Advertisement

ஆத்தியாயம்….11

தனக்கு எதிர் பேச்சாய் ஏதும் பேசாது போகவே தான்…..“என்ன நம்ப இவ்வளவு பேசுறோம்…பதிலே காணும்.” தலை நிமிர்ந்து அவனை பார்த்தாள்.

மதி தன்னை பார்க்கவும் தான்…. “ ஆ பொறவு…..” ஏதோ கதை கேட்பது  போல் இருந்தது அவனின் பேச்சு.

“  நான் என்ன கதையா சொல்றேன்….?அப்புறமுன்னு  கேட்குறான்….?” மனதில் தான் நினைத்தாள்.

அவனோ….. “ நீ சொல்வது கதை போல தான் இருக்கு புள்ள….” அவள் மனதை படித்ததை  போல் சரியாக சொல்லியனை, இப்போது ஆற்றாமையுடன் பார்த்தாள்.

“நம்ம பார்த்த சினிமா .படித்த காதல் காவியம், அனைத்திலும் இப்படி தானே இருக்கும்.” அதையும் சரியாக படித்தவனாய்….

“ நீ  பார்த்த ஹீரோ  நீ சொன்னாப்பல செஞ்சி இருப்பாங்க. ஆனா நான் ஹீரோ இல்ல. உனக்கு வில்லன்.”

“ஆமாடா உன்ன பார்த்தா  வில்லன் போல தான் தெரியுது…..” மனதில் நினைத்தவள். அய்யோ இதையும் கண்டு பிடிச்சுடுவானே பயத்துடன் அவளை பார்த்தாள்.

இப்போது அவன் கவனம் வேறு  எதிலோ இருப்பதை அவன் கண்கள் காட்டி கொடுத்தது.

எப்போதும்  சுடி தான் போடுவாள். நையிட்டியை விட அவளுக்கு சுடி தான் எப்போதும் வசதி.

அது என்னவோ திருமணம் அன்று பட்டு புடவை கட்டியது. அன்றே பன்னிரெண்டு சுடிதார் கோசலை அறையில் வந்து இறங்கி விட்டது.

யார் வாங்கி கொடுத்தது….? என்று தெரியாது. பரவாயில்ல புடவை வாங்காது சுடி வாங்கினார்கலே … அது வரை சந்தோஷம். போட மாட்டேன் பிகு எல்லாம் செய்ய வில்லை.

இங்கு இருந்து தன் தந்தை எப்போது அழைத்து போவார்களோ…அது  வரை உடை வேண்டும் தானே… புடவை நமக்கு கட்ட தெரியாது. கட்டினால் உடம்பில் நிக்காத புடவையை  வாங்கி கொடுக்காது இதை வாங்கினார்களே…

அது வரை போதும் என்று நினைத்து  இத்தனை நாள் சுடி தான் போட்டு இருந்தாள். அது என்னவோ அந்த சூர்ப்பனகை….(அவள் மாமியார் புஷ்பவதிக்கு மருமகள் மதி வைத்த பெயர் தான்.) இந்த சுடிதாருக்கு மட்டும் எந்த திட்டும் திட்டவில்லை.

அப்போது வசதியாக சுடியை போட்டதினால்…இப்போது இந்த சடங்குக்கு என்று கட்டிய வெண்பட்டு…அவள் மென்மையான மேனியில்  நழுவவா….? வேண்டாமா….? என்ற ரீதியில் அவள் மாராப்புக்கு வீராப்பு காட்டியது என்றால்….

வேடிக்கை பார்க்கிறேன் என்று வீரப்பாண்டி திறந்து வைத்த ஜன்னல் வழியாக வந்து போன காற்று….நழுவவா….? வேண்டாமா…? என்று இருந்ததை , அறிந்தும் அறியாது…தெரிந்தும் தெரியாதது போல் விலகி….அவன் பார்வைக்கு போதை கூட்டியது.

இப்போது தான் அவன் கண்கள் போகும் பாதை அறிந்து சட்டென்று விலகிய மாராப்பை மூட பார்த்தாள்.

ஆம் மூட தான் பார்த்தாள். ஆனால் அதை செயல்  படுத்த விடாது ….. “ என்ன கண்ணு… இப்படி கொஞ்சமா பார்த்ததுக்கே இப்படி மூடுற…? இன்னும் கொஞ்ச நேரத்துல  நான் முழுசா பாக்க போறது தானே…..?”

இது வரை வீரப்பாண்டி இது போல் யாரிடமும் பேசியது இல்லை. அவன் பேச்சில் கோபம் வெளிப்படுமே ஒழிய…இது போல்  அநாகரிகமான வார்த்தைகள் அவன் வாயில் இருந்து வந்தது கிடையாது.பெண்களிடம் பார்வையில் மட்டும் இல்லை மனதிலும் கண்ணியம் காப்பவன். அதனால் தான் வீட்டில் இவள் தான் தனக்கு மனைவியாக  போகிறாள் என்ற யசோதாவிடம் கூட….கண்ணியத்துடன் பேசியது. பார்வையிலும் தான். ஆனால் இவளிடம் மட்டும்….

இப்போது  கூட மதியிடம், இப்படி  பேச வேண்டும் என்று நினைத்து பேசவில்லை…அது  என்னவோ அவள் தன் பார்வைக்கு காட்டாது அவள் சேலையை சரி செய்த   விதத்தில் கோபம் சுள்ளனே ஏறி வார்த்தைகளை கொட்டி விட்டான்.

பின் நானா  இப்படி பேசியது  என்று நினைத்துக் கொண்டே தன் மனைவியின் முகத்தை பார்க்க….அதில் தெரிந்த அருவெறுத்த தன்மையில்….

நாகரிகமாவது ஒன்னாவது….? இவளிடம் நான் பேசாம எவன் பேசுவான்…?. மனைவியிடம் நாகரிகம் பார்த்தால் வேலைக்கு ஆகாது…யாரோ எப்போதோ சொன்னது அசந்தர்ப்ப சமயத்தில் நியாபகத்தில் வந்து போனது…

“ என்னடி மூஞ்சிய அப்படி சுளிச்சிக்கிற….?ஏன் உனக்கு இத பத்தி ஒன்னுமே தெரியாதா….? நீ காலேஜ்…..” அதற்க்கு மேல் அவன் என்ன சொல்லி இருப்பானோ….

“என்ன எப்போ பார்த்தாலும் இதை பத்தி   உனக்கு ஒன்னும் தெரியாதான்னே சொல்லிட்டு இருக்கிங்க…..?காலேஜிக்கு  போனேன் தான். ஆனா அங்கு இதை எல்லாம் சொல்லி கொடுக்கல…..” அங்கு இருந்த கட்டிலில்  இருந்த அலங்காரத்தை காட்டி சொன்னவள்.

அதோடு விட்டு இருந்தால் கூட நன்றாக இருந்து இருக்கும்….இந்த அறைக்குள் வரும் போது  தங்கையின் நிலை நினைத்து கோபம் என்பதை விட வெறி என்று சொல்லலாம்…அந்த நிலையில் தான் வந்தான்.

ஜன்னலில் வந்த காற்றாலா…..?இல்லை அந்த காற்று  மங்கை மதியின் மேனியில் தவழ்ந்து விளையாடியதில் அவள் அங்கங்கள் பார்த்ததில்  மன்னன் மனம் தடுமாறியதாலா…எதோ ஒன்று…. இந்த அறைக்குள் நுழையும் போது இருந்த மனநிலையில்  கொஞ்சம் மாற்றம் கொண்டு வந்தது மங்கையின் தேக எழில்.

ஆனால் அதற்க்கு எதிர் பதமாய்  மங்கையின் முகம் அருவெறுப்பை காட்டியதில் போன கோபம்  எழ…

அதற்க்கு எண்ணை  ஊற்றியது போல்…. “ உங்க தங்கை கூட தான் காலேஜ் படிக்கிறா…அங்கு இதை எல்லாம் படிச்சாளா…என்ன…..?” பேசிய பேச்சில்…

தான் மனிதன் அவள் தன் மனைவி…என்ன தான் பழிவாங்க இந்த திருமணம் என்றாலும், இவள்  தான் கடைசி வரை தன் மனைவி, அப்படி நினைத்து தான் அவள் கழுத்தில் தாலி கட்டினான்.

அப்படி கட்டிய மனைவியின்  மனதை அறியாது…அவள் கோபத்தை போக்காது தன் மனதில் இருப்பதை தெளிவு படுத்தாது…..

“ அவள பத்தி பேச கூட உனக்கு யோக்கியத இல்லடி….” அவள்  அப்பனால் தானே தங்கை வாழ்க்கை பாழாகியது… அந்த அர்த்ததில்  தான் வீரப்பாண்டியன் சொன்னது.

ஆனால் நம் மதியோ….தங்கை நல்லவள் . தான் கெட்டவள். (அதாவது கெட்டவள் என்பது தன் நடத்தை சரியில்ல. அப்படி தப்பர்த்தம் புரிந்துக் கொண்டாள் மதி.)

எந்த ஒரு பெண்ணும் சோம்பறி…முட்டாள். இப்படி எந்த வார்த்தையானாலும் தாங்கிக் கொள்வாள். ஆனால் தன் நடத்தை…அது பிடிக்காத கணவனே ஆனாலும்….தன்னை இப்படியா நினைக்கிறான்…என்ற ஆத்திரத்தில்…

மேல் மூச்சு …கீழ் மூச்சு வாங்க…..” அப்போ எதுக்கு என்ன கட்டிக்கிட்ட….” வார்த்தையில் மரியாதை என்பதை  கை விட்டவளாய் ….முதல் நாளில் பேசிய ஒருமை அழைப்பில் பேசினாள்.

“ஏய் மரியாத….அன்னிக்கி வாங்கினது பத்தலையா….? அன்னிக்கே இன்னும் ரெண்டும் போட்டு இருக்கனும்டீ….செத்து கித்து போயிட போறேன்னு விட்டதுல…பயம் விட்டு போச்சி…..?”

“ ஏன் சாவடிக்கல …?அப்படி  சாவடிச்சாலும் நிம்மதியா போய் இருந்து இருப்பேன்ல…..”

“மரியாதை தெரியாதா  உனக்கு….?என்ன சொன்ன ஏன் சாவடிக்கலேன்னு தானே…..?தோ இதுக்கு தான்.”

ஆண் பெண்ணிடம் கோபம் கொண்டால்,  அது காதலோ…?காமமோ… ?தன் மனதில் இருப்பதை தனக்கு  பிடித்த வழியில் அந்த பெண் மேல் பழிவாங்கும் சாக்கு கொண்டு அவள் மேனியில் தன் ஆதிக்கத்தை செலுத்துவர். வீரப்பாண்டியனும் தன் மனைவியிடம் அதையே தான் செய்தான்.

“ உன்ன சாவடிச்சிட்டா …எனக்கு புள்ள பெத்து குடுக்க போறது யாரு….?” அவன் என்னவோ அவள் அப்பன் தங்க இனரத்தம் எங்கள் இனரத்தத்தில் கலக்க கூடாது என்று தானே…. செய்ய கூடாததை  எல்லாம் செஞ்சான். அவள் மகள் வயிற்றில் எங்க குடும்ப வாரிசு உருவாக்க வேண்டும். அதை நினைத்து தான் இந்த திருமணம். அதை நினைத்து தான் மதியிடமும் இப்படி பேசியது.

ஆனால் இவன் பேசிய இந்த பேச்சுக்கு அனைத்துக்கும் தப்பர்த்தம் புரிந்துக் கொண்ட மதியால்….

எதற்க்கு இத்திருமணமோ…அதையே இழக்க வேண்டிய சூழ்நிலை வரும் என்று  தெரிந்து இருந்தால்….. அனைத்தும் சொல்லி இருப்பானோ….?தன் காதல் உள்பட….

ஆம் காதல் தான்.

தன் காதலை அவள்  மேனியில் காமமாய் காட்டி அவளின் பொன் மேனியை புண் படுத்தியதில்….மேனி  மட்டும் அல்லாது மனது ரணமாய் மாறி அவனை பழி வாங்க தக்க தருணத்துக்காக அவள் காத்திருக்க  திட்ட மிட்டத்தில்…. எந்த உணர்வும் இல்லாது அவனுக்கு இசைந்து கொடுக்க ஆராம்பித்து விட்டாள்.

அவளின் எதிர்ப்பில் முதலில்   வன்மையை காட்டிய வீரப்பாண்டி…..அவன் இசைவில்   வன்மையை கைய் விட்டு மென்மையாக தன் மனைவியை கைய்யால….

அந்த மென்மையில் ….மதி தான் எடுத்த முடிவு சரி தான். எப்படியும் அவன் தன்னை விடப்போவது இல்லை. உடம்பால் நாம் அவனை எதிர்க்க முடியாது. எதிர்த்து எதற்க்கு உடம்பை புண்ணாக்கி கொள்ள வேண்டும்.  படித்த குடும்பம் என்று மதியும் தன் சிந்தனை மூலம் நிருபித்தாள்.

வீரப்பாண்டியனோ… தன் வீட்டு பெண்கள் வீரமானவர்கள் தான். ஆனால் கணவன் என்று வந்து விட்டால்…ஒன்று அடக்கி ஆள்வார்கள். இல்லை அடங்கி போய் விடுவார்கள்.

இவள் தனக்குள் அடங்கி விட்டாள் என்று தப்பர்த்தம் புரிந்தும் கொண்டு….இரவு முழுவதும் அவளை  கொஞ்சி தீர்த்து விட்டான்.

அவன்  கொஞ்சலை மதி கொஞ்சம் காது கொடுத்து கேட்டு இருந்தால் கூட,  பிறகு தனக்கு வர இருக்கும் விபரிதத்தை தவிர்த்து இருக்கலாமோ…..

எப்போதும் போல் விடியலில் எழுந்த யசோதா….கறந்த பாலை சுண்ட காச்சினாள்.

சரவணன் அண்ணன் எழுந்ததும் செய்யும் வேலையான  பட்டியில் ஆட்டுக்கு தீவணம் வைக்கும் வேலையை செய்து முடித்து விட்டு வந்தும்….அண்ணன் அறையின் கதவு  திறவாமல் இருப்பதை பார்த்து….

இன்று சந்தைக்கு ஆட்டை ஏத்த ஆளுங்க வரதா நேத்து அண்ணன் சொன்னாங்கலே….இன்னும் வரலையே….என்று யோசிக்கும் போதே…

யசோதா காபியை சரவணன் கையில் கொடுத்து விட்டு அவளும் வீரப்பாண்டி அறையை தான் பார்த்தாள்.

“அங்கன என்ன பார்வ வேண்டி இருக்கு….?” இருவரையும் பொதுவாக அதட்டல் போட்ட வாறே அங்கு வந்த கோசலை….

“ சரவணா…..பட்டியில ஆட்ட ஏத்த ஆளுங்க இன்னிக்கி வருவாங்கலே……?”

“ஆமா அத்த…அது தான் அண்ணன் காணலையேன்னு பார்த்தேன்.” என்று  யசோதாவை ஒரு பார்வை பார்த்துக் கொண்டே கோசலையுடன் பேசினான்.

அவன் பார்வையில் நான் பார்த்ததுக்கு காரணம் இருக்கு…. நீ ஏன் பார்த்த….? என்ற கேள்வி இருக்க….

அடுப்பாங்கரை பக்கம் தன் பார்வையை செலுத்தி விட்டு…. “ பெரிய மச்சானுக்கு காபி கலந்தேன்…அதான்…..”

நம்ம என்ன கேட்டா இதுங்க இரண்டும்  என்ன பேசிக்குதுங்க…..புரியா விட்டாலும்….சரவணனுக்கு பதிலாய்…

“ இன்னிக்கி  அண்ணனை எதிர் பார்க்காதே சரவணா…..என்ன என்ன ஆடுங்கல சந்தைக்கு ஏத்தனுமுன்னு  தெரியும்லே….நீயே கூட இருந்து ஏத்தி விட்டுடு….” சின்ன மருமகனிடம் பேசியவள்.

மகளிடம்….. “இனி இந்த காபி கொடுக்குறது எல்லாம் மதி பார்த்துப்பா…நீ மேல் வேலை  பார்த்தா மட்டும் போதும்….”

“ம்….” அந்த ஒத்த…ம் என்ற சொல்லில் தான்  ஓராயிரம் வேதனை ஒளிந்துக் கொண்டு இருக்கிறது.

“ எதுக்கு  மதிய இழுக்குறிங்க….?” வீரப்பாண்டியின் கேள்வியில், அனைவரும் அவனை திரும்பி பார்த்தனர். இப்போது தான் குளித்தான் என்பதை தலையில் உள்ள ஈரத்தை துண்டால்  துடைத்து கொண்டு வருவதிலேயே தெரிந்தது.

“ கொடு அப்பூ நான் துவட்டி விடுறேன்…..” தலை அத்தையிடம் கொடுத்து விட்டு….

மீண்டும்….” மதியே எதுக்கு இழுத்திங்கன்னு கேட்டனே….?” முதலில் பொதுவாய் கேட்டவன். இப்போது யசோதாவை பார்த்து நேரிடையாக கேட்டான்.

“ காபிய நான் தரக் கூடாதாம் உங்க மனைவி தான் தரனுமாம்…..” அவள் வாயில் இருந்து  மதி என்று அவள் பெயர் வரவே இல்லை என்பதை அப்போது தான் கண்ட வீரப்பாண்டி….

“ அவ உன்னோட சின்னவ தான் யசோ….மதின்னே கூப்பிடு…..” என்றதுக்கு…

தோட்டத்தில் காய்கறி பறிப்பதை மேல் பார்வையிட்டு….வீட்டுக்கு தேவையான காயையும்,   முந்தியில் எடுத்து வந்த புஷ்பவதி….

“ அது நல்லா இருக்காது. சின்னவளா…இருந்தாலும் …சின்னவனை கட்டிகிறவ பெரியவனை கட்டிகிட்டவ அப்படி  கூப்பிட கூடாது.”

புஷ்பவதியின் இந்த பேச்சுக்கு வீரப்பாண்டி, சரவணனையும்..யசோதாவையும் கூர்மையுடன் பார்த்தான். அவர்களிடம் ஏதாவது பிடித்தமின்னை இருக்கிறதா….என்று.

பிடித்தமின்மை இல்லை என்றாலும்,  பிடித்தது போலவும் அவர்களின் முகபாவனையில் தெரியவில்லை.

இனி பார்த்து ஒன்றும் ஆவப்போவது இல்லை. யாருக்கு…யார்….? முடிச்சு போட்டு தானே அனுப்பி இருக்கான். வேலை பார்ப்போம் என்று நினைத்தவன்…

வேலைக்கு முன் யசோதாவை பார்த்து….. “ நான் முன்னவே உன் கிட்ட என்ன சொன்னேன்….அவ கழுத்துல தாலி கட்டுனதால இங்கு ஒன்னும் மாறல…..நீ என்ன செய்வீயோ அத எப்போதும் போல் செய்.  இப்போ போய் எனக்கு காபி கொண்டா…..”

துவட்டிய துண்டை  தாழ்வாரத்தில் காய போட்ட வாறே…. “இல்ல அப்பூ  இது எல்லாம்….”

“அத்த நான் உங்க  கிட்டேயும் ஒன்னு சொல்றேன். மதி வந்தாலும் யசோதா இடம் அதே தான்…புரியுதுங்கலா….?”

அவள் இந்த வீட்டு மருமகள் என்பதை விட…இங்கயே வளர்ந்தவள். பெரிய மருமகளாய் வர வேண்டியவள் சின்ன மருமகளாய் வரப்போகிறாள் அவ்வளவே…கூடவே யசோதாவுக்கு இவ்வளவு வக்காலத்து வாங்குவதின் ரகசியம் அவன் மட்டுமே அறிந்த ஒன்று…

ஆனால்…..இதை எல்லாம் கேட்டுக் கொண்டு அங்கு வந்த மதி என்ன நினைப்பாளோ….ஏற்கனவே  கோசலை தவிர யாரிடமும் பேச மாட்டாள். இப்போது அனைவரும் தன்னையே ஒரு வித கூர்மையுடன் பார்ப்பதை பார்த்து ஒரு வித கூச்சத்துடன் அங்கு இருந்து போகும் முன்னவே…

“என்ன தலைக்கு குளிக்கலையா….?” எப்போதும் போல் புஷ்பவதி குரல் ஒரு வித அதட்டலாய் ஒலித்தது.

“ நேத்து தான்   தலைக்கு குளிச்சேன். எனக்கு சைனஸ் பிரச்சனை இருக்கு. தினத்துக்கும்  தலைக்கு தண்ணி ஊத்த கூடாது.” பாவம் அவள் புரியாது தான் பேசினாள்.

ஆனால்  புஷ்பவதிக்கோ இவர்களுக்குள் சாந்தி  முகூர்த்தம் நடந்ததா இல்லையா….? என்ற சந்தேகம் விழ…

சரவணனையும் யசோதாவையும் பார்த்து….. “நீங்க போங்க…..” அவர்களுக்கு புரிந்ததால்  ஏன் எதற்க்கு என்று கேட்காது ஒரு வித சங்கடத்துடன் இருவரும் சென்று விட்டனர்.

 

Advertisement