Advertisement

UD:23 (1)

காலையில் வழக்கம் போல் கிளம்பியவன் கிட்சனிற்கு வர, அங்கு மஹா பாலை காய்ச்சிக் கொண்டு இருந்தாள்…

 

அப்பாடா…. இந்த வீட்டுக்கு வந்ததுல இருந்து இப்பதான் கொசுக்குட்டிக்கு இந்த பக்கம் வழி தெரிஞ்சு இருக்கும் போல… என யோசித்தவன் சத்தம் எழுப்பாமல் சற்று ஒதுங்கி நின்று என்ன செய்கிறாள் என்று பார்க்க ஆரம்பித்தான்…

 

காலை எழுந்ததில் இருந்து ஜலதோஷம் வரும் போல் உணர்ந்தவள், பாலில் மிளகு போட்டு குடிக்க எண்ணி… பாலை காய்ச்சுக் கொண்டு இருந்தாள்…

 

பாலில் ஒரு தேய்கரன்டி அளவு மிளகு போடியை போட்டு பாலை மிதமான சூட்டிற்க்கு ஆர வைத்து விட்டு, ஒரு பிரெடில் ஜாமை தடவி அதை வாயில் அடைத்துக் கொண்டு இருந்தாள்…

 

இதை மறைவாக நின்று பார்த்துக் கொண்டு இருந்தவன், ‘ஏன் இன்னைக்கு கொசுக்குட்டி பிரேட்டும், பாலும் சாப்பிடுது? என்னவா இருக்கும்…என்று யோசித்துக் கொண்டு இருந்தவன் அவள் மிளகு பொடியை பாலில் கலப்பதை கண்டு…

 

முன்தினம் இரவு  நடந்த கலவரம் நினைவுக்கு வந்தது நந்தனுக்கு….

………..

தன் அறையில் இருந்து வெளியே வந்தவன், மஹாவின் பதற்றமும்,திருட்டு முழியும் எதற்கு என்று தெரியாமல்… அவளை பார்த்துக் கொண்டே கிட்சனுக்குள் வந்து, தோசையை சுட போக, “கொசுக்குட்டி சாப்பிட்டுச்சான்னு தெரியலையே…. கேட்டு பார்ப்போமா..?” என்று அவள் மேல் காதல் கொண்ட இதயம் யோசிக்க, மறுநொடியே அவளால் பாதிக்க பட்டு பஞ்சரான இதயம்,

 

“வேண்டாம்… எப்படியும் வெளிய சாப்பிட்டு தான் வருவா… பசி தாங்க மாட்டாளே…. கண்டிப்பா சாப்பிட்டு இருப்பா… இத வேற கேட்டா நம்மளை தான் கடுப்படிப்பா.. எதுக்கு வம்பு…. பேசாமா நம்ம வேலைய பார்போம்….” மறுவீட்டு விருந்தின் போது அத்தை பேசும் போது அவள் பசி தாங்க மாட்டாள் என்று கூறியது நினைவிற்கு வர தனக்காக மட்டும் தோசையை சுட ஆரம்பித்தான்…

 

சாம்பாரில் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று அறிய அதை ருசி பார்த்தவனுக்கு உப்பு கரிக்க, எவ்வாறு உப்பு கூடுதல் ஆச்சு என்று யோசித்தவனுக்கு அப்பொழுது தான் தன் அழகிய கொசுக்குட்டியின் திருவிளையாடல் இது என்று புரிந்தது அவனுக்கு…

 

அவனுக்கு நியாயமாக பார்த்தல் கோபம் வரவேண்டியது ஆனால் ஏனோ அவளை நினைத்து சிரிப்பு தான் வந்தது…

 

சற்று முன் அவன் உணர்ந்த அவளது ஸ்பரிசம், அவளது சிணுங்களான பேச்சு, சண்டைகள், முறைப்புகள் என்று நினைத்துக் கொண்டே வந்தவன் கிட்சன் தடுப்பின் மீது சாய்ந்து இடது கையால் தன் முடியை கோதியபடி, அவளுடன் உரிமையாக அவளை சீண்டி, சண்டையிடும் ஆசையில் மிதந்தது கொண்டு இருந்தான்…

 

சற்று முன் அவன் கண்ட பதற்றமும், திருதிருவென விழித்துக் கொண்டு இருந்ததும் நினைவிற்கு வர, அவளை சீண்டும் நோக்கம் எழும்ப… முயன்று முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு ஹாலிற்க்கு வர, அவள் அறைக்குள் செல்ல முயல்வதை கண்டுக் கொண்டவன் அதை தடுக்கும் பொருட்டு அவளை துரத்த தொடங்கினான்…

 

இருப்பினும் அவன் அசந்த ஒரு சில நொடிகளை பயன்படுத்தி அவனிடம் இருந்து தப்பித்து அறையினுள் நுழைந்துக் கொண்டாள் மஹா…

 

அவள் அறைகதவை சாற்றியதும், மனம் சந்தோஷத்தில் கும்மாளம் இட்டுக் கொண்டு இருந்ததால், அவனது முகமும் அதை பிரதிப்பளித்தது…

 

“ஒரு நாள் சிக்காமலா போயிருவ… அப்ப பார்த்துக்குறேன் டி உன்னை…”ஆசையாக அவளிடம் எச்சரிக்கை விடுத்து கிட்சனை நோக்கி சிரித்துக் கொண்டே சென்றான்,

 

தன் மனையாள் செய்த திருவிளையாடலை முடிந்த மட்டும் சீர் செய்து, இரவு உணவை முடித்துக் கொண்டு சுகமான நினைவுகளுடன் படுக்கையில் வீழ்ந்தான் நந்தன்…

………

நினைவில் இருந்து வெளி வந்தவனுக்கு திடீர் யோசனை ஒன்று தோன்ற அதை செயல் படுத்த தக்க தருணத்தை எதிர்க் கொண்டு காத்திருந்தான்…

 

காய்ச்சிய பாலை ஆர வைக்க ஒரு டம்ப்ளரில் ஊற்றி வைத்து விட்டு தன் கைப்பையை எடுத்து வர அறைக்கு செல்ல…

 

அப்பொழுது நந்தன் அவள் வைத்திருந்த பாலில் மேலும் ஒரு கரண்டி மிளகு தூளை போட்டு கலக்கி விட்டு தன் அறைக்கு சென்று கதவை லேசாக திறந்து அவள் வருகைக்காக காத்திருந்தான்.

 

சிறிது நேரம் கழித்து வந்தவள் அவன் அறையை ஒரு தடவை திரும்பிப் பார்த்து பின் கடிகாரத்தை பார்த்துவிட்டு பாலை எடுத்து ஒரு மிடறு பருகியதில் காரம் தலைக்கேற புரை ஏறியது மஹாவிற்கு….

 

“என்ன இது இவ்வளவு எரிச்சல்லா இருக்கு… ஒரு கரண்டி தானே போட்டேன் அதுக்கே இப்படியா…” இறும்பிக் கொண்டே புலம்பியவள், மீண்டும் அதை பருகி பார்க்க அவளால் முடியவில்லை தொண்டையெல்லாம் எரிவது போல் உணர்ந்து கண்களும் லேசாக கலங்க துவங்கியது…

“சை… சளிக்கு இது குடிச்சா சரியா போகும்ன்னு நினைச்சு குடிச்சா தொண்டையே போயிரும் போல இருக்கு… ” புலம்பிக் கொண்டே அதை டைனிங் டேபிளிலேயே வைத்து விட்டவள்…

 

என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டு இருந்தாள்… பாலும், பிரெட்டும்  மட்டுமே  தன் காலை உணவாக கொண்டவளுக்கு இப்பொழுது இந்த பாலை குடிக்க முடியாமல் என்ன பண்ணுவது என்று தெரியவில்லை…

 

அவளது பாவனையை அறை கதவினை லேசாக திறந்து அதன் இடுக்கில் பார்த்துக் கொண்டு இருந்தவனுக்கு சிரிப்பு பொத்து கொண்டு வர,

 

“கொசுக்குட்டி நேத்து இப்படி தானே பண்ணின…. இப்ப நல்லா அனுபவி…”என்று மெல்லிய குரலில் அவளுடன் பேசிக் கொண்டு இருந்தான்…

 

பாலையே வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தவள் பேருந்திற்கு நேரம் ஆவதை உணர்ந்து… பாலை கொட்டிவிடலாம் என்று எண்ணி அதை கையில் எடுத்தவளுக்கு அதை செய்ய முடியாமல் போனது.

 

காரணம் இப்பொழுது உணவின் அருமையை தெரிந்து கொண்டவளாயிற்றே…

 

பின் ஒரு முடிவுடன் பாலை மூச்சு விடாமல் முழுவதும் குடித்தவளை அதிர்ந்து பார்த்தவன், ‘ஏன் இப்படி பண்ணுறா… இவ்வளவு கஷ்டப் பட்டு அதை குடிக்கணுமா என்ன… என்று எண்ணம் தோன்ற அறையை விட்டு மெல்ல வெளியே வந்தான்….

 

பாலை முழுவதும் குடித்துவிட்டு கிளாஸை டேபிளின் மேல் வைத்தவளின் கண்கள் சிவந்து கலங்கி போயின மிளகின் காரத்தில்…

நந்தன் வருவதை ஓர கண்ணால் கண்டுக் கொண்டவள், அவனுக்கு தன் முகத்தை காட்டாமல் கிளாஸை கழுவி வைத்துவிட்டு அவசரமாக அறைக்குள் சென்று சில நொடிகள் தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டாள்…

 

அவளையே பார்த்தப்படி இருந்தவனுக்கு அவள் மேல் கோபமாக வந்தது… இவ்வளவு கஷ்டப்பட்டு அதை குடித்தாக வேண்டுமா என்று, மேலும் தன்னிடம் எதையும் காட்டிக் கொள்ள கூடாது என்ற அவளின் நினைப்பை நினைத்து மேலும் எரிச்சல் கோபமாக மாறியது…

 

“அப்படி என்னடி ஈகோ உனக்கு…. சை….” கை முஷ்டியை காற்றில் குத்தி ,தலையை கொத்தி தன் கோபத்தை அடக்க முயற்சித்தான்….

 

அறையை விட்டு வந்தவள் அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு வேகமாக அலுவலகம் கிளம்பி சென்றாள்… செல்லும் அவளையே சில நொடிகள் கேள்வியாக பார்த்து நின்றான் புரியாத கோபத்தோடு.

 

அன்று முக்கிய மீட்டீங்க இருந்ததால் சீக்கிரமே கிளம்ப வேண்டி இருந்தது நந்தனுக்கு…

 

காரில் தன் அலுவலகம் நோக்கி சென்றுக் கொண்டு இருந்தவன் கண்ணில் எதிரில் இருந்த பஸ் ஸ்டாப்பில் மஹா நின்று இருப்பது தெரிய, அவளிடம் பேச எண்ணி  காரின் வேகத்தை குறைக்கவும்…

 

அதற்குள் பேருந்து வந்து விட, மஹா அதில் ஏறுவதை பார்த்து, மாலை அவள் வந்ததும் இதை பற்றி கேட்க வேண்டும் என்று நினைக்கும்பொழுது,

 

ஆமா… நீ கேட்டு அவ பதில்  சொல்லிட்டுதான் மறுவேலை பார்ப்பா பாரு… அவன் மனசாட்சி அவனை கேலி பேச, அதை பொருட் படுத்தாதவன் ஏன் பஸ்ல போறா…? அவ வண்டிக்கு என்ன ஆச்சு… இல்ல வேற எங்கயாச்சும் போறாளா…”என்று யோசித்துக் கொண்டு வந்தவன்,

 

“இல்லையே அந்த பஸ் அவ ஆஃபிஸ் போற வழி தானே….ஒரு வேலை ஆஃபிஸ்க்கு தான் போறானா, அப்புறம் ஏன் பஸ்ல போகணும்?” என்று தீவிரமாக யோசித்துக் கொண்டே தன் கம்பெனிக்கு வந்து சேர்ந்தான்…

 

பின் வேலைகள் அடுக்கடுக்காக குவிய அதில் தன்னை மூழ்கிக் கொண்டான்…. மாலை எட்டு மணிக்கு பிரபல ஐந்து நட்சத்திர ஹாட்டலில் அவனுக்கு ஒரு மீட்டீங்கிற்கு செல்ல வேண்டி இருந்ததால் மாலை சீக்கிரமே வீட்டிற்கு கிளம்பினான் நந்தன்…

 

தங்கள் குடியிருப்பின் பார்க்கிங் ஏறியாவிற்கு வந்த பின்பே மஹாவும் அவளது ஸ்கூட்டியும் நினைவுக்கு வர, அவளது வண்டியை தேடி தன் கண்களை அழைய விட்டான்… அதில் அவளது பிங்க் நிற ஸ்கூட்டி இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் பொது இடத்தில் நின்று இருக்க, அதை சிறு நொடிகள் பார்த்து விட்டு தன் வீட்டிற்கு சென்று விட்டான் யோசனையுடன்…

 

தன் அறைக்குள் நுழைந்து பால்கனிக்கு வந்து நின்றவன் தன் ஷர்டின் மேல் இரண்டு பொத்தன்களை கழட்டி விட்டு, கையின் மணிக்கட்டு வரை ஷிர்டின் மடிப்பை ஏற்றிமடக்கி விட்டு, பால்கனி சுவரின் மேல் கைகளை அகல விரித்து ஊன்றி நின்று வேடிக்கை பார்த்தப்படி மஹாவை பற்றி எண்ணிக் கொண்டு இருந்தான் அமைதியான மனநிலையில்…

 

சிறிது நேரம் யோசித்தவனுக்கு அவன் மனதிற்கு ஏதோ ஒன்று சரியில்லை என்று தோன்றியது… அவள் எதையோ தனக்கு தெரிய கூடாது என்று மறைப்பதை அவனால் உணர முடிந்தது, ஆனால் அது என்னவென்று தான் அவனால் அறிந்துக் கொள்ள முடியவில்லை….

 

அந்நேரம் மஹா தங்கள் குடியிருப்பின் கேட் அருகே வருவதை கண்ட நந்தன் அவளை உற்று நோக்கினான்…

 

எப்பொழுதும் வரும் நேரத்தை விட சற்று சீக்கிரமே வந்துதிருந்தாள்….. தலைவலியும், சரியாக உண்ணாததால் வந்த உடல் கலைப்பும் அவளை மிகவும் பலவீனமாக்கி இருந்தது…

 

வீட்டில் நந்தன் இல்லை என்று எண்ணி சோஃபாவில் சாய்ந்து அமர்ந்து, முன் இருந்த டீப்பாயின் மேல் கால்களை நீட்டி அமர்ந்து கண்களை மூடிக் கொண்டாள்…

 

அவள் வீட்டில் நுழைந்தது முதல் அவளையே ஹாலின் பால்கனியில் நின்று பார்த்துக் கொண்டு இருந்தான் நந்தன். அவள் சோர்வில் சாய்ந்து அமர்ந்ததும் , சத்தம் எழுப்பாமல் அவள் எதிரில் வந்து அமர்ந்தவன் அவளையே அளவிடும் பார்வையாய் பார்த்துக் கொண்டு இருந்தான்…

 

யாரோ தன்னை துளைக்கும் பார்வை பார்ப்பது போல் உணர்ந்தவள், மெல்ல கண்திறந்து பார்க்க… எதிரில் ஒருவரை இடைபோடும் கூர் பார்வையுடன் அமர்ந்து இருந்தவனை கண்டு அதிர்ந்து நிமிர்ந்து அமர்ந்தாள் ஏதோ மாட்டிக்கொண்ட முழியுடன்…

 

ஏன்னென்றே அறியாமல் அவனது பார்வை அவள் மனதில் ஒருவித நடுக்கத்தை உண்டாக்கியது…

 

எதுக்கு இப்படி பார்க்குறான் காண்டாமிருகம்… ஒருவேலை நேத்து டிமிக்கி குடுத்துட்டு ஓடுனதுக்கு தான் இப்படி பார்க்குறானா… ?’ அவனை நிமிர்ந்து பார்த்தவள் ஸ்தம்பித்து போனாள்…

 

ஒரு சில நொடிகளுக்கு மேல் அவனது விழி வீச்சை தாங்க முடியாமல் தலைகுனிந்துக் கொண்டாள் உதட்டை கடித்தப்படி…

 

ஷப்பா… ஏன் இப்படி பார்க்குறான்… ஒருத்தானால பார்வையாலே அவனோட ஆளுமையை காட்ட முடியுமா… யாராச்சும் சொல்லி இருந்தா சிரிச்சு இருப்பேன் ஆனா இப்ப நேர்லையே பார்க்குறேனே… மஹா நைசா எஸ்கேப் ஆயிரு… ஆளும் சரியில்ல அவன் லுக்கும் சரி இல்ல…என்று எண்ணியவள் மெதுவாக சோஃபாவில் இருந்து எழுந்து நடக்க போக,

 

“இப்ப எதுக்கு பம்மீட்டே ஓட பார்க்குற… “என்று நக்கலாக கேட்க, அதில் ரோசத்துடன் அவனை நோக்கி திரும்பியவள்,

 

“நான் எங்க பம்மீனேன், நான் எதுக்கு ஓடணும்…?” வீராப்பாக கேட்டவளை அழுத்தமாக பார்த்தப்படி மெதுவாக எழுந்து அவள் எதிரில் பேண்ட் பாக்கெட்டில் கை விட்டப்படி  நின்றவன்,

 

“ஏன்னு உனக்கு தெரியாதா..?” நிதானமாக கேட்டவனை பார்த்து மஹாவிற்கு உள்ளுக்குள் குளிர் எடுத்தது…

 

அவன் கேட்ட இரு கேள்வியும் இருபொருள் பட இருப்பதை போல் உணர்ந்தாள்… அவனது இந்த தோரணையும், பார்வையும் புதிது….  இருப்பினும் தன் திணறளை வெளிக்காட்டாமல், “எனக்கு எதுவும் தெரியாது… நான் எதுவும் பண்ணவும் இல்ல… தேன் வொய் ஷுட் ஐ ரன்..? ” தோளை ஆட்டி அவள் அசால்ட்டாக கேட்க,

 

அவளது சோர்ந்த முகத்தை பார்த்துக் கொண்டு இருந்தவன், ‘செம்மையா நடிக்குற டி… எதையும் வெளிக்காட்டாமல் எப்படி டி டக்குன்னு ஃபேஸ் ரியாக்ஷனை மாத்த முடியுது உன்னால.. நீ எதுவும் சொல்ல வேண்டாம்…. நானே அது என்ன விஷயம்னு கண்டு புடிக்குறேன் டி என் கொசுக்குட்டி….மனதில் எண்ணியவன் அவளை சீண்டும் வகையில்…

 

“சரிப் போ… ” என்றுவிட்டு ஒரு அடி பின் நகர்ந்து நின்றான்…

 

அதில் நந்தனை கேள்வியாக பார்த்துக் கொண்டு நின்றவள், ‘என்ன ஆச்சு இவனுக்கு…?’ என்று எண்ணிக் கொண்டு இருக்க,

 

அவள் போகாமல் தன்னையே பார்ப்பதை கண்டு, “என்ன பார்க்குற எனக்கு ஒரு பாலிசி இருக்கு… யாரையாச்சும் பழி வாங்கணும்ன்னா அதை பாக்கி வைக்க மாட்டேன்… உடனே செட்டில் பண்ணிடுவேன்… அப்புறம் பார்க்கும் போது எல்லாம் பழிவாங்கவும் மாட்டேன்… எனக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு அதை எல்லாம் விட்டுட்டு சும்மா பழிவாங்க சுத்திட்டு இருக்க முடியாது… ” என்று கூலாக கூற,

 

அவன் பேசியதில் பாதி புரிந்தும் பாதி புரியாமலும் இருந்தது மஹாவிற்கு, “என்ன சொல்ல வர நீ…?” என்று குழப்பமான மனநிலையுடன் அவள் கேட்க,

 

அவள் குழம்பிய முகத்தை பார்த்து நக்கலாக சிரித்துவிட்டு, “புரியாத மாதிரி செம்ம நடிப்பு டி கொசுக்குட்டி…. நான் என்ன சொல்ல வரேன்னா…. நேத்து நீ நான் சாப்பிட வேண்டிய சாப்பாட்டுல உப்பு கலந்த சோ இன்னைக்கு நான் நீ குடிக்க வேண்டிய பால்ல பெப்பரை கலந்தேன்… டிட் பார் டேட்( tit for tat) ….” என்று அசால்ட்டாக கூறி, அவளையே பார்க்க…

 

முதலில் புரியாமல் முழித்தவள் புரிந்ததும், கோபம் கன்னாபின்னாவென எகிற, “லூசு காண்டாமிருகம், தடியா, வளந்துகெட்டவனே… எனக்கு எப்படி தொண்டையெல்லாம் எரிஞ்சுது தெரியுமா… லூசு… லூசு…” என்று ஹய் பிச்சில்(high pitch) கத்த,

 

தன் காதை தேய்த்துக் கொண்டே,“தெரியும் தெரியும்…. அதான் பார்த்தேனே….”என்று நிதானமாக அவனும் பதிலளித்தத்தில்,

 

கோபம் ஆத்திரமாக மாற… “உன்னை…..” அவனை அடிக்க அவன் அருகில் செல்லும் வேளையில்…

 

தரையில் விரித்து இருந்த கார்பெட்டில் அவளது கால்கள் இடரி மொத்தமாக அவன் மேல் சரிந்தாள்… அவளுக்கு தடுக்கியதும் அவளை பிடிப்பதற்காக அவன் கைகளை நீட்டி ஒரு அடி முன் வைக்கும் நேரத்தில் அவள் நந்தனின் மேல் சரிந்தாள்…

Advertisement