Advertisement

அத்தியாயம்….41
“ஓ அது நீங்க அனுப்பியா ஆள் தானா…?”என்று தான் கேட்டதற்க்கு  பதில் அளிக்காது…தன்னிடம் ஏதோ கேட்கிறானே என்று குழம்பிய ராஜசேகர்.
“என்ன உதய் கேட்குற…?எனக்கு புரியல…” என்று கேட்டதற்க்கு,
“கிருஷ்ணா  பாதுகாப்புக்கு நான் அனுப்பிய ஆளுங்க. ஏற்கனவே அவள   இரண்டு பேர் கண் காணிக்கிறதா சொன்னாங்க. நான் கூட எங்க அப்பா அனுப்பிய ஆளா தான் இருக்கும். வேணி கிட்ட நெருங்கினா போட்டு தள்ளிடுன்னு சொன்னேன். நல்ல வேள எங்க ஆளுங்க போட்டு தள்ளுறதுக்குள்ளவாவது வந்திங்கலே…” என்று சொன்ன உதயேந்திரன் தன் கைய் பேசியின் மூலம் வேணிக்கு ஏற்பாடு  செய்திருந்த பாதுகாவளரிடம்…
“இன்னிக்கு அவங்கல தூக்கிடுன்னு சொன்னேன். வேண்டாம்  அவங்கல ஒன்னும் செய்ய வேண்டாம்.” என்று சொன்ன உதயேந்திரனின் பேச்சை கேட்டுக் கொண்டு இருந்த அந்த பக்கத்தில் உரையாடியவர்கள் என்ன கேட்டார்கலோ..
“அவங்களும் கிருஷ்ணா பாதுகாப்புக்கு ஏற்பாடு செஞ்சவங்கதான் .” என்று சொன்னதோடு..
“இன்னொரு க்ரூப் தான் கிருஷ்ணாவை பாதுகாப்புக்கு இருக்கேன்னு நீங்க மெத்தனமா இருக்க கூடாது. என்ன புரிஞ்சுதா…?” என்ற கட்டளையோடு அலை பேசியை வைத்தவன்..
“ம் அப்புறம் மிஸ்டர் ராஜசேகர் வேறு ஒன்னும் இல்லையே…” என்று உதயேந்திரன் கேட்பதிலேயே நீ இங்கு இருந்து சீக்கிரம் போனால் நல்லா இருக்கும் என்பது போல் இருந்தது.
‘ராஜசேகரோ இவன் ஒரு சமயம் அங்கிள் என்று கூப்பிடுறான்.  பல சமயம் மிஸ்டர் ராஜசேகர் என்று கூப்பிடுறான். இவன் எப்போ எப்படி கூப்பிடுவான் என்றே தெரிய மாட்டேங்குது.  இதுல கழுத்த பிடிச்சி தள்ளாத குறையா வேற பேசுறது.’ என்று மனதுக்குள் புலம்பிய ராஜசேகருக்கு ஒன்று தெரிய வேண்டி இருந்தது.
வேணிக்கு இவன் ஏன் பாதுகாப்பு கொடுக்குறான். எல்லோரும் அவளை வேணி என்று அழைக்க, இவன் ஏன் அவள் பேரின் பின் பாதியான கிருஷ்ணா என்று சொல்றான். இது நல்லதுக்கு போல் தெரியலையே… இவன் போகும் பாதை  நினைத்து ராஜசேருக்கும் பக் என்று ஆகியது. 
கடவுளே அந்த குடும்பம் ஏற்கனவே நிறைய பிரச்சனைய சந்திச்சி இருக்கு. இதுல இவன் வேற ஏதாவது எழரைய கூட்டிடுவான் போலவே. இது நடக்க கூடாது . நடக்க நான் விட மாட்டேன். இப்படி வீராப்பாய் மனதில் சபதம் ஏற்றாலும், அதை உதயேந்திரனிடம் வெளிப்படையக செயலாற்ற முடியாது.
வேறு விதமாக… “நீங்க ஏன் வேணிக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செஞ்சிங்க உதய்…?” இவன் மனதில் எந்த அளவுக்கு வேணி விசயத்தில் தீவிரமாய் உள்ளான் என்று தெரிய வேண்டி கேள்வி எழுப்பினார்.
ராஜசேகரின் கேள்விக்கு அவரை பாராது  அன்று வந்த செய்திதாளை கையில் எடுத்து நடுப்பக்கத்தை பிரித்து படிக்க ஏதுவாக வைத்த வாறே…
“என் அப்பாவால் அவளுக்கு ஆபாத்து வரும் என்று தான் அங்கிள்.”  என்று உதயேந்திரன் சொன்ன போது…. ராஜசேகருக்கு அவன் இப்போது அழைத்த அங்கிள் அழுத்தம்  மிக இருந்ததோ என்று எண்ண தோன்றியது.
பின் இந்த ஆராய்ச்சி பின் பார்க்கலாம் என்று அதை விடுத்து… “அது தான் அவள கட்டிக்க போறவன் அவள் கூடவே இருக்கானே. அவளை அவன் பார்த்துப்பான் உதய். உங்களுக்கே ஆயிரம் வேலை இருக்கு. அது முடிக்கவே உங்களுக்கு நேரம் இல்ல. கட்டிக்க போறவனுக்கு இல்லாத அக்கறையா…?” என்ற ராஜசேகரின் இந்த பேச்சில்…
பிரித்து வைத்திருந்த செய்தி தாளை முன் போல் மடித்து  விட்டு முன்பு இருந்த இடத்திலேயே வைத்தவன்… “அது தான் நான் அக்கறை செலுத்துறேன் அங்கிள்.” என்ற உதயேந்திரனின் பதிலில்…
 உள்ளம் பட படக்க…இவன் என்ன சொல்றான். நான் சந்தேகப்பட்டது தான். ஆனால் இப்படி முகத்துக்கு நேராக வெளிப்படையாக சொல்வான் என்று அவர் எதிர் பார்க்கவில்லை.
இருந்தும் அவன் வேறு ஏதாவது அர்த்தத்தில் சொல்லி இருக்க போகிறான் என்று… இழுத்து வைத்திருந்த மூச்சை மெல்ல விடு வித்த வாறே…
“என்ன…? அது தான் நான் பார்த்துக்குறேன்னு சொன்னிங்க உதய்.” என்று என்ன பதில் வருமே என்று நெஞ்சம் அடைக்க கேட்டு விட்டு அவன் பதிலுக்காக அவன் முகத்தை பார்த்திருந்தார்.
அவனோ அவர் கேட்டதற்க்கு பதில் அளிக்காது… “உங்களுக்கு ஏன் அங்கிள் இப்படி வேத்து கொட்டுது. ஏஸி வேணா அதிகம் வைக்கட்டுமா…?” என்று கேட்டவன் பின் தான் சாவுகாசமாய்…
“நீங்க  தானே அங்கிள் சொன்னிங்க கட்டிக்கிறவனுக்கு தான் அக்கறை இருக்கனும் என்று. அது தான் நான் அவளுக்கு.” என்று சொன்னவன் பின் ராஜசேகர்  கண்னை பார்த்து…
தன் விரல் கொண்டு தன் நெஞ்சில் கை வைத்து… “என் கிருஷ்ணாவுக்காக நான் பாதுகாப்புக்கு ஏற்பாடு செஞ்சேன்.நீங்க சொன்னது போல் எனக்கு வேலை நிறைய இருக்கு. நான் அவள் கூடவே இருக்க முடியாது.
அது போல் இப்போதைக்கு அவளை என் கூடவும் வைத்துக் கொள்ள முடியாது. அதுக்கு தான் இந்த பாதுகாப்பு ஏற்பாடு.” என்று சொல்லி விட்டு எழுந்தவன்…
“சாரி அங்கிள் எனக்கு வேலை இருக்கு.” என்று அவன்  எழுந்துக் கொள்ள…
ராஜசேகருக்கு முன் இருந்த பட படப்பு இப்போது  இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
அந்த பக்கம் என்ன இருக்கோ…? என்று நினைக்கும் போது தான் நமக்கு ஒரு வித பயம் இருக்கும். அது என்ன என்று தெரிந்து விட்டால், அடுத்து என்ன என்று நாம் செய்ய வேண்டியதை  செய்ய ஆராம்பித்து விடுவோம்.
இப்போது அந்த மனநிலைக்கு தான் ராஜசேகர் தள்ளப்பட்டார். ஏதாவது செய்து ஆகவேண்டும். உதய் ஆசைப்பட்டது அவனால் செய்ய முடியாது என்று திட்ட வட்டமாய் அவரால் எண்ண முடியவில்லை.
செய்து முடித்து விடுவான். அது தான் அவருக்கு பிரச்சனையே…இவன் செயலால் நாரயணன் குடும்பம் மீண்டும் பிரச்சனையை தான் எதிர் கொள்ள நேரிடும்.
பவித்ரன் வேணி மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறான் என்று அவர் கண் கூடாய் கண்டவர் ஆயிற்றே…அவன் அன்பு தோற்க கூடாது என்று கருதியவராய்… தன் வாதாடும் திறமையை உதயேந்திரனிடம் பிரயோகிக்க ஆராம்பித்தார்.
“என்ன உதய் சொல்றிங்க. வேணியை  கல்யாணம் செய்துக்க போறிங்கலா…? இதை கேட்க எனக்கு காமடியா இருக்கு உதய். நீங்க தொழில் செய்யிறத பார்த்து நான் உங்கல என்னவோ  நினச்சனே…
உங்க அப்பா கூட உன் அண்ணனோட உன்னை தான்  தன் தொழிலுக்கு வாரிசா நினச்சிட்டு இருக்கார்…நீங்க என்னனே அந்த பட்டிகாடு பெண்ணை கல்யாணம் செய்துக்க போறிங்கன்னு சொல்றிங்க…” என்று  பேசிய ராஜசேகர் எப்போதும் கோர்ட்டில் தான் முன் வைக்கும் வாதத்தை முழுவதும் சொல்லாது, பாதி சொல்லி விட்டு எதிராளியின் முக பிரதிபலிப்பை பார்த்து விட்டு தான் தன் வாதத்தை எந்த  விதத்தில் தொடர்வது என்பதை அவர் முடிவு செய்வார். அந்த டெக்னிக்கை உதயேந்திரனிடமும் பிரயோகித்து பார்த்தார்.
தான் சொல்ல வேன்டியதை முழுவதும் சொல்லாது பாதியில் உதயேந்திரன் முகத்தை பார்க்க…பாவம் ராஜசேகருக்கு ஏமாற்றமே கிட்டியது.
கை கட்டி தான் சொன்னதை கேட்டுக் கொண்டு இருக்கிறான் என்பதை தவிர உதயேந்திரன் முகத்தில் வேறு  எந்த உணர்வும் ராஜசேகருக்கு தெரியவில்லை.
சரி நாம் சொல்ல நினைத்தை சொல்லி விடலாம் என்று நினைத்து தான் ராஜசேகர் மீண்டும் தன் பேச்சை தொடர்ந்தார். 
“நீங்க மூவ் பண்ற சோசைட்டிக்கு அந்த பெண் லாயக்கு இல்லேப்பா…சிட்டியிலேயே படிச்ச ரிச்சானவ  தான் உங்களுக்கு செட்டாவா…” என்று சொன்னவர் அடுத்து என்ன சொல்லி இருப்பாரோ…
உதயேந்திரன்… “அப்படியா சொல்றிங்க.” என்ற தன் பேச்சின் மூலம் அவர் வாயடைத்து விட்டான் என்றால் அடுத்து அவன் சொன்ன வார்த்தையின் அவன் மூச்சையும் நிறுத்த பார்த்தான்.
“நீங்க சொல்வதும் ஒரு வகையில் சரி தானோன்னு எனக்கு தோனுது அங்கிள். ஜெர்மனி கலாச்சாரத்தில் இருந்த எனக்கு சென்னை பெண்ணே வேணா எனக்கு செட்டாவா…” என்று சொல்லியவன்.
பின்… “இந்த பெண் ஒகேவா அங்கிள்.” என்று சொல்லி விட்டு தன் அலைபேசியில் பதிவு செய்து இருந்த புகைபடத்தை காட்ட தன் பேசியை அவர் பக்கம் நீட்டினான்.
அதை கையில் வாங்கும் போதே ராஜசேகருக்கு ஒரே கொண்டாட்டமாய் போனது. பரவாயில்ல பையன் விவரமானவன் தான். வேணி ஒத்துக்கலேன்னா வேற  ஒரு பெண் ரெடியா கை வசம் வெச்சிட்டு இருக்கான்.
என்ன இருந்தாலும் ஜெர்மனி ஜெர்மனி தாம்பா…அதன் கலாச்சாரமே தனி…வாய் முழுக்க பல்லே நிறம்பி இருப்பது போல் சிரித்துக் கொண்டு பேசியில் உள்ள  புகைப்படத்தை பார்த்ததும் தன்னால் அந்த பேசியை தவிர விட்டார்.
அவர் தவற தான் விடுவார் என்று சரியாக கணித்தது போல் உதயேந்திரன்  ராஜசேகர் தவற விட்ட கைய் பேசியை மிக சரியாக பிடித்தவன்…
“என்ன அங்கிள்  இந்த பெண் உங்களுக்கு ஒகேவா…?” என்று கேட்டான்.
முதலில் உதயேந்திரன் தன்னை அழைத்த அங்கிளில் கொடுத்த அழுத்ததில் தான் முதலில் செய்த வேலைக்கு தான் தன்னை இவன் இப்படி அழைக்கிறானோ….குற்றம் உள்ள நெஞ்சம் அவரை கொஞ்சம் சுரண்டி தான்  பார்த்தது.
ஆனால் இப்போது  இந்த புகைப்படத்தை பார்த்ததும்   தான் முதல் நினைத்த அங்கிள் அந்த அர்த்ததில் அழைத்து இருந்தால் கூட பரவாயில்லை போலவே… தன் நெஞ்சில் கை வைத்து அதிர்ந்து அவர் அமர்ந்து விட்டார்.
“என்ன அங்கிள் இந்த பெண் எனக்கு  சரியான ஜோடி தானே…நீங்க சொன்னது போல் சென்னையிலேயே படிச்ச ரிச்சானவ…என் சோசைட்டிக்கு இவ ஒத்து வருவா…எங்க ஜோடி பொருத்தம் எப்படின்னு நீங்க சொல்லவே இல்லையே…
ஆம் அந்த புகைப்படத்தை ஒரு பெண் மட்டும் இடம் பெற்றில்லை. அந்த பெண்ணோடு அவள் தோள் மீது இவன் கை போட்டுக் கொண்டு ஜோடியாக எடுத்த படம் தான் அது.
ஆம் நீங்க ஊகித்தது சரி தான். சாட்சாத் அப்பெண்  நம் காயத்ரியே…அந்த வருடாந்திர மீட்டிங்கின் முடிவில் அவன் நேராக தன் வீட்டுக்கு வரவில்லை.
அவன் வெளியில் வந்ததும் காயத்ரியிடம் இருந்து குறுந்தகவல்… “காபி ஷாப்பில் மீட் செய்ய வேண்டும் என்று.”
இன்று பவித்ரன் செய்த அக்கப்போரில் இவனுக்கு நேரம் கடத்தினால், நான் கிருஷ்ணாவின் கை பிடிக்க நேரம் ஆகலாம். முதலில் சிங்கிளாய் இருக்கும் இவனை மிங்கிள் செய்ய வேண்டும் என்று நினைத்து உடனடியாக… சந்திக்க வேண்டிய இடத்தை  சொன்னதோடு பார்த்து பேசியும் விட்டான்.
அப்போது விடைபெறும் போது ஒரு செல்பி…என்று காயத்ரி தான் உதயனிடம் கேட்டது…
“ஒகே..” என்று பக்கத்தில் நின்று க்ளிக் செய்யும் போது அவள் தோள் மீது கை போட்டான். 
“என்ன இது இதெல்லாம் எனக்கு பிடிக்காது.” விளையட்டு பெண்  என்றாலும் ஒரு ஆடவன் தன் தோள் மீது கை போட்டது அவளுக்கு பிடிக்கவில்லை.
“பவித்ரனிடம் இதை காட்டினால்  அவன் எப்படி ரியாக்ட் செய்கிறான் என்று பார்க்க தான் தோள் மீது கை போட்டேன்.” என்று சொன்னதும்…
“ஓ பொறாமை படுவாங்கலான்னு பார்க்கவா..அப்போ ஒகே ஒகே…”என்று சொல்லிக் கொண்டு பலமாக தலையாட்டினாள்.
“தலையாட்டினா மட்டும் போதாது. எனக்கும் அந்த போட்டோவை சென்ட் பண்ணு.” என்று இப்படி தான் அந்த புகைப்படம் உதயின்  பேசியில் இடம் பெற்றது.
உண்மையில் பவித்ரன் மனதில் பொறாமை விதையை தூண்ட தான் அப்படி அந்த செல்பியும் எடுத்ததே… அவனுக்கு ஒரு சில அனுமானம் மனதில் உண்டு. அதையும் தெளிவு படுத்திக் கொள்ள அவன் நினைத்தான்.
இப்படி உபயோகத்துக்கு எடுத்த அந்த புகைப்படம்… “உனக்கு வேணி பொறுத்தம் இல்லை.” என்பது போல் ஒரு தடவை இல்லை. பல தடவை அது போல்  அர்த்தம் கொள்ளும் படி கூறினால்…எத்தனுக்கு எத்தன் என்பது போல் அவன் விளையாட்டை காட்டினான்.
“என்ன அங்கிள் இந்த பெண் ஒகே தானே…”
“உதய் நீ விளையாடுற தானே…” 
“ஆமாம் விளையாடுறேன் தான். நீங்கள் உங்கள் வக்கீல் புத்தியில் என்னோட விளையாட நினச்சா நான் உங்களோடு விளையாடுவேன்.” என்று சொன்னவனை அதிர்ந்து  ராஜசேகர் பார்த்தார்.
“என்ன புரியலையா மிஸ்டர் ராஜசேகர். இந்த மாதிரி பேச்சு அந்த வீட்டுக்கு….நான் எந்த வீட்ல சொல்றேன்னு உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்.
ஏற்கனவே என்னை பத்தி அவங்களுக்கு கிடச்ச விசயம் ரொம்ப மோசமா தான் இருக்கும். கூட நீங்க உங்க வக்கீல் புத்தியால என்னை பத்தி ஏதாவது ஏடா கூடாமா பேசனும் என்று நினச்சா…” தன் பேசியை அவரிடம் காட்டி…
“நடக்க போவதுக்கு நான் பொறுப்பாக மாட்டேன்.”
அவ்வளவு தான் தன் பேச்சு என்பது போல் அந்த இடத்தை விட்டு சென்று விட்டான்.
இப்படி வேணிக்காக இவர்கள் இங்கு பார்க்க…பரமேஸ்ரர் வேணியை தன் மகன் வாழ்வில் இருந்து எப்படி எந்த வித்த்தில் அகற்ற வேண்டும் என்பது கட்டம் போட்டு அதை செயலாற்ற ஆட்களையும்  ஏற்பாடு செய்து விட்டார்.
ராஜசேகரும் சரி உதயேந்திரனும் சரி. அவளுக்கு வெளியில் செல்லும் போது பிரச்சனை வரும் என்று பாதுகாப்புக்கு ஆட்களை ஏற்பாடு செய்தார்கள். 
ஆனால் பரமேஸ்வரர் நான் வேறு மாதிரி என்பது போல்…அவர்கள் கம்பெனியிலேயே அவளை வீழ்த்த சதி திட்டம் தீட்டி இருந்தார்.
உதயேந்திரன் எந்த பதவி வேணிக்கு கவுரவம் கொடுக்கும் என்று,  தன் பதவியை விட்டு கொடுத்தானோ…அந்த பதவியே வேணியின் கவுரவம் கெட காரணமாய் அமைந்து விட்டது.

Advertisement