Advertisement

அத்தியாயம்….47 (1)
மின்தூக்கி அருகில் தனக்காக காத்துக் கொண்டு இருந்த சங்கரனை பார்த்து எப்போது சொல்வது போல்… “குட் மார்னிங்.” என்று சொன்னதும், தன் முகத்தை பார்க்காது தன் கைக்கடிக்காரத்தை பார்த்த வாறே… 
“குட் மார்னிங்.” என்று சொன்ன சங்கரன் பதட்டத்துடன் … “என்ன மேடம் நான் காலையில் உங்களுக்கு போன் செய்து,  சீக்கிரம் தானே வரச்சொன்னேன். இப்படி இரண்டு மணி நேரம் கழித்து ஆடி அசைந்து வர்றிங்க.”
சங்கர தன்னை பன்மையில் அழைத்து பேசினாலும், அவன் சொன்ன ஆடி அசைந்து என்ற  வார்த்தையில் வேணியின் முகம் கடினம் பெற… “மைன்ட் யுவர் வேட்ஸ் மிஸ்டர் சங்கரன்.” என்ற வேணியின் பேச்சில்…
“இல்ல மேடம் அவசர ஒர்க் அதான்.”என்று சொல்லி சங்கரன் வேணியின் கோபத்தை தணிக்க பார்த்தான்.
“இருக்கட்டுமே தலை போகும் காரியமாவே இருக்கட்டும். பேசும் போது ஒரு நிதானம் வேண்டும் மிஸ்டர் சங்கரன்.”  
இவ்வளவு பேச்சு வார்த்தைகளும் மின்தூக்கியின் அருகில் நின்று தான்  தடைப்பெற்றுக் கொண்டு இருந்தது.
கடவுளே நாம் வாயை வைத்து சும்மா இருந்து இருக்கலாம். இப்போ சீக்கிரம் வா என்று இவள் கை பிடித்தா இழுத்து செல்ல முடியும்.ஆனால் அவனுக்கு இட்ட வேலையும் அது தான்.
அவளே உணராது  மற்றவர்கள் பார்க்க, வேணியின் கை பிடித்து பேசும் அளவுக்கு  இருக்க வேண்டும் உன்னுடைய அணுகுமுறை.
எங்கே நான் அவ கிட்ட போனாலே  தன்னால் பின்னே இரண்டு அடி எடுத்து வைக்கிறாள். இதில் எங்கே அவள் கை பிடிப்பது. என்று நினைத்தவன்…
தங்கள் கம்பெனியில் வேலை செய்பவர்கள் இரண்டு ஓர் பேர் மின்தூக்கியின் அருகில் வரவும்…பேசாமே இவங்க பார்க்க  அவள் கை பிடித்து மின் தூக்கியின் உள் செல்லலாமா…என்று யோசித்தது ஒரு நொடி தான்.
வேணியின் முகத்தை பார்த்தவன் நான் இவள் கை பிடித்தால், அவள் அரையும் அரையில் தன்னால் என் கன்னத்தை பிடித்துக் கொள்ளும் சூழ்நிலை உருவாகும்.
முக்கியமாய் அனைவரும் பார்க்க நான் அவளிடம் அடி வாங்கினால், தான் எதற்க்காக நான் இங்கு வந்தேனோ அதன் காரியமே கெட்டு விடும் என்று நினைத்து அந்த எண்ணத்தை கை விட்டவனாய்… தயங்கி தயங்கி  வேணியின் அருகில் பின் பக்கமாய் சென்றுக் கொண்டான்.
அது மற்றவர்கள் பார்வைக்கு அருகில் நிற்பது போல் ஒரு தோற்றத்தை சங்கரன் உருவாக்கினான். மின்தூக்கி கீழ் வந்ததும் அனைவரும் அதில் ஏற…
வேணியும் அதில் ஏற போகும் போது சங்கரன்… “மேடம்.” என்ற அவசரமான அழைப்பில்…
“என்ன சங்கரன்.” என்று நின்று திரும்பி  சங்கரனிடம் பேசும் தருவாயில் மின்தூக்கியின் கதவு மூடப்பட அது தன்னால் மேல் நோக்கி சென்று விட்டது.
திரும்பவும் வேணி… “எதுக்கு என்னை கூப்பிட்டிங்க சங்கரன்.”  என்ற வேணியின் கேள்விக்கு சங்கரன் என்ன என்று பதில் அளிப்பான்.
தானும், வேணியும்  அவர்களோடு செல்லாது,  தனியாக செல்லவே உன்னை அழைத்தேன், என்று சொல்லவா முடியும். என்ன சொல்வது என்று  அவன் யோசிக்க…
அவன் யோசனை முகம் வேணிக்கு ஏதோ தவறாய் பட்டது. அதுவும்  உதயேந்திரனிடம் மாலை சந்திக்கலாம் என்று சொன்னதற்க்கு, இப்போதே சந்திக்க வேண்டும் என்று அடம் பிடித்து வந்தவன் ஒரு வார்த்தை கூட பேசாது  தன் கைய் பேசி கொடுத்து விட்டு அவனுடையதை வாங்கி சென்று விட்டான்.
அவன் சென்றதும் வேணி  காபி குடித்துக் கொண்டு இருக்கும் போது கூட  அவள் இதை தான் நினைத்தாள். இந்த கைய் பேசி வாங்கி செல்லவா இவ்வளவு அவசரமாய் வரச் சொன்னான் என்று.
ஆனால் இப்போது யோசித்து பார்க்கும் போது அதுவும் அவன் சொன்ன எப்போதும் நானும் பவித்ரனும் உன் கூடவே இருக்க   மாட்டோம். உனக்கு ஏதாவது பிரச்சனை வந்தால் நீ தான் பேசியாக வேண்டும். ஆனால் இன்று நான் வருவேன்.
தன் கைய் பேசியையே யோசனையுடன் பார்த்துக் கொண்டு இருந்தவளுக்கு பேசாது பவித்ரனை அழைத்து விடலாமா…என்று அவள் யோசனை செய்யும் போதே வேணியின் விரல்கள் தன்னால் மனதில் பதிந்து போன பவித்ரனின் எண்ணை அழைத்து இருந்தது. 
சங்கரன் … “மேடம்.” என்ற அழைப்பில் பவித்ரனின் அழைத்த எண்ணை அணைத்து  விட்டவள் என்ன என்பது போல் நிமிர்ந்து சங்கரனை பார்த்தான்.
“லிப்ட் வந்துடுச்சி மேடம்.” என்று சொல்லி விட்டு அவளை முன்னால் செல்ல விட்டு பின்னால் ஏறியதும் மின்தூக்கியின் கதவு தன்னால் மூடிக் கொண்டது.
இவர்களுடைய அலுவலகம்  எட்டாம் தளத்தில் உள்ளது. நான்காம் தளம்  நடுவில் வரும் போது தன்னால் மின்தூக்கி நின்று விட, சங்கரம் பதறி போய் …
“என்ன ஆச்சி…ஏன்  திடிரென்று லிப்ட் நின்னுடுச்சி.” என்று பதறி போய் வேணியிடம் கேட்டான்.
வேணியின் மூளைக்குள்   அலார மணி அடிக்க…ஏதோ சதி நடக்கிறது என்று மட்டும்  தெரிகிறது. அதுவும் சங்கரனை வைத்து என்றும் தெரிகிறது. ஆனால் என்ன…?தெரியவில்லை.
மனதுக்குள் பயம் தான். ஆனால் அதை வெளியில் காண்பித்து கொள்ளாது மிக மிக கூலாக … “அதை நீங்க தான் சொல்லனும்.” என்று  வேணி சொன்னதும் …
சங்கரன் பதறியவனாய்… “எ…ன்ன மேட…ம் சொ…ல்..றிங்க.” என்று சங்கரன் பதட்டமாய் கேட்பதில் இருந்தே  அவள் சந்தேகம் வலுவானது.
“இல்ல நீங்க தான் என்ன என்று  விசாரிக்கனும்.” என்று சொல்லிக் கொண்டே திரும்பவும் வேணி கைய் பேசியில் பவித்ரனுக்கு அழைப்பு விடுத்தாள்.
பவித்ரன்  தன் அழைப்பை எடுக்கவில்லை. சரி நம் எண்ணை பார்த்து அவனே அழைப்பான் என்று நினைத்து பேசியை அனைத்து விட்டாள்.
சங்கரன் …”மேடம் என் செல் போனை வீட்டில் விட்டுட்டு வந்துட்டேன். உங்களதை தர  முடியுமா…? லிப்ட் ஆபரேட்டரை கூப்பிட்டு என்னன்னு கேட்கலாம்.” என்று சங்கரன் சொன்னதும்,  அவனையும் தன் கையில் உள்ள கைய் பேசியையும் மாறி மாறி பார்த்தவளுக்கு ஒன்றன் பின் ஒன்றாய் நினைவடுக்கில் வந்து போனது.
உதயேந்திரன் தன் கைய்  பேசியை தன்னிடம் கொடுத்து விட்டு தன்னுடையதை வாங்கி கொண்டு சென்ற சிறிது நேரத்துக்கு எல்லாம்  தன் அறைக்கு வந்த சங்கரன்…
“மேடம் உங்க போனில் இருந்து என்னை கூப்பிடுறிங்கலா…? உங்க  செல் நம்பர் எனக்கு தெரியாது. ஏதாவது முக்கியமான விசயம் ஏதாவது இருந்தால் சொல்ல வசதியாக  இருக்கும்.” என்று சங்கரன் அன்று சொன்னதும்…
உதயன் தன்னிடம் கொடுத்த கைய் பேசியில் இருந்து சங்கரன் சொன்ன எண்ணுக்கு அழைப்பு விடுக்க…
“மேடம் உங்க நம்பரை நான் சேவ்  செய்துட்டேன். என்னுடையதை நீங்க சேவ்  பண்ணிக்கோங்க.” என்று சங்கரன் அன்று சொன்னது தவறாய் வேணிக்கு தோன்றவில்லை.
அதனால் சங்கரன் சொன்னது போல்  செய்தாள். பின் அவசர வேலை என்று  தினம் மெசஜ் பின் அழைப்பு என்று தன்னை அழைத்ததில் ஏதோ உள்குத்து இருக்கிறதோ…என்று அவள் யோசிக்கும் முடிக்கும் வேளயில்…
தன்னுடைய பேசியை வாங்கி யாருக்கோ  அழைத்து பேசிவிட்டு, பேசியை தன்னிடம் கொடுத்த சங்கரனை பார்த்துக் கொண்டே…தவறு முறைத்துக் கொண்டே வாங்கிக் கொண்டவளுக்கு மனதில் உதய் சொன்ன நம் பிரச்சனையை  நாம் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். 
எது வந்தாலும் நான் சமாளிக்க வேண்டும். சமாளித்து ஆக வேண்டும்.தன் மனதில் தைரியத்தை வர வழைத்துக் கொண்டவளாய் தன் அறைக்கு சென்று அமர்ந்தாள்.
அவள் எதிர் பார்த்த்து போல் சிறிது நேரத்துக்கு எல்லாம் சங்கரன் தன்னிடம் அனுமதி கேட்டு வந்தவன்.. “மேடம் பெரிய சார் இன்னும்  கொஞ்ச நேரத்துல இங்கு வரேன்னு சொன்னார்.” என்று சொன்னதும்,
“பெரிய சார்.” யார் என்பது போல் வேணி சங்கரனை பார்க்க… “நம்ம பரமேஸ்வரர் சார் தான் மேடம். இப்போ வர்றேன்னு சொன்னார்.” சங்கரன் சொன்ன நம்ம பரமேஸ்வரர் சார் என்ற வார்த்தையில் அவனை  நிமிர்ந்து பார்த்தவள்.
“வரட்டும். வரட்டும்.” என்பது போல் சொன்னவள். சங்கரன்  போகாது இன்னும் நின்றுக் கொண்டு இருப்பதை பார்த்து… “வேறு ஏதாவது விசயமா…?” என்று  சங்கரனை கேட்டுக் கொண்டு இருக்கும் போதே வேணிக்கு இன்னும் ஒன்றும் நியாபகத்தில் வந்தது.  அது இந்த சங்கரன் இந்த அறைக்கு வந்தாலே ஏதாவது தேவையில்லாது பேசி நேரம் கழித்தே இந்த அறையில் இருந்து வெளியேறுவது.
கத்திரிக்கா முத்தினா கடை தெருவுக்கு வந்து தானே ஆகவேண்டும். எது என்றாலும் இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரிய போகிறது என்று ஒரு முடிவுக்கு வந்தவளாய் தன் வேலையை கவனிக்க தொடங்கினாள்.
அந்த கொஞ்ச நேரம் என்பது இரண்டு மணி நேரம் சென்று வந்த பரமேஸ்வரர்  வேணி அமர்ந்து இருந்த அறைக்கு அனுமதி கேளாது நுழைந்தவர்…
தலமை பொறுப்பில் இருப்பவர் அமரும் இருகையில் வேணி அமர்ந்து இருப்பதை பார்த்து… “துடப்ப கட்டைக்கு பட்டு குஞ்சு கட்டுனது போல இருக்கு.” என்று அவளை ஒரு துச்ச பார்வை பார்த்துக் கொண்டே வேணி அமர்ந்து இருந்த இருக்கைக்கு எதிரில் இருந்த இருக்கையில்  அமர்ந்தார்.
அவரை தொடர்ந்து  ஜெய்சக்தியும் வந்து அமர்ந்ததை பார்த்ததும்… அவர் சொன்ன  துடப்ப கட்டை பட்டு குஞ்சம் என்ற வார்த்தை காதில் விழாதது போல்…
“மிஸ்டர் பரமேஸ்வரர் இன்னைக்கு மீட்டிங் ஏதாவது இருக்கா…? என்று கேட்டவள். தன் முன் இருக்கும்  பைலை எடுத்து பிரித்து பார்த்தவள், பின் அவரை நிமிர்ந்து பார்த்து…
“எனக்கு மீட்டிங் என்று எந்த அறிக்கையும் வரலையே…”  
இவர்கள் வந்ததிற்க்கான நோக்கம் மீட்டிங் இல்லை. தன்னை அவமானப்படுத்தவே என்று தெரிந்தும் பேச்சு  வளக்கவே வேணி அவ்வாறு பேசினாள்.
“ஏன் உன் கிட்ட முன் கூட்டிய அனுமாதி வாங்கி தான் இந்த மீட்டிங்கை ஏற்பாடு செய்யனுமா…? இது நான் உருவாக்கிய சாம்ராஜ்ஜியம். ஏதோ  காத்து அடித்ததில் பறந்து வந்து கோபுரத்தில் ஒட்டினது போல நீ வந்து இந்த இருக்கையில் ஒட்டிட்டு இருக்க…இதுக்கு நான் ஒரு வழி செய்யிறேன்.
நான் சொன்ன உடனே மரியாதையா  சென்னை விட்டு கம்பத்தை பாக்க போய் இருந்தா நல்லா இருந்து இருக்கும். நானும்  உன் கல்யாணத்துக்கு ஏதோ உன் கிட்ட கொஞ்சம் பனத்தை கொடுத்து அனுப்பி இருப்பேன். இப்போ பார் …?” என்று சொல்லிக் கொண்டு இருந்தவர் நேரம் ஆவதை உணர்ந்து…
ஜெய்சக்தியை பார்த்து “வாம்மா  இன்னும் கொஞ்ச நேரத்துல உன்னை பிடித்த பீடை ஒழிய போகுது.” என்று சொல்லி விட்டு அனைவரும் கூடி இருக்கும் மீட்டிங்  ஹாலுக்கு சென்றார்.
போகும் போது… “நீயும் வா.”  என்று வேணியையும் அழைத்தார். 

Advertisement