Advertisement

 

அத்தியாயம் இருபத்தி ஐந்து :

ஆசை முகமறந்து போச்சே – இதை                                                                                                                        ஆரிடம் சொல்வேனடி தோழி ?                                                                                                                                  நேச மறக்கவில்லை நெஞ்சம் – எனில்                                                                                     நினைவு முகமறக்க லாமோ?

( பாரதி )

வீரமணி கிளம்பினார்……. அவருக்கு மதியம் டெல்லி போக வேண்டி இருந்தது….. கட்சி விஷயமாக இப்போது அவர் தீவிர அரசியலில் இருந்தார்.

சக்தியும் கிளம்பவும்…… “இப்போதானே வந்தாங்க! இன்னும் சாப்பிடக் கூட இல்லை…”, என்று கார்த்திக் முன் வந்தான்.            

“இல்லை! பரவாயில்லை கார்த்திக்! அவ எங்களோட வரட்டும்!”, என்று தெய்வானை அவளைக் கிளப்ப முயல…..

“இப்போதானே சக்தி வந்தா! சாப்பிடாம கிளம்பினா அது மரியாதையா இருக்காது…… நாம போகலாம்! அவ கொஞ்ச நேரம் கழிச்சு வரட்டும்!”, என்று வீரமணி சொல்லி முன் செல்ல……….            

அப்போதும் தெய்வானைக்கு மனம் இல்லை……

“நீங்க போங்கம்மா, உடனே கிளம்பினா சிவா தப்பா எடுத்துக்குவாங்க, கொஞ்ச நேரத்துல வந்துடறேன்”,

அப்போதும் தெய்வானை நிற்க…..

“நீங்க போங்கம்மா”, என்று பிடிவாதமாக நின்றாள் சக்தி.

 தெய்வானை, கார்த்திக்கையும் சக்தியையும் மாறி மாறிப் பார்க்க…….

கார்த்திக்கிற்காக தன் அன்னை தயங்குகிறார் என்று புரிந்தவள்……

அவனை ஒரு அலட்சியமான பார்வை பார்த்தவாறே, “இவன் என்னை என்ன தூக்கிட்டாப் போயிடுவான்! என்னை ஒண்ணும் பண்ணமாட்டான்! பயப்படாம போங்க….!”, என்றாள்.

ஒரு வாரமாக திருமணத்திற்கு போனோமா, வந்தோமா, என்று இருக்க வேண்டும். தேவையில்லாமல் யாரிடமும் பேசக்கூடாது. கார்த்திக்கை பார்த்தால் தன் நிதானத்தை இழக்கக் கூடாது என்ற முடிவை அவளால் செயல் படுத்த முடியவில்லை. தன் கட்டுப்பாட்டை இழக்க ஆரம்பித்தாள். 

அவர் சென்றதுமே, “என்ன கார்த்திக் பொண்ணு பிச்சிகிச்சு போல”, என்றாள் முகம் கொள்ளாச் சிரிப்போடு…….

சக்தியை அவ்வளவு சிரிப்பான முகத்தோடு வெகு நாள் கழித்துப் பார்க்கிறான்…… அந்த சிரிப்பு எப்படி வந்திருந்தாலும் அவனுக்கு சந்தோஷமே…….. “அதுல உங்களுக்கு அவ்வளவு சந்தோஷம் போல”, என்றான் இயல்பாக.  

“ரொம்ப சந்தோஷம்! சந்தோஷம் இல்லைன்னு எல்லாம் பொய் சொல்ல மாட்டேன்…! நிச்சயமா நீ வேண்டாம்னு சொல்லியிருக்க மாட்ட……… அதுவா புத்திசாலி பொண்ணு பிச்சிக்கிட்டு இருக்கும்……”,

“என்னை வேண்டாம்னு சொன்னதுக்கு இதுவும் ஒரு காரணம் இல்லையா”, என்றாள் அவளையும் மீறி….. இந்த மாதிரி பேசக்கூடாது என்று மனதை ஒருநிலைப்படுத்தி வைத்தது எல்லாம் கைகொடுக்கவில்லை. 

“என்னைப் பத்தி உனக்கு என்ன தெரியும்! எதுவுமே தெரியாது!”, என்றான் கார்த்திக் அவளை யாரென்று தெரியும் முன்பே அவளை தன் மனதுக்கு பிடித்ததை வைத்து சொன்னான்.

“என்னத் தெரியுமா? எதுக்கு தெரியணும்? இல்லை எதுக்கு தெரியணும்! தெரியவேண்டிய அவசியமேயில்லை!”, என்றாள் அலட்சியமாக.

“என்னவோ அம்மாகிட்ட இவன் என்னை என்ன தூக்கிட்டுப் போயிடுவானான்னு சொன்னீங்க……… ஏன் செய்ய மாட்டேனா?”,

“செய்வே! செய்வே! ஏன் செய்ய மாட்ட”, என்றாள் இன்னும் அலட்சியமாக. 

“இது மட்டுமா செய்வேன்! தாலி கூடக் கட்டுவேன்!”,

“ஏன்? நீ இந்தப் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கலைன்னா நான் ஏதாவது உனக்கு வாழ்க்கை தர்றேன்னு சொல்லியிருக்கேனா”, என்றாள் கிண்டலாக.

“சக்தி!”, என்று பல்லைக் கடித்தான்….

அவனின் கோபம் அவளுக்கு உற்சாகத்தை கொடுக்க……… “ஒஹ்! அப்படியில்லையா சக்தியை உனக்கு நேர்ந்து விட்டிருக்காங்களா”, என்றாள் இன்னும் நக்கலாக. 

கார்த்திக் மிகவும் உறுதியோடு, “நீ தான் என் மனைவி சக்தி”, என்றான்.

அந்த வார்த்தை சக்தியை உசுப்ப….. அவளும் கோபத்தில் சீற ஆரம்பித்தாள்……  

“உன் மனசுல அந்த மாதிரி ஒரு எண்ணம் இருந்தா அழிச்சிடு கார்த்திக்! நீ அந்த மாதிரி ஏதாவது செஞ்சேன்னு வெச்சிக்கோ! அடுத்த நிமிஷம் என் உடம்புல உயிர் இருக்காது”, என்றாள் உறுதியோடு.

அவளின் வார்த்தைகள் தந்த காயம் கார்த்திக்கிற்கு கழுத்தில் சுளீர் என்று ஒரு வலி ஆரம்பிக்க……. கழுத்தை பின் புறம் கொண்டு சென்று மறுபடியும் கொண்டு வந்தவன் பிறகு எதுவும் பேசாமல் நகர…..

“ஒரு ட்ரை தான் குடுத்து பாரேன் கார்த்திக்! நடக்குதா இல்லையான்னு!”, என்றாள் அவனை சீண்டும் விதமாக.

வார்த்தைகளில் கூட ஒரு வரை கொல்ல முடியும் என்று சக்தி நிருபித்தாள்.

“நீங்க நல்லாயிருக்கணும் மேம்”, என்றான் சக்தி என்ற வார்த்தையை தவிர்த்து….

“ஒஹ்! நோ செண்டிமென்ட்ஸ், இன்னும் என்னை என்ன சென்டிமென்டல் ஃபூல்னா நினைச்சிருக்க…”,

“இல்லை! இது உண்மையான வார்த்தை”,

“நீ சொல்றது எப்படியிருக்கு தெரியுமா……… நீயே கடல்ல தள்ளிவிட்டுட்டு கடல்ல மூழ்கி செத்துட்டு இருக்குறவ கிட்ட தாகமா இருந்தா தண்ணிக் குடின்னு சொல்ற மாதிரி இருக்கு”, என்றாள்.

தான் பார்த்த, தனக்கு தெரிந்த சக்தியா இவள்…… கல்லாய் சமைந்து நின்றான்.  இவளுக்கு இவ்வளவு பேசத் தெரியுமா என்பது போல கார்த்திக் பார்த்துக் கொண்டு நிற்க….. 

“எனிவே உன் கல்யாணம் நின்னதுல எனக்கு ரொம்ப சந்தோஷம் கார்த்திக்!  சந்தர்ப்பம் கிடைச்சாலும் என் கண்ல படாத”, என்று சொல்லி சென்றாள்……

அதை சொல்லும்போது உடம்பின் ஒவ்வொரு அசைவிலும் திமிர்…….

மண்டப வாயிலில் தெய்வானையை வழியனுப்ப வந்த போது இந்த பேச்சுக்கள் நடக்க அப்படியே வெளியேப் போக ஆரம்பித்தாள். 

அந்த திமிர் கார்த்திகை உசுப்ப……. சென்றவள் முன் சென்று நின்றவன், “நீங்க என் முகத்துல காஃபி ஊத்தினதுக்கு பதிலா ஆசிட் ஊத்தியிருக்கலாம்”, என்றான்.

ஒரு பார்வை பார்த்தவள், “காஃபி ஊத்தற அளவுக்கு என்னை நீ தான் மாத்தி இருக்க.. ஆசிட் ஊத்த வெச்சிடாதா”, என்றாள் கடினமான குரலில்.

“சக்தி”, என்றான் அடிப்பட்ட குரலில்…

சக்தி நிற்கவே இல்லை, செல்ல ஆரம்பித்தாள்…….

“நான்…. நான் என்ன பண்ணினேன் உன்னை, இந்தளவுக்குப் பேசற….”, என்றான் திரும்பவும் ஓடி அவள் முன் சென்று நின்று.

“அதுதான் கார்த்திக் நானும் யோசிச்சிட்டு இருக்கேன்! தெரிஞ்சா சொல்றேன்!”, என்றாள் இன்னும் திமிராக……..

“வேண்டாம் சக்தி!”, என்றான் கோபமாக…….

“என்ன வேண்டாம்!”, என்று பதிலுக்கு அவளும் சீற…..

தூரமாக நின்று இவர்களை கவனித்துக் கொண்டிருந்தான் செல்வம்.

கார்த்திக் மிகவும் இறங்கி வந்து, “ப்ளீஸ்! எனக்கு உன் வாழ்க்கையில வர ஒரு வாய்ப்பு கொடு”, என்றான்.

“என்னது வாய்ப்பா”, என்று நக்கலாக கேட்டவள்…….

“இந்த மாதிரி இனிமே உளறாத கார்த்திக், அப்புறம் அவசரத்துக்கு மாப்பிள்ளை கிடைக்கலைன்னா கூட பரவாயில்லைன்னு எவனையாவது கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து நிற்பேன்”,

“எவன் வருவான் என்னை மீறி எவனும் வரமாட்டான்”,

“ஏன் வரமாட்டான்?  யாரும் வரலைன்னா தோ அங்கே நிக்கறானே உன் விசுவாசி….. அவனைக் கூட கல்யாணம் பண்ணுவேன்”, என்று செல்வத்தைக் காட்டினாள்.

ஒரு நிமிடம் அதிர்ந்து நின்றவன்…….. கோபத்தில் ஒரு காரின் பின்புறம் யார் பார்வையிலும் விழாதவாறு நகர்ந்தவன் அவளையும் இழுத்தான்……. இழுத்த இழுப்பிற்கு அவன் மேலேயே வந்து விழுந்தாள் சக்தி.

அவள் இடையில் கை கொடுத்து அணைத்து இறுக்கி பிடித்தான்…… பிறகு நிதானமாக தெளிவாக சொன்னான், “என்னை தவிர எவன் தாலி கட்டினாலும் அடுத்த நிமிஷம் அவன் உயிரோட இருக்க மாட்டான்”, என்று. 

சக்தியும் அவன் அணைப்பில் இருந்து திமிறவோ….. விடு! விடு! என்று கத்தவோ இல்லை……… அசையாமல் நின்றவள், அவனுக்கு சற்றும் மாறாத குரலில்….. “நீ லிவிங் டுகெதர் பத்தி கேள்வி பட்டதில்லையா கார்த்திக்”, என்றாள் சற்றும் அசராத குரலில்.

கார்த்திக்கின் பிடி தளர்ந்தது…. 

“நீ என்னோட வாழ்க்கையில வரணும்னு நினைச்சு, எனக்கு ஒரு வாழ்க்கையே இல்லாம ஆக்கிடாத”, என்றாள் சற்றும் தயவு தாட்சன்யமே இல்லாமல்.

“வலிக்குது சக்தி!”, என்றான்……… இதே வார்த்தைகளை சக்தியின் வீட்டிற்கு வந்த முதல் நாள் கார்த்திக் சொல்லும்போது, “எங்கே”, என்று பதறி அவனை கவனித்த சக்தி இப்போது அதற்கு நேர் மாறாக……..

“வலிக்கட்டும்! நல்லா வலிக்கட்டும்! எனக்கு வலிச்சதை நீ அனுபவிக்கனும்! எத்தனை நாள் ராத்திரி நீ ஏன் இப்படி பண்ணின….. நடந்துகிட்டன்னு யோசிச்சிக்கிட்டே இருப்பேன் தெரியுமா”, என்று ஏதோ பேச வந்தவள் அப்படியே நிறுத்திக்கொண்டாள். 

“நீ என்ன நினைக்கிற எனக்குள்ள வலி இல்லைன்னா”,

“இருக்கலாம்! ஆனா அது நான் குடுத்தது இல்லையே! உன்னை வலிக்க வலிக்க அடிக்கனும் போல எனக்கு ஆத்திரமா வருது! ஆனா என்னால அது முடியாதே!”, 

“நான் என்ன செஞ்சேன் அப்படி? எதுவா இருந்தாலும் என்னை மன்னிக்கக் கூடாதா”, என்றான் மன்றாடிய குரலில்.

கார்த்திக்கின் பிடி தளர்ந்து இருந்தாலும்…….. அவன் அதை விலக்காமல் சக்தியை அணைத்தே பிடித்திருந்தான்…

சக்தியும் விலகவில்லை……. ஆனால் அவளின் வார்த்தைகள் அவனை தானாக விலக வைத்தது. 

“ஏய்! என்னை என்ன உன்னோட விளையாட்டு பொம்மைன்னு நினைச்சியா…… நானா வந்தா வேண்டாம்னு சொல்லுவ………. நான் வேண்டாம்னு சொன்னா நீதான் வேணும்னு சொல்லுவ……. என்கிட்ட விளையாடிப் பார்க்கிறதை தான் உன்னோட முதன்மையான வேலையா வெச்சிருக்கியா”, என்றாள் ஆத்திரத்தில், சற்றுக் குரல் உயர்ந்தாலும் குரல் கமறியது…..

“வேண்டாம்! நீ எனக்கு வேண்டாம்! நான் உன் வாழ்க்கையில கண்டிப்பா வர மாட்டேன்! நீ என்னை தொந்தரவு செய்யாம இருக்குற வரைக்கும் என்னோட வாழ்க்கையாவது நல்லா இருக்கும்! நீ தொந்தரவு செய்ய நினைச்ச என்னோட வாழ்கையை நானே….. நானே அழிச்சுக்குவேன்!”,

தளர்ந்த கார்த்திக்கின் பிடி இப்போது முற்றிலும் விலகியது.

அவனால் எந்த வகையிலும் அணுக முடியாத வேலியை தன்னைச் சுற்றிப் போட்டு கொண்டாள் சக்தி….

அவன் அழிவுக்கு அஞ்சுபவனல்ல…….. சக்தி அவனை அழிப்பேன் என்று சொன்னால் நீயா நானா என்று விடுவான்……. ஆனால் அவள் தன்னை அழித்துக்கொள்வேன் என்றல்லவா சொல்லுகிறாள்…..

“உன்னால முடிஞ்சதை நீ செஞ்சா…….. என்னால முடிஞ்சதை நான் செய்வேன் கார்த்திக்!”,  என்று சொல்லி அவள் காரைத் தேட……..

அவளின் பார்வையின் கட்டளையை உணர்ந்து…… அடுத்த நிமிடம் காருடன் வந்தான் செல்வம்.

கார்த்திக்கின் கைகள் தானாக சக்தியின் கார்க் கதவை அவளுக்காக திறந்து விட்டது.

அவள் ஏறவும்…. கார் நகர……..

செல்லும் அவளை எதுவும் செய்ய இயலாமல் கண்களில் நீரோடு பார்த்திருந்தான். கண்ணாடி அணியாமல் இருந்த முகத்தில் மீண்டும் கண்ணாடி ஏறியது.

செஞ்சோற்று கடன் தீர்க்க                                                                                                                                                              சேராத இடம் சேர்ந்து                                                                                                                                                                 வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா                                                                                                                              வஞ்சகன் கண்ணனடா கர்ணா                                                                                                                                       வருவதை எதிர் கொள்ளடா                                                                                                                                                    

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது                                                                                                                             வல்லவன் வகுத்ததடா கர்ணா                                                                                                       வருவதை எதிர் கொள்ளடா…….

கார்த்திக்கிடம் பேசி சக்தி வந்துவிட்டாலும் அவளுடைய கண்களிலும் நிற்காமல் நீர் வழிந்துக் கொண்டிருந்தது. அதைத் துடைக்கக் கூட முற்படவில்லை.

ஏன் இவ்வளவு கோபம்……. ஏன் இவ்வளவு ஆத்திரம்….. ஏன் இவ்வளவு பேச்சுக்கள்….

யோசித்தாலும் அவளுக்குள் விடை இல்லை.

ஒரு புற நானூற்று பாடல் உண்டு

ஈயென இரத்தல் இழிந்தன்று அதனெதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று
கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று அதனெதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று

 ஒருவர் பிச்சை கேட்பதே  கேவலமான செயல், அதிலும் எதிர் நிற்பவர் பிச்சை போடமாட்டேன் என்பது அதையும் விட கேவலமான செயல்.

ஒருவர் ஒன்றை வைத்துக் கொள் என்று கொடுப்பது உயர்ந்த செயல். அது எதிர் நிற்பவருக்கு தேவையாயிருந்தும் அதை வேண்டாம் என்று மறுப்பது அதனினும் உயர்ந்த செயல்.

இது பொருட் செல்வத்தை கொண்டு சொல்லப்பட்ட ஒரு உயர்ந்தக் கருத்து. 

 சக்தி அப்படி ஒரு மனநிலையில் இருந்தாள்………

அவள் கார்த்திக்கிடம் அவனை யாசகமாக கேட்க, அவன் மறுத்துவிட்டான்…..

இப்போது அவனாக தன்னை கொடுக்க, இவள் மறுத்துவிட்டாள்……. 

உண்கண்ணில் நீர் வழிந்தால் – என்னெஞ்சில்                                                                                   உதிரங் கொட்டுதடீ;                                                                                             என்கண்ணில் பாவையன்றோ ? – கண்ணம்மா                                                                       என்னுயிர் நின்னதன்றோ?                                                                                             

தொடரும்………….

 

Advertisement