Advertisement
அத்தியாயம் நாற்பத்தி எட்டு :
சக்தியை எப்படி சமாளிப்பது என்று யோசித்து யோசித்து கார்த்திக் இருந்த மனகுழப்பதில் உறங்கி விட்டான்.
சிறிது நேரம் கழித்து வந்து எட்டி பார்த்த தெய்வானை கார்த்திக் உட்கார்ந்து கொண்டே உறங்குவதையும் சக்தி படுக்கையில் உறங்குவதையும் பார்த்து சத்தம் செய்யாமல் மீண்டும் கதவை மூடி விட்டு சென்றார்.
மாலை ஏழு மணியாகியும் இருவரும் எழவில்லை…. கார்த்திக் போன் கீழே இருக்க பிரபு விடாமல் போன் செய்து கொண்டிருந்தான், ஹாஸ்பிடலுக்கு சக்தியை அழைத்து வர சொல்ல………..
வருகிறேன் என்று சொன்ன கார்த்திக் வராமல் இருக்கவும் வாசுகியும் போன் செய்தார்.
தெய்வானை மீண்டும் வந்து பார்க்கவும் இருவரும் எப்படி உறங்கினார்களோ அப்படியே உறங்கி கொண்டு இருந்தார்கள்.
சரியாக உறங்கியே பல நாட்கள் ஆன அந்த இரண்டு ஜீவன்களும் எது எப்படியோ ஒருவரின் அருகாமையில் மற்றொருவர் நிம்மதியாக உறங்கினர்.
தெய்வானைக்கு எழுப்புவதா வேண்டாமா என்று யோசனையாக இருக்க வேண்டாம் என்று விட்டுவிட்டார்.
செல்வம் வேறு மூன்று முறையாக வந்து பார்த்தான்…..
கார்த்திக் எழுந்த போது மணி எட்டு…. இருள் சூழ்ந்திருப்பதை பார்த்தவன்….. “அச்சோ! ஹாஸ்பிடல் வருகிறேன் என்று சொல்லிவிட்டு உறங்கி விட்டேனே”, என்று அவசரமாக எழுந்தவன்….. கீழே வந்து போனை எடுத்து பிரபுவை அழைத்தான்….
“சாரி, பிரபு தூங்கிட்டேன்…. இப்போ வரட்டுமா…..”,
“வா, ஒரு பாட்டில் ப்ளட் ஏத்திடலாம்”, என்று பிரபு சொல்ல…. சக்தியை எழுப்பி கூட்டிகொண்டு போனான்.
எழுந்த உடனே உற்சாகமாக ஏதோ பேச வந்த சக்தி…… கார்த்திக்கின் யோசனையான முகத்தை பார்த்து அமைதியாகிவிடாள்.
அவன் ஹாஸ்பிடல் போகலாம் என்றதும் உடனே கிளம்பிவிட்டாள்.
“தேவைன்னா கூப்பிடு கார்த்திக்”, என்று சொல்லி தெய்வானை இருவருக்கும் தனிமை கொடுக்க விரும்பி வீட்டிலேயே இருந்து கொண்டார்.
சக்தி கார்த்திக்கின் அமைதியை கலைக்கவில்லை. அவனோடு மௌனமாகவே வந்தாள். அவன் முகத்தையே அடிக்கடி பார்த்துக் கொண்டு இருந்தாள்.
“காயம் ரொம்ப வலிக்குதா?”,
“இல்லை”, என்பது போல தலையாட்டினான்….
பிறகு சக்தி ஒன்றும் கேட்கவில்லை…
ஹாஸ்பிடல் வந்ததும் பிரபு அவளுக்கு ரத்தம் ஏற்ற ஏற்பாடு செய்தான்.
“ரொம்ப லேட் ஆகிடுச்சு, நாளைக்கு ஏத்திக்கலாமா”, என்று சக்தி கேட்க….. பிரபு பதில் சொல்வதற்கு முன்பே…….
“வேண்டாம், இப்போவே ஏத்தலாம்! அதுக்கு என்ன நேரம் காலம்….”, என்று விட்டான் கார்த்திக்.
ரூமில் ப்ளட் ஏற்ற அவள் கையில் ஏற்கனவே குத்தப்படிருந்த ஊசியை எடுத்து….. புதிதாக வேறு இடத்தில குத்தினர்…… அது ரத்த நாளம் சரியாக கிடைக்காமல் இரண்டு மூன்று முறை முயற்சிக்கும் படியாகிவிட….
கார்த்திக் சிஸ்டரிடம் கோபப்பட்டான்…… “இதே வேலையை தான் எல்லா பேஷண்ட்கிட்டயும் செய்றீங்க……. அப்பவும் இப்படி தடுமாறலாமா”,
ஏற்கனவே மினிஸ்டர்…. அதுவுமில்லாமல் ஹாஸ்பிடல் ஓனர் என்று பயந்திருந்த சிஸ்டரின் கைகள் இன்னும் பயத்தில் தடுமாறின…
“கார்த்திக் அவங்களை ஏன் அதட்டுற…..”, என்று சக்தி சமாதானப்படுத்த….
“எல்லாம் உன்னால தான்”, என்று அவளிடமும் கோபப்பட்டான்……
“ஒழுங்கா சாப்பிடறதுக்கு கூட என்ன….. இப்போ இந்த வலியெல்லாம் தேவையா…….. தானா வந்தா வேற…. நீயா இழுத்து விட்டுகிட்டா…… உனக்கெல்லாம் அறிவே கிடையாது….. எதெதுல அலட்சியமா இருக்குறதுன்னு வேணாம்…. ஹெல்த்ல எல்லாம் யாராவது ரிஸ்க் எடுப்பாங்களா….. என் மேல கோவம்னா என்கிட்டே காட்டனும்….. அதுக்காக உன்னை நீ வருத்திக்குவியா”, என்று அவளிம் ஆவேசமாக கேட்டான்.
கோபம் என்று ஒரு வார்த்தையில் அடக்க முடியாத அதீத கோபம்…. பார்ப்பவர்களுக்கு அடித்து விடுவானோ என்று பயம் கொடுக்கும் கோபம்.
சக்தி சற்றும் முகம் சுணக்கம் கூட காட்டவில்லை….. “சரியாகிடும் விடு!”, என்று மீண்டும் கார்த்திக்கை சமாதனப்படுதினால்.
“சரியாகாம இருக்கட்டும்! நானும் உன்னை மாதிரியே ஹெல்தை ஸ்பாயில் பண்ணிக்கிறேன்!”, என்றான் மிரட்டலாக…..
“இல்லையில்லை சரியாகிடும்! நான் சரி பண்ணிக்குவேன்!”, என்றாள் அவசரமாக சக்தி..
பிரபு ஆச்சர்யமாக பார்த்தான்….. காலையில் கார்த்திக்கின் மண்டையை உடைத்த பெண்ணா இது, முன்பு ஒரு முறை காபியை அவனின் முகத்தில் ஊற்றிய போதும் சக்தியின் கோபத்தை பார்த்திருக்கிறானே… எப்போதும் சக்தி கார்த்திக்கை அடக்க நினைப்பாள் போல என்பது மாதிரி பிரபு நினைத்திருக்க….. அவள் அப்படியே வேறு மாதிரி தெரிந்தாள்….
ரத்தம் ஏற ஆரம்பிக்க…… சிஸ்டர் வெளியே சென்றதும் கேட்டும் விட்டான்…..
“ஏன்டா இவ்வளவு கோபப்படற, அமைதியா இருக்காங்க! அதே சமயம் உன்னை அசால்டா காயப்படுடறாங்க!”, என்று……
“எப்பவுமே அவன் அப்படிதான் என்கிட்டே கோவப்படுவான்…. அது யூசுவல்….”, என்றாள் சக்தி.
கார்த்திக் பதிலே சொல்லவில்லை…
“சரி நீயிரு! நான் ஹாஸ்பிடல் ஒரு ரவுண்டு பார்த்துட்டு வர்றேன்…..”, என்றபடி பிரபு கிளம்பவும்…..
“வைஷ்ணவி கிட்ட சொல்லிட்டியா? நீ வர லேட் ஆகும்னு!”, என்றான் அக்கறையாக கார்த்திக்.
“மணி பாரு பத்து! இந்த நேரத்துக்கு அவ நல்ல தூக்கத்துல இருப்பா….. உன் தங்கச்சி உனக்கு மட்டும் தங்கச்சியில்ல கும்பகர்ணனுக்கும் தங்கச்சி, ரூம் கதவை கூட தாழ்பாள் போட்டிருக்க மாட்டா…… நான் லேட்டா போய் கதவை தட்டி அவ தூக்கம் கலைஞ்சிடுச்சுன்னா”, என்று சொல்லிகொண்டே சென்றான்.
கார்த்திக்கிற்கு முகம் முழுக்க புன்னகை…….. பிரபு வைஷ்ணவியை என்னதான் இப்படி கிண்டல் செய்தாலும் கோபப்பட்டாலும் அவள் மேல் அவனுக்கு அப்படி ஒரு காதல்…. வைஷ்ணவியை அவளுடைய குறைகளுடன் அப்படியே ஏற்றுக்கொள்ளும் காதல்….
சக்தியை பார்த்து கார்த்திக், “சும்மா சொல்றான்! இவன் கதவை தட்டினா வைஷ்ணவி தூக்கம் கெட்டுடும்னு ரூம் கதவை லாக் பண்ணாம தூங்குன்னு இவன் சொல்லியிருப்பான்”, என்றான் பிரபுவை பற்றி அறிந்தவனாக.
அந்த புன்னகை சக்தியையும் தொற்றியது…..
வாசுகிக்கு போன் செய்து…. சக்தியின் உடல் நிலை பற்றி சொல்லி அதனால் தான் வளைகாப்பிற்கு வரவில்லை என்று சொல்லி சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து வைத்தான்.
அவனையே விடாமல் பார்த்திருந்தாள்…..
பேசி முடித்ததும், “என்ன?”, என்று கார்த்திக் கேட்க……
“நாம இனிமே சேர்ந்து தானே இருப்போம்! தனி தனியா இருக்க மாட்டோம் தானே!”, என்றாள்…. குரலில் அவ்வளவு பயம் மீண்டும் பிரிய வேண்டி வருமோ என்று.
அவளருகில் அமர்ந்து அவளின் கைகளை பிடித்துக் கொண்டவன்…. “எனக்கும் அது தான் ஆசை சக்தி”, என்றான்.
அவனை சக்தி புரியாமல் பார்க்கவும்……….
“என்ன தான் என்னோட வழக்கு பத்தி சர்ச்சைகள் குறைஞ்சிடுச்சுன்னாலும்… இப்போ நம்ம கல்யாணத்தை அறிவிக்கும் போது திரும்ப எல்லோரும் பேசுவாங்க……”,
“உங்கப்பா நீ பதவியிலயே இருக்கனும்னு இஷ்டப்படறார்….. ஒரு குற்றம் சாட்டபட்டவனை கணவன்னு சொல்லிட்டு நீ அமைச்சரா இருப்பியா? முடியுமா உன்னால? யோசி?”, என்றான்.
“நம்ம திருமண அறிவிப்பு கண்டிப்பா ஒரு சலசலப்பை ஏற்படுத்தும்…. நிறைய கேள்விகள் உன்னை பார்த்து வரும்….. யோசி?”, என்றான்.
இதை சொல்லும்போதே கதவை தட்டும் ஓசை கேட்க….. யார் என்று பார்த்தால் செல்வம்….
“டேய் என்னடா இந்த நேரத்துல…..”,
“நான் தான் ஃபங்க்ஷன் முடிஞ்சதுமே வந்துடுவேன்னு சொல்லியிருந்தேன் தானே…”,
“ப்ளட் ஏத்தறாங்கடா”, என்று சொல்லியை கார்த்திக்… “நீ வீட்டுக்கு கிளம்பு…. நான் பார்த்துக்கறேன்”, என்றான்.
“நான் இங்க வெளில இருக்கேன்… நீங்க போகும் போது தான் போவேன்…..”,
“டேய்! தேவை இருக்காதுடா……”,
“அப்படியெல்லாம் விட்டுட்டு போக முடியாது!”, என்று வெளியே ஒரு சேரை போட்டு அமர்ந்து கொண்டான்.
“சரி உன் ரூம்காவது போய் போய் தூங்குடா! நான் போகும் போது எழுப்பறேன்..”,
“போங்க பாஸ்! நான் இங்க தான் இருப்பேன்!”, என்று அமர்ந்து கொண்டான்.
“சொன்னா கேட்க மாட்ட”, என்று அவனை திட்டிக்கொண்டே உள்ளே போனான்.
சக்தியின் முகம் சீரியசாக இருந்தது…..
கார்த்திக் அவள் அருகில் அமர்ந்ததும்…. “எனக்கு என்ன பண்றதுன்னு யோசிக்கவே முடியலை… எப்பவும் நான் என்ன பண்ணனும்னு நீதானே சொல்லுவ…. நீ சொல்லு நான் என்ன பண்ணட்டும்”, என்றாள்.
கார்த்திக் அமைதியாக இருக்க…….
“நான் கொஞ்சம் சேர்த்து சாப்பிட்டா கூட நான் வாமிட் பண்ணிடுவேன் வேண்டாம்னு சொல்ற…. அது கூட உனக்கு தெரியுது… இந்த விஷயத்துல நான் என்ன பண்ணனும்னு உனக்கு தெரியாதா….?”,
“ஏன் அமைதியா இருக்க….. நான் வராதன்னு சொன்னா ஏன் வராம இருந்த???”,
“சக்தி ப்ளீஸ்! இதை பத்தி பேச வேண்டாம்! நடந்ததையெல்லாம் விட்டுடுவோம்….. ஆகற வேலையை பார்ப்போம்….”,
“சரி நடந்ததை விட்டுடுவோம்…… இன்னும் நான் என்ன செய்யட்டும் நீ சொல்லு….”,
“அதை என்னால சொல்ல முடியாது”, என்றான்……
“ஏன்? ஏன் சொல்ல முடியாது…..?”,
“நீ பதவியில இருக்கும் போது உன்னோட கணவனா என்னை அடையாளம் காட்டிகிட்டு உனக்கு அவப் பெயரை என்னால தேடித் தர முடியாது…. அதே சமயம் இதையெல்லாம் விட்டுட்டு வந்துடுன்னும் சொல்ல முடியாது…..”,
“உங்கப்பா உனக்கு எவ்வளவு முக்கியமோ எனக்கும் அவ்வளவு முக்கியம்! அவரோட கனவுகளை சிதைக்கற உரிமை எனக்கு கிடையாது…… நீ அவரோட பொண்ணு! நீ பேசலாம்…. ஆனா என்னை நன்றின்ற உணர்ச்சில முழுசா கட்டி போட்டு இருக்கார்….”,
“நான் இப்போல்லாம் கடவுள் கிட்ட கேட்கறதெல்லாம் ஒன்னு தான்! நீ பாட்டுக்கு எனக்கு மினிஸ்டர் போஸ்ட் வேண்டாம்னு சொல்லி, அந்த கோபத்துல என்னை உன்னோட வாழ்க்கையை விட்டு போன்னு சொல்லிட்டா”, என்றான்.
“ஏன் சக்தி என் மனைவி! நான் அப்படிதான் கூட்டிட்டு போவேன்னு உன்னால சொல்ல முடியாதா……. அவளுக்கு இந்த அரசியல் வேண்டாம்னு சொல்ல முடியாதா… என்னோட கார்த்திக்கு யாரை பார்த்தும் பயம் கிடையாது! எங்கப்பாவை பார்த்து கூட கிடையாது…… எனக்கு தெரியும்”, என்றாள்.
அவள் சொன்ன விதமே நீ இதை என் அப்பாவிடம் சொல்ல வேண்டும் என்பதாக தான் இருந்தது.
“என்னால முடியாது சக்தி!”, என்றான்…
“ஏன்? ஏன் முடியாது?”, என்று படுக்கையில் இருந்து எழ போக….
“எந்திரிக்காத”, என்று அவளின் தோள்களை பிடித்து படுக்க வைத்தான்.
அவள் மீண்டும் எழ முயற்சி செய்யவும்……
“நீ என்னை விட்டப்போவும் அவர் என்னை விடலை….. நான் எப்படி அவர் கிட்ட சொல்லுவேன்”, என்றான்.
“நான் உன்னை விட்டனா? எப்போ?”, என்றாள் புரியாமல் சக்தி……
“நான் ஜெயில்ல இருந்து வந்தப்போ!”, என்றான் கார்த்திக்……
அதை சொல்லும்போது அன்றைய நாட்களின் நினைவுக்கு அவன் போக……
அவன் கண்களுக்குள் கண்ணீர் வெப்பம்…. ஆண்கள் அழக் கூடாது என்ற அவனின் உறுதி கரைய…. அவன் கண்களில் நீர் திரையிட்டது……
சக்தி பதறிவிட்டாள்…..
ரத்தம் ஏறிக்கொண்டிருக்கிறது….. அவளை எழ விடாமல் அவளின் தோள்களை அழுத்தி கொண்டிருந்தான்…
அவனின் கைகளை பிடித்து இழுத்து தன் மேலயே சாய்த்துக் கொண்டாள். கார்த்திக்கிற்கு அந்த நொடி சக்தி தேவையாய் இருக்க…… அவன் சாய்ந்த பக்கம் ரத்தம் ஏற்றபடவில்லை மறுபுறம் தான் இருந்தது…..
அவளருகில் படுத்து அவளை அணைத்து தோள் வளைவில் முகத்தை புதைத்துக் கொண்டான்….
அதுவே சிறிய பெட்……. அவள் மேல் தான் முழுதாக சாயும்படி இருந்தது…..
என்ன மன பாரத்தை அவனுக்கு தான் கொடுத்தோம் என்று புரியாமலேயே அவனின் பாரத்தை தன் மீது தாங்கினாள் சக்தி….
அவனுடைய கண்ணீரின் ஈரத்தை சக்தியின் தோளின் முன் புறம் உணர்ந்தது…. தன்னை அறியாமல் ஏதோ பெரிய தப்பை செய்திருக்கிறோம் என்று சக்திக்கு புரிந்தது.
ஒரு கையால் அவனின் முகத்தை தன்னோடு சேர்த்து அழுத்திக் கொண்டாள்.
சிறிது நேரம் தான் அதற்குள் கட்டுக்குள் வந்திருந்தான், தான் அவள் மேல் இருக்கிறோம் என்று உடனே எழுந்து கொண்டான். ரத்தம் ஏறிக்கொண்டிருக்கிறதா என்று ஆராய்ந்து கொண்டிருந்தான்.
“என்ன தப்பு செஞ்சேன்”, என்றாள்..
“ஒன்னுமில்லை விடு! அது என்னோட முட்டாள் தனம் தான்!”, என்றான் அவளை சமாதானப்படுத்த…
“இப்போ நீ சொல்லலை…. இதையெல்லாம் பிடிங்கி எரிஞ்சிடுவேன்”, என்று அவள் ரத்தம் ஏறிக்கொண்டிருந்ததை பிய்த்து எறியப் போக….
“வேண்டாம்”, என்று கார்த்திக் அவளின் கையை பிடிக்க…..
“அப்போ சொல்லு!”, என்றாள்.
“ஜெயில்ல இருந்து உங்கப்பா தான் ஜாமீன்ல கூட்டிட்டு வந்தார். வந்ததுமே உனக்கு போன் பண்ணினேன்…..”,
“நீ வராத! என்னை பார்க்காதன்னு சொல்லிட்ட…….! எங்க போவேன் நான்…. எனக்கு ஏது வீடு…. உங்க வீட்ல இருந்தேன், அப்புறம் எங்க தாத்தா வீட்டுக்கு போயிட்டேன்…. எனக்குன்னு வீடு எங்க இருக்கு…”,
“நீ வராதன்னு சொல்லிட்ட! அது மட்டுமா? என் காலேஜ்ன்ற…… உன் வேலையை காட்டாதன்ற…… என்னை ஒதுக்கற……. அப்புறம் எப்படி உங்க வீட்ல உட்கார்ந்து இருக்க முடியும்…”,
“நான் கிளம்பறேன்னு உங்கப்பாகிட்ட சொல்லிட்டு வந்துட்டேன்…. அவர் நான் என் அம்மாகிட்ட போறேன்னு நினைச்சிகிட்ட்டார்…”,
“ஆனா என்னால ஜெயில்ல இருந்து வந்துட்டு என் தாத்தா வீட்டுக்கு போகமுடியலை…. அவர் சாதாரணமா ஏதாவது சொல்லிட்டா கூட என்னால தாங்க முடியாது….”,
“நான் வந்ததும் அம்மாவுக்கோ பிரபுவுக்கோ தெரியாது…..”,
“அப்புறம் எங்க போன?”, என்றாள் சக்தி பயத்தோடு….. ஏதோ பெரிதாக வரப் போகிறது என்ற உள்ளுணர்வு உந்த…
“நீ ஒரு தடவை கோபத்துல என்கிட்டே சொன்ன….. நான் நடுத்தெருவுல நிற்பேன்னு! அப்படிதான் நின்னேன்….. நடுத்தெருவுல தான் நின்னேன்….”, என்றான். சொல்லும்போது அவனின் குரலில் மிதமிஞ்சிய வலி.
சக்தி அவனையே திகைத்து பார்த்துக் கொண்டிருந்தாள்……
“ஒரு நைட் முழுசும் ஒரு பஸ் ஸ்டாப்ல போட்டிருந்த சேர்ல தான் உட்கார்ந்திருந்தேன்…. பசின்ற ஒன்னை அன்னைக்கு தான் ஃபீல் பண்ணினேன்..”,
“லைஃப்ல நிறைய கஷ்டத்தை பார்த்திருக்கேன்…… ஆனா பசின்ற ஒன்னை கடவுள் அதுவரைக்கும் எனக்கு காட்டலை…… அதை மட்டும் நீ ஏன் பார்க்காம இருக்கன்னு அதையும் எனக்கு காட்டினார்”,
“எங்க போவேன் சொல்லு! யார்கிட்ட கேட்பேன்….. இவ்ளோ பெரிய உடம்பை வெச்சிகிட்டு ஒரு டீக்கு கூட வக்கிலாம தான் உட்கார்ந்திருந்தேன்”,
“என்ன செய்வேன் சொல்லு! எங்க தங்குவேன்….. கூலி வேலைக்கா போக முடியும்… இல்லை யார்கிட்டயாவது சம்பளத்துக்கு போக முடியுமா…..”,
“என்னோட பேங்க் அக்கௌன்ட் ஹான்டில் பண்ண முடியாது….”,
“குடோவ்ன் சாவி எதுவும் என்கிட்ட கிடையாது, எல்லாம் மாரிகிட்ட கிட்ட இருக்கு….. அப்போதைக்கு எதையும் விக்க முடியாது…..”,
“என் மனைவி என்னை வரவேண்டாம்னு சொல்லிட்டா…”,
“நடுத்தெருவுல தான் நின்னேன்!”, என்றான்.
“ஜெயில்ல இருந்து வந்திருக்கேன்…… கையில பத்து பைசா காசு கிடையாது…. ஒரு டீக்கு கூட வழி கிடையாது….. நீ என்னை பார்க்க கூட ஒத்துக்கலையா…. எனக்கு மனசு மூளை எதுவுமே செயல்படலை…. ரொம்ப ஈசியா அந்த சிச்சுவேஷனை ஹான்டில் பண்ணியிருக்கலாம்னு இப்போ தோணுது! ஆனா அப்போ ஒன்னுமே ஓடலை….”,
“ராத்திரி எட்டு மணிக்கு அந்த பஸ் ஸ்டாப்ல உட்கார்ந்தவன், காலையில் எட்டு மணி வரைக்கும் அங்கயே உட்கார்ந்திருந்தேன்”,
“உலகத்துல நிஜமாவே கைல காசில்லாதவன் எல்லாம் பொணம் தான்…..”,
“என் மேல அத்தனை ஆயிரம் கோடி ஊழல்….. ஆனா அந்த நேரத்துல, அந்த இடத்துல ஒரு பைசா என்கிட்டே கிடையாது….. போறதுக்கு இடமும் கிடையாது”,
“உங்க வீட்டை விட்டு ரொம்ப தூரம் போகலை போல… எனக்கு தெரியாமையே அந்த ஏரியால இருக்குற பஸ் ஸ்டாப்ல உட்கார்ந்திருந்திருக்கேன்… யார் என்னை பார்த்தா பார்க்கலை எதுவுமே தெரியலை…..”,
“என்னோட அதிர்ஷ்டம் உன்னோட அப்பா அந்த பக்கம் வாக்கிங் வந்ததுதான்”,
“பார்த்தவர் தான்……. ஒன்னுமே கேட்கலை என்னை…… வீட்டுக்கு வான்னார்…. அங்க வரமாட்டேன்னேன்….”,
“பின்ன ஒன்னுமே கேட்கலை… அவரும் என் பக்கத்துல உட்கார்ந்துகிட்டு காரை கொண்டு வர சொன்னார்…. முதல்ல என்னை ஹோட்டல் தான் கூட்டிட்டு போனார்….”,
“எங்க ரெண்டு பேருக்கும் சேர்த்து ஆர்டர் பண்ணினார்….. தனியா ஆர்டர் பண்ணினா நான் சாப்பிடமாட்டேன்னு…… சொல்லு எனக்கந்த சாப்பாடு தொண்டையில இறங்குமா….. செத்தே போயிடலாம் போல இருந்தது…”,
“சொல்லு! முதல்லயே எங்கப்பாவுக்காக அவர் அவ்வளவு பண்ணியிருக்கார்! நான் அந்த மனுஷனை ஏமாத்தி இருக்கேன்….”,
“அவர் பொண்ணு வேற அவரை மீறி என்னை கல்யாணம் பண்ணியிருக்கு…. அப்போவும் என்னை ஜாமீன்ல எடுத்திருக்கார்”,
“என் முகத்தை பார்த்தே நான் சாப்பிடக் கூட இல்லைன்னு கண்டுபிடிச்சு சாப்பாடு வாங்கி குடுக்கறார், சொல்லு! எனக்கந்த சாப்பாடு இறங்குமா….???”,
“அந்த மனுஷரோட கனவுகளை என்னால கலைக்க முடியுமா…..????”,
“அவரே என்னை ஒரு வீட்டுக்கு கூட்டிட்டு போனார்……. மாரிக்கு தகவல் குடுத்து என்னை பார்த்துக்க சொன்னார்….. அவரோட ஏ டீ எம் கார்டை என்கிட்டே குடுத்து பின் நம்பரை அது மேல எழுதிக் கொடுத்தார்”,
“அதுவுமில்லாம ஒரு செக் புக் ஃபுல்லா எனக்கு கையெழுத்து போட்டுக் கொடுத்தார்…”,
“இதெல்லாம் நான் யூஸ் பண்ணாம விட்டுட்டா என்ன பண்றதுன்னு, ரெண்டு பெட்டி நிறைய பணத்தை வீட்ல கொண்டு வந்து வெச்சார்….”,
“நான் இதெல்லாம் வேண்டாம்னு சொன்னப்போ என்ன சொன்னார் தெரியுமா?”, என்று நிறுத்தினான்.
“என்ன?”, என்று சக்தி குரல் நடுங்க கேட்க…..
“நீ என் மாப்பிள்ளைன்றதுக்காக இதெல்லாம் செய்யலை…. உன்னை என் பையன் மாதிரி நினைச்சதால தான் உன்னை என் வீட்ல வெச்சிருந்தேன்னார்…..”,
“உயிரோட சாகறதை அன்னைக்கு தான் ஃபீல் பண்ணினேன்”, என்றான்.
சொன்னது என்னவோ கார்த்திக் தான்….. ஆனால் அந்த உணர்வை சக்தி அப்போது பூரணமாக அனுபவித்தாள்…… தன்னுடைய முட்டாள் தனத்தினால் மீண்டும் கார்த்திக்கை நன்றி என்னும் தளைக்குள் பூட்டி விட்டோம் என்று புரிந்தது.
இன்னும் என்னென்ன கஷ்டங்கள் அவனின் மனதிற்குள் பூட்டி வைத்திருக்கிறானோ என்றிருந்தது.
“அதான் நான் கொஞ்சம் ஸ்டான்ட் ஆனதுக்கு அப்புறமும் உன்னை தேடி வரலை…. வந்தா எல்லாத்தையும் விட்டுட்டு நீ வந்துடுவ…. அவரோட கனவுகளை நான் எப்படி கலைப்பேன் சொல்லு…..”, என்றான்
இப்படி சொல்லு! சொல்லு! என்றாள் சக்தி என்ன சொல்லுவாள்……
கார்த்திக்கை இந்த தளைகளில் இருந்து விடுவித்தே ஆகவேண்டும்….. அவனாக வரமாட்டான்… தன்னால் மட்டுமே அவனின் காயங்களுக்கு மருந்தாக முடியும்.. தன் சந்தோசம் மட்டுமே அவனை சந்தோஷப்படுத்தும் என்று புரிந்தவள்…….
“சொல்றதா, ம்! ஓகே!”, என்றவள்…… “என் கண்ணை துடை!”, என்றாள்….. அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
கண்ணை துடைத்தான்.
“இப்போ என் முகம் நல்லா இருக்கா….”,
“இருக்கு”, என்றான் எதற்கென்று புரியாமல்…
“அப்போ என்னை கிஸ் பண்ணு!”,
“ஆங்!”, என்று விழித்தான் கார்த்திக்….
“குடுடா! நீயா குடுக்க மாட்ட! நானாவது கேட்டு வாங்கிக்கறேன்!”, என்று கொஞ்ச…. அவள் முகம் நோக்கி குனிந்தான் கார்த்திக்….
அவன் முகம் அருகில் வரவும், “சும்மா என் வாய்க்கு வலிக்குமோ? உன் வாய்க்கு வலிக்குமோன்னு? குடுக்க கூடாது, புரிஞ்சுதா!”, என்றாள் உற்சாகமாக.
கார்த்திக் அவனின் உணர்வுபூர்வமான மனநிலையில் இருந்து சற்று உல்லாசமான மனநிலைக்கு மாறினான்.
“யோசிச்சுக்கோ? அப்புறம் என்னால முடியலைன்னு பேச்சு மாற கூடாது….!”, என்றான்.
“குடுக்க போறது ஒரு கிஸ்! அதுக்கு இவ்வளவு பெரிய பில்ட் அப்பா!”,
“உன்னை!”, என்று கார்த்திக் அவளின் இதழ்களை சற்று வன்மையாக முற்றுகையிட…. சளைக்காமல் ஈடு கொடுத்தாள்.
அவள் மூச்சுக்கு திணறுவாளோ என்று அவனாக தான் விடுவித்தான்…….
விடுவித்தவன், அவள் முகம் பார்க்க…. “நாட் பேட்! பட் இன்னும் பெட்டரா இருந்திருக்கலாம்!”, என்று சொல்லவும்……
“அடிப்பாவி! இதை விட பெட்டரா.. மூச்சு முட்டும்!”,
“என்னவோ பத்து பொண்ணுங்களுக்கு குடுத்து எக்ஸ்பீரியன்ஸ் இருக்குற மாதிரி பேசற….. ஒன்னும் முட்டாது…… நீ மறுபடியும் ட்ரை பண்ணு….”,என்றாள் அலட்சியம் போல…..
வாய் விட்டு சிரித்த கார்த்திக்…… “மறுபடியும் வேணும்னா கேளு! அதுக்காக….. நாட் பேட்! இன்னும் பெட்டரான்னு புளுகுவியா……???????”,
“கண்டுபிடிச்சிட்டியா!!”, என்று அவளும் சிரித்தாள். கார்த்திக்கின் மனநிலையை முற்றிலும் அவளின் கட்டுக்குள் கொண்டு வந்திருந்தாள்.
“ஹாஸ்பிடல்ல இருக்க… ஞாபகம் இருக்கட்டும்….”, என்றான் கார்த்திக்.
“அது ஞாபகம் இருக்கறதால தான்….. இப்போதைக்கு இது மட்டும் தான முடியும்ன்னு தெரியும்”, என்று சோகம் போல கூறியவள்….. “உன்னால முடியுமா? முடியாதா?”, என்று சுணங்க…
மீண்டும் ஒரு இதழ் முற்றுகை……. முற்று பெறாமல் நீண்டது…
கார்த்திக்கின் கஷ்டங்கள் எல்லாம் முன் ஜென்ம ஞாபகங்களோ என்ற உணர்வை அவனுக்கு கொடுக்க முயன்று கொண்டிருந்தாள் சக்தி…… .