Advertisement

அகிலம் – 3
லெமன்வுட் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்..
பழுப்பும் மஞ்சளும் சேர்த்துக் குழைத்து பெயின்ட்டடிக்கப்பட்டிருந்தது அந்த ஐந்து மாடிக் கட்டிடம்..
எப்பொழுதும் போல் அந்தக் கலர் கோம்போ மனதிற்குள் ஒரு குளுமையைப் பரப்ப பார்க்கிங்கை நோக்கி காரைச் செலுத்தினான் ஆதி..
காலை முதலே தனது சின்ட்ரெல்லாவைப் பார்க்க விழிகள் ஏங்க தனது ஆபிஸிற்குச் செல்வதற்கு முன்பாக அவளை தரிசிக்க வந்துவிட்டான் லெமன் வுட்டிற்கு..
கலைந்திருந்த தலையைச் சரிசெய்து கொண்டிருந்தவனுக்கு சோலை மயிலாய் செண்டர் மிரரில் சின்ட்ரெல்லாவின் தரிசனம்..
சட்டென கீழே இறங்க மனம் அவசரம் கொண்டாலும் அவன் கால்கள் காலை தரிசனத்தில் வேரூடியபடி..
பெண்ணவள் கண்ணைவிட்டு மறைந்ததும் அவளது வாகன தரிசனத்தில் அந்த கண்ணனின் முகத்தில் அத்தனை குறும்பு..
பூனையாய் செய்யவேண்டிய வேலையை முடித்துவிட்டு வழமைபோல் நான்காம் தளத்திலுள்ள ஆருவின் ரூமை அடைந்திருந்தான் அவன்..
ஆம்.. வழமைதான்..
இருவரின் சந்திப்பும் இப்பொழுதெல்லாம் வழமைதான்..
பூமி பூஜைக்குப் பிறகு ரினொவேஷன் சம்மந்தமாக இருவரின் சந்திப்பும் அடிக்கடி அரங்கேறியது..
அதுவே இப்பொழுது தொடர்கதையாக..
ஏதேதோ காரணங்கள் அடிக்கிக்கொண்டு தினம் தினம் லெமன்வுட்டில் கதிரவனுடன் காட்சியளித்தான் ஆதி..
ஒவ்வொரு சந்திப்பிலும் தனது சின்ட்ரெல்லாவின் மேல் தனக்கிருந்த நேசம் கூடிக்கூடி விண்ணைத் தாண்டுவதாக அவன் எண்ணம்..
ஆருவிற்கு தன் மேல் கிளைன்ட் ரிலேஷன்ஷிப்தான் என்று நன்றாகவே அறிந்திருந்தபோதிலும்.. அவனால் அப்படி நினைக்கமுடியவில்லை..
அவளின் இந்த எல்லையிலிருந்து பழகும் குணம் தான் அவனை அவள் மீது எல்லையில்லாமல் நேசத்தை வளர்த்துவிட்டிருந்தது..
ஆதியின் வீடு புதிதாக மாற மாற இருவரும் நட்பென்னும் ஆற்றில் பயணிக்கத் துவங்கினர்..
அவள் ஆதியென்னும் நட்பை மட்டும் சுமந்து.. இவன் ஆருயென்னும் காதலில் நட்பை சுமந்து..
தங்க நிற ப்ளேட்டில் ஆரண்யா தரணிதரன் ஆர்க்கிடெக்ட் என்று பொறிக்கப்பட்டிருக்க அதைக் கண்டு எப்பொழுதும் போல் இன்றும் பொறாமை தலைத்தூக்கியது ஆதிக்கு..
அந்த இன்ஸ்டன்ட் பொறாமையைத் தூக்கி எறிந்தவன் ஆருவின் அறைக்கதவைத் லேசாகத் தட்ட..
கதவுத்தட்டும் இசையிலேயே வந்திருப்பது ஆதியென அறிந்துகொண்டவளது முகத்தில் ஒரு வித சலிப்பும் சிரிப்பும்..
“உள்ளே வாங்க ஆதி..”, தன்னவளின் குயிலிசை கேட்டதும் ஒருவித துள்ளலுடன் அவள் அறைக்குள் நுழைந்திருந்தான் அவன்..
“இன்னைக்கு ப்ரீயா ஆரு நீ..??”, இருக்கையில் அமர்வதற்கு முன்னே கேள்வியெழுப்பியிருந்தான்..
“கொஞ்சம் பிஸி.. கொஞ்சம் ப்ரீ..”, கொஞ்சம் காரம் கொஞ்சம் காபிப்போல் குறும்பாய் மொழிந்தாள் பெண்..
“கொஞ்சம் ப்ரீ எப்போன்னு தெரிஞ்சுக்கலாம்மா..??”, இவனும் கேலியாக..
“மதியம் லஞ்ச் வரை ப்ரீதான் ஆதி.. என்ன விஷயம்..??”
“இங்க சேரன் நகர் தாண்டி ஒரு அஞ்சு ஏக்கர் நிலம் இருக்கு நமக்கு.. அங்க ஒரு கேட்டட் கம்யூனிட்டி க்ரியேட் பண்ணலாம்னு ப்ளான்..”
“சூப்பர் ஆதி.. வேலை எப்போ ஸ்டார்ட் பண்றீங்க..??”
“நீங்க தான் மேடம் ஸ்டார்ட் பண்ணனும்..”
“நானா..?? நான் என்ன பண்ணனும்..??”
“நீங்கதானே ஆர்க்கிடெக்ட்.. அப்போ நீங்க டிசைன் பண்ணிக் கொடுத்தால்தானே மேடம் வேலையை ஆரம்பிக்க முடியும்..”
“என்ன ஆதி சொல்றீங்க..?? நிஜமாவா..??”, ஆச்சர்யம் மிளிர்ந்த குரலில்..
“நிஜமேதான்.. உங்க லெமன்வுட் தான் கன்ஸ்ட்ரக்ட் பண்றாங்க.. நீங்க தான் டிசைன் பண்ணப்போறீங்க..”
“வாட்..??”, விரிந்துதான் போனது பெண்ணின் விழிகள் ஆச்சர்யத்தில்..
“நெஜமாத்தான் சொல்றேன் ஆரு.. யூ ஆர் தி ஆர்க்கிடெக்ட்..”, புன்னகையுடன்..
“தாங்க் யூ சோ மச் ஆதி..”, வேறு என்ன சொல்வதென்றே தெரியவில்லை அவளுக்கு..
“வெறும் தாங்க்ஸ் மட்டும் தானா..??”, ஆழ்ந்த குரலில் கேட்ட ஆதியைப் பார்த்த ஆருவின் மனதில் ஜில்லென்ற உணர்வு..
இருவரின் விழிகளும் ஒன்றோடொன்று கலந்து கதைகள் பல பேசத்துவங்க அதைத்தடுக்கவெனவே ஒலித்தது ஆதியின் தொ(ல்)லைப்பேசி..
பார்வைகள் விலக போனில் மின்னியப் பெயரைக் கண்டதும் நெற்றியில் சுருக்கரேகைகள்..
அவசரமாக போனைக் காதில் கொடுத்தவன், “கவிம்மா.. என்னடா ஆச்சு..?? இந்நேரத்திற்கு கால் பண்ணிருக்க..?? ஏதாவது பிரச்சனையா..??”, கேள்விகளை அடுக்கித் தள்ளினான்..
மறுமுனையோ, “ரிலாக்ஸ் அண்ணா.. பிரச்சனை எல்லாம் ஒன்னும் இல்லை.. நீ எங்க இருக்க..??”, என்று கேட்டாள்..
பிரச்சனையில்லை என்பதில் தெளிந்தவன், “லெமன்வுட் வரைக்கும் வந்தேன் கவி.. என்ன விஷயம்டா..??”, என்று கேட்டான்..
லெமன்வுட் என்றவுடன் அவளிடமிருந்து கேலி கிண்டலை எதிர்பார்த்திருந்தான் ஆதி..
கவியோ ஆதியை ஏமாற்றிவிட்டு, “நான் உன்கிட்ட ஒன்னு கேட்கனும்..??”, கொஞ்சம் தயக்கமாக..
“கேளு கவி..”
“நான் யாரையாவது கொலை செஞ்சுட்டேன்னா என்னண்ணா பண்ணுவ..??”
“சொத்தெல்லாம் நானே ஆட்டய போட்டிடுவேன்..”, கொஞ்சம் கேலியாய்..
“நான் சீரியஸா கேட்கறேன் ஆதிண்ணா..”
“கவி..??”, அதிர்ந்துதான் போனான் ஆதி..
“சொல்லுண்ணா என்ன செய்வ..??”, பொறுமையாக மிகவும் நிதானமாகக் கேட்டாள் கவிநயா..
ஏதோ பிரச்சனை என்று மட்டும் நன்றாகப் புரிந்தது ஆதிக்கு..
தன்னிடம் அது என்னவென்று சொல்ல அவளுக்கு இப்பொழுது விருப்பமில்லையென்றும் சேர்ந்தே புரிந்தது..
“நீ என்ன பண்ணாலும்.. அது கொலையே என்றாலும் உனக்குத் துணையாய் நான் இருப்பேன்..”, என்றவனின் மனதில் பயம் சூழ்ந்திருந்தபொழுதும், “என்னாச்சுடா..?? ஏதாவது பிரச்சனையா..?? எதுவா இருந்தாலும் சொல்லும்மா..”, என்பதற்குள் போனைக் கட் செய்திருந்தாள் அவனின் தங்கை..
போனின் பீப்பொலி கேட்டதும் ஆதிக்கு தனது சின்ட்ரெல்லா உட்பட அனைத்தும் மறந்துபோனது..
ஆதி கவிக்கு முயற்சிக்க அவளது போன் சுவிட்ச்சாப்பில்..
ஏதோ நடக்கபோகிறதென்று உள்மனம் அடித்துச்சொல்ல கவியின் கல்லூரி செல்ல எழுந்திருந்தான் தமையன்..
ஆதி இருக்கையைவிட்டு எழுந்த அடுத்த நொடி, “ஆதி.. நானும் வருகிறேன்..”, என்றபடி ஆருவும் அவனுடன் எழ..
கவி ஆதியிடம் என்ன பேசினான் என்று தெரியாதபொழுதும் அவன் உதிர்த்த கொலையென்ற வார்த்தையும் அவனது முகத்தில் தென்பட்ட பதற்றமும் அலைபுருதலும் அவளை அவனுடன் புறப்படவைத்தது..
தானிருக்கும் நிலையில் தன்னுடன் அவள் இருந்தால் யானைப்பலமென்றே தோன்றியது அவனுக்கு..
போகலாம் என்பதாய் அவசர தலையசைப்பு அவனிடத்தில்..
நூறு தொண்ணூறென்று ஹை ஸ்பீடில் ஆதி காரை இயக்கியப்பொழுதும் கவியின் கல்லூரியை அடைய ஒரு மணி நேரம் எடுத்திருந்தது..
கவியின் கல்லூரியைப் பொறுத்தவரை ப்ரின்சிபால் ஆபீஸிலிருந்து பர்மிஷன் லெட்டர் வாங்கினால் மட்டுமே கிளாஸ் டைமில் மாணவர்களைப் பார்க்க அனுமதிப்பார்கள் என்பதால் ஆதியும் ஆருவும் ப்ரின்சிபால் ஆபிஸிற்கு விரைந்தனர்..
அன்று ஏனோ ஆபிஸில் பெருங்கூட்டம்.. மாணவ மாணவிகளின் கூட்டம்..
இருவராலும் உள்ளே காலெடுத்து வைக்கக்கூட முடியாகூட்டம்..
கையைப் பிசைய மட்டுமே முடிந்தது இருவருக்கும்..
எதேர்ச்சையாக கூட்டத்தைச் சுற்றிப்ப் பார்த்த ஆதிக்கு கவியின் கிளாஸ்மேட் ஒருத்தி கண்ணில்பட நித்யாயென அழைத்திருந்தான் அப்பெண்ணை..
ஆதியைக் கண்டதும் நித்யா அவனிடம் விரைந்து, “அண்ணா.. நல்லவேளை சரியான நேரத்திற்கு வந்துவிட்டீர்கள்..”, என்றாள் ஆசுவாசமாக..
“என்ன நித்யா ஆச்சு..?? கவி எங்கே..??”
“அண்ணா.. அது வந்து..”, எப்படிச் சொல்லவெனத் தயங்கி நின்றாள் அவள்..
“சொல்லுங்க நித்யா.. என்னாச்சு..??”, இது ஆரு..
“ப்ரின்சிப்பல் ரூம் போய் பேசிக்கலாம்..”, என்றவள் இருவரையும் எப்படியோ உள்ளே அழைத்துச் சென்றிருந்தாள்..
கைகளை டேபிளில் அழுந்தவைத்தபடி பிரின்சிபால் தனது இருக்கையில் அமர்ந்திருக்க அவரின் வலதுபக்கம் உடல் முழுதும் இரத்தக்கறைகளுடன் ஒரு ப்ரொபசர்.. அந்தப் ப்ரொபசரின் எதிரில் அவரை முறைத்தபடி காளியின் ஸ்வரூபமாக கவிநயா..
“இப்போ என் கம்பளைன்ட்டை நீங்க எடுதுக்கப்போறீங்கள்ளா இல்லையா..??”, உச்சஸ்தானத்தில் அவளது குரல் ஒலிக்க உள்ளே நுழைந்தனர் ஆதியும் ஆருவும்..
கவியின் கத்தல் ஆதியையே ஒரு நிமிடம் உறையவைக்க அவளிடம் விரைந்தவன், “கவிம்மா.. என்னடா ஆச்சு..??”, என்றுக் கேட்டான்..
தன் எதிரில் நின்றிருந்த ப்ரொபசரைக்காட்டி, “அண்ணா.. இந்தப் பெரிய மனுஷன் தப்புப் பன்னினார்.. இவரைப்பற்றி நான் ப்ரிசிப்பலிடம் கம்ப்ளைன்ட் கொடுக்க வந்தேன்.. பட் இந்தப் ப்ரிசிப்பல் என் கம்ப்ளைன்ட் லெட்டரை வாங்காமல் எனக்கு அட்வைஸ் செய்கிறார்..”, என்றாள்..
பிரச்சனை என்னவென்று தெரியாதபோதும் தன் தங்கை மீதிருந்த நம்பிக்கையில் பிரின்சிபாலிடம் திரும்பிய ஆதி, “ஏன் சார் கம்ப்ளைன்ட் எடுதுக்கமாட்டேங்கறீங்க..??”, என்றான் கேள்வியாய்..
“உங்க சிஸ்டர் நல்லதுக்குத்தான் சொல்றேன்..”, தன்மையாகவே சொன்னப் பிரின்சிபாலுக்கு கவியிடமிருந்து வெளிப்படையான முறைப்பு பரிசாய்..
அதை கவனித்த ஆதி, “தப்பு பண்ணது உங்க ஸ்டாப் அப்படீங்கறதால் கம்ப்ளைன்ட் எடுத்துக்கமாட்டீர்களா..??”, குரலை உயர்த்தி..
அவனது குரலில், “அப்படி இல்லை சார்..”, என்ற பிரின்சிபால், “உங்க தங்கை அவர் மேல் ஹராஸ்மென்ட் கம்ளைன்ட் கொடுத்திருக்காங்க..”, என்றார் தயக்கமாக..
ஆருவும் ஆதியும் ஒரேபோல் கவியைப் பார்க்க அவளது கண்களில் ஒருநொடி சிறுவலி தோன்றி மறைந்து இயல்பானது..
அப்பொழுது தான் புரிந்தது ஆதிக்கு..
நான் யாரையாவது கொலை செஞ்சுட்டேன்னா என்னண்ணா பண்ணுவ என்பதன் முழு அர்த்தம்..
தாமதிக்கவில்லை அவன்..  
வெளுத்திருந்தான் எதிரில் நின்றிருந்தவனை..
கைகள் தளர அவனை அடித்த ஆதிக்கு ஆத்திரம் மட்டும் தீர்ந்தபாடில்லை..
அடிவாங்கியன் சுயநினைவில்லாமல் கீழே விழுந்தபோதிலும் அடிகள் பல விழுந்தது அவனுக்கு கவியின் தமையனிடமிருந்து..
ஆதியின் அடியில் அவன் இறந்துவிடுவானோ என்ற பயம் ஆருவிற்கு..
விரைந்து தடுத்திருந்தாள் அவனை இனி அடிக்காதே என்பதாய்..
“எனக்கு ஆத்திரம் தீரமாட்டேங்குது ஆரு..”, ஓய்ந்து போன குரலில் சொன்னான் அவன்..
“புரியுது ஆதி.. காம் டவுன்..”, என்று அவனது முதுகை லேசாகத் தட்டிக்கொடுத்தவள் மயக்க நிலையில் வீழ்ந்து கிடந்தவனைக் காட்டி, “பாருங்க.. அவன் சுயநினைவில்லாமல் கிடக்கிறான்.. சுயநினைவில்லாமல் கிடக்கும் செத்த பாம்பிவன்.. செத்த பாம்பை அடிக்க வேண்டுமா..?? யோசிங்க ஆதி..”, முடிவை அவனிடமே விட்டபடி..
அவளின் வார்த்தைகள் மூளையை அடைந்த போதிலும் மனது அதைக் கேட்க மறுத்தது..
“அவன் என் தங்கையிடம்..”, என்றவனின் கண்களைக் காணவே அச்சமாக..
கால்களை இரண்டடி பின் எடுத்தே வைத்திருந்தாள் ஆரு..
“அண்ணா.. அவனை எதுவும் செய்யாதே.. விட்டுவிடு.. அண்ணி சொல்வது சரிதான்.. அவன் செத்த பாம்பு.. அவனை அடிப்பதில் பிரயோஜனம் இல்லை..”, சஞ்சல மிகுதியில் தன்னை அறியாமலே அண்ணி என்றிருந்தாள் கவி..
“அப்போ நீயும் இவனை விட்டுவிடலாம் என்கிறாயா..??”
“இல்லை அண்ணா.. விட்டுவிடக்கூடாது.. அதுவும் இவனை போன்றவர்களைக் கண்டிப்பாக விட்டுவிடவே கூடாது”, என்றவள் மீண்டும் ப்ரின்சிபாலிடம் திரும்பி, “இப்போ நீங்க இவர் மேல் ஆக்க்ஷன் எடுக்கவில்லை என்றால் நாங்கள் போலிஸ் ஸ்டேஷன் போறோம் சார்..”, தமையனின் மேலிருந்த நம்பிக்கையில் திடமாகவும் தெளிவாகவும் ஒலித்தது கவியில் குரல்..
ப்ரின்சிபாலுக்கு என்ன முடிவு செய்வதென்றே தெரியவில்லை..
அதேநேரம் கல்லூரி மாணவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு நிர்வாகத்திடம் ஆக்க்ஷன் எடுக்குமாறு வலியுறுத்தி கோஷம் எழுப்ப கல்லூரி கரெஸ்பாண்டென்ட்டை அழைத்திருந்தார் ப்ரின்சி..
பிரச்சனை பெரிதாவது உணர்ந்து கவியிடம் பேசி சமாதானப்படுத்த பதுங்கும் புலியாய் பாய்ந்து வந்திருந்திருந்தார் கரெஸ்பாண்டேன்ட்..
அவருக்கு அவரின் பிஸ்னஸ் பாதிக்கப்படக்கூடாதென்ற கவலை..
ஹராஸ்மென்ட் என்று போட்டு அவரை நீங்கள் பணிநீக்கம் செய்யவில்லை என்றால் போலீசுக்குப் போவேன் என்று நிலையாய் நின்றான் ஆதி..
அவன் சொன்னதைச் செய்தால் கல்லூரியின் பெயர் கெட்டுவிடுமென்று அவனை சமாதனப்படுத்த முயன்றார் கரெஸ்..
அவரின் பேச்சுக்கள் எல்லாம் நீரில் பட்ட புஸ்வானமாக மாறிப்போக அர்ஜுனனைப் போல் தனது கடைசி அஸ்திரத்தைப் பயன்படுத்தினார்..
உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு செய்தி ஆதியின் பெற்றோரைச் சென்றடைந்தது..
-அகிலமாவாயோ நீ..??

Advertisement