Advertisement

thankyou  geethabalan , SD , swapna , shyamalamay , shanmugasree , ezhilkailash , vijivenkat , logavalli , pons akka , sathya , subbugeetha , subasankar , kodiuma , sri , rama akka , radhika , selvi , saji , sruti , shanthi , suba , rathy , meena , uma uday , meena , uma manoj , anita ,  padmi ,  niran , katlak , deebi , stulip , suganya , queen , jass , latha karthick , nira , vennilad , suja , ini , bhooma , krisk ramesh , mythili , jkruthika , banu , aruna , nishanthini , shereen , sai , priya gautham , vasantha , agalya , mala , sujatha , prem , niran , adhibala ,

 

for precap

sathyaicmc , geetha balan , KG , deebi, malar ,  madhumitha , wafanawas , pons akka , SD , sena , visalakshi , selvi , kodiuma , sswapna , 

and naan yaar peyaraavathu theriyamal vittirunthaal avargalukkum serthu……

thankyou friends thankyou very much for the comments and feedbacks…. and for the wonderful support what you people give me always

here comes the 4 th episode a big one than usual to compensate for the delay

EAGERLY WAITING TO KNOW FROM YOU ALL

“Life is 10% that happens to you and 90% how you respond to them”

Exactly, what happened in Vikram and Annakili’s life.

Vikram had and has cared for her, but still not want to accept her to be his better half.

Meanwhile, apparently it seems Vikram avoids coming face to face with his elder sister, who is none other than Annakili’s sister-in-law.

Annakili’s father looking for chances to talk to Vikram and bring his daughter and son-in-law together.

Annakili’s brother can’t stand anything of Vikram and wants to once for all wipe off his role from his sister’s life.

With Annakili in hospital, all are going to meet each other with such mindsets.

Let us look into the episode to read what happens to them and how they respond.

அத்தியாயம் நான்கு :

விக்ரமின் பார்வையும் கந்தசாமியின் பார்வையும் ஒருவரை ஒருவர் கோபத்துடன் முறைத்துக் கொண்டது.

இருவர் பார்வையும் ஒருவரை ஒருவர் அளவும் இட்டுக் கொண்டது. “வெறும் பயலுக்கு வந்த வாழ்வை பாரேன்”, என்று கந்தசாமியின் கண்கள் தெளிவாக விக்ரமை நோக்கி பிரதிபலித்தது.

“உனக்கு இந்த லுக்கு விடறதை தவிர வேற என்னடா உருப்படியா தெரியும்…… நீ வெட்டிப்பயடா…….. அப்பன் பாட்டன் சொத்துல திங்கற உனக்கே இவ்வளவு தெனாவெட்டுனா சொந்த முயற்சில வந்திருக்கிற எனக்கு எவ்வளவு இருக்கும்”, என்று விக்ரமின் கண்கள் அவனுக்கு அலட்சியமாக பதிலளித்து.   

“வாங்க தம்பி!”, என்று மரியாதை நிமித்தம் அவனுடைய மாமனாரும் மாமியாரும் வரவேற்க…… அதை கண்டுகொள்ளாதவனாக, “அவ உள்ள ரூம் நம்பர் நூத்தி ஒண்ணுல இருக்கா”, என்று மட்டும் சொன்னான்.

உங்களிடம் எனக்கு வேறு பேச விருப்பமில்லை என்ற செய்தி தெரிந்தது. அவர்களும் மேலே எதுவும் எதிர்பார்க்கவில்லை….. அவனுடைய அக்கா லதா அன்னகிளியின் வீட்டிற்கு மருமகளாக வந்த நாள் முதற்கொண்டு விக்ரமை அவர்களுக்கு தெரியும்.

அவன் உண்டு அவன் வேலையுண்டு என்றிருப்பான். வளவள பேச்சுக்களோ, அலட்டல்களோ, போலிப் பணிவோ எதுவும் இருக்காது…. பார்க்கும் போது சில மரியாதை நிமித்த பேச்சுக்கள், அதுவும் மிகுந்த மரியாதையாக தான் இருக்கும்.

அதனால் தான் அன்னகிளியின் தந்தை முத்துசாமி அந்த இக்கட்டான சூழ்நிலையில் விக்ரமை அன்னகிளிக்கு தேர்வு செய்தார். ஆனால் என்னென்னவோ பிரச்சனைகள், வார்த்தைகள், விக்ரம் நடந்து கொண்ட விதத்தில் அவனுக்கு  அன்னகிளியை பிடிக்காமல் இருக்கும் என்ற எண்ணமே அவருக்குள் இல்லை. இப்போது எதையும் சரியாக்க முடியாமல், சரியாக்கும் வழி தெரியாமல்… பெரியவர் திணறிக் கொண்டிருந்தார்.

விக்ரம் திருமணம் முடிந்து சென்ற சமயம் லதாவையும் பழனிசாமியையும் நடுவில் வைத்து சில முறை பேசினார். விக்ரமும் இறங்கி வரவில்லை…. கந்தசாமியும் அன்னகிளியை அனுப்ப ஒத்துக் கொள்ளவில்லை.  

மகனிடமும் பேசமுடியவில்லை, மருமகனிடமும் பேச முடியவில்லை. சில மாதங்களாக தீவிரமாக யோசித்துக் கொண்டுதானிருந்தார் எப்படியாவது விக்ரமிடம் பேசி அன்னகிளியை அவனிடம் கொண்டு போய் விட்டு விடவேண்டும் அது கந்தசாமிக்கு பிடித்தாலும் சரி பிடிக்காவிட்டாலும் சரி என்று….

ஆனால் இப்போது அதுவும் கேள்விக்குறியாகி தொக்கி நிற்கிறது…… இப்போது அவன் மிகப் பெரிய பதவியில் இருக்கிறான்….. இப்போது கேட்டால்…… “என்னுடைய பதவியை பார்த்து பெண்ணை கொண்டு வந்து விடுகிறீர்களா”, என்று கேட்பதற்கான வாய்ப்புகள் அதிகம்……     

எத்தனை பிரச்சனைகள் அன்னகிளிக்கு இருந்த போதும் அது விக்ரம் என்பதால் தான் தைரியமாக பெண்ணை கொடுத்தார்….. அவனை மட்டுமே பார்த்துக் கொடுத்தார். ஆனால் அவரால் அதை புரிய வைக்க முடியவில்லை.

இப்போது அதை சொன்னால் வீண்…….

எப்போதாவது அவனுக்கு புரியுமா தெரியவில்லை……    

அவர் ரூமை அடைவதற்குள் இத்தனை யோசனைகள் அவருக்குள் ஓடின…. பின்னாலேயே கந்தசாமியும் வந்தான்.

அங்கே அன்னகிளி மட்டும் சோர்வாக அமர்ந்திருக்க… “பாப்பா! என்ன பாப்பா செய்யுது! எங்க அடிப்பட்டது!”, என்று அன்னகிளியின் அம்மா மரகதம் கேட்க……

“கால்லங்கமா!”, என்று காலை காட்ட……. அது ஏகத்துக்கும் வீங்கி இருந்தது………. ஆங்காங்கே சிராய்ப்புகள் கூட……..

“எப்படிங்க பாப்பா ஆச்சு?”, என்று சின்ன அண்ணன் கேட்கும் போதே….

டாக்டரிடம், “சர்ஜெரியே செய்து விடலாம்”, என்று சொல்லி விக்ரம் உள்ளே வந்திருந்தான்……

“ரோடு கிராஸ் பண்ணும்போது பைக் இடிச்சிடிச்சிங்கண்ணா”, என்று அன்னகிளி சொல்ல….

“எப்படிங்க பாப்பா அவ்வளவு கவனமில்லாம இருந்தீங்க, எங்க நடந்ததுங்க…..?”,

“கோர்ட்க்கு முன்னாடிங்க!”, என்றாள் தயங்கி தயங்கி….. 

“அங்க எதுக்கு போனீங்க?”, என்று வார்த்தைகள் சூடாக வர……..

அன்னகிளி தடுமாற….. “என்னை பார்க்க வந்தா!”, என்று நேரடியாக விக்ரம் பதில் சொல்ல…….

“அப்படீங்களா பாப்பா?”, என்று கோபமாக கந்தசாமி அன்னகிளியிடம் கேட்டான்……

“நான் பேசினா என்கிட்ட பேசுங்க, அவளை ஏன் அதட்டுறீங்க!”, என்றான் விக்ரம்.

“நான் என் தங்கச்சிகிட்ட பேசறேன்……. யாரும் அதுல நுழைய வேண்டாங்க….”,

“நீங்க உங்க தங்கச்சிகிட்ட என்ன வேணா பேசுங்க! ஆனா என்னை பார்க்க வந்தா ஏன்னு கேட்க கூடாது புரிஞ்சுதுங்களா”, என்றான் அதிகாரமாக…….

“என்னங்க அதிகாரம் தூள் பறக்குது……. இத்தனை நாளா கண்ணுக்கு தெரியாத பொண்டாட்டி மேல இப்போ என்ன அக்கறைங்க……..”,    

“இத்தனை நாளா அவ கண்ணுக்கு தெரியலைன்னு சொல்லுங்க ஒத்துக்கறேன்! ஆனா எனக்கு அவ மேல அக்கறை இல்லைன்னு சொல்றீங்களா என்ன?”, என்று பதிலுக்கு விக்ரம் கேட்க…….

கந்தசாமி சற்று அடங்கினான்……

“சின்னவனே! வார்த்தையை வளர்க்காத….. நடந்ததை பிடிச்சிட்டு தொங்காத…..”,

“இவ்வளவு நாளா வராம இருந்துட்டு இப்போ என்னங்கப்பா?”,

“எனக்கு எப்போ தோணுதோ அப்போ தான் வரமுடியும்! உங்க இஷ்டத்துக்கு வர முடியாது!”, என்று விக்ரம் நேரடியாகவே பதிலளித்தான்.

“என்ன திமிர்டா உனக்கு”, என்று கந்தசாமி சொல்லும்போதே……

முத்துசாமி அதட்டினார்….. “சின்னவனே! மாமன் மச்சினனுக்குள்ள ஆயிரம் இருக்கும்…. எப்படி வேணா பேசிக்கலாம் அடிச்சிக்கலாம்….. ஆனா அது இவருக்கு இனிமே சரிவராது! ஞாபகம் வெச்சிக்கோ! ஏன்னா இவர் பதவி அப்படி……. மரியாதை குறைவா நீ ஒரு வார்த்தை கூட பேசக் கூடாது”, என்றார்.

அன்னகிளியும் மரகதமும் ஒரு வித பயத்தோடு பார்வையாளர்களாய் இருந்தனர்.

“ப்ச்!”, என்று சலிப்போடு முகத்தை சுளித்தான் கந்தசாமி…… சர்ஜெரி பற்றி சொல்ல ஒரு நர்ஸ் உள்ளே வர அவர்களின் பேச்சு தடைப்பட்டது.

“என்னது ஆபரேஷனா?”, என்று அன்னகிளியின் வீட்டினர் சிறிது பதட்டப்பட…..

“டாக்டர், அது தான் பரவாயில்லைன்னு சொன்னார்”, என்று விக்ரம் பொதுவாக சொன்னான்.

ஆபரேஷன் என்றதும் அன்னகிளியின் முகத்தில் கூட பதட்டம்…..

அதற்குள் டாக்டர் வர… கந்தசாமியும் அவன் தந்தையும் திரும்பவும் கேட்டனர்…… பொதுவாக டாக்டர்கள் ஒரு முறைக்கு இருமுறை விளக்கம் சொல்வது அரிது… ஜட்ஜ் குடும்பம் என்பதாலோ என்னவோ டாக்டர் பொறுமையாக விளக்கம் சொன்னார்.

அவர் சொன்ன விளக்கங்கள் ஏற்றுக் கொள்ளும்படியாக இருக்க….. இரவு ஏழு மணிக்கு என்று முடிவானது.

மரகதம் தான் மிகவும் பயந்து போய் அழவே ஆரம்பிக்க…. அவரிடம், “ஒன்றுமில்லை”, என்று சொல்லி தேற்றவே அன்னகிளியின் தந்தைக்கும் அண்ணனுக்கும் நேரம் போனது….

“அவகிட்ட போய் ஒன்னும் பயமில்லைன்னு சொல்லாம, இவங்களுக்கு இதே பொழப்புடா”, என்று நினைத்த விக்ரம், அன்னகிளியை பார்க்க அவள் எப்போதும் போல என்ன செய்வது என்று தெரியாமல் அமர்ந்திருந்தாள்.

எப்படியும் நல்ல வலி இருக்கும்… அவளின் முகத்தில் அதற்கான அதிகமான சாயல்கள் இல்லை. கலங்கியிருந்த கண்களில் இப்போது தெளிவு இருந்தது….. இது எனக்கான வலி என்று சமாதானப்படுத்திக் கொள்வது போல தோன்றியது.

“தைரியம் தான் இவளுக்கு, என்னிடம் வந்து விவாகரத்து கொடுக்கிறேன் என்று சொல்கிறாள்…”, என்பதாக விக்ரம் அவளை பார்க்க….    

விக்ரம் பார்ப்பதை அறிந்து அன்னகிளியும் அவனை பார்க்க….. அவனுக்கு ஒன்றும் பயப்பட இல்லை என்று அவளிடம் சொல்ல வேண்டும் போல தோன்றினாலும்…… அவர்கள் வீட்டினரின் முன் அதை சொல்ல விருப்பமற்று கண்டும் காணாமல் வெளியில் வந்தமர்ந்தான்.

பேசாமல் ஹாஸ்பிடலை விட்டு போய்விடலாமா என்று கூட தோன்றியது…… இந்த அவளின் விபத்து உன்னால் தான் என்று மனம் குற்றம் சாட்ட….. அமர்ந்து கொண்டான்.

இரவு அவளின் ஆபரேஷன் முடிந்து அவளை கொண்டு வந்த போது பத்து மணி….. அவள் அரை மயக்கத்தில் இருந்தாள்….

அதுவரை உணவு கூட யாருக்கும் செல்லவில்லை….. விக்ரமிற்கு வேறு மதியம் இருந்து சாப்பிடாதது பசி வயிற்றை கிள்ளியது.

“நீங்க இருக்கீங்களா? நான் காலையில வர்றேன்!”, என்றான் விக்ரம் மரகதத்திடம்……

“இருக்கனுங்க தம்பி!”, என்று அவர் சொல்லியபிறகு….. அன்னகிளியின் தந்தை முத்துசாமி அவனின் அருகில் வந்தவர்…..

“கார்னாலும் இந்த நேரத்துக்கு மேல நான் ஊருக்கு போயிட்டு வர்றது சிரமம்! உங்க வீட்டுக்கு வரட்டுமா”, என்றார் விக்ரமை பார்த்து…….

இதைவிட இரவு நேரத்திலும் தன் தந்தை மட்டும் தனியாக கூட கார் ஓட்டி வருவார் என்று கந்தசாமிக்கு தெரியும்…….. ஆனால் ஏன் இப்படி சொல்கிறார் என்று அவனுக்கு  தெரியவில்லை, கோபம் வந்தது…. தன் தந்தையை கோபமாக முறைக்க… அவர் மிக கவனமாக இவன் புறம் திரும்ப கூட இல்லை.

ஆனால் அவனுக்கு புரியாதது விக்ரமிற்கு புரிந்தது, அவர் தன்னிடம் அன்னகிளிக்காக பேச விரும்புகிறார் என்று…..

அவன் யோசிக்க…… கந்தசாமிக்கு இன்னும் கோபம் அதிகமானது… அவன், “அப்பா”, என்று கோபமாக பேச வாயெடுக்கும் சமயம்……

விக்ரம் சரியாக, “வாங்க”, என்று சொல்ல…..

பேச வழியில்லாமல் மௌனம் காத்தான் கந்தசாமி.

அவர்கள் இருவரும் கிளம்பும் போது….. “நீங்க பாப்பாவை பார்க்கலீங்கலே தம்பி!”, என்றார் மரகதம்.

அவன் தனியாக சென்று பார்க்காததை அவர் கூற…. “ரூம்க்கு ஷிஃப்ட் பண்ணும்போது பார்த்துட்டேன்”, என்று முடித்து கிளம்பிவிட்டான்.

கந்தசாமிக்கு இன்னும் கோபம் ஏறியது….. அவர்கள் சென்றதும்….. “என்னங்கம்மா இப்படி பண்றீங்க?”, என்று பொறிய ஆரம்பித்தான். “ரொம்ப பண்றான் அவன்…. நீங்க ரெண்டு பேரும் எதுக்கு இப்படி தணிஞ்சு போறீங்கம்மா”, என்று கந்தசாமி கோபப்பட…….

“சின்னவனே! நீ இதுல தலையிடாத…….. நீயும் உன்ற தங்கச்சியும் தனியா இருந்தது போதும்… அவ அவ ஊட்டுகாரரோட பொழைக்கட்டும்…. நீ கலியாணம் பண்ணி உன்ற பொழைப்பை பாரு!”, என்றார் கறாராக.

இரவு முழுவதும் அவ்வப்போது நர்ஸ்கள் வந்து பார்த்தபடி இருக்க…. அது வீ. ஐ. பீ ரூம் என்பதால்…… மரகதமும் கந்தசாமியும் அங்கேயே ஒருபுறமாக உறங்கினர்.  

காலையில், “அம்மா, தண்ணி!”, என்ற அன்னகிளியின் குரல் கேட்கவும்……

“இரு பாப்பா! தண்ணி குடுக்கலாமான்னு அந்த நர்ஸ் அம்மணிகிட்ட கேட்டுட்டு வர்றேன்”, என்று மரகதம் போக…..

“எதுக்கு பாப்பா, அவரை பார்க்க போனீங்க?”, என்றான் கிடைத்த இடைவெளியில் கந்தசாமி அன்னகிளியிடம்…..

அன்னகிளி மௌனம் சாதிக்க….. “நீங்களா போய் அவரை பார்க்கற அளவுக்கு பெரியாளாகிட்டீங்க…… போய் இந்த வலியை வேற இழுத்து வெச்சிருக்கீங்க….. அந்த பெரிய மனுஷன் என்னடான்னா உள்ள வந்து உங்களை பார்க்காம போறார்….”,

 வலி நன்றாக தெரிய ஆரம்பித்தது அன்னகிளிக்கு…… கண்களை மூடிக் கொண்டால் போதும் என்று தான் இருந்தது… ஆனால் அந்த வலியிலும், “அவரு தானுங்கண்ணா என்னை இங்க கூட்டிகிட்டு வந்தாரு”,

“அப்படியே பைக் முன்னாடியும் அவர் தான் தள்ளி விட்டிருப்பார், இல்லைன்னா பேசிப் பேசியே நீயா போய் விழற மாதிரி செஞ்சிருப்பார்ன்னு உண்மையை ஒத்துகோங்க பாப்பா”,

எவ்வளவு கடினமாக பேசினாலும்… என்னை எப்படி பக்குவமாக ஹாஸ்பிடல் கூட்டி கொண்டு வந்தார்…

“கொஞ்சம் அதிகம் பேசுவார், மத்தபடி நல்லவருங்கன்னா”,

“ஏதாவது சொல்லாதீங்க பாப்பா நான் உங்களை திட்டிரப் போறேன்…… வாயிருக்குன்றதுக்காக நாம எது வேணா சாப்பிடுவோமா என்ன? அது மாதிரி வாயிருக்குன்றதுக்காக நாம எதுவேணாலும் பேசக்கூடாதுங்க”,

சோர்வு, வலியை, என்று இருந்த போதும், மீறி பேசினாள் மீண்டும்…. “எல்லோர்கிட்டயும் அவரு அப்படி இல்லீங்களே! என் கிட்ட மட்டும் தானுங்களே! அவருக்கு என்னை பிடிக்கலை…”,

“ஏனுங்க பாப்பா? அவருக்கு கண்ணு இருக்குதா இல்லையா…… கண்ணிருக்கிறவங்க  யாரும் உங்களை வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க… அழகில்லையா?…. நல்ல குணமில்லையா? வசதியில்லையா? படிப்பில்லையா? என்ன இல்லை……?”,

“அவங்கவங்களுக்குன்னு இஷ்டம் இருக்காதுங்களாண்ணா”,

“என்னங்க பாப்பா பெரிய இஷ்டம்! அப்பா அம்மாவை நாமளா தேர்ந்தெடுக்கிறோம்..இல்லைல்ல… கடவுள் நமக்கு குடுக்கறது தானுங்களே… அந்த மாதிரி உங்களை கடவுள் அவருக்கு மனைவியா குடுத்தார்ன்னு நினைச்சிக்க வேண்டியது தானுங்களே”, என்றான்…..

வலியையும் அசதியையும் மீறிய மெல்லிய புன்னகை அன்னகிளியின் முகத்தில்…. “நல்லா பேசக் கத்துக்கிட்டீங்கண்ணா”,

“ம், உன்ற ஊட்டுக்கறாரு தான் சொல்லிக்குடுத்தாறு”, என்றான் நக்கலாக கந்தசாமியும்…..

“அப்போ நான் கேட்கற பீஸ்….. கேட்கும் போது கொடுத்துடனும்ங்கண்ணா”, என்று சொல்லும்போதே கண்கள் அசதியில் மூட…..

“உங்களுகில்லாததா?”, என்றான் கந்தசாமி……

“தண்ணி!”, என்று அவள் திரும்பவும் முனக….

“நானு பாருங்க, இவ்வளவு பேச்சுக் குடுத்துட்டேன்! இந்த அம்மா எங்க போனாங்க?”, என்று அவனும் பார்க்க போனான். 

அங்கே இரவில் இருந்து விக்ரமிடம் பேச முத்துசாமி முயற்சிகள் எடுத்தும்….. விக்ரம் பிடி கொடுக்கவில்லை. “அப்புறம் கண்டிப்பா பேசலாங்க மாமா”, என்று விட்டான்.

காலையில் ஹாஸ்பிடல் வருவான் என்று எல்லோரும் நினைக்க….. முத்துசாமியை ஹாஸ்பிடல் வாயிலில் இறக்கி விட்டவன்….. “நான் கொஞ்சம் கேஸ் விஷயமா படிக்கணும், நான் ஈவினிங் வர்றேன்”, என்று சொல்லி சென்றுவிட்டான்.

முத்துசாமிக்கு மிகவும் ஏமாற்றம்… பிடி கொடுக்க மாட்டேன் என்கிறானே என்பது போல…

அவனுக்கு இஷ்டமில்லாததை திணித்தது தவறு தான்… ஆனால் அவருடைய மனதிலும் கந்தசாமியை போன்ற எண்ணம் தான், “என் மகளுக்கு என்ன குறைச்சல்?”, என்பது போல. 

விக்ரம் ஹாஸ்பிடலில் முன்பே சொல்லியிருந்தான்…… பணம் அவன் மட்டுமே கட்டுவான் வேறு யாரிடமும் வாங்கக் கூடாது என்று….. அதனால் அதற்காக ஹாஸ்பிடல் வர வேண்டும் என்ற அவசியமும் இல்லை.

மாலையும் வந்தவன் ஒரு ஐந்து நிமிடம் இருந்து, “எப்படியிருக்க? வலி பரவாயில்லையா”, என்ற இரு வார்த்தை மட்டுமே பேசி கிளம்ப….. அன்னகிளியின் முகத்தில் அவளையும் மீறி சில நொடிகள் ஒரு ஏமாற்றம் தெரிந்தது…… திட்டக்கூட செய்யவில்லையே ஏன்….?

ஆனால் சமாளித்துக் கொண்டாள்……….    

ஒரு சிறு புன்னகை புரிந்தாள்….. ஆனால் பதிலுக்கு அவனிடம் எதுவும் இல்லை….. இதற்கு விக்ரம் உள்ளே வந்ததுமே மரகதம், “வாங்க தம்பி!”, என்று மட்டும் சொல்லி இருவருக்கும் தனிமை கொடுக்க விரும்பி வெளியே சென்று விட்டார்.

விக்ரம் பேசினால் பேசவேண்டும் தயங்க கூடாது, பயப்பட கூடாது என்று காலையில் இருந்து அன்னகிளி யோசித்து தான் இருந்தாள். ஆனால் அவன் தான் பேசவேயில்லையே…..

“நான் கிளம்பறேன்!”, என்று சொல்லி விக்ரம் கிளம்ப எத்தனிக்கும் நேரம்….. அவனுடைய அக்கா லதா, அவளின் கணவன் பழனிசாமி மற்றும் மகன் பிரபாகரனுடன் உள்ளே வந்தாள்.

முத்துசாமி ஊருக்கு போய் கார் கொடுத்த பிறகு அவர்கள் கிளம்பி வந்திருந்தார்கள். 

விக்ரமின் பார்வை எல்லாம் பத்து வயது பிரபாகரன் மீது தான்…. அவனின் அக்காவையும் மாமாவையும் கூட கவனிக்கவில்லை….. நான்கு வருடங்களுக்கு முன்பு பார்த்தது பிரபாகரனை, இப்போது நன்கு வளர்ந்திருந்தான். தன்னை அவனுக்கு அடையாளம்  தெரிகிறதா என்று பார்த்தான்.

பிரபாகரன் அவன் அம்மாவின் பின் ஒளிந்ததில் இருந்தே தெரிந்தது……. அவனுக்கு அடையாளம் நன்றாக தெரிகிறதே இல்லையோ…… “உன் மாமா அங்கே இருப்பான், நீ அவனிடம் போகக் கூடாது”, என்று அவனின் அம்மா சொல்லி அழைத்து வந்திருக்க வாய்ப்புகள் அதிகம் என்று.

“பிரபா, இங்கே வா!”, என்று விக்ரம் அழைக்க…. அவன் தன் அப்பாவின் முகத்தையும் அம்மாவின் முகத்தையும் பார்த்தான். ஆனால் இருந்த இடத்தை விட்டு நகரவில்லை.

விக்ரமாக அருகே சென்று அவன் கை பிடித்து இழுத்தவன், “you have grown tall man, என்னால உன்னை தூக்க முடியுமா தெரியலையே!”, என்று சொல்லியபடி மாமனாக ஒரு பெரிய சிரிப்போடு அவனை தூக்கினான்.

“நான் சிரிச்சா சிரிக்கக் கூட இல்லை……. இப்போ அவரோட அக்கா பையனை பார்த்ததும் எப்படி சிரிச்சிக்கிட்டே தூக்குறாரு”, என்ற எண்ணம் அன்னகிளியின் மனதில் தானாக எழுந்தது.  

அவன் சற்று பயத்தோடு பார்க்கவும்….. இறக்கி விட்டவன்….. “வா! நம்ம போகலாம்!”, என்று அவனின் கைபிடித்து வெளியே கூட்டிப் போக போனான்.

“அவனை விடு! அவன் வரமாட்டான்!”, என்று அவனின் அக்கா சொல்ல முற்பட….

“நான் உன்கிட்ட சம்மதம் கேட்கலை, உன் வேலையை பார்….”, என்று லதாவிடம் அலட்சியமாக சொன்னவன்…..

“நீ வா பிரபா, நம்ம போவோம்!”, என்று கையை இன்னும் உறுதியாக பிடித்து அழைத்து சென்றான்.

முதலில் தயங்கினாலும், அதன் பிறகு பிரபாகரன் அவன் அம்மா அப்பாவின் முகம் பார்க்கவில்லை…. மாமா உடன் சென்றான்.

அவனுக்கு பிரபாகரன் என்று பெயர் தேர்வு செய்ததே விக்ரம் தான்….. “எங்க வீட்டு பழக்கம்ன்னு சொல்லி ஏதாவது சாமின்னு பின்னாடி வர்ற மாதிரி பேர் வைக்க கூடாது!”, என்று அவனின் அக்காவிடம் பிடிவாதம் பிடித்து…. அவனுக்கு மிகவும் பிடித்த ஈழ தமிழ் போராளியின் பெயரை வைத்தான்.

அவனை அழைத்துக் கொண்டு வெளியே சென்று விட்டான்…. கிட்ட தட்ட ஒரு மணிநேரம் கழித்தே வந்தார்கள்.

அன்னகிளியின் முகம் சுருங்கி தான் போயிற்று….. “என்னோடு ஐந்து நிமிடம் மட்டுமே இருக்க முடிகிறது…. சிரிக்க கூட முடியவில்லை…… ஒரு தாய்மாமனாக பிரபாகரனின் மேல் உடனடியாக வெளிப்பட்ட பாசம்… தான் இந்த நான்கு ஆண்டுகளாக கழுத்தில் போட்டுக் கொண்டிருக்கும் அவன் கட்டிய தாலிக்கு எந்த மரியாதையும் பிரதிபலிப்பும் இல்லையா”, என்று தோன்றிற்று.

நேற்று அவன் அக்கறையாக ஹாஸ்பிடல் கூட்டிக்கொண்டு வந்தது எல்லாம் மறந்து போயிற்று.

யாரிடமும் பேசவில்லை…… தூங்குவது போல கண்களை மூடிக் கொண்டாள்.

பிரபாகரனை கை நிறைய சாக்லேட்ஸ், கேக் என்று வாங்கி கொடுத்து கொண்டு வந்து விட்டவன்…..

அவனின் மாமா பழனிசாமியை நோக்கி, “ஏன் அக்காவோட பேசறதில்லை?”, என்றான் நேரடியாக……

அதை பழனிசாமி எதிர்பார்க்கவில்லை….. அவனுக்கு என்ன பதில் சொல்வது என்றும் தெரியவில்லை….. அவன் இந்த நேரடி கேள்வியால் திகைத்து நிற்க……

“இது உனக்கு தேவையில்லாத விஷயம், நீ இதுல தலையிடாத…”, என்று பழனிசாமிக்கு பதிலாக லதா சொல்ல……

“எது தேவையான விஷயம், எது தேவையில்லாத விஷயம்ன்னு எனக்கு தெரியும்…. நான் உன்கிட்ட கேட்கலை, நீ பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை…..”,

“அவர் என் வீட்டுக்காரர்”,…… என்று காரமாக லதா பேச….

“நான் எப்போ இல்லைன்னு சொன்னேன், என்னோட கேள்வியே உன்னோட வீட்டுக்காரர் ஏன் உன்கூட பேசறதில்லைன்னு தான்!”,

“எங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும், அதுல நீ தலையிடாத…..”,

“உங்களுக்குள்ள ஆயிரம் என்ன லட்சம் கூட இருக்கட்டும்….. ஏன் பேசறதில்லை… ஏன் நான் நாலு வருஷமா தொடர்புல இல்லைன்னா உனக்கு யாருமில்லைன்னு நினைச்சிட்டாரா…….”,

“இத்தனை நாள் ஆள் அட்ரசே இல்லாம இருந்துட்டு, முந்தா நேத்து பார்த்துட்டு இன்னைக்கு துள்ற….. உங்க அக்கா தான் மனுஷியா அடுத்தவங்கலாம் இல்லையா….. தாலிக்கட்டிட்டு இந்த பொண்ணு எப்படி இருக்கான்னு கூட பார்க்காம இருந்துட்டு… நீ அடுத்தவங்களை கேள்வி கேட்க வேண்டிய அவசியமில்லை”, என்றாள் லதா….

விக்ரமிற்கு அக்கா என்பதை வார்த்தையில் நிரூபித்தாள்…….

“சும்மா நான் ஏதாவது கேட்டா நீ ஏதாவது பேசி பிரச்சனையை திசை திருப்பாத புரிஞ்சதா…… நான் உன்கிட்ட கேட்கவேயில்லை! இவர் கிட்ட தான் கேட்கறேன்!”, என்று மீண்டும் பழனிசாமியிடம் திரும்பினான்.

“நீ என் வீட்டுக்காரர்கிட்ட கேள்வி கேட்க வேண்டிய அவசியமில்லை”, என்று கோபமாக சொன்ன லதா…. இவ்வளவு நாட்களாக கணவனிடம் பேசாததையும் மீறி, “வாங்க போகலாம்!”, என்றாள் பழனிசாமியை பார்த்து..

விக்ரமிற்கு எப்போதும் வரும் கண்மண் தெரியாத கோபம் வர…. “ஏய்! கண்ணை திறடி!”, என்று அன்னகிளியை பார்த்து ஏறக்குறைய கர்ஜித்தான்.

“உங்கண்ணன் தானே அவர்…. அவரை முதல்ல என் கேள்விக்கு பதில் சொல்ல சொல்லு…”, என்று அன்னகிளியிடம் தன் கோபத்தை காட்ட……

அன்னகிளியிடம் கோபத்தை காட்டுகிறான் என்று பழனிசாமி……  பேசப் போக…

லதா, எங்கே ஏதாவது பழனிசாமி உளறி விடுவனோ என்று உணர்ச்சிகளின் பிடியில்  கத்தினாள்…… “நீங்க பேசக் கூடாது!”, என்று பழனிசாமியை நோக்கி….

அவள் கத்திய கத்தலில் வெளியே இருந்த….. மரகதமும் கந்தசாமியும் உள்ளே வந்திருந்தனர். கந்தசாமி சத்தம் வெளியே கேட்டு விடக் கூடாது என்று ரூம் கதவை மூடினான்.

“என்னடா சும்மா அன்னத்தை மிரட்ற, நீ என்ன உரிமையில மிரட்ற…….. பொண்டாட்டின்ற உரிமையில்லையா? அவ்வளவு உரிமை இருக்குறவன், எதுக்கு எங்க வீட்ல விட்டு வெச்சிருக்க……… நீயே கூப்பிட்டுக்க வேண்டியது தானே….?”,

“கூப்பிட்டுக்க வேண்டியது தானே என்ன….. நீ தான் கூப்பிட்டுக்குற…. நாங்க யாரும் அவளை பார்க்க மாட்டோம்…. நீ அவளை கூட வெச்சிக்குவியோ? விடுவியோ? அது உன் விருப்பம்….. ஆனா இனிமே அவ எங்க வீட்டுக்கு வரமாட்டா……”,

“அன்னம் வீட்டுக்கு வந்தா நான் என் பையனை கூட்டிக்கிட்டு எங்கயாவது போயிடுவேன்…… பார்க்கறேன் நீ அவளை என்ன பண்றேன்னு”, என்று ஆவேசமாக கத்த……

லதா பேசிய பேச்சுக்கள் சுற்றியிருந்தவர்களை சென்றடையும் முன் கோபத்தில் அவளுடைய முகத்தில் அதிக ரத்தம் பாய்ந்து சிவந்து விட….. வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று எல்லோரும் பயந்து விட்டனர்.

எப்போதும் பேசும் கந்தசாமியால் கூட எதுவும் பேசமுடியவில்லை……. தன்னுடைய அண்ணியின், “எங்க வீடு”,  என்று வார்த்தை அன்னகிளியை மிகவும் பாதித்தது. அன்னகிளி விக்ரமுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற நோக்கில் சொல்லப்பட்ட வார்த்தைகள் என்றாலும் அன்னகிளிக்கு அந்த வார்த்தை மிகவும் வலியை கொடுத்தது…. தான் தன் பிறந்த வீட்டில் யார்? அண்ணிக்கு தான் முதல் உரிமை என்ற நிதர்சனத்தை சொல்லியது.     

விக்ரம் எதுவும் பேசவில்லை….. இப்போது பேசினால் லதா மிகவும் கத்துவாள் என்று தன் அக்காவை பற்றி தெரிந்தவனாக அமைதியாக நின்றான்…..     

கந்தசாமி கோபமாக பேசவில்லை…… லதா பிள்ளை தாச்சி என்பதால் அமைதியாக  பதில் சொன்னான். “அவங்க நம்ம வீட்டு இளவரசிங்க அண்ணி! அப்படியெல்லாம் விட முடியாதுங்க….  அவங்க நம்ம வீட்டு பொண்ணு! அவங்களை வரவேண்டாம்னு சொல்லாதீங்க…… இப்படியெல்லாம் பேசாதீங்க”, என்றான் அதிகாரமாகவே.

“நான் சொன்னது சொன்னது தான், அன்னம் அவ புருஷனோட தான் போகணும்! இல்லை நான் நிச்சயமா எங்கயாவது போயிடுவேன்”,

இத்தனை நாட்களாக உறவுகள் எல்லாம் உன் தம்பிக்கு தானே பொண்ணை கட்டி குடுத்தாங்க… ஏன் அவனோட சேர்ந்து இருக்கலை….. என்று சராமரியாக அவளை நோக்கி கேட்கப்பட்ட கேள்விகள்…

“இல்லை, அன்னம் படிக்கறா! படிச்சு முடிச்சதும் கூட்டிட்டு போயிடுவான்”, என்ற உறவுகளை நோக்கி இவர்கள் சமாளித்தாலும் நம்பாத பார்வைகள்…… இவ்வளவு பிரச்சனையை நடந்ததுக்கு அப்புறம் யார் அந்த பொண்ணை கட்டுவா….. உன் தம்பியா இருந்தா மட்டும் என்ன என்பது போன்ற விமர்சனங்கள்…..

இப்போது விக்ரமின் அலட்சியம் எல்லாம் லதாவை அப்படி பேச தூண்டியது….  

“சும்மா பயமுறுத்தாதீங்க அண்ணி! உங்க முடிவு உங்க விருப்பம்…… எங்க பாப்பா நம்ம வீட்டுக்கு தான் வருவா”, என்று கந்தசாமி சொல்ல…..

அன்னகிளி தான் எல்லோர் கைகளிலும் பந்தாடப்படுவது போல உணர்ந்தாள்…..

கந்தசாமியிடம், “நீங்க சொன்னது மாதிரி அது உங்க விருப்பம் தம்பி…. அவ உங்க தங்கச்சி நான் யார் முடிவெடுக்க…… ஆனா என் முடிவு மாறாது”, என்று சொல்லி லதா பிரபாகரனின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு…….. பழனிசாமி, “லதா”, என்று தடுக்க தடுக்க வெளியே போக முயல…..

விக்ரம் அவளருகில் வந்தவன்….. “என்னை பார்த்து ரெண்டு நாள் தான் ஆச்சு! மறுபடியும் அந்த பொண்ணை என் தலையில கட்டிட்ட இல்லை! மறுபடியும் உன் நாத்தனார் தான் உனக்கு முக்கியம்னு காட்டிட்ட….. நான், நான் உனக்கு யாருமேயில்லை தானே……”, என்று அவளுக்கு மட்டும் கேட்குமாறு சொன்னவன்…….

மரகதத்தை நோக்கி, “அத்தை! நீங்க உங்க பசங்க, உங்க மருமக எல்லோரையும் கூட்டிட்டு கிளம்புங்க…… அவளை நான் பார்த்துக்கறேன்… போதும் நான் ரெண்டு பொண்ணுங்களோட பொறந்து படறது எல்லாம் போதும்…… திரும்ப திரும்ப என்னால இந்த மாதிரி பிரச்சனைகளை என்னால பார்க்க முடியாது…. தயவு செய்து கிளம்பிடுங்க”, என்றான்.

கந்தசாமி, “முடியாது”, என்பது போல அசையாமல் நிற்க……

எப்படியோ அன்னகிளி அவள் கணவனுடன் வாழ்ந்தால் போதும் என்ற நினைப்பில்…. பழனிசாமி…. கந்தசாமியை மறுக்க மறுக்க, “வா”, என்பது போல பிடிவாதமாக இழுத்துக் கொண்டு போனான். மரகதமும் ஒரு வார்த்தை பேசவில்லை வெளியே போனார்.

இப்படி அடிபட்ட நிலையில் மகளை விட்டு போகிறோமே என்ற உணர்வு அவரின் கால்களை நகர விடாமல் செய்த போதும்… லதா பிரபாகரனிடம், “பாட்டி! கையை பிடிச்சு கூட்டிட்டு வா”, என்று சொல்லி அவனை அதை செய்ய வைத்தாள்.

அப்போதும் தன் அண்ணனின் கையை உதறிய கந்தசாமி…. அண்ணியை நேரடியாக திட்ட முடியாமல் விக்ரமிடம், “உங்க வீட்டு சம்பந்தம் எங்க எல்லார் உயிரையும் எடுக்குது”, என்று ஆவேசமாக சொன்னவன்….

நேராக அன்னகிளியிடம் சென்றான்….. “என்னங்க பாப்பா பண்ணட்டும்!”, என்று கேட்டான்.

“நீங்க போங்கண்ணா, நான் சமாளிச்சுக்குவேன்….”,

“இல்லைங்க பாப்பா……. பேசிப் பேசியே….”, என்று கந்தசாமி மறுபடியும் ஆரம்பிக்க……

“அண்ணா, நீங்க போங்க……”, என்றாள் அழுகையை அடக்கியபடி…..

“பாப்பா யாருக்காகவும் பார்க்காதீங்க! நான் உங்களை பார்த்துக்குவேனுங்க…. உங்களுக்கு இஷ்டமில்லாத வேலையை செய்யாதீங்க, உங்களுக்காக உங்களை அவர் கூப்பிட்டுக்கிட்டா வேற விஷயம்……. அவர் அக்காவுக்காக அவர் கூப்பிடணும்னு ஒரு அவசியமுமில்லை….. அவர் அக்கா என்னத்துக்கு பையனை கூட்டிக்கிட்டு வெளில போயிடுவேன்னு பயமுறுத்தறாங்க…. அவங்க புருஷனையும் சேர்த்து கூட்டிட்டு போகட்டும்”, என்றான்.

என்ன அடக்கியும் அழுகை வந்துவிட்டது…….. “எனக்கு இஷ்டமில்லைன்னு நான் எப்பயாவது சொன்னனுங்களா….. நீங்க போங்கண்ணா… மேல மேல வார்த்தையை விட்டு அண்ணனோடையும் அண்ணியோடையும் பிரச்சனை பண்ணிக்காதீங்க… எனக்காக போங்க….”, என்றாள் தேம்பியபடி.  

பழனிசாமியும் திரும்ப வந்து, “வாடா”, என்று சொல்லி கந்தசாமியின் கையை பிடித்து இழுத்து போய் விட்டான்.

 

விக்ரம் அன்னகிளியை பார்த்தவன்……. “மொத்த குடும்பமும் ஒரே ஆக்டிங்….!”,

“எப்பவுமே என்னை இமோஷனலா ப்ளாக் மெயில் பண்ணிடறீங்க! என்னோட இஷ்டம்ன்ற ஒன்னு எப்பவுமே கிடையாது….. எத்தனை தடவை சொன்னேன் உன்னை கூப்பிடறது என்னோட இஷ்டமா தான் இருக்கனும்னு…”,

“மறுபடியும் நான் ஏமாந்துட்டேன்…. என்ன பதவியில இருந்து என்ன பிரயோஜனம்…… என்னமா ஏமாந்துட்டேன்……. உன்னை என் தலைல கட்டிட்டு போயிட்டாங்க…… ஊருலகத்துல எத்தனையோ ஊர் இருக்க எனக்கு இங்கயா போஸ்டிங் கிடைக்கணும்….. என் விதி என்னை விடாம துரத்துது”, என்று சோர்ந்து போய் தலையை பிடித்து கொண்டான்.

அன்னகிளிக்கு அந்த நிமிடம் செத்து விட தான் தோன்றியது….   

Advertisement