Advertisement

அத்தியாயம்….31….2
கிருஷ்ணவேணியின் சொத்து கணக்கையும், ஆடிட்டர் சொன்ன வரிச்சலுகையில் எதில் எதில் முதலீடு செய்தால் வரி குறைவாக கட்டலாம் என்று தெளிவாக ராஜசேகர் சொன்னாலும், பவித்ரனின் மனதில்  ஒன்று கூட சரியாக பதிவாகவில்லை. 
அவன் கவனம் இங்கு இருந்தால்  தானே ….வேணி அவளே தெளிந்தால் தான் உண்டு என்று  கருதி, உதயேந்திரனுக்கு வேணியிடம் தனியாக பேச சந்தர்ப்பத்தை பவித்ரனே தான் அமைத்து கொடுத்தான்.
ஆனால் ஏனோ அவன் மனம் சொல்ல தெரியாத ஒரு சூழலில் சிக்கி தவித்தது போல் இருந்தது. அது உதயேந்திரன் பெண்கள் விசயத்தில் தன் கேள்வி பட்டது சரியில்லை என்பதாலா…?
இல்லை தன் உரிமையை யாரோ தட்டி பறிக்க பார்க்கிறார்கள் என்ற பொறாமையாலா…? ஆம் அவனுக்கு கொஞ்சம் பொறாமையாக தான் இருந்தது.
தான் பக்கத்தில் இருந்தால் வேணியின் கவனம் மொத்தமும் தன் பக்கம் தான் இருக்கும். ஆனால் இன்று தான் அருகில் அமர்ந்து இருக்க அவள் கவனம் மொத்தமும் உதயேந்திரனிடம். இதை அவன் மனம் ஏற்க மறுத்தது.
ஏன்…? நான் வேணியை விரும்புகிறேனா…? அவன் மனதை அவனே ஆராயும் போது  சிறிதும் யோசிக்காது அவன் மனம் சட்டென்று இல்லை என்று தான் சொல்லியது.
பின் ஏன் எனக்கு இந்த பொறாமை…? அவன் மனக்கேள்விக்கு உரிமை. இதையும் யோசிக்காது தான் அவன் மனம் உரைத்தது. என்னை தவிர வேறு யாரும் அவளை சரியாக பிரிந்துக் கொள்ள மாட்டார்கள். என்னால் மட்டும் தான் அவளை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும். இவ்வாறு அச்வன் சிந்தனை ஓடிக் கொண்டு இருக்கும் வேளயில்…
அவனை நிமிர்ந்து பார்த்த ராஜசேகர்… “என்ன பவி உடம்பு சரியில்லையா…?” கேட்ட்தோடு அல்லாது அவன் கழுத்தை தொட்டு பார்க்கவும் செய்தார் ராஜசேகர்.
“ஒன்றும் இல்லை.” என்று சொல்லிக் கொண்டே தன் கழுத்து பகுதியில் இருக்கும்  அவரின் கையை எடுத்து விட்டவனை யோசனையோடு பார்த்துக் கொண்டு இருந்தார் ராஜசேகர்.
பசித்ரனின் உடல் சூட்டில் அவன் உடல் நிலைக்கு ஒன்றும் இல்லை என்று அறிந்துக் கொண்ட ராஜசேகர் தான் அவனை பவி என்று அழைத்தும் தன்னை திட்டாது. தான் அவன் உடல் நிலையை சரிப்பார்க்க அவனை தொடும் போது தன்னை எடுத்து எரிந்து பேசாது பவித்ரனை யோசனையோடு பார்த்துக்கொண்டு இருந்தவருக்கு ஒன்று மட்டும் விளங்கியது.
அவன் மனது சரியில்லை என்பதை விட  இங்கு இல்லை என்று சொன்னால் சரியாக இருக்கும் என்பது. பவித்ரனுக்கு வந்த புது பிரச்சனை  என்னவாக இருக்கும்…? யோசித்துக் கொண்டு இருக்கும் போது தான் இரட்டை பிறவி போல் ஒட்டிக் கொண்டு இருக்கு கிருஷ்ணவேணி அங்கு இல்லாததை பார்த்தவர்.
“வேணி எங்கேப்பா…?” என்ற கேள்விக்கு அவரை நிமிர்ந்து பார்த்த பவித்ரன்  அவருக்கு பதில் அளிக்காது தன் அலைபேசியை எடுத்து பார்த்தான்.
அது வேணியை உதயனிடம் பேச தன் மனம் அனுமதி கொடுத்து அரைமணி நேரம் கடந்து விட்டதை என்பதை காண்பித்தது.
பின் ராஜசேகரை கணக்கில் கொள்ளாது அந்த அறையை விட்டு வெளியேறிய பவித்ரன் செய்த முதல் வேலை,  தன் கார் ஓட்டியை கைய் பேசியின் மூலம் தொடர்பு கொண்டது தான்.
கார் ஓட்டி பேசியில் தன் அழைப்பை ஏற்றதும்… “மேடம வீட்ல விட்டாச்சா…?” என்பதே
என்ன தான் வேணிக்கு பேச தான் சந்தர்ப்பம் கொடுத்தாலும், தான் இல்லாது தனித்து உதயேந்திரனிடம் பேச மாட்டாள் என்ற நம்பிக்கையில் தான் பவித்ரன் கார் ஓட்டியிடம் அவ்வாரு கேட்டது.
ஆனால் கார் ஓட்டி சொன்ன… “இன்னும் மேடம் காருக்கு வரவே இல்லையே சார். எப்போவும் நீங்க இரண்டு பேரும்  தானே ஒன்னா வருவிங்க.” என்ற கார் ஓட்டிக்கு பவித்ரன் பதில் அளிக்காது, தன் கைய் பேசியை அணைத்து கொண்டே   மின்தூக்கியை நோக்கி ஓடினான்.
மின்தூக்கி முன் இரண்டு பேர் காத்து இருப்பதை பார்த்து… “என்ன பிரச்சனை லிப்ட் ஒர்க் செய்யலையா…?” என்ற கேள்விக்கு,
அவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் பார்த்துக் கொண்டு பின் … “லிப்ட் எல்லாம் நல்லாவே  ஒர்க் பண்ணுது சார். ஒர்க பண்ணத்தொட்டு தானே இப்போ அதுல கிருஷ்ணவேணி மேடம் போனாங்க…” என்று ஒருவன் சொல்ல.
மற்றொருவனோ… “என்னது கிருஷ்ணவேணி மேடம் போனாங்கலா…? அப்போ பரவாயில்ல.”  
பவித்ரனுக்கு பிறந்து வளர்ந்தது மொத்தமும் கிராமம்.  பிழைப்புக்காக சென்னை வாசம் எல்லாம் கடந்த இரண்டு ஆண்டு தான்.
தன் கிராமத்தில் இது போல்  வம்பு பேச்சு எவ்வளவு கேட்டு இருப்பான்.  அவர்கள் இருவரின் இந்த பேச்சு, எதை நோக்கியோ போகிறது என்பதை பவித்ரன் அறிந்துக் கொண்டான். இருந்தும் அவர்கள் பேசுவதை ஒன்றும் சொல்லாது அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்தான்.
அப்போ பரவாயில்லை என்று சொன்னவன் தொடர்ந்து…. “நான் செகன்ட் ப்ளோர்ல உதயேந்திரன் சார் ஏறுனதை பார்த்தேன். மேடம் ஒத்தையில இருந்தா பயந்துக்குவாங்க. அது தான் துணைக்கு சார் இருக்கார்லே. அப்போ பரவாயில்லை தானே…” மற்றோருவனிடம் இப்படி பேசிக் கொண்டே பவித்ரனை அவன் நக்கலாக ஒரு பார்வை பார்த்தான்.
ஏதும் சொல்லாது அங்கு இருக்கும் மின்தூக்கியின் கட்டுப்பாட்டு அறைக்குள் நுழைந்தவன் அங்கு அமர்ந்து தன் பேசியில் ஏதோ நோண்டி கொண்டு இருப்பவனிடம் “லிப்ட் ஜெர்க் ஆகி ஒரே இடத்தில் நின்னிடுச்சி. அதை கொஞ்சம் சரிப்பார்கிறிங்கலா…” மிக தன்மையாக தான் பவித்ரன் பேசினான்.
பவித்ரன் இப்போது அவன் அவனாகவே  இல்லை. இதுவே தன்னிலையோடு இருந்து  இருந்தால் மின்தூக்கி அருகில் இப்படி பேசியதற்க்கு அவன் உண்டு இல்லை என்று ஆக்கி இருப்பான்.
அது போல் இதோ தன் வேலையை பார்க்காது வெட்டி வேலை பார்த்து கொண்டு இருக்கும் அந்த மின்தூக்கியின் பராமரிப்பவனையும் ஏதாவது கத்தி வைத்து இருப்பான்.
இப்போது அவன் மனதில் ஓடியது  ஒன்று தான். மின்தூக்கி நின்ற உடன்  வேணி தன்னை அழைத்து இருக்கலாமே…அவள் கையில் தான் கைய் பேசி இருக்கே…
எப்போதும் ஏதாவது ஒன்று என்றால், வேணி  சட்டென்று தன்னை தானே அழைப்பாள். இப்போது அழைக்கவில்லையே…அதுவும் பக்கத்தில்  அவன் இருக்க.
அவன் எண்ணத்தில் ஊடே மின்தூக்கி சரிப்பார்த்து முடிக்கவும் பவித்ரன்   தரைதளத்தில் இருக்கவும், சொல்லி வைத்த்து போல் மின்தூக்கியும் தரை தளத்திற்க்கு வரவும் சரியாக இருந்தது.  அந்த மின்தூக்கி பராமரிப்பாளர் தன் கையில் உள்ள இயந்திரத்தை கொண்டு ஏதோ செய்ய…மின்தூக்கி தன்னால் திறந்துக் கொண்டது.
மின்தூக்கி திறஎத வேலையில் பவித்ரன் கண் மூடிக் கொண்டு இருந்தால் நன்றாக இருந்தும் இருக்கும். அவன் போதாத வேலை வேணி உதயேந்திரன் நெஞ்சில் சாய்ந்து இருக்க, உதயனின்  ஒரு கை அவளின் தோளை தழுவி இருக்க, மற்றொரு கை வேணியின் முகத்தில் இருக்கும் முடியை ஒதுக்கி விட்ட வாறே மெல்லிய குரலில் குனிந்த வாக்கில் உதயனின் உதடு வேணியின் செவிப்பகுதியில் ஒட்டிக் கொண்டு இருக்கும் காட்சியை தான் பவித்ரன் காண நேர்ந்தது.
அதை பார்த்த பவித்ரன் அந்த இடத்தை விட்டு  அகன்றான் என்று சொல்வதை விட ஓடினான் என்று தான் சொல்ல வேண்டும்.
ஆனால் இதை அறியாது கண்மூடி ஏதோ தியானத்தில் இருப்பது போல் இருநத் வேணி பார்க்கவில்லை என்றாலும், எப்போதும்  ஜாக்கிரதையோடு இருக்கு நம் உதயேந்திரன் பவித்ரனை பார்த்து விட்டான்.
அதுவும் மின்தூக்கி கதவு திறக்கும் போதே பவித்ரன் தங்களை இந்த கோலத்தில் பார்த்து அதிர்ந்தது நின்று விட்ட்தை பார்த்து தான் உதய் வேணியின் முகத்தில்  பரவி கிடந்த முடியை ஒதுக்கி விட்டது.
இனி  பேச்சு என்றால்  கூட திருமண ஒஏச்சில் வேணியோடு பவித்ரன் பெயரை இணைக்கப்படுவதை உதயேந்திரன் விரும்பவில்லை.
வேணி தன் தோள் சாய  இருப்பதை பார்த்து வேணியின்  மனமும் தன் மீது சாய்ந்து இருப்பதை பவித்ரன் புரிந்து இருப்பான்.
வேணியை பற்றி அறியாதவனா பவித்ரன். தனக்கே வேணியின் இந்த தோள் சாயல் அவள் மனதை எனக்கு புரிய வைக்கிறாது என்றால், பவித்ரனுக்கு புரியாத இருக்கும். தன் மனதுக்கு நெருங்கியவனை அல்லாது மற்றோருவனின் மீது   இப்படி தோள் சாய்வாளா….? தன் அத்தை மகள் என்று அறியாத இருப்பான்.
அதை கணக்கில் கொண்டு தான் பவித்ரன் பார்த்தும் தங்களின் நெருக்கத்தை தகர்த்தாது இன்னும் வேணியிடம் நெருங்கி நின்றது உதயேந்திரன்.
உதயேந்திரன் தன் திட்டத்தை செயல் படுத்தி முடித்த பிறகு தான் வேணிக்கு தான் நின்று இருக்கும் கோலம் புத்தியில் உரைக்க வித்திர்த்து அவனை விட்டு விலகி நின்றவள்.
இப்படி அவனுடன் ஈழிக் கொண்டு நின்றது நானா…?என் புத்திக்கு என்ன ஆச்சி…? அப்பா என்ற உறவு வந்தால்  நாந் பலவீனம் ஆனாவள் தான். ஆனால் இப்படி ஒரு ஆணோடு நெருக்கம் என் புத்திக்கு உரைக்காத அளவுக்கு பலவீனமானவளா…? யோசிக்க யோசிக்க வேணிக்கு இங்கு இருந்து ஓடு ஓடு இது தான் அவள் மனதில் ஓடிக் கொண்டு இருந்தது.
அவள்  மனது சொன்னதை செய்ய வேணி எத்தனைக்க வேளயில் அவள்  கரம் பற்றிய உதய்…
“நீ தனியா போக வேண்டாம். நான் உன் கூட வர்றேன்.”
சிறிது நேரம் முன் நடந்த்து எதுவும் இல்லை என்பது போல் அவன் தன்னுடன்  சாதரணமாக பேசியதை கேட்டதும், அவளுக்கு இது தான் தோன்றியது.
பெண்களோடு லிவீங் டு கெதரில் இருந்தவனுக்கு இது எல்லாம் ஒன்றும் இல்லை தான். ஆனால் தனக்கு…? அதை நினைத்த வேளயில்…
“என் துணைக்கு பவித்ரன் இருக்கான். நான் ஏதோ ஒரு இதுவுல  இப்படி இருந்துட்டேன். நீங்க அதை வெச்சி என் கிட்ட அட்வான்டெஜ் எடுக்க பார்க்காத்ங்க.” என்று சொல்லி விட்டு செல்பவளின் காதில்…
“நீ சொன்ன ஏதோ…இப்படி…அது என்ன்ன்னு சொன்னா நல்லா இருக்கும்.” என்று உதயேந்திரன் கத்தி சொன்னது  வேணியின் காதில் வந்து விழுந்தன.
பிழை திருத்தம் செய்யாது அப்படியே போட்டு விட்டேன். என் தோழியின் கனவருக்கு விபத்து ஏற்பட்டு விட்டதாய்  தகவல் கிடைத்த பின் அப்படியே பதிவை பதிவிடுகிறேன். அடுத்த முறை பெரிய அத்தியாயமாய் தருகிறேன்பா….

Advertisement