Episode 24 (2)

அதன் பிறகு அவனுக்கும் வேலைகள் இழுத்துக் கொண்டது. நான்கைந்து நாளில் மகனை அறைக்கு அழைத்த தில்லை,

“சூர்யா , உங்கப்பா பூமாலைக்கு கார்டியனா அவருக்கு அப்புறம் உன் பேரை தான் போட்டுருக்கார் போல , நீ அமெரிக்கா போனதும் அடிக்கடி உன்னால கவனிக்க முடியாது… இங்க நம்ம வக்கீல் வச்சு நான் எல்லாம் பார்த்துக்கிறேன் பா.நீ அடுத்த வாரம் சனிக்கிழமை நைட் தான கிளம்புற… அப்ப அந்த பிள்ளைய ஒரு எட்டுப் பார்த்து சொல்லிட்டுப் போ… பாவம் படிக்கிற பிள்ளை மனசுல எந்த ஆசையும் வளர்த்துக்காம இருக்கணும்.

படிப்பு முடியுற வரை வேறு எந்த நினைப்பும் இருக்க வேண்டாம். என் வயித்துல நீ உண்டானதும் என்னால படிக்க முடியாம போச்சு…. எத்தனையோ பேரு பிள்ளைய கலைச்சுட்டு படினு சொன்னாங்க … எப்படி மனசு வரும் பா….அதுதான் அது மாதிரிலாம் பூமாலைக்கு நடக்க கூடாது ….அவ நல்லா படிக்கணும் , படிப்ப முடிச்சதும் நல்ல பையனாப் பார்த்து கல்யாணம் பண்ணி வச்சுரலாம்.

இப்பவே கல்யாணம் குழந்தைனு அது தலைல நாம பாரத்த ஏத்தக் கூடாது. அவ பேர்ல நாலு வருஷத்துக்கு தேவையான பணத்தை போட்டு விட்டுறுப்பா…” என்று மேலும் ஏதோ சொல்லிக் கொண்டே போக …. சூர்யாவால் தான் அதற்கு மேல் கேட்க முடியவில்லை.

அவளைப் போய் பார் என்றதும் மகிழ்ச்சியா கேட்க ஆரம்பித்தவனுக்கு அவர் பேச பேச மனதில் குழப்பம் ஆரம்பித்தது. சஞ்சலத்தோடுக் கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு அம்மாவின் கூற்று உண்மை தானே என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்தது. அவன் மறுநாளே அவளைப் பார்க்க ஆயத்தமானாலும் அவனால் போகவே முடியவில்லை.

சரியாக அவனது அமெரிக்கப் பயணத்தினன்று தான் பூமாலையைச் சந்திக்க முடிந்தது. 

தோட்டத்தில் நிழற்குடை போன்று அமைக்கப்பட்டு இருந்த  இடத்தில் அமர்ந்து கைகட்டி யோசித்துக் கொண்டிருந்த சூர்யாவிற்கு அதை இப்பொழுது நினைத்துப் பார்க்கும் போது புரிந்தது … அவன் அன்று மட்டுமே அவளைப் பார்க்க அனுமதிக்கப்பட்டிருக்கிறான்.

அதுவரை கைகட்டி அமர்ந்திருந்தான் இப்பொழுது பெருமூச்சோடு இரண்டு கைகளையும் தலையில் வைத்துக் கொண்டான்.

உள்ளே சென்று குளித்து ஓர் அழகிய சுடிதாரில் இவனைத் தேடி அங்கு வந்த பூமாலை, அவனது இந்த தோற்றம் கண்டு கலக்கமடைந்துஅருகில் வந்தவள் ,

“மச்சு வாங்க உள்ள போகலாம்,  குளிருது ….”

அவளோடவே எழுந்து வந்தவன் , “ஆதி எங்க” என , “அவர் பாகீமா கூடவே சுத்திட்டு இருக்கார்…..”

“நீ என் கூடவே இரு ரோஸ் பட் …… ப்ளீஸ்”

அவன் கேட்டால் மாட்டேனென்றா சொல்வாள். அதிலும் அவன் இப்படிக் கேட்கும் போது , தாயைத் தேடும் குழந்தையாகத் தெரியவும் ,

அவர்களது அறைக்குச் சென்றவள், அங்கு ஓரமாக போடப்பட்டிருந்த சோஃபாவில் போய் ஏறி நின்றுக் கொண்டாள்.

பின்னாலயே வந்தவன் , ஒரு நொடி திகைத்து நின்றாலும் , அடுத்த நொடி, “ரோஸ் பட் ” என்ற அவனின் அழைப்புடன் சூர்யாவின் இறுக்கமான அணைப்பில் அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு நின்றாள்.

இடையில் ஒரு முறை ஏதோ ஒரு கையெழுத்துக்காக பூமாலையைக் காண வந்த விஜயிடம் சாதாரணமாகக் கேட்பது போல் சூர்யாவைப் பற்றி விசாரிக்க , அவன் அமெரிக்கா கிளம்புவதற்கான ஆயத்தங்களில் இருப்பதாகச் சொன்னான். கிளம்புவதற்கு முன் அத்தை சொன்னது போல் தன்னை வந்து சந்திப்பான் என்றுக் காத்துக் கொண்டிருந்தாள்.

காத்திருப்பு வீண் போகவில்லை. அவளை அழைத்துப் போக வந்திருப்பதாகச் சொல்லவுமே அவன் தான் என்று உறுதியாக எண்ணியவள் , கைப்பையை எடுத்துக் கொண்டு முதலில் ஓட ஆரம்பிக்க…. பின் சட்டென்று ஞாபகம் வந்தவளாக , மெல்ல அடியெடுத்து காரில் சாய்ந்து நின்று கைக் கட்டி நின்றவன் அருகில் வந்தாள்.

“சார் ” என்ற அழைப்பில் திரும்பிப் பார்த்தவன் , அதிர்ச்சியாகி , அவள் அருகில் வந்து தோள் தொட்டு ,

“என்னாச்சு ….ரோஸ் பட்… ஏன் ஏன் இப்படி இருக்க , உடம்பு எதுவும் சரியில்லயா…”

வந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே , “எனக்கு ஒன்னுமில்ல … எக்ஸாம் வரப்போகுதா … அதான் படிக்க நிறைய …. நீங்க நீங்க எப்படி இருக்கீங்க….அத்தை எப்படி இருக்காங்க ….”

“நான் நல்லாருக்கேன்…. அம்மாவும் தான் ….வா ரெஸ்டாரன்ட் போய் சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்… கார்ல ஏறு.”

“நாம நம்ம வீட்டுக்குப் போவோமா…. ” , “சரி வா போகலாம் … ஆனா… ஆனா ரோஸ் பட் நான் இன்னைக்கு நைட்  யுஎஸ் கிளம்புறேன் ….. ஐ ம் சாரி …. உன்னைய வந்துப் பார்க்க எவ்வளவோ ட்ரை பண்ணேன் முடியல….. ஃபோன் நீ எடுக்கவே இல்லங்கறதை விட …. உனக்கு நாட் ரீச்சபிள்தான்…. என்னாச்சு ஃபோன் எங்க ….” என்றவாறே காரில் ஏறி அவர்களது அபார்ட்மென்டிற்குச் சென்றான்.

போகும் வழியிலயே , ” இல்ல சார் கீழ விழுந்துருச்சு எக்ஸாம் முடிஞ்சதும் சரி பண்ணனும். அப்புறம் உங்களுக்கு மாமா இல்லாததால நிறைய வேலை இருக்கும்னு தெரியும்… அதான் நானும் டிஸ்டர்ப் பண்ணல….”

இடக்கைக் கொண்டு அவளைத் தோளோடு சாய்த்துக் கொண்டவன் , “எனக்கு தெரியும்… நீ என்னைப் புரிஞ்சுக்குவனு…. ஆனாப் பாரேன் … எவ்வளவு ட்ரைப் பன்னியும் வரமுடியாத எனக்கு … இன்னைக்கு அம்மா காலையிலருந்து பத்து தடவை போன் பண்ணிட்டாங்க , பூமாலையப் பார்க்கப் போனியானு…..”

அவள் கேட்டுக் கொண்டு தான் வந்தாள். லிப்டில் ஏறியவன் அன்னம்மா இருந்த வீட்டை அடைந்து , அவரிடம் , “அன்னம்மா நான் இன்னைக்கு யுஎஸ் கிளம்பறேன். அடுத்த வாரம் நீங்க ஊருக்குப் போக வேண்டாம்…. பூமாலையை பார்த்துக்கிற வேலை உங்களுக்குத்தான். இங்கஇருந்து தான் இனி காலேஜ் போவா:… உங்க சம்பளம் உங்க அக்கௌன்ட் வந்துடும்.

“ரொம்ப சந்தோஷம் சார்…. நான் கூட சொன்னேன் ஹாஸ்டல்ல என்ன சாப்பாடு தரப்போறாங்க…. பிள்ளை நல்லா வளர சத்துள்ள தா சாப்பிடணும் …. நீங்க ஒன்னும் கவலப்படாதீங்க சார்….. நான் நல்லா பார்த்துக்குறேன்.”

பூமாலை அவர் பேச்சை அவன் புரிந்துக் கொண்டானா என்றுப் பயந்துப் போய் அவன் முகம் பார்க்க…. , அவனுக்கு புரிந்த மாதிரி தெரியவில்லை. அவரிடம் விடை பெற்று அவர்கள் வீட்டிற்கு வந்தனர்.

அதற்குள் தில்லையிடம் இருந்து ஃபோன் வரவும் , எடுத்துப் பேசியவன் , கிளம்பி விட்டதாக தெரிவித்தான்.

“என்னப் பார்க்கிற …. உனக்கு இந்த வீடு பிடிக்கும்…. இங்குள்ளவங்கள பிடிக்கும் இல்லையா…. இங்கிருந்து காலேஜ் போ…. இது இது அம்மாவுக்கு தெரியாம நான் பண்ற வேலை ரோஸ் பட் , அதனால பாக்யம் ஆன்டிய உனக்கு துணைக்கு வைக்க முடியாது….நான் அப்பா சொன்னதையும் செய்யணும் , அம்மா சொல்றதையும் செய்யணும் ….. உனக்காகவும் செய்யணும்…… எல்லோருக்கும் நல்லவனா இருக்கப் பார்க்கிறேன் …. ஆனா அது முடியுமா தெரியாது. சில பொய்கள் நல்லதுக்கும் போது சொல்லித்தானே ஆகணும்.”

பூமாலை வாயடைத்துப் போய் அமர்ந்திருந்தாள்…. ஒவ்வொருவருக்காகவும் அவன் யோசிப்பது ….. அவன் மீதான காதல் அதிகரித்துக் கொண்டேப் போனது.

ஹால் சோஃபாவில் அமர்ந்தவன் அவளையும் மடியில் அமர்த்திக் கொண்டு , “ரோஸ் பட் … அம்மாவுக்கு உன்னைய அப்பா பிரண்ட் பொண்ணா மட்டும் தான் தெரியுது .அப்பா நீ யாருனு சொல்லாமலே போய்ட்டார் …. ” என்று பெருமூச்சு விட்ட வனையேப் பார்த்த பூமாலையிடம் ,

“அம்மா… அம்மா … என்ன சொல்றாங்கன்னா….” என்றவன் அவனிடம் அவர் புலம்பவது போல் சொல்லியவற்றை எல்லாம் அவளிடம் சொல்லி ,

“அம்மா சொல்றதும் உன் நன்மைக்கும் , என் நன்மைக்கும் தானே …. நீ படிச்சு முடி , நாம அதற்கப்புறம் என்ன முடிவெடுக்கனுமோ எடுக்கலாம் … எதிர்காலத்துல உனக்கு வேற யாரையாவது பிடிக்கலாம் ….”

” உங்களைத் தவிர யாரையும் பிடிக்காது” என்று மனதினுள் மட்டுமே நினைத்தவள் , அவனையேப் பார்க்க ,

 “எனக்கும் யாரையாவது பிடிக்கலாம்… அப்போ நம்ம முடிவுகள் மாறலாம் …. க்யூபர்ட், பெனி அப்படித்தான் …. இப்ப கல்யாணம் பண்ணவா யோசிக்கிறாங்களாம்….  … அம்மா சொல்லவும் பயந்து போயிட்டேன்….நான் வேற பிரிகாஷன்ஸ் எதுவும் எடுத்துக்காம விட்டுட்டேன்….. நீ…. நீ நார்மல் தானே … ரோஸ் பட் … அப்படி எதுவும்னா இப்பவே டாக்டர் பார்த்து க்ளியர் பண்ணிக்கலாம். அம்மா சொன்னது போல …. படிப்……” என்று சொல்ல வந்தவனுக்கு தில்லையிடமிருந்து ஃபோன் வந்துக் கொண்டே இருக்கவும் ,

“ஒரு நிமிஷம் ” என்றவன் பால்கனி சென்றுப் பேசப் போக …..

சூர்யா சொன்னதை எல்லாம் கேட்டவளுக்கு …. காதுகள் ரெண்டும் அடைத்தது போல் இருந்தது. தொண்டைக்குள் எதுவோ செய்ய , சூர்யா வேகமாக உள்ளே வருவதைப் பார்த்தவள் , அந்த சோஃபாவில் ஏறி நின்றுக் கொண்டாள்.

புரியாமல் பார்த்தவனிடம் , கண்களில் நீர் முட்ட , ” உங்களுக்கு என்னைக் கிஸ் பண்ண தோணினா …. உங்க ஹைட்டுக்கு தூக்குவீங்க தானே ….. எனக்கு எனக்கு இப்ப உங்களுக்கு கிஸ் தரணும்….. அதுதான் உங்க ஹைட்டுக்கு ஏறி நிற்கிறேன் ….. ஐ…. ஐ…. வான்ட் எ டைட் ஹக் அன்ட் ….. அன்ட் டீப் கிஸ்…..” என்று சத்தமாக குழந்தைப் போல் அழுதவள்  கேட்டதைச் செய்யாமல் எப்படி இருக்க முடியும்.

பிரிந்து விடாதே ….. பிரித்து விடாதே…. என்பது போல் பூமாலையின் கையணைப்பும் ,இதழணைப்பும் இருந்தது.