Advertisement

                    ஓம் நமச்சிவாய
தாளம் 3
கார்களில் இருந்து நாராயணன், அவர் மனைவி, மகன் சிவா வர, அடுத்த காரில் சாந்தி, அவர் கணவர், மகள் வித்யா மூன்றாவதாக வள்ளி மகள் மற்றும் மகனுடன் வந்தனர்.  
சாந்தியையும் வள்ளியையும்  ஒரே குடும்பத்தில் தான் திருமணம் செய்து தந்து இருந்தனர் ஆனாலும்…. ஒன்றாக வருவது இல்லை தனி தனி கார்தான்.
இந்த படையெடுப்பு ஜெய்க்காக இல்லை மாறாக அன்னத்திற்காக. இவர்கள் இருப்பது பூர்வீக குடும்ப சொத்து. ஜெய்யின் தாத்தா  ரைஸ் மில் வைத்து இருந்தார்.  நாயராயணன் ரைஸ் மில் தனக்கு வேண்டாம் என்றதால்  பங்கு பிரிக்க பட்டு அவர் தனக்கு என தனி தொழில் தெடங்கிவிட்டார். 
ஆனால் வீராசாமி தந்தையின் தொழிலான ரைஸ் மில்லை கையில் எடுத்து கொண்டார். சில வருடங்களுக்கு முன் வரை அது  சிறிய அளவில் மட்டும் இருந்தது.  பக்கத்து ஊர்களுக்கு மட்டும் நெல் அரவை செய்தனர்  அன்னம் மில்லுக்குக்கு வர ஆரம்பித்ததில் இருந்து நல்ல வளர்ச்சிதான்.
சத்தியனும் செய்வான்  தான். ஆனால் இந்த அளவுக்கு சூட்சமம் தெரியுமா?? என்றாள் அது சற்று குறைவு தான். தனக்கு என்று பக்க பலமாக ஆட்கள் உண்டு என்றால் தைரியமாக செய்யும் அவன் இல்லை என்றால் சற்று நிதானமாக தான் செய்வான்.
அடுத்தவர்களுக்கு அரைவைக்கு கொடுத்து போக வீரா பிராண்ட் என்று ஆரம்பித்து ஏற்றுமதி அதிகரிக்க தொடங்கி இருந்தது இப்போது. 
தனி பிராண்ட் என்பதால் தாங்களே சொந்தமாக விதைத்தால் என்ன… என்று நினைத்து நிலம் வாங்கும் போது தான் பிரச்சனை ஆரம்பித்து.
 
ஏற்கனவே அவர்களுக்கு என்று நிலம் உண்டு. இப்போது ஏற்றுமதி அதிகமாக இருக்க இன்னும் தேவை பட்டது.
அவர்களின் நிலத்திற்கு பக்கத்தில் இருந்த நிலம் விலைக்கு வர, நிலம் வீராசாமி பெயரில் வாங்கலாம் என்று அன்னம் சொல்ல, சத்தியன் பெயரில் தான் வாங்க வேண்டும் என்றாள் ரம்யா சத்தியனின் மனைவி. 
வீராசாமி  அதற்கு ஒத்து கொள்ள வில்லை. “இது பொது சொத்து இன்னும் சொத்துக்கள் பிரிக்க படாத போது சத்தியன் பேரில் வாங்குவது முறையில்லை” என்று சொல்ல “அப்ப சொத்தை பிரிங்க” என்று விட்டாள் ரம்யா. 
வீராசாமி சொத்தை பிரித்தவர், தந்தையை போல ரைஸ்மில் மட்டும் பொதுவில் இருக்கட்டும் என்றும் தங்களின் காலத்திற்கு பிறகு அதை நிர்வாகம் செய்பவர்கள் எடுத்து கொள்ளட்டும் என்று முடித்துவிட்டார்.   
இப்போது அதிலும் பிரச்சனையை ஆரம்பித்து விட்டாள் ரம்யா. இது நாள் வரை வீராசாமி தான் நிர்வாகத்தில் இருந்து.  அன்னம் வர ஆரம்பித்தில் இருந்து தொழில் நன்கு போவதால் அவளையே நிர்வாகத்தில் அமர வைக்க வீராசாமி முடிவு செய்ய,  அந்த மில்லில் இருந்து வரும்  பணத்தில் தான் நிலம் வாங்க வேண்டும் என்பதால்.
ரம்யா மீண்டும் ஆரம்பித்து விட்டாள். சாந்தி மற்றும் வள்ளியின் மூத்தவர் பெண்தான் ரம்யா.  ரம்யாவின் இத்தனை பிடிவாத்திற்கும் காரணம் சாந்தியும் வள்ளியும் தான். 
ரம்யா அமைதியாக இருந்தாலும் இவர்கள் விடுவதாய் இல்லை. ரம்யா அண்ணண் திருமணத்திற்காக பிறந்த வீடு போக, அவள் திரும்பி வருவதற்குள் பிரச்சனையை முடிப்பதாக சொல்லி இருந்தார்கள் சாந்தியும் வள்ளியும்.
இன்னும் பத்து நாளில் திருமணம் அதற்கு முன் பேசவே காலையில் சாந்தியும் வள்ளியும் வந்தது. எதிர் பாராமல் ஜெய் வந்து விட பேச்சு அப்படியே நின்று போனது.
“வாங்க மாமா” என்றவள் அனைவருக்கும் சாப்பிட எடுத்து வர சென்றாள். அனைவரும் வந்ததுமே மங்களம் ஃபோன் செய்து விட்டார் வீராசாமிக்கு. 
அவருக்கு தெரியும் காலையில் ஜெய் வந்ததும் நின்று போன பேச்சை தொடரவே அனைவரும் வந்து இருப்பது என்று.
மங்களத்திற்கு அவர்களிடம் பேச தயக்கம் எல்லாம் இல்லை. அவர் தயங்கவும் மாட்டார்.  வெட்டு ஒன்று என்ற ரகத்தில் தான் இருக்கும் அவரின் பேச்சு. இப்போது அவர் நினைப்பது எல்லாம் ஜெய்யை பற்றி மட்டும் தான்.
அவன் வீட்டில் இருக்கும் நேரம் வேறு எந்த பேச்சும் வேண்டாம் என்பதே அவரின் எண்ணம். 
நாராயணன் “எங்க ஜெய்ய காணோம் அண்ணி??”
வள்ளி “திரும்ப போயிட்டானா??”
சாந்தி “போயிருப்பான். அது தான்  வந்துட்டாளோ அது தான்!! அம்மா அப்பாவை பாத்ததும் போயிருப்பான்” என்றார். அன்னம் தந்த பஜ்ஜி பிளேட்டை கையில் எடுத்த படி. 
அன்னம் அவர் சொன்ன எதையும் காதில் வாங்க வில்லை. ஏதோ ஒரு முறை என்றாள் வலிக்கும் எப்போதுமே என்றாள்… “அவ்வளவு தான்  நீ” என்ற எண்ணம் மட்டுமே அன்னதிற்கு. 
ஜெய்யின் ஃபோன் வைபிரேசனில் தான் அவனின் தூக்கம் கலைந்தது. எழுந்து மணி பார்க்க அது நான்கு முப்பது என்றது. ‘இவ்வளவு நேரம்மா தூங்கிட்டேன்’ நினைத்தவன், சுற்றி பார்க்க ஜன்னல் திரை மூடி அறை அரை இருட்டில் இருந்தது.
‘அன்னம் வந்துட்டாளா??” என்ற நினைத்தவன், எழுந்து முகம் கழுவி கீழே வர அனைவரும் இருந்தனர். அவர்களை பார்த்தவனுக்கு  ‘இவங்க மாநாடு முடியவே முடியாத!!’ என்று இருந்தது.
கீழே வந்தவன் சோபாவில் அமர்ந்தான். “அண்ணா… அத்தான்..” என்று அனைவரும் வந்து அவனிடம் பேச, அவர்கள் கேட்ட அனைத்து கேள்விக்கும் பதில் சொல்லி தலையை ஆட்டியே வலியே வந்து விட்டது அத்தனை கேள்விகள்.
அனைத்தும் சினிமா சம்பந்த பட்டது தான். தான் விரும்பிய நட்சத்திரங்களை பற்றியே இருந்தது. அனைத்தும் “அவங்க எப்படி இருப்பாங்க!! நிஜமாவே அவங்க கலரு அதுதான!! அவங்க நம்பர் கிடைக்குமா?? இத்தியாதி இத்தியாதிகள். அனைவரும் இருபதின் ஆரம்பத்தில் இருப்பவர்கள். 
அவர்களுக்கு தெரிந்து எல்லாம்  திரைக்கு முன் தெரிபவர்கள் மட்டுமே. அதனால் அவர்களின் கேள்வியும் அதை பற்றி மட்டுமே இருந்தது. 
உள்ளே இதை எல்லாம் கேட்டு இருந்த அன்னத்திற்கு தான் ‘இவரு சினிமாவிலா இருக்குறாரு!! ஆனா இவரை பத்தி நமக்கு எதுவும் தெரியலையே!!’ என்றதற்கு அவளின் மனமே பதில் சொன்னது ‘அதுக்கு டீவி, பேப்பர் எல்லாம் பாக்கனும் கேக்கனும்’ 
‘ஒன்னு சமையல் கட்டு… இல்லையின்னா மில்லு இதை விட்டு உனக்கு வேற என்ன தெரியும்??’ என்று கேட்க அதை தள்ளி ஓரம் வைத்தவள், வெளியே அவன் பேசும் வார்த்தைக்கு காது கொடுத்தாள். 
“மஞ்சு” என்ற மங்களத்தின் குரலில் தான் “மஞ்சு அத்தை கூப்பிடுறாங்க பாரு” என்றாள்.
“என்னம்மா??” என்ற படி மஞ்சு வர “ஜெய்க்கு  சாப்பாடு எடுத்து வை” என்றார் “ஏய் பசங்களா விடுங்க… அவனை முதல்ல சாப்பிடட்டும் அப்பறமா பேசுங்க” என்றவர். ஜெய்யை டைனிங் டேபிளுக்கு போக சொன்னார்.
அவன் டேபிளில் அமர, அவன் முன் வந்தது சூடான பஜ்ஜியும் டீயும். “சாப்பாடு எங்கம்மா??” என்று ஜெய் மங்களத்தை கேட்க, “இரு வர்றேன்” என்றவர் சமையல் அறைக்கு போக அங்கு அன்னம் சூடாக பஜ்ஜியை போட்டுக்கொண்டு இருந்தாள். 
“அன்னம் சாப்பாடு இல்லையா??” 
“இருக்கு அத்தை. இப்ப வேணாம் மணி ஆச்சு… இப்ப சாப்பிட்டா நைட் சாப்பாடு சாப்பிட முடியாது. இப்ப இதை குடுங்க நான் நைட்டுக்கு வேற செய்றேன்” என்றவள் இன்னும் ஒரு தட்டில் மங்களத்திற்கும் அவனுக்கும் சேர்த்து கொடுத்து அனுப்பினால்.
வெளியில் இருந்தவன் காதில் அனைத்தும் விழ எதுவும் பேசாமல் அவள் தந்ததை சாப்பிட்டு முடிக்க,  மங்களமும் மகனின் முகத்தை தான் பார்த்து இருந்தார்.  இப்போதாவது  அன்னத்தை பற்றி கேட்பான?? என்று. 
அவனோ பஜ்ஜி தான் இப்போது முக்கியமாக நினைத்தவன், அதிலேயோ முழு கவனமும் இருக்க சமையல் அறையில் இருந்து தன்னை ஒருத்தி பார்ப்பது தெரிந்து இருந்தாலும் முகத்தில் எதையும் காட்டிக்கொள்ள வில்லை.
வீராசாமி வந்தவர் “அன்னம்” என குரல் கொடுக்க  டைனிங் டேபிளில் ஜெய் இருப்பதால், அவனை தாண்டி எப்படி செல்ல?? என நினைத்தவள் சமையல் அறையிலேயே நின்று இருந்தாள்.
எப்பேதும் அவர் கார் சத்தம் கேட்கும் முன் வாசலில் இருப்பவள் இன்று தான் குரல் கொடுத்தும் வரமல் போக எட்டி பார்த்தார் உள்ளே. டேபிளில் ஜெய் இருப்பது தெரிய எதுவும் பேசாமல் உள்ளே போக, அங்கு சாந்தியின் கணவர் இருக்க “வாங்க மாப்பிள்ளை” என்றார். 
அது இரண்டு கட்டுகள் கொண்ட வீடு. பழமையும் கொஞ்சம் புதுமையும் இருக்கும். வெளியில் ஹால் கிட்ச்சன் டைனிங்க ஹால் இருக்க, இரண்டாம் கட்டில் பெரிய ஹால், மூன்று படுக்கை அறைகள், பூஜை அறை என்று இருக்கும்.
வீட்டு மனிதர்கள் தவிர வெளி ஆட்கள் முன் ஹாலுடனே நிற்க வேண்டும். அதனால் வெளியில் இருந்து யார் வந்தாலும் உள்ளே ஹாலுக்கு போனால் தான் தெரியும் ஆட்கள் இருப்பது. அதனால் தான் வீராசாமி வந்தது சாந்தியின் கணவர் மூர்த்திக்கு  தெரியவில்லை. 
“வர்றேன் மாமா” என்றவருடன் வீராசாமி பேச ஆரம்பித்தார். அவர்களின் பேச்சு சத்தத்தில் மற்றவர்கள் அறைக்குள் இருந்து வெளியே வர,   அவருக்கும் தெரிந்து விட்டது அனைவரும் இன்று ஒரு முடிவு தெரியாமல் போக மாட்டார்கள் என்று. 
வள்ளியின் கணவர் வெளி நாட்டில் இருக்க சிறிது நேரத்தில் அவரும் வருவார் ஃபோன் வழியாக. 
  
ஜெய் சாப்பிட்டு முடித்தவன் ஹாலுக்கு வர, அனைவரும் அவனை தான் பார்த்து இருந்தனர்.  சோபாவில் ஜெய் அமர  அவன் பக்கத்தில் மங்களம் வந்து அமர்ந்தார்.
மூர்த்தி தான் ஆரம்பித்தார் “அது தான் ஜெய் வந்துட்டான்ல மாமா.. இப்ப நீங்க சொல்லுங்க” என்று. 
மங்களம் தான் கேட்டார்  “இப்ப தான் ஊர்ல இருந்து வந்து இருக்கான். அவனுக்கு விசயமே தெரியாது… அதுகுள்ள பேசுங்க அப்படின்னு சொன்ன என்ன சொல்ல.. ரெண்டு நாள் போகட்டும் அப்பறமா பேசலாம் இப்ப என்ன அவசரம்” என.
“என்ன அண்ணி அப்படி சொல்லிட்டீங்க… என்ன அவசரம்ன்னு?? ரம்யா வர்றதுகுள்ள பேசனுன்னு தான வந்து இருக்கோம். விசயத்தை சொல்லுங்க ஜெய் முடிவ சொல்லட்டும்” என்று சாந்தி.
சாந்தியின் பேச்சு வீராசாமிக்கு சுத்தமாக பிடிக்க வில்லை. “அவ்வளவு அவசரம் அப்படின்னா கொஞ்ச நாளைக்கு ரம்யா அங்கயே இருக்கட்டும் சாந்தி” என்று சொல்ல “மாமா என்ன இது!!” என்று மூர்த்தியும் “அண்ணா” என்று நாராயணனும்  சொல்ல 
“பின்ன என்னடா… இன்னும் விசயம் சொல்லலை அதுகுள்ள முடிவ சொல்லுன்னா?? அவ்வளவு அவசரம் எதுக்கு??  பொறுமையா இருங்க பேசலாம்” என்றார் முடிவாக. 
ஜெய் பேசுவதை அமைதியாக கேட்டு இருக்க, உள்ளே இருந்த அன்னதிற்கு தான் படபடப்பாய் இருந்தது.   
மங்களத்தின் பேச்சில் இருந்து ஜெய்யின் குணங்கள் அவளுக்கு நன்கு தெரியும்.  ‘எங்கே பட்டென பேசி விடுவானே?? மீண்டும் சண்டை வந்து விடுமோ??’ என்று தான் நினைத்து இருந்தாள்.. ஆனால் அவன் காலையிலேயே ஆரம்பித்து வைத்து அவளுக்கு தெரியாது.?
சண்டை என்பதை விட கோபத்தில் அவன் மறுபடியும் சென்று விடுவானோ என்று தான் அவளுக்கு தோன்றியது.  ஹாலுக்கு வந்தவள்  மெதுவாக எட்டி பார்க்க அவனின் யோசனையான முகம் தான் தெரிந்தது.
‘என்ன அப்படி ஒரு யோசனை?’  என்று இவள் டைனிங் டேபிளில் அமர்ந்து இருக்க பின்னால் ஏதே நிழலாடுவது போல் இருந்தது. அன்னம் பின்னால் திரும்பி பார்க்க அவளை பார்த்த படி நின்று இருந்தான் ஜெய். 
மூச்சைடைத்து விட்டது அன்னதிற்கு.  காலையில் தன்னை பார்க்கும் போது இருந்த ஆராய்ச்சி பார்வை இது இல்லை ஆளையே முழுக வைக்கும் பார்வை. அவனையே பார்த்து இருந்தவளுக்கு அருகில் அவன் சத்தம் கேட்டதும் தான் புரிந்தது இத்தனை நேரம் தான் தான் அவனையே பார்த்து இருந்தது.
“ஒரு டீ சக்கரை தூக்கல வேணும் “என்றவன் முன்னே போக, ‘இவரு என்கிட்டயா பேசுனாரு!!’ என்று பார்த்து இருந்தாள் அன்னம். 
வீராசாமி பேசும் போதே உள்ளே வந்து இருந்தான் சத்தியன். காலையில் அவர்கள் பேச ஆரம்பிக்கும் போதே அவனுக்கு பிடிக்கவில்லை.  அப்போதே தடுத்து இருக்க வேண்டுமோ என்று தான் தோன்றியது அவனுக்கு.
ரம்யாவின் பிடிவாதம் தெரிந்து தான் அவன் அமைதியாக இருந்தது. ஜெய் வீட்டில் இல்லாமல் வீராசாமியும் மங்களமும் உடைந்து போய் இருக்க இப்போது தனக்கும் ரம்யாவுக்கும் இடையே சண்டை என்றால் என்ன செய்ய என்று நினைத்து தான் அவன் ரம்யாவின் சொல்லுக்கு  அவன் தலையாட்டுவது. 
அதுவே இப்போது தவறாகி போனதோ என்ற நினைவு இப்போது அவனுக்கு. அவனும் ரம்யாவிடம் சொல்லி பார்த்தாகிவிட்டது அவள் “சரி” என்றாலும் அத்தைகள் இங்கு வந்தாலே ரம்யாவின் குணம் மாறி விடும். 
“என்ன செய்ய??” என்று நினைக்க வந்து விட்டான் ஜெய்.  இனி என்ன பயம்?? இப்போது சத்தியனே சொல்லிவிட்டான் “அத்தை அப்பா சொன்னது போல இன்னும் கொஞ்ச நாளுக்கு ரம்யா அங்கயே இருக்கட்டும்” என்று 
மூர்த்தி சாந்தியை பார்க்க அப்போது தான் ஒலித்தது ஜெய்யின் ஃபோன்.  எடுத்தவன் அனைவரையும் பார்த்தவன் “உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாத??” என்று சொன்னது அங்கு இருந்தவர்களுக்கா இல்லை ஃபோனில் அழைத்தவருக்கா என்று தான் தெரியவில்லை!!! 
சத்தியனுக்கு சிரிப்பு வரும் போல் இருக்க அவனிடமும் “டேய் வந்ததும் என்ன பேச்சு.. போ ஃபிரஷ் ஆகிட்டு வா வெளிய போகனும்” என்றவன் சென்றது அன்னத்திடம் டீ கேட்க தான்.
அவன் பேசிய படி வெளியே போக  இங்கு சாந்தி, வள்ளி, மூர்த்தி முகத்தில் என்ன என்று சொல்ல முடியாத பாவம்.  நாராயணன் தான் அவர்களை  சமாதானம் செய்து கொண்டு இருந்தார்.
‘சாந்தி  இப்ப எந்த பேச்சும் வேண்டாம். வாங்க போகலாம்” என்று. “ ஏழு வருசம் எங்க இருந்தானு தெரியலை.. இப்ப வந்து நாட்டாமை செஞ்ச நாங்க  போயிடனுமா??” என்று வள்ளி கேட்க 
சத்தியன் தான் சொன்னான் “அவன் வீடு அவன் நாட்டாமை செய்யாம வேற யார் அத்தை செய்வாங்க??  ஏதாவது பேசி உங்க பொண்ணை உங்க கூடவே நிரந்தரமா வைச்சுக்காதீங்க” என்று சத்தியனின் இந்த பேச்சு அனைவருக்குமே புதிது தான். அவர்கள் இவனை பார்த்த படி இருக்க ஜெய் சொன்னதை செய்ய அறைக்கு சென்றான் சத்தியன். 
அறைக்கு சென்றவன் மனைவியை காய்ச்சி எடுத்து இருந்தான். “நீ என்ன… அப்பா வீட்டுக்கு போறேன்னு சொல்லுறது… இப்ப நான் சொல்லுறேன் இனி நீ இங்க வராத… நான் அவ்வளவு சொல்லியும் நீ  அத்தைங்கள இங்க அனுப்பி இருக்க… அப்ப என் பேச்சுக்கு என்ன மதிப்பு உன் கிட்ட… முதல்ல இருந்தே உன்னைய அடக்கி வைச்சு இருக்கனும்”
“வீட்டுல பிரச்சனை வேண்டாம் அப்படின்னு நினைச்சா, நீ… உன் இஷ்டத்துக்கு செய்வியா??” என்று ஃபோனை வைத்து விட்டான். திரும்பி ரம்யா அழைக்க அவன் எடுக்க வில்லை இங்கு. 
ரம்யாதான் பயந்து போனால். சத்தியன் எப்போதும் அமைதி தான் ஆனால் கோபம் வந்து விட்டால் என்ன செய்தாலும் இறங்க மாட்டான். இப்போது என்ன செய்ய??  அழைத்து விட்டாள்  மூர்த்திக்கு.  “சித்தப்பா.. நீங்க வாங்க இங்க எதுவும் பேச வேண்டாம்” என்று.
ஜெய் பேசிய படி வெளியே நின்று இருக்க அன்னம் சென்றாள் கையில் டீயுடன். முன் புறம் திரும்பி நின்று அவன் பேசி கொண்டு இருக்க, இவளுக்கு தான் அவனை எப்படி அழைக்க?? என தெரியவில்லை.  
முன்பு அழைத்து பழக்கம் இருந்து இருந்தால் கூட அழைத்து இருப்பாள். இப்போது திடீர் என்று எப்படி?? அதுவும் அவன் தென்னை மரத்தில் சாய்ந்து ஒரு காலை அதுக்கு முட்டு கொடுக்கும் போஸில் நின்று கொண்டு பேச இவன் தான் அந்த மரத்தை தாங்குவது போல் தோன்றியது அவளுக்கு.
‘எப்படி அழைக்க’ என்ற சிந்தனையில் இருந்தவளை அவனே கலைத்தான் “டீ கொண்டு வந்தா குடுக்க தெரியாத?? பேசமா நின்னு இருந்தா எப்படி??” என்று. அவனே கையில் இருந்ததை வாங்கி குடிக்க இவளுக்கு ‘என்ன சொல்ல??” 
வரும் போதே  அவனிடம் எப்படி பேச என மனதில் பேசி பார்த்து கொண்டே வந்தாலும் மறந்து விடும் தன் புத்தியை  தானே அடித்து கொண்டாள்.  
டீ குடித்தவன் “நான் வெளிய போறேன். நைட் வர லேட் ஆகும் சாதம் மட்டும் போதும் டேபிள் மேல வைச்சுடு” என்று  சென்று விட்டான். போகும் அவனையே தான் பார்த்து இருந்தாள் அன்னம்…….
“இருவர் ஆடும் சதுரங்கம் ஆட்டம் இது 
முதலில் பகடையை உருட்டுவது யார்……”
தாளத்தில் சேராத தனி பாடல்
                                                                                                                                         
                                                                                                                                                                                                                             

Advertisement