Advertisement

அத்தியாயம்…7

“ ஆனா எங்க க்ளாசில் சொன்ன சொல்லை காப்பத்த தான் நினைப்போம்.” என்று சொல்லி  பூஜா சக்தி வரதனின் பேச்சை தடை செய்தாள். அவளின் அந்த பேச்சு சக்தி வரதனுக்கு ஏனோ முட்டாள் தனமாக தோன்றியது..

 அதை சொல்லவும் செய்தான்.. “ அது ஒரு முட்டாள் தனம்…”  என்று  சொன்ன சக்தி வரதன் …

பின்..” நமக்கு கிடைக்க போகும் வாழ்க்கையை விட ஒரு மேன்மையான வாழ்க்கை தானா அதுவே வரும்  போது, அது வேண்டாம் என்று சொல்றியே… நீ படிச்ச பெண் தானா..?” என்று கேட்டான்.

“ஓ படிச்சவங்க ஒன்னு மாத்தி ஒன்னு போயிட்டே இருக்கனுமோ.. ஆ அப்புறம் என்ன சொன்னிங்க.. மேன்மையான வாழ்க்கையா…? மேன்மையான வாழ்க்கை என்று எதை வெச்சி சொல்றிங்க..?

உங்க  கிட்ட இருக்கும் பணத்தை வெச்சா.. அப்போ பணம் இல்லாதவங்க எல்லாம் அடிமட்டமான வாழ்க்கை நடத்துறாங்களா…? சொல்லுங்க…?” என்று கேட்ட பூஜா..

தொடர்ந்து..

“ எங்க அம்மாவை  அன்னைக்கு நீங்க பார்த்து இருப்பிங்க…? எங்க அம்மாவோட கழுத்துல ஒரு மெலிசா தாலி சரடு மட்டும் தான் எப்போதும் இருக்கும்.” என்று சொல்லிக் கொண்டு வந்தவளை இப்போது  சக்தி வரதன் தடை செய்தான்.

“ கவலை படாதே செல்லம். இதோ இப்போ போகும் போது கூட உங்க அம்மாவுக்கு,  கணமா தாலி சரடு வாங்கிடலாம்.அப்படியே வளையல் இன்னும் என்ன வேணுமானாலும் வாங்கிடலாம் செல்லம்.” என்று கொஞ்சியனின் பேச்சை சகிக்க முடியாது..எழுந்து நின்று விட்டாள்.

“உங்க கிட்ட பேசுனா என் எனர்ஜீ தான் போகும்.” என்று சொல்லி செல்ல பார்த்தவளின்  அவளின்  ஒரு கை பிடித்து தடுத்தவனை தன்  மற்றொரு கைய்யால் ஒரு விரல் காட்டி ..

“ கை பிடிக்கும் வேலை எல்லாம் வெச்சிக்காதே.. என் க்ளாசில் இருக்கும் பெண்கள் இது  போல்  கை பிடிச்சா அவங்க வாய் மட்டும் இல்லாது கைய்யும் பேசும்..” என்று சொன்ன பூஜாவின் குரல் இப்போதும் ஓங்கி தான் ஒலித்தது.

அவள் குரலில் பிடித்து இருந்த கையை சட்டென்று விட்டு விட்ட சக்தி வரதன். தன்னை சுற்றி இருப்பவர்களை ஒரு வித சங்கடத்துடன் பார்த்து விட்டு…

“இப்போ உட்கார்.. இல்லேன்னா கை என்ன லிப் டூ லிப் கூட வைப்பேன். ஏன்னா என் க்ளாசுக்கு இது எல்லாம் சகஜம்.”  என்று பல்லை கடித்துக் கொண்டு  சொன்ன சக்தி வரதனின் தோற்றத்தை பார்த்து பூஜா தன்னால் அமர்ந்துக் கொண்டாள்.

“ உனக்கு மெல்ல பேசாவே தெரியாதா..? அசிங்கம்மா கத்துற.. படிச்ச பெண் தானே ஒரு மேனன்ஸ் வேண்டாம்.” என்று  அவன் தன் கோபத்தை அடக்கி சொன்னாலுமே, அவன் சொன்ன விதம்  பூஜாவுக்கு கடுமையாகவே இருந்தது…

இருந்தும் பூஜா இதற்க்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன் என்பது போல்..

“ஓ மேனன்ஸ்சுன்னா என்னங்க சார் உங்க அகராதியில், வேறு ஒரு பெண்ணை நிச்சயம் செய்துட்டு… வேறு ஒருவரை மணக்க இருப்பவளை கை பிடிப்பதும்.. முத்தம் கொடுப்பேன் என்பதும் தான் உங்க படிச்ச… ஹய் க்ளாஸ் மேனன்ஸோ…அது தான் மேனன்சுன்னா எனக்கு மேனன்ஸ் இல்ல தான்..” என்று  சக்தி வரதனின் கோபத்துக்கு குறையாத கோபத்தில் எப்போதும் போல் சத்தமாக சொன்னவள்..

தொடர்ந்து..

“நான் எங்க அம்மா மெல்லிய தாலி சரடு தான் போட்டுட்டு இருப்பாங்க என்று நான் சொன்ன உடனே.. நான் வாங்கி தர்றேன்னு சொல்றிங்க… எங்க அம்மா நான் வாங்கி கொடுத்தாலே வாங்கிக்க மாட்டாங்க..அப்படி இருக்க நீங்க யார் ..? எங்க அம்மாவுக்கு வாங்கி தர்ற…?

உங்க ஹய் க்ளாஸ் பீப்பிள் ஒரு சமயம் கிப்ட் என்ற பெயரில் யார் என்ன கொடுத்தாலும் வாங்கிக்கலாம்… ஆனா எங்க போல இருக்கவங்க.. யாராவது ஏதாவது கொடுத்தால், சட்டுன்னு வாங்கிக் மாட்டாங்க..

அதுக்கு பின்னால் என்ன காரணம் இருக்கு என்று யோசித்து, அது நல்ல காரணமாக இருந்தாலுமே அதை வாங்க தயங்குவாங்க.. ஏன்னா இப்போ வாங்கினா அவங்களுக்கும் அது போல நாம வாங்கி கொடுக்கனுமே..

நம்மால் அது முடியுமா..? என்று.. ஏன்னா யாராவது கொடுத்தா வாங்கிட்டு அப்படியே நாங்க போக மாட்டோம். அவங்களுக்கு திருப்பி செய்யனும் என்ற மென்டாலிட்டி தான் எங்களுக்கு எப்போதும் இருக்கும்..

நான் எங்க அம்மா நகைய பத்தி சொன்னதுக்கு காரணம்.. எங்க வீட்டில் வசதி இல்லேன்னாலும், எங்க அப்பா எங்க அம்மாவை ரொம்ப சந்தோஷமா தான் வெச்சிட்டு இருக்காங்க… அதனால வாழ்க்கை மேன்மை என்பது பணத்தை வெச்சி இல்ல,,வர்ற  புருஷனை வெச்சி தான்.” என்று பூஜா சொல்லி முடித்தாள்.

அவள் பேச்சை அனைத்தையும் கேட்ட சக்தி வரதன்.. “ யப்பா…” என்று சொல்லி பெரும் மூச்சை இன்றை இழுத்து விட்டவன் அங்கு இருக்கும் தண்ணீரை பூஜாவின் பக்கம் நகர்த்தி..

“ முதல்ல இதை குடி. நீ பேசுனதை கேட்ட எனக்கே  மூச்சு வாங்குது.” என்று சொன்னவன்..

தொடர்ந்து..

“இப்போ என்ன சொன்ன உங்க அம்மா வாழும் சந்தோஷமான அந்த மேன்மையான வாழ்க்கை பத்தி தானே மேடை பேச்சு போல் பேசுன… அவங்க வாழ்ந்த, இப்போ வாழும் வாழ்க்கை  உனக்கு மேன்மையான வாழ்க்கையா..?” என்று கேட்டவன்…

“இப்போ நீங்க இருக்கும் அந்த அரை க்ராவுண்ட் நிலம் வாங்க, உங்க அம்மா மொத்த நகையும் கொடுத்து, அதுவும் பத்தாது உங்க அப்பா வேலை செய்யும் இடத்தில் அட்வான்ஸ் வாங்கியதில், வீட்டு நடத்த பணம் பத்தாது தையல் வேலை செஞ்சி..

இதோ இப்போ நீ போட்டு இருக்க இந்த இரண்டு நகைங்க கூட அவங்க முதுகு உடைய தச்சி அதுல சேர்த்து வைத்தது, அவங்க வாழ்க்கை இப்படியே போவது தான் உனக்கு மேன்மையான வாழ்க்கையா…? 

இதோ இப்போ உங்க வீட்டில் உனக்கு பாத்து வெச்சி  இருக்காங்களே..அதுவும் உங்கல போல் தான்.. வீடு பெரிய வீடுன்னு உங்க அப்பா சொன்னாரா…? அது மொத்தமும் கடன் தான்..

கடன் வாங்க அவன் அலைய தேவையில்லயே  பேங்கில் மொத்தமும் லோன் போட்டு தான் வாங்கி இருக்கான். அவன் சம்பளம் முக்கால் வாசி அதுலேயே போயிடும்..

இப்போ அவங்க கணக்கு நீ சம்பாதிக்கும் பணமும் சேர்த்து தான் கணக்கு போட்டு இருக்காங்க.. உங்க வீட்டில் பார்த்த இட்த்துக்கு நீ போனா உன் அம்மா வாழற  வாழ்க்கை தான் நீயும் வாழனும்..

நீ உண்மையா மேன்மையான வாழ்க்கை வாழனும் என்றால், என்  வீட்டுக்கு வந்து அம்மாவை பார். அப்போ புரியும்  எது நல்ல வாழ்க்கை.”  என்று பேசியவனின்  பேச்சை பொறுமையாக கேட்டுக் கொண்டு இருந்த பூஜா..

அவன் பேசி முடித்தது…

“ ம் பேசிட்டிங்களா..? நான் கிளம்பலாமா…?” என்று கேட்டவள் தான் உண்ட உணவுக்கு தோரயமாக ஒரு தொகையை எடுத்து மேசை மீது வைத்து விட்டு..

“அப்போ நான் கிளம்புறேன்.” என்று சொல்லியவளின் கை மீண்டும் பிடித்தவனாய்..

“இப்போ முதல் மாதிரி  நீ ஏதாவது கத்துன..அப்போ சொன்னதை இப்போ செஞ்சிடுவேன். இப்போவே நம்ம பக்கம் தான் நிறைய பேரோட பார்வை  இருக்கு.. இதில் என் தொழில் எதிரிங்க வேறு யாராவது இருந்தா.. கண்டிப்பா இதை பத்தி தப்பா மீடியாவுக்கு போக சான்ஸ் இருக்கு…

அதை பத்தி எல்லாம் உனக்கு கவலை இல்லேன்னா. எனக்கும் இல்ல.. ஏன்னா இது எல்லாமும்  எங்க க்ளாசில் சகஜம் தான்.” என்று சொல்லியவனின் பேச்சில், பூஜா இப்போது கொஞ்ம் ஆடி தான் போய் விட்டாள்.

பக்கத்து வீடு ..எதிர்  வீடு.. நட்பு உறவில் வாழும் மத்தியதர வர்க்கம் பூஜா… எதிர் வீட்டு மாமி..

“ என்ன பூஜா நேத்து லேட் நையிட் காரில் வந்த போல..” என்று வம்பு வளர்க்கும்   பொருட்டே கேட்டாலுமே.. இவங்க ஏதாவது கதை பரப்பி விட்டுட போறாங்க என்ற பயத்தில்..

“மாமி அது தனியா நான் வெச்சிட்டு வந்த கார் இல்ல மாமி.. நேத்து வேலை முடிக்க நேரம் ஆயிடுச்சி..இது போல் ஒன்பது மணிக்கு மேல் ஆனால்  ஆபிசிலேயே இது போல் கேப் ஏற்பாடு செய்து கொடுத்துடுவாங்க மாமீ..” என்று மிக நிதானமாக புரிய வைத்து  விட்டு தான் செல்வாள்.

இன்னும் கேட்டால் அவர்கள் எல்லாம் அவளை சிறு வயது முதலே பார்க்கிறார்கள்.. அவர்கள் பார்த்து வளர்ந்தவள் தான் இவள்.. இருந்தும் ஏதாவது தப்பாக பேசி விட்டால், அந்த பயம் அவளுக்கு எப்போதும் இருக்கும்..

இதோ க்ளாஸ் க்ளாஸ் என்று தன் எதிரில் இருப்பவன் பேசிக் கொண்டு இருக்கிறானே.. அவன் சொன்னது போல் தன்னை போல் மிடில் க்ளாஸ்  பீப்பிள் இதற்க்கு பயந்து தான் இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

அந்த பயம் இப்போதும் வர பேசாது அமர்ந்து விட்டாள். அவள்  வீராத்தோடு எழுந்தது. பின் தன் பேச்சில் அமைதியாக அமர்ந்துக் கொண்டது..

பின் அவள் முகத்தில் தோன்றிய முக பாவனைகளையே பார்த்துக் கொண்டு இருந்தவன் முகத்தில் மெல்லிய  சிரிப்பின் சாயல்.

“உங்களை எங்கே அடித்தால் விழுவிங்க என்று எனக்கு தெரியாதா..?” என்று இதோ இப்போது இறுமாப்புடம் நினைத்துக் கொள்ளும் இவன் தான் பின் காலத்தில்  அவள் அடிக்கும் அடியில் மரண காயம் பட்டு துடி துடிக்க போகிறான் என்று தெரியாது.. எப்போதும் போல் தன் புத்திசாலி தனத்தில் அதித நம்பிக்கை வைத்து இருக்கும் சக்தி வரதன்.

அதே புத்திசாலி தனத்தை வைத்தே பூஜாவை தன் வழிக்கு கொண்டு வந்து விடலாம் என்று திட்ட மிட்டவனாய்.. இப்போது தன் குரலில் மென்மையை அளவுக்கு அதிகமாக கூட்டியவனாய்..

“ இதோ பார் செல்லம். உன்னை இது போல் பயப்படுத்துவது  எனக்கே பிடிக்கல தெரியுமா..?இதோ இது போல உன் பயந்த முகத்தை பார்க்கும் போது எனக்கு என் மீது வெறுப்பா இருக்குடா..

புரிஞ்சிக்க.. என்னை  கல்யாணம் செய்துட்டா தான்டா நீ நல்லா இருப்ப…” அதாவது அவன் அவளை கல்யாணம் செய்தா இவன் நல்லா இருப்பான் என்று சொல்லாது… நீ என்னை கல்யாணம் செய்தா தான் நீ நல்லா இருப்ப.. அவன் தொழில் பேச்சை பூஜாவிடம் காட்டினான்.

பூஜாவுக்கு இப்போதும் அந்த மீடியா பயம் இருக்க தான் செய்தது.. வரதன் க்ரூப் சென்னையில் புகழ் வாய்ந்தது…  அன்று தவறுதலாய் தன்னை பெண் பார்க்க வந்து பின் நடந்த சம்பவத்துக்கு பிறகு.

வலை தளத்தில் இவர்கள் துர்கா க்ரூப் வரதன் விளம்பரக்கம்பெனி என்று போட்டாளே இவர்கள் குடும்பத்துடன் புகைப்படம் வந்து விழுந்ததோடு.. அவர்கள் க்ரூப் எப்போது ஆரம்பித்ததில் இருந்து,   போன தலை முறை ஜெய வரதனை பற்றியும்..

இன்றைய தலை  முறையான சக்தி வரதன் தனியா விளம்பரக்கம்பெனி ஆரம்பித்ததில் இருந்து இப்போதைய வளர்ச்சி வரை சொன்னதோடு, அவனின் இடையை பிடித்து போஸ்  கொடுத்த இன்றைய திரை உலகின் கனவு கன்னியின் புகைப்படமும் பார்த்ததில் தான் பூஜா..

அவனின் நிஜமான உயரம் புரிய… நாம் அடுத்த நிலைக்கு சென்று தான் ஆகவேண்டும் என்ற முடிவோடு  வீட்டில் பார்த்த இந்த பேங்க்  மாப்பிள்ளைக்கு சம்மதம் சொன்னது..

அதனால் இப்போது இந்த மீடியா என்று சக்தி வரதன் சொன்னதில்,  கொஞ்சம் பயந்து தான் போய் விட்டாள். இது போல் ஏதாவது வந்தால் தன்னை விடு தன் குடும்பம். இது தான் அவளுக்கு தோன்றியது..

அதனால்  அமர்ந்துக் கொண்டாள் தான் . ஆனால் அவன் பேசியதை கேட்டு அவன் பேச்சு  சாமர்த்தியத்தில்…

“ஓ நான் நல்லா இருப்பேன்.. “ என்று  நக்கலோடு கேட்டவள்..

தொடர்ந்து..

“ நான் நல்லா இருப்பேன் என்று இப்போ நீங்க சொன்னதை ஏன் ஒன்றரை மாதம் முன் தவறுதலாய் என்னை மாறி பெண் பார்த்து இருந்தாலுமே, நான் நல்லா இருக்கனும் என்ற அந்த உயர்ந்த உள்ளம்  அப்போ திரும்பி பாராது இருந்தது…” என்று கேட்டவள்..

“ ஆனால் நான் உங்க நிலையில் இருந்து இருந்தா ..உங்களை பிடிச்சி இருந்தா, அப்போதே அந்தஸ்த்து என்ற அந்த வெட்டி பந்தா காட்டாது எங்க அப்பா அம்மா கிட்ட சொல்லி இருப்பேன்..

 இந்த இடத்தையே முடிச்சிடுங்க என்று..” என்று ஆவேசமாக பேச ஆரம்பித்த அவள் குரல் போக போக கர கரப்பில் கொண்டு வந்து நின்றது..

ஆம் வலைதளத்தில் அவனை பற்றி தெரிந்து அவள் அடுத்த கட்டத்துக்கு போகும் முன் அவள் பட்ட வேதனை அவள் மனம் மட்டுமே அறியும்.. தான் சக்தி வரதன் நிலையில் இருந்தால், என்ன முடிவு எடுத்து இருப்பேன்..? என்று யோசித்தவளுக்கு பதில் நான் இந்த அந்தஸ்த்தை கட்டி இழுத்து இருக்க மாட்டேன் என்று தான் தோன்றியது..

பின்.. ஏன் அவன் அது போல் நினைக்கவில்லை..? முதலில் என்னை ஆசையாக தானே பார்த்தான்.. பின் நான் அவங்க பார்த்த இடம் இல்லை..அதாவது அந்தஸ்த்தில் அவர்களுக்கு மிக கீழ் என்று தெரிந்ததும், அவன் பின் தன்னை சட்டையே செய்யவில்லையே..

அப்போ அவன் பார்த்த அந்த ஆசைப்பார்வை கிடைக்க நான் அவன் அந்தஸ்த்துக்கு ஈடாக இருக்க வேண்டுமா..? போடா போ.. எனக்கு ஏத்த இடம் வரும்.. நீ எனக்கு வேண்டாம் என்று தன்னை அவள் திடப்படுத்திக் கொண்டு இதோ இப்போதும் அவன் முன் நிமிர்வோடு அமர்ந்து பேசிக் கொண்டு இருக்க அவளுக்கு அவளே எப்படி திடப்படுத்திக் கொண்டாள் என்று அவளுக்கு மட்டுமே தெரியும்..

ஏன் இதில் எப்போதும் அனைத்தையும்  பகிர்ந்துக் கொள்ளும் தன் சகோதரியிடம் கூட ஏதும் சொல்லாது  இருந்து விட்டாள்… அப்படி இருக்க இன்றைய இவன் பேச்சு அவளுக்கு மகிழ்ச்சியை கொடுத்ததை விட கோபத்தை தான் கொடுத்தது.. 

“ உங்க தொழில்  பேச்சு என் கிட்ட வேண்டாம் மிஸ்டர் சக்தி வரதன்.. நான் இங்கு வந்ததுக்கு காரணம் நீங்க எப்போவும் கீழாக பார்க்கும் அந்த மத்தியதரவர்க்கத்தின் புத்தியால்.. இனி இது போல் என்னை தொடர்ந்தால் நாளைக்கு என் குடும்பமோ..என் சகோதரியோ பாதிக்கப்படுவாள் என்ற ஒரே காரணத்துக்காக தான்..

வேறு எந்த வித காரணமும்  இல்ல.. நீங்க முதல்ல எடுத்த முடிவு தான் நல்ல முடிவு…  இதோ நீங்க கோபத்தோடு  பேசினாலும், கத்தாம பேசுறிங்க..ஆனா நான் சாதரணமாவே கத்தி தான் பேசுவேன்… நீங்க  சிரிச்சா…” என்று சொல்ல வந்தவள்..

பின் யோசித்து இவன் எப்போ சிரிச்சி இருக்கான் என்று நினைத்து.. “ நான் சிரிச்சா பக்கத்து வீடு வரை கேட்கும்.. உங்க உயரம் வேறு.. அதில் வந்து நான் அமர்ந்தால், எப்போ விழுவோம் என்ற பயம் தான் இருக்குமே  ஒழிய..

 நீங்க சொன்ன மகிழ்ச்சி என் கிட்ட இருக்காது..” என்று தெள்ள தெளிவாக விளக்கி விட்டு இப்போது  கோபமாக, எழ எல்லாம் இல்லை..

கண்டிப்பாக இவன் ஏதாவது சொல்வான் என்று  அவன் பதிலுக்காக காத்துக்  கொண்டு இருந்தாள்.

ஆனால் அவன் ஏதும் பேசாது ஒரு வரப்படத்தை பூஜா முன் பரப்பி வைத்து.. “ இது உங்க வீட்டு வரைப்படம் தான்.” என்று சொன்னான்.

Advertisement