Advertisement

      ‘இல்ல  அண்ணி..  அண்ணன்  இரண்டு  நாளாவே  பயங்கர  மூட்அவுட்  போல..  உர்ன்னுதான்  இருந்தார்..   அதுவும்  இப்ப மூனுநாளா  வீட்டுக்கே  வரல..   அப்பாகிட்ட  கேட்டேன்..   ஏதோ  ஹைவேஸ்   ரோட்  டென்டர்  எடுத்திருக்காராம்..  அதுவிசயமா  அலைஞ்சிட்டிருக்கார்ன்னு  சொன்னார்..”
      மனம்  பதறினாலும்..  அதை  மறைத்தவளாய்.. ‘ஓ..  அதுதான்  நேத்து  நைட்  உங்கண்ணன்  போன்  அட்டன்  பண்ணலயா..?” என  இயல்பாய்  கேட்டு.. ‘சரி காயு..  நான்  அவர்கிட்ட  நைட் பேசிக்கிறேன்..  வச்சிடவா..?” என  கேட்டு  கட்  செய்தவள்..
        என்ன  சொல்வானோ  என்ற  பயத்தோடே..  வெற்றிக்கு  அழைத்தாள்.  முதல்  ரிங்கிலேயே  கட்செய்தான்..  மறுமுறை  அழைக்கவும்  மீண்டும்  கட்செய்தவன்..   தன்னிடம்  சொல்லாமல்  கூட  சென்றுவிட்டாளே என்று  மலையளவு  கோபத்தில்  இருந்தபோதும்..  தனியா வேற இருக்காளே..  எதாவது  அவசர  தேவையா  இருக்குமோ  என்ற  எண்ணம்  தோன்ற.. 
      பதட்டத்தோடே  மனைவிக்கு  அழைக்கும்  எண்ணத்தில்  அவசரமாக  மொபைலை   எடுத்த  நொடி..  அதையும்  விட  அவசரமாக  ஆனந்தியிடமிருந்து   குறுஞ்செய்தி  வந்திருக்க..  மெசேஜை  படித்தவனுக்கு சேஃபாகத்தான்  இருக்கிறாள்  என்ற  ஆசுவாசம்  பிறந்தாலும்..  அடுத்தநொடியே  மீண்டும்  கோபம்  தலைக்கேறியது.
      ஆள்மயக்கி..  எத்தனை  எகத்தாளம்  இருந்தா  இப்படி  அனுப்பியிருப்பா..? இவளையெல்லாம்  நாலு  தட்டுதட்டி..  மாட்டுக்கு  மூக்கனாங்கயிறு  கட்றமாதிரி..    தாலிகட்டி  இழுத்திட்டு  வந்திருக்கனும்..  மயிலே மயிலே  இறகுபோடுன்னு  கெஞ்சிட்டிருந்தேன் பாரு..  என  பொறுமியவன்..  போனை  சுட்ச்ஆஃப்  செய்தான்.   
      அதற்கடுத்து  வந்த  வாராத்தில்  அபர்ணா  தனது  தாய்தந்தையரை  பார்க்கவேண்டி  விருப்பம்  தெரிவிக்க..  சிவமுகிலன்  ஆனந்தியையும்  அழைக்க..   அவர்களோடு  வந்திருந்தாள்  கிருஷ்ணகிரிக்கு..  
     ஆனந்தியோடு  வெற்றியின்  மனக்கசப்பையறியாத  சிவமுகிலன்  தாம்  இன்று  வருவதாக  தெரிவிக்க..  இவர்கள்  வரும்முன்னே..   தான்  வர  இரண்டு  நாளாகும் என  சொல்லி  கிளம்பியிருந்தான்  வெற்றிமாறன். அதன்பின்  ஆனந்தியும்  வெற்றிக்கு  அழைக்கவில்லை..
  
     இதோ  ஓடிவிட்டது  மேலும்  மூன்றுமாதம்..  ‘அத்தாhhன்..” என்ற  பெரிய  சத்தத்தோடு   அபர்ணா  வெற்றி  வீட்டில்  நுழைய..
     ‘ஹேய்..  அபர்ணா..   வா.. வா..” என  உற்சாகமாக  வரவேற்றவன்..
     ‘இப்போதான்   அத்தானை  பார்க்க  நியாபகம்  வந்துச்சா..?” என முறைத்தான்.
     ‘நானாவது    உங்களை  பார்க்க  வந்தேன்..  நீங்க  வரவேயில்ல..” என  சிறுபிள்ளையாய்  முறுக்கினாலும்  கண்கள்  லேசாக  கலங்கவே..
      ‘ஏய்..   என்ன  அபர்ணா..?” என  அவளின்  கண்ணீர்  துடைத்தவன்..
      ‘கொஞ்சம்  வேலைடா..” என்றான்  இறங்கிய குரலில்.
      ஆனந்தியை  பார்க்கப்  போயிருந்தால்  அபர்ணாவையும்  பார்த்திருப்பானே.. என  யோசித்தவர்..  ‘வெற்றி..  போனவாரம்   ஆனந்தியை  பார்க்கப் போறேன்னு  சொன்னியே..  போய்  பார்க்கலயா..?”  என  சந்திரவாணன்  பரிதவிக்க..
      ‘அங்கதான்ப்பா  போலாம்னு  நினைச்சேன்..  ஒரு  அவசரவேலையா  சென்னை  போறமாதிரி  ஆய்டுச்சி..” என்றான் வரவழைத்த  இயல்போடு.
      சிவமுகிலன்  வெற்றியை  தனியே  அழைத்து..  ‘ஆனந்திக்கும்  உனக்கும்  என்ன  பிரச்சனை  வெற்றி..?”  என்று  கேட்க..
     ‘அப்டியொன்னும்  இல்ல  சிவா..” என்றான்.
     ‘பிரச்சனையில்லாமலா   லாஸ்ட்  டைம்  நாங்க  வரோம்னு  சொல்லியும்..   நீ  வெளில  கிளம்பின..?” என்றான்  குற்றம்   சுமத்தும்  பார்வையோடு.
     ‘ஏன்..?  உன்கிட்ட  ஆனந்தி  எதாவது  சொன்னாளா…?”
     ‘நீ  இப்படி  கேக்குறதைப் பார்த்தா..   நான்  நினைச்சது  சரிதான்..   இன்னைக்கு  ஆனந்திக்கு  லீவ்தான்..  இங்கவரதுக்கு  நான்  எவ்ளோ  வற்புறுத்தியும்   வரலைன்னுட்டாங்க..”  என  வருந்தினான்.
      இவர்கள்  இருவரும்  தனித்து  பேசிக்கொண்டிருக்க.. ‘அண்ணா..  உங்களையும்  சிவாண்ணாவையும்   அப்பா  சாப்பிட கூப்பிடுறார்..” என்றாள்  காயத்ரி.
    
    ‘ஒரு  நாள்கூட  லீவ்  விடமாட்டுக்கிறான்  மாமா  இந்த சிவா..  சன்டேல  வீட்ல  வச்சும்  ஒர்க்  பண்ண சொல்றான்..”  என்று   தன்  அத்தைமாமாவோடு  கதை  பேசிக்கொண்டிருந்தாள்  அபர்ணா. 
    ‘அவன் இவன்னு  இப்படி  மரியாதையில்லாம  பேசக்கூடாதுமா..” என்று  சந்திரவாணன்  அன்போடு  கண்டித்துக்கொண்டிருக்க.. 
    வெற்றியும்  சிவாவும்  வருவதைப் பார்த்தவள்.. ‘அத்தானும்  இதையேத்தான்  சொல்றார்..  இனிமே  இப்படி  சொல்லாம  இருக்க  டிரைபண்றேன்..” என்றாள்  கிசுகிசுப்பாக.
     சந்திரவாணன்  சிரிக்கவும்.. ‘ஆனா  மாமா..  ஆனந்தி  நினைச்சது  நடக்கும்னு   நான்  நினைச்சே  பார்த்தில்ல..” என்றாள்  ஆச்சர்யமாக.
     ‘ஆனந்தி  என்னம்மா  நினைச்சது..?” என்றார்.
     ‘நாங்க  சின்னவயசா இருக்கும்போதிலிருந்தே   ஆனந்திக்கு  மாமாவீடு..  தாத்தாவீடுன்னு..  நமக்கு   ஹாலிடேஸ்க்கு  போறதுக்கு  யாருமே  இல்லன்னு   ரொம்ப  வருத்தப்படுவா..
    அப்புறம்  என்னோட  ஏஜ்ஃபங்சன்ல..  இதெல்லாம்  தாய்மாமாதாண்டி  செய்யனுமாம்..  நமக்குத்தான்  யாருமில்லன்னு  ஃபீல் பண்ணுவா..  அப்பாம்மா  உங்களுக்கு  பிடிக்காமத்தான்  கல்யாணம்   செய்துகிட்டாங்கன்னு  எங்ககிட்ட  சொன்னதிலருந்து.. 
       நம்ம  மாமாவீட்டை  நாம  கண்டுபிடிக்கலாமான்னு  கேப்பா..  ஒருசில  டைம்..  நமக்கும்  மாமன்மகன்  இருந்திருந்தா  நல்லாயிருந்திருக்கும்..   அப்படி  யாராவது  இருந்திருந்தா   நான்  அவங்களைத்தான்  கல்யாணம்  செய்துக்குவேன்னு  சொல்லுவா..
      இதெல்லாம்  நடக்குற  காரியமா…?  முதல்ல  அவங்க   யாருன்னே  நமக்கு  தெரியாது..  அப்படியேன்னாலும்   அவங்களுக்கு   பையன்  இல்லாம..  பொண்ணுங்க  மட்டும்  இருந்தா  என்னசெய்வேன்னு  கேப்பேன்..
     இருந்திருந்தா  நல்லாயிருக்கும்னுதான  சொன்னேன்னு..  முகத்தை  தூக்கிவச்சிக்கிட்டு   ரூம்க்குள்ள  போய்  அடைஞ்சிக்குவா..
     இப்போ  என்னடான்னா..  அவ  நினைச்சமாதிரியே  உண்மையாவே   தாய்மாமா  மகனையே  கல்யாணம்  செய்துகிட்டா..” என்று   சொல்ல..
     தன்னை  காணும்  முன்பிலிருந்தே   இப்படியெல்லாம்  யோசித்திருக்காளா..  என்று  வெற்றிக்கு  சந்தோசம்  எட்டிப்பார்க்க..
    ‘ம்ம்..  அப்புறம்  அபர்ணா..   உங்கக்கா  இன்னும்  என்னென்ன  கற்பனை  செய்து  வச்சிருந்தா..?” என்றான்  ஆவலாக.
    ‘இவ்ளோதான்  என்கிட்ட  சொன்னா..  ஆனா   உங்களோட  கல்யாணம்  உறுதியானதும்..   பார்த்தியா..  நான்  நினைச்சமாதிரியே  என்  மாமன்  மகனை  கல்யாணம்  செய்துக்கப்போறேனேன்னு..   ரொம்ப  சந்தோசப்பட்டுட்டிருந்தா..  காலேஜ்ல  கூட  இதையேத்தான்  சொல்லிட்டிருந்திருப்பா போல..   இன்விடேசன்  வைக்கபோகும்போது  கோஒர்க்கர்செல்லாம்  உன்மாமனோட  வந்து  இன்விடேசன்  வச்சாதான்  நாங்க  கல்யாணத்துக்கு  வருவோம்னு  கலாய்ச்சிட்டிருந்தாங்க..” என்றாள்  சந்தோசத்தோடே.
      ‘ம்ம்  அப்புறம்..?” என்றான்  ஆர்வமாக.
      ‘அப்புறம்…” என  இழுத்தவள்.. ‘இன்னொரு  முக்கியமான   விசயம்  இருக்கு.. நான் சொன்னதும்..  ஆனந்திகிட்ட என்னை போட்டு கொடுத்திடக்கூடாது..” என  டீல்  பேச..
      ‘ம்ம்  சொல்லமாட்டேன்..” என  வெற்றி  உறுதிகொடுக்க..
      ‘ஆனந்தி  உங்களை  மாமான்னு  கூப்பிடலதான..?”
      யோசித்தவன்.. ‘ஆமாம்..  இதுவரை  கூப்பிட்டதில்ல..” என்றான்.
      ‘நமக்கொரு  மாமாபையன்  இருந்தா..   அவன்  என்னைவிட   சின்னவனா  இருந்தாதான்  நான்  மாமான்னு  கூப்பிடுவேன்..  பெரியவனா  இருந்தா  வாடா  போடான்னுதான்  சொல்லுவேன்னு  அடிக்கடி  சொல்லுவா..  நீங்கவேற  ஆனந்தியோட  பெரியவங்களா..  சோ   உங்களை   மாமான்னு  எப்பவும்  கூப்பிடமாட்டா..” என்றாள்  சிரிப்போபோடு.
      ‘இதென்ன  உல்ட்டாவா  இருக்கு..?” என்றான்  யோசனையாய்.
      ‘அது..  மாமன்   மகன்களை பொருத்தவரை..    சின்னவனை  மாமான்னும்..  பெரியவனை  வாடாபோடான்னும்   கூப்பிட்டாத்தான்..   கிக்கா  இருக்குமாம்..” என்றாள்  வெக்கத்தோடு முகம்சுருக்கி.
     உள்ளுக்குள்  சிரித்தாலும்.. ‘ம்ம்..” என வெற்றி  முறைக்க..
     ‘நானில்லத்தான்..   ஆனந்திதான்  அப்படிசொன்னா..  நான்  பாருங்க  சமத்தா  அத்தான்தான  சொல்றேன்..” என  சமாதானப்படுத்த..
      வெகுநாட்களுக்கு  பிறகு  ஆனந்தியை  ரசனையோடு  நினைத்தவன்.. ஆள்மயக்கி..  என      கொஞ்சினான்  மனதினுள்.
     ‘வெற்றி..  தினமும்  காலைல  ஆனந்தி  ஃபோன்  பண்ணுவா..  இப்போ  நாலு  நாளா  ஃபோனே  பண்ணல..   நாங்க  பண்ணினாலும்   நாட்  ரீச்சபிள்ன்னு  வருதுடா..” என்று  மாலா  வருந்த..
     ‘என்ன…?  தினமும்  ஃபோன்   பண்ணுவாளா..?” என்றான்  ஆச்சர்யமாக.
      ‘ஆமா..  உனக்கு  தெரியாதா..?  ஏன்  உனக்கு  பண்றதில்லையா..?”
      ‘எனக்கு  பண்ணுவா..  உங்களுக்கு  பண்றது  எனக்கு  தெரியாது..  அதான்  கேட்டேன்..” என  சமாளிக்க..
       ‘காலை  டைம்ல  பண்ணுவா..  என்ன  சமையல்ன்னு கேப்பா..  காயுக்கு  சமையல்  கத்துகொடுக்க  சொல்லுவா..  மாமா  செக்கப் போனாரான்னு  எப்படியும்  ஒரு  கால்மணிநேரமாவது  தினமும்  பேசிடுவா..   ஆனந்தி  ஃபோன்  பண்ணும்போது  நீ  தூங்கிட்டிருப்ப..  அதான்  உனக்கு  தெரியல..”  என  வெற்றியிடம்  முடித்து..
    ‘ஆனந்தியையும்  கூட்டிட்டு  வந்திருக்கலாமில்ல  அபர்ணா..?” என கேட்க..
    ‘அவதான்த்தை  வரலைன்னுட்டா..” என்றாள்  சோர்வாக.
    அபர்ணாவின்  சோர்ந்த  முகம்  பார்த்ததும்  பதறி..  ‘ஆனந்திக்கு   உடம்பேது  சரியில்லையா..?” என்றார்  மாலா.
     ‘காய்ச்சல்  இல்லங்கத்தை..  ஆனா  ரொம்ப  டல்லா இருந்தா..” என  அபர்ணா  இன்னும்  எதையோ  சொல்ல  ஆரம்பிக்க..
     ‘ம்மா  இரண்டு  நாளைக்கு  நான்  ஃப்ரீதான்..   போய்  பார்த்துட்டுவரேன்..” என  இடைமறித்தான்.
      ‘நீ  அப்படித்தான்  சொல்லுவ..  அப்புறம்   அவசர  வேலை  வந்திடுச்சிம்ப..” என  கோபிக்க..
       ‘இல்லம்மா..  இந்தமுறை  கண்டிப்பா  போறேன்..” என்றதும்..
      ‘இரண்டு  நாளைக்கு  இங்கயிருக்கலாம்னுதான்  வந்தோம்   வெற்றி..    இங்க  வந்ததுக்கப்புறம்   அப்பா  கால்செய்து   இன்னைக்கே  வரசொல்றார்..    டாக்டர்ஸ்  மீட்டிங்க்காக  டெல்லி  போறாராம்..  அம்மா  தனியா  இருப்பாங்கன்னு   கூப்பிடறார்..  அதனால நாங்களும்  இன்னும்  இரண்டுமணிநேரத்தில  கிளம்பிடுவோம்..  எல்லாரும்  ஒன்னாவே  போய்டலாம்..” என்றான் சிவமுகிலன்.
      ‘இல்ல  சிவா   நான்  தனியா  போய்க்கிறேன்..   இல்ல  ரிட்டர்ன்  வர  கஷ்டமாய்டும்..” என  மறுக்க..   வெற்றியை  தனியே  அழைத்து வந்தவன்..
     ‘ஆனந்திமேல இருக்க  கோபம்  போனதும்  உடனே  பார்த்தாகனுமா..?   ஏன்..?  ஒரு  ரெண்டுமணிநேரம்  தாக்குபிடிக்கமுடியாதா..?” என சிரிக்க..
     ஆனந்தி  அன்று  மறுத்ததை  நினைத்தவன்.. ‘எப்டியெல்லாம்  என்னை  பாடா  படுத்தறா  தெரியுமா..?” என  கடுகடுத்தான். 
     ‘விடு  வெற்றி..  ஆனந்திக்கு மட்டும்  உன்னை  பிரிஞ்சிருக்கிறது  கஷ்டமா இருக்காதா  என்ன..?   அவங்க  வேலை அப்படி..” என தேற்றினான்.
     ‘சரி.. சரி..  அவளைப்  பார்த்தே  இரண்டு மாசத்துக்கு  மேல ஆகுது..  ஒருவாரத்துக்கு  அங்கதான்  இருக்கப்போறேன்..   வீட்டுப்பக்கம்  ஏது  உன்  பொண்டாட்டியை  கூட்டிட்டு  வந்திடாத..” என்றான்  சின்ன சிரிப்போடு.
     ‘அதெல்லாம்  நீ  சொல்லக்கூடாது..  என்  மாமனார்  ஆனந்தியை  பார்த்துக்கிற  பொறுப்பை  என்கிட்ட  ஒப்படைச்சிருக்கார்..  நான்  வந்தேதான்  தீருவேன்..  அதுவும்   உன்னோட  அபர்ணா  குழந்தையோடதான்  வருவேன்..” என  சிரித்தான்.
      முறைப்போடே  சிரித்தவன்.. ‘நான் மட்டும்   அபர்ணாவை  ஒரு  மாசத்துக்கு  இங்கையே  இருன்னன்னு  வை..   என்  பேச்சை  மீறவேமாட்டா..   அப்புறம்  உன்பாடு  என்ன  ஆகும்னு  யோசிச்சிக்கோ..” என்று சவால்விட..
     ‘அப்பா  சாமி..  ஏற்கனவே  அத்தான்..  அத்தான்னு   அவளோட  அத்தான்  புராணம்  தாங்கமுடியல..  இதுல  நீ  வேறையா..?  ஆளைவிடுங்கப்பா..” என்று  சிவமுகிலன்  சரணடைய..
      ‘ம்ம்..  அது..‚” என  தன்  காலரை  உயர்த்தியவன்.. ‘சரி சரி..  நான்  கிளம்பறேன்..” என  சிவாவின்  பதிலுக்கும்  காத்திராமல்  மெல்லிய  விசிலோடு  தனதறைக்குள்  போனான்.
     ஐந்து  நிமிடத்தில்  ரெடியாகி  வெளியே வந்தவன்.. ‘சிவா..  மாமாகிட்ட  நான்  அங்கதான்  ஒருவாரத்துக்கு  இருக்கப்போறேன்னு  சொல்லிடு..  கொஞ்சம்  நிம்மதியா  இருப்பார்..” என  சொல்லிக்கொண்டே  கிளம்பினான்.

Advertisement