Advertisement

தென்றல்  – 20(2)

நட்சத்திர விழிகளிலே வானவில் கதை சுருக்கம்.

 

“நாங்களும் பிரபா பேமிலியும் ரொம்பவும் க்ளோஸ். அப்பாவுக்கும் கிருஷ்ணமூர்த்தி அப்பாவுக்கு அவங்க தலைமுறைக்கு முன்ன இருந்தே ப்ரெண்ட்ஸ். அப்பா நகை செஞ்சிகுடுக்கற வியாபாரியா இருந்தாங்க. கிருஷ்ணமூர்த்தி அப்பா எங்க போறதா இருந்தாலும் அப்பா இல்லாம போக மாட்டாங்க. அப்படித்தான் அப்பா இறக்கற அன்னைக்கும் அப்பாவால வரமுடியலைன்னு சொல்லியும் கிருஷ்ணமூர்த்தி அப்பா கட்டாயப்படுத்தி கூட்டிட்டு போய் ஆக்சிடெண்ட்ல அப்பா தவறிட்டாங்க…”

“அதோட அப்பா இறந்த வீட்டில அம்மாவை ஊர்க்காரங்க எல்லாரும் தப்பா பேசிட்டாங்க. இதுக்கு மேலையும் அந்த ஊர்ல இருக்க முடியாதுன்னு அம்மா பண்ணை வீட்டுக்கு என்னை கூட்டிட்டு வந்துட்டாங்க. அப்பா இருந்திருந்தா இப்படி எல்லாம் ஆகியிருக்குமான்னு என்னோட மொத்த கோபமும் பிரபா பேமிலி மேல திரும்பிருச்சு. அதுவும் குடும்பமா அவங்க எல்லாரும் போறப்ப ஊருக்குள்ள கூட வரமாட்டேன்ற அம்மாவோட பிடிவாதம் என்னை இன்னும் முரடனா மாத்திருச்சு. அம்மா எங்கப்பா இல்லாத குறை தெரியாம வளர்த்தலும் அப்பா இல்லைன்றது உண்மை தானே? அந்த உண்மை என்னை சுட்டுக்கிட்டே தான் இருந்தது…”

“பிரபாவை பார்க்கறப்ப அவன் முன்னால நான் இன்னும் பெருசா இருக்கனும்னு நினைச்சேன். அத்தோட அப்பப்ப அவங்களை சின்ன சின்னதா டார்ச்சர் பண்ணவும் செஞ்சேன். இது எல்லாம் தெரிஞ்சும் அவங்க பேமிலி எங்களை எதுவும் சொல்லலை. அம்மாவும் அவங்களை எதுக்கு கஷ்டப்படுத்தறன்னு என்னை தான் திட்டுவாங்களே தவிர அவங்களுக்கு சாதகமா தான் இருப்பாங்க…”

“என்னை திட்டற அம்மா கூட எங்க நான் மனசு வருத்தபடுவேனோன்னு பார்த்து எனக்கு வலிக்காம திட்டுவாங்க. அதுவே எனக்கு வலியை குடுத்ததுன்னு அவங்களுக்கு தெரியாது. அப்படி இருக்கறப்ப தான் அருவியூர் திருவிழால ப்ரெண்ட்ஸ் கூட ட்ரிங்க்ஸ் பண்ணிட்டிருந்தேன்…”

அஷ்மியின் பார்வையில் தெரிந்த இன்னுமொரு பாவனையில் மனதை கடினமாக்கிக்கொண்டவன்,

“பர்ஸ்ட் டைம் அன்னைக்கு தான் குடிச்சேன். அதுவும் ப்ரெண்ட்ஸ் கம்பல் பண்ணினதால. அந்த நேரம் எங்களுக்குள்ள நடந்த ஒரு கான்வர்சேஷன் ஒரு ஜாலியான மூமென்ட் அதை பார்த்த நந்தினி தவறா நினைச்சு ஊர்மக்களை கூட்டிட்டு வந்து என்னை அசிங்கப்படுத்தினதும் இல்லாம அடிச்சு தப்பா பேசிட்டா. அம்மா கூட என்னை கை நீட்டினதில்லை. ஆனா என்ன எதுன்னு தெரியாம இவ என்னை அடிச்சு….” என கன்னத்தை தடவிக்கொண்டான்.

“இன்னொரு உண்மையையும் சொல்றேன். ஊர்மக்களோட நந்தினி வரத்தை பார்த்ததுமே விஷயம் தெரியும் முன்னவே எனக்கு அவளை பிடிச்சது. துறுதுறுன்னு அவளோட பார்வை என்னையே பார்த்தப்ப பிடிச்சது. ஆனா அப்பா எனக்கு தெரியலை. வந்தா ஏதேதோ பேசினா அடிச்சா. அத்தோட ஊர்மக்களும் சேர்ந்து அடச்சாங்க எங்களை…” இந்த நிமிடம் கூட அதை எண்ணி அவமானமாய் உணர்ந்தான் பிரசாத்.

“அந்த கோபம், குடிச்சதனால என்னால வேற எதயும் யோசிக்க முடியலை. நந்தினியை என்னோட சொந்தக்கார பொண்ணுன்னு அவங்கட்ட சொல்லி தனியா தூக்கிட்டு வந்துட்டேன். அப்போதான் பிரபாவும் எங்களை பார்த்தான். அவன் முன்னாடி அப்படி ஒரு நிலைமைல நான். என்னை இன்னமும் திட்டிட்டு அவமானப்படுத்திட்டு இருந்த நந்தினி. என்னோட கோபம் நிதானத்தை இழக்கவச்சு  வெறிபிடிக்க வச்சிருச்சு. பிரபா வேற அவளை காப்பாத்தனும்னு என்கிட்டே பேசினான்…”

“என்னவோ நான் வில்லன் மாதிரியும் அவன் நல்லவன் மாதிரியும் என்னை பேசியே ரெண்டு பேரும் கோபப்படுத்தினாங்க. அவங்க முன்னால நான் மட்டமாவா போய்ட்டேன்னு  எனக்குள்ள ஒரு ஆவேசம். நந்தினி மேலான ஈர்ப்பு போய் அங்க கோபமும் பழி வெறியும் உண்டாகிடுச்சு…”

“அப்பான்ற ஆணிவேர் இல்லாம அந்த இடத்தில இருந்து தான் என்னோட மாற்றம் ஆரம்பிச்சிருக்கு. அப்பா இருந்திருந்தா நான் இப்படி ஆகியிருக்க மாட்டேனேன்ற எண்ணமே என்னை வேற எதையுமே யோசிக்க விடாம செஞ்சிருச்சு. அதோட எல்லை நந்தினியை நான் கொடுமை படுத்தினது. சத்தியமா நான் அப்படி எல்லாம் நடக்கும்னு எதிர்பார்க்கவே இல்லை…”

இத்தனையும் சொல்லி அருவியூரில் உதயா நந்தினியின் திருமணமும், அதன் பின் நந்தினியின் தந்தையின் முடிவும், உதயா நந்தினியை மீண்டும் தன் குடும்பத்திற்குள் அழைத்து வர அவர்களை சேர்த்துவைக்க தான் போட்ட திட்டங்களும் அதற்கு இடைஞ்சலாக வேணி செய்த தவறான செயல்களும் என ஒவ்வொன்றாய் அஷ்மிதாவிற்கு சொல்லிக்கொண்டே இருந்தான்.

கேட்டுக்கொண்டு அமர்ந்திருந்தவளுக்கு வார்த்தைகள் வரவே இல்லை.

கோபத்தில் நந்தினியுடன் ஏதாவது சண்டை, அதன் கொண்டு பெண் என்றும் பார்க்காமல் இவன் கை நீட்டி இருப்பான் அப்படி இப்படி இருக்கும் என்று தான் இவள் எண்ணியிருந்தாள் தவிர்த்து பிரசாத் சொன்ன விஷயங்களை ஜீரணிக்க முடியாமல் நின்றாள் அஷ்மி.

ஒன்று அவன் குடித்துவிட்டு ஒரு பெண்ணை அசிங்கப்படுத்தி அடித்து வைத்தது. இன்னொன்று நந்தினியை அவனுக்கு பிடித்தது. இவை இரண்டும் கசப்பாய் அவளுக்குள் சங்கமித்தது.

“என் மேல தப்புதான் அஷ்மி. நான் மறுக்கபோறதில்லை. நியாயப்படுத்த போறதுமில்லை. அப்பா இல்லைன்றதை தாண்டி ஒரு பொண்ணா என் அம்மா ஊருக்கு தள்ளி காட்டுக்குள்ள ஒரு பண்ணை வீட்ல சின்ன பையனான என்னோட தனியா வாழ்ந்தாங்க. எத்தனை வருஷம் அந்த வனவாசம் தெரியுமா? அவ்வளவு வருஷம் கழிச்சு நந்தினியை காப்பாத்த தான் மூணு வருஷம் முன்ன ஊருக்குள்ள வந்தாங்க…”

“எத்தனை  நைட் தூங்காம பயத்தோட நாங்க முழிச்சிருந்திருக்கோம் தெரியுமா? பலநாள் சாப்பாடு இருந்தும் பட்டினி இருந்திருக்கோம். எந்த நல்லது கெட்டதுலயும் கலந்துக்காம ஏதோ ஒரு தீவுக்குள்ள வாழ்ந்துட்டு இருக்கற மாதிரி தான் எங்க வாழ்க்கை…”

“பிரபா மட்டுமில்லை, நிறைய குடும்பங்களை அவங்க வீட்டு விசேஷங்களை பார்க்கறப்போ என்னோட இழப்பின் வலி இன்னும் அதிகமாகத்தான் செய்யும். ஒரு வேலை அம்மா ஊருக்குள்ளயே இருந்து கிருஷ்ணமூர்த்தி அப்பா குடும்பத்தொடவும் ஊரோடவும் இருந்திருந்தா இத்தனை நடந்திருக்காதோ என்னவோன்னு எனக்கு நானே கேட்டுப்பேன்…”

“எத்தனை கேட்டாலும் நினைச்சாலும் அப்பாவோட இழப்பு எத்தனை துயரமானதுன்னு சொல்லி யாருக்கும் புரியவைக்க முடியாது. ஒரு ஆண் பெண் துணை இல்லாம வாழ்ந்திடலாம். ஆனா கணவனை இழந்த ஒரு பொண்ணுக்கு அந்த உலகம் ஒவ்வொரு நாளும் ஒரு சவாலோட தான காத்திருக்கும். கடந்து எங்கம்மா வந்துட்டாங்கன்னு எளிதா சொல்ல முடியாது அஷ்மி. ஒவ்வொரு நிமிஷமும் அக்கினி பிரவேசம் தான்…”

“இழப்போட வலி எங்களுக்கு தெரியாதுன்னு அன்னைக்கு பொன்னுவை ஹாஸ்பிட்ட ல்ல சேர்த்தப்போ சொன்ன. என்னால அப்ப பதில் சொல்ல முடியலை. இப்ப சொல்றேன். இழப்போட வலி எனக்கும் ரொம்ப நல்லாவே தெரியும்…”

“உண்மையில் இப்ப நிம்மதியா மனசுல பாரமில்லாம இருக்கேன். இத்தனை நாள் ஒரு குற்றவுணர்வு உன்னை நெருங்கவிடாம என்னை ரொம்பவும் இம்சை பண்ணிட்டு இருந்துச்சு. இனி உன்கிட்ட எல்லாமே மறைக்காம சொல்லிட்டேன்ற நிம்மதியோட நீ என்ன பனிஷ்மென்ட் குடுத்தாலும் ஏத்துக்க தயாரா இருக்கேன்…” என்றவன் அவள் எதாவது பேசுவாளா என பார்க்க அஷ்மி ஒன்றும் பேசாமல் சென்று படுத்துகொண்டாள்.

அவனை பார்க்கவும் இல்லை, பதில் பேசவும் இல்லை. சொல்லிய விஷயங்கள் அனைத்தும் அவளுக்குள் முட்டிமோதிக்கொண்டு இருந்தன. அவன் மட்டுமே நிறைந்திருந்த சுகந்தமான நினைவுகளுக்குள் மத்தியில் இந்த விஷயங்களை சேர்க்கமுடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தாள். இதயம் கொஞ்சம் கொஞ்சமாய் இற்றுப்போய் விடுமோ என்னும் அளவிற்கு வலித்தது.

அஷ்மி எதுவும் பேசாமல் இருக்க இருக்க பயம் அதிகரித்தது பிரசாத்திற்கு. அவளருகில் சென்று இரண்டுமூன்று முறை அழைத்தும் பார்த்துவிட்டான். கண்திறக்கவே இல்லை. வேண்டுமென்றே அப்படி படுத்திருந்தாள்.

பிரசாத்தும் ஈஸிசேரில் சாய்ந்தவாக்கில் அமர்ந்தவன் மறுநாள் அவள் என்ன செய்வாள்? எப்படி பேசுவாள் அதற்கு என்ன பதில் கொடுக்கலாம் என்ற யோசனைகளுடன் உறங்கிவிட திடீரென சுருக்கென எறும்பு கடித்ததை போல வலித்தது.

கையை பதறி தேய்த்தவன் உறக்கம் கலையாமல் விழித்து பார்க்க அங்கே அஷ்மி நின்றுகொண்டிருப்பது மங்கலாய் தெரிந்தது. அவளை பார்த்ததும் எழுந்துகொள்ள முயன்றவன் முடியாமல் மேநேடும் தொப்பென சாய்வு நாற்காலியிலேயே விழுந்து அஷ்மியை பார்த்தான்.

பேச முயன்றவனுக்கு வார்த்தையும் வரவில்லை. செயல் படுத்த கையையும் அசைக்க முடியவில்லை. எங்கோ சென்றுகொண்டிருந்தவன் முற்றிலும் மயங்கியிருந்தான்.

மறுநாள் வெகுநேரம் கழித்தே கண்விழித்தவனுக்கு ஒன்றும் புரியவில்லை. சட்டென எழுந்துகொள்ள உடல் ஒத்துழைக்கவில்லை. மெதுவாய் முகம் கழுவி மயக்கத்தின் வீரியம் குறைந்து வந்தவன் புத்தியில் சுரீரென ஒரு விஷயம். வேகவேகமாய் வீடு முழுவதும் மனைவியை தேடினான்.

அஷ்மி இல்லை. தனத்திடம் கேட்டான். அவரோ இருவரும் உறங்குவதாக நினைத்திருந்ததாக சொல்ல உயிர்வரை பதறிநின்றான் பிரசாத்.

அஷ்மி இல்லை. அங்கு இல்லவே இல்லை.

அன்று அங்கு இல்லையா? இனி என்றுமே அங்கு இல்லையா?

பிரச்சனைகளை கண்டு என்றுமே அஷ்மி ஒதுங்கி சென்றதில்லை. ஆனால் சென்றிருந்தாள் அவனைவிட்டு அந்த ஊரை விட்டு வெகுதூரமாய்.

அவ்வளவுதானா? பிரசாத்தின் உயிர் தன்னவளின் பிரிவில் சிறிது சிறிதாய் உறைந்துகொண்டிருந்தது. மொத்தமாய் வேண்டாமென சென்றுவிட்டாளா?

இங்கிருந்து சண்டையிட்டிருந்தாலோ பேசாமல் அவனை புறக்கணித்திருந்தால் கூட அவளின் இருப்பில் உயிர்த்திருப்பான். ஆனால்?

கை தீண்டல் வேண்டாம் பெண்ணே கண் தீண்டல் போதும் கண்ணே

காலத்தின் கடைசி வரைக்கும் ஜீவன் போகாது

உனை ஒரு முறை காணவே உயிர் முழுவதும் ஏங்குதே

Advertisement