சிறகாய் விரிந்தேன்…. உன்னால்….
13
எல்லா இடத்திலும் எல்லோராலும் சிறப்பாக இருக்க முடிந்தால்… இந்நேரம் அவர்கள்தான் கடவுள்…
வெங்கட், மீனாட்சியையும், உமாவையும் பார்த்து… “நீங்க போங்க, அங்க தேவி, தனியா ஏதாவது செய்துக்க போறா…” என ஒரு பீதியை காட்டி.. இங்கு நீங்கள் தேவையில்லை என்ற செய்தியை சொல்லி அனுப்பினார் வெங்கட்.
(ஆண்கள் பல இடங்களில் தெளிவாக இருப்பர்… எங்கே பெண்களை விளக்கி வைக்க வேண்டும் என அவர்களுக்கு தெரியும்… ஆனால், உணர்வு பூர்வமான இந்த பெண்களுக்குத்தான் ஆண்களை தாண்டி, விளக்கி… ஒரு விழயத்தை சிந்திக்கவே தெரியாது…)
மீனாட்சிக்கும், உமாக்கும் அது புரிய, மீனாட்சி முனகிய படியே உள்ளே சென்றார்….
நேசன் தனது இடது கையால்.. போனை பார்த்தபடியே இருந்தான் இவர்களின் ஆர்ப்பாட்டத்தை, லேசாக காதில் வாங்கியபடி, கண்ணை போனிடம் வைத்திருந்தான்.
வெங்கட் பொறுமையான குரலில் “கார்த்தி, நாளைக்கு… ‘படிப்பை முடித்து சென்னை திரும்பும் எங்கள் மருமகன் சிவநேசன்’ அப்படின்னு ஒரு செய்தி ஒன்னு பத்திரிகையில் கொடுத்திடு….” என்றார் கட்டளையாக.
சேகர் “என்ன…” என சத்தமிட்டார்.
நேசன் தலையை இருபுறமும் அசைத்து… ‘இது சரி வராது’ என்பதாக எண்ணி தலையசைத்தான்.
ஆவுடையப்பன் நேசனையே பார்த்திருந்தார்… அவனின் இந்த செய்கை எதிர்பார்த்தது தான்.. எனவே, வெங்கட்டின் கையை மீண்டும் தட்டினினார்.
வெங்கட் பார்க்க, கண்ணால் நேசனை பார் என ஜாடை காட்ட… அதை பார்த்த சேகர்.. தன் பொறுமையை இழுத்து பிடித்து அமர்ந்திருந்தார்….
வெங்கட் இப்போது “நேசன்… சிவநேசன்…” என்று பெரு மூச்சு விட்டார்…
பொறுமையான குரலில் “இது யாருடைய பெயர் தெரியுமா… நேசன்…” என்றார்.
சேகர் ‘ஆமாம் குல பெருமையை சொல்ல… இவன் பெரிய குலம் காத்த குமரன்… வந்துடாரு இவரு…
என்ன சொன்னாலும்… இவன் வேறுதான்…
இங்க ஒரு பையன் இருந்திருக்கணும்…. அப்போ சொல்லுவாரா… இது யாரு பேரு… ஊரு, என்னனான்னு… சொல்லுவாரா…
எல்லாம் சுயநலம்…
ப்பா… இவன பெத்தவ ஒரு புண்ணியவதிதான்…
இல்லைன்னா… 
இந்நேரம், குடும்ப மானம்… கப்பல் ஏறி அங்கேயே போயிருக்கும்’ என கன்னாபின்னாவென அவரின் மனம் அலை பாய்ந்தது… ஆனாலும், பல்லை கடித்து அமர்ந்திருந்தார் விஷயம் முழுதாக வெளியே வரட்டும்… என்பதான தோரணையில்.
வெங்கட், அப்படி கேட்டதும் நேசனுக்கு தெரியவில்லை முன்னாடி சிறு வயதில், மேகலை சொல்லியிருந்தார் தான், ஆனால்.. இப்போது அது நினைவில் இல்லை… நேசன் ‘இல்லை’ என்பதாக தலையசைத்தான்.
வெங்கட் “உங்க தாத்தா பெயர்… அதாவது, அப்புவோட அப்பா பெயர்…
அப்புறம் ஒரு விஷயம் இது, அவன் சொன்னது இல்லை, அப்புவின் நண்பனா… நான் சொல்றது….
உங்களை….
மேகலையையும்… உன் அம்மாவையும்… அப்பு வேண்டாம் என நினைக்கவில்லை…
அப்படி நினைத்திருந்தால்… உனக்கு தந்தையின் பெயரை வைத்திருக்க மாட்டான்…
அத்தோடு, தன் அப்பாவின் இறுதி ஆசையில் நடந்த திருமணம்.. அப்போது அவனுக்கு அதை தட்ட முடியவில்லை.
ஆனால், அதற்காக உங்களை விடவும் அவன் நினைக்கவில்லை…
எத்தனையோ முறை மேகலையை அழைத்தும்… திருமணம் முடிந்த செய்தி சொல்லி.. தான், அழைத்தான்…
தேவியை, அப்பு… விலக்கலாம் என சொல்லியும், உன் அன்னை வரவில்லை…
இதில் நான் அவர்களை தப்பு சொல்லவில்லை… இது முழுக்க முழுக்க… அவர்கள் சம்மந்தப்பட்ட விஷயம்…
நண்பனாக அப்புவின் நிலையை, நான் சொன்னால் மட்டுமே தெரியும்… உனக்கு, சொந்தங்களுக்கு… தெரியும், என்பதால் சொல்லுகிறேன்… 
அவன் என்ன செய்வான்… பாவம்….
அப்போதும் உங்களை விடாமல் வந்து, பார்த்து.. வந்தான்… நீங்கள் முகம் திருப்பிய போதும்… வெறுத்த போதும்….. கடமையை மறவாமல் செய்து வந்தான்… உரிமையை எதிர்பார்க்காமல்..” என்றார் பொறுமையான குரலில் அவர் சொல்ல….
நேசன், இப்போது இடை புகுந்தான் “அதனால, இவர் மேல் எந்த தவறும் இல்லை… 
இவர் சரியானவர்… நாங்கள்தான் தவறு…” என அவ்வளவு பொறுமையான குரலில் தன் தலை சாய்த்து நக்கலாக கேட்டான்….
வெங்கட், சிரித்தார் “பாத்தியா… இப்போதான் நீ சின்ன பையன்னு காட்டற…
அவனை எப்போ நான் சரின்னு சொன்னேன்..” என்றார்
நேசன் “இப்போதான் சொன்னீங்க….
அத்தோடு… அவங்க அப்பா பெயர் எனக்கு வைச்சதாலேயே… அவர நல்லவர்ன்னு சொல்றீங்க…
என்ன…
என்ன இது, ஷேமா இல்ல… 
விட்டுங்க… 
இது பத்தி பேசாதீங்க…. ப்ளீஸ்…” என்றவன் தன் இடக் கையால், தன் தலை கோதி… எங்கோ வெறித்து பார்த்தான்…
தனக்குள்ளாக “ஒரு பெண்ணை தனியா… குழந்தையோட தவிக்க விட்டவர் நியாயமானவர்… 
அத பேச நாலு பேர்….” என மெதுவான குரலில் பேசியவன் 
சத்தமாக “என்ன நினைக்கிறீங்க நீங்களெல்லாம்….
பெண்ணை தனியா தவிக்கவிட்டு தனக்கென வாழ்ந்தவர்… 
ச்சே…. ஆண் என பெருமையா சொல்லிக்கவே கூடாது… ரைட்…” என்றான்  மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க…
சற்று நேரம் அமைதி…
அவனே மீண்டும் தொடர்ந்தான் “விட்டுடுங்க…. பேசாதீங்க…
எனக்கு இங்க இருக்கவே பிடிக்கலை…
முப்பது வருஷமா… ஒரு ஆள் செய்தத நியாயபடுத்தி… 
கொஞ்சம் கூட சங்கடமே படாமல் ஒருத்தரால பேச முடியும்ன்னு… நான் இப்போதான் பார்க்கிறான்…
என்னை விட்டுடுங்க…. ப்ளீஸ்…” என்றவன் எழுந்து நின்று… வணக்கம் என கை கூப்பினான்…
வெங்கட் “இரு ப்பா….” என அவரும் அவனிடம் சென்று… ஆசுவாசபடுத்தினார்…
நேசன், தலையை இருபுறமும் அசைத்து ‘அமர மாட்டேன்’ என நிற்க… அவனிடம் தண்ணீர் நீட்டினார் வெங்கட்… எல்லோரும் இதனை வேடிக்கைதான் பார்த்தனர்.
கொஞ்சம் சுதாரித்தான் நேசன்… தன்னை கட்டுப்படுத்திக் கொண்டான். அமர்ந்தான்… வெங்கட்டும்.. அப்பு அருகில் வந்து அமர்ந்தார்…
நேசனே, சரியான குரலில் “இப்போ… ஏதோ சொன்னீங்களே.. எதுக்கு இதெல்லாம்…
என்னை இழுக்காதீங்க… 
உங்களுக்கு அபிஷியலா… 
உங்களுக்கு, ஏதாவது ரெகார்ட்ஸ் வேணும்ன்னா செய்துக்கோங்க…
எனக்கு எந்த ப்ரோப்ளமும் இல்லை…
எனக்கு டூ டேஸ் ல ப்ளைட்… 
எதா இருந்தாலும்… எங்க கையெழுத்து போடணும் சொல்லுங்க செய்துக்கலாம்…
வேற…. ஏதாவது வேணுமா.. பின்னாடி ஏதாவது பிரச்சனை பண்ணுவேன்னு தோணினா சொல்லுங்க… இப்போவே எழுதி தரேன்… 
தென்… 
சொல்லுங்க… எதா இருந்தாலும் இப்போவே கேளுங்க….” என்றான் பொறுப்பாய், அமர முடியாமல்… ஏதோ தன் அம்மாவை பற்றி பேசியதும், தகிக்க தொடங்கியது அந்த இடம்… எனவே, நிமிர்ந்து அமர்ந்து கொண்டான், கிளம்பும் எண்ணத்துடன்…
எல்லோரும் அமைதியாக இருக்கவும் “அப்புறம், யாழினிய வந்து பார்ப்பேன்…. 
அப்புறம் ஒரு ரிக்வஸ்ட்…. அவளுக்கு நல்ல மாப்பிள்ளையா பாருங்க… இன்னும் சின்ன பெண்ணாவே இருக்கா…
உங்கள மாதிரி… தகிடுதத்தம் பண்றவங்க வேணாம்…. கொஞ்சம் பொறுமையாய் விசாரிச்சு பாருங்க…
நல்ல மாப்பிள்ளையா பாருங்க…
அவ கல்யாணம்ன்னா, சொல்லுங்க நான் வரேன்…” என்றவன்.
“தேங்க்ஸ், போர் எவெரி திங்க்….” என்றான் பரபரப்பாக வெங்கட்டை பார்த்து… எழுந்து நின்றபடி….
ஆவுடையப்பன் கலவரமானார்…
வெங்கட் “இருப்பா… இரு….
அவசர படாத…” என்றார் சிரித்த படியே…
“ஏன்… என்ன… “ என்றான் அமைதியாக.
வெங்கட் “உட்காரு ப்பா” என்றார். 
சேகர் “அதான், அவனே கிளம்பறேன்னு சொல்றான்ல்ல..” என்றார்.
வெங்கட் “என்ன சேகர்… கொஞ்சம் அமைதியா இரேன்..” என்றார்.
பின், நேசனிடம் திரும்பி… “நீ அமைதியா இருப்பா….
யாரும் உங்களை தவறாக சொல்லல…
அன்னிக்கு நடந்தது யாருக்கும் தெரியாது…
அதனால சொல்றேன்….
அந்த பொண்ணு மட்டும் பிடிவாதம் பிடித்திருந்தால்….
இந்நேரம் அப்பு எங்களுக்கு இல்லை….
அதனால, நான் தப்பு சொல்லல… நேசன்… 
நடந்தத சொன்னேன்….
உன் அம்மாவ, அப்பு என்னிக்கும் தப்பாக பார்க்கவில்லை…
மத்தவங்கள் பத்தி நாம கவலை பட கூடாது…” என்றார், சேகரை ஒரு பார்வை பார்த்து, நேசனிடம். 
அந்த பார்வை நேசனுக்கு ஏனோ தேவையாக இருந்தது போல… ஆசுவாசம் ஆனான்…
மீண்டும் அமைதி.. 
மெல்ல வெங்கட் “பேப்பர்ல அந்த நோட், எதுக்கு கொடுக்க சொன்னோம் தெரியுமா… 
நேசன்… இது உங்களோட இடம்தான்…
உங்க அப்பா, ஆவுடையப்பன்… இப்போ உன் உதவியை எதிர்பார்க்கிறார்…” என்றார் மெல்ல மெல்ல வக்கீல் தன் திறமையை காட்டினார்.
நேசன் “எதுக்கு… என்ன உதவி..” என்றான் புரியாமல்.
வக்கில்களின் மிக பெரிய ஆயுதம் சொற்கள் தானே, வெங்கட்டும் “ஆமாம் ப்பா, அவருக்கு உடல் நலமில்லை… நீயே பார்க்கிறியே…. 
இது உடனே சரியாகும் என சொல்ல முடியாது… 
இப்போ ஆயுர்வேதா பார்த்திகிட்டு இருக்கோம்… 
இன்னும் பேச கூட முடியலை… நிறைய சிரமப்படுறார்….
அதனால்… நீ கொஞ்ச நாள் இங்க இருந்து, நேசன் ப்ரோமொடர்ஸ்ச பார்த்துக்கோ…
இது எங்களோட ரிக்வஸ்ட்….
அத்தோட உனக்கு இந்த கடமையும் இருக்குல்ல…
மேலும் இங்க வேற யாருமில்ல, நீதானே பையன்…
அப்போ நீ செய்யனுமில்ல… ” என்றார் முறையாக இடைவெளியில் பேசி… நேசனுள் விஷயத்தி இறக்க….
நேசன், உள்வாங்கி சிரித்தான் “ஹா… ஹா….. நீங்க சொல்றது என்னான்னு புரியுது…” என நிறுத்தினான்.
நேசனுக்கு நன்றாகவே புரிந்தது அப்புவின் நிலை.. ‘உடல் நலமில்லை, சொந்தமான தொழில் இருக்கிறது, அதை சொந்தம் பார்த்துக் கொள்கிறது…
அத்தோடு இப்போதுதான் நான் வந்து விட்டேனே… என்னை தொழிலை பார்க்க செய்தால், அவர் ‘தான்’ செய்த தவறை.. சரி செய்தது போல ஆகும்…. எனவே நிம்மதியாக இருப்பார் என் தந்தை…’ என நினைக்க நினைக்க சிரிப்பு வந்தது நேசனுக்கு.
அவர் நிம்மதியை தேடுகிறார்… ம்….. சரிதானா…. 
எப்படி கொடுக்க முடியும் என்னால்…..
அத்தோடு, நான் எப்படி பார்க்க முடியும் இவர்கள் தொழிலை… 
ஆம், இவர்கள் தொழில்தான்… 
அந்த சேகர், கார்த்தி… முதலில், யாரோ இருவர் வந்தார்களே… அவர்கள் எல்லாம் இருக்க.. நான் எப்படி பார்க்க முடியும்…
அத்தோடு, இங்கு வந்து அவமானப்பட எனக்கு என இருக்கிறது…
ரிக்வெஸ்ட்டாம்…. கடமையாம்…. ‘ என தன்போல் ஆராய்ந்தான் சதுரங்க நாயகன்.
இங்கு வரும் போதே… விவரங்கள் தெரிந்துதான் வந்தான்… தன் தந்தை என்பதாலோ, தங்கை அழைக்கிறாள் என்பதாலோ.. அப்படியே குருட்டாம் போக்கில் வரவில்லை (சதுரங்கன்….) இந்தப் பக்கமும், அந்த பக்கமும்… பார்த்துதான் கால் வைத்தான்..
என்ன ‘சொத்தில் பகுதி தருவார்கள்’ என கணித்திருந்தான்.. அப்பு தவறை நேர் செய்ய தன்னை அருகில் அழைப்பார் என அந்த சதுரங்கனுக்கு தெரியவில்லை… ஆனால், இப்போ சட்டென புரிந்தது…
மேலும், அவனின் வக்கீல்.. ஆவுடையப்பனின் பராக்கிரமங்களை சொல்லி இருந்தார்.. ‘இங்கு பெயர் சொல்லும்… தொழில், அதுவும், அதன் பலமே… சொந்தங்களால் நடத்தபடுவதுதான், அதன் பலமே..’. என சொல்லிருந்தார்.
அத்தோடு நேசனுக்கும் ஆவல் வர.. அந்த ஜூனியரிடம் தன் தந்தை பற்றி விசாரித்தான் ‘நேசன் குரூப் ஒப் கம்பனிஸ் என சேர்த்து சொல்லுமளவு அவர்களின் கட்டுமான நிறுவனம் ஒரு கூட்டு தொழில் முறை கொண்டது.
மாமன்… GM, இன்னொரு மாமன் கணக்கு வழக்கு… மச்சான் கட்டுமான பொருட்கள் சப்ளை… இன்னொரு மச்சான்… தொழிலாளர் கான்ராக்ட்… முதல்(CAPITAL) ஆவுடையப்பனது…
இப்படி இருந்தா… கம்பனி… அவர்கள் கட்டுபாட்டில்தானே இருக்கும்… எங்கும் சொந்தமே… எனவே நிர்வாகம்… திறம்பட நடக்கிறது..
அப்போ அப்போ புரசல் வந்தாலும், ஆவுடையப்பன் பண கணக்கு பார்க்காதவர்… எனவே அதுவும் அடங்கி விடும்… அதனால… உங்களுக்கு வேலை இருக்காது தம்பி…
ஆனா, நீ உரிமையா கேட்கலாம்…’ என டாப் டு பாட்டம் வக்கீல் பிட்டு பிட்டு வைக்க…..
இப்போது இவர்கள் என்னமோ யாருமே இல்லை.. நீ, பார்க்க வேண்டும்… உனக்கு கடமை… பொறுப்பு… என பேசுவது… ஒரு புறம் இடிக்க தொடங்கியது.. நேசனுக்கு. ஆனால், அது நல்ல இடியாக இடிக்க தொடங்கியது.
‘அத்தனை சொந்தமும் இருக்கும் போது ஆவுடையப்பன் எதற்கு என்னை அழைக்க வேண்டும்… புரிகிறது… அவனுக்கு… அதாவது, தன் நிம்மதிக்கு.. 
அத்தோடு, என்னை தனியே விட மனமில்லாமல்’ என ஒரு ஓரத்தில் உண்மையை, மனம் சொல்லுகிறது நேசனுக்கு.. ஆனால், அவன் கடந்து வந்த பாதை.. அப்படி சட்டென அவரை நம்ப மறுக்கிறது…
எனவே, நேசன் தடுமாறினான்… எது உண்மை… எல்லோர் முகத்தையும் தன்னையறியாமல் பார்க்கிறான் நேசன்… எங்காவது ஏதாவது சாதகமான ஜாடை தெரியுமா என தேடுகிறதோ அந்த பார்வை… ஆட்டு மந்தையில், தன் பராக்கிரமங்கள் தெரியாமல்… தனியே மாட்டிய, குட்டி சிங்கமென பார்வை தேடுகிறது எதையோ…
ஆம், அது குட்டி சிங்கமேன்றாலும் சிங்கமே… ஒவ்வரு ஆடாக அடிக்கலாம்… ஆடு, திரும்ப… ஒரு கேள்வி… சாரி, ஒரு அடி கூட அடிக்க முடியாது… 
ஆனால், சிங்கம் சற்று நியா தர்மம் பார்க்கிறது… 
அத்தோடு… தான் சிங்கம் என்பதே இன்னும் புரியவில்லையே… புரிந்தால், ஆட்டினை வேட்டையாடுவது சிங்கத்தின் தர்மம் என தெரிந்திருக்குமே…. எனவே பார்வை தனக்கு சாதகமானவற்றை தேடுகிறது.
இங்கே கோவமாக அமர்ந்திருக்கும் சேகரை புரிகிறது… ‘நீங்கள் ஏதோ செய்யுங்கள்’ என சென்ற, அந்த இரு பெரியவர்களையும் புரிகிறது…
ஆனால், எதுவும் பேசாத இந்த கார்த்தி, அவர் மட்டும் கணிக்கவே முடியவில்லை என்னால்…
‘தேவி…’ அந்த பெயரே… என்னை இரக்கம் கொள்ள செய்கிறது… ‘என் அம்மாவை.. போல… பாவம், எதுவுமே தெரியாமல் இத்தனை வருடம்… வாழ்ந்தும் விட்டார்….
என் அம்மாவாது பரவாயில்லை.. இது பாம்பு என தெரிந்து ஒதுங்கிக் கொண்டார்..
ஆனால் இந்த ஜீவனுக்கு எதுவுமே தெரியவில்லை… பாவமான ஜீவன்… 
அத்தோடு வெங்கட்… சிலசமயம் வக்கீல், சில சமயம் நண்பர்… 
ஆனால், என்ன செய்தும் அவுடையப்பனை நான், நம்ப மாட்டேன் என அறிவு எடுத்து சொல்ல… திணறினான்… நேசன்.
வெங்கட் “என்ன ப்பா…. உனக்கும் இது நியாயமாக தானே படுகிறது…” என்றார் அவனின் யோசனையை பார்த்து..
நேசன் சிரித்தான்… சின்ன மினு மினுப்பு அவன் கண்ணில்… சட்ட திட்டமாக அமர்ந்து கொண்டு “அவங்கள கூப்பிடுங்க” என்றான்
வெங்கட்டுக்கு புரிகிறது யாரை என…
ஆனாலும் “யார?” என்றார்…
“அதான், யாழினி அம்மாவ கூப்பிடுங்க… கேட்கலாம்… அவங்களுக்கு ஓகேன்னா… நான் இங்க இருக்கேன்…
ஏன்னா… நீங்க இன்னமும் சுயநலமா இருக்கலாம்…
நான் அப்படி இருக்க முடியாதுல்ல… கூப்பிட்டு கேளுங்க” என்றான் தன் கைகளால்… தலை கோதி நிமிர்ந்து அமர்ந்து கொண்டு….
“மண்ணில் சிறு பார்வை வாழ…
மரம்தான் இடம் கொடுத்திடும்…
மரம்தான் இடம் கொடுத்த போதும்…
மண்தான் உயிர் அளித்திடும்….”