Advertisement

அத்தியாயம் ஆறு :

நிகிலும், அவனின் குடும்பமும் பர்ச்சேஸ் முடித்து, உணவு உண்டு, வீடு திரும்பும் பொழுது இரவு மணி ஒன்பது..

வந்து பார்த்தால் காரிடாரில் அபிமன்யு, அக்ஷராவின் வீட்டின் எதிரில் சுவரில் சாய்ந்து கால் நீட்டி அமர்ந்து இருந்தான்.. கிட்ட தட்ட இரண்டரை மணி நேரமாக அங்கே தான் அமர்ந்து இருந்தான்.

வீட்டின் பக்கத்தில் ஷ்ரத்தாவின் ஸ்கூல் பேக், அவளின் நோட், லஞ்ச பேக் என்று இருக்க..

 பார்த்தாலே ஏதோ சரியில்லை என்று புரிந்தது, வரதராஜன் வேக நடை போட்டு வந்தவர், “ஏன் அபிமன்யு இங்க உட்கார்ந்து இருக்கீங்க?” என, அப்போதுதான் அவர்களை கவனித்தவன் எழுந்து நின்றான்.

“சே! இவர்கள் இங்கே இந்த வீட்டில் இருக்கின்றார்கள்” என்று தோன்றாமல் போனதே என்று மனதில் சங்கடம் உதிக்க..

ஆனாலும் அதை காட்டாமல் “அக்காக்கும் எனக்கும் சண்டை. சோ அவளை சமாதானம் செய்ய உட்கார்ந்து இருக்கேன்!” என்றான்.

“உள்ள வாங்க!” என்று அவர்கள் வீட்டினுள் அழைக்க..

“இல்லையில்லை கொஞ்சம் நேரத்துல கதவு திறந்துடுவாங்க. நான் இங்கயே இருக்கேன், ப்ளீஸ் யு கேரி ஆன்!” என,

அதற்குள் ஸ்ம்ரிதி பரத்தை அழைத்திருந்தாள், அபிமன்யு அங்கே அமர்ந்திருக்கின்றான் என்று விஷயத்தை சொல்ல.

நிகில் அபிமன்யுவை பார்த்து “எதுக்கு ஷ்ரத்தா பேக் இங்க இருக்கு. அதைக்கூட உள்ள ஏன் எடுத்து வைக்கலை. என்ன ஆச்சு?” என்று பாதி ஆங்கிலத்திலும் பாதி தமிழிலும் கேட்டு.. “என்ன மிஸ்டேக் நீ பண்ணின?” என்று நேரடியாகக் கேட்டான்.

காவ்யா அவனிடம் “என்ன நிகில் இது! என்ன மிஸ்டேக் பண்ணினன்னு இப்படி கேட்கற! அக்ஷரா அதிகமா யாரோடையும் மூவ் பண்ணறது இல்லை, அதனால அவ வேணும்னே திறக்காம இருக்கலாம், இல்லை அபிமன்யு இங்க இருக்குறது தெரியாம கூட இருக்கும்”  என

“மோம்! எனக்கு, ஷி இஸ் எ வெரி குட் ஃபிரண்ட், நல்லா தெரியும் அவளை, ஸ்ட்ரீட் டாக்ஸ் வெளில இருந்தா கூட அதோட கம்ஃபார்டபில் செக் பண்ற ஆளு அவ அண்ட் அவ பார்ட்ல மிஸ்டேக் இருந்தா அட்மிட் பண்ணிக்குவா அவாய்ட் பண்ண மாட்டா” என்றான்.

“உங்க ஃபிரண்டா?” என்று அபிமன்யு கேட்க, “எஸ், யு எஸ் ல அவ படிச்சப்போ!” என,

அக்ஷ்ராவை பற்றி இவ்வளவு பேசும் நிகிலை பார்த்தவன்  வேறு எதுவும் நிகிலிடம் பேசவில்லை, “ப்ளீஸ் அங்கிள், நீங்க போங்க, நான் அக்காவைப் பார்க்காமப் போக மாட்டேன்”

“ஒரு வேளை திறக்கலைன்னா”

“கண்டிப்பா திறக்க மாட்டா. எனக்கு தெரியும்! ஆனாலும் காலையில அவங்க வர்ற வரை போக மாட்டேன்.. நீங்க போங்க!” என அங்கேயே நிற்க,

நிகில் சென்று வாயில் கதவின் பெல்லை விடாமல் அழுத்த, அப்பொழுது தான் சிரமப் பட்டு ஷ்ரத்தாவை தூங்க வைத்தவள், சப்தத்தில் விழித்து விட்டால் என்ன செய்வது என்று வேகமாக கதவை திறந்தாள்.

அங்கே நிகில் இருப்பதை பார்த்ததும், “ஆர் யு க்ரேசி, எதுக்கு இப்படி பெல்லை விடாம அழுத்துற நீ!” என்று கத்த, அவன் நகர்ந்து வழி விட.. அங்கே அபிமன்யு மற்றும் நிகிலின் குடும்பம் இருப்பது தெரிந்தது.

நிகிலிடம் இப்படி கத்துபவளை அவனின் குடும்பம் பார்த்து நின்றது. நிகிலிடம் யாரும் இப்படி அதட்டியோ கத்தியோ பேசி விட முடியாது என்று நன்கு தெரிந்தவர்கள் அவர்கள்.  வரதராஜனின் பார்வை முழுவதும் மகனின் மீது ஆராய்ச்சியாக படிந்தது. 

அக்ஷ்ராவிற்கு அபிமன்யுவை பார்த்ததும் மனதில் ஒரு ஆக்ரோஷம் எழ, மற்ற யாரும் அவளின் கண்களுக்குத் தெரியவில்லை.

“எதுக்குடா இங்க இருக்குற, நானும் என் பேபியும் இருக்கோமா செத்தோமான்னு பார்க்கவா?” என,

“அக்கா! ப்ளீஸ், ஏன் இப்படிப் பேசற?”

“வேற எப்படிப் பேசுவாங்க? இங்க தனியா என் பேபி ரெண்டு மணி நேரம் உட்கார்ந்து இருக்கா, அப்படியே தூங்கியிருக்கா, அப்புறம் முழிச்சப்போ இருட்டா இருக்கவும் எவ்வளவு பயந்துட்டா தெரியுமா?” என்று சொல்லும் போதே அழுகை வந்து விட்டது, பேசவே முடியவில்லை.

கேட்ட அனைவருக்குமே அப்படி மனதை பிசைந்தது.. என்னென்னவோ கேள்விப்படும் இந்த கால கட்டத்தில்,    

“ச்சே, போடா!” என்றவள் திரும்ப கதவை மூடப் போக,

நிகில் அவளின் கை பிடித்து நிறுத்தினான்.  

“நிகில் ப்ளீஸ், என்னோட விஷயத்துல நீ தலையிடாத! ஒரு பத்து பதினஞ்சு நாள் நீ இருப்ப, திரும்ப போய்டுவ! என்னோட விஷயத்துல நீ தலையிடாத! என் விஷயம் நான் தான் பார்க்கணும்! சோ ஸ்டே அவே பரம் மீ!” என்று கண்களில் கண்ணீரோடு அவள் ஆவேசமாக சொல்ல,

“ஈசி பேபி!” என்று அவளைப் பார்த்து சொன்னவன், “யாரும் வேணும்னு இதை செய்ய மாட்டங்க!” என்றான் கூடவே.

எவ்வளவு உரிமையாக கை பற்றி ஈஸி பேபி என்று இவன் கூப்பிடுகின்றான் என்று அபிமன்யுவின் கவனத்தில் பதிந்தது.    அவனின் மட்டுமல்ல நிகிலின் குடும்பமும், அமெரிக்கன் வளர்ப்பு என்று தள்ள முடியவில்லை. அதையும் மீறி ஏதோ ஒன்று இருப்பதாக தோன்றியது. 

ஆனால் யார் இருப்பதையும் பற்றிக் கவலைப் படாமல், நிகிலை பார்த்துப் “போடா” என்று சொல்லி அவனிடமிருந்து கையை உருவி கதவை சாத்திக் கொண்டாள்.

“போடா!” என்று சொல்லிப் போகின்றாள், நிகில் அதைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் அபிமன்யுவிடம் பேச,

அதுவே அவனின் பெற்றோர்களுக்கும் ஸ்ம்ரிதிக்கும் சொன்னது இருவருக்கும் நல்ல பழக்கம் என,  

அபிமன்யு “என்னிடம் நேற்று பேசக் கூட யோசித்தவன் அக்காவிடம் எப்படி இப்படி பேசுகின்றான், அவள் திட்டுவதை முகம் சுழிக்காமல் வாங்கிக் கொள்கிறான்” எனப் பார்க்க,

அவனின் ஆராய்ச்சியைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், “நீ பண்ணினது தப்பு! அஸ் எ பேரன்ட் அவளை சமாதானம் செய்ய முடியாது, ஏன் நீ வரலை?”

“ஒரு எமர்ஜென்சி அம்மாக்கிட்ட மெசேஜ் பாஸ் பண்ணினேன், அவங்களுக்கும் ஒரு எமெர்ஜென்சி டெலிவரி கேஸ் போல.. அங்க இருக்குற ஒரு ஸ்டாஃப் கிட்ட சொன்னாங்க!”

“அவருக்கு இந்த இடம் கண்டுபிடிக்க முடியலை. எனக்கு திரும்ப ஒரு மணிநேரம் கழிச்சு தான் தெரியும், வாட்ச்மேன் கிட்ட பேசினேன் இங்க பேபி தனியா இருக்கான்னு தெரிஞ்சது.. பார்த்துக்க சொல்லிட்டு அவ்வளவு வேகமா வந்தேன், ஆனாலும் நேரம் ஆகிடுச்சு! பீக் ஹவர் ட்ராஃபிக்!” என்றவன் சோர்வில் திரும்ப அப்படியே அமர்ந்து கொண்டான்.

“ரூ பேபிக்கு ஒன்றும் ஆகவில்லை ஏதாவது ஆகியிருந்தால்..” நினைக்கவே நெஞ்சம் பதறியது. “ப்ளீஸ், நீங்க போங்க!” என்றான் அவர்களைப் பார்த்து,

அவர்களும் தான் என்ன செய்வார்கள், பேசாமல் அவர்களின் வீட்டின் உள் வர..

கண்டிப்பாக ஒரு அன்னையாக அக்ஷராவிற்கு மிகவும் கடினமான நிமிடங்கள் அவை என்று நிகிலிற்கு புரிந்தது. ஆனால் அது நிகிலிற்கு புரிந்த விஷயம், பதைத்த விஷயம் அல்ல!

என்னவோ அக்ஷரா நன்றாக இல்லை என்பது போல எண்ணம். அது மனதிற்கு ஒரு மாதிரி இருந்தது. கதவை திறக்காவிட்டால், பால்கனி இருக்கின்றதா ஏறிக் குதிப்போமா என்ற எண்ணம் கூட. பால்கனியை பற்றிய பேச்சுக்கள் அதிகம் வருவதற்கு காரணம் சேர்ந்து இருந்த போது அது அவர்களின் விளையாட்டு. அவளைப் பார்க்க வேண்டும், சமாதானம் செய்ய வேண்டும் போல மனதில் ஒரு பேராவல்.

இதற்கு தான் அவளைப் பிரிந்ததே! அவளைப் பார்த்தால் வேறு எதுவுமே அவனுள் அதிகம் ஓடாது!

அவர்கள் இருக்கும் வீட்டின் கதவு வரை வந்து விட்டவன் திரும்ப அபிமன்யுவிடம் சென்று “அக்ஷரா ஃபோன் நம்பர் கொடு!” என்றான்.

அவன் கொடுக்க.. மெசேஜ் அனுப்ப ஆரம்பித்தான்.. “கதவை திற.. நடந்தது பெரிய விஷயம். ஆனா அதை பெரிய விஷயமா குழந்தை முன்ன காட்டாதே.. பீ நார்மல். உன்னோட நார்மல் அக்ட்டிவிட்டீஸ் எதுவும் மாத்தாதே, குழந்தை முன்ன அழாதே.. அவளை வீட்டுக்குள்ள அடைச்சு வைக்காதே… தூங்கினா விட்டுடு…  இல்லை அவளை வெளில கூட்டிட்டு வா! நைட் டைம் னாலும் பரவாயில்லை!”

அதுவரை தனியாக அதை நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு மனம் சற்று சமன் பட்டது. அவன் சொல்வது சரி என்பது போலத் தோன்ற, ஆனாலும் அபிமன்யுவைப் பார்க்க விருப்பமில்லை..

“வெளில அபிமன்யு இருப்பான்! நான் வரலை!”  

“அவன் அங்க இருக்க மாட்டான். நான் பார்த்துக்கறேன், குழந்தை முழிச்சு இருக்காளா?”

“நீ பெல் அழுத்தினதுல எழுந்துட்டா, திரும்ப தூங்க வெச்சிட்டு இருக்கேன்!”  

“அப்போ வா!” என்றவன் அபிமன்யுவிடம் சென்று,

“அபிமன்யு கொஞ்சம் நேரம் எங்க வீட்டு ஹால்ல இரு!” என

“இல்லை, நான் வரலை!” என்று அவன் அசையாமல் அமர்ந்திருக்க…  

“ட்ரை டு அன்டர்ஸ்டேன்ட்.. குழந்தை முதல்ல நாலு மனுஷங்களை பார்க்கட்டும். நீ இங்க இருந்தா அக்ஷரா கதவை திறக்க மாட்டா, எழுந்துரு!” என கையை நீட்ட..

அவன் சொன்ன விதம், சொன்ன த்வனி, மறுக்க முடியாமல் எழுந்தான்.

“வா” என்று அவனே அழைத்து சென்று, வீட்டின் உள் விட்டு, “இங்க இரு” என்று சொல்லி ஸ்ம்ரிதியை அழைத்தவன், “டோன்ட் டிஸ்டர்ப் ஹிம்” என்று மீண்டும் வெளியே வந்து,

ஒரு பெல் மட்டும் அடித்து உடனே விட.. சிறிது நேரம் கழித்து கதவு திறந்தது. 

இவனை பார்த்தவள் “தூங்கிட்டா” என்றாள் சோர்வாக..

“மூவ்!” என்றவன் உள்ளே வந்து ஷ்ரத்தாவைப் பார்க்க… ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.

அக்ஷராவின் கண்கள் சிவந்து இருக்க, அழுதிருக்கின்றாள் என்று புரிந்தது. அவளை அப்படி பார்த்த பிறகு தள்ளி நிற்பது மிகவும் சிரமமாக இருந்தது. அணைத்து ஆறுதல் சொல்ல வேண்டும் போல இன்னும் ஒரு பேராவல் மனதினில் அலையாய் எழுந்தது. 

“எப்பவும் உன்னை சுத்தி பத்து பேர் இருக்கணும்னு நினைக்கிற ஆள் நீ! இப்படி எப்படி தனியா இருக்க!”

பதில் பேசவில்லை.. ஆனாலும் அக்ஷ்ராவின் பதிலை நிகில் எதிர்பார்த்து இருந்தான்.

“இதுக்கு என்னால பதில் சொல்ல முடியாது, சொன்னாலும் உனக்குப் புரியாது!”

பதில் சொல்லு என்றெல்லாம் நிகில் வற்புறுத்தவில்லை, “இட்ஸ் ஓகே, சாப்பிட்டியா!” என

“இல்லை!” என்று தலையசைத்தாள்,

“பேபி என்ன சாப்பிட்டா?”

“ஒன்னுமே சாப்பிடலை! பால் கொடுத்தேன் வாமிட் பண்ணிட்டா. அவளுக்கு பிடிக்கும்னு திரும்ப ஒரு தோசைல எக் போட்டுக் கொடுத்தேன் அப்போவும் வாமிட் பண்ணிட்டா, எதுவுமே சாப்பிடலை!” என

“டீஹைட்ரேட் ஆகிடப் போறா!” என்று ஷ்ரத்தாவை தொட்டு பார்த்தான், லேசாக சுடுவது போல இருக்க..

“மைல்ட் டெம்ப்ரேச்சர் இருக்கு பார்த்துக்கோ!”  

“சரி” என்பது தலையசைத்தவளிடம், “உனக்கு ஏதாவது செஞ்சு தரட்டுமா!”

“வேண்டாம்!”

“ஏன்”

“ப்ச்! இவ்வளவு கேர் பண்ணாத, அப்புறம் இந்த கேர் எப்பவும் வேணும் போல தோணும்”

“ஜஸ்ட் ஒரு ஃபிரண்டா நினைச்சிக்கோ!”

“உன்னையா? ஃபிரண்டா? அப்புறம் மத்தவங்களை நான் என்ன கேடகரில கொண்டு வருவேன்.. ஃபிரண்ட்ன்ற டெர்மினாலஜிக்குள்ள உன்னை ஃபிட் பண்ணிக்காத! ஏன்னா எனக்கு நிறைய பிரண்ட்ஸ் இருக்காங்க.. அவங்களை நான் பாய், கேர்ள்ன்னு டிப்ஃபரன்சியெட் பண்ணறது இல்லை” என்றாள் தெளிவாக.

ஆனால் நிகில் அதையும் விட தெளிவாக “இவ்வளவு உன்னை குழப்பிக்காத! ஒரு பதினஞ்சு நாள் தான் பார்க்கப் போறோம்! அதுல என்னால முடிஞ்சது ஹெல்ப் பண்ணப் போறேன்! பீ ரிலாக்ஸ்ட்”

“நம்மோட பாஸ்ட் யார் கிட்டயும் சொல்ல மாட்டேன், பயப்படாத, ஸ்டே கூல்” என்றான் ஒருவேளை அதற்குத் தான் தன்னை தவிர்கின்றாளோ என நினைத்து.  

“பயமா? எனக்கா?” என சோர்வான ஒரு புன்னகை சிந்தியவள், “மத்தவங்களைப் பத்தி எனக்கு எந்தக் கவலையும் இல்லை.. என்ன செஞ்சாலும் அதை அட்மிட் பண்ற தைரியம் இருக்கு, மத்தவங்களுக்கு தான் தெரியாது. ஆனா எனக்கு தெரியும் தானே.. மத்தவங்க கிட்ட இருந்து நான் தனிமைப்படுத்திக்கலை, ஓடலை, எல்லாம் எனக்குள்ள! என்கிட்டே! எனக்கு நானே!” என்று ஒரு பெரு மூச்சோடு சொன்னவள்..

“ஓகே! நான் தூங்கப் போறேன்.. அபிமன்யு இருப்பான், அவனை நான் இப்போ வீட்டுக்கு போகச் சொன்னேன், நாளைக்கு வர சொன்னேன் சொல்லிடு”  

“இப்போ நீ கிளம்பு!” என்று அது சொல்லாமல் சொல்ல,

அக்ஷரா என்ன பேசினால் என்ற யோசித்தவனுக்கு ஒன்றும்  புரியவில்லை..

“ஓகே! ஐ அட்மிட் இட்ஸ் யுவர் இன்னர் கான்ஃப்ளிக்ட்ஸ், பட் என்னை ஏன் அவாய்ட் பண்ணற.. ஜஸ்ட் ஒரு ஃபிப்டீன் டேஸ் தானே இருக்கப் போறேன். எப்போ வந்தாலும் போ போ சொல்ற! நீதான் என்னை மரியாதையில்லாம நடத்துற”

  “சும்மா போயிடுவேன் போயிடுவேன் திரும்பத் திரும்ப சொல்லாத, எனக்கே தெரியும் நீ போயிடுவ.. இப்போ நீ கிளம்பு!” என்றாள் நேரடியாக. இந்த வார்த்தை பிரயோகங்கள் நிகிலை மிகவும் பாதித்தது. “ஏன் என்னை இப்படி துரத்துற?”

“எனக்கு உன்னை பார்க்க பிடிக்கலை, துரத்துறேன், உன்னோட ஞாபகங்களே எனக்கு வேண்டாம் நினைக்கிறேன்! அதை நினைச்சு நான் வருத்தப்படாத நாளே இல்லை! போதுமா! கெட் லாஸ்ட்!” என்று அடிக்குரலில் சீறினாள்.    

“என்னை பார்க்கப் பிடிக்காத அளவுக்கு நான் என்ன தப்பு பண்ணினேன்? டிட் ஐ ஃபோர்ஸ் யு ஃபார் எனிதிங்?” என்று அவனும் கோபமாக தீவிரமாகக் கேட்க,

“எஸ், எஸ், நீ எதுவுமே பண்ணலை! எல்லாம் நான் தான் பண்ணினேன்! நான் தான் உன் பின்னாடி ஒரு நாள் கூட விடாம தினமும் ஒரு வருஷமா  சுத்தினேன்! நானே தான் உன் கூட தங்கிக்கறேன் சொல்லி வந்தேன்! நானே தான் உன்னை மென்டலா, ஃபிசிகளா, எல்லாத்துக்கும் அப்ரோச் பண்ணினேன்! போதுமா” என்றாள்.

இது எல்லாம் நிகில் செய்தது அதை சொல்லிக் காட்டவும்,  

“என்ன நடக்குது? நான் உன் பின்னாடி எதுக்கு வர்றேன்னு தெரியாத அளவுக்கு நீ முட்டாள் இல்லை! அண்ட் யு நோ வெரி வெல், தட் ஐ அம் நாட் இன்டரஸ்டட் இன் மேரேஜ், அண்ட் ஒரு பொண்ணோட வாழ் நாள் முழுவதும் ஸ்டிக் பண்ண முடியுமான்னு பெரிய டவுட் எனக்கு எப்போவுமே!” “நான் உன்னை எதுக்குமே கட்டாயப் படுத்தினது இல்லை! யு வேர் ஈக்குவலி அட்ராக்ட்டட் டுவர்ட்ஸ் மீ! ஆல் வாஸ் முயுசுவல்!”

“எஸ், ஐ அட்மிட், இட் வாஸ் முயுசுவல்! ஆனா அதனால உனக்குள்ள என்ன சேஞ்சஸ்! ஒன்னுமேயில்லை! பட் என்னால என் பேரன்ட்ஸ் ஃபேஸ் பண்ண முடியலை. எல்லோரும் ஏதாவது கேட்பாங்களோன்னு எல்லோரையும் அவாய்ட் பண்ணறேன். பயம்னு கிடையாது, ஆனா இது இங்க சாதாரண விஷயம் கிடையாது”

“கண்டிப்பா நான் உன்னை ப்ளேம் பண்ணலை, நீ வளர்ந்த இடத்துல இது தப்பான விஷயம் கிடையாது. ஆனா நான் பிறந்ததுல இருந்து இதை தப்புன்னு தான் எனக்கு போதிக்கப் படுது, ஆனாலும் அந்த வயசுல இட் வாஸ் அன் அட்வென்ச்சர் ஃபார் மீ அண்ட் அப்போ எனக்கு அது கொஞ்சம் கூட தப்பா தோணலை அண்ட் ஐ வாஸ் வெரி மச்  அட்ராக்ட்டட் டுவர்ட்ஸ் யு!”   

“இப்போ எனக்கு அந்தப் பாஸ்ட் பிடிக்கலை, அதனால என்னால ஒரு லைஃப் அமைச்சுக்க முடியலை. ஐ கான்ட் டிசீவ் எனிபடி… தனியா இருக்கேன். என்னால என் பொண்ணு அப்பான்ற உறவே இல்லாம இருக்கா. ஒரு சிங்கிள் பேரண்ட்டா இருக்குறது, எவ்வளவு டிஃபிகல்ட் தெரியுமா! ஆல் பிகாஸ் ஆஃப் மீ! என்னால மட்டும் தான் எனக்கு இந்த நிலைமை!”

“இப்போ உன்னை பார்க்கப் பார்க்க, ரொம்ப கில்டியா ஃபீல் பண்ணறேன்! போயிடு!” என்று அழுகையை அடக்கியபடி சொல்ல.. 

அவளை வெறித்து பார்த்தவனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவளை அவளே திட்டிக் கொண்டு, அவளின் உணர்வுகளை சொல்லும் போது என்ன சொல்லுவான். அவனுக்கு நடந்தது தப்பான விஷயமும் கிடையாது.

“ஓகே! இப்படியே இரு! தனியா இரு! எனக்கென்ன?” என்று சொல்லி நிகில் வெளியே சென்று விட..

அவன் சென்றதும் கண்களில் நீர் நிறைந்தது. “எஸ்! நான் தனியா தான் இருக்கணும், திரும்ப நீ என் பின்னாடி வந்து, நான் திரும்ப உன்னையே நினைச்சு இருக்கவா? வேண்டாம்!”  என்ற உறுதி உறுதியானது.  

Advertisement