Advertisement

அத்தியாயம்….23 (1)

அவன் தோள் மீது கைய் போட்டுக் கொண்டே வெளியில் வந்த வீரா…..” என்னடா விஷயம்…..” என்று நேரிடையாகவே கேட்டு  கேட்டான்.

“ அண்ணே…..அந்த ஆளு மருத்துவமனையிலேயே  இறந்துட்டாரு அண்ணே…..”

கந்தன்  சொன்னதை கேட்டதும் வீரா  திகைத்தது சில நொடி தான்…. பின்… வக்கீலுக்கு அழைக்க தன்  கைய் பேசியை எடுத்ததும்…

“யாருக்கு அண்ணே போன போடுறிங்க…..?” வீராவின் கை  பிடித்து தடுத்து கேட்டான்.

“ நம்ம வக்கீலுக்கு தான்…..”

“ அதுக்கு அவசியம் இல்லேண்ணே… அந்த ஆளு இறந்தது  அந்த பரதேசி சங்கரன் கத்தி குத்தி அண்ணே…..”

“ என்னலே  சொல்ற……..? ” முதலில் சொன்னதோடு இந்த செய்தி வீராவுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

கங்காதரன் இறந்து விட்டான் என்று கந்தன் சொன்னதும்…தான் அடித்து மருத்துவமைனையில் சேர்த்து, பிழைக்காது இறந்து விட்டால்….

எப்படியும் போலீஸ்  நூல் பிடித்து இங்கு வரும், அதுக்கு முன் நாம் முன்  எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தான் வக்கீலுக்கு அழைக்க விழைந்தான். ஆனால்…..?

“ எதுக்கு குத்தினான்….? அது தான் ஜாதி  வெறியில இரண்டு பேரும் நகமும்…சதையுமா….இருந்தாங்கலே….”

“ அது அவர் பொண்ண கட்டிக்க கட்டம் …..” ஏதோ ஒரு நினைப்பில் கந்தன் ஆராம்பித்து விட்டான்….ஆனால்…

“ மன்னிச்சிக்க அண்ணே…..”

கந்தனின் இந்த  பேச்சு வீராவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது தான். ஆனால் கந்தன்  மேல் இல்லை…அந்த சங்கரன் மேல்…..

“ என்னலே முழுசா சொல்லு….” வீராவின் குரலில் அடக்கப்பட்ட கோபம் நன்றாகவே தெரிந்தது.

“ அதுண்ணே  இந்த ஆளுக்கு ஜாதின்னா உசுருன்னு தெரிஞ்சிட்டு ….  இந்த சங்கரன் அவர் ஜாதி என்றதால…அத சொல்லிட்டே…. அவருக்கு ஏத்த மாதிரி இருந்துட்டு இருக்கான்.

அவர் மகன் விசயத்தில் திட்டம் போட்டு கொடுத்தது எல்லாம் அந்த சங்கரன் தான்.”

வீரா ஏதோ யோசித்திவனாய்…. “ எதுக்கு…..?”

கொஞ்சம் தயங்கிக் கொண்டே…. “ அந்த சங்கரனுக்கு  ரொம்ப நாளாவே அந்த வீட்டு மாப்பிள்ளையாவனும் ஆச அண்ணே…..”

அதை கேட்டதும்…வீராவுக்கு இப்போ மட்டும் அவன் இருந்தான்….

வீராவின் கோப முகத்தை பார்த்து “ அண்ணே கோபம் படாதிங்கண்ணே…..இப்போ எல்லாம் நமக்கு ஏத்த மாதிரி தானே நடந்து இருக்கு…..” வீராவை சமாதானப்படுத்தியும் அவன் கோபம் குறைய வில்லை.

“ ம்…சொல்லு….”  முழுவதும் தெரிந்துக் கொள்ள கேட்டான்.

“ அது தாண்ணே….மகன் இறந்துட்டா…சொத்து மொத்தமும்…மகளுக்கு தானே…..சொத்தோடு அழகான பொண்ணு ….அழகா திட்டம் போட்டுட்டான்.

ஆனா யாருக்கு யார்…..? எது எப்படி நடத்தனும் திட்டம் போடுவது மேல  ஒருத்தன்…அவன் திட்டம் தானே அண்ணே பலிக்கும்.” என்று சொல்லி வீராவின்  கோபத்தை குறைக்க பார்த்தான்.

“ம்…..” என்ற வீராவின் குரலிலேயே அவன் கோபம் கொஞ்சம் கூட குறையவில்லை என்று தெரிந்தும்…. முழுவதும்  சொல்லாது விட மாட்டார் என்று…

“  அதுக்குள்ள நாம வேறு திட்டம் போட்டது…அது அவனுக்கு ஒரு பெரிய ஆப்பா ஆயிடுச்சி….  சரி பொண்ணு தான் கிடைக்கல..சொத்தையாவது சுருட்டலாமுன்னு தான்….”

இது வரை மதியை அவன்  மகள் என்று சொல்லிக் கொண்டு வந்த கந்தன்…. இப்போது… “ உங்க மனைவிய கொன்னுட்டா…..வாரிசு இல்லா சொத்து….அவருக்கு அனுசரணையா இருந்து மொத்தமும் சுருட்டிக்கலாமுன்னு பார்த்தான்.

பொறுமையா இருந்து இருந்தா…. அவன் நினச்ச படி இந்த ஜாதி வெறி பிடிச்ச கிறுக்கன் கொடுத்து இருக்கலாம்….

ஆனா விதி யாரை விட்டது…..?  நாம அவங்க இரண்டு பேருக்கும்  ஒரே மாதிரி தானே அடி கொடுத்தோம்…. இளந்தாரி இவன் கொஞ்சம் முன்ன எழுந்துட்டான்.

எழுந்தவன் கங்காதரனை பார்த்தான்,   அந்த ஆளுக்கு நினைவு வருவதும் போவதுமாய் இருந்தது. இது தான் நல்ல தருணமுன்னு தனக்கு தெரிஞ்ச வக்கீல வெச்சி உயில ரெடி செஞ்சி …. அந்த ஆளு பாதி மயக்கத்துல  இருக்கிறப்ப கைய்யெழுத்துக்கு நீட்டி இருக்கான்…

சரியான  சமயத்துல…அந்த ஆளோட சம்சாரம் வந்து இருக்காங்க….. என்ன ஏதுன்னு கேட்டதுக்கு,   இவன் சரியான பதில் சொல்லலே…. அந்த பத்திரத்தை பிடிங்கி படிச்சி இருக்காங்க….”

இது வரை அங்கு நடந்ததை படம் போல் ஓட்டியவன்….இந்த இடத்தில்… “ஆனா படிச்ச குடும்பத்துக்கு  இப்போ தான் பிரயோசனமா ஒரு காரியம் ஆகி இருக்கு.”

கந்தனின் இந்த பேச்சில் வீராவின் முகத்தில் கூட மெல்லிய புன்னகை  வந்து போயின….

இருந்தும் முழுவதும் தெரிந்துக்குக் கொள்ள….. “ ம்…அப்புறம்…..?” என்று கேட்டதுக்கு…

கந்தன்….. “ அப்புறம் என்ன…..? அந்த பத்திரத்துல…. என் மகன் இறந்து விட்டதாலும், என் மகள்  ஒழுக்கம் தவறி சென்று விட்டதாலும், என் மகன் போல் எனக்கு உறுதுணையாக இருக்கும் சங்கரனுக்கு என் சொத்து முழுவதையும் எழுதி வைக்கிறேன்…இது என் சுயநினைவுவோடு எழுதி தருபவைன்னு,,,பக்காவ…எழுதி இருக்கு…

அது படிச்சதும் அந்த அம்மா சும்மா இருப்பாங்கலா…..மருத்துவமனையிலேயே கத்து கத்துன்னு கத்தி இருக்காங்க….

இந்த அம்மா வந்ததும்,  அந்த ஆளு பாதி மயக்கத்துல இருந்தவரு…அப்போ தான் கொஞ்சம் கொஞ்சமா தெளிவுக்கு வந்து இருக்காரு….இந்த அம்மா  கத்துனதுல….மொத்தமும் தெளிஞ்சி அவரும் வாங்கி படிச்சி…

அப்புறம் என்ன…..?  துரோகின்னு சொல்லி திட்டி அப்புறம் கைய் கலப்பு ஆகி….. அந்த நேரத்துல  அந்த ஆளுக்கு ட்ரஸிங் செய்ய நர்ஸ் அம்மா ஒரு தட்டுல பஞ்சு…கத்திரிக்கோல்…..கத்தின்னு எடுத்துட்டு வந்து இருக்காங்க…..

சங்கரன் அதை  பாத்ததும், ஏதோ ஒரு வேகத்துல அத எடுத்து  சொறுகிட்டான்….” ஏதோ ஒரு படத்தை பார்த்து அப்படியே சொல்வது போல் முழுகதையும்  கந்தன் சொல்லி முடித்தான்.

அனைத்தையும் கேட்ட வீரா…அதற்க்கு …. “ம்…. “ என்று மட்டுமே பதிலாய் அளித்தான்.

“ அண்ணே….இத….” பேச்சை பாதியில் நிறுத்தியவனை பார்த்து…

“ இப்போ தான் கொஞ்ச கொஞ்சமா தேறிட்டு வரா…நேரம் பார்த்து பதமா நான் சொல்லிக்கிறேன்…” மதியிடம் தெரிவிப்பதை பற்றி சொல்லியவன்….

ஏதோ நினைத்தவனாய்…. “ அந்த அம்மா எங்கே இருக்காங்க…..?” என்று கேட்டதும் தான்…

“ அந்த ஆள குத்தும் போது இந்த அம்மா ஏதோ இடையில் போச்சி போல…கொஞ்சம் காயம் ஆகியிருக்கு….அந்த ஆள போஸ்ட் மார்ட்டம் பண்ண மார்ச்சுவரிக்கு கூட்டிட்டு போயி இருக்குறது கூட தெரியாம, இந்த அம்மா படுத்துட்டு இருக்காங்க….”

மற்றவர்களுக்கு என்ன செய்ய நினைக்கிறாயோ…திரும்ப அது  ஒரு பங்குக்கு இரண்டு பங்காய் உனக்கு வந்து சேரும்….அதன் படி மற்றவர்களை அழிக்க நினைத்ததுக்கு, அழிவு தனக்கு தன்னாலேயே வந்து சேர்ந்தது.

மதியம் சாப்பிடும் போது…. “ பெரியவனே என்னலே  ஒரு மாதிரியா இருக்க…..?” சோத்தை போட்டதை சாப்பிடாது…ஏதோ ஒரு நினைப்பில் பிசைந்துக் கொண்டு இருந்தவனின் தலை கோதி…..கேட்ட புஷ்பவதியின் வயிற்றில் முகம் பதித்து…

“ ஒன்னும் இல்ல ஆத்தா……” என்ற பதிலில் …

“ நான் உன்ன பெத்தவப்பூ….என்ன விசயம் சொல்லு….என்ன அந்த வீனா போனவன் திரும்பவும் ஏதாவது பிரச்சனை  செய்யிறானா…..? சொல்லப்பூ…

என் மகன  நிம்மதியா இருக்க விடாதவனை  வெட்டிட்டு ஜெயிலுக்கு போறேன்….” வீர தமிழச்சியாய் சொல்லியவரின் …

கைய் பற்றி… “ அதுக்கு அவசியம்  இல்ல ஆத்தா….அவன் செத்துட்டான்….”

ஒரு மனிதன் இறப்புக்கு மகிழ்ச்சி கொள்ளலாமா…..? அது அந்த மனிதன் செய்த  செயல்களை பொறுத்தது. நரகாசூரன் இறந்ததுக்கு பட்டாசு வெடித்து…புத்தாடை மகிழ்ந்து கொண்டாட வில்லையா…..? அதே கொண்டாட்டத்தில் தான் புஷ்பவதி இருந்தார்.

என்ன தான் தன் மகன் மருமகள் பேரன்….என்று மகிழ்ந்து இருந்தாலும்…..தன் மகளை  ஒத்தையில் பார்க்கும் போது…..குழந்தை அவளிடமே இருக்கட்டும்…இருந்தாலும் இந்த வயதில்…

அதுவும் அவளுடைய ஒத்த வயது இருப்பவர்கள்…. இதே வீட்டுல் கணவனுடன்  குடும்பம் நடத்தையில்…அதை பார்க்கும் தன் மகளுக்கு ஏக்கம் இருக்காதா…..? அதை நினைத்த பெத்த அந்த தாயுள்ளம் துடிக்க தானே செய்யும்…..

அந்த துடிப்புக்கு மருந்தாய்….கங்காதரனின் இறப்பு….மெல்லிய இறகை கொண்டு  நீவி விட்டது போல் கொஞ்சம் சுகமாய் தான் இருந்தது. நாம் மனித பிறவி தான். நமக்கு கெடுதல் நினைத்தவனுக்கு கெட்டது நடந்தால் மனம் தன்னால் மகிழ தான் செய்கிறது.

அந்த மகிழ்ச்சியில்…  “ என்ன ஆச்சி…..” தெரிந்துக் கொள்ளும் ஆர்வத்தில்  கேட்டார்.

வீரா அங்கு நடந்ததை அனைத்தையும் சொல்லி முடித்ததும்…….. ……“ இதுக்கு ஏன் பெரியவனே சோந்து போய் இருக்க… நல்ல விசயம் தானே…..இனி அவன் என்ன செய்வான் …..?ஏது செய்வான்னு இருக்க தேவயில்ல பாரு… நல்லா  சாப்பிடு அப்பூ…..” என்று சொன்னவரை பார்த்து….

தயங்கிக்  கொண்டே …. “ மதி கிட்ட இத எப்படி சொல்றது….? என்ன இருந்தாலும்….” இழுத்தவனுக்கு பதிலாய் பின் புறம் இருந்து…

“ என்ன ….? என்ன இருந்தாலும்…ம்…. என்ன அந்த ஆளு செத்ததுக்கு…அப்…. அவன அப்படி கூப்பிட கூட பிடிக்கல….அந்த  பொம்பள படுத்து இருக்க நான் போய் சேவகம் பார்ப்பேன்னு எதிர் பார்த்திங்கலா…..?

இப்போ சொல்றேன்…. அந்த ஆள்  குடும்பத்துக்கும், எனக்கும், எந்த உறவும் இல்ல.  

நான் இந்த  வீட்டு மருமக…..வீரச்சாமி புஷ்பவதியம்மாவின் மருமக…..விரப்பாண்டியனுக்கு மனைவி….அவ்வளவு தான்.” என்று சொன்னவர்…

வீராவின் பக்கத்தில் அமர்ந்து… “ எனக்கும் சோத்த போடுங்க அத்த….குழந்தை அழுதா  பால் கொடுக்கனும்….” மாமியாரையே அதட்டி விட்டு..

“ என்ன என் முகத்தையே பார்த்துட்டு இருக்கிங்க…சாப்பிட்டு அடுத்த ஜோலி பாக்க போங்க…..” என்ற மருமகளின் பேச்சில் குளிர்ந்தவராய்…

“ இரு இரு சூடா முட்ட ஆம்புலேட் போட்டுட்டு வரேன்.” அடுப்பங்கரை பக்கம் ஆத்தா ஓடியதும்…

மனைவியின் காதோரமாய்… “ என் அடுத்த ஜோலியே அடுத்த ரிலீஸ் தான்டா  என் மூக்கீ…..” சரியாக ரிலீஸ் என்ற வார்த்தை மட்டுமே காதில் வாங்கிய வாரே அங்கு வந்த  புஷ்பவதி…

“ என்னடா பெரியவனே…படம் கிடம் எடுக்க போறியா என்ன…..?”

“ உங்கல  வெச்சிக்கிட்டு  இருக்க படத்தையே முழுசா பாக்க முடியல இதுல….”

“என்ன பெரியவனே… வாய தான்டி வார்த்த வெளி வரமாட்டேங்குது….” என்று சொல்லிக் கொண்டே  முட்டையை மதி தட்டில் போட்டவர்…

“ சட்டு புட்டுன்னு சாப்பிட்டு எடத்த காலி பண்ணு.”  என்று சொல்லி விட்டு , அந்த இடத்திலேயே சட்டமாக அமர்ந்து கொண்டார்.

Advertisement