Advertisement

அத்தியாயம்….49….4
தன்னிடம் அக்கா பேசிய…”அப்பாவுக்கு உடம்பு சரியில்ல நான்  நம்ம ஹாஸ்பிட்டலுக்கு அழச்சிட்டு போறேன்.” என்று சொன்ன வார்த்தையில்  பொய் இருக்கலாம்.
ஆனால் தன் மகளிடமும் அப்படியே சொல்வது என்றால், ஒரு வேளை உண்மையில் அப்பாவுக்கு உடம்பு முடியலையா…? அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் நாம் இப்படி இங்கு இருப்பது தவறு இல்லையா…
கிருஷ்ணா  உனக்கு ஓலா புக் பண்ணி தர்றேன் நீ வீட்டுக்கு போயிடு.” என்று வேணியிடம் சொன்னவன்…
கீர்த்தியையும், க்ரீஷையும் பார்த்து… “சீக்கிரம் கிளம்புங்க போகலாம்.” என்று அவர்களை துரிதப்படுத்திக் கொண்டே அவனின் கார் சாவியை எடுக்கும் வேளயில்…
நானும் வரட்டுமா…?” என்ற வேணியின் பேச்சில் காரை எடுக்க சென்றவன் அப்படியே நின்று விட்டு அவளை திரும்பி பார்த்தவன்…
உடனே அவனிடம் இருந்து வந்த பதில்….“வேண்டாம். இப்போ வேண்டாம். உண்மையில் அப்பாவுக்கு உடல் நிலை சரியில்லாத பட்சத்தில் அவர் உன்னை பார்த்தால் இன்னும் அவர் உடல் நிலை பாதிக்கும்.” என்று சொன்னவனின் பேச்சை இடைமற்றிதவளை பேச விடாது மீண்டும் உதயேந்திரனே…
வேண்டாம் கிருஷ்ணா. என் அப்பா எப்படி பட்டவராக வேண்டுமானலும் இருக்கட்டும். ஆனால் உன்னால் அவருக்கு ஏதாவது வந்தால்… வேண்டாம்.” என்று வேணியை மறுத்து விட்டு அக்கா பிள்ளைகளை அழைத்துக் கொண்டு உதயேந்திரன் ஹாஸ்பிட்டலும் விரைந்தான்.
அங்கு சென்று பார்த்தவனுக்கு  உண்மையில் அப்பாவுக்கு உடல் நிலை  மோசமாகி அவரை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து இருப்பதை பார்த்து விரைந்து தன் சகோதரியிடம் வந்தவன்…
என்ன ஆச்சிக்கா…?”  உதயேந்திரன் நீண்ட நாட்கள் கழித்து தன் சகோதரியை அக்கா என்று அழைக்க…
சேலை தலைப்பில் வாய் பித்தி அழுதவள்… “எனக்கு ரொம்ப பயமா இருக்குடா…அப்பாவும் என்னை விட்டுட்டு போயிடுவாரோன்னு. இபோத்தைக்கு எனக்கு யாருமே இல்லடா…அவரும் போயிட்டா…நா…ன்” அதற்க்கு மேல் ஜெய்சக்தியால் பேச முடியவில்லை. அவளிடம் இருந்து அழுகை மட்டுமே வந்து கொண்டு இருந்தது.
நிமிடத்து ஒரு தடவை அவசரசிகிச்சை பிரிவின் கதவை பார்ப்பதும் பின் ஏதோ நினைத்து அழுவதுமாய் இருந்தாள்.
ஜெய்சக்தி  சொன்ன அவரும் என்னை விட்டு போயிட்டா, என்ற வார்த்தை அவர் பெற்ற இரு பிள்ளைகளையும்  பலமாக தாக்கியது.
கீர்த்தி ஜெய்சக்தியின் தோள் பற்றி… “என்ன பேச்சும்மா இது…ஏன் இது மாதிரி யாரும்மே இல்லேன்னு சொல்றிங்க.ஏன்  உங்களுக்கு உங்க பிள்ளைங்க எங்களை கண்ணுக்கு தெரியலையா…?” என்று சொன்னவள்.
தாத்தாவுக்கு ஒன்னும் ஆகாது. அவர் ஸ்டாங் மேன்.” என்று அன்னைக்கு ஆறுதல் வழங்கினாள்.
ஆனால் அதை எல்லாம் கேட்கும் நிலையில் ஜெய்சக்தி இல்லை போலும்… “இல்ல கீர்த்தி எனக்கு ரொம்ப பயமா இருக்கு. அப்பாக்கு ஏதாவது ஆயிடுமோன்னு. கொஞ்ச நாளாவே அவருக்கு என்னால் ரொம்ப டென்ஷன். இன்னைக்கு …” அதற்க்கு மேல் என்ன எப்படி சொல்வது என்று வாய் மூடிக் கொண்டவள் தன் தம்பியை நிமிர்ந்து பார்த்தாள்.
அக்காவின் பார்வையில் வீட்டில் ஏதாவது பிரச்சனை நடந்ததா…? பிரச்சனை யாருக்கு அக்காவுக்கும் அப்பாவுக்குமா…? அப்போது தான் அவன் அங்கு யார் இருக்கிறார்கள் என்று சுற்றி பார்த்தவனுக்கு…
அங்கு தன் அண்ணாவும், அண்ணியும் இல்லாததை பார்த்து… “அண்ணாவும் அண்ணியும்  வரலையா…?” என்று கேட்டவனுக்கு…
இல்லை.” என்று  ஜெய்சக்தி தலையாட்ட…
நான் சொல்றேன்.”  அவங்களுக்கு தெரியாது போல  என்று தன் கைய் பேசியை எடுக்கும் போது அதை தடுத்து நிறுத்திய ஜெய்சக்தி பின்… 
வீட்ல அப்பாவுக்கும் அண்ணாவுக்கும் பிரச்சனை ஆயிடுச்சி.” என்று சொன்னதும் அதிர்ந்து போய்…
அண்ணாவுக்கும், அப்பாவுக்குமா…?” 
கஜெந்திரன் வாய் திறவாது அப்பா சொல் பேச்சு கேட்டு நடக்கும் பிள்ளை. இப்போது இல்லை சிறுவயது முதலே.. பரமேஸ்வர் என்ன சொன்னாலும், ஏன் எதற்க்கு என்று கேட்காது நடப்பான்.
பின் திருமணம் முடிந்த உடன் மனைவி சொல் பேச்சு கேட்டு நடப்பது. சில சமயம் அண்ணியோடு தான் அப்பாவுக்கு பிரச்சனை வந்து போகும்.
அவன் ஜெர்மனியில் இருக்கும் போது பேசியில் அப்பாவிடம் பேசும் போது அவர் சொல்ல தெரிந்த விசயங்கள் இவை. ஜெய்சக்தி அண்ணாவோடு பிரச்சனை என்றதும்…
என்ன பிரச்சனை…?” என்று கேட்ட்தற்க்கு…
பக்கத்தில் இருக்கும் தன் பிள்ளைகளை தயக்கத்துடன் பார்த்த வாறே… “அண்ணி கன்சீவா இருக்காங்க.” என்று  ஜெய்சக்தி சொன்னதும்,
உதயேந்திரன் மகிழ்ந்து போய்… “இது எவ்வளவு சந்தோஷமான விசயம். இது தெரிஞ்சுமா வீட்டில் பிரச்சனை நடந்தது.”
எத்தனை ஆண்டு திருமணவாழ்க்கையில் அவர்களுக்கு கிடைத்து இருக்கும் வரம் இது. அண்ணா இதை கொண்டாடாது பிரச்சனை செய்தாரா…உதயேந்திரனுக்கு ஆச்சரியமாய் போனது.
ஜெய்சக்தி சொன்ன … “பிரச்சனையே இந்த குழந்தை  வரவு தான். இது வரை அண்ணி தனக்கு குழந்தையா…? குட்டியா…? என்ற நினைப்பில் இந்த சொத்து பத்தி எல்லாம் அதிக  கவலை படாது இருந்து விட்டாள்.
என் அப்பா கொடுக்கும் சொத்தோ நான் யாருக்கு கொடுப்பது என்று யோசிச்சிட்டு இருக்கேன் என்ற ரீதியில் இருந்தவள். இப்போது தனக்கு தனக்கு மட்டுமே ஆன ஒரு குழந்தையின் வரவில்…
அதுவும் இன்று வேணியின் பங்கை கீர்த்திக்கும், உதயேந்திரனின் பங்கை க்ரீஷூக்கும் கொடுத்ததை பார்த்து… தன் குழந்தையோடு ஜெய்சக்தியின் குழந்தைக்கு அதிக சொத்து இருப்பதா…?
ஏற்கனவே தங்களுக்கு கொடுத்தது போலவே  மதிப்பு உள்ள சொத்தை அந்த சந்திரசேகர் தன் குழந்தைகள் கீர்த்தி, க்ரீஷ் இருவருக்கும் சம பங்காக எழுதி விட்டார்.
இப்போது அதோடு அதிக மதிப்பு உள்ள உதயேந்திரன் பங்கு, வேணியின் பங்கும் அவர்களுக்கு சேர்வதை பார்த்து…. என் அப்பா வீட்டில் எனக்கு கொடுக்கும் சொத்து மதிப்பை சேர்த்தாலும் அவர்கள் கிட்ட கூட நெருங்க முடியாது போலவே…அந்த ஆத்திரத்தில் தன் கணவனிடம்…
நீங்க என்ன ஆம்பிள்ளை..உன் தம்பி பார் இந்தியா வந்த கொஞ்ச நாளிலேயே அவன் பங்கு நம்ம பங்கு வாங்கி அதிலே சம்பாதித்து பின் நம்ம கொடுத்த பங்கை மட்டும் நமக்கு கொடுத்து மத்ததை  ஜெய்சக்தி பிள்ளைகளுக்கு கொடுத்து விட்டான்.
சொத்தை கொடுத்தா தானே ஜெய்சக்தி வாய் மூடிட்டு இருப்பா…அக்கா வாய் மூடினா தானே அந்த பெண் வேணியை கல்யாணம் செய்ய முடியும். அவர் எப்படி ப்ளான் போட்டு எல்லாம் செய்யிறார். நீங்களும் இருக்கிங்கலே…” என்று இத்தோடு  கஜெந்திரன் மனைவி நிறுத்தி இருந்தால், கஜெந்திரன் எப்போதும் போல் இருந்து இருப்பாரோ என்னவோ…
ஆனால் கஜெந்திரன் மனைவி வாணி சொன்ன… “உனக்கு எனக்கு பிள்ளை கொடுக்கவே இத்தனை வருசம் ஆச்சி…இதுலேயே தெரியலையா உங்க லட்சணம்.”   எந்த ஆணையும் சீண்டி விடும் வார்த்தை அது.
அதன் தாக்கத்தில் தன் தந்தை  மகனிடம் எப்போதும் போல் “நீ மட்டும் சரியா இருந்தா உதயேந்திரனை நான் ஏன் இந்தியாவில் தங்க வைக்க போகிறேன். அந்த பொண்ண துரத்த நான் உன் தம்பிய இங்கே நிறுத்தினேன்.
ஆனா அவங்க அவனே வெச்சே என்னை சாச்சிட்டாங்க.”எப்போதும் போல் தான் பரமாஸ்வரர் தன் மகனிடம் புலம்பினார்.
ஆனால் மகன்  இன்று எப்போது போல் கேட்டு தலையாட்டும்  மூடில் இல்லாது மனைவி கேட்ட நீ என்ன ஆம்பிள்ளை என்ற பேச்சில்…நானும் ஆம்பிள்ளை தான்டி என்று நிரூபிக்க தன் தந்தையிடம்… 
நான் சரியில்ல சரியில்ல சொல்றீங்கலே…நீங்க ரொம்ப சரியோ…பொண்ணு லவ் பண்ணா திட்டு கண்டிச்சி  நம்ம இனத்துல மாப்பிள்ளை பார்த்து கட்டி கொடுக்கும் அப்பாவை தான் பார்த்து இருக்கேன்… ஆனா நீங்க தான் புதுவிதமா…கூட்டி கொடுத்து இருக்கிங்க.” என்ற மகனின் வார்த்தையில் பரமேஸ்வரர் அதிர்ந்து  போய் விட்டார்.
என்ன மாதிரியான வார்த்தை இது…? பெத்த பெண்ணை நான்.’ மகன் சொன்ன வார்த்தையில் எதற்க்கும் கலங்காத அவர் மனம் ஆட்டம் கண்டது.(புனிதாவை நீ சொன்னதுக்கு மேலவா இது.)
என்னடா என்ன பேச்சு. என் பெண்ணுக்கு ஊரை கூட்டி கல்யாணம் பண்ணேன்டா…”  பரமேஸ்வரர் கஜெந்திரனின் சட்டையை பிடித்து கேட்டார்.
தன் தந்தையின் கையை தன் சட்டையில் இருந்து விடுவித்த கஜெந்திரன்… “நீங்க ஊரு என்ன உலகத்தையே கூட்டி கல்யாணம் செய்து இருந்தாலும், முதல் மனைவி உயிரோடு இருக்கும் போது அது செல்லாது.” என்று சொன்ன கஜெந்திரன்…
அது தான் சந்திரசேகர் போகும் போது  யார் உரிமையான வாரிசுன்னு சொல்லிட்டு போயிட்டாரே..தெரியல இதுல இருந்து உங்க பெண்ணை அவர் எங்கு வெச்சி இருந்து இருக்கார் என்று. இப்போ அந்த பெண் போட்ட பிச்சையில் திரும்பவும் அந்த சொத்து உங்க கைக்கு வந்து இருக்கு.” அந்த சொத்து அவர்களுக்கு வந்ததால் தானே தன் மனைவியிடம் பேச்சு வாங்க வேண்டியதாகி விட்டது. அந்த ஆத்திரத்தை தந்தையை திட்டி தீர்த்து விட்டு சென்று விட்டான்.
ஆனால் இதை கேட்ட பரமேஸ்வரரின் உள்ளம் ஆட்டம் கண்டது. பெரிய மகன் திறமை வாய்ந்தவன் இல்லை என்றாலும், தன்  சொல் பேச்சு கேட்டு நடந்து கொண்டு இருந்தவன் இப்போது தன்னையே எதிர்த்து பேசியது,மகளின் வாழ்க்கை ஊரார் முன்நிலையில்  அவள் இரண்டாம் பட்சமாக ஆனது.
யார் தன்னுடைய வாரிசு என்று இது வரை  நினைத்துக் கொண்டு இருந்தாரோ அவன் உன் சொத்து எனக்கு ஒன்றும் வேண்டாம் என்று தன் அக்கா பிள்ளைகளுக்கு எழுதி கொடுத்து விட்டது. இனி அவன் தனக்கு சொந்தம் இல்லை என்று சொல்லாமல் சொன்னது போல் இருந்தது அவருக்கு.
இவைகள் அனைத்தும் நினைத்தவரின் மனது கொதிக்க… இரும்பு இதயம் கொண்ட பரமேஸ்வரருக்கு  இந்த கொதிப்பு தாங்க முடியாது b.p எக்க சக்கத்துக்கு எகுற…
போதும் நான்  பேசிய வார்த்தைகள் என்று  வாய் தன்னால் கோணிக் கொள்ள… நான் செயல் பட்டது போதும் என்று கால் கைய் இழுத்துக் கொள்ள…இந்த நிலையில் தான் ஜெய்சக்தி தன் தந்தையை மருத்துவமனைக்கு கொண்டு  வந்து சேர்த்தது. 
அனைத்தையும் தன் தம்பியிடம்  சொல்லி முடித்த ஜெய்சக்திக்கு  இன்னும் உள்ளது என்பது போல் அந்த மருத்தவமனையின் தலமை மருத்துவர் உதயேந்திரனிடம் வந்து…
சாரி மிஸ்டர் உதயேந்திரன்  அவருக்கு கால் கை மட்டும் இல்லை மூளையே செயல் இழந்து விட்டது. இனி அவர் ஒரு ஜடம் போல் தான் இருந்து ஆக வேண்டும்.” என்று  சொன்னதும் உதயேந்திரன்.
சரி படுத்த முடியுமா…?” என்று கேட்டதற்க்கு,

Advertisement