Advertisement

அத்தியாயம்—8

தன் மாமியார் சொல்லுக்கு கட்டுப் பட்டு எப்போதும் கணவனுக்கு பரிமாறி கூடவே  சாப்பிட அமர்ந்த  மதி. இந்த ஒரு மாதத்தில்  ஒவ்வொரு நாளும் இது நினையாமல் இருக்க மாட்டாள்.

அன்னிக்கி நான் சாப்பிடலேன்னு அவங்க அம்மா கிட்ட சண்டை போட்டாங்கலா….?நம்ப முடியவில்லையே….என்று நினையாமல் இருந்தது இல்லை.

ஏன் என்றால் வல்லரசுவுக்கு தன்னை பிடிக்காது. என்ன காரணம் என்று தெரியவில்லை என்றாலும் அவள் மனதில் அந்த எண்ணம் தான் ஆழ படிந்து இருந்தது.

அத்தை, மாமா, கட்டாயத்திலும். குழந்தையைய் அவனின் காதல் மனைவி தன்னிடம் கொடுத்து விட்டு இறந்ததால் தான் தன்னை கல்யாணம் செய்ய சம்மதித்து  இருக்கிறான். என்று  நினைத்திருந்தவளுக்கு மனது மிகவும் சங்கடமாக இருந்தது.

அத்தான் அக்காவை எந்த அளவுக்கு விரும்பி மணந்தார் என்று அவள் அறியாததா….? கடையில் பார்த்த மறு நாளே அக்காவை பெண் கேட்டு அனுப்பிய செயலே அவன் காதலை சொல்கிறதே….

அதுவும் கல்யாணம் முடிவு செய்த தினத்திலிருந்து இரவு தோறும் அது என்ன தான் பேசுவார்களோ…அக்கா பெட்சீட்டின் மறைவில் தனக்கு தெரியாமல் பேசுவதாக நினைத்து மணி கணக்கில் பேசியது அவள் அறியாததா….?

ஏன் கல்யாணத்தில் அக்கா உடுத்தி இருந்த புடவை கூட அத்தான்  மைசூரில்  தானே தேர்ந்தெடுத்து அனுப்பிய புடவையைய்   தானே அக்கா கல்யாணத்துக்கு உடுத்தினாள்.

என்ன ஒன்று கலர் இன்னும் ப்ரைட்டாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று மதி மனதில் நினைத்தாலே ஒழிய அதை வாய் திறந்து சொல்லவில்லை.

சொல்ல மனதும் வரவில்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு ஆசையாக கண்ணாடி முன் நின்று பார்த்ததை  பார்த்து சொல்ல வந்ததை சொல்லாமல் விட்டு விட்டாள்.

அதிர்ஷ்ட்டத்தில் எல்லாம் மதிக்கு அவ்வளவாய் நம்பிக்கை இல்லை. அப்பா ஸ்ரீ அதிர்ஷ்ட்டம் என்று கொண்டாடிய போது எல்லாம் அதை பெரியதாக எடுத்துக் கொள்ள மாட்டாள்.

ஆனால் வல்லரசு சம்மந்தம் வீடு தேடி வந்ததில் இருந்து அப்பா சொல்வது சரியோ….?என்று நினைக்காமலும் இருக்க முடியவில்லை.

இப்படி அக்காவின் பழைய நினைவிலும் வல்லரசுவின் வீட்டின் நிஜத்திலும் திண்டாடி போனால் மதி.

வல்லரசு மனசு விட்டு பேசி இருந்தால்  நன்றாக இருந்து இருக்கும். ஆனால் வல்லரசுவோ “நான் உன்னை தான் காதலித்தேன்.” என்று இப்போது சொல்வது கேலி கூத்தாய் தான் இருக்கும் என்று நினைத்தான்.

அதுவும் கைய்யில்  ஜெய்யைய் வைத்துக் கொண்டு இப்படி சொன்னால் எந்த  பெண் தான் நம்புவாள்.

வல்லரசுவும், மதியும், சாதரணமாய் அந்த வீட்டில்  உலாவிக் கொண்டு இருந்தாலும், அவர் அவர் தன் மனதில்   புழுங்கிக் கொண்டு  தான் அந்த ஒரு மாதமும் கடந்தது.

எப்போதும் போல் அந்த ட்ரஸ்ஸிங் டேபில் முன் தலை சீவாது பால் கனிக்கு நின்று தலை வாரி அறைக்குள் நுழைந்து கண்ணாடி பார்க்காது தன் பர்சில் இருந்து ஒரு ஸ்டிக்கர் பொட்டை எடுத்து தன் நெத்தியில் வைத்துக் கொண்டு குழந்தையைய் பார்க்க.குழந்தை  அசந்து உறங்குவதை பார்த்து  தொந்தரவு செய்யாது கீழே சென்று விட்ட.

மனைவியின் செயல்கள் அனைத்தையும் குளித்து விட்டு கடைக்கு கிளம்பிக் கொண்டே     பார்த்திருந்தான்.

மனைவி ட்ரஸ்ஸிங்  டேபில் முன் நிற்காதது ஏன் என்றும் அவனுக்கு தெரியும். அன்று அவளை அப்படி பேசி இருக்க கூடாது. ஆனால் அவனும் தான் என்ன செய்வான்.

ஒரு பெண்ணின் வாழ்க்கை, இது தான் என் விதி, என்று ஆயிரத்தெட்டு சமாதானம் படுத்தி வள்ளியோடு தன் வாழ்க்கையைய் தொடங்கினாலும், அவனால் இயல்பாய் இருக்க முடியவில்லை.

ஒரு மனிதன் வெளியில் எப்போதாவது தேவைக்கு நடிக்கலாம். ஆனால் வீட்டில் சொந்த மனைவியுடன் நடிப்பது என்பது கொடுமை அல்லவா…? அந்த கொடுமையைய் அவன் அனுபவித்து இருந்தது போதாது என்று.

அன்று  கடைக்கு கிளம்பிக் கொண்டு இருக்கும் போது அம்மா ….. “அரசு உன் அத்தை ,மாமா, ஆடி சீர் எடுத்துட்டு வர்றாங்க. மதியம் சாப்பிட வீட்டுக்கு வாப்பா…” என்று சொல்ல.

“கடையில் நிறைய வேலை இருக்குமா என்னால் வர முடியாது.” என்று மறுத்து விட்டவனிடம்.

“நீ செய்யிறது கொஞ்சம் கூட நல்ல இல்ல அரசு. அவங்க வீட்டுக்கு தான் போக மாட்டேங்குற.” வல்லரசுவின் பார்வையில்  தன் பேச்சு தடை பெற.

பின் சமாளித்தவராய்…”எதுக்குன்னு எனக்கு தெரியும். அதான் நானும் உன்னை கட்டாயப் படுத்தவில்லை. இப்போ வீட்டுக்கு வரும் போதும் நீ இல்லேன்னா உன் மாமாவை கூட சமாளித்திடலாம் போல. உன் அத்தையைய்  சமாளிக்க முடியவில்லை அரசு . அதனால் ஒழுங்கா வீட்டுக்கு வா…” என்று அழைத்தவரிடன்.

வேறு ஒன்றும் அறிந்துக் கொள்ள அன்னை முகம் பார்க்க. “மதிக்கு  இன்னிக்கு காலேஜ்.  அதனால அவ வர மாட்டா….” என்ற  உத்திரவாதத்தில் வீட்டுக்கு வர.

அங்கு ஹாலில் மாமா அப்பாவிடம்…ஸ்ரீயின் கல்யாண பேச்சு பேச. அங்கு இருக்க முடியாது.”மாமா நான் கொஞ்சம் ப்ரெஷ் ஆயிட்டு வர்றேன். என்று அவசர அவசரமாக  தன் அறைக்கு வந்தால்…யாருக்காக அந்த ட்ரஸ்ஸிங் டேபில் வாங்கினானோ….அவள் அதன் முன் நிற்க.

ஒரு அடி அவளை நோக்கி தன் கால் சென்ற பிறகு தான். அய்யோ என்ன காரியம் செய்ய துணிந்தேன். நான் அவ்வளவு பலவீனமானவனா…?”

இல்லை இவள் தான் என்னை பலவீனப்படுத்துகிறாள். சந்தோஷமாக இல்லை என்றாலும் ஏதோ செல்லும் என் வாழ்க்கையில் இவள் புயலை கிளப்பாமல் விட மாட்டாள் போல. என்று அனைத்துக்கும் அவளையே குற்றவாளியாக்கி.

தன் கைய்யாலாக தனத்தை கோபமாக வெளிப்படுத்தி அவளை அன்று திட்டியது இன்றும் தனக்கும் வலிக்கிறது என்று சொன்னால் இவள் நம்புவாளா….?

அவள் பார்க்காத ட்ரஸ்ஸிங் டேபிலை தானும் பார்ப்பது இல்லை என்று அங்கு இருந்த சின்ன கண்ணாடியில் தன் படியாத  முடியைய் படிய வைக்க முயற்ச்சி செய்யும் போது. அவன் மகன் “அப்..பா…” என்று மழலையில் அழைக்க.

மகனின் அழைப்பில் கைய்யில் இருந்த சீப்பை  கீழே  வைத்து விட்டு குழந்தையைய் தூக்க முயலும் போது.

“வேண்டாங்க நான் தூக்குறேன்.” என்று வேகமாக வந்த மனைவியைய் பார்த்தவன். குழந்தைக்கும் மனைவிக்கும் நடுவில் நின்றுக் கொண்டு.

“ஏன் நான் தூக்க கூடாது….?”  இந்த ஒரு மாதத்தில் அவசியத்துக்கு தவிர. இருவரும் ஒரு வார்த்தை அதிகம் பேசியது கிடையாது.

அப்படி இருக்கும் போது வல்லரசுவின் இந்த பேச்சுக்கு என்ன பதில் சொல்வது  என்று  அவனை விழி விரித்து பார்க்க.

மூன்று வருடத்துக்கு முன் எந்த  கருவிழியில்   தொலைந்து  போக எண்ணினானோ….? அந்த கருவிழியின் அசைவில் தன்னை தொலைத்தவனாய்.

தன் முகத்தை அவளின் முகத்தருகில் கொண்டு போக. இவன் என்ன செய்கிறான் என்று திரு திருத்தவள் அனிச்சை செயல் போல தான் கொஞ்சம் பின்னுக்கு நகர.

பின் என்ன நினைத்தானோ தன் தலையில் பின் பகுதியைய் கோதிக் கொண்டே “ஏன் தூக்க கூடாதுன்னு சொன்ன.” முதலில்  கேட்ட கேள்வியே திரும்பவும் கேட்க.

அவள் என்ன கேட்டா…?எதுக்கு கேட்டான்னு அவளுக்கு நியாபகம் இருந்தால் தானே சொல்ல.

எப்போதும் தேவைக்கு மட்டுமே பேசியவன். இப்போது தேவையில்லாது பேசியதை விட. ஏன் என்னிடம் நெருங்கினான். என்று அவள் மனம் அதிலேயே சுழல.

தான் செய்த செயலால் இவள் இப்போதிக்கு வாய் திறக்க மாட்டாள் என்று. இவ்வளவு நேரமும் இருவரின் பேச்சையும் புரியாது கேட்டுக் கொண்டு இருந்த குழந்தை “அப்பா” தன்னை பார்ப்பதை பார்த்ததும்.

திரும்பவு கோதிய தலை முடியில் இருந்து கைய் எடுத்து குழந்தையைய் தூக்க முயல. இப்போது ஏன் முதலில் அவனை குழந்தையைய் தூக்க கூடாது என்று சொன்னேன் என்றது நியாபகத்தில் வர.

“முடியில் கைய் வைத்து விட்டு குழந்தையைய் தூக்க கூடாது.”

தூக்க நீண்ட கைய்  தாழ… “ஏன்….?”  என்ன இன்று ரொம்ப பேசுறான். இந்த ஒரு மாதமாய் சாப்பிட்டோமா….?கடைக்கு கிளம்பினோமா….என்று தானே இருந்தான்.

இவனிடம் முன்ன பின்ன பேசியது கூட கிடையாது. ஒரு தடவை பேசி  மூக்கறுப்பட்டது  போதும் என்று அவன் பக்கம் தலை வைத்து கூட படுக்காது இருந்தாள்.

அவள் கிரகம் அவனையே திருமணம் செய்துக் கொண்டு காலம் முழுவதும் அவனிடம் இருக்கும் படியாகி விட்டது.இப்போது  புதியதாக பேசினால் என்ன பதில் சொல்வது என்று நினைத்தாலும், பதில் சொல்லாது இருந்தால் அதுக்கு வேறு திட்டுவானே…என்று.

“ இல்லை தலையில் இருக்கும் அழுக்கு உங்க கையில் ஒட்டி இருக்கும். அதோடு தூக்கினால் குழந்தைக்கு இன்பெக்க்ஷன் ஆயிட போதுன்னு தான்.” என்று அவள்  சொல்லி முடிக்கவும்.

அவள் கையைய் தன் முடி மீது தொட செய்தவன். “என் தலையில் அழுக்கு இருக்கா….?” என்று கேட்டதோடு அல்லாமல். தன் கைய் கொண்டு அவள் கையைய் தன் தலை  மீது முடியைய் பரிசோதிக்க பிசைய.

இவளுக்கு தான் வேதனையாக இருந்தது.  முதல் முதல் ஒரு ஆணின் பரிசம். அதுவும் இவ்வளவு நெருக்கத்தில். ஆம் நெருக்கம் தான். அவன் உயரத்துக்கு அவல் கையைய் கொண்டு வந்ததால் அவளின் மிக நெருக்கதுக்கு வர வேண்டிய நிலையில் அவள் முகம் அவன் மார்பில் பட்டு அது வேறு கூச்சத்தை கொடுத்தது என்றால்…

அப்போது தான் குளித்த சோப்பின் நறுமனமும்,சென்டின் நறுமணத்தோடு அவனுக்கே உண்டான வாசத்தில் கன்னி மனம் மயங்க.

ஸ்ரீயின்  முகத்தில் முதலில் தோன்றிய குழப்பம். பின் தோன்றிய மயக்கத்தோடு மூன்று வருடமாக மறைத்து வைத்திருந்த காதல் ஊற்று பீறிட்டு எழ  தன்னை இழந்தவனாய் அவள் இதழோடு இதழ் பதித்தவன்.

இன்றோடு தன் ஆயுள் முடிந்து விடும். இன்று தான் நான் வாழும் கடைசி நாள். அதனால் இன்றே தனக்கு கிடைத்ததை அனுபவித்து விட வேண்டும் என்பது போல் அவன் இதழ்  அவளின் இதழை விடாது இருந்தது என்றால்….

கையோ அவளின் இடையில் ஆராம்பித்து கொஞ்சம் கொஞ்சம் மேல் நோக்கி  பயணிக்கும் வேளயில்…

 “மதி…மா…மதிமா… அப்…பா” என்ற குழந்தையின் மூன்றாவது அழைப்பில் நிகழ் உலகத்துக்கு வந்த  ஸ்ரீ மதி அவனிடம் இருந்து வில.

அவனோ விடாது இன்னும் இன்னும் அவளிடம் புதையும் முயற்ச்சில் இன்னும் வன்மையாக ஈடுபடுவதிலேயே இருந்தானே தவிர. அவளை இப்போதிக்கு விடுவாதாய் இல்லை.

மதியின் கைய் வல்லரசுவின் முதுகு பகுதியில் இருந்தததால் அவனை முன் பக்கம் தள்ள முடியாது போய் விட்டதால்.

அதனால் பின் பக்க சட்டையின் பகுதியைய் பிடித்து இழுத்ததில் “டர்…” என்ற சத்தத்தில் கிழிந்த கொஞ்சம் துணி பகுதி அவள் கையொடு வந்து விட்டது.

அந்த சத்தத்தில்  அவளிடம் மூழ்கி இருந்தவனுக்கு கொஞ்சம் மயக்கம் தெளிந்தது என்றால்….

ஸ்ரீமதிக்கு பயம் வந்து விட்டது. அந்த பயத்தோடு ‘சாரி…சாரி ..பா….ஜெ…ய்.” என்று பேச்சு விட்டு விட்டு பேசியளின் பேச்சு வல்லரசுக்கு புரிய  செய்ததோடு , அவளின் இந்த பேச்சு இன்னும் அவனுக்கு போதை ஏத்துவது போலவே இருந்தது.

அதுவும் தன் உடல் முழுவதும் அவள் வாசம் தன் நாசி உணர. கைய்யோ திரும்பவும் அவளின் உடலின் வளைவுகளின் பரிசத்தை தொட்டு விட தூண்ட…. குழந்தையைய் ஓரப் பார்வை பார்த்துக் கொண்டே…. “ஸ்ரீ….” என்று  அணைத்தவனை ஒரே தள்ளில் தள்ளி விட வைத்தது. அவனின் ஸ்ரீ என்ற அழைப்பு.

 அவளின் தள்ளியதில் இது வரை இருந்த கனவு கலைந்தது போல் ஆனாது வல்லரசுவுக்கு. அப்போது தான் நான் என்ன செய்துக் கொண்டு இருக்கிறேன் என்று உணர்ந்த அதே சமயத்தில்…

ஸ்ரீயின் இந்த அலட்சியம். அவனை எரிமலையாக கொதித்து எழ செய்ய போது மானதாக அமைய.

அவளில் தள்ள்ளியதில் நிளை பெற்று நின்ற அடுத்த கணம் என்ன செய்கிறோம் என்று உணராது தன் பலம் கொண்ட மட்டும் அவளை பிடித்து  தள்ளி விட்டு திரும்பி பாராது சென்றான்.

 

Advertisement