Advertisement

அவருக்கு வயது ஆனதால் முடியாது. என்னை பொறுத்த வரைக்கும் அவரை அப்படியே விடுறது தான் சரின்னு சொல்லுவேன்.”என்று சொன்ன அந்த மருத்துவரிடம்…
வேறு எங்காவது…?” ஒரு மகனாய் தன் தந்தையை காப்பற்ற முயற்ச்சிக்க கேட்டான்.
என்ன உதயேந்திரன் இது உங்க ஹாஸ்பிட்டல் இங்கு அவடுக்கு நாங்கள் பார்ப்பதோடவா மத்த ஹாஸ்பிட்டலில் அவரை கவனிச்சிக்க போறாங்க.” என்று அந்த தலமை மருத்துவர் சொன்னதும் உண்மை தானே…
சரி…” என்பது போல் தலையாட்டிய உதயேந்திரன் அடுத்து என்ன என்பது போல் அந்த மருத்துவரை பார்த்தான்.
அவர் இங்கயே வெச்சி பார்ப்பதுனாலும் பார்க்கலாம். இல்ல வீட்டில் வெச்சி பார்ப்பதுனாலும் சொல்லுங்க நல்ல எக்ஸ்பிரியன்ஸ் ஆன நர்ஸை அனுப்புறேன்.” 
முடிவை  நீங்க தான் எடுக்கனும்  என்பது போல் மருத்துவர்  சென்று விட்டார்.
அக்காவிடம் மருத்துவர் சொன்னதை சொன்ன உதயேந்திரன்”நீங்க என்னக்கா சொல்றிங்க…?” அக்கா பார்த்துக் கொள்ள முடியுமா என்ற அர்த்ததில் கேட்டான்.
என்ன தான் நர்ஸ் வைத்து பார்த்துக் கொண்டாலும், வீட்டு ஆள் ஒருவர் இருந்தால் தான் நல்லது என்பதை மனதில் வைத்து கேட்டான்.
ஆனால் ஜெய்சக்தி சொன்ன…  “நீ வீட்டுக்கு வந்துடுவே தானே…?” தான் என்ன கேட்டால் இவள் என்ன கேட்கிறாள் என்று நினைத்து…
அக்கா நான் அப்பாவை வீட்டுக்கு அழச்சிட்டு போவதை பத்தி பேசுறேன்.” என்று கேட்க…
அது தான் உதயா நீ வீட்டுக்கு வருவது என்றாஅல் அப்பாவை வீட்ல வெச்சே பார்த்துக்கலாம்.”
ஓ…” என்று  சொல்லிக் கொண்டே  உதயேந்திரன் யோசனையுடன் ஜெய்சக்தியை பார்த்தான்.
உதயேந்திரனின் பார்வையில்… “அண்ணா அவங்க மாமியார்  வீட்டோட போயிட்டான். இனி வருவானா இல்லையான்னு தெரியல. வீட்ல வெச்சிட்டு இருக்கும் போது அப்பாவுக்கு ஏதாவது ஆச்சின்னா…ஒன்டியா நான் என்ன செய்ய முடியும்…?” என்று  ஜெய்சக்தி கேட்க…
அக்காவின் கேள்வி நியாயமானது தான் அதனால் உடனே… “சரி அப்போ அப்பா இங்கயே இருக்கட்டும்.”  என்ற வார்த்தையின் மூலம் நான் அங்கு வர மாட்டேன் என்று உதயேந்திரன் சொல்லாமல் சொல்ல…
ஜெய்சக்திக்கு புரிந்தாலும் மனது தாங்காது… “நீ  அங்கு வர மாட்டியா உதயா…?” ஜெய்சக்தியின் குரலில் ஏக்காம் மிகுந்து  காணபட்டது. அதை கேட்ட உதயேந்திரனுக்கும் வருத்தம் தான். ஆனால் அவனால் என்ன செய்ய முடியும்.
அவள் தனியாக இருந்தால் அவளின் வேதனை கூடும் என்று… “நான் பிள்ளைங்களிடம் பேசி  உன் கூட இருக்க வைக்கிறேன் அக்கா.” என்று சொன்னவனின் கை பற்றி…
என்னை விட்டுடுவீயாடா…” என்று  கேட்டவள்.
எனக்கு உங்க மாமாவை ரொம்ப பிடிக்கும்டா…ரொம்ப ரொம்ப பிடிக்கும். அதனால தான் நான் வேறு எதை பத்தியும் யோசிக்காது அவரை கல்யாணம் செஞ்சேன். அது தப்பா சரியா நான் இது வரை யோசிச்சது இல்லை. இனியும் யோசிக்க மாட்டேன். ஏன்னா அவரை தவிர வேறு யாரையும் நான் கல்யாணம் செய்து கொண்டு இருந்து இருக்க மாட்டேன்.
நான் செஞ்ச இந்த என்னுடைய கல்யாணம் தான் என்னிடம் இருந்து உங்களை எல்லாம் பிரிச்சதுன்னா பரவாயில்ல. பரவாயில்ல…” என்று சொன்னவளின் கண்ணில் கண்ணீர் வர அதை துடைக்காது  கூட இருந்தவளின் கை பற்றிய உதயேந்திரன்…
அக்கா நான் உன்னை விட்டு போகனும் நினைக்கல.” என்று சொன்னவனின் கை உதறிய ஜெய்சக்தி…
அப்போ எதுக்கு நம்ம வீட்டுக்கு வர மாட்டேன்னு சொல்ற…?”
அங்கு வர எனக்கு எந்த வித தயக்கமும் இல்லேக்கா.ஆனா கிருஷ்ணா…” என்று இழுத்து நிறுத்தியவன் ஜெய்சக்தியின் முக மாறுதலை பார்த்து விட்டு…
உனக்கும் சங்கடமா இருக்கும். கிருஷ்ணாவுக்கும் சங்கடமா இருக்கும். நீ சொன்னியே எனக்கு உங்க மாமாவை பிடிச்சி இருந்தது. அதனால் நான் எதை பத்தியும் யோசிக்கலேன்னு. அதே நிலையில் தான்கா நான் இருக்கேன். எனக்கு கிருஷ்ணாவை பிடிச்சி இருக்கு.  ஆனால் நான் எதை பத்தியும் யோசிக்காம இருக்க முடியாது. 
கிருஷ்ணா நம்ம குடும்பத்தால ரொம்பவும் கஷ்டப்பட்டு இருக்கா…கிருஷ்ணாவோட அவங்க அம்மா புனிதா அக்காவை நம்ம அப்பா பேச கூடாத வார்த்தை எல்லாம் பேசி இருக்கார்.” என்று சொன்னவனின் வார்த்தையில் ஜெய்சக்தி உதயேந்திரனை முறைத்து பார்த்தாள்.
அக்கா நீங்க கோபப்பட்டாலும், அது தான் உண்மை. உங்க பெண்ணை கொடுங்கன்னு அவ அம்மா காலில் விழுந்து கட்டதான் முடியுமே தவிர, நம்ம குடும்பத்துல அவளை இணைக்க என்னால முடியாது. அது வேண்டாம் என்பது தான் என் எண்ணமும்.” என்று சொன்னவனி  பேச்சில் ..
அப்போ எங்களை விட்டு விலகி இருக்க போறியா…?”என்று  ஜெய்சக்தி ஆதாங்கத்தோடு கேட்டாள்.
மாமா இறந்த பின் தான் நான் இங்கு இருக்கேன். இதுக்கு முன் நான் ஜெர்மனியில் உங்களை விட்டு விலகி தானேக்கா இருந்தேன். இப்போவும் அதே போல் ஒன்று ஜெர்மனியில் இல்லை கம்பத்துல இருக்க போறேன் அவ்வளவு தான்.” என்று சொன்னவனிடம் எதுவும் பேச முடியாது அமைதியாகி போனாள் ஜெய்சக்தி.
என்ன ஒரு மாதிரியா இருக்க…” என்று கேட்ட பவித்ரனின் கையை தட்டி விட்டவள்…
நான் எத்தனை தடவை உனக்கு போன் பண்ணினேன் என்று பார்.” என்று வேணி கேட்டதும் …
நீயா…?” என்பது போல் தன் கைய் பேசியை பார்த்தவன்… “உன் நம்பரும் இல்ல. அடுத்து உதய் கொடுத்தாருன்னு ஒரு நம்பர் கொடுத்தியே அதுவும் பதிவு பண்ணி தான் வெச்சி இருந்தேன். அந்த நம்பரில் இருந்தும் எனக்கு போன் வரலையே…” என்று சொன்னதோடு தன் கைய் பேசியையும் வேணியிடம்  கொடுத்து விட்டான் பவித்ரன்.
அதில் இருந்த  ஒரு நம்பரை காட்டி… “இது நான் அழைத்த அழைப்பு தான்.” என்று வேணி ஒரு புதிய எண்ணை காட்டியதும்,
என்ன வேணி திரும்பவும் ஏதாவது புது பிரச்சனை நடந்ததா…?” என்று கேட்டவனிடம்…இன்று நடந்தை அனைத்தையும் சொல்லி முடித்தவன்..
பின் பரமேஸ்வரர்  உடல்நிலை சரியில்லாது மருத்துவமனையில் சேர்த்து இருப்பதை சொன்னவள் கூடுதலாய் இப்போது உதயேந்திரன் கைய் பேசியில் அழைத்து சொன்ன…
அவருக்கு ஸ்டோக் வந்து கை கால் செயல் இழுந்து போயிடுச்சாம். கூடவே மூளை கூட ஸ்ட்டன் ஆயிடுச்சாம்.” என்று சொன்னதும்…
அந்த மூளைய வெச்சி கொஞ்ச நஞ்ச வேலையா செய்தார். அதுவும் எவ்வளவு தான் தாங்கும். அதான் ரெஸ்ட் எடுத்துச்சி…” என்ற பவித்ரனின் மகிழ்ச்சியை  வேணி கெடுக்கவில்லை.
ஒருவர் உடல் நிலை கெட்டு போவதை பார்த்து மகிழ்ச்சி  அடைவது தவறு தான். ஆனால் ஒரு சிலரின் இறப்பு, ஒரு சிலரின் உடல்நலக்கேடு தன்னால் ஒரு வித நிம்மதையை கொடுத்து விட்டே செல்கின்றனர். சில கேடு கெட்டவர்கள்.
இவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போது அந்த இடத்திற்க்கு வந்த  புனிதா … “அப்பா உன்னை கூட்டிட்டு வரச்சொன்னார்.” என்று சொன்ன புனிதா…அவளின் உடையை பார்த்து … “இதை  மாத்திட்டு ஒரு நல்ல புடவையா கட்டிட்டு வா.” என்ற பேச்சில் சந்தேகம் கொண்ட பவித்ரன்…
யார் வந்து இருக்கா அத்தை…?” என்ற கேள்விக்கு…
உன் மாமனார் வேணிக்கு ஒரு இடம் கொண்டு வந்து இருக்கார். மாப்பிள்ளையோட அப்பா அம்மாவை  அழச்சிட்டு வந்து இருக்கார்.” என்று புனிதா சொன்னதும்…
வேணியின் கை பற்றி ஹாலுக்கு  வந்த பவித்ரன்… ராஜசேகரை பார்த்து… “உங்க  பெண்ணை நான் கல்யாணம் கட்டிக்கனுமா…? வேண்டாமா…?” என்ற பவித்ரனின் கேள்வியில் அதிர்ந்து போய்…
என்ன மாப்பிள்ளை என்ன ஆச்சி.” என்று பதறி போய் கேட்ட ராஜசேகர் தன் பக்கத்தில் அமர்ந்து இருந்த காயத்ரியை பார்த்து… “நீ ஏதாவது லூசு தனம் பண்ணி வெச்சியாடி…” என்று தன் மகளை அதட்டினார்.
உங்க மக எந்த லூசு தனமும் பண்ணல. அப்படி பண்ணாலும் அதை நான் எப்படி சரி படுத்தனுமோ அப்படி சரிப்படுத்திக்குவேன். ஆனா நீங்க இது போல் பண்ணிட்டு இருந்தா…” அவர் அழைத்து வந்த மாப்பிள்ளையின் பெற்றோர்களை காண்பித்து…
உங்க மக உங்க மகளாவே தான் எப்போவும் இருப்பா…” எப்படி வசதி என்பது போல் கேட்டான்.
இல்லேப்பா உங்க தாத்தா தான் நல்ல இடமா எடுத்துட்டு வரச்சொன்னார்.” என்று தயங்கி தயங்கி ராஜசேகர் சொல்ல…
பவித்ரன் தன் தாத்தாவிடம்… “தாத்தா இவங்க போயிட்ட பிறகு  நான் உங்க கிட்ட வேணி கல்யாணம் விசயமா பேசனும்.” என்று ராஜசேகர் அழைத்து வந்தவகளை   காட்டி பவித்ரன் சொன்னதும்…
வந்தவர்கள் எழுந்து நின்று… “அப்போ நாங்க வர்றோம்.”  பவித்ரன் பேச்சில் இருந்து தங்களுடன் சம்மந்தம் வைத்துக் கொள்ள அவனுக்கு விருப்பம் இல்லை போல் என்று நினைத்து அவர்கள் போங்கள் என்று சொல்வதற்க்குள் மரியாதையாக அவர்களே சென்று விட்டனர்.
நாரயணன் போகும் அவர்களை கவனிக்காது தன் பேரன் பவித்ரனையே பார்த்திருந்தார். அன்று  காயத்ரியை அழைத்து வந்து … “இவளை தான் நான் கல்யாணம் செய்துக் கொள்வேன்.” என்று சொன்ன போதே… இந்த கதை இதோடு விடாது தொடரும் என்று அவர் அன்றே நினைத்தார்.
பவித்ரன் காயத்ரியை விரும்பி இருந்தாலும், இப்படி அடாவடித்தனமாய்ஏதூம் சொல்லாது பெண்ணை அழைத்து வந்து பெரியவர்கள் முன் பேசுபவன் இல்லை பவித்ரன்.
அவன் இயல்புக்கு மாறாய் பேசுகிறான் என்றால், இதற்க்கு பின்  இதோடு வேறு ஏதோ பெரிய விசயம் இருக்க கூடும்.
இவன் இந்த அளவுக்கு இறங்கி செய்கிறான் என்றால், அதன் காரணம் வேணியாக மட்டுமே தான் இருக்கும். வேணிக்காக மட்டுமே இவன் எது என்றாலும் செய்வான். அவர் நினைத்தது இதோ நடக்க போகிறது என்று நினைத்து தன் பேரனை பார்த்தார்.
அதற்க்கு ஏற்றார் போல் தான் பவித்ரன்… “வேணிக்கு இனி மாப்பிள்ளை பார்க்க தேவையில்லை.” என்று சொன்னதும்…
அவன் அப்பா… “நீயும் கட்டிக்க மாட்ட இப்போ அவளுக்கு மாப்பிள்ளையும் பாக்க கூடாதுன்னு சொன்னா என்ன அர்த்தம்டா…?” தன் மகனிடம் கோபமாக கேட்க…
அதுக்கு அர்த்தம்  நாங்களே பார்த்துட்டோம் என்று அர்த்தம்.” என்று பவித்ரன் சொன்னதும் முதலில் புரியாத அவன் தந்தை பின் புரிந்து போய்…
என்னடா சொல்ற…?” என்று அதிர்ந்து போய் கேட்டார்.
ஆனால் அந்த அதிர்வு எல்லாம் நாரயணனுக்கும், புனிதாவுக்கும் இல்லை போல் பவி பேச பேச அவர்கள் பவித்ரனை பாராதுவேணியை தான் பார்த்திருந்தனர்.

Advertisement