Advertisement

thankyou  geetha balan, padmi , krish ramesh , SD , radhika , amirthababu , pons akka , rama akkaa , geetha , tamizh , uma manoj , vij , prem , subbugeetha , KG , niran , vijivenkat , ezhil kailash , logavalli , deebi , priyagautham , stulip , anita , sai , docmaha , suganya , sathya , ragsri , suja , sruti , mythili , kala , j kruthika , selvi , jass , cynthiapurushoth , sugi , uma , niru , vijikumaran , ini , kodiuma , lakshmi , kanchana , eswari , vaisri , suba , chitra perumal , agalya , adhibala , uma uday , katlak , sujatha , shanthi , vennilad , banu , sri , malargal , thamarai , devi.u , 

and unknowingly if i missed any bodys name for them too

for giving me a wonderful start to this story by your comments

and this is the one which gives me great energy to revolve around the story always in my mind

and come fast… eagerly waiting to know from you friends!

“Don’t talk bad about your husand to anyone, ever!”

Annakili doesn’t choose to follow this , she, by nature has this tendency towards her husband. But, he?

A woman with superlative beauty, adorable character and admirable countenance, it’s a pity that Vikram misses out the good things in Annakili, be it her beauty or her character. But, He has his own reasons. Lets see how it gets unfolded.

அத்தியாயம் இரண்டு :

அவர்களை பார்த்து வந்ததில் இருந்து விக்ரம் ஒரு மாதிரி எரிச்சலில் இருந்தான். “அந்த திட்டுத் திட்டுகிறேன் எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசமாட்டேன் என்கிறாள்….. மனுஷி என்றால் சூடு சொரணை வேண்டாமா….. கணவனாய் இருந்தால் என்ன எவனாய் இருந்தால் உன் முகத்தை பார்க்கவே பிடிக்கவில்லை என்கிறேன் உன் முகத்திற்கு என் முகம் என்ன குறைச்சல் என்று கேட்டிருக்க வேண்டாமா ?”,

“இவள் மாறவேயில்லை!”,

விக்ரமிற்கு பெண்கள் என்றால் தைரியமாக இருக்க வேண்டும்…. இப்படி அடுத்தவர் பேசுவதை கேட்டுக் கொண்டு தேமே என்று நின்றிருந்தால் கோபம் வரும்.   

விக்ரம் இப்படி யோசித்துக் கொண்டிருக்கும் போது…… அன்னக்கிளி அவளின் அறையில் இருந்த கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்….

அது அவளுக்கு உண்மையை தெளிவாக காட்டிக்கொண்டிருந்தது…  அது அவளுக்கும் தெரிந்த உண்மை தான்.

“பாப்பா”, என்று அவளின் பெரிய அண்ணன் பழனிசாமியின் குரல் கேட்க வேகமாக வெளியில் வந்தவள்…..

“என்னங்க்ணா”, என்று கேட்க……

“என்ன நடந்ததுங்க பாப்பா அங்க…..?”,

டிரைவர் இடித்ததை கூறினாள்…. “அண்ணா அங்க நம்ம வண்டி நிக்குதுங்களே! டிரைவரும் அங்க மாட்டி இருக்காருங்க நீங்க போகலீங்களா…….”,

“சின்னவன் போயிருக்கான்” என்று சொன்ன பழனிசாமி…… “நான் இதை கேட்கலைங்க பாப்பா…… வேற என்ன நடந்ததுங்க”, என்றான்…..

“அவரு வந்திருந்தாருங்கணா”,

“அம்மா சொன்னாங்க ஏதோ பெரிய வேலை ஜட்ஜ் மாதிரின்னு……”,

“அப்படி தானுங்கண்ணா பேசிக்கிட்டாங்க……..”,

“பேசிகிட்டாங்கன்னா அப்புறம் உங்க கிட்ட என்ன பேசினான்…..”,

“அது வந்துங்க”, என்று அன்னக்கிளி இழுக்க….

“பாப்பா மறைக்காம சொல்லுங்க, உங்களை கூப்பிட்டு பேசினானாமே”, என்று அண்ணன் கேட்கவும்…..

“நீங்க வரலையா? எப்படி அண்ணியை மட்டும் தனியா விட்டாங்கன்னு கேட்டாருங்கண்ணா…..”,

“நீங்க என்ன சொன்னீங்க”,

“நீங்களும் அண்ணியும் பேசிக்கறதில்லைன்னு சொல்லிட்டேனுங்க”, என்றாள் தயங்கி தயங்கி…..

“அதை ஏன் பாப்பா அவன்கிட்ட சொன்னீங்க”,

“சட்டுன்னு மாத்தி சொல்ல வரலைங்கண்ணா”,  

“வேற எதுவும் உங்க கிட்ட பேசலீங்களா”,

“இல்லை”, என்பது போல தலையசைக்க…..

“சும்மாவே அந்த ஆட்டம் ஆடுவான்……. இப்போ ஜட்ஜா இன்னும் ஆடுவான்”, என்று சலித்துக் கொண்டே பழனிசாமி திரும்பி சென்றான்.

பழனிசாமியாவது என்ன பேசினான் என்று கேட்டான்…… ஆனால் விக்ரமின் அக்கா லதா….. ஒரு வார்த்தை கூட அவளின் தம்பி விக்ரம் என்ன பேசினான் என்று அன்னக்கிளியிடம் கேட்கவில்லை.

“அக்காவும் தம்பியும் சரியான வீம்பு பிடிச்சவங்க”, என்று நினைத்த அன்னக்கிளி அவன் தோற்றத்தில் தெரிந்த மாறுதலை அசை போட்டுக் கொண்டிருந்தாள்…..

அம்மா என்ன விக்ரம் அவளிடம் கேட்டான் என்று கேட்டார்கள் தான்… அதற்கு அவள்….

“அண்ணன் எப்படி தனியா அண்ணியை அனுப்பினாங்கன்னு கேட்டாங்க!”,

“வேற எதுவும் கேட்கலையா பாப்பா…. நீ சௌக்கியமான்னு கூட கேட்கலையா?”,

“இல்லீங்க்மா!”, என்றவளை பார்த்த அவளின் அன்னையின் முகத்தில் ஏமாற்றம் படர்ந்தது. 

அப்பாவிற்கு வயசாகிவிட்டது…. ஓரளவிற்கு அவளின் அப்பாவின் குணமும் அவளின் குணமும் ஒத்திருக்கும்……… அதாவது இருவரும் அதிகம் பேச மாட்டார்கள். 

அவரிடம் விக்ரம் கோயம்பத்தூர் வந்திருப்பது, பதவியில் இருப்பது தெரிவிக்கபட்டு விட்டது. அப்படியா சரி என்பது போல மட்டுமே அவரின் அணுகுமுறை இருந்தது.

வந்தவுடனேயே களைப்பாய் இருக்கிறது என்று லதா உறங்க சென்று விட…. அவசரமாய் உணவு தயாரித்து அவளுக்கும் உணவு கொடுத்து, அவளுடைய பத்து வயது மகன் பிரபாகரனுக்கும் உணவு கொடுத்து அன்னக்கிளி நிமிர்ந்த போது…..  

வீடே உறங்க ஆயத்தமாகிவிட்டது…  உழைக்க சற்றும் அஞ்சாதவள் அன்னக்கிளி,  காலையில் எழுந்தால் இரவு உறங்கும் வரை எதாவது இழுத்துப் போட்டு செய்து கொண்டே இருப்பாள்….. அவளை தான், “இன்னும் நீ தின்னுட்டு தின்னுட்டு தூங்கறதை விடலியா?”, என்று விக்ரம் கேட்டான்.

படிப்பு பீ எஸ் சி ஹோம் சயின்ஸ்….. அவினாசிலிங்கம் பெண்கள் கல்லூரியில் போன வருடம் தான் முடித்திருந்தாள்.

ஆம், இருபத்து இரண்டு வயதே ஆனா பெண் அவள்………. மூன்று வருட படிப்பும் ஹாஸ்டல் வாசம்….

இப்போது ஒரு வருடமாக வீட்டில் இருக்கிறாள்….

அவர்களுடைது ஊரில் முதன்மையான பெரிய வீடு என்று சொல்லப்படும் சற்று வசதியான குடும்பம். பரம்பரையாய் வரும் நில புலன்கள் அதிகம். விவசாயம் தான் பிரதான தொழில்… இப்போது ஆண்பிள்ளைகள் இரண்டு பேரும் சேர்ந்து வேறு சில தொழில்களையும் கூட சேர்த்துக் கொண்டனர்…. அதனை லாபகரமாகவும் நடத்தி சென்றனர்.  

அவர்களுடைய கிராமம் கோவையிலிருந்து ஒரு பத்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது…. பஸ்ஸில் போய் வரும் தூரம் தான் கல்லூரி…… சேர்ந்த ஓரிரு மாதம் பஸ்சில் தான் போய் வந்தாள்…..

அந்த ஓரிரு மாதத்தில் வந்த பிரச்சனைகளின் விளைவு தான் அவளின் திருமணம்….. பிறகு படிப்பை தொடர முடிவு செய்த போது…. அவளை அவளின் சின்ன அண்ணன் ஹாஸ்டலில் சேர்த்து விட்டான்.  

வீட்டில் சின்ன அண்ணன் எடுக்கும் முடிவுகளே பிரதானம்…. பெரிய அண்ணனை அனுசரித்து போய் விடுவானா சின்ன அண்ணன்…. இல்லை அவனின் எண்ண போக்கை வைத்தே முடிவெடுப்பானா அவர்களுக்கே வெளிச்சம்… இதுவரை சிறு பிரச்சனையோ சலசலப்போ இருவரிடத்திலும் வந்ததில்லை.

அவர்களுக்குள் சமீப காலமாக இருக்கும் ஒரே பிரச்சனையை அன்னக்கிளி…. பெரிய அண்ணன், விக்ரமிடம் பேசி அன்னக்கிளியை  அவனுடன் விட்டு வரலாம் என்று சொல்ல….. சின்ன அண்ணன், வேண்டுமென்றால் விக்ரம் வரட்டும்….. அப்படியே வந்தாலும் எனக்கு அவனின் பேச்சு நடவடிக்கை திருப்தி என்றால் மட்டுமே அனுப்புவேன் என்பது அவனின் சொல்.            

சாப்பிடாமல் அவள் சின்ன அண்ணன் கந்தசாமிக்காக தான் காத்திருந்தாள்.

அவன் வரும் போது நேரம் பத்தை தாண்டிவிட்டது… அன்னக்கிளி அவனுக்காக காத்திருப்பதை பார்த்து, “ஏனுங்க பாப்பா! உங்களுக்கு தான் ஒம்போது மணிக்கெல்லாம் தூக்கம் சொக்குமுங்களே! நீங்க ஏனுங்க உட்கார்ந்திருகீங்க?”, என்று கடிந்தான்.

“அதுக்கு தான் உங்களை கல்யாணம் பண்ணிக்க சொல்றேன்….. அண்ணி வந்துட்டாங்கன்னா நான் பாட்டுக்கு தூங்க போயிடுவேணுங்களே”,

“பெரிய அண்ணனுக்கு யாரு சாப்பாடு போட்டா”, என்று கந்தசாமி கேட்கவும்….

“அண்ணா நீங்க அதுக்கும் இதுக்கும் முடிச்சு போடாதீங்க…. அது அவங்க வாழ்க்கை! நம்ம அதை அலசி ஆராயக் கூடாதுங்க”, என்றாள் குரலில் தொனித்த சிறு கண்டிப்புடன்.

“யாரையும் ஒரு வார்த்தை சொல்ல விட்டுடாதீங்க”, என்று நொடித்தான் கந்தசாமி.

அன்னக்கிளியின் பார்வை திருப்தியின்மையைக் காட்டவும்…….

“சரி, நீங்க உங்க வாழ்க்கையை பத்தி ஒரு முடிவெடுங்க….. நான் கல்யாணம் பண்ணிக்கறேன்!”,

“நான் என்னங்கண்ணா முடிவெடுக்க…..”,

அவன் முடிவு என்று சொல்வது விக்ரமை விவாகரத்து செய்து விடு, வேறு நல்ல மாப்பிள்ளையாக பார்க்கலாம் என்பதே…… அதை நேரடியாக சொல்லாமல் மறைமுகமாக பல வழிகளில் அன்னக்கிளிக்கு உணர்த்திக் கொண்டிருந்தான்.

அன்னக்கிளி அவன் ஆரம்பிக்கும் போதே தவிர்த்து விடுவாள்… இந்த கண்ணாமூச்சி ஆட்டம் ஒரு ஆறு மாதமாக இப்போது நடந்து கொண்டிருக்கிறது.   

சும்மாவே விக்ரம் வரமாட்டான் என்பது கந்தசாமியின் எண்ணம், இப்போது அவன் பதவியில் இருக்கிறான் என்று தெரிந்ததில் இருந்து வரவே மாட்டான் என்று கந்தசாமி முடிவே செய்துவிட்டான்.

“பாப்பா நான் முடிவா சொல்றேன், உங்க வாழ்க்கை சரியாகாம நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்… இதை பத்தி பேசாதீங்க….. அந்த மோரை ஊத்துங்க”, என்று பேச்சை  மாற்றினான். 

அண்ணனின் பிடிவாதத்தை அறிந்தவள் அமைதியாகிவிட்டாள்…… ஆனால் உணவு உண்டு கொண்டிருக்கும் அண்ணனை பார்வையால் அளந்தாள்..

உழைப்பும் வசதியும் கொடுக்கும் கம்பீரம் தோற்றத்தில் இருந்தாலும், முன் நெற்றி ஏற ஆரம்பித்து இருந்தது…..  ஒரு முதிர்ச்சியான தோற்றத்தை கொடுக்க ஆரம்பித்து இருந்தது….. வயதும் அவளுக்கும் சின்ன அண்ணனுக்கும் பத்து வயது வித்தியாசம்.

அவனுடைய திருமண பேச்சு நடந்து கொண்டிருந்த போது தான் அன்னக்கிளியின் பிரச்சனை வர…… அவனுடைய திருமணத்தை அப்போதைக்கு யாரும் கவனிக்க வில்லை….. சில மாதங்களுக்கு பிறகு கவனிக்க முற்பட்ட போது அவன் சம்மதிக்கவில்லை.  

இவ்வளவு பேசும் அண்ணன் விக்ரமை அவள் பார்த்தது பற்றி கேட்கவேயில்லை…. அவன் என்ன பேசினான் என்றும் கேட்கவில்லை. “எதுவும் பிரச்சனையில்லை தானுங்களே பாப்பா!”, என்று பொதுப்படையாக விசாரித்தான்….. அது விக்ரம் அவளிடம் பேசியது தெரிந்து கேட்கப்பட்ட கேள்வி.

அன்னக்கிளி, “ஒண்ணுமில்லைங்கண்ணா”, என்று சொல்ல… அவளை ஒரு பார்வை பார்த்து சென்று விட்டான். அன்னக்கிளி விக்ரமை பற்றி எப்போதும் ஒரு வார்த்தை கூட தவறாக பேசமாட்டாள் என்று கந்தசாமிக்கு தெரியும். கந்தசாமி பேச ஆரம்பித்தால் அவனையும் மீறி விக்ரமை திட்டுவான், அது அவளுக்குப் பிடிக்காது என்பதால் அமைதியாக சென்றுவிட்டான்.      

இவ்வளவு நாட்களாக விக்ரம் சென்னையில் இருக்கிறான் என்று மட்டுமே அன்னக்கிளிக்கு தெரியும்.  வக்கீல் தொழில் செய்கிறான் என்று முன்பே தெரிந்தது தான். எங்கு தங்கியிருக்கிறான், போன் நம்பர் என்ன போன்ற விவரங்கள் எதுவும் தெரியாது…..

யாரும் அவளிடம் சொல்லவில்லை….. சொல்லியிருந்தாலும் அவளாக தொடர்பு கொண்டிருக்க மாட்டாள்….. அவளாக தொடர்பு கொண்டிருந்தாலும் விக்ரம் அவளிடம் பேசியிருக்க மாட்டான்.   

ஏதாவது செய்தாக வேண்டிய கட்டாயத்தில் இப்போது இருந்தால் அவள்… பெரிய அண்ணனுக்கும் அண்ணிக்கும் என்ன பிரச்சனை என்று தெரியாது, ஆனால் அவளின் பொருட்டே பிரச்சனை என்று தெரியும்….. சின்ன அண்ணன் அவளின் பொருட்டே திருமணம் செய்யாமல் இருக்கிறான் என்று தெரியும்…

இரண்டு அண்ணன்மார்களின் வாழ்க்கையை சீர் செய்ய வேண்டிய நிலைமையில் இருந்தாள்.

என்ன செய்வது என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போது கடவுளாக விக்ரமை கண்ணில் காட்டியிருக்கிறார்……

என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தாள்…. அது விக்ரமின் மனநிலையை பொறுத்ததே….. “என்கிட்டே பேசுவாரா தெரியலையே”, என்ற எண்ணம் ஓட….. “எப்படியும் என்னை பார்த்தால் திட்டுவதற்காகவாவது பேசுவார்”, என்ற எண்ணம் வலுத்தது.

“எப்படி அவரை பார்ப்பது…. அவளாக செல்ல வேண்டும்….. வீட்டில் என்ன சொல்லி செல்வது…. தோழி ஒருத்திக்கு உடம்பு சரியில்லை… ஹாஸ்பிடலில் இருக்கிறாள்….. கோவையில் இருக்கும் இன்னொரு தோழியுடன் பார்க்க செல்கிறேன்”, என்று காலையில் எழுந்தவுடன் எல்லோரிடமும் ஒரே மாதிரியாக சொல்லி, சம்மதம் வாங்கி பஸ் ஏறுவதற்குள் வேர்த்து விறு விறுத்து விட்டது.

அப்போதும் அவளின் அண்ணி அவளை சந்தேகமாக பார்ப்பது போல ஒரு எண்ணம். சிந்திக்க நேரமில்லை…. ஏனென்றால் கொஞ்சம் நேரம் கழித்து இந்த தைரியம் அவளுக்கு இருக்குமா என்று அவளுக்கே தெரியாது.   

காரில்லை, கார் வந்த பிறகு செல்லலாம் என்று அண்ணன்மார் இரண்டு பேரும் ஒரே மாதிரியாக சொல்ல….. “இல்லை! சீரியசாக இருக்கிறாள்!”, என்று அதையும் இதையும் சொல்லி கிளம்பிவிட்டாள்.

காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் இறங்கி கோர்ட்டிற்கு செல்ல வேண்டும் என்று ஆட்டோகாரரிடம் சொல்லி ஆட்டோவில் சென்றாள்.

அங்கே சென்றால் பரந்து விரிந்து கிடந்தது அது…. அவன் பெயர் மட்டுமே தெரியும்… மற்றபடி ஒன்றும் தெரியவில்லை… சற்று நேரம் யோசித்தவள்… அவள் நின்ற இடத்திற்கு அருகில் பெண் வக்கீல் ஒருவர் அவரின் கட்சிக்காரரிடம் பேசிக்கொண்டிருப்பதை  பார்த்தவள், அவர் பேசி முடிக்கும் வரை பொறுமையாக நின்று….. அவர்கள் பேசி முடித்ததும்…..

“மேடம், இங்கங்க….. விக்ரம்ன்னு ஒரு நீதிபதி எங்க இருப்பாருங்க……. எப்படி பார்க்கறதுங்க”, என்று விசாரித்தாள்….

அந்த வக்கீல் பெண் அவளை விசித்ரமாக பார்த்தாள்…. “அவரு தலைமை நீதிபதிங்க! அப்படி அவரை நினைச்ச உடனே பார்க்க முடியாதுங்க…… அதுவும் படிப்படியா இந்த பதவிக்கு வந்திருந்தாலாவது எல்லோரையும் மதிச்சு நடப்பாங்க….. இவர் டைரக்ட்டா எக்ஸாம் எழுதி வந்தவரு…… ரொம்ப சின்ன வயசு….”, 

“இந்த வயசுல இந்த பதவி ரொம்ப அதிகம்….. இந்த வயசுல இந்த பதவிக்கு யாரவது ஒண்ணு ரெண்டு பேர் வர்றது கூட அபூர்வம்……. ஒரு கேஸ் விஷயமா பார்க்க முயற்சி பண்ணினேன்… மனுஷன் மதிக்கவேயில்லையே…… பார்க்க முடியவேயில்லை…. காரணம் சரியா இல்லைன்னா பார்க்க மாட்டாருங்க…. நீங்க யாரு எதுக்கு பார்க்கனுமுங்க அவரை?”, என்று அவளின் மருண்ட பார்வையை பார்த்து நீளமாக பேசி விசாரித்தாள்.

தயங்கி, “தெரிஞ்சவருங்க!”, என்றாள் அன்னக்கிளி…..

“தெரிஞ்சவரா? அப்போ என்னையும் கூட கூட்டிட்டு போறீங்களா! பார்க்க முடியும்னா நான் எங்க இருப்பாருன்னு சொல்றேன்!”, என்று அந்த பெண் சொல்ல……

“எங்க இருப்பாருன்னு மட்டும் சொல்லுங்க, நான் பார்த்துக்கறேனுங்க!”, என்று அன்னக்கிளி பேச்சை கத்தரிக்க…

தோளை குலுக்கிய அந்த பெண்….. அவன் இருக்கும் கோர்ட் மற்றும் சேம்பர் சொல்லி அனுப்பினாள்… “இந்த ரெண்டுல எதுலயாவது தான் இருப்பாருங்க!”, என்று.

தலையசைத்து அந்த இடத்தின் அருகில் சென்று விட்டாள்…. அதற்கு மேல் எப்படி செல்வது, எப்படி பார்ப்பது என்று தெரியவில்லை…. என்னவோ எல்லோரும் தன்னையே பார்ப்பது போன்ற உணர்வு வேறு…  

மிரண்டு விழித்துக் கொண்டு யோசித்து நிற்க…..

“வணக்கமுங்கம்மா!”, என்ற குரல் கேட்க, தூக்கி வாரிப் போட திரும்பினாள்…. நேற்று பார்த்த விக்ரமின் டிரைவர் நின்று கொண்டிருந்தான். அவனை பொருத்தவரை அவன் பார்க்கும் பெண் ஜட்ஜிற்கு தெரிந்தவள்…..

“என்ன விஷயமுங்கம்மா….?”,

“சாரை பார்க்கணும்!”, என்றாள் திக்கி திணறி…..

அவளின் பதட்டத்தை பார்த்தவன்… “நான் சாருகிட்ட கிட்ட சொல்றனுங்க”, என்று உள்ளே சென்றவன்……..

சமயம் பார்த்து மெதுவாக விக்ரமின் காதில், “நம்ம அம்மிணி வந்திருக்குதுங்க!”, என்றான்…..

விக்ரம் ஒரு கேசை பற்றி தீவிரமான யோசனையில் இருந்தான், அவன் எண்ணம் அதிலேயே இருந்தது…..

டிரைவர் வந்து இப்படி சொல்லவும்…… “யாரு நம்ம அம்மிணி”, என்றான் புரியாமல்.

“அதானுங்க நம்ம நேத்து பார்த்தமுங்களே, உயரமா! சிவப்பா!”,

அப்போதும் விக்ரமிற்கு அவள் அன்னக்கிளியாயிருப்பாள் என்று ஸ்ட்ரைக் ஆகவில்லை…

“யாரு? தெளிவா சொல்லுங்க!”, என்று விக்ரம் அதட்டலாக கேட்க…

அவளை எப்படி அடையாளம் சொல்வது என்று தெரியாமல் தடுமாறிய டிரைவர்….. பார்த்த இடத்தை சொல்லியிருந்தால் விக்ரமிற்கு உடனே புரிந்திருக்கும், அதை விட்டு..

“அதானுங்க அனுஷ்கா மாதிரி இருந்தாங்களே!”, என்றான்.

அனுஷ்கா யார் என்று விக்ரமிற்கு சுத்தமாக புரியவில்லை……

அவன் திரும்பவும் முறைக்க… “நம்ம அருந்ததி சினிமால வர்ற அனுஷ்கா மாதிரி”, என்று சொல்லவும் தான் அவன் நடிகையை சொல்கிறான் என்று விக்ரமிற்கு புரிந்தது…..

“வேலை நேரத்துல வந்து என்ன உளறிட்டு இருக்கிங்க”, என்று டிரைவரிடம் எரிந்து விழுந்தான்….. “எங்க பார்த்தோம் முதல்ல அதை சொல்லு!”, என்று சுள்ளென்று சொல்ல…

“ஹாஸ்பிடல்ல, நான் கூட கால் டாக்ஸி கூட்டிட்டு வந்து ஏத்தி விட்டேனுங்க”, என்று சொன்னான்.

விக்ரமின் முக பாவனைகளை பார்த்துக் கொண்டிருந்த கட்சிக்காரர்களுக்கும் கேசை நடத்திக் கொண்டிருந்த வக்கீலுக்கும் டென்ஷன் ஆனது…… விக்ரம் மூட் அவுட் ஆகி தங்கள் கேஸ் சொதப்பி விட்டால்…… அவர்கள் பயம் அவர்களுக்கு…..

அப்போதுதான் விக்ரமிற்கு ஒரு வேலை அன்னக்கிளியை சொல்கிறானோ என்று தோன்ற…. “வேகமா போய் பேர் கேட்டுட்டு வாங்க…..”, என்றான்.

விக்ரமின் மனதிற்குள் ஓடியது….. “உயரமா! சிவப்பா! அனுஷ்கா மாதிரியா இருக்கா அவ….. என் கண்ணுக்கு எருமை மாடு மாதிரி தானே தெரியறா……”,

அன்னக்கிளிக்கு முளைத்த பிரச்சனைகளுக்கு காரணம் அவளின் அதீத அழகு…. அதன் பொருட்டே விக்ரமோடு அவளின் திருமணம் நடக்க காரணங்களும் அமைந்தன……    

ஆனால் அந்த அழகு விக்ரமின் கண்களுக்கு தெரியவில்லை…. அன்றைய அவனின் எண்ணம் அன்னக்கிளி அவனுடைய அக்காவின் நாத்தனார்…… அவனின் அக்காவிற்கு திருமணம் ஆகும் போது அன்னக்கிளி பத்து வயது சிறுமி, அவன் பதினெட்டு வயது இளைஞன்….

அதன் பிறகு அவன் ஒவ்வொரு காலகட்டத்திலும் பார்க்கும் போது, அவன் கண்களுக்கு தெரிந்தது எல்லாம் அன்னக்கிளியின் அதீத வளர்ச்சி….. என்ன இந்த பொண்ணு இப்படி வயசுக்கு மீறி வளருது என்பதே அவனின் எண்ணம்…. அதை மீறி அவன் அன்னகிளியை பற்றி அவன் யோசித்தது இல்லை…..

அதுவும் அவள் வீட்டினர் அவளை தாங்கு தாங்கு என்று தாங்கும் போது….. “எரும மாடு மாதிரி வளர்ந்திருக்கா! இவளுக்கு எதுக்கு இவ்வளவு செல்லம் கொடுக்கறாங்க….! இப்படி பொத்தி பொத்தி பார்துக்கறாங்க!”, என்பது மாதிரி தான் அவனின் எண்ணங்கள் ஓடும்….

அவனின் தாயும் தந்தையும் அக்காவை திருமணம் செய்து கொடுத்திருந்த சமயம் ஒரு விபத்தில் இறந்துவிட்டனர். அதன் பிறகு விக்ரமை ஆதரித்தது அவனுடைய அக்கா வீட்டினர்.  

அதுவும் அவனின் அக்கா வீட்டினர் நன்றாக பேசினாலும் பழகினாலும் அவனுடைய வசதியை கொண்டு சற்று கீழே பார்ப்பது போல தான் அவனுக்கு தோன்றும்…. அவர்களை நம்பி இருந்தது அவனின் படிப்பு…. அது மட்டுமில்லை என்றால் போடா என்று நகர்ந்திருப்பான்…..

ஆனால் அவனுக்கு ஒரு தங்கையும் உண்டு, அவனை விட இரண்டு வயது இளையவள் அவளையும் அவர்கள் பராமரித்துக் கொண்டிருந்தனர்…..  

அதன் பொருட்டு எப்போதும் விக்ரம் அவர்களிடம் அதிகம் பேசாவிட்டாலும் மிகுந்த மரியாதையாக நடப்பான்.   

இப்படி யாரோ ஒருவன் வந்து சிவப்பா, உயரமா, அனுஷ்கா மாதிரி என்று சொல்லும் போது தான்….. அன்னக்கிளியின் தோற்றத்தை அழகு என்ற அளவு கோலில் ஆராய முற்பட்டான்.

அதற்குள் டிரைவர் வந்து, “அன்னக்கிளி”, என்று அவளின் பேர் சொல்ல…

“இவள் என்ன பிரச்சனையை கொண்டு வந்திருகிறாளோ?”, என்று தான் தோன்றியது… விக்ரமிற்கு போகலாம் போலவும் தோன்றியது……. அதே சமயம் போகவும் மனமில்லை…….   நடுவிலும் எழுந்து செல்ல முடியாது….

அவளை யார் வர சொன்னது என்ற கோபம் வந்தது……. 

“இப்போல்லாம் பார்க்க முடியாது, முக்கியம்மான கேஸ்ல இருக்கேன்… வீட்டுக்கு கிளம்ப சொல்லுங்க… என் போன் நம்பர் குடுத்து அப்புறம் நைட் பேச சொல்லுங்க!”,  என்று பேச்சை முடித்து….. முக்கியமான கேஸ் என்பதால் எண்ணத்தை ஒரு நிலைப்படுத்தி கேசில் ஆழ்ந்தான்…

அவனுக்கு கேஸ் தான் முக்கியமான விஷயம்……… நடுவில் யாரையும் கொண்டு வர விரும்ப மாட்டான்.    

அதன் பிறகு கேஸ்கள் அணிவகுத்து நிற்க…. மதிய உணவு இடைவேளைக்கு முன் எல்லாவற்றையும் பார்த்து முடித்தவன், எழுந்து அவன் சேம்பர் போய் அமர்ந்தான்.

அவனருகில் தயங்கி தயங்கி வந்த டிரைவர், “அந்த அம்மணி இன்னும் போகலீங்க!”, என்றான்.

“என்ன?”, என்று எழுந்துவிட்டான் விக்ரம். நேரம் பார்க்க ஒரு மணிக்கு மேல், அவள் வந்ததாக சொல்லப்படாது பதினோரு மணிக்கு….

“இரண்டு மணிநேரமாக காத்துக் கொண்டிருக்கிறாளா?”, என்று கோபமாக வந்தது…… அந்த கோபத்தோடு வர சொன்னான்.

அன்னக்கிளி வரவும்….. டிரைவர் சொன்ன அனுஷ்கா தோற்றமா என்று ஒப்பிட்டு பார்க்க முற்பட…. முதலில் அவனுக்கு நேற்று பார்த்ததை விட இன்று இன்னும் உயரமாக தெரிந்தாள்….  

காரணம் அவளின் ஹீல்ஸ்….. முகத்தை சுளித்தவன்……. கடுப்பாக…… “அறிவிருக்கா உனக்கு! ஏற்கனவே பனைமரம் கணக்கா வளர்ந்து வெச்சிருக்க! உனக்கு எதுக்கு ஹீல்ஸ்…. அதுவும் புடவையை வேற மேல தூக்கி கட்டியிருக்க…. எங்க உன் அக்மார்க் கொலுசு! ஏதோ மாடு வந்தா சத்தம் கேட்க கட்டுன மாதிரி ஜல் ஜல்ன்னு போட்டுட்டு சுத்துவியே, அதைக் காணோம்”, என்றான்.   

அவள் உடுத்தியிருந்தது ஒரு காட்டன் புடவை, அது சற்று மேல் ஏறியிருக்க, அதுக்கு தான் இந்த அர்ச்சனை…..

அன்னக்கிளி ஒன்றும் பட்டிக்காடு மாதிரி உடுத்துபவள் அல்ல….ஒரு பெண்கள் கல்லூரியில் படித்த இன்றைய நாகரீகங்கள் அறிந்த மங்கை….. அப்படியே நவ நாகரீகமாக இருக்கிறாள் என்று சொல்லும்படியாக இல்லாவிட்டாலும் நன்றாக நீட்டாக புடவை கட்டுபவள்……

இப்படி ஒரு திட்டை வாங்கினாள்……    

நின்ற இடத்திலேயே நின்றாள்…….. முன்னே போவதா பின்னே போவதா தெரியவில்லை…….. மலங்க மலங்க விழித்தாள்……

அதற்கும் திட்டு வாங்கினாள்…. “வீட்டுக்கு போன்னு சொன்னேன்…… போகாம டூ ஹவர்ஸ்ஸா வெயிட் பண்ணிட்டு, இப்போ என்ன ஃபிரன்ட்ல வர்றதா, பேக்ல போறதான்னு யோசிச்சிட்டு நிக்கற”, என்று கடித்தான்.

அன்னகிளிக்கு நேற்றிலிருந்து யோசித்தது……. அவள் பேச வந்தது என்று அத்தனையும் மறந்து போனது.     

Advertisement