Advertisement

அத்தியாயம்….35
           “தெரியல பவி.” பவித்ரன் கேட்ட கேள்விக்கு, வேணியிடம்  அதிர்ச்சியோ…ஆத்திரமோ… ஏன் எந்த வித பதட்டமும் கூட  இல்லாது பதில் அளித்தவளின்     முகத்தையே பவித்ரன்  கூர்ந்து பார்த்திருந்தான்.
     பின்… “நீயே என் கிட்ட இதை  பற்றி பேசனுமுன்னு  இருந்தியா…?”
வேணி அதற்க்கு உடனே பதில் அளிக்காது தன் கை விரலில் உள்ள நகத்தினை ஆராய்ந்த வாறே… “ம். நீ வரலேன்னா  இப்போ நானே உன் ரூமுக்கு  வந்து இருப்பேன்.”
இப்போது பதிலுக்கு பவித்ரன் “ம்…”  என்று கொட்டினான். பின்.. “ஏன் நீயே வரல வேணி.உன்னை எது தடுக்குது.அந்த அறையில் இருந்த சுவற்றை காண்பித்து … “இதுவா…”
வேணிக்கும், பவித்ரனுக்கும் பக்கத்து பக்கத்து அறை தான். பவித்ரன் முதலில் ஆத்திரத்தோடு தான் தன் வீடு வந்தான். அந்த ஆத்திரம் தன் மீதா… ? வேணி மீதா…? இல்லை அந்த உதயேந்திரன் மீதா…? தெரியவில்லை.
ஆனால் கோபம் உச்சந்தலையில் எட்டும் அளவுக்கு கோபம். இந்த  கோபம்  உனக்கு எதனால்…?வேணி மீது  உனக்கு  இருக்கும் காதலா…? என்று  யாராவது கேட்டால், யோசிக்காது சொல்லி விடுவான்.
“இல்லை.” என்று அப்போ ஏன் இவ்வளவு கோபம். பவித்ரன் எப்போதும் அதிக கோபப்பட மாட்டான். எந்த பிரச்சனை என்றாலும், நிதானமாக  தான் யோசிப்பான்.
அதனால் தான் வேணி தனக்கு  ஏதாவது பிரச்சனை என்றால் பவித்ரனிடம் அணுகுவது. ஆம் இந்த அணுகுவது தான் இப்போது பவித்ரனின் கோபமாய் உருமாறி நிற்கிறது.
எது என்றாலும் தன் தோள் சாய்பவளை இன்று வேறு  ஒருவனின் தோள் சாய்ந்து பார்த்ததில் தான்  பவித்ரனுக்கு  அவ்வளவு ஆத்திரம்.
இது ஒரு வகையான உரிமை உணர்வு  என்று  தான் சொல்ல வேண்டும்.  பெரும்பாலும் இந்த மாமியார் மருமகளுக்குள்  பிரச்சனை வர காரணமும் இந்த உரிமை போரால் தான்.
அந்த உரிமை உணர்வால் தான்   வேணி உதயேந்திரன் தோள் மீது சாய்ந்திருப்பதை பார்த்து  பவித்ரனுக்கு ஆத்திரம்  கொள்ள வைத்தது.
அந்த ஆத்திரத்தில் தான் எப்போதும் பெரியவர்வளுக்கு மரியாதை அளிக்கும் பவித்ரன் நாரயணன் கேட்ட கேள்விக்கு கூட பதில் அளிக்காது தன் அறைக்கு வந்து கதவை அடைத்து சாத்த வைத்தது.
ஆனால் அந்த ஆத்திரமும் கோபமும் பவித்ரனிடம் எப்போதும் இருக்கும்  யோசிக்கும் தன்மையால் இப்போது  கொஞ்சம் மட்டு  பட்டது.
பின் யோசித்து பார்த்தவனுக்கு வேணி என்னிடம் மட்டுமே பழக வேண்டும். என்னிடம் மட்டுமே அன்பு செலுத்த வேண்டும் என்று நினைப்பது தவறு தானே… என்று யோசித்தவன் இதையும் யோசிக்கலானான்.
உதயேந்திரனை எந்த அளவுக்கு நம்ப தகுதியானவன். வேணியின் தலை கோதும் போது அவன் முகத்தில் உண்மையான அன்பு இருப்பது போல் தான் அவன் கண்ணுக்கு புலப்பட்டது. ஆனாலும்… உதயேந்திரனை பற்றி யோசிக்க யோசிக்க பவித்ரனுக்கு தலைவலி வந்தது தான்  மிச்சம்.
பின் இதை பற்றி இனி நாம் யோசிப்பதை விட வேணியிடம் கேட்டே  தெளிவு படுத்தி கொள்ளலாம்  என்று தான்  அவனாய் வேணியின் அறைக்கு வந்தான்.
ஆனால் என்ன தான் அவனுக்கு அவனே ஆயிரெத்தெட்டு சமாதானம் செய்து கொண்டு இங்கு வந்தாலும், இதோ பக்கத்து அறையில் இருக்கும் என்னிடம் அவள் மனதை திறக்கவில்லையே…
என்ன தான் வேணி உதயேந்திரன் தோள் மீது சாய்ந்து விட்ட போதும்,  அவளுக்குள்ளும் ஆயிரம் கேள்விகள் குழப்பங்கள் அவள் மனதில் அணி வகுத்து நின்று இருக்கும். அதை தெளிவு படுத்திக் கொள்ள வேணும் தன்னை நாடி  அவள் வந்து இருக்கலாம் என்று   நினையாது இருக்க முடியவில்லை அவனால்.
பின் வேணி என்னை தேடி வரா விட்டால் என்ன… அவளை தேடி நான் சொல்வேன். எனக்கு உறவும் இருக்கிறது. உரிமையும் இருக்கிறது. அவளுக்கு அனைத்தும் செய்ய வேண்டிய கடமையும் எனக்கு  இருக்கிறது என்று நினைத்த பவித்ரன்  ஒரு முடிவோடு தான் வேணியின் அறைக்கு வந்தது. வந்ததுமே  சுற்றி வளைக்காது….
“உதயேந்திரனை நீ விரும்புறியா…?” என்று கேள்வி கேட்டவனுக்கு பதிலாய் அவள் தெரியாது என்று சொல்லுவாள் என்று அவன் சிறிதும் நினைத்து பார்க்கவில்லை.
முதலில் தன் கேள்விக்கு  தான் சந்தேகப்பட்டது இல்லை என்ற பட்சத்தில் கோப்பபடுவாள். “நீ  என்னை பார்த்து எப்படி  அப்படி கேட்கலாம்…?” ஒன்று அவள் கோபப்பட கூடும்.
வேணியின் கோபத்தை  தணிக்க அவனுக்கு தெரியும். தன் சந்தேகம் உண்மை என்ற பட்சத்தில் அவள்  “ஆம்.” என்று சொல்லி விடுவாள்.
அந்த பதில்  அவளிடம்  இருந்து வரக்கூடாது என்று கடவுளிடம் மனு போட்டுக் கொண்டே தான் இந்த அறைக்குள் வந்தான். அப்படி அவள் ஆம் என்று சொல்லி விட்டால், தான் என்ன…?என்ன…? அவளிடம் பேச வேண்டும் என்ற ஒரு தெளிவோடும் தான்  இருந்தான்.
ஆனால் வேணியின் இந்த பதிலில்  அவன் குழம்பி போனாலும்,  வேணியின் குழப்பமான  அவள் முகத்தை பார்த்து விட்டு  தான்  என்னிடம் இதை பேச நினைத்தாயா…? என்ற அர்த்தம் உள்ள வார்த்தையை கேட்டான்.
பின் பவித்ரன் எப்போதும் வேணி குழப்பமான தருணங்களில் தான்  துணையாக இருந்தது  போல் இந்த விசயத்திலும் இருக்க வேண்டும் என்ற முடிவோடு அவள் சோர்ந்த முகத்தை பார்த்தவன் அவள் முகத்தில் படிந்திருந்த கூந்தலை  ஒழுங்கு படுத்தும் போது பவித்ரனுக்கு தன்னால் அந்த உதய் கூட என் வேணியின் முடி மீது கை வைத்தான் தானே…
அவன் மனதில் ஆழ பதிந்த அந்த உரிமை உணர்வு தன்னால் எழுந்தது. இருந்தும் வேணிக்காக  அதை அடக்கியவனாய்…
“ நீ போய் ப்ரெஷ் ஆயிட்டு வா. நான் காபி எடுத்துட்டு வர்றேன்.” என்று சொன்ன பவித்ரனிடம் வேணி ஏதோ பேச வாய் எடுத்தவளின் இதழ் மீது கை வைத்து…
“உஷ். நான் சொல்றத செய். நானும் காலையில் இருந்து ஏதோ டென்ஷன். எனக்கும்  இப்போ காபி கட்டாயமா தேவை.” என்று சொல்லி விட்டு  வேணியின்  பதிலை  எதிர் பாராது  அந்த அறையை விட்டு சென்று விட்டான்.
பவித்ரன்  சென்ற திசையையே சிறிது நேரம் பார்த்திருந்து விட்டு இனி  தன் மனதை அழுத்தும் பாரத்தை அவனிடம் சொன்னால் தான் தனக்கு நிம்மதி என்று உணர்ந்தவளாய் வேணி  பவித்ரன் சொன்னதை  செய்து விட்டு  முகத்தை துண்டால் துடைத்துக் கொண்டே வேணி தன் படுக்கையின் மீது அமர்வதற்க்கும், பவித்ரன்  கையில் காபியோடு அந்த அறைக்குள் வருவதற்க்கும் சரியாக இருந்தது.
       இருவரும் காபி குடித்து முடிக்கும் வரை எந்த பேச்சு வார்த்தையும் இல்லாது  குடித்து  முடித்தனர். பின் பவித்ரன் வேணியின் முகத்தை பார்த்தான்.
        வேணியோ முதலில் செய்தது போல் அவளின் விரலின் நக ஆராய்ச்சியில் ஈடு பட, அவள் கையை தன் பிடிக்குள் வைத்துக் கொண்டவனிடம் இருந்து தன் கையை வேணி விடுவித்துக் கொள்ள பார்த்தாள்.
            “உதய் ஏதாவது சொல்லுவானா…?”  என்ற பவித்ரனின் வார்த்தையில் அவன் கை பிடியில் இருந்து தன் கையை எடுத்து பார்க்க முயன்ற தன் முயற்ச்சியை கை விட்டவளாய்…
      “எ…ன்…ன…?”  என்ன என்ற அந்த வார்த்தை வேணியின் வாயில் இருந்து வருவதற்க்குள்,  மூன்று  இடங்களில் திக்கு எடுத்து தான் வார்த்தையாய் வெளி வந்து விழுந்தன.
         “இல்ல நான் கை பிடிச்சா அவன் திட்டுவானா…?” வேணியின் முகத்தில் குழப்பத்தையும் மீறிய பயம் தெரிந்தாலும், இப்போது நாம் பேசவில்லை என்றால், பின் நாம் பேசினாலும் பிரயோசனம் இல்லாது போய் விடும். எது என்றாலும் இப்போதே வெளி வரட்டும்  என்று ஒரு தீர்மானம் எடுத்து தான் பவித்ரன் வேணியிடம் பேசவே ஆராம்பித்தது. 
      அந்த பக்கம் என்ன…? என்று தெரியாத வரை தான்  இந்த பயம், குழப்பம் எல்லாம். தெரிந்து விட்டால்,   நாமும் தெளிந்து விடலாம். இவளையும் தெளிவித்து விடலாம்   என்று தான்  பவித்ரன் இப்படி பேசினான்.
        “ஏன் இப்படி பே…சுற பவி. உனக்கு மீறி தான் மத்தவங்களுக்கு உரிமை.” முதல் போல் வேணிக்கு வார்த்தைகள் திக்கவில்லை என்றாலும், எப்போதும் அவள் பேசும் போது வார்த்தையில்  இருக்கும் அந்த அழுத்தம் இப்போது இல்லாதது போல் தான் பவித்ரனுக்கு  தோன்றியது.
      “அப்போ மத்தவங்களுக்கும் உரிமை கொடுக்குறதா…முடிவு செய்துட்ட.” வேணியின் முகத்தில் தோன்றிய அந்த அதிர்ச்சியை பார்த்தும் கூட தொடர்ந்து… “ம் சொல்லு வேணி.” அவன் பிடித்திருந்த அவள் கையை விடாது…
       “இந்த கையை  பற்ற எனக்கு மட்டுமே  உரிமை இல்லை. மத்தவங்களுக்கும்” என்று சொன்னவன் பின் ஏதோ முடிவு செய்தவனாய்…
            “மத்தவங்க என்ன மத்தவங்க. அந்த உதயேந்திரனுக்கு கொடுக்க முடிவு செய்துட்டியா…?”
கட்டி உடையாது இருந்தால்,  அதை  கீணி  அதில் உள்ள சீழை எடுத்து விட்டால் தான் நல்லது. இல்லை என்றால் புரை வைத்து விடும். அது போல் தான் ஒரு சில வார்த்தைகள் மற்றவர்களை  ரணப்படுத்தும் என்று தெரிந்தாலும் பேச வேண்டி உள்ளது.
இப்போது பேசாது விட்டால் வேணியின் மனதில் என்ன இருக்கிறது என்பதை அவனால் தெளிவு படுத்த முடியாது போய் விடும்.
அவன் நினைத்ததிற்க்கு போல் தான் இப்போது வேணியிடம் பயமோ, பதட்டமோ ஏன்  குற்றவுணர்வு கூட இல்லாது… “இப்போ என் கை பிடிச்சி இருக்கியே…இந்த கை பற்றல் என் மீது இருக்கும் ஆசையினாலா…? இல்ல அன்பினாலா…?”
பவித்ரனின் கை பிடிக்குள் இருக்கும் தன் கையை காட்டிய வாறே  வேணி கேட்டாள். இப்போது பவித்ரனிடம் இருந்து தன் கையை விடுவித்து கொள்ள எந்த வித முயற்ச்சியும் செய்யாது, உன் கை பிடியில் என் கை இருக்க எனக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை என்பது போல் இருந்து விட்டாள்.
பவித்ரன் வேணியின் கேள்விக்கு  பதில் அளிக்காது அமைதியாக அவள் முகத்தையே பார்த்திருந்தாலும் மனதிற்க்குள் அவன் யோசனை செய்கிறான் என்பதை அவன் நெற்றி சுருக்கத்தால் வேணிக்கு தெரிந்தே இருந்தது.
மேலும் வேணி…  “ஆசைன்னா என்ன…? அன்புன்னா…? என்ன  என்ற வார்த்தைக்கு  அர்த்தம் சொல்லட்டுமா…?” என்று கேட்டவளின் தலையை கொட்டியவன்.
“சொல்லி கொடுத்தவனுக்கே நீ பாடத்தை திருப்பி படிக்கிற  பார்த்தியா…?” வேணியின் சந்தேகத்தை எல்லாம் தீர்த்து வைப்பவன் நம் பவித்ரன் தான், அவனிடமே அர்த்தத்தை சொல்லட்டுமா என்று கேட்டதினால்  எப்போதும் கொட்டுவது போல்  பவித்ரன் வேணியின் தலை மீது கொட்டினான்.
ஆனால் வேணி எப்போதும் போல் அவனிடம் அதற்க்கு சண்டை போடாது அமைதியாக இருப்பதை பார்த்து, சென்னை வந்த பின் நாம் அப்படியே இருக்கிறோம் நம் வேணி நமக்கு அர்த்தம் சொல்லி கொடுக்கும் அளவுக்கு  வளர்ந்து விட்டாளா…என்று  நினைத்துக் கொண்டான் பவித்ரன்.
பின் இப்படியே பழைய நினைவுகளையும், புதியவனையும்  கலந்து நாம் யோசித்துக் கொண்டு இருந்தால், நேரம் தான் செல்லும், இதற்க்கு தீர்வு கிட்டாது என்ற முடிவுக்கு வந்தவனாய்…
“அன்பு ஆசைக்கு எல்லாம் எனக்கு அர்த்தம் நல்லாவே தெரியும் குட்டிம்மா… என் மீது உனக்கோ… உன் மீது எனக்கோ… இருப்பது அன்பு. அது எனக்கு  நிச்சயம். உனக்கும் அது நிச்சயமே…
               என் சந்தேகம் என்பதை விட எனக்கு ஒன்று  தெளிவு படுத்திக்க வேண்டி இருக்கு. இந்த அன்பு மட்டுமே இருக்குறப்ப நம்ம வீட்ல நமக்கு கல்யாணம் செய்து வைக்க பேசினாங்க.
           அப்போ நீயோ நானோ எதிர்ப்பு தெரிவிக்கல. இந்த பேச்சு நேற்று இன்று நடந்தது இல்ல. நம்ம நினைவு தெரிஞ்ச நாள் முதலா நம்ம வீட்ல நடந்துட்டு இருக்கு. அது நமக்கும் தெரியும்.  இப்போ எனக்கு என்ன தெரியனுமுன்னா நாளைக்கு…” என்று ஆரம்பித்த பவித்ரன்…
        பின் “நாளை என்ன நாளை. இன்னைக்கு நையிட் சாப்பிடும் போது கூட நம்ம தாத்தாவோ…அத்தையோ இந்த பேச்சு ஆராம்பிக்கலாம். அதை கேட்டு இனி நாம் அமைதியா இருக்கனுமா…?  இல்ல அவங்க பேச்சுக்கு எதிர் பதமா நாம ஏதாவது ரியாக்க்ஷன் கொடுக்கனுமா…?” அடுத்து நாம் என்ன செய்வது…? நம் உறவு அதற்க்கு அடுத்து எந்த அடிப்படையில் போகும் என்பதை தான் பவித்ரன் கேட்டான்.
          பவித்ரன் பேச்சின் அர்த்தம் வேணிக்கும் புரிந்து விட்டது. ஆனால் என்ன பதில் சொல்வது. அந்த தெளிவு இன்னும் வேணிக்கு வரவில்லை.
         அதனால்… “தெரியல பவி. எனக்கு ஒன்னும் புரியல.”
      “இப்போ வெளிப்படையாகவே கேட்குறேன் வேணி. நீ  என்னிடம் கேட்டது தான். நம்மிடம் அன்பு இருக்குன்னு நீ சொன்ன. நானும் ஆம் நம்மிடம் அன்பு  மட்டும்  தான் இருக்குன்னு ஒற்றுக் கொண்டேன்.
      ஆசை இருக்கா…?கேட்ட. இப்போ இநேரம் வரை எனக்கு  இல்ல. ஆனா நாளை வரலாம்.” என்று  சொன்னவனை வேணி அதிர்ந்து போய் பார்த்தாள்.
     அதை பார்த்த பவித்ரனுக்கு பாவமாக தான் இருந்தது.  ஆனாலும் விடாது… “உன் முகத்தை பார்த்தா இப்போ மட்டும் இல்ல. எப்போவும் என் மேல ஆசை வராது போலவே.” என்று கேட்டு விட்டு வேணியின் முகத்தை பார்த்தாள்.
       உடனே வேணி…“இல்லை.” என்பது போல் பலமாக தலையாட்டியதும்… “இல்லையா அப்போ உனக்கு என் மீது ஆசை வரலாமுன்னு சொல்றியா…?”
        வேணி எதற்க்கு இல்லை என்று சொன்னாள் என்று தெரிந்தும், அவள் வாய் மூலமே உண்மை அறிய , அதை வேறு விதமாக திசை திருப்பி பவித்ரன் இவ்வாறு கேட்டான்.
      பாவமாக தன்னை பார்த்த வேணியை இதற்க்கு மேலும் அவளை சஞ்சலப்படுத்த வேண்டாம் என்று…
    “வெளிப்படையா கேட்குறேன் வேணி. இதுக்கும் தெரியல. புரியலேன்னா…உன் கை பிடிச்சிட்டு நேரா தாத்தா முன்னாடி கூட்டிட்டு  போய் அடுத்த முகூர்தத்திலேயே எங்களுக்கு கல்யாணம் செய்து வைங்கன்னு சொல்லுவேன்.
      அப்போவும்  இந்த வாய் புரியல தெரியலேன்னா பெரியவங்க ஆசை படி நம்ம கல்யாணம் நடக்கட்டும்.” என்று பவித்ரன் சொன்னதும்…
       சிறிது நேரம் அமைதி காத்த வேணி… “இது வரை நம்ம நட்புக்காக பழகுறமோ..இல்ல நம்ம உறவு முறையில் ஒரே வீட்டில் வளர்ந்ததால் நமக்குள்ள இந்த அளவுக்கு அன்பு வந்ததோ தெரியலே… 
      ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம். உன்னிடம் நான் பழகுனது  நட்பின் அடிப்படையிலோ.. இல்ல உறவின் அடிப்படையிலோ… எதுவோ ஒன்னு.இது வரை நான்  அதுக்கு உண்மையா  தான் இருந்துட்டு வர்றேன்.” 
      அவன் கை பிடியில் இருக்கும் தன் கையை பார்த்து தொடர்ந்து பேசிக் கொண்டு இருந்த வேணி… அடுத்து பேசாது பவித்ரன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள்.
      அவனோ எது என்றாலும் நீயே சொல்லி முடி. இதில் நான் உதவிக்கு வர போவது இல்லை என்பது போல்  ஒரு வித அழுத்தத்துடன் வேணியின் முகத்தையே பார்த்திருந்தான்.
     பவித்ரனிடம் இருந்து தனக்கு உதவி கிட்டாது என்று அவன் முகத்தை பார்த்தே தெரிந்துக் கொண்ட வேணி  ஆழ மூச்சு எடுத்து விட்டு விட்டு பின்… 
    “ஆனா நம்ம கல்யாணம் செய்துக்கிட்டா நம்ம கல்யாண உறவுக்கு நான் உண்மையா இருப்பேன்னா என்று சந்தேகமா இருக்கு பவி.”
     சொல்லி விட்டு அவன் கை பிடியில் இருக்கும் தன் கைய் மீதே கவிழ்ந்து அழுது விட்டாள்.
    அழுத வாறே… “என் உடம்புல என் அப்பா ரத்தமும் ஓடுறதனால தானோ…” அதற்க்கு அடுத்து வேணி என்ன பேசி இருப்பாளோ…
        அவள் முகத்தை தன் முகத்திற்க்கு நேராய் கொண்டு வந்தவன்… “ இனி ஒரு தடவை இது போல பேசினா அடிச்சி பல்ல எல்லாம் உடச்சிடுவேன்  ஜாக்கிரதை.” என்று வேணியை அதட்டினாலும் பவித்ரனின் கை தன்னால் வேணியின் கண்ணீரை துடைத்து விட்டது.
      “உன் கூட உங்க அப்பாவ கம்பேர் பண்ணாதே….ஒருவன் தோள் சாய்ந்ததிற்கே இப்படி கில்டியா பீல் பண்ற…
      இன்னும் கேட்டா  நீ யாருக்கும் கமிண்ட்மெண்ட் ஆகாதவ. உன் ஆசை அவன் மேல்னா அடுத்து என்ன என்று பார்க்கனும்.
  உன் ஆசையும் எனக்கும் முக்கியம். நம்ம குடும்பமும் எனக்கு முக்கியம். அதோட உன் நிம்மதி எனக்கு ரொம்ப ரொம்ப முக்கியம் வேணி.” என்று சொன்னவனின் தோள் சாய்ந்தவள்.
      “நீ பார்த்தியா பவி.” என்று கேட்ட வாறே  வேணி நிமிர்ந்து பவித்ரன் முகத்தை பார்த்தாள்.
     பவித்ரனும் எதை என்று கேளாது “ஆம்…” என்று கண் அசைக்க…
       “அது மட்டும் தான் பார்த்தியா…?” என்ற   வேணியின் கேள்வியில்  பவித்ரனின் வயிற்றில் புளியை கரைத்தாள். 
  

Advertisement