Advertisement

அத்தியாயம்….17 
“ சொல்லுங்க மிஸ்டர் ராஜசேகர் இந்த பதவிக்கு விலையா என்ன கொடுத்திங்க….?” 
இவ்வளவு நேரமும் எந்த  வித தடங்களும் இல்லாது, சந்திரசேகரின்  மனநிலையை பிட்டு, பிட்டு வைத்துக் கொண்டு இருந்த  ராஜசேகர், உதயனின் இந்த கேள்விக்கு பதில் அளிக்க முடியாது அமைதி காத்தார்.
“ என்ன மிஸ்டர் ராஜசேகர். சென்னையில் லீடிங் லாயர். ஒரு கேள்விக்கு பதில் சொல்ல தெரியாது  இப்படி எச்சயைய் கூட்டி முழுங்குறிங்க…” அதற்கும் பேசாது ராஜசேகர் அமைதியாக தான் இருந்தார்.
இப்போது இவர் வாய்  திறக்க மாட்டார் என்பதை அறிந்த உதயேந்திரன்… “ நான் சொல்லட்டுங்கலா  மிஸ்டர் சந்திரசேகர் எங்க கம்பெனியில் ஜாயின் செய்த இரண்டு வருடத்தில்,  மிஸ்டர் சந்திரசேகர் ரெகமெண்டில் நீங்க எங்க கம்பெனிக்கு அதுவும் எங்க க்ரூப்பின் லாயருக்கு அஸிஸ்டண்டாக, அதுவும் மூன்றாவதோ நான்காவதோ அஸிஸ்டெண்ட்டாக  எங்க குழுமத்தில் இணைந்திங்க.
இங்கு சேர்ந்ததும் நீங்க இந்த கம்பெனியில்  மிஸ்டர் சந்திரசேகருக்கு இருக்கும் மதிப்பு, அதிகாரத்தை பார்த்த நீங்க அதை உங்க வளர்ச்சிக்கு பயன் படுத்திக்க பார்த்திங்க. இது இடையில் தான்  நிங்க சொன்ன அவருடைய திருமணம், உங்களுடைய திருமணம் எல்லாம் நடந்தது.”
நேரில் பார்த்தது போல் புட்டு புட்டு வைத்த  உதயேந்திரனை அதிர்ச்சி மிகுதியில் ராஜசேகர் அவனை  நிமிர்ந்து பார்த்தார்.
“ என்ன மிஸ்டர் ராஜசேகர் என்ன இவன் நேரில் பார்த்தது போல் சொல்றானேன்னு நினைக்கிறிங்கலா…?”
அதற்க்கு ராஜசேகரின் தலை  தன்னால்…” ஆம்.” என்பதாய் ஆடியது.
எங்க அக்காவை உன் நண்பன் திருமணம் செய்வதில் உங்களுக்கு எந்த லாபமும் இல்லாம இருந்து இருந்தா உங்க விசுவாசத்தை  நீங்க ரொம்ப மதிக்கும் உங்க நாரயணன் மாமாவுக்கு தானே காட்டி இருப்பிங்க.” என்று சொன்ன உதயேந்திரன்.
“ என்ன மிஸ்டர் ராஜசேகர் நான் சொல்வது சரி தானே…?” 
அதற்க்கு அடுத்து உதயேந்திரன் என்ன பேசி இருப்பானோ…அவன்  பேச்சை இடையூறு செய்வது போல் அவன் கைய் பேசி சத்தம் மிட்டது.
யார் என்று கூட பாராது அதை கட் செய்தவன் தொடர்ந்து… “ என்ன மிஸ்டர் இவ்வளவு நேரமும்  எந்த தடுங்களும் இல்லாது பேசிட்டு இருந்திங்க. இப்போ என்ன வார்த்தை வெளியில் வர மாட்டேங்குது.” இந்த பேச்சுக்கும் ராஜசேகர் ஊமை போல் அமைதி காத்து தான் இருந்தார்.
ராஜசேகர் தான் அமைதி காத்தாரே ஒழிய உதயேந்திரனின் கைய் பேசி அமைதி காக்காது திரும்ப திரும்ப அவனை தொல்லை செய்தது.
இப்போது யார் என்று பாராது அந்த அழைப்பை ஏற்று காதில் வைத்தவன்… “ போன் எடுக்காம அத கட்  செய்தேனா… முக்கியமான வேலையா பிஸியா இருக்கேன்னு அர்த்தம் . அது கூட தெரியாதா…?” அந்த பக்கம் யார் அழைத்தது என்று கூட பாராது உதயேந்திரன் சத்தம் இட்டான்.
 அந்த பக்கத்தில் அவனை அழைத்த அவன் அக்கா பெண் கீர்த்தி சொன்ன செய்தியில்…. “ வாட்…” உட்கார்ந்து இருந்த உதய் அந்த பக்கம் சொன்ன செய்தியில் அதிர்ந்து எழுந்து நின்றான்.
“அழாதே  இதோ வந்துடுறேன். எந்த ஹாஸ்பிட்டல் …?” இந்த பக்கத்தில் இருந்த உதயேந்திரன் கேட்க.
அந்த பக்கத்தில் அழைப்பு விடுத்த கீர்த்தி என்ன சொன்னாளோ…  
ராஜசேகரை பார்த்து  “ ஜெய்மருதுவமனை எங்கு இருக்கு…? பதட்டத்துடன்  கேட்டான்.
ராஜசேகர் சிறு யோசனையுடன் அவனை பார்த்துக் கொண்டு இருக்கு… “ அந்த  ஆஸ்பிட்டல் எங்கு இருக்கு…?” உதயேந்திரனின் குரலில் எரிச்சல் எட்டி பார்த்தது.
ராஜசேகரும் அவனின் அவசரத்தை புரிந்துக் கொண்டு  “ இங்கே பக்கத்தில் தான்.” என்று சொன்னதோடு வழியும் சொன்னார். வேறு எதுவும் சொல்ல வில்லை.
ராஜசேகரிடம் புரிந்தது என்பது போல் தலையாட்டி பேசியில் தொடர்பில் இருந்த கீர்த்தியிடம்… “ நான் அந்த ஹாஸ்பிட்டல்  பக்கத்தில் தான் இருக்கேன். டென் மினிட்ஸ்சுல வந்துடுறேன்.” 
உதயேந்திரன் பேசிக் கொண்டே டேபுள் மீது இருந்த அவன் கார் சாவியை  கையில் எடுத்தவன் ராஜசேகரிடம் விடை பெறாது கூட விரைந்து சென்றான்.
அவன்  வேக நடையில் “ யாருக்கு உடம்பு சரியில்ல…?” என்ற  ராஜசேகரின் வார்த்தை கூட உதயனின் காதில் விழாது காத்தோடு தான் போனது.
“ என்ன ஆச்சி ஏன் திடிர்ன்று இப்படி…?”
உதயேந்திரனுக்கு  கைய் பேசியில் செய்தி கேட்டதில் இருந்து ஆராம்பித்த பதட்டம் இப்போது கூட  அடங்கவில்லை. ஏன்…? என்ன ஆச்சி…? எதுக்கு இந்த முடிவுக்கு வந்தான். அவனுக்கு  ஒன்றும் விளங்கவில்லை.
அந்த மருத்துவமனையில் அந்த தளம் முழுவதும்  வெறிச்சோடி தான் கிடந்தது. சிறிது நேரம் முன் வரை சிகிச்சை அளித்துக் கொண்டு இருந்த அந்த மருத்துவமனையின் இரண்டாம் தளம்.
பரமேஸ்வரரின்  ஆணையில் அங்கு சிகிச்சை அளித்து வந்த நோயாளிகளை  வேறு வேறு தளத்துக்கு மாற்றி விட்டனர்.
பரமேஸ்வரரின்  பேரனுக்கு மட்டுமே அந்த தளத்தில் சிகிச்சை அளித்துக் கொண்டு இருந்ததால்,  அந்த தளமே வெறிச்சோடி தான் காணப்பட்டது.
உதயன் அந்த மருத்துவமனையின் தலமை மருத்துவரின் அறைக்கு  அவரின் அனுமதி பெற்று நுழைந்தவன்…
“ எப்படி டாக்டர் இருக்கான்.” மருத்துவரிடம் இருந்து என்ன பதில் வருமோ என்று  ஒரு வித பதட்டத்துடன் தான் உதயன் கேட்டான்.
“ இப்போதைக்கு உயிருக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை.” என்று அந்த மருத்துவர்  சொல்லியும் உதயேந்திரனின் மனம் சமாதானம் ஆகவில்லை.
உயிருக்கும் ஆபாத்து இல்லை என்று மருத்துவர் சொன்ன அந்த வார்த்தையிலேயே அவன் மனம் நின்று விட்டது.
பின் தன்னை சமாளித்தவனாய்… “ உயிருக்கு ஆபாத்து இல்லேன்னா…? எனக்கு புரியல டாக்டர்.” முகத்தில் சிந்தனை கோடுகள் விழ கேட்டான்.
“ அவன் போட்ட மாத்திரை  ரொம்ப வீரியம் உள்ளது டாக்டர்.  அந்த மாத்திரையின் வீரியம் வெளியே  எடுத்தும் கூட அவனோட பல்ஸ் நார்மலுக்கு வரல. ரொம்ப போராடி தான் அவன் உயிரை மீட்டு இருக்கோம். பல்ஸ்  நார்மலுக்கு வர ஒரு இஞ்சக்க்ஷன் போட்டோம்.
அது கொஞ்சம் சைட் எபெக்ட் கொடுக்க  கூடியது தான். ஆனால் எங்களுக்கும் அந்த ஆப்ஷன் விட்டா வேறு வழி இல்லாமல் தான் அந்த இஞ்சக்க்ஷன் போடும்  நிலைக்கு வந்தோம்.
அவன் ஏற்கனவே போட்ட  மாத்திரையின் வீரியம். இப்போ நாங்க போட்ட இஞ்சக்க்ஷனின் எபெக்ட், இதெல்லாம் பார்த்து தான்  சைட் எபெக்ட் என்ன என்ற முழு விவரமும் சொல்ல முடியும்.”
இதற்க்கு அடுத்து  உதயேந்திரன் அந்த மருத்துவரிடம்  கேட்க என்ன இருக்கு…? அது தான் ஒரு மருத்துவராய் நோயாளியின் உடல்  நிலையை அவர் விளக்கி விட்டாரே.
 ஆனால் அதை கேட்ட உதயனுக்கு தான்   மனது ஒரு நிலையில் இல்லாது அவதியுற்றது. மருத்துவர் சொன்ன செய்தியில் சைட் எபெக்ட் என்ன வேணாலும் இருக்கலாம். அதை தான் அந்த மருத்துவர்  மறைமுகமாய் சொல்கிறார்.
வளரும் பையன் இனி தான் அவனுக்கு வாழ்க்கை இருக்கு. என்ன இந்த பையன் இப்படி ஒரு பைத்தியக்காரத்தனதை செய்து இருக்கிறான்.  க்ரீஷ் இவ்வளவு சென்சீடிவா…? கூட இருந்து இருந்தால் தானே தன் அக்கா பிள்ளைகளின் மனநிலை அவனுக்கு புரிந்து இருக்கும்.
என்ன எபெக்ட்டாய் இருக்க போகிறதோ… அந்த நினைவிலேயே அந்த தளத்தில் இருக்கும் காத்திருப்பு பகுதியில் இருக்கும் இருக்கையில் அமர்ந்தான்.
தன் பக்கத்தில் யாரோ அமரவும் யார்  அது என்று பார்த்தவன் அங்கு கீர்த்தி…
“ மாமா எனக்கு ரொம்ப பயமா இருக்கு மாமா. க்ரீஷ்க்கு  ஒன்னும் ஆகாதுலே மாமா…?”
உதயேந்திரன்  மருத்துவர் சொன்னதை சொல்லாது “ ஒன்னும் இல்லை.” அவள் தலை கோதி சொன்னதும்.
“ டாக்டர் சொன்னாரா மாமா…?”  மாமா ஆமாம் என்றால் எல்லாம் சரியாகி விடும் என்பது போல் அப்பெண் தன் மாமன் முகத்தையே அவன் விடைக்காக காத்திருந்தாள்.
தன் மார்பில் அவள் முகத்தை பதித்துக் கொண்ட உதயன்… “ ஒன்னும் ஆகாதுடா. ஒன்னும் ஆகா  கூடாது.”
முதல் வார்த்தையை கீர்த்தியின் தைரியத்துக்கு சொன்னவன், பின் வார்த்தை தனக்கு தானே சொல்லிக் கொண்டான்.
ஒரு நாள் முழுவதும்  அந்த மருத்துவமனையில் பரமேஸ்வரர் குடும்பமே பழியாய் கிடக்க க்ரீஷ் கண் விழித்தான். அனைவருக்கும் அவன் கண் விழித்தது மகிழ்ச்சி என்றால்…
உதயேந்திரனுக்கு அடுத்து மருத்துவர் என்ன சொல்வாறோ…அதே கவலையாய்  இருந்தது. மூன்று மணி நேரத்தில் அவனுக்கு எடுக்க வேண்டிய மருத்துவ பரிசோதனை எல்லாம் செய்து முடித்ததும், உதயேந்திரனை அழைத்து…
“ கவலை படும் படி ஒன்னும் இல்ல. கண் பார்வைக்கு தான் கொஞ்சம் பவர் யூஸ் பண்ண வேண்டி இருக்கும்.”
அதை கேட்ட உதயேந்திரனுக்கு… “ அப்பாடா…” என்றானது.
என்ன ஆகுமோ…? ஏது ஆகுமோ…? என்று கவலை பட்டவனுக்கு க்ளாஸ்  போடும் சூழ்நிலை வரலாம் என்று சொன்னது எவ்வளவோ மேல் தானே…
“தாங்ஸ் டாக்டர். தாங்ஸ்.” தன் மகிழ்ச்சியை அவர் கை பற்றி தெரிவித்தான்.
“ இது எங்க கடமை மிஸ்டர் உதயேந்திரன். அதுவும் இல்லாம இந்த ஆஸ்பிட்டலில்   உங்க S.P க்ரூப்புக்கும் முப்பது சதவீதம் பங்கு இருக்கு.”
“ஓ…” இது அவனுக்கு   புது செய்தியே… அது தான் ராஜசேகர்  இந்த மருத்துவமனையின் முகவரி கேட்ட்தும் தன்னை அப்படி பார்த்தாரா…? தனக்கு  எங்கள் குழுமத்தில் எங்கே எங்கே எத்தனை சதவீதம் பங்கு இருக்கு என்ற விவரம் கூட எனக்கு தெரியவில்லை என்று மற்றவர்களுக்கு தெரிந்தால், அது தங்கள் குழுமத்துக்கு நல்லது இல்லையே…
இந்தியா என்பது அவனை பொறுத்த வரை வந்து போகும் இடம் என்பதால்,  இங்கு தன் குழுமம் எதில் எதில் எல்லாம் பங்கு வைத்திருக்கிறது என்பது அவனுக்கு தெரியாது.
இப்போது இந்தியா வந்து இவ்வளவு நாள் ஆகியும் கூட அவர்கள் க்ரூப்புக்கு எவ்வளவு  ஷேர் இருக்கு என்று ஆராய்ந்ததை விட , மாமா வேணிக்கு எவ்வளவு ஷேரை வாங்கி இருக்கிறார்.இல்லை தன் க்ரூப்பில் இருந்த ஷேரை அப்பெண்ணுக்கு எவ்வளவு மாற்றி  எழுதி இருக்கிறார். இத்தனை வருடத்தில் அவர் சம்பாதித்தது என்ற விவரங்கள் ஆராய்ந்த்திலேயே தன் நாட்களை கடத்தி விட்டான்.
இனி பார்க்க வேண்டும். கொண்டவன் பார்த்தால் தான். முடிவு செய்தவன் தன் அக்கா மகனுக்கு ஒன்றும் இல்லை என்று சொன்னவுடன் அவனையும் பார்த்து விட்ட  ஆசுவாசத்தில் அப்போது தான் தாங்கள் இருந்த தளத்தை சுற்றி பார்த்தான்.
‘என்ன இப்படி வெறிச்சோடி இருக்கு.’  என்று தான் நினைத்ததை அப்போது தான் அங்கு வந்த தன் தந்தை பரமேஸ்வரரிடம் கேட்டான்.
“ வெளியே தெரிந்தால் அது நம் குடும்பத்துக்கு கெட்ட பெயர். அது தான் போன் செய்து இந்த தளத்தை  காலி செய்ய சொல்லிட்டேன்.”
இந்தியாவில் உள்ள தொழில் என்ன…?நமக்கு நம் தந்தையை பற்றி கூட சரியாக தெரியவில்லையோ…தந்தையின் பேச்சை கேட்டு  இப்படி தான் நினைத்தான் உதயேந்திரன்.
“ இப்படி குடும்ப கவுரவம் பாக்குறவர் எதுக்கு அக்காவ அவருக்கு கட்டி வெச்சிங்க.”
இது வரை மாமா என்று சொல்லிக் கொண்டு இருந்தவனுக்கு ராஜசேகரிடம் பேசியதில் இருந்து ஏனோ   அப்படி அழைக்க பிடிக்காது போயின.
“ என்ன உதய் பேச்சு எல்லாம் ஒரு மாதிரி போகுது.”  பரமேஸ்வரர் உதயனின் முகத்தை ஆராய்ந்துக் கொண்டே கேட்டார்.
“ கேட்டதும் ஒரு மாதிரியான விசயங்கலாய் இருக்கும் போது, பேச்சும் ஒரு மாதிரியாக தானே இருக்கும்பா…” உதயனும் அதே பார்வை பார்த்த படி தான் தன் தந்தையிடன் உரையாடிக் கொண்டு இருந்தான்.
“ என்ன புதுசா கண்டுட்ட…உன் அக்கா இரண்டாம் தாராம் தான் தெரியாதா…?”
“தெரியும். எப்போ அவர் இறந்த பிறகு.”
“ சரி இப்போ அதுக்கு என்ன இன்ற…? அது தெரிந்து தான் அந்த பொண்ண ஊருக்கு விரட்டுறேன்னு சொன்ன…? இப்போ அந்த பேச்சு எங்கே போச்சி…?” என்று பரமேஸ்வரர் கேட்க.
“ ம் அந்த பேச்சில் இப்போ கூட எந்த வித மாற்றமும் இல்லை. கண்டிப்பா நான் விரட்டுவேன். ஆனா முதல்ல விரட்டனும் என்று நினச்சது வேறு ஒரு காரணத்துக்காக. இப்பொ நான் விரட்டனும் என்று நினைப்பதற்க்கு…”
அப்போது அவர்களை நோக்கி நடந்து வந்துக் கொண்டு இருந்த கீர்த்தியை காட்டி… “இவர்களுக்காக… பெரியவங்க நீங்க செய்த தப்புக்கு அவங்கல பலியாக நான் விட மாட்டேன்.” அவன் பேச்சில் அவ்வளவு உறுதி காணப்பட்டது. அதை கேட்ட பரமேஸ்வரருக்கு ஏதோ பாரம் இறங்கிய உணர்வு.
பொண்ணு அழகை பார்த்து பையன் கவுந்துட்டானோ…? என்று இருந்தவர். உதயேந்திரனின் இந்த பேச்சில்… ‘யார் மகன்’…? என்று  மனதில் நினைத்தவரின் கை தன்னால் மீசையை முறுக்கியது.
கீர்த்தி அவர்கள் அருகில் வந்ததும் தன் பேச்சை நிறுத்திய உதய்… “ என்ன கீர்த்தி தம்பிய பார்த்துட்டியா…?  இப்போ ஹாப்பி தானே…”
உதயேந்திரன் க்ரீஷின் கண் பிரச்சசனை  மருத்துவர் சொன்னதும் க்ரீஷை பார்க்க சென்றான். அங்கு தான்  தற்கொலைக்கு முயன்றோம் என்ற உணர்வு கூட இல்லாது தன்னை பாஅர்த்து சாதரணமாக பேசியவனின் செயல் கொஞ்சம் யோசிக்க வைத்தாலும், அதை வெளிக்காட்டாது அவனும் சாதரணமாக  பேசி தான் வந்தான்.
அக்கா  மகனின் இந்த செயல்  அவனை யோசிக்க வைத்த சமயத்தில் தான் பரமேஸ்வரர் அவனிடம் மாட்டியது.
கீர்த்தியை பார்த்ததும் இவளிடம் ஏதாவது சொன்னானோ என்று தான்  இப்படி பெசியது கீர்த்தியோ…
“ எனக்கு இப்போ தான் ரொம்ப பயமா இருக்கு மாமா.” மாமனின் கை பற்றியளின் கையை ஆறுதலாக பற்றியன்..
“கவலை படாதே மாமா நான் இருக்கேன்.”
அப்போது அவனுக்கு தெரியவில்லை. தன் அக்கா மகனின் தீவிரம்.  உணர்ந்து இருந்தால் பின்நாளில் நடக்க இருந்த விபரிதத்தை தடுத்து இருக்க கூடுமோ…
 

Advertisement