Advertisement

Thankyou  geethabalan, selvi , sugi , sujatha , shereen , rathy , usharanibalaji , suba , niran , pons akka , mythili , saji , sathya , amirthababu , sai , j kruthika , SD , nira , vathani prabu , padmi , meena ,   uma uday , jass , ezhilkailash , kodiuma , geetha , malargal , sathya , lakshmi jay , vijivenkat , sri , swapna , lavanya , umamanoj , subhasankar , vaisri , shanthi , sumathi , selvi pandiyan , anita , katlak , stulip , priyagautham, prem , AA , deebi , ini , aruna , ruthra , banu , vasantha , suba , sindhuja , mathi , kanchana , poorvaja , adhibala , sruti , suganya , suba ,

Thanks for the friends who posted their feedbacks in the Forum ( pre cap )

selvi , rathy , malar ,  sswapna , sathyaicmc , kodiuma , sathya, satyasriram , mathi , sena , jass , sathya , malathy , 

Thank you friends for the continuous support , encouragement, comments and feedbacks……. 

 

“He may not be perfect, but he is the perfect one for me!”

 Despite all odds, Annakili firmly believes Vikram and is always on her way to find the goodness behind his harsh words. She wants her family to also understand that and act accordingly.

Kandasamy on the look out to find how exactly Annakili spending time with Vikram. Vikram’s empty house and empty pocket are a known to him, hence he finds himself some way to settle things with Vikram through Annakili and get them some household items.

What will be Vikram’s reaction as he was already against that idea? What will Annakili do? Will handle Vikram or make Kandasamy understand that it is high time he thinks about settling down in life?

Vikram, Annakili and Kandasamy are there with their own reservations and thoughts about one another.

And, Annakili already pleasantly surprised by Vikram’s playful talks, will she shed her inhibitions and try to dig more about Vikram or will she opt to stay quiet until he opens up himself.

அத்தியாயம் ஏழு :

கந்தசாமி தான் என்ன பேசினாலும் விக்ரம் கோபப்பட வாய்ப்பிருக்கிறது என்று புரிந்தவனாக…..

“நீங்க சொல்லுங்க பிரபா”, என்று பிரபாகரனை பார்த்து சொல்ல….

“சென்னையில இருந்த பாட்டி தாத்தாவோட சாமான் எல்லாம் எங்க வீட்ல இருக்குங்களாம் மாமா….. அத்தை அங்க இருந்ததுனால அதை பார்த்துக்கிட்டாங்களாம் அம்மா….. இப்போ அத்தை இங்க வந்துட்டதால அதை எடுத்துக்க சொன்னாங்க”, என்றான் மனப்பாடம் செய்து வைத்ததை ஒப்பிப்பது போல….    

விக்ரம் வீட்டை விற்ற போது அங்கிருந்த சாமான்களை எல்லாம் லதாவின் வீட்டில் தான் கொண்டு வந்தார்கள்….. எல்லாவற்றையும் அவர்கள் வீட்டில் பின்கட்டில் இருந்த ரூமில் போட்டு வைத்தார்கள்.

அதன் பிறகு அதை விக்ரம் மறந்தே விட்டான்…… ஏறக்குறைய பன்னிரண்டு வருடங்கள் அந்த சாமான்கள் இருக்கிறதா? இல்லையா? எந்த நிலைமையில் இருக்கிறது என்று கேட்கும் அவசியம் விக்ரமிற்கு வரவேயில்லை.

இதுவரை பேச்சலர் என்ற பெயரில் ரூமில் தனிமை வாசம்…. இப்போது அவனுக்கு பணியின் நிமித்தம் வீடு கொடுக்கப்பட்ட பிறகு…. தேவையான பொருட்களை ஒரு நான்கைந்து மாதங்கள் போகட்டும், அவனால் சமாளிக்க முடியும் என்று தோன்றும் அளவுக்கு பணம் சேர்ந்த பிறகு வாங்கலாம் என்று  நினைத்திருந்தான்.

அப்போதும் அவனின் அம்மா, அப்பாவின் பொருட்கள் ஞாபகத்தில் இல்லை…… இருந்திருந்தாலும் விக்ரம் நிச்சயமாக அவனாக கேட்டிருக்க மாட்டான்….

இந்த நான்கு வருடங்களாக தான் அன்னகிளி அவனின் மனைவி, அதற்கு முன்பு எதற்கு வைத்திருந்தாளாம்….. மீண்டும் அவனை அவனின் அக்கா கார்னர் செய்வது போல தோன்றியது.  

இப்போது என்ன செய்வது, என்ன பதில் சொல்வது என்று அவனுக்கு புரியவில்லை….  விக்ரம் அமைதியாக இருந்தான். கந்தசாமி அன்னகிளியை பார்த்தவன்…. “உங்களுக்கு தெரியுமாமே பாப்பா! அண்ணி சொன்னாங்க!”, என்றான்.

விக்ரம் அன்னகிளியை பார்க்க…..     

“சாமான் இருக்குறது தெரியுமுங்க”, என்றாள்..   

“என்னென்ன இருக்கு?”,

“எல்லாமே தான் இருக்கு…… கொஞ்ச மாசத்துக்கு ஒரு தரம் அண்ணி அந்த பொருளுங்களையெல்லாம் எடுத்து……. தூசு தட்டி…. வார்னிஷ் பண்ணி… அப்படி துடைச்சு துடைச்சு வைப்பாங்கங்க……”,

இவர்கள் சீர்வரிசை வேண்டாம் என்றால் இது என்ன புது சிக்கல், இவர்கள் என்னை ஒரு வழியாக்காமல் விட மாட்டார்கள் போல……

அவனுடைய அப்பா அம்மாவின் பொருட்கள் தான், ஆனால் அவர்கள் வீட்டில் இருந்து எந்த சீர் வரிசையும் வேண்டாம் என்று சொல்லிய பிறகு….. அவர்கள் வீட்டில் பாதுகாத்து வைத்தது தங்களின் பொருட்களேயானாலும்  எடுத்துக் கொள்ள மனம் சம்மதப்படவில்லை.

விக்ரமின் முகத்தில் ஒரு திருப்தி இன்மையை ஒரு குழப்பத்தை பார்த்த அன்னகிளி…. “என்னன்னு பேசிட்டு சொல்றோமுங்கன்னா……”, என்றாள் அவன் முகம் பார்த்தே.

விக்ரமிற்கு தொலைபேசியில் அழைப்பு வர… அதை எடுத்து பேசிக்கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்…

அவன் சென்றதுமே, “எப்போயிருந்துங்க பாப்பா, இப்படி உன்ற வீட்டுக்காரர் முகத்தை பார்த்தே பேசக் கத்துக்கிடீங்க”, என்றான் புன்னகையோடே….

அன்னகிளி பதிலுக்கு புன்னகைக்க……

“எப்படி பார்த்துக்கறார் பாப்பா உங்களை…. ஒன்னும் கஷ்டமா இல்லீங்களே…… முகத்தை பார்த்தா அழுத மாதிரி தெரியுதுங்க…. உண்மையா சொல்லணும், என்கிட்டே மறைக்க கூடாது, அப்போ தான் என்னால நிம்மதியா தூங்க கூட முடியும்”, என்று அன்னகிளியை பார்த்து சொல்ல…..

“கொஞ்சம் திட்டு வாங்கறேன் தான்….. ஆனா அவர் பேசுறது எல்லாம் சரி போல தான் தோணுதுங்கண்ணா…… தப்பா எதுவும் இல்லீங்க…   நல்லா பார்த்துக்கறார்….. ஒரு நாள்ல உனக்கு என்ன தெரியும்ன்னு நீங்க கேட்கலாம்…… ஆனா நிஜமா நல்லா பார்த்துக்கறாருங்கண்ணா…….. இந்த ஒரு மணி நேரத்துலேயே என்னால நிச்சயமா சொல்ல முடியும்…”,

“அப்புறம் ஏன் நாலு வருஷமா உங்களை எட்டிக் கூட பார்க்கலையாம்…..”, 

“நீங்கல்லாம் தானே அவருக்கு என்னை கல்யாணம் பண்ணி வெச்சீங்க, அப்போ நீங்க தானே கொண்டு போய் விட்டிருக்கணும்…”,

“உன்ற வீட்டுகாரர் ரொம்ப பேசிட்டார்ங்க பாப்பா! என்னால உங்களை அவர்கூட அனுப்பறதை பத்தி யோசிக்க கூட முடியலை… இப்போவும் என் மனசு அந்த வார்த்தையை நினைச்சா கொதிக்குது தான்……. ஆனா உங்களுக்காக பார்க்கிறேன்…..  இப்போவாவது சாமான் செட்டு இல்லைனாலும் வீடுன்னு ஒன்னு இருக்கு, அப்போ அது கூட இல்லையே ரூம்ல் தானே இருந்தார்……”,

“இது, இந்த மாதிரியான உங்க எண்ணங்கள் தான் அவரையும் என்னையும் பிரிச்சு வெச்சிருச்சு…… கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி இதை பத்தியெல்லாம் யோசிச்சிருக்கணும்……. கல்யாணம் பண்ணிக் குடுத்துட்டு யோசிச்சா….. அது சரியிலீங்களே…..”,

“பாப்பா!”, என்று மறுபடியும் கந்தசாமி ஆரம்பிக்கவும்……   

“அண்ணா! முதல்ல இப்படி அவரை குறைவா பேசறதை நிறுத்துங்க… எதையும் சொல்லிட்டு உடனே பதிலை எதிர்பார்க்காத்தீங்க! அவரை முடிவெடுக்க விடுங்க…. உங்க முடிவை திணிக்காதீங்க…….   அவர் எதுலயும் குறைஞ்சு போயிடலை…”,     

“முதல்ல நீங்க இன்னமும் என்னை பத்தி கவலைப்படறதை விட்டுட்டு உங்க வாழ்க்கையை பாருங்க……”,

“ஏனுங்க பாப்பா, உங்களை நீங்களே பார்த்துக்கற அளவுக்கு பெரியாளாயிட்டீங்களோ”, என்று கந்தசாமி வருத்தமாக முறுக்க……

“நான் என்னை பார்த்துக்கணும்னு இல்லீங்கண்ணா…… அவர் என்னை பார்த்துக்குவார்….. நீங்க உங்க வாழ்க்கையை பாருங்க”, என்றாள் சற்று கோபமாக….

இப்போது சூழல் எதுவாக இருந்தாலும் கந்தசாமிக்காக தானே அன்னகிளி விக்ரமை தேடி வந்தாள்….. விக்ரம் அவளை திட்டினாலும் அக்கறையாக பார்த்துக் கொள்கிறான், அதில் அவளுக்கு எப்போதும் மாற்றுக் கருத்து இல்லை….

ஆனாலும் அவளாக தானே தேடி வந்தாள்….. அதனால் தானே இந்த மாதிரி சூழல்கள் உருவாக…….. விக்ரம் அவளை கூட கூப்பிட்டுக் கொள்ளும் நிலைமைக்கு தள்ளப் பட்டான்.  

இவ்வளவு நடந்த பிறகு திரும்பவும் கந்தசாமி பழயதையே பேசவும் கோபம் வந்தது.

“அண்ணா! நீங்க உங்க பாப்பாவுக்காக ஏதாவது செய்யணும்னு நினைச்சீங்கன்னா….. அடுத்தமுறை உங்க கல்யாண செய்தியோட தான் நான் உங்களை பார்க்கணும்……. அதுவரைக்கும் நானே உங்களை பார்க்கணும்னு போல இருக்கு வாங்கன்னு கூப்பிட்டா கூட நீங்க வரக் கூடாது”, என்றாள் திடமான குரலில்…..     

“அப்போ எனக்காக தான் உன்ற ஊட்டுக்காரரை தேடி நீங்க வந்தீங்களா”, என்று சரியாக வேர் பிடித்துக் கேட்க….

“நீங்க இப்படி கேட்கறது மட்டும் அவர் காதுல விழுந்தது, உங்க அண்ணனுக்காக நீ என் கூட பொழைக்க வேண்டாம்னு உங்களோடயே திரும்ப அனுப்பிச்சிடுவார், அது தான் உங்களுக்கு வேணுமுங்களா….”,

செய்யக்கூடியவன் விக்ரம் என்பதால் கந்தசாமி அமைதியானான்…. மேலே பேசவில்லை…. எதற்காக அன்னகிளி வந்திருந்தாலும், இப்போது அவர்களை சேர்ந்து பார்க்கையில் கந்தசாமிக்கு திருப்தியே, அவன் பயந்தது போல அன்னகிளியின் வாழ்க்கை இருக்காது என்று தோன்றியது.

அவர்கள் இவ்வளவு நேரம் பேசும்போதும் விக்ரம் வரவில்லை……. அவனுடைய வக்கீல் நண்பன் ஒருவன் ஒரு கேசை எப்படி நடத்திக் கொண்டு போவது என்பது பற்றி ஆலோசனை கேட்டுக் கொண்டிருந்தான். அதற்கும் இவனுடைய ஜூரிஸ்ட்ரிக்ஷனுக்கும் சம்மந்தமில்லை. ஜட்ஜ்மென்டிற்கும் இவனுக்கும் சம்மந்தமில்லை.

கேஸ் என்றால் எப்போதும் ஆர்வம் விக்ரமிற்கு, அது அவனை முழுதாக இழுத்து பிடித்து விட………  எப்பொழுதுமே அதிகமாக பேசும் விக்ரம் நண்பனிடம் பேசி தள்ளி விட்டான்.

கிட்ட தட்ட ஒரு மணி நேரம் கழித்தே வந்தான். அதற்குள் கந்தசாமி திருமணம் செய்து கொள்ள வித விதமாக பேசி கொண்டிருந்தாள் அன்னகிளி.

பிரபாகரன் அமர்ந்த வாக்கிலேயே உறங்கியிருந்தான்.

“சாப்பிட வாங்கிட்டு வர சொல்லிட்டியா”, என்று அன்னகிளியிடம் கேட்டுகொண்டே விக்ரம் வர…..

அன்னகிளி விழிக்கவும்….

“நான் தான் பேசிட்டு இருக்கனல்ல… பாரு பிரபா சாப்பிடாம தூங்கிட்டான்….. டிரைவர் வாசல்ல தானே இருக்கார், என் பர்ஸ்ல இருந்து பணத்தை எடுத்து  வாங்கிட்டு வர சொல்ல வேண்டியதுதானே… இதெல்லாமா கூட சொல்லுவாங்க”, என்று கடிந்து பேச……….

அன்னகிளி எப்போதும் போல, “பே”, என்று நின்றாள்.

கண்டிப்பாக அது ஒரு திட்டு தான்… அன்னகிளி வாங்கினால் தான்….. ஆனால் கந்தசாமிக்கு நிச்சயம் வருத்தமில்லை….. அவன் திட்டின போதும் அதில் ஏதோ ஒன்று கந்தசாமிக்கு திருப்தியாக தான் இருந்தது.

வாழ்க்கையில் வென்று கொண்டிருக்கும் மனிதனை சீண்டிக் கொண்டே இருப்பது அழகல்ல…. அவனுக்கு வேண்டுமென்றால் சாமானை எடுத்துக் கொள்ளட்டும்….. இல்லையா விட்டுவிடட்டும்…. இதற்காக ஒரு வாக்குவாதத்தில் ஈடுபட இப்போது கந்த்சாமிக்கே விருப்பமில்லை….

நாம் நினைப்பது போல மனிதர்கள் இருப்பதில்லை….. நம்முடைய பார்வையிலும் தவறு இருக்கலாம் என்று கந்தசாமிக்கு தோன்றியது….

சீர்வரிசையா அன்னகிளிக்கு சந்தோஷத்தை கொடுக்கும்… அதை கொடுக்க கூடியவன் விக்ரமாக இருக்க…… வீணாக விக்ரமை சீண்டி விட்டு தங்கையின் நான்கு வருட வாழ்க்கையை வீணடித்து விட்டது போன்ற குற்ற உணர்ச்சி கந்தசாமிக்கு தோன்றியது. 

“என்ன சாப்பிடறாங்கன்னு கேளு”, என்று விக்ரம் அன்னகிளியை அதட்டி கொண்டு இருக்கவும்….

“இல்லீங்க! நாங்க வீட்டுக்கு கிளம்பறோம்….. பிரபாக்கு பரீட்ச்சை நடக்குது! அண்ணி ஒரு பத்து தரமாவது சீக்கிரம் திரும்பிட சொன்னாங்க! இன்னொரு நாள் கண்டிப்பா வர்றனுங்க!”, என்று நல்லவிதமாகவே சொல்லி பிரபாகரனை அப்படியே தூக்கி தோள் மேல் போட்டுக் கொண்டு கந்தசாமி சென்றவன்…….

“செல்லுமுன் பாப்பாக்கு மாத்திக்க கூட துணி இருக்காதுங்க….. அவங்களோட ஒரு நாலஞ்சு செட் துணி மட்டும் அம்மா குடுத்து விட்டாங்க….. அப்புறம் வேண்டியதை நீங்களே வாங்கிக்கங்க……. இப்போதைக்கு கார்ல இருக்கு எடுத்து குடுக்கட்டுமுங்களா….”, என்றான் சம்மதத்தை வேண்டி…..

“ம்”, என்று விக்ரம் தலையாட்டவும்…. அந்த பேகை டிரைவரிடம் கொடுத்து வீட்டின் உள் சேர்ப்பிக்க சொல்லி சென்று விட்டான்.     

“என்னடி அதிசயம்! உங்கண்ணன் என்கூட சண்டை போடாம……… என்னை முறைச்சு பார்க்காம……. முக்கியமா என்னை இளக்காரமா பார்க்காம போறார்… என்ன மந்திரம் போட்ட….. நீ போட்டியா இல்லை, என் வேலை போட்டுச்சா…..”,

அன்னகிளி அமைதியாக இருக்கவும்…..

“கல்யாணமாகி எங்கக்கா உங்க வீட்டுக்கு வந்த நாள்ல இருந்து உங்கண்ணன் என்னை இளக்காரமா தான் பார்ப்பான்”,

“பிரபாக்கு மொட்டை அடிச்சு காது குத்தும் போது அதுக்கு நல்ல நாள் குறிச்சாங்க…… அப்போ கரக்டா எனக்கு பீ எல் எக்ஸாம்….. நான் அந்த நாள்ல வர முடியாதுன்னு சொன்னேன்…. ஆனா எனக்கு வரணும்னு ஆசையா இருக்கு! முடிஞ்சா வேற நாள் மாத்தி வைக்க முயற்சி பண்ணேன், அப்படின்னு எங்கக்கா கிட்ட சொல்றேன்…..”,

“அதுக்கு உங்கண்ணன் என் காது படவே சொல்றான்…. இவன் என்ன தாய் மாமன் சீர் கொண்டு வருவான்னு இவனுக்காக நாளை மாத்தி வைக்கணும்னு……..”,

“நீ சின்ன பொண்ணு உனக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை….. அப்போ எனக்கு என்ன வயசு….. ஜஸ்ட் ட்வென்டி….. மனசு அவ்வளவா இந்த மாதிரி வார்த்தைகளை தாங்காத வயசு….”,

“அதுக்கப்புறம் அந்த ஃபங்க்ஷன்க்கு வரவே பிடிக்கலை….. ஆனா எனக்காக நாளை மாத்தி வெச்சு எங்கக்கா நான் வரணும்னு பிடிவாதம்….. அப்போதைக்கு நானும் சௌமியும் தானே அவளுக்கு பிறந்த வீட்டு சொந்தம்…. போனோம்…. நிஜமாவே அந்த பையனுக்கு என்னால ஒரு செட் துணி, சின்னதா ஒரு நட்சத்திர தோடு மட்டும் தான் வாங்க முடிஞ்சது….. அதை வாங்கிட்டு போனேன்….”,

“அது கூட லதாக்கா எனக்கு குடுத்த பணத்துல மிச்சம் பண்ணி வாங்கினது தான். ஆனா எங்கக்காக்கு சபைல குடுக்க அது பத்தலை! அவளா துணி மணி இன்னும் ஒரு நகைன்னு வாங்கி இதை கொடுன்னு சொல்லி கட்டாயப்படுத்தினா! எனக்கு அதுல இஷ்டமில்லாத போதும் மறுத்து பேச முடியாம அவ சொன்ன மாதிரி செஞ்சேன்”,

“ஆனா அதையும் உங்க சின்னண்ணன் தெரிஞ்சிகிட்டு உங்கப்பா கிட்ட சொல்லி, அதுக்கு எங்கக்காவை கூப்பிட்டு ஒரு என்குயரி வெச்சு…. அது நாலு பேருக்கு தெரிஞ்சு.. இன்னும் என்னை இளக்காரமா பார்த்தாங்க….”,

“ப்ச்! இப்படி ஒன்னு ரெண்டில்ல சொல்லிட்டே போகலாம்… நீ சொல்லு, உங்க வீட்ல இருந்து சீர்ன்ற பேர்ல என்னால எதாவது வாங்க முடியுமா….”,

“தெரியாம செஞ்சிருப்பாங்க, மறந்துடலாமே அதை!”, என்றாள் கம்மிய குரலில்….

“ஏண்டி? ஏண்டி பேச மாட்ட நீ….? நான் சாப்பாடு தான் சாப்பிடறேன்…… வேற எதையும் சாப்பிடலை…….. அப்படி என்னால எதையும் மறக்க முடியாது…..”,

“ஏன் இப்படி பேசறீங்க, இப்படி எல்லாம் பேசாதீங்க…..”, என்றாள் பதை பதைத்து…   

“நான் இப்படி தான் பேசுவேன்….. இந்த உங்கண்ணனே உன்னை கூப்பிட்டு என்கூட பேசக் கூடாதுன்னு உன்னை திட்டியிருக்கான் ஞாபகம் இருக்கா!”, என்றான் ஆத்திரமாக.

அன்னகிளி அன்றைய நினைவுகளில் மெளனமாக நிற்கவும்…..

“இப்படி நின்னு என் கோபத்தை இன்னும் அதிகப்படுத்தாத…. என்னடி பேசினேன் உன்கிட்ட….. எனக்கு சரியில்லைன்னு தோணின விஷயத்தை உன்கிட்ட சொன்னேன் அதை செய்யாதன்னு…… நீ சின்ன பொண்ணு உனக்கு விவரம் பத்தாதுன்னு ஒரு அக்கறையில சொன்னேன்”,

“ஆனா என்ன விஷயம்னு கூட உங்கண்ணனுக்கு தெரியாது…. நான் உன்கிட்ட பேசினதை பார்த்துட்டு, என்னங்க பாப்பா உங்களுக்கு அவன் கூட பேச்சு உன்னை கண்டிச்சான்……. கண்டிச்சதோட விட்டானா….   உங்க அப்பா அம்மா கிட்ட சொல்லி எங்கக்கா கிட்ட சொல்லி……  அதை ஒரு பெரிய விஷயமாக்கி…… ப்ச்…..”,

“நான் நீங்க எதுக்கு பேசினீங்கன்னு சொல்ல போனேன்…… ஆனா நீங்க தான் வேண்டாம்னு சொன்னிங்க”, என்றாள் அழுகைக்கு ரெடியாகி…..

“என்கிட்டே பேசினது மட்டும் தன் உங்கண்ணன் கண்ணுக்கு தெரியும், வேற எதுவும் தெரியாது…. இதுல நீயா விஷயத்தை சொன்னா….. அதையும் உங்கண்ணன் டமாரம் அடிப்பான்…. சரியான லூசுபய…… நான் சொன்னதை நீ கேட்டிருந்தா எந்த பிரச்சனையும் இல்லை……”, 

“அப்பவும் உங்கண்ணன் டமாரம் அடிச்சான்…. உன்னை காப்பாத்த போய் நான் மாட்டிகிட்டேன்…..”,    

“ப்ச்! இனி பேசி பிரயோஜனமில்லை…. நீ சும்மா சும்மா அழுது அழுது என்னை பயமுறுத்த ட்ரை பண்ணாத”, என்று அதட்டியவன்….

“பேசிப் பேசியே! எனக்கு பசி எடுத்துகிச்சி…….  உன்னால சமைக்க தான் முடியாது! சாப்பாடு வாங்கிட்டு வர சொல்லக் கூடவா முடியாது”, என்று தலையை பிடித்து நான் செய்ய மாட்டேன் என்பது போல அமர்ந்து கொண்டான்.

“நான் சொன்னால் நீ செய்ய வேண்டும்”, என்ற பிடிவாதம் தெரிய….

மெதுவாக நடந்து ரூமினுள் போய் விக்ரம் கழட்டி போட்ட பேண்டில் இருந்த பர்சில் இருந்த பணத்தை எடுத்து….. பன்னீரை அழைத்து அவளுக்கு பிடித்ததையே இருவருக்கும் வாங்கி வர சொன்னாள்.

அவர் வாங்கி வரும் வரை அமர்ந்திருந்தவன்…. அவர் வந்து சென்றதும்….  “நீ நடந்துகிட்டே இருக்க உட்காரு!”, என்றவன்….. வாங்கி வந்திருந்த சப்பாத்தியை முதலில் அவளுக்கு போட்டுக் கொடுத்தான். ஒரு தட்டு தான் இருந்தது.

“நீங்க சாப்பிடுங்க முதல்ல உங்களுக்கு தான் பசிக்குதுன்னு சொன்னீங்க…”,

“ம்கூம்! அது சரிவராது! இருக்குற பசில நான் எல்லாத்தையும் சாப்பிட்டிட்டுவேன். நீ முதல்ல சாப்பிடு…..”,    

“பரவாயில்லை ஆள் அனுப்பி வாங்கிக்கலாம், நீங்க சாப்பிடுங்க”, என்றாள் குரலில் சிறு வற்புறுத்தலோடு….

நிஜமாகவே எல்லாவற்றையும் சாப்பிட்டு விட்டு, “நான் தான் சொன்னேன்ல”, என்று விக்ரம் சொல்லவும்…

புன்னகைத்தவள்…… “எனக்கு பசியில்லை”, என்று சொல்லவும்….

கோபமாக பார்த்தவன்….. “நீ வேற வாங்கலாம்னு சொன்னதால தானே சாப்பிட்டேன்… பன்னீர்”, என்று ஒரு சத்தம் கொடுக்க…. விரைந்து டிரைவர் வரவும்..

அவளை பார்க்க….. வேண்டியதை அவள் சொல்லி அனுப்பிய பிறகே விட்டான். அவள் சாப்பிட்டவுடன்… “டீ வீ பார்க்கறியா, தூங்க போறியா….”,

அசதியாக இருக்கவும், “தூங்கறேன்”, என்று அன்னகிளி சொல்லவும்…..

“வா! நீ தூங்கு! எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு!”, என்று அவன் லேப் டாப்பை ஆன் செய்துவிட்டு.. ரூமை நோக்கி போக…

அன்னகிளி நின்ற இடத்திலேயே நின்றாள்….. விக்ரம் கவனிக்கவேயில்லை…… அவன் பாட்டிற்கு  உள்ளே சென்று பார்த்தவன், அன்னகிளி வராததை பார்த்து திரும்ப வெளியே வந்து….

“என்ன?”, என்றான்.

“நீங்க வரும்போது நான் அங்க போறேன்…. காலையில இருந்து தனியா தான் இருந்தேன்…… நான் அங்க தனியா தூங்க மாட்டேன்…..”,

விக்ரமின் முகத்தில் ஒரு குறும்பு புன்னகை…. “நீ இருக்குற இடத்துல நான் இருக்கணும்னா தள்ளி எல்லாம் இருக்க மாட்டேன்….. தூங்கும் போது உன்கூட தான் தூங்குவேன், பரவாயில்லையா?”, என்றான்.

இதற்கு என்ன சொல்வது என்று தெரியாமல் அன்னகிளி தடுமாறி நிற்கவும்…

“ஏற்கனவே அட்லீஸ்ட் ஒரு நாளைக்காவது உனக்கு டிரஸ் எடுத்துக் குடுக்க வேண்டாம்னு நான் நினைச்சு இருந்தேன்… அதுல உங்கண்ணன் டிரஸ் கொண்டு வந்து ஊத்தி மூடிட்டான்…….”, என்பது போல குறைபட….

அன்னகிளி இன்னும் விக்ரமின் பேச்சை கேட்டு தடுமாறினாள்….

அதற்கு மேல் அவளை சீண்டாமல்…… கதவை சாத்தி பின் படுக்கையை கொண்டு ஹாலிலேயே போட்டவன்…. “எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு……. இங்கன்னா டீவீ பார்த்துட்டே செய்வேன்….. நீ இங்கயே படு”, என்றான்.

அன்னகிளி படுக்கையின் அருகில் வரவும்…  அவளை அணைத்து படுக்க வைக்க இடுப்பை சுற்றி கையை போடவும் அவளின் முகத்தில் கலவரம் அப்பட்டமாக தெரிந்தது.

அதை காணாதவன் போல…….. அவளை படுக்க வைக்க முயல….. உடல் விரைத்தாள்.

பாதி வழி அவளை படுக்க வைக்க கீழே கையை இறக்கி இருந்தவன்….. பிறகு அவளை அப்படியே மேலேயே தூக்கி நிறுத்தினான்.

“என்ன? என்ன உன் பிரச்சனை…..?”, என்றான் கடுமையாக.  

“இல்லீங்களே! ஒன்னுமில்லீங்களே……”,

“இல்லை, ஏதோ இருக்கு, உன் பாடி லாங்குவேஜ்ல ஏதோ ஒரு டிஃபரன்ஸ்…… என்ன ஆச்சு….”,

“நீ என்னை தொடுவது, என்னை தடுமாற வைக்கிறது”, என்றா சொல்ல முடியும்…. பதில் வாங்காமல் விக்ரம் விட மாட்டான் என்பதால், “நான் உங்க கூட வந்து இருந்து உங்களை தொந்தரவு பண்றனுங்களா”, என்றாள் சம்மந்தமில்லாமல்……   

“எப்போ நான் அப்படி சொன்னேன்….?”,

“நானா தானுங்களே உங்களை பார்க்க வந்தேன்…. அப்புறம் ஆக்சிடென்ட் ஆனதுனால வேற வழியில்லாம என்னை ஹாஸ்பிடல் கூட்டிட்டு வந்தீங்க……. அப்புறம் அண்ணியோட கட்டாயத்துனால என்னை பார்க்க வேண்டி வந்துடுச்சு….”,

ஒரு ஆழ்ந்த மூச்சை வெளியேற்றியவன்…… “முன்ன எப்படியோ… இப்ப என்னோட இஷ்டமில்லாம யாரும் என்னை எந்த வேலையும் செய்ய வைக்க முடியாது புரிஞ்சதா…”,

“எப்ப பார்த்தாலும் ஏதாவது யோசனை பண்ணிக்கிட்டே இருப்பியா….. இப்ப என்ன இங்க உன்னால இருக்க முடியலையா? உங்க வீட்டுக்கு போகணுமா…”,

“ஐயோ! அப்படி எல்லாம் இல்லீங்க!”, பதறினாள்…..

“அப்புறம் ஏண்டி எரும மாடு, இல்லாத மூளையை கசக்கி யோசனை பண்ற…. ஒன்னு நல்லா புரிஞ்சிக்கோ! அடுத்தவன் பிரச்சனையை பார்க்கறது தான் என்னோட வேலை! இதுல நீ எனக்கு பிரச்சனையை குடுத்தா… என்னோட பிரச்சனையை தான் நினைக்க தோணும்……. அந்த பிரச்சனையை ஆராய்ஞ்சு நான் எப்படி தீர்ப்பு சொல்லுவேன்! சொல்லு….!”,

“இப்படி என் கைக்குள்ள விரைச்சிகிட்டு நின்னு என்னை டென்ஷன் பண்ணுவியா….. வாழ்க்கை எப்படி போகுதோ இப்போதைக்கு அதோட ஓடு……”, என்றவன்….. அவளுடைய உடல் இன்னும் லகுதன்மைக்கு வரவில்லை என்று புரிந்தும்…. அவளை ஆதூரமாக இருகைகளையும் கொண்டு அணைத்து படுக்க வைத்தான்.

இரண்டு தலையணைகள் இருந்த போதும், படுக்கையின் மேல் ஒரு பெட் ஸ்ப்ரெட்… போடப்பட்டு இருக்க…. போர்த்திக்கொள்ள ஒரு போர்வை மட்டுமே இருந்தது.

அதை அவள் போர்த்திக் கொண்டவள்….. “உங்களுக்கு”, என்றாள்.

“எனக்கா…? உன் புடவையை குடுக்க மாட்ட…!”, என்றான் சீரியசாக.

“ஆங்!”, என்று அவள் விழிக்கவும்…..

“பயப்படாத நீ கட்டிக்கிட்டு இருக்கறதை கேட்கலை…… உங்கண்ணன் உன் புடவைகளை தானே கொண்டு வந்து கொடுத்திருக்கான், அதுல ஒன்னை எடுத்துக்கறேன்”, என்றான்.

அவனின் பேச்சை கேட்டு…… “ஆங்”, என்று வாயை பிளந்தாள்…….

“எப்போ பார்த்தாலும் எதுக்குடி இந்த எக்ஸ்ப்ரஷன்….. நான் புடவையை தானேடி போர்த்திக்கறேன்னு சொன்னேன்! உன்னை போர்த்திக்கறேன்னா சொன்னேன்!”, என்று கேள்வி வேறு கேட்க….

“ஐயோ! என்ன பேச்சு இது”, என்பது போல கண்களில் கலவரத்தை தேக்கி பார்க்க…

“முட்டக்கண்ணை போட்டு பார்க்காத…… பேசாம படுடி, இன்னும் எதையாவது பேசி வைக்க போறேன்…. நீ வேற ஆளு மட்டும் தான் வளர்ந்திருக்க போல”, என்று சொல்லியபடியே வேலையில் ஆழ்ந்து விட்டான்.

அன்னகிளிக்கு தான் உறக்கம் சுத்தமாக தொலைந்து போனது…… விக்ரமை எந்த வகையில் சேர்ப்பது! அவருக்கு என்னை பிடித்திருக்கிறதா? இல்லையா….?

என்னை உரிமையாக பேசினாலும், பார்த்தாலும், அதில் ஆசையோ, காதலோ எதுவும் இல்லையே…. படுத்திருந்தாலும் அன்னகிளியின் பார்வை முழுவதும் விக்ரம் மேலே… ஆனால் விக்ரம் முழுவதுமாக வேலையில் ஆழ்ந்திருந்தான்…..

டீ வீயில் அது பாட்டிற்க்கு ஒரு நியூஸ் சேனல் ஓடிக்கொண்டிருந்தது… லைட் எரிந்து கொண்டிருக்க…… விக்ரம் வேலையை முடித்தவன்……. அன்னகிளியை பார்த்த போது அவன் பார்ப்பான் என்று தெரிந்து கண்ணை மூடி இருந்தாள்.

சிறிது நேரம் கழித்து எந்த சத்தமுமில்லாமல் இருக்க… மெதுவாக அன்னகிளி கண்ணை திறந்து பார்க்கவும்…… விக்ரம் ஏதோ குடித்துக் கொண்டிருந்தான்…. இவள் மீது பார்வையில்லை, எங்கேயோ வெறித்துக் கொண்டிருந்தான்……… கண்களை நன்றாக திறந்து பார்த்தாள்……

அவன் கைகளில் இருந்ததை பார்த்தவளுக்கு…… இவன் குடிக்கிறானா…..? மனம் பதைத்தது.

விக்ரம் குடிப்பான் என்று அவள் நினைத்து பார்த்ததே இல்லை……

அவனை பார்ப்பதற்கே பயமாக இருந்தது.  

ஒரு புதிய விக்ரமாக அன்னகிளியின் கண்களுக்கு தோன்றினான். மிகவும் தீவிரமான பார்வை…….. இலக்கின்றி வெறித்தது.

 

Advertisement