Advertisement

அத்தியாயம்….45 
வேணியிடம் தன் கைய் பேசி கொடுத்து  விட்டு தன் வீட்டுக்கு வந்த உதயேந்திரனை   கீர்த்தியின் சோர்ந்த முகமே வரவேற்றது. “என்   குட்டிம்மா ஏன் ரொம்ப டல்லா இருக்கா…” என்று கீர்த்தியின் கழுத்து பகுதியை தொட்டு பார்த்த வாறே உதயேந்திரன் கேட்டதற்க்கு,
கீர்த்தி தன்  மாமனின் கையை விலக்கி விட்ட வாறே… “நான் நல்லா தான் இருக்கேன்.” என்று சொன்ன கீர்த்தியின்  விட்டேத்தியான பேச்சில் உதயேந்திரன் முகத்தில் யோசனையில் ஆழ்ந்தது.
“என்ன குட்டிம்மா அம்மா நியபகமா…?”
“அதெல்லாம் ஒன்னும் இல்ல.” 
எப்போதும் வார்த்தைக்கை வார்த்தை, மாமா… மாம்ஸ்… என்று கூப்பிடும் கீர்த்தியின் இன்றைய பேச்சில், தவறு இந்த  பேச்சில் ஒரு தடவை மூட மாமா என்று அழைக்காது யாரிடமே பேசுவது போல் பேசிய கீர்த்தியின் பேச்சில் ஏதோ சரியில்லை என்ற சந்தேகம்  உதயேந்திரனுக்கு எழுந்தது.
கீர்த்தியின் பக்கத்தில் அமர்ந்த உதயேந்திரன்… “வீட்டுக்கு யாராவது வந்தாங்கலா…?”
ஒரு சமயம் தான் இல்லாத போது தந்தையோ…அக்காவோ வந்து இருப்பார்கலோ…வந்தவர்கள் இவளிடன் மனம் புண்படும் படி ஏதாவது பேசி  இருப்பார்கலோ என்று நினைத்து தான் உதயேந்திரன் அவ்வாறு கேட்டது.
“இங்கு யார் வரப்போறங்க. நாங்க என்ன முறையா வந்த பிள்ளைங்கலா…எங்கல தேடி வருவதற்க்கு.”  கீர்த்தியின் இந்த பதிலில் உதயேந்திரன் ஆடி தான் போய் விட்டான்.
“என்ன கீர்த்தி என்ன பேச்சு இது. முறை முறை தவறி என்று பெரிய மனிஷி  மாதிரி பேசிட்டு இருக்க. வயசுக்கு தகுந்த மாதிரி பேசு.”
இது வரை கீர்த்தியை இப்படி அதட்டி பேசியது  கிடையாது. முதன் முதலில் அவளின் பேச்சில் கோபம் கொண்டு அதட்டி பேசினான்.
“பெரிய மனுஷங்க பெரிய  மனசா நடந்துட்டு இருந்தா நான் ஏன் இப்படி பேச போறேன். பெரியவங்க என்ன என்னவோ செய்துடுறாங்க. அதற்க்கு பலியாக  நாங்கதான் ஆகிடுறோம்.” என்று கோபமாக சொன்னவள்.
 பின்… “என்னை யாருக்கும் பிடிக்கல. ” என்ற வார்த்தையை  சொல்லும் போது, கீர்த்திக்கு அழுகை வந்தாலும், அழுகையை  அடக்கிக் கொண்டு பேசியதால் அவள் குரல் மாறுபாட்டால் அவள் அழுகிறாள் என்று உதயேந்திரனுக்கு  உணர்த்தியது.
 கீர்த்தியை தன் தோளில் சாய்த்துக் கொண்ட உதயேந்திரன்… “யாருக்கு உன்னை பிடிக்கல…எல்லோருக்கும் உன்னை பிடிக்கும்டா…நீ நம்ம வீட்டு இளவரசி. உன்னை போய் பிடிக்காம போகுமா…?சொல்.” என்று சொல்லி  கீர்த்தியை உதயேந்திரன் சமாதானபடித்திக் கொண்டு இருந்தாலும், என்ன நடந்து இருக்கும் என்ற யோசனையும் அவன் மனதில் ஓடிக் கொண்டு தான் இருந்தது.
உதயேந்திரனை அதிகம் யோசிக்க விடாது கீர்த்தி அவன்   தோளில் இருந்து முகத்தை எடுத்தவள் அவன் நெஞ்சி பகுதியில் கை வைத்து விட்டு…
“உங்களுக்கும் என்னை பிடிக்கல.”  
கீர்த்தி அந்த பிடிக்கல என்று சொல்லும் போதே கட்டுப்படுத்திக் கொண்டு இருந்த அழுகை அவளின் கட்டுப்பாட்டை இழந்து அவள் கண்ணில் கண்ணீர் பெருக்கெடுக்க…
“என்னை உங்க வாய் தான்  சும்மா இளவரசின்னு பேசிட்டு இருக்கு. ஆனா உங்க மனசு அந்த அக்காவை தான்  நம்ம வீட்டு இளவரசியா நினச்சிட்டு இருக்கு.” என்ற கீர்த்தியின் வார்த்தையில் உதயேந்திரன் ஷாக் அடித்தது போல்   கீர்த்தியை பார்த்தான்.
‘இவள் யாரை சொல்கிறாள்…? வேணியையா…? இவள் வேணியை நினைத்து இப்படி  சொல்லி இருந்தால்.
 தவறு ஆச்சே…பெரியவர்கள் தான் ஏதேதோ செய்து விட்டார்கள். சின்னவர்கள் பரவாயில்லை பெரிய மனதுடன் நடந்துக் கொள்கிறார்கள் என்று பார்த்தான். என்ன இது…? புது  பிரச்சனை.’ இதை நினைத்து உதயேந்திரனுக்கு கவலை கூடியது.
“நீ யாரைடா சொல்ற…?” அவள் தலை மீது கை வைக்க போன உதயேந்திரனுக்கு தன் தலை கோத இடம் கொடுக்காது கொஞ்சம் தள்ளி அமர்ந்துக் கொண்ட கீர்த்தி.
“நான் யாரை அக்கான்னு சொல்றேன்னு உங்களுக்கு நல்லா தெரியும். வேணிக்காவை தான் சொல்றேன். உங்களுக்கு அவங்கல ரொம்ப பிடிக்கும். எனக்கும் தான் அவங்கல ரொம்ப பிடிக்கும்.” என்று சொன்னவள் ..
உதயேந்திரனை பார்த்து… “எனக்கும் அவங்கல ரொம்ப பிடிக்கும் தானே மாமா.” 
கீர்த்திக்கு உதயேந்திரன் மீது இருந்த மனத்தாங்கள் போய் விட்டதா…? இல்லை தன் மாமா தன் வருத்தத்தை போக்கி விடுவார் என்ற நம்பிக்கையா…. கீர்த்தி உதயேந்திரனை  தன்னால் மாமா என்று அழைத்திருந்தாள்.
“ஆமா உனக்கு உன் வேணி அக்காவை ரொம்ப ரொம்ப பிடிக்கும். இப்போ யார் இல்லேன்னு சொன்னா…?” 
கீர்த்தி தள்ளி அமர்ந்தாலும், அவள் அருகில் அமர்ந்த உதயேந்திரன் அவள் கை பற்றிய வாறே  பேசினான்.
மாமனின் கைய்பிடியில் இருந்த தன் கையை விடுவிக்க முயன்ற வாறே… “எனக்கு தான் அவங்கல எல்லாம் பிடிக்குது. என்னை அவங்க யாருக்கும் பிடிக்கல.” என்ற  கீர்த்தியின் பேச்சில்..
“வேணியை பார்த்தியா…?” என்று கீர்த்தியிடம் கேட்டாலும், இருக்காதே கிருஷ்ணா இன்று அலுவலகத்தை விட்டு எங்கேயும் போகவில்லையே சந்தேகத்துடன் தான்  உதயேந்திரன் கேட்டான்.
அவன் எதிர் பார்த்தது  போல் … “வேணி அக்காவை பார்க்கல. பவித்ரன் அத்தானை பார்த்தேன்.” என்ற கீர்த்தியின் பேச்சில், கீர்த்தியை பிடித்து இருந்த உதயேந்திரனின் கை தன்னால் தளர்ந்தது.
“அத்தானா…?” உதயேந்திரன் அதிர்ச்சியோடு கேட்டான்.
“ஆமாம் மாமா. பவித்ரன் அத்தான் தான். என் மாமா வேணி அக்காவுக்கும் மாமா ஆனால், வேணிக்கா அத்தான் எனக்கும் அத்தான் தானே…?” கீர்த்தியின் கேள்விக்கு  பதில் சொல்ல உதய் தடுமாறித்தான் போனான்.
“ஆனா உங்க மாதிரி பவி அத்தான் இல்ல மாமா. நீங்க  எப்படி வேணிக்கா மேல ஆசையா இருக்கிங்க. ஆனா பவி அத்தான் என் மேல அப்படி ஆசை எல்லாம் இல்ல மாமா. அதுவும் இல்லாம பவி அத்தானுக்கு என்னை பிடிக்கல. அவள தான் ரொம்ப பிடிச்சி இருக்கு. நான் அழகா இல்லையா அத்தான்.
வேணிக்கா மாதிரி நான் அழகு இல்ல. அதை ஒத்துக்குறேன். ஆனா அந்த காயத்ரியோட  நான் எதில் குறஞ்சி போயிட்டேன். அவ முன்னாடி என்ன அசிங்கப்படுத்தி பேசுறதுக்கு…” எகிறிக் கொண்டு பேசியவள்.
தொடர்ந்து… “பவி அத்தான் என்னை திட்டுனது கூட பரவாயில்ல மாமா. ஆனா அந்த காயத்ரி எதிரில் திட்டியது தான் ரொம்ப ஷேமா போயிடுச்சி.”
கீர்த்தியின் பேச்சில் காலை தானே இவளை வயதுக்கு முதர்ச்சியா நடந்துக்குற என்று பெருமை பட்டேன். ஆனால் இப்போது என்ன இது போல் பேசுகிறாள்.
அழகு. இந்த வார்த்தை தான்  இந்தியா வந்ததில் இருந்து அவன் காதில் விழும் வார்த்தை. இந்த  அழகு தான் புனிதா அக்கா, சந்திரசேகர் மாமா, தன் அக்கா வாழ்க்கையில் விளையாடி தீர்த்து விட்டது என்றால்.
அதே வார்த்தை கீர்த்தி வாயில் இருந்தும் சொல்ல கேட்டதும், உதயேந்திரனின் பொறுமை பறந்தோட கீர்த்தியின் தோளைபற்றியவன்…
“இந்த அழகை விட மாட்டிங்கலா…? இந்த அழகால் தான் உன் அம்மா அவ வாழ்க்கையை கெடுத்துக் கொண்டது மட்டும் இல்லாம புனிதா அக்கா வாழ்க்கையும் சேர்த்து கெடுத்தாங்க. இப்போ நீயும் அந்த அழகை கட்டிட்டி அழு. சீ…” கடைசியில் பற்றி இருந்த அவள் தோளை விளக்கி அவளை விட்டு விலகியும் நின்றுக் கொண்டான்.
“வேணிக்கா  அழகா இல்லாம்மா அசிங்கம்மா இருந்து இருந்தா நீங்க விரும்பி இருப்பிங்கலா…?” 
விலகி திரும்பி நின்ற உதயேந்திரனின் முதுகை பார்த்த வாறே கேட்ட கீர்த்தியின் கேள்வியில் உதயேந்திரன் சட்டென்று திரும்பி  கீர்த்தியை பார்த்தான்.
திரும்பவும்… “வேணிக்கா இவ்வளவு அழகா இருந்ததால் தானே  அவங்க மேல உங்களுக்கு காதல் வந்தது.” முதலில் கேட்டதையே கொஞ்சம் மாற்றி கேட்டாள்.
தன் அக்கா மகள் கேள்விக்கு  அதிர்ந்து போய் அவளை பார்த்திருந்தான் உதயேந்திரன். பதில் சொல்ல தெரியாது பார்க்கவில்லை. இந்த காலத்து பிள்ளைகளுக்கும் அழகு தான் பெரியதாக படுகிறதா…
அப்போ பவித்ரனின் அழகு தான் இவளுக்கு அவன் மேல் ஈர்ப்பு வர காரணமா…இவளிடம் என்ன சொன்னால் புரிந்துக் கொள்வாள்.
தன்னை அவள் குற்றம் சாட்டியதோடு அவள் எண்ணம் போகும்  பாதையை நினைத்து தான் அவனுக்கு அச்சம் ஏற்பட்டது.
“கீர்த்தி உன் அக்கா அழகு தான் நான் இல்லேன்னு சொல்லலே. நான் அவள விரும்ப அழகு மட்டும் காரணம் இல்ல. ஏன்னா வேணியோட அழகான பெண்களை எல்லாம் நான் ஜெர்மனியில் பார்த்து இருக்கேன்.
அழகு பார்த்து இருந்தால் அவங்களில்  ஒருவரை தான் நான் காதலித்து இருக்க வேண்டும். வேணியை கை பிடிக்க நிறைய பிரச்சனை இருக்கும் என்று தெரிந்தும் அவள் தான் எனக்குன்னு என் மனசு சொல்லுச்சி. அதான் அவளை விரும்ப காரணம்.” சின்ன பெண் என்றாலும் மிக தெளிவாக தன் காதலை உதயேந்திரன்  கீர்த்தியிடம் விளக்கினான்.
“எனக்கும்…” என்று பேச வந்த கீர்த்தியின் பேச்சை இடைமறித்த உதயேந்திரன்…
“கீர்த்தி பவித்ரன் காயத்ரியை  தான் விரும்புகிறான்.” கீர்த்தியை பேச விடாது  உதயேந்திரன் பவித்ரனின் காதலை போட்டு உடைத்தான்.
“நீங்க பொய் சொல்றிங்க மாமா. நேற்று வரை வேணி அக்காவை கல்யாணம் செய்ய  இருந்தவங்க.எப்படி காயத்ரியை விரும்பி இருக்க முடியும்.” கீர்த்தி கேட்டது சரியான கேள்வி தான்.
அதற்க்கு  உண்டான பதிலும் உதயேந்திரனிடம் உள்ளது. ஆனால் இவளுக்கு எப்படி சொன்னால் புரிந்துக் கொள்வாள்…? மிகவும் பொருமையாக …
“நீ கேட்டது சரி  தான் கீர்த்தி. நேற்று வரை வேணியை திருமணம் செய்ய தான் இருந்தான். வீட்டு பேச்சை தட்டாத  மகன் அவன்.
அதனால் தான் மூணு வருசத்துக்கு முன் காயத்ரியை பார்த்து பிடிச்சி இருந்தாலும், வேணியையும், வீட்டையும் மனசுல நினச்சி அவன் காதலை அடுத்த கட்டத்துக்கு  பவித்ரன் எடுத்திட்டு போகல.” என்று உதயேந்திரன் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே…
கீர்த்தி… “ஓ அது தான் உங்க லைன் க்ளியர் ஆகனும் என்று  பவித்ரன் அத்தானோடு காயத்ரியை சேர்க்கும் படி செய்யிறிங்கலோ…” என்ற அவள் பேச்சில்  உதயேந்திரன் அதிர்ந்து போய் அவளை பார்த்தான்.
“எனக்கு எல்லாம் தெரியும். இன்னைக்கு நானும் என் பிரன்சும் வண்டலூர் பூங்காவுக்கு தான் போய் இருந்தோம். அங்கே பவித்ரன் அத்தான் அந்த காயத்ரியோடு அதுவும் கை பிடிச்சி பேசிட்டு இருந்தார். அதை பார்த்து எனக்கு எப்படி இருந்தது தெரியுமா மாமா ….? அவ யார் என் அத்தான் கை  பிடிக்க…?” என்று கோபமாக உரிமை குரல் எழுப்பிய கீர்த்தியின் குரல் பின் மெல்ல …
“என்னை அவங்களுக்கு பிடிக்காதா மாமா…?” என்று ஏக்கத்தோடு கேட்டவள்.
பின்… “வேணிக்கா எது சொன்னாலும் பவித்ரன் அத்தான் கேட்பார்  தானே மாமா. நீங்க வேணிக்கா கிட்ட சொல்றிங்கலா…நான் ரொம்ப நல்ல பெண் என்று.”
வளர்ந்தும் வளராத அந்த இளம் குறுத்து அந்த வயதில் தனக்கு பிடித்த வேணிக்காவின் அத்தான் என்பதால் இந்த பிடித்தமா… அல்லது ஈர்ப்பால்  வந்ததா… இல்லை அழகு அழகு என்று அதே பெரிய விசயமாக பேசுகிறார்களே அந்த அழகால் இந்த ஈர்ப்பு வந்ததா…உதயேந்திரனுக்கு தெரியவில்லை.
ஆனால் இதை வளர விட கூடாது என்று மட்டும் உதயேந்திரனுக்கு விளங்கியது.
 
 
 
 

Advertisement