Advertisement

  அத்தியாயம் முப்பத்தி நான்கு :

வானகமே, இளவெயிலே, மரச்செறிவே, நீங்களெல்லாம்                                                                     கானலினிரோ?- வெறுங் காட்சிப் பிழைதானோ?                                                                                         போனதெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே போனதால்                                                         நானுமோர் கனவோ? – இந்த ஞாலமும் பொய்தானோ? 

                       ( பாரதி )

வேகமாக வேலைகள் நடந்தன….. ஆம், அது பிரபு வைஷ்ணவியின் திருமண வேலைகள்….

எவ்வளவோ பேசிப்பார்த்தும் சக்தியால் கார்த்திக்கை நிச்சயத்திற்கு கூட சம்மதிக்க வைக்க முடியவில்லை.

சக்திக்கு அதில் மிகுந்த மனவருத்தம், இவ்வளவு பேசியும் கார்த்திக் அவன் நிலையிலேயே நிற்கிறானே என்று.

என்ன செய்ய முடியும் அவளால், ஒன்றும் செய்ய முடியவில்லை. 

கார்த்திக்கிடம் சம்மதம் பெற முயன்று, முடியாமல் பிரபுவிடம் வாக்கு கொடுத்தாள்…… “எங்க கல்யாணம் எப்படியும் நடக்கும் பிரபு, அதை விடுங்க, உங்க கல்யாண ஏற்பாட்டை பாருங்க….”, என்றாள்.

அவள் சொன்ன விதம் பிரபிவிற்கே சற்று கஷ்டமாக இருக்க….. “அவன் பிடிவாதமா என் பிடிவாதமான்னு ஒரு கை பார்த்துடுவேன், ஆனா பாதிக்கப்படப்போறது நீங்களும் வைஷ்ணவியும் தான்……. உங்களுக்காக விட்டு கொடுக்கறேன்”, என்றான்.

அதன் பிறகு திருமண வேலைகள் ஜரூராக நடந்தன….  

கார்த்திக் என்னவோ ரொம்பவுமே பிசியாக இருந்தான்…. தங்கையின் திருமணம் என்பதாலா… இல்லை குவாரி வேலைகளா……. இல்லை மறுபடியும் படத் தயாரிப்பு என்று கிளம்பி விட்டானா எதுவும் தெரியவில்லை.  

சக்தி அவனிடம் போனில் தான் பேசினாள்….. கண்ணால் பார்ப்பதே அரிதாக இருந்தது…. “எனக்கு உன்னை பார்க்கனும் போல இருக்கு கார்த்திக்”, என்று அவள் சொன்னாள் அவளை கல்லூரியில் வந்து சந்திப்பான் இல்லையென்றால் அதுவுமில்லை….

“போ! நீ ஒன்னும் என்னை பார்க்க வராத போ!”, என்று சக்தி கோபப்பட்டால் தான்  வருவான்…. அன்றும் அப்படி தான் வந்திருந்தான்.

“என்ன கார்த்திக் அவ்வளவு பிசி நீ?”,

“நீ கூட தான் பிசி”,

“நான் பிசினா ஹாஸ்பிடல் நல்லா ரன் ஆகனும், நிறைய இன்வெஸ்ட் பண்ணியிருக்கேன்……. சீக்கிரம் மெடிக்கல் காலேஜ் அப்ரூவல் வாங்கனும்னு…… அதுக்கு வொர்க் பண்ணிட்டு இருக்கேன், அதனால பிசி……. நீயேன் பிசி……”,

எப்பொழுதும் போல் புன்னகை மட்டுமே பதில்……. அதில் ஒரு உற்சாகமில்லை….

“என்ன கார்த்திக் ஏதாவது பிரச்சனையா? ரொம்பவும் நீ டல்லா இருக்குற மாதிரி ஃபீல் பண்றேன்”, 

“ஒண்ணுமில்லை நான் எப்பவும் போல் தான் இருக்கேன்”,

“என்னவோ போ! எனக்கு அப்படிதான் தோணுது! விடு, கழுத்து வலி எப்படி இருக்கு?”,

“இப்போ இல்லை! ஆனா திடீர்னு வரும்”, என்றான் ஒரு கசந்த முறுவலோடு…..

“ஒன்னும் பிரச்சனையில்லையே”,

“no ma, i am sure for it dont worry”, இது உதடுகள் மட்டுமே உச்சரிக்கும் வார்த்தை.

“நான் திரும்ப திரும்ப கேட்க்கறேன்னு தப்பா எடுக்க மாட்டியே”, என்றாள்.

“என்னடா? சொல்லு!”,

“எங்கேஜ்மென்ட் மட்டுமாவது போவோமே…… அம்மா என்னை விட சின்ன பொண்ணுங்களுக்கு எல்லாம் கல்யாணம் ஆகுதுன்னு கவலை படறாங்க..”,

“எங்க போனாலும் எல்லோரும் பொண்ணுக்கு எப்போ கல்யாணம்னு கேட்கறாங்கலாம்…. அட்லீஸ்ட் எங்கேஜ்மென்ட்டாவது பண்ணிக்கலாமே….. அப்பா எனக்கு சீட் கிடைக்கறதை எதிர்பார்த்துட்டு இருக்கறதால…… அவர் இதை பத்தியெல்லாம் பேசலை…….. ஆனா அம்மா ரொம்ப கவலைப்படறாங்க…. உன்கிட்ட பேசட்டுமான்னு கேட்டாங்க, நான் தான் வேண்டாம் சொல்லிட்டேன்”, என்றாள்.

திரும்ப திரும்ப மறுப்பது கார்திக்கிற்கே ஒரு மாதிரி இருந்தது.  ஆனால் வேறு வழியில்லை அவனிடம்.

“சொன்னா புரிஞ்சிக்கோ சக்தி…… என்னோட எல்லா கடமைகளையும் முடிச்சிட்டு நான் உன்கிட்ட வரணும்ன்றது தான் என் விருப்பம்…. நீயும் உங்கப்பா அம்மாவுக்கு ஒரே பொண்ணு. எதையும் அவசரமா ஏதாவது கட்டாயத்துக்கு ஏன் செய்யனும்? கொஞ்சம் டைம் குடு…. உங்க அம்மாகிட்ட பேசு…..”, என்றான் அவளை சமாதானப்படுத்தும் பொருட்டு.

“என்ன கார்த்திக்? நாம இன்னும் நம்ம வாழ்க்கையை வாழ கூட ஆரம்பிக்கலை, கடமையை முடிச்சிட்டு வர்றேன்னு நூத்துக் கிழவன் மாதிரி பேசற…. திருமணம்ன்றது கணவனோட உடல் சார்ந்த உறவுக்கு மட்டுமில்லை…… அவனோட சுக துக்கம் எல்லாத்துலயும் பங்கெடுக்கறதும் தான்… நீ வாழ்க்கையோட தாத்பர்யத்தையே சரியா புரிஞ்சிக்கலை…..”,

“நீ மட்டும் உன் கடமையை முடிக்கனும்னு ஏன் நினைக்கிற? நான் உன்கூட இருக்க மாட்டேனா…”,

“வேண்டாம் சக்தி! இந்த விஷயங்கள்ல நீ வேண்டாம்! என் போராட்டம் என்னோடு!”, என்றான்.

எரிச்சலாக வந்தது சக்திக்கு… “ப்ச், கார்த்திக்”, என்றவள்……. “நாம நிறைய தடவை இதை பேசிட்டோம்…. இனிமே நான் உன்கிட்ட இதை பத்தி பேச மாட்டேன், எனக்கு என்ன தோணுதோ அதை தான் செய்ய போறேன்……”,

“பொண்ணு தானே, இவ பேச்சை நாம ஏன் கேட்கனும்னு ஏதாவது ஆட்டிடியுட் வெச்சிருக்கியா கார்த்திக்……”, 

பதிலே பேசவில்லை கார்த்திக்… ஒரு பார்வை மட்டுமே…. 

பெருமூச்சு விட்டவள் “ரொம்பவும் டிளே பண்ணின, நீ எப்பவோ எங்கேஜ்மென்ட் பண்ணு, எப்பவோ தாலி கட்டு அது உன் விருப்பம்னு விட்டுட்டு…… நான் நம்ம மேரேஜை  ரெஜிஸ்டர் பண்ணிடுவேன்……. என்னால தாலி தான் உங்கழுத்துல கட்ட முடியாது…….. இதை பண்ணலாம் தானே….”,

“ரொம்ப வாயாகிடுச்சு உனக்கு…..”,

“ரொம்ப வாயாகலை வயசாகுது….”, என்று கௌண்டர் கொடுத்தாள்.

“நாம என்ன திருட்டு கல்யாணமா பண்ண போறோம்.. அதெல்லாம் ஊரறிய ஜாம் ஜாம்னு நடக்கும், எனக்கு கொஞ்சம் டைம் கொடு……”, என்றான்.

அவனுக்கு தெரியவில்லை திருட்டு கல்யாணம் என்ற அவனின் வாய் முகூர்த்தம் பலிக்க போகிறது என்று.

அவர்கள் மேலும் பேசவிடாமல் அவனின் தொலை பேசி அவனை தொல்லை பண்ண…. எடுத்தவன், “இப்போ வர்றேன்”, என்று சொல்லி வைத்தான்.

“என்ன கார்த்திக்?”,

“ஒரு அர்ஜென்ட வேலை, நான் போகனும் சக்தி….”,

“இப்போ தானே வந்த…. பத்து நிமிஷம் தான் ஆச்சு……”,

“கொஞ்சம் வேலை சக்தி….. போறேன்”,

“இது என்ன போறேன்….. போயிட்டு வர்றேன்னு சொல்லு…..”,

“don’t be silly sakthi……. its just a word”,

“சரி விடு, கிளம்பு”, என்றாள் சலிப்பாக…..

என்னவோ சோர்வாக இருந்தது சக்திக்கு…. கார்த்திக் சக்தியின் ரூம் கதவை நெருங்கி அதை திறக்க போகும் சமயம்……. அவனின் நடையை கவனித்தாள்….. எப்போதும் இருக்கும் வேகமில்லை…… அவளை விட அவனிடம் இருந்த சோர்வு அவளை பலமாக தாக்கியது…… அவனிடம் விஷயத்தை வாங்கியே ஆகவேண்டும் என்ற உணர்வு உந்த…… அவனை பேச வைக்க இவள் பேச ஆரம்பித்தாள். 

“ஏன் கார்த்திக்? நீ என்னை ரொம்ப ஈஸியா எடுத்துக்கறியா…. ஒருவேளை நான் உன் பின்னாடியே வர்றேன்னு என்னை அலட்சியமா நினைக்கிறியா…… உன்னோட லவ் ஸ்டோரி எல்லாம்  எனக்காக சொன்ன கதையா…… நீ லவ் ஸ்டோரி தான் சொன்ன அப்போ கூட லவ் சொல்லலியே…. ஏன் இன்னும் கூட சொல்லலியே”, 

“ஒரு வேளை நீ வாசுகி குழுமத்தை எங்ககிட்ட இருந்து வாங்கறதுக்காக ப்ளே பண்ணி, அதுக்கு காம்பன்சேட் பண்ண சொத்து குடுத்தியே……. அது மாதிரி என் கிட்ட ஏதாவது கேம் ப்ளே பண்றியா……”,

அதை அவள் சொல்ல சொல்ல கேட்ட கார்த்திக்கிற்கு உயிர் வரை வலித்தது…… கழுத்திலும் சுளீரென்று வலி ஆரம்பித்தது. 

அதையும் மீறி வேகமாக அவளிடம் வந்தவன்…. “எழுந்திரி”, என்றான்.

அசையாமல் அப்படியே இருந்தாள்……..

“எழுந்திரி”, என்று கை பிடித்து எழுப்பினான்….

“எதுக்கு?”,

“வா, போய் கல்யாணம் பண்ணிக்கலாம்….”,

அவனையே பார்த்தபடி நின்றாள் ஆளை விழுங்கும் பார்வை… “இனிமே நம்ம கல்யாணம் உன்னோட சாய்ஸ் இல்லை கார்த்திக், என்னோட சாய்ஸ்”, என்றாள் அழுத்தமான குரலில், தீர்க்கமான பார்வையோடு.

அதன் தீட்சண்யம் தாங்காமல், “உன்னை கல்யாணம் பண்ணினா தான் நீ என்னை நம்புவியா…..”, என்றான்

“கல்யாணம் பண்ணினா மட்டுமில்ல…… நீ உண்மையை சொன்னாலும் நம்புவேன்”, என்றாள்.

“என்ன உண்மை….”,

“நீ ஏன் எங்கேஜ்மென்ட்க்கு கூட ஒத்துக்க மாட்டேங்கற, சொல்லு!”,

“கதை பேச நேரமில்லை… ரொம்ப அவசரம் நான் போயே ஆகனும்….”,

“இப்போ தான் கல்யாணம் பண்ணிக்கலாம் வான்னு கூப்பிட்ட இப்ப கதை பேச நேரமில்லைன்னு சொல்ற….”,

அவனையறியாமல் கழுத்தில் கை சென்றது….. “நீ என்னை உயிரோட கொல்ற”, என்று அப்படியே அமர்ந்து விட்டான்.

சக்திக்கு பாவமாக தான் இருந்தது……. ஆனாலும் இளக்கம் காட்டவில்லை…… அவளுக்கு கார்த்திக்கிடம் இருந்து விஷயத்தை வாங்கியே ஆக வேண்டி இருந்தது. 

அவனின் கழுத்தின் புறம், அவன் வலியை குறைக்க இதமாக பிடித்துவிட நீண்ட கைகளை முயன்று அடக்கி கையை கட்டி நின்றாள்.

அதற்குள் மறுபடியும் அவன் போன் அடிக்க…… அதை பேச கூட விருப்பமில்லாமல் எடுக்காமல் இருந்தான்.

அவன் கையில் இருந்த போனை வாங்கி ஆன் செய்தாள்…… “அண்ணா, எங்க போகட்டும்? நடுவழில நிக்கறோம்!”, என்று ஒரு குரல் பதட்டமாக ஒலித்தது.

“பேசு கார்த்திக்!”, என்று அவனிடம் போனை நீட்டினாள்…

“என்னால முடியாது போ! என்னவோ ஆயிட்டு போறேன்! எப்படியோ போயிட்டு போறேன், போ……!”, என்று உட்கார்ந்து கொண்டான்.

“கார்த்திக்! போ கார்த்திக்!”,

“முடியாது போ!”, என்று அடம் பிடிக்கும் சிறுவனாக அமர்ந்து விட்டான்….

அங்கே, “ஹலோ! ஹலோ அண்ணா கேட்குதா? சொல்லுங்க அண்ணா!”, என்று கத்தினார்கள்.

“ஒரு நிமிஷம் இருங்க!”, என்று போனில் சொல்ல, அவர்கள் பெண் குரலை கேட்டதும்… அப்படியே அடங்கினார்கள்.

இன்டர்காமை எடுத்து செல்வத்தை, “உடனே வாங்க”, என்று அழைத்தாள்.

அவன் விரைந்து வர….. “இந்த போன் அட்டென்ட் பண்ணுங்க”, என்று அவனிடம் கொடுத்தாள்.

சூழ்நிலை ஏதோ சரியில்லை என்று பார்த்தவுடனே புரிந்தது.  அங்கிருந்த சோபாவில் கார்த்திக் கைகளை கட்டி அமர்ந்திருந்தான்….. முகம் எப்போதையும் விட இறுக்கமாக இருந்தது.    

அது கார்த்திக்கின் போன் என்று தெரியும்……

“ஹலோ”, என்று செல்வம் சொல்ல….

“நாங்க வழில நிக்கறோம்! எங்க போக?”, என்றான்.

“நான் செல்வம் பேசறேன்! யாரு பேசறது?”,

“செல்வமா! யாருங்க அது?”, என்றது குரல்…… “டேய், தப்பா போன் பண்ணிட்டியாடா”, என்று அருகில் இருந்தவனை அதட்டுவது போனில் கேட்டது.

செல்வத்திற்கு தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை.

“யார் பாஸ்?”, என்றான்

கார்த்திக் வாயை திறக்கவில்லை.

“டேய்! எவண்டா போன்ல விளையாடுறீங்க”, என்று அதட்டினான்.

“மாரி அண்ணன் இந்த நம்பர் தானே குடுத்துச்சு”, என்று அவன் யாரிடமோ சொல்வது போனில் கேட்க…..

இது சரியாக வந்த போன் என்று கணித்தவன்… “என்ன விஷயம்? என்கிட்ட சொல்லுங்க, பாஸ் என் பக்கத்துல தான் இருக்கார்”, என்றான்.

“நாங்க லாரில சரக்கு ஏத்திகிட்டு வந்தோம்! எங்க போகனும்னு அய்யா சொல்லுவாங்கன்னு சொன்னாங்க…… எங்க போக…..?”,

கிரானைட் கற்களாக இருக்கும் என்று அனுமானித்தவன்…….. “ஒரு நிமிஷம்…..”, “கணக்குல வர்றதா? வராததா?”, என்றான் கார்த்திக்கிடம்.

கார்த்திக் பதில் பேசவில்லை….. இப்படியெல்லாம் கார்த்திக் செய்யவே மாட்டான்…. அவனை பார்த்தவன்… திரும்பி சக்தியை பார்த்து, “என்ன செஞ்சீங்க? ஏன் பாஸ் இப்படி இருக்காங்க?”, என்று சண்டைக்கு போக……

சக்திக்கு கோபம் கண்மண் தெரியாமல் வந்தது, “என்ன செஞ்சேன் உன் பாஸை….. என்னடா செஞ்சேன் உன் பாஸ”, என்று திரும்ப சண்டைக்கு போனாள்.

செல்வத்தை சக்தி மரியாதையில்லாமல் டா போட்டு பேசவும் நடுவில் வந்த கார்த்திக்… “சக்தி”, என்று அவளை அதட்டியவன்…..

“கணக்குல வராது……”, என்றான் செல்வத்திடம்.

“எங்க கொண்டு போகட்டும்”,

“தருமபுரி கொண்டு போயிடு….”, என்று சாவியை அவனிடம் தூக்கி போட்டவன்….. போனிற்காக கை நீட்ட….. செல்வம் கொடுத்தான்…… “செல்வம் வருவான்”, என்ற விவரத்தை போனில் சொன்னவன்…… “நீ போ!”, என்றான் அவனை பார்த்து….

செல்வம் கிளம்பவும்…. “ஏதோ டென்ஷன்ல டா போட்டுட்டா, மனசுல வெச்சிக்காத”, என்றான் செல்வத்தை பார்த்து……”,

“என் கடைசி தங்கச்சியே என்னை டா போட்டு தான் கூப்பிடுவா…… இது ஒரு விஷயமே இல்லை…… நீங்க ஏன் இப்படி இருக்கீங்க”, என்றான் அவனும்.

“கிளம்புடா, அவன் நடுவழில நிக்கறான். பிரச்சனையை ஆகிட போகுது”, என்று கார்த்திக் சொல்ல நிலைமையின் தீவிரம் உணர்ந்து செல்வம் கிளம்பினான்.                                

செல்வம் கிளம்பியதும் கார்த்திக் எதிரில் வந்து நின்றாள். கையை கட்டி அவனை பார்த்தாள்……

“உட்காரு”, என்று அவன் அவனுக்கு பக்கத்தில் காட்ட……. அவனுக்கு பக்கத்தில் உட்காராமல் எதிரில் உட்கார்ந்தவள், “சொல்லு”, என்றாள்.

“ஏன், இங்க உட்கார மாட்டியா?

“உட்கார்ந்து…… நீ ஏதாவது பண்ண போறியா……. நீ பண்றது என்ன? என்னைக் கூட தொட விடமாட்ட…… உனக்கெல்லாம்  ரொமான்ஸ் வராது……. மேல சொல்லு!”,

“இப்போ என்ன எனக்கு வரும்னு ப்ரூவ் பண்ணனுமா”,

“நீ ஆணியே புடுங்க வேண்டாம், விஷயத்தை சொல்லு”, என்றாள் கடுப்பாக.   

“என்ன சொல்லனும்”,

“ஏன் என்கேஜ்மென்ட் வேண்டாம்னு சொல்ற…..?”,

“நிறைய பிரச்சனைங்க, இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில எனக்கு எங்கேஜ்மென்ட் பண்றதுல இஷ்டமில்லை”,

“என்ன பிரச்சனை…..?”,

“பணப் பிரச்சனை”,

“உனக்கு பணப் பிரச்சனையா?”,

“என்கிட்டே பணமே கிடையாதுன்னு கிடையாது…….. ஆனா என்னோட தேவைகள் அதிகம், அதுக்கு எனக்கு பணப் பிரச்சனை”, 

“வீரமணி அய்யாக்கு செட்டில் பண்ணினேன்…. அப்புறம் இப்போ பிரபுக்கு  செட்டில் பண்ணியிருக்கேன்….. நடுவுல ரெண்டு படம் எடுத்தேன்… ஒண்ணுல லாபமில்லை ஒண்ணு பயங்கர நஷ்டம்…… சிவா சுமித்ரா கல்யாணத்துக்கு எஸ்டேட் வாங்கி கிப்ட் பண்ணினேன்…..”, என்று நிறுத்தினான். 

இதில் அவன் சொல்லாமல் விட்டது…… கட்சியின் தலைமை வந்த போது அதற்காகவும்……. ஹாஸ்பிடல் திறப்பு விழாவிற்காகவும் அவன் செலவு செய்த பெரிய தொகை…. இன்னும் ஒரு மிகப்பெரிய காரியமாக….. யாருக்கும் தெரியாமல் சக்தியின் மெடிக்கல் காலேஜ் அப்ரூவலிர்காக ஏறக்குறை 100 c யாருக்கும் தெரியாமல் பேரம் பேசியிருந்தான். அவனுக்கும் செல்வத்திற்கும் மட்டுமே தெரியும்…. அதில் பாதி பணம் கை மாறிவிட்டது…. மீதி  அப்ரூவல் கிடைத்ததும் என்று சொல்லியிருந்தான். 

இதை சக்தியிடம் சொல்ல முடியாது. ஏற்கனவே சக்தி செல்வத்திடம், “என்னென்ன இருக்கனும்னு கேட்கறாங்களோ எல்லா வசதியும் நம்ம ஹாஸ்பிடல்ல காலேஜ்ல இருக்கற மாதிரி பார்த்துகங்க……. லஞ்சம்னு ஒரு விஷயத்தை கொடுத்து நான் அப்ரூவல் வாங்க மாட்டேன்”, என்று கறாராக சொல்லியிருந்தாள்.

அதை நடைமுறைப்படுத்துவது நடக்கிற காரியமா? நடக்காத காரியமா? என்று பரீட்சிக்கவே கார்த்திக்கிற்கு விருப்பமில்லை. அதில் இருக்கும் நடைமுறை சிக்கல்கள் அதிகம். அதை சொன்னாலும் சக்தி புரிந்து கொள்ள மாட்டாள்.

அதுவுமில்லாமல், “இது என்னோட வேலை, நீ தலையிடாத”, என்பதாக தான் அவள் பேச்சிருக்கும்.

அதனால் யாரிடமும் சொல்லாமல் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபிசரான செல்வத்தை வைத்து….  வேலைகளை செய்து கொண்டிருந்தான்.   

இதை கட்டாயம் சொல்ல முடியாது.

வீரமணிக்கும், பிரபுவிற்கும் கொடுத்தை சொல்லி அமைதியாக அமர்ந்திருந்தான்.

“சரி உன்னோட தேவைக்கு பணமில்லை, அதுக்கும் நம்ம எங்கேஜ்மென்ட்க்கும் என்ன சம்பந்தம்……”,

“பணம்மட்டுமில்லை……. கொஞ்சம் பிரச்சனையை கூட இருக்கு”,

“என்ன பிரச்சனை?”, என்று பொறுமையாக விசாரித்தாள்.

“புதுசா வந்திருக்குற ஒரு கலெக்டர் எல்லாத்தையும் நோன்டறான்….. அதனால தான் கிரானைட் ஸ்டாக் எல்லாத்தையும் மாத்திட்டு இருக்கேன்…… கொஞ்ச நாளைக்கு அந்த பிசினெஸ் கொஞ்சம் அதிகமா பண்ணக் கூடாது, பண்ணவும் முடியாது.

“சரி, அதுக்கும் நம்ம எங்கேஜ்மென்ட்க்கும் என்ன சமந்தம்?”, என்றாள் விடாமல்.

கார்த்திக்கினால் சொல்ல முடியவில்லை….

கலெக்டர் மிகவும் நேர்மையானவன், எதற்கும் மசிய மாட்டேன் என்கிறான்… கண்டிப்பாக பிரச்சனைகள் வருவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம்….

மாட்டினால் குவாரி சீஸ் செய்து விடுவார்கள்……. கார்த்திக்கிடமும் அதிக பணம் கிடையாது……. கிரானைட் கற்கள் இருந்தாலும் இப்போதைக்கு அதை விற்க முடியாது.

இதையெல்லாம் மீறி அவன் அரஸ்ட் ஆவான்.

இதை சக்தியிடம் எப்படி சொல்ல முடியும்…..

“கொஞ்ச நாள் போகட்டும் சக்தி, இந்த பிரச்சனையெல்லாம் ஓயட்டும், அப்புறம் எங்கேஜ்மென்ட் போகலாம் ப்ளீஸ்”, என்றான் மன்றாடும் குரலில்………… 

இத்தனை சொல்லியும் மறுத்துப் பேசும் அவனை மாற்றும் வகையறியாது பார்த்து இருந்தாள் சக்தி.

அவளின் துளைக்கும் பார்வை கார்த்திக்கை துளைத்தாலும் அவனால் உண்மையை சொல்ல முடியவில்லை.           

அவன் பிரச்சனையெல்லாம் இப்போதைக்கு ஒன்றே ஒன்று தான், அவன் மாட்டுவதை பற்றி கவலையில்லை… மாட்டினாலும் ஒன்றிற்கும் எந்த ப்ரூபும் கிடையாது. குற்றத்தை நிரூபிப்பது என்பது இயலாத காரியம்…… எல்லாம் பக்காவாக முடித்திருந்தான் கார்த்திக்.

ஆனால் சொத்துக்கள் எல்லாம் வீரமணி பேரிலும் பிரபு பேரிலும் இருக்கிறது…… பினாமி என்று நோண்டினால்……? 

அவர்கள் பேர் வீணாக அடிபடும், சமூகத்தில் பெரிய தலைகுனிவு…. பிரபு இதை தாங்கவே மாட்டான்……. சந்திரசேகரின் மகனாக சொத்தை கொடுப்பது போல் கொடுத்து அவனை மாட்ட விடுவதா….. 

சக்தி, அவளின் பேரில் அதிக சொத்துக்கள் இல்லாவிட்டாலும்…. முன்பு காலேஜ் அவள் பெயரில் தான் வாங்கினான். இப்போது தான் அது டிரஸ்ட் ஆனது.    

அவனால் வீரமணியோ? பிரபுவோ? சக்தியோ? அவர்களின் மற்ற குடும்ப உறுப்பினர்களோ மாட்டக் கூடாது என்பது தான் அவனின் இப்போதைய தலையாய கவலை.

மனிதனுக்கு தொண்டை குழிக்குள் தண்ணீர் கூட இறங்க மாட்டேன் என்கிறது….

வாழ்க்கை வைத்திருக்கும் பிரச்சனைகள் எண்ணிலடங்காதவை….. காதலித்த காதலியை பார்த்துக்கொண்டிருந்தால் இது விலகிவிடுமா….. இல்லை அடுத்த வேளை உணவு நிம்மதியாக உண்ண முடியுமா…… தொலையப் போகும் கௌரவம் கிடைத்து விடுமா…….   

இதில் காதலாவது? ரொமான்ஸாவது?  நிச்சயமாவது? திருமணமாவது? 

மனிதனுக்கு இதையும் மீறி உயிர் மூச்சானா விஷயங்கள் எத்தனையோ இருக்கின்றன…

உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இடமும், அத்தியாவசிய தேவைகள். ஆனால் அதற்காக மட்டுமா மனிதன் உயிர் வாழ்கிறான்.

போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து….. என்ற சொல் தெரியாதவர் யார் ஆனால் அதை கடைபிடிப்பவர் யார்…….

கார்த்திக் அவனால் மற்றவர்கள் மாட்ட கூடாது என்ற மிகப்பெரிய பயத்தில் இருந்தான்.   

பயம் வாழ்க்கையில் பயத்தை மிக அதிகமாக அந்த நேரத்தில் உணர்ந்து கொண்டிருந்தான். யாரிடமும் சொல்லவும் முடியவில்லை என்பதை விட சொல்ல விருப்பமில்லை.

அது சக்தியாகினும் கூட ?  

 

Advertisement