ எங்கே படுக்க வைக்க என்று ஏன் கேட்ட. என் அறையில் தானே படுக்கனும்.” அதையும் முறைத்துக் கொண்டே சொல்ல.

அதன் பின் அவனை பாராது தலை குனிந்துக் கொண்டே மாடியைய் நோக்கி குழந்தையுடன் செல்ல.  சுந்தரிக்கு தான் அய்யோ என்று ஆனாது.

இவன் தான் ஒதுங்குகிறான் என்றால் இவள் இவனுக்கு மேல் இருக்கிறாளே…..நானும் அவள் கேட்டதை வைத்து அரசு நினைத்ததை தானே நினைத்தேன்.

இவள் என்ன என்றால்…அவன் அறைக்கு போகும் எண்ணமே இல்லாது குழந்தையுடன் எங்கு படுக்க என்று கேட்கிறாளே….என்று நினைத்துக் கொண்டே அரசுவை பார்க்க. அரசும் அப்போது அவரை தான் பார்த்துக் கொண்டு இருந்தான். ஆனால் அந்த பார்வையில் என்ன இருந்தது என்று  தெரியாவிட்டாலும்,  அந்த பார்வையின் வெருமையில்….

“கவலை படாதே அரசு எல்லாம் சரியாகும்.” என்று அவனை அவன் அறைக்கு அனுப்பி வைத்தார்.

தாயின் பேச்சில் கோபம் கொஞ்சம் குறைந்தவனாய் தன் அறைக்கு செல்ல. அங்கு குழந்தையைய் கட்டிலின்  ஓரத்தில் படுக்க வைத்து விட்டு கீழே அமர்ந்து தட்டி கொடுத்துக் கொண்டு இருந்தவளைய் பார்த்து மறைந்த கோபம் இரு மடங்கு பெருக.

“என்ன நினச்சி இருக்க உன் மனசுல. என்னை பத்தி அப்படி மட்டமா நினச்சிட்டு இருந்து இருந்தா…ஏன் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக் கிட்ட. குழந்தைக்கு என்றாலும் வேண்டாம் என்று சொல்லி இருக்க வேண்டியது தானே…..”

வல்லரசு மதிக்கு புதியவன் கிடையாது  அக்கா கணவராய் இருந்தவன் தான். ஆனால் அவனை பற்றி அவளுக்கு ஒன்றும் தெரியாது. அக்காவும் தங்கை இருவருக்கும் அவ்வளவு நெருக்கம் இல்லாத காரணத்தால் அக்கா மூலமும் அரசுவை பற்றி மதிக்கு தெரியாது. கோபப்படுவான் என்பதை தவிர.

ஆம் அவள் அக்கா இருக்கும் போது  இதே அறையில்  தான் அவளை திட்டி  இருக்கிறான். ஆடி மாசம் சீர் கொண்டு  வந்து  மகளை அழைத்து செல்ல திருவேங்கடம், மீனாட்சி வரும் போது அவர்களோடு முதல் முறையாக அந்த வீட்டுக்கு மதி வந்தாள்.

தாய் வீட்டில் ஒரு மாதம் இருப்பதால் அதற்க்கு உண்டான துணிகளை  எடுத்து வைக்க ஸ்ரீ வள்ளி தன் அறைக்கு சென்று விட.

பெரியவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போது அவள் கீழே அமர்ந்துக் கொண்டே அண்ணாந்து மாடியைய் பார்த்து அந்த வீட்டின் அமைப்பை ரசித்துக் கொண்டு இருந்தாள்.

அதை பார்த்த சுந்தரி “ பெரியவங்க பேச்சு உனக்கு ரசிக்காது  . போய் வீட்டை சுத்தி பாரு. உன் அக்கா அறை  மாடியில் தான் இருக்கு.” என்றதும் .

அந்த வீட்டின் செழுமையைய் விட. அந்த வீட்டில் மரத்தால் ஆனா கலை நயத்தில் கவரபட்டவளாய் ஆசையுடன் அவளும் மாடிக்கு சென்றாள்.

அங்கு முதல் அறையே ஸ்ரீ அறையாய் இருக்க. கட்டில் மீது சூட்கேசை வைத்து அதில்  துணியைய் அடுக்கிய ஸ்ரீ அதை மூட முடியாது கஷ்டப்பட.

அதை பார்த்த மதி உள்ளே சென்று “ தள்ளு ஸ்ரீ நான் மூடுறேன்.” என்று  மடித்து வைக்காமல் குப்பை போல் அடைத்து வைத்திருந்த துணிகளை  எடுத்து அடுக்கி வைத்ததும் இன்னும் துணி அடுக்கும் அளவுக்கு இடம் இருக்க . மதி சூட் கேசை மூடும்  வேளையில்.

“இரு இரு மதி…” என்று தடுத்தவள். ட்ரெஸ்ஸிங் டேபிளில் இருக்கும் மேக்கப் சாதனங்களை ஒன்று ஒன்றாய் எடுத்து கொடுக்க.

அதனை ஒரு கவரில் போட்டு  சூட்கேசில் அடுக்கியவளிடம்.  “ பாத் ரூமில் ஷாம்பு இருக்கு மதி அதையும் எடுத்துட்டு வர்றேன்.” என்று  பாத் ரூம் சென்று சிறிது நேரம் சென்றும் ஸ்ரீ வராமல் இருக்க.

அங்கு இருக்கும் ட்ரஸ்ஸிங் டேபுலின் அழகில் அதன் அருகில் சென்றவள் ட்ரா திறக்கும் கைய் பிடி யானை துந்தி போல் வடிவமைக்கப்பட்டு  பார்க்க கலை நயத்துடன் இருந்தது.

மதி அதை இழுத்து  மூடி பார்க்கும் வேளையில்    அந்த   அறைக்கு வந்த வல்லரசு. தங்கள் அறையில் அதுவும் அந்த ட்ரஸ்ஸிங் டேபில்  முன் மதியைய் பார்த்து விட்டு.”இங்கு என்ன செய்யிற…..?” என்று கோபத்துடன் கேட்க. தவறு கத்த.

அவன் கத்தலில் மதிக்கு கைய் நடுங்கி விட்டது. அதன் பதட்டத்தில்  அந்த கைய் பிடியியைய் விட்டதாலோ என்னவோ…அருகில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் கீழே  விழ.

அதன் சத்தித்தில் முகம் அலம்பிக் கொண்டு இருந்த ஸ்ரீ டவலைக் கொண்டு முகத்தை துடைத்துக் கொண்டு அறைக்கு வந்து பார்க்க.

அங்கு கணவர் கோபமாகவும், மதி பயத்துடன் இருப்பதையும் பார்த்து “என்னங்க……?” என்று கேட்டது தான்.

மதியின் மீது இருந்த கோபத்தை மனைவி மீது திருப்பியவனாய்…. “எல்லோரையும் அறைக்கு கூட்டிட்டு வந்துடுவியா….?” என்று எரிந்து விழ.

அரசுவின் அந்த வார்த்தை மதியைய் பலமாக தாக்கியது. இருந்தாலும் தன்னை தெளிபடுத்த எண்ணி “அத்தான்…..” என்று ஆராம்பித்தவளை கடுமையாக பார்த்தவன்.

“இந்த அத்தான் பொத்தான் என்று கூப்பிட்டு ரூமுக்கு வரும் வேளை எல்லாம் வெச்சிக்காத.” என்று சொன்னவன் பின் யாரையும் பார்க்காது சென்று விட்டா.

கலங்கிய  கண்ணோடு அந்த அறையைய் விட்டு என்ன… அந்த வீட்டை விட்டே சென்றவள். அதற்க்கு பின் ஸ்ரீயின் இறப்புக்கும் அதற்க்கு அடுத்து இதோ கல்யாணம் முடிந்து தான் இந்த வீட்டுக்கு வருகிறாள்.

அதுவும் அந்த அறை அவளை மனம் புன்படும் படி செய்தது என்றால்…இதோ வந்ததும் என்ன என்று கூட சொல்லாது தன் மீது பாயும் கணவனை கண் கலங்க பார்க்க.

மதியின் கலங்கிய முகத்தை பார்த்தவன் தன் குரலில் கோபத்தை குறைத்து “எதுக்கு கீழே உட்கார்ந்துட்டு இருக்க. மேல படுத்துட்டு குழந்தைய தூங்க வைக்கலாம் தானே. பெட்டு  பெருசா தானே இருக்கு.” என்று சொன்னவன்.

தூங்கிய குழந்தையைய் நடுவில் படுக்க வைத்து விட்டு அந்த ஒரத்தில் அரசு  படுத்துக் கொள்ள.

 திரும்பவும் திட்ட போகிறானோ என்ற பயத்தில் அவன் சொல்லாமலேயே இந்த ஒரத்தில் படுத்தவளுக்கு தூக்கம் தான் வரவில்லை.

அத்தானுக்கு ஏன் என்னை பிடிக்காது போனது. நான் என்ன செய்தேன். இன்று திட்டியதை வைத்து மட்டும் அவள்  நினைக்கவில்லை.

அக்காவோடு திருமணம் ஆனாதிலிருந்தே மதியிடம் முகம் கொடுத்து பேசியதில்லை. தங்கள்  வீட்டுக்கே  அவன் மூன்று முறை தான் வந்திருக்கிறான்.

 வந்தாலும் ஹாலிலேயே  ஒரு காபியோடு அப்பா அம்மாவோடு பேசியதோடு தன் மனைவியைய் அழைத்துக் கொண்டு சென்று விடுவான்.

அதோடு அக்காவின் சீமந்தத்தின் போது கூட  இவன்  வரும் போது எதிரில் வரும் தன்னை பார்த்து முகம் திருப்பி செல்ல.

இவளுக்கு தான் ஒரு மாதிரியாகி விட்டது. அப்படி நான் என்ன செய்தேன். யோசித்து பார்த்தவளுக்கு இன்று வரை  விடை தான் கிடைக்கவில்லை.

 

 

Advertisement