அத்தியாயம் நாற்பத்தி ஏழு :

கார்த்திக் சக்தியின் அணைப்பு வெகு நேரம் நீடித்தது…. கார்த்திக் அவனாக, “எவ்வளவு நேரம் நிற்ப, கால் வலிக்க போகுது”, என்று சொல்லவும்……

“அப்போ தூக்கு!”, என்றாள்.

“ம்! எங்க? எங்க தூக்கிட்டு போறது…..?”,

“நீ சொன்னதுக்கு அப்புறம் தான் எனக்கு கால் வலிக்கிறது தெரியுது…… அங்க பெட்க்கு தூக்கிட்டு போ!”, என்றாள்.

கார்த்திக்கின் முகம் முழுக்க புன்னகை….. பின்னே எட்டடி தூரத்தில் இருந்த கட்டிலுக்கு நடக்க முடியவில்லையா……

அதை சொல்லும்போதும் அணைப்பில் தான் இருந்தாள்…. “நீ தள்ளி நின்னா தானே தூக்க முடியும்…..”,

“ஒஹ்! தள்ளி நிக்கனுமா….”, என்று தலை தூக்கி முகம் பார்த்து கேட்க….

அவளையே இமைக்காமல் பார்த்தான்…… “என்ன தான் என்கிட்டே வெச்சிருக்க நீ….. நானாவது பார்த்த நாள்ல இருந்து லவ் பண்றேன்…. நீ????”, என்று கேட்டவனை பார்த்து சிரித்தாள்…

“அது தான் ஒவ்வொரு நாள் ராத்திரியும் நான் யோசிப்பேன்….”,

“அது ஏன் ராத்திரி மட்டும்…”,

“பகல் முழுசும் நீ கொஞ்சம் கூட ஞாபகம் வராத அளவுக்கு வேலையை இழுத்து விட்டுக்குவேன்”, என்றாள்.

அவனின் அணைப்பை இறுக்கியவன்…. அந்த பதிலை சொன்ன அவளின் இதழ்களில் தன் முதல் முத்திரையை பட்டும் படாமலும் மென்மையாக பதித்தான்.

இருவர் உடலிலுமே சிலிர்ப்பு, சக்தியின் உடல் கொஞ்சம் சூடானது.

பின்பு அவளை அப்படியே தூக்கினான்….. அது கீழே இருந்த கெஸ்ட் ரூம்…… “உன் ரூமுக்கு தூக்கிட்டா போகட்டுமா?”, என்றான்.

“ஹால்ல யாரவது இருந்தா?”, என்றாள்…… சொல்லும்போதே இறக்கி விட்டுவிடுவானோ என்பதாக தான் அந்த வார்த்தைகள் தயங்கி தயங்கி வந்தன…

“யாரு இருப்பா? முனியம்மாக்கா தான் இருக்கும்…… பார்த்தா பார்க்கட்டுமே”, என்று அவளை தூக்கி ஹாலுக்கு வந்து மாடியேறினான்…..

அவர்களின் நேரம் யாருமில்லை….. அவளின் ரூம் தான் பூட்டியிருந்ததே…. அவளை இறக்கி விட்டு சாவியை எடுத்து திறக்க நினைக்க…..

“இறக்கி விடாத! சாவியை குடு! நான் திறக்கிறேன்!”, என்றாள் சக்தி…

“தெய்வாம்மா குடுத்ததை பேன்ட் பாக்கெட்ல போட்டேன்! நீ இறங்கினா தான் எடுக்க முடியும்!”,

“நான் எடுக்கறேன்! எந்த சைட் பாக்கெட்?”, என்று கேட்டு அவள் கையை விட போக…. கார்த்திக் தான் நெளிந்தான்…..

“ரெண்டு மூணு செகண்ட் தான் இறங்கிக்கோ….. நான் உடனே எடுத்துடறேன் அப்புறம் தூக்கிக்கறேன்”, என்றான் குழந்தைக்கு சொல்வது போல.

“அதெல்லாம் முடியாது…… நீ எனக்கு டிரஸ் சேஞ் பண்ண அச்சிஸ்ட் பண்ண கேட்ப….. ஆனா நான் உன் பாக்கெட்ல இருந்து சாவி எடுக்க கூடாதா…… ஏன் உனக்கு என்கூட குடும்பம் நடத்தற ஐடியாவே இல்லையா”, என்று அவன் கேட்டதை திருப்பி கேட்டாள்.    

“அப்பா! உன்கிட்ட வாய் குடுக்க முடியாது!”, என்று கார்த்திக் சலிக்க……

“எப்போ நீ குடுத்த? நீ குடுக்கவேயில்லையே….. வெச்ச உடனே எடுத்துகிட்ட”, என்றாள் கண்சிமிட்டி..

“ஒஹ் மை காட்! சக்தி…….. நீ இப்படில்லாம் பேசுவியா?”, என்றான்.

“இன்னுமா நீ என்னை நல்ல பொண்ணுன்னு நம்பற…… இப்ப தானே உன் மண்டையை உடைச்சேன்”, என்றாள்.  பழைய குறும்புத்தனம் சக்தியிடம் நிமிடங்களில் திரும்பியிருந்தது.

“மண்டையை மட்டுமா உடைச்ச, காஃபியை கூட தான் கொட்டின”,

“அதுவா? அந்த காபி நல்லாவேயில்லை…… அதான் எங்க கொட்டறதுன்னு தெரியாம உன் முகத்துல கொட்டிட்டேன்”, என்றாள் இமை கொட்டி…

சிரித்தவன்…… “அம்மா தாயே! முடியலை! நீ என் பாக்கெட்லயாவது கைவிட்டுக்கோ இல்லை எங்கயாவது விட்டுக்கோ….. என்ன வேணா பண்ணிக்கோ”, என்றான்.

“என்ன நான் பண்றதா? அப்போ நீ ஒன்னும் பண்ணமாட்டியா?”,

“முதல்ல கதவை திற….. உள்ள போவோம்…… யாராவது வர போறாங்க”, என்றான் பொங்கிய சிரிப்புடன்…..

பிறகு சக்தி அவளே தான் கைவிட்டு சாவியை எடுத்தாள்….. அவளே தான் திறந்தாள்…. கார்த்திக் அவளை கீழே இறக்கவேயில்லை.

நேரே சென்று அவளுடைய படுக்கையில் தான் இறக்கி விட்டான்…… படுக்கை முழுவதும் அவளின் புடவைகள் நகைகள் இறைந்து கிடந்தன.

அதுவே சொன்னது காலையில் அவளுக்கும் தெய்வானைக்கும் மிகபெரிய வாக்கு வாதம் நடந்திருக்க வேண்டும் என்று…….

“காலையில ரொம்ப கலாட்டா பண்ணியிருப்ப போல நீ”, என்று கார்த்திக் கடிய…….

சிரித்தாள்…..

காலையில் தான் பார்த்த சக்தியா என்பது போல அவள் முகம் மாறியிருந்தது….. முகத்தின் சோர்வு……. கண்ணிற்கு கீழே ஆரம்பித்த கருவளையம்….. எல்லாம் இப்போது அவளை அழகாக காட்டியது…. முகத்தில் அப்படி ஒரு சோர்வோடு கலந்த பொலிவு……

அவளின் கண்கள் சோர்விலும் ஜொலித்தன………   

கார்த்திக்கே அவளின் முகத்திற்கு ஒளியை கொடுக்கும் மந்திர விளக்கு….

“இந்த டிரஸ் முதல்ல மாத்துரா”, என்றான்.

“கதவை லாக் பண்ணு”, என்று சக்தி சொல்லவும்…. கார்த்திக் கதவின் அருகே செல்லவும்…… தெய்வானை வரவும் சரியாக இருந்தது.

கார்த்திக் சக்தியை பார்க்க இருவர் முகத்திலும் ரகசிய புன்னகை…. “வட போச்சே”, என்பது மாதிரி சக்தி உதடசைக்க…… கண்களாலேயே சக்தியை அடக்கினான். 

மகளுக்கு உடம்பு சரியில்லை என்ற பதட்டத்தோடு வந்தவர்….. சக்தியின் முக பொலிவை பார்த்து வியந்தார்…. அது கார்த்திக்கினால் வந்த மாற்றம் என்று கூடவா அவருக்கு தெரியாது…

“ஐயோ! என் பெண்ணே!”, என்று தான் பார்த்தார்….

சக்திக்கு இருந்த மனநிலையில் அதை கவனிக்கவில்லை… கார்த்திக் கவனித்தான்..

“ஏம்மா அப்படி பார்க்கறீங்க”, என்று கேட்டும் விட்டான்…..

“உன்னை பார்த்தா மட்டும் என் பொண்ணுக்கு சந்தோசம் பொங்குது”, என்றார். உடனேயே “என்ன தலையில உனக்கு பேண்டஜ்”, என்றார்.

வீரமணி விஷேஷ வீடு என்பதால் அவரிடம் சொல்லியிருக்கவில்லை….  சக்தியை பற்றியே இப்போது காரில் வரும்போதுதான் சொன்னார். டிரைவர் இருந்ததால் சக்தி கார்த்திக்கை தாக்கியது பற்றி சொல்லவில்லை. 

கார்த்திக் அவரின் என்ன பேண்டேஜ் என்ற கேள்வியை கவனிக்காமல், “ஆமா! இன்னும் பொண்ணு உங்களையே பார்த்துட்டு  உட்கார்ந்திருக்குமாக்கும்”, என்று நினைத்தான், ஆனால் வெளியே சொல்லவில்லை…

கார்த்திக்கின் முகத்தை பார்த்தவர்….. “என்ன இன்னும் எங்களையே பார்த்துட்டு இருப்பாளான்னு நக்கலா நினைச்சியா?”, என்று அவனை சரியாக கணித்தார்.  

கார்த்திக் புன்னகைத்தான்……. அந்த புன்னகையே அப்படிதான் என்று சொல்ல….     

“அப்படி தானே நினைச்ச?”, என்றார் மீண்டும்.

அதற்கும் புன்னகை….    

அவனின் புன்னகை தெய்வானைக்கும் தொற்றியது……..

“மா! என்னம்மா?”, என்றாள் சக்தி….

“ஒன்னுமில்லை”, என்றவர்…… “இப்போ எப்படி இருக்கு…..?”,

“ஏன்? எனக்கென்ன?”, என்றாள்.

“அம்மாடி!”, என்று வியந்தவர்…….. “எனக்கு முடியலை….. நீ மயக்கம் போட்டு விழலை… உனக்கு ட்ரிப்ஸ் ஏத்தலை… எதுவும் நடக்கலை”, என்றார்.

இங்கே ட்ரீட்மென்ட் வந்திருந்த அந்த லேடி டாக்டர்… பிரபுவிடம் விஷயத்தை சொல்லியிருக்க….. அங்கே பந்தி தான் நடந்துகொண்டிருக்கவும்……. சிவாவிடம், “ஒரு அரை மணிநேரத்தில் வந்துடறேன்”, என்று சொல்லி இங்கே வந்தான். 

வீரமணி தெய்வானைக்கு குரல் கொடுக்க….. எட்டி பார்த்தவர் பிரபுவை பார்த்ததும்…. “டாக்டர் வந்திருக்கார்!”, என்று சொன்னார்.

“நான் போறேன்! இவளை டிரஸ் மாத்தி கூட்டுட்டு வாங்கம்மா”, என்றான்…

“எப்படி சக்தியின் உடையில் இவ்வளவு ரத்தம்?”, என்று கவனித்தவர்… “உன் தலையில என்ன இவ்வளவு பெரிய பேண்டேஜ்”, என்றார் மீண்டும் கார்த்திக்கிடம்…..

“ஒன்னுமில்லைமா சின்ன காயம்….. நீங்க அவளை டிரஸ் மாத்தி கூட்டிட்டு வாங்க….. பிரபு வெயிட் பண்றான்”, என்று பேச்சை மாற்றி சொல்லி போனான்.

பிரபு அவனை பார்த்தும், “எப்படிடா காயம் ஆச்சு? தையல் போட்டங்கலாமே! எப்படி ஆச்சு?”, என்றான்.

“இடிச்சிகிட்டேன்….!”,

“நிறைய ரத்தம் போயிருக்கும்னு சொன்னாங்க…. அப்படி எங்க இடிச்சிக்கிட்ட….”,

“விடுடா! ஒன்னுமில்லை…..!”,

“டீ டீ ஒன்னு போடனும்….. இங்க வந்த டாக்டர் போடலையாம் சொன்னாங்க….. நான் சிஸ்டரை எடுத்துட்டு வர சொல்லியிருக்கேன்…. போட்டுடலாம்….”,

“மேடம்க்கு என்ன ஆச்சு….. எப்படி மயங்கினாங்க…..?”,

“உட்கார்ந்துட்டு இருந்தா அப்படியே மயங்கிட்டா….”,

அதற்குள் சக்தி வந்தவள்…

“வாங்க பிரபுண்ணா!”, என்றாள்.

எப்போதும், “பிரபு”, என்றோ……. “டாக்டர்”, என்றோ பெயர் சொல்லி மரியாதை பன்மையில் கூப்பிடுவாள்….. ஆனால் அண்ணா என்றெல்லாம் சொல்லியது இல்லை……

பிரபு ஆச்சர்யமாக கார்த்திக்கை பார்க்க அவன் தோளை குலுக்கினான்.

அவனின் பார்வை எல்லாம் சக்தியின் மேல் அவளின் கழுத்தில் இருந்த தாலிக்கயிறு…. அது வெளியே தெரியாமல் இருக்க தான் அந்த ப்லோவ்ஸ் அணிந்திருந்தாள் என்று புரிந்தது……

அவன் கட்டிய அதே கயிறாக தான் இருக்க வேண்டும்……. மாற்றவேயில்லை போல… மஞ்சள் போட்டிருந்தாலும் மிகவும் நைந்து போயிருந்தது கயிறு.  

அவனை மேலும் யோசிக்க விடாமல் பிரபுவின் குரல் கலைத்தது…..  “என்ன ஸ்விட்ச்டா போட்ட? மேடம் முகத்துல பல்பு எரியுது”, என்றான் கார்த்திக்கிற்கு மட்டும் கேட்குமாறு…..

ஒரு புன்னகை மட்டுமே கார்த்திக்கிடமிருந்து…….

“அதானே! நீயாவது பேசறதாவது!”, என்று பிரபு சொல்லும்போது அந்த ட்ரிப்ஸ் போட்ட சிஸ்டரே மீண்டும் ப்ளட் டெஸ்ட் ரிப்போர்ட்டையும்,  டீ டீ இன்ஜெக்ஷனையும் எடுத்து வந்திருந்தார்.

ப்ளட் டெஸ்ட் ரிபோர்டை பார்த்தவன்…… “ரொம்ப அனீமிக்கா இருக்காங்க….. ஹிமோக்லோபின் கன்டென்ட் கம்மியா இருக்கு….  ப்ளட் ஏத்தி பார்க்கலாம்….. நல்ல சத்தான உணவா எடுக்கனும்…… ஒரு கம்ப்ளீட் செக் அப் பண்ணிடலாம்”,

“ஒன்னும் பயமில்லையே டாக்டர்!”, என்று வீரமணியும் தெய்வானையும் கேட்டனர்.

“இனிமே தேறிடுவாங்க”, என்றான் கார்த்திக்கை பார்த்தவாறு……

“அவன் தலையில இருக்குற கட்டை பிரிச்சு காயம் எப்படி இருக்குன்னு பாருங்க பிரபுண்ணா”, என்றாள்.

“தேவையில்லை…. அந்த டாக்டர் நல்லா சுச்சர் பண்ணுவாங்க…… ஸோ அதை இன்னைக்கு ஓபன் பண்ண வேண்டாம், நாளைக்கு பார்க்கலாம்”, என்றான்.

பிறகு சிஸ்டரிடம், “இந்த டீ டீ அவருக்கு போடுங்க”, என்று கார்த்திக்கை காட்ட….

“நீங்களே போடுங்க டாக்டர்”, என்றது அந்த சிஸ்டர் மிகவும் மெதுவான குரலில்…

“ஏன்மா?”, என்று பிரபு கேட்கவும்….

“டாக்டர் சுச்சர் போட்டதுக்கே அப்படி முறைச்சாங்க மினிஸ்டர் மேடம்…. இன்னும் நான் ஊசி போட்டா…… அப்புறம் என் மண்டையை உடைச்சிட்டா”, என்றாள்.

அப்போதுதான் பிரபுவிற்கு ஸ்ட்ரைக் ஆக…… மெதுவாக கார்த்திக்கின் அருகில் போய்….. “இது சக்தி பண்ணின காயமா?”, என்றான்.

“ஆம்”, என்பது போல கார்த்திக் கண்களை மூடி திறக்க.. பிரபுவிற்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை….

“குடுங்க!”, என்று டீ டீ ஊசியை வாங்கி அவனே கார்த்திக்கிற்கு போட்டான். பிறகு அவன் கிளம்ப…..

வாசல் வரை வந்த கார்த்திக், “சக்தியை எப்போ ஹாஸ்பிடல் கூட்டிட்டு வரட்டும்!”, என்றான்.

“ஈவினிங் சுமித்ராவை வீட்டுக்கு கூட்டிட்டு வந்ததும் சொல்றேன்… நீ இப்படியே மேடம்ம கூட்டிட்டு வந்துடு….. நான் அப்படியே வந்துடறேன்”, என்றான்.

“காயம் ஆழம்ன்னு தான் அந்த டாக்டர் சொன்னாங்க, வலி இருக்கா? பெயின் கில்லர் போட்டுக்கிறியா?”, என்றான் அக்கறையாக பிரபு.

“குடு! வலி இருக்கு!”, என்றான் கார்த்திக்…..

அந்த சிஸ்டர் கொண்டு வந்திருந்த டாக்டர் கிட்டில் இருக்கா என்று பார்க்க….. இருந்தது…..

அதை கொடுத்தவன்…… “மண்டை உடைக்கிற அளவுக்கு என்ன சொன்ன……?”,

“பிரிஞ்சிடலாம்னு சொன்னேன்!”, என்று கார்த்திக் உண்மையை ஒப்புக்கொள்ள……

“உயிரோட விட்டாங்களேன்னு சந்தோஷப்படு! உடைச்சதுல தப்பே இல்லை……”, என்று அவனின் பங்கிற்கு பிரபுவும் திட்டிவிட்டு போனான்.

அவன் உள்ளே வரவுமே, “சாப்பிடலாம் கார்த்திக்! பசிக்குது!”, என்றாள் சக்தி…….

அவளின் வலது கையில் தான் வென்ஃப்ளான் இருக்க… தெய்வானை சாதத்தை பிசைந்து ஊட்ட….. கார்த்திக்கிடம் பேசிக்கொண்டே சக்தி அதை வாங்கிக்கொண்டாள்.

இதற்கு கார்த்திக் அதிகம் பேசவில்லை……. அவள் பேசுவதை கேட்டுக் கொண்டு உம் கொட்டிக்கொண்டு தான் இருந்தான்…..

அவனிடம் பேசிக்கொண்டே எப்போதும் உண்பதை விட அதிகமாக உண்டாள்… அப்போதும் போதும் என்று சொல்லவில்லை…..

தெய்வானை இன்னும் சாதம் பிசையவா வேண்டாமா என்று யோசிக்க….. “அம்மா!”, என்று அவள் சாதம் வாங்க வாயை திறக்க…… “இரு சக்தி! ஒரு நிமிஷம்!”, என்று தெய்வானை மறுபடியும் சாதத்தை போட்டு பிசைய போக…..

அவள் சாதம் உண்பதிலும் ஒரு கண் வைத்திருந்த கார்த்திக், “போதும்மா! வாமிட் பண்ணிட போறா!”, என்று அவனாக தடுத்து நிறுத்தினான். 

“இல்ல! இன்னும் பசிக்கிற மாதிரி இருக்கு!”, என்று சக்தி சொன்ன போதும்….

“போதும் சக்தி! கொஞ்ச நேரம் கழிச்சு கூட சாப்பிடுவியாம்!”, என்றான். 

இதையெல்லாம் மௌனமாக வீரமணி கவனித்துக் கொண்டு தான் இருந்தார். சிறிது நாட்களாக சக்தி உணவு உண்ணும் அளவை கண்டு இருப்பவர் தானே அவர்.

இரண்டு இட்லி என்றால் இரண்டு இட்லி மட்டுமே சாப்பிடுவாள்…….. உணவு எவ்வளவு ருசியாக இருந்தாலும் ஒரு பருக்கை மேலே இறங்காது…… வீரமணி சொன்னாலும், தெய்வானை கெஞ்சினாலும், ஒரு வாய் கூட அதிகமாக போகாது.

சாப்பிட்டவுடன், “கொஞ்ச நேரம் தூங்கு சக்தி!”, என்று தெய்வானை சொல்ல….

“எனக்கு தூக்கம் வரலைம்மா!”, என்றாள்.

“எனக்கு தூக்கம் வர்ற மாதிரி இருக்கும்மா”, என்று வேண்டுமென்றே கார்த்திக் சக்தியின் பொருட்டு சொல்ல….

“வா! தூங்குவியாம்!”, என்று கார்த்திக்கை அழைத்து போனாள்.

“தூங்கு!”, அவளின் என்று படுக்கையை காட்டவும்…..

“பகல்ல எனக்கு பெட்ல படுத்தா தூக்கம் வராது…… உட்கார்ந்து தானே தூங்குவேன்! உனக்கு தெரியும்தானே! நீ படுத்துக்கோ!”, என்றவன்…. ஒரு சோஃபாவை அருகிழுத்து அதில் உட்கார்ந்து மடியில் ஒரு தலையணை வைத்து காலை படுக்கை மேல் போட்டு கண்மூடிக்கொண்டான்.

அதன் பிறகே சக்தி படுக்கையில் படுத்தாள்….. இரண்டு நிமிடம் போல அந்த புறம் இந்த புறம் புரண்டவள் உறக்கத்தில் ஆழ்ந்து விட்டாள்.

அவள் உறங்கிவிட்டாள் என்று தெரிந்த கார்த்திக் ஏ சீ ஆன் செய்து….. கதவை மூடிக்கொண்டு வெளியே வந்தான்.

அவன் வரும்போது வீரமணியின் குரல் தெய்வானையிடம் பேசுவது கேட்க…. தயங்கி தயங்கி வந்தான்.

“எப்படி கண்ணசைவில எல்லார் கிட்டயும் வேலை வாங்குறவ.. சிறப்பா அவ அமைச்சகதுல செயல் பட்டிருக்கான்னு பெயர் வாங்கியிருக்கா…. யூத் ஐகான்னு தேர்ந்தெடுத்து இருக்காங்க! ஆனா குழந்தை மாதிரி கலாட்டா பண்றா”, என்றார்.  

கார்த்திக் தயங்குவதை பார்த்த தெய்வானை…. “வா கார்த்திக்! உட்காரு!”, என்றார்.

“கார்த்திக்கிட்ட மட்டும் தான் அப்படி நடந்துக்குவா…?”,

கார்த்திக்கும் வீரமணியிடம்…… “இப்போ ரொம்ப இமோஷனலா டிஸ்டர்ப்டா இருக்கா…. அதான் இப்படி….. கொஞ்ச நேரம் தான் சரியாயிடுவா….”, என்றான்.

“கொஞ்ச நேரத்துல சரியாயிடுவா? அப்புறம் சேர்ந்து இருக்கிறதா? வேண்டாமா? இந்த குழப்பமெல்லாம் வரும்…. என்ன பண்ணலாம் கார்த்திக்… மேரேஜ் அன்னௌன்ஸ் பண்ணி……. ஒரு ரிசப்ஷன் வச்சிடலாம்……. என்ன சொல்ற”, என்றார் வீரமணி….

“அவளோட அரசியல் வாழ்க்கை… என்ன முடிவெடுப்பான்னு சொல்ல முடியாது ஐயா!”, என்றான்.       

“அதனால என்ன கார்த்திக்? குற்றம் என்ன நிரூபணமா ஆகிடுச்சு… இதுக்கு மேல பிரச்சனை இருக்குறவன் எல்லாம் அமைச்சராவே இருக்கான்…… நீ சக்தியோட கணவன் தானே!”, 

“கேஸ் முடியறதுக்குள்ள இந்த ஆட்சி காலமே முடிஞ்சிடும்! அப்புறம் நம்ம கட்சி வருதா? வேற கட்சி வருதா? அப்படியே வந்தாலும் சக்திக்கு அமைச்சர் பதவி கிடைக்குமா சொல்ல முடியாது……. அரசியலை இதோட சமந்த படுத்த வேண்டாம்”,    என்றார்.

கார்த்திக் அவரிடம் மறுத்து பேசவில்லை…….. அவரிடம் மறுத்து பேச அவனால் முடியாது.

ஆனால் சக்தி இதற்கு ஒப்புக்கொள்ள மாட்டாள் என்று தெரியும்…. கார்த்திக்குடன் திருமண அறிவிப்பை வெளியிட்டு விட்டால் பிறகு கண்டிப்பாக அமைச்சர் பதவியை தொடர மாட்டாள்.

குற்றம் சாட்டப்பட்ட ஒருவனை கணவன் என்று சொல்லிக்கொண்டு அவளால் அமைச்சர் பதவியில் தொடர முடியாது…. சக்தியை அவனை விட அறிந்தவர் யார்?

வீரமணி இந்த மாதிரி முடிவெடுத்தால், மீண்டும் ஒரு பிரிவு அவர்களுக்குள் நிச்சயம்.

அவளால் கார்த்திக்கிற்கும், பதவிக்கும் நடுவில் போராட முடியாது……. 

அதை விட நிச்சயம் அவள் அதை தாங்க மாட்டாள்???????

அவன் யோசிக்கும் போதே அவனின் தொலைபேசி அடித்தது…… “கார்த்திக்! எங்க இருக்க? மறுபடியும் என்னை விட்டுட்டு போயிட்டியா?”, என்று சோர்வோடு தூக்க கலக்கத்தில் சக்தியின் குரல் ஒலிக்க…

“இங்க தான் இருக்கேன்….!”,

“இல்லை நான் வராதன்னு சொன்னேன்னு நீ வரவேயில்லை!”,

“இல்லைடா இங்க தான் இருக்கேன்!”,

“இல்லை! நீ போயிட்ட! பொய் சொல்ற!…..”, என்று அவள் சொல்லும்போதே அவளின் ரூம் கதவை திறந்திருந்தான்.

“நீ இங்க தான் இருக்கியா? சரி!”, என்று சொல்லி மீண்டும் உறங்க ஆரம்பித்தாள்.

சக்தி கார்த்திக்கை தேடியதும்…… அவன் விரைந்து ஓடியதும் பார்த்த வீரமணியும் தெய்வானையும் எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று அவர்களின் எண்ணத்தை ஒட்டி யோசித்தனர்.    

வீரமணி சக்தியின் அரசியல் வாழ்க்கையை நினைக்க…..

தெய்வானை சக்தியின் குடும்ப வாழ்க்கையை பற்றி நினைக்க…….

கார்த்திக் செய்வதறியாது திகைத்து சக்தியையே பார்த்து அமர்ந்திருந்தான்.  

இந்த வாழ்க்கை இதன் பயணங்கள்                                                                                                                             என்னை கொண்டு செல்லும் இந்த பாதை                                                                                                                                        என்னை வீழ்த்தி விடுமோ…….                                                                                                                        

நான் ஜெயிக்கா விட்டாலும்……                                                                                                                          நான் தோற்க மாட்டேன் ஆனால்                                                                                                                        இவள் தோற்று விடுவாள்….!!!!!  

என்னை பிரிந்தாலும் இவள் தோற்று விடுவாள்                                                                           நான் தோற்றாலும் இவள் தோற்று விடுவாள்!!!

இவள் என் சக்தி……. என்னிள் பாதியல்ல!                                                                                                                                                                                                                                                                          நானே அவள் தான் அவளே நான் தான்                                                                                                                                                இவள் வீழவே கூடாது!!!!!!!!!