புன்னகை– 26

ஒன்றுக்குமூன்றுமுறை விடாமல் அவன் அழைத்தபடியே இருக்கநேத்ராஅவனின் அழைப்பை ஏற்கும்பாடுதான் இல்லை. திரும்பியும்ரிஷி அழைக்க அப்பொழுதுதான் அதை எற்றால்நேத்ரா.

“ஹ்ம்ம் என்ன இது எப்ப பார்த்தாலும் தூங்கறப்பவேகால் பண்ணி டிஸ்டர்ப் பன்றது. இப்ப என்ன வேணுமாம்?…” தூக்ககலக்கத்தில்நேத்ரா பேச,

“நீயெல்லாம் என்ன பொண்ணுடி?…” என கடுப்படித்தான் அவளிடம்.

“ஏன்கட்டுமரத்திற்குஅதுல என்ன சந்தேகமாம் இப்போ?…” புரண்டு படுத்தபடி கேட்கஅவளின் தூக்கம் எங்கோ சென்றிவிட்டிருந்தது அவனின் கோபத்தில்.

நேத்ரா எழுந்து அமர்ந்துகொள்ள உறக்கத்திலேயே அவளை தேடிய அபினவ் தன் தாயின் மடிமீது படுத்து உறக்கத்தை தொடர்ந்தான்.உறங்கும் பொழுதும் தன் அருகாமையை உணர்ந்தபடி இருக்கும் மகன் மீதுஅன்பு இன்னும் பெருகத்தான் செய்தது.

“ரொம்ப மிஸ் பன்றான் போல. இனி இவனை விட்டுட்டு ஊருக்கு போறதை குறைச்சுக்கனும்…”அவனின் தலையை கோதியபடி முணுமுணுப்பாய் சொல்ல,

“என்னை விட்டுட்டுஇருக்கிறதா பத்தி என்னைக்குமே நீ பீல் பண்ணிடாத தக்காளி…” எனவேண்டுமென்றேகேட்டுவிட்டு நாக்கை கடித்துக்கொண்டான் ரிஷி.

“அவசரப்பட்டுட்டியேடா ரிஷி. போச்சு போச்சு…” எனதன்னை தானே கடிந்துகொண்டு என்ன சொல்ல போகிறாளோ என பார்க்க,

“இதை சொல்லத்தான் கால் செஞ்சீங்களா? நான் பீல் பன்றேன்னு சொன்னதும் நீங்களும் மூட்டை முடிச்சை கட்டிட்டு உங்க வீட்டை காலி செஞ்சுட்டு வந்திடறது மாதிரி சீன போடறீங்க?…”

“என்னடி இது? நான் என்னமோ தனிக்குடித்தனமே நடத்துறது மாதிரி பேசற?…”

“இல்லையா பின்ன? உங்க குடும்பம் நாங்க இங்க இருக்கிறப்போ நீங்க மட்டும் அங்க இருக்கிறதுக்கு பேரு தனிக்குடித்தனம் இல்லாம வேற என்ன?…” வகையாக மாட்டிக்கொண்ட அவனை விடுவதாய் இல்லை நேத்ராவிற்கு.

நேத்ரா தான் சொன்னதை வைத்தே கிடுக்கிப்பிடி போட தன் தலையில் கொட்டிக்கொண்டவன்,

“நானே எடுத்துக்குடுத்துட்டேன். தப்புதான்மா, தப்புதான்…” அவளிடம் சரணடைய,

“இதுக்குதான் யோசிச்சு பேசனும்…” நேத்ராவும் கெத்தாய் சொல்ல,

“நேரம்டி தக்காளி. உன்னை நான்மிஸ்பன்றேன். இப்போ உன்னை அவ்வளோ தேடுறேன்.பேசலாமேன்னு கால் செஞ்சேன் பாரு. என்னை சொல்லனும்?…”

அவனின் தேடல் புரிந்தவளின்மனம் பரபரத்தது. இப்பொழுதே அவனிடம் சென்று அவனுடன் ஒன்றிக்கொள்ள தவித்தது. ஆனால் அதை வார்த்தைகளில் காட்டிவிடாமல்,

“அதுக்கு? இப்போ டைம் என்னனு தெரியுமா?…” என,

“லாஸ்ட் வீக் இந்நேரம் நீ முழிச்சிருந்து நான் கால் பண்ணாம விட்டுட்டேன்னு அவ்வளோ பீல் பண்ணின.இப்ப என்னனா தூக்கத்தை கெடுத்துட்டேன்ற மாதிரிகுறை சொல்ற?. நீ தூங்கி இருப்பன்னு எனக்கு தெரியாதே?…”

“தெரிஞ்சுக்கனும் மிஸ்டர் கட்டுமரம். தெரிஞ்சுக்கனும். கல்யாணம் ஆகி இத்தனை வருஷம் ஆச்சு. நான் தூங்கிருப்பேனா இல்லையான்னு கூட உங்களுக்கு தெரியலை. நீங்க என்ன குடும்ப நடத்துனீங்க என்னோட?. இதுதான் என்னை நீங்க புரிஞ்சு வச்சிருக்கிற லட்சணமா?…”

வம்பாய் அவள் கேட்கும் கேள்விகளுக்கான பதிலை உடனே அவளை தன் அணைப்பில் கொண்டுவந்து தந்துவிடவேண்டும் என எண்ணியவனுக்கு தான் இருக்கும் இடமும் தங்களுக்குள் இருக்கும் தூரமும் புரிய அந்த இரவை அடியோடு வெறுத்தான்.

“ஹலோ பதில் சொல்ல முடியலையாக்கும்?இதுல இவர் என்னை உருகி உருகி காதலிச்சு என்னை கல்யாணம் செஞ்சாராம். பெருமை பீத்தல் களஞ்சியம்…” என,

“ஏன் பேசாம? இப்ப மாட்டும் நேர்ல இருந்திருந்தா எப்படி உன்னோட குடும்பம் நடத்தினேன்னு செயல்ல காமிச்சிடுப்பேன் தக்காளி. சும்மா இருந்தவனை டெம்ப்ட் பண்ணிட்ட தக்காளி…” கிறங்கிய குரலில் கூற அவனின் பேச்சில் சிலிர்த்தவள்,

“ஆளை பாரு.அர்த்த ராத்திரில என்ன பேச்சு இது?…”அவளின் வெட்க சிணுங்கல்ஸ்வரம்பிசகாமல் அவனை சென்றடைய அங்கு இருப்புகொள்ளாது தவிக்க ஆரம்பித்தவன் அவளிடம் பேச்சை வளர்க்க முடிக்கும் வழிதான் இல்லை.

பேசிக்கொண்டே தான் இருந்தனர். ஸ்வீட்மெமரீஸ் ஆரம்பித்து இன்றைய சூழல் என அனைத்தையும் பேசியவர்கள் வெகுவருடங்களுக்கு பிறகான அனய்யின்முக மலர்ச்சியையும் தவறாமல் மனைவியிடம் பகிர்ந்துகொண்டான் ரிஷி.

இரவுமுடிந்துவிடியல் பகலவனை அழைக்க துவங்கஅப்பொழுதுதான் தனகுளின் பேச்சை நிறுத்தி இருவருமே உறங்க ஆரம்பித்தனர் நெஞ்சமெல்லாம் காதலோடு.

——————————————————————-

விடிந்து வெகு நேரம் ஆனப்பின்னே தான் உறக்கம் கலைந்து விழித்து பார்த்தாள் மலர்.வயிற்றில் கடமுடாவென சப்தம் கேட்க வாட்சை பார்க்க அதுவோ ஒன்பதரை என காட்டியது.

“அதான் பசிச்சிடுச்சு…” என்று நினைத்துக்கொண்டே எழுந்துகொள்ளப்பார்க்க முடியாமல் திரும்பியவள் புடவை தலைப்பு அருகில் படுத்திருந்த அனய்யின்இடுப்பில் சுற்றி கைகளுக்குள் இருந்தது.

“ப்ச்,நைட்டி கூட சேஞ்ச் பண்ணாம அப்டியே படுத்துட்டேன் போல…”

“இவங்க எப்போ வந்தாங்க? அது கூட தெரியாம தூங்கியிருக்கேன்…” தலையில் குட்டிக்கொண்டவள் சில நொடிகள் ஆழ்ந்து பார்த்துவிட்டு வேகமாய் அவனோடு நெருங்கி படுத்துக்கொண்டாள்.

தன்னை துரத்தும் உண்மைகளை அதன் கோர முகத்தினை பார்க்க முடியாமல் மனதில் சுமக்க முடியாமல் அதிலிருந்து தப்பி அவனிடம் சரண் புகுந்துவிடுவது போல ஒண்டினாள்.

முதல் நாளைய கசப்பு கொஞ்சமும் குறையாமல் தொண்டை வரை இறுக்கி பிடிக்க கலங்கிய கண்களை கட்டுப்படுத்திஅவனின் முகத்தை வருடினாள்.

“நீ என்னை கம்பல்பண்ணி மேரேஜ் செஞ்சிருந்தாலும் தப்பில்லை அனய்.ஏன் பண்ணலை?. பண்ணியிருந்திருக்கனும்…”

தனக்குள்ளேயே கேட்டுக்கொண்டிருந்த கேள்வி அவன் உறக்கத்தில் இருக்கிறான் என நினைத்து கேட்டுவிட சட்டெனஅவளின்கையை பிடித்து தன் அணைப்பிற்குள் அவளை கொண்டுவந்தவன்,

“அதான் இப்போ பண்ணியாச்சே…” விழி திறவாமல் அவளின் நெற்றியில் முத்தமிட்டு சொல்ல,

“முழிச்சிட்டு தான்இருக்கீங்களா?…” என்று கேட்டதும்,

“ஹ்ம்ம் ஆமாம்.நீ என்னை டச் பண்ணினதுமே முழிச்சுட்டேன். என்ன திடீர்ன்னு இந்த கேள்வி?…” இப்பொழுது கண்களை திறந்து அவளை பார்த்துக்கொண்டே கேட்க அவள் தான் தடுமாறிப்போனாள்.

“இவனுக்கு தெரியவேண்டாம்.எனக்கு எல்லாம் தெரியும்னு எப்பவும் தெரியவேண்டாம்…” என வாயை இறுக மூடிக்கொண்டவள்அவனை பார்க்க,

“ஹேய் ரோஸ்பட், என்ன இப்படி ஒரு லுக்? சத்தியமாமெல்ட் ஆகிடுவேன்…” அவளின் முகத்தோடு முகம் வைத்து இழைய,

“ப்ச், சேரியை விடுங்க. எல்லாரும் என்ன நினைப்பாங்களோ? இப்பவே இவ்வளோ நேரமா ஆச்சு…” என்றுஅவனை திட்ட,

“இதோடா இவ்வளோ நேரம் லுக் விட்டது நீ.என்னை தடவிக்குடுத்தது நீ.என்னமோநான் உன்னை பிடிச்சு வச்சிருந்தது போல சீன் போடுற…”

“இதுக்கு பேர் என்னவாம்? என் புடவையையார் உங்க கைல சுத்திக்க சொன்னா?…”அவள் கேட்டதும் அசடு வழிந்தவன்,

“அது வந்து, நைட் போன வேலை முடியலையா. உடனே கிளம்பி வந்துட்டேன். வந்து பார்த்தா நீநல்ல தூக்கத்துல இருந்த. சரி டிஸ்டர்ப் செய்யவேண்டாமேன்னு தான் பேசாம படுத்துட்டேன். ஆனா தூக்கம் வரலை. உன்னைஅணைச்சு படுக்கனும்னு தோணுச்சு.அதான்…”

வெளிப்படையாகதன் உணர்வுகளை அவளிடம் சொல்லதாளமாட்டாமல் அவனின் மார்பில் சாய்ந்தவள் சிறிது நேரம் சத்தமில்லாமல் இருந்தாள்.

அனய்க்குதான் பயமாகிவிட்டது. மலர்என்ன நினைத்து இப்படி செய்கிறாள் என புரியாமல் தவித்தான். அவள்தன்னை விரும்ப தொடங்கிவிட்டாள் தான்.ஆனால் இன்னும் ஏதோ ஒரு தடுமாற்றம்.

எதுவோ அவளை ஆட்டிவைக்கிறது. அதுவே அவளை தன்னிடம் நெருங்கவும் விலகவும் செய்கிறதுஎன தெளிவாக தெரிந்தது அனய்க்கு.

ஏற்கனவே பேசி தெளிவான விஷயம் தான்.ஆனாலும்இன்னும் தன்னிடம் சொல்லாமல் அவளாய் எதையோ மனதில் போட்டு குழம்புகிறாளோ? எனகவலையோடுயோசித்தான்.

அவனின்கவலையானமுகத்தை நிமிர்ந்துபார்த்தவள் திடுக்கிட்டு போனாள்.

“என்னாச்சுங்க?…” என அமர்ந்துகொண்டு கேட்க,

“உனக்கு என்கிட்டே ஏதாவது க்ளாரிபை பண்ணிக்கனுமா? ஐ மீன், நீ எதையாவது நினைச்சு கன்ப்யூஸ் பண்ணிட்டு இருக்கயா?…” எனவும் சுதாரித்தவள்,

“ச்சே ச்சே,நத்திங்.நம்ம வருணி மொட்டைக்கு நேத்ரா வீட்டுக்கு அழைக்க போகனுமே.அதான் நீங்க எப்ப ப்ரீ ஆவீங்கன்னு நினைச்சிட்டிருந்தேன்…”

“ஆர் யூ சூர்…”

“ஹ்ம்ம்இன்னும் லேட்டாகிட்டா சோறு கூட கிடையாது நமக்கு. எழுந்திருங்க…” என்று அவனை உருட்டிவிட்டு எழுந்துகொண்டவள்,

“நான் போய் குளிக்கிறேன். நீங்க வருணியை பாருங்க…” என்று அனுப்பிவிட அவனும் சிரித்துக்கொண்டே எழுந்து சென்று தன் குழந்தையை பார்க்க சென்றான்.

“ப்பா…” என்றுசந்தோஷ கூச்சலோடு வந்து தன் கால்களை கட்டிக்கொண்டவளை தூக்கி இரண்டு சுற்று சுற்றியவன் அவளின் குண்டு கன்னத்தில் முத்தமிட,

“நோ வவ்வே நோஓஒ…” என்றபடிஅவனிடமிருந்து இறங்கி ஆண்டாளிடம்சென்று அமரஇடுப்பில் கை வைத்து மகளை முறைத்தான்.

அவனை பார்த்து கண்களை உருட்டிய மகள், “பாத்தீ ப்பா வவ்வே…” என்று மூக்கை மூடிக்கொண்டு விழிகளை சுருக்கி சொல்லகொள்ளை அழகாய் இருந்தது குழந்தையின் பாவனை.

தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்ட ஆண்டாள், “ உன் அப்பாவுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லை.லேசி லேசி…” என்று சொல்லவருணி கை தட்டி சிரிக்க ஆரம்பித்தாள்.

“இன்னும் இங்க என்ன பார்வை?போ முதல்ல போய் ப்ரெஷ் ஆகிட்டு வா. உன் பொண்ணு சொல்ற அளவுக்கு இருக்கு உன்னோட லட்சணம். நீ இப்படி இருந்தா அவளுக்கு நீ என்ன கத்துக்குடுப்ப?…”என்று சொல்லி முறைக்க,

“ஆனாலும் நீங்க ரொம்ப ஓவர், வந்து பேசிக்கறேன் ரெண்டு பேரையும்…” என சொல்லி மாடிக்கு வந்து குளிக்கவும் சென்றுவிட்டான்.

பாத்ரூமிற்குள்நுழைந்துகொண்டவனின் முகத்தில் வருணியின் செய்கையால் உதித்த புன்னகை இன்னமும் மிச்சமிருந்தது.

“எவ்வளோ க்ளவர் என் பொண்ணு…” பெருமிதமாய் என்னிக்கொண்டவனின் மனதில் அவளை பற்றி தான் அறிந்துகொண்ட நாள் தான் நினைவிலாடியது.

அன்றைக்கு தான் மட்டும் அங்கு செல்லாமல் இருந்தால்,வைத்தியநாதன் அந்த நர்ஸிடம் பேசாமல் இருந்திருந்தால், பெண் உண்மையை கூறாமல் இருந்திருந்தால் நினைக்கவே முடியவில்லை.

எப்பேர்ப்பட்ட துரோகம்? அந்த நர்ஸ் கூறியது நினைவிற்கு வந்தது.

“ஸார் அந்த பொண்ணுக்கு அவ புருஷன் என்ன சொல்லி கூட்டிட்டு வந்தான்னு தெரியலை.இங்க வந்த அப்றமா தான் அந்த பொண்ணுக்கிட்ட பேசினப்போ அந்தாள் சொன்னதிலையும் அந்த பொண்ணு சொன்னதுக்கும் கொஞ்சமும் சம்பந்தமே இல்லாம இருந்துச்சு…”

“அந்தாளு எங்க டாக்டர்கிட்ட வொய்ப் பர்மிஷனோட தான் இதுக்கு சம்மதிக்கிறோம்னு சொன்னாரு.ஆனாந்த பொண்ணு கன்சீவ் ஆகி செக்கப்க்கு வந்தப்ப எல்லாம் அது பேசினத வச்சு பார்க்கறப்போ வித்தியாசமா பட்டுச்சு.ஆனா நாங்க இதை டாக்டர்க்கிட்ட சொல்ல பயந்துதான் அமைதியா இருந்தோம்…”

அந்த நர்ஸ் சொல்ல சொல்ல கேட்கும் பொழுது சரவணன் மட்டும் உயிரோடு இருந்து தனக்கு இந்த விஷயம் தெரிந்திருந்தால் எத்தனை விதமான தண்டனைகள் அவனுக்கு கொடூரமாக வழங்கியிருக்க முடியும் என நினைத்து நினைத்து வெதும்பி நின்றான்.

ஷவருக்கடியில் நின்றும் அதன் வெம்மை தணியாமல் இன்னமும் சிறிது நேரம் தன்னைகுளிர்விக்க நின்றான். ஆனால்அந்தகனல் நிச்சயம் தன்னில்அடங்கப்போவதில்லை, காலம் ஆற்றப்போவதில்லை என்பது தான் உண்மை.

அதற்குள் மலர் சுடிதாருக்கு மாறி இருந்தாள். ஒருவித தெளிவும் தீர்க்கமும் அவளுக்கு வந்துவிட்டிருந்தது.

அவளுக்கு அவளே வாதியாகவும் பிரதிவாதியாகவும் நியாய அநியாயங்களை அலசினாள்.

ஒருமனம்உனக்குஅனய்யோடு சேர்ந்து மனைவியாக வாழ ஆரம்பிக்க என்ன தகுதி இருக்கிறது என்று கேள்வி எழுப்ப, இன்னொரு மனம் அவனிடம் உண்மையான காதல் கொண்டிருக்கிறேன். அதை விட வேறு என்ன தகுதி வேண்டும் என்றுவிடை சொல்ல உள்ளுக்குள் மாற்றி மாற்றி போராடிக்கொண்டிருந்தாள்.

“என்றாவது ஒருநாள் அவனைவேண்டாமென மறுத்து வேறொருவனை திருமணம் செய்தடஹி பற்றி சொல்லிகாண்பித்துவிட்டால்?…”

“அனய்க்கு என்னை காயப்படுத்த தெரியாது. காயப்படுத்தவும் மாட்டான்.அப்படி ஒரு சூழல் வந்தள அவனின் காதலுக்காக என் மீது கொண்ட நேசத்திற்காக அதை தாண்டி வருவேன்…”

“நான் எந்த தவறும் செய்யவில்லை.அனய்யின் காதலை காலதாமதமாக் புரிந்துகொண்டதை தவிர.அதற்கான தண்டனையையும் அனுபவித்துவிட்டேன். இனிஇதுபோல்யாரோ செய்த தவறுக்காக துரோகத்துக்காக நான் ஏன் வாழாமல் இருக்கவேண்டும்?…”

அவளவனை வாழவைத்து தானும்வாழ்ந்துவிடமுடிவுகொண்டாள்.அவனின் கண்மணிக்குள் சேர்ந்து தன்காதலை கணப்பொழுதும் தவறாமல் பிரதிபலிக்க ஆவல்கொண்டாள்.

ஏழேழு ஜென்மமத்தில் நம்பிக்கை இல்லாதவள் இந்த ஒற்றைஜென்மத்தில் அவை அனைத்தையும் ஈடுகட்டும் விதத்தில் அவன்உயிரோடு கலந்துவிட துடித்தாள்.

“நடந்துவிட்டவையும் நிகழ்ந்துவிட்டவையும் கசந்துகடந்த ஒன்றாக மட்டுமே இருக்கட்டும்.அதையே நினைத்திருந்தால் வாழும் நாட்களும் நரகமாகி நானும் நடைபிணமாகிவிடுவேன். எனக்கு வேண்டாம். அனய்க்காக வேணும் நான் வாழவேண்டும். என் குழந்தைக்காக, என் குடும்பத்திற்காக…”

அவளின்எண்ணங்கள் தெளிவாக இருந்தாலும் அதைசெயல்படுத்தத்தான் வெகுவாய் தயங்கினாள்.அவனிடம்வெகு இயல்பாய் பேசினாள் தான். ஆனாலும் ஒரு மனைவியாக அந்த நெருக்கத்தை கொண்டுவர அவளால் முடியவில்லை.

அந்த இடைவெளியை கண்ணுக்கு தெரியாத வெற்றிடத்தை எப்படி நிரப்புவது என்று தெரியாமல் குழம்பி நின்றாள்.அவளின் தவிப்பை உணர்ந்தவனோ எதுவாகவென்றாலும் அவளாகவே வரட்டும் என காத்திருந்தான்.

அதற்கடுத்த நான்கு நாட்களும் வேகமாய் நகர படத்திற்கான வேலைகளை துரிதமாய் முடித்தவர்கள் மிச்சத்தை வந்து கவனிக்கலாம் என்று முடிவு செய்து வாரஇறுதியில்நேத்ராவை காண புதுக்கோட்டைக்கு கிளம்பினார்கள்.அவர்களோடு ரிஷியும்.

ஆண்டாளையும் பாலகிருஷ்ணனையும் அனுப்பிவைக்கத்தான் நினைத்தான் அனய். ஆனால் அவர்களோ முடியவே முடியாதென மறுத்ததும் இல்லாமல் நேத்ராவின் குடும்பம் மொத்தத்தையும் அழைத்துவிட்டுதான் வரவேண்டும் என்று சொல்லிவிடஅதற்கே மலைத்துபோனான்.

இதில் ரிஷியின் கிண்டல் கேலி வேறு. எப்படி அனைவரையும் சென்று அழைக்க?அவர்களிடம்எப்படி பேச?என ஒத்திகை பார்த்துக்கொண்டே காரில் வர மலரும் ரிஷியும் அடக்கமாட்டாமல் சிரித்தனர்.

அனய்க்குஇது எல்லாம் புதிது. இந்த சம்பிரதாயங்கள் அனைத்தும் அறிந்திருந்தாளும் இதுவரை இப்படி சென்று யாரையும் அழைத்ததில்லை. அதுவும் மலரை திருமணம் செய்து முதல் முறை அவர்கள் வீட்டிற்கு.அதிலேயே கொஞ்சம் படபடத்துதான் இருந்தான்.

அங்கு யாராவது ஏதாவது பேசிவிட்டால்?மலரால் தாங்கிக்கொள்ள முடியுமா? என்ற பயமும் ஒரு ஓரத்தில் இருந்துகொண்டுதான் இருந்தது. அதை அவனின் முகமே எடுத்தக்காட்ட அந்த சஞ்சலத்தை கண்டுகொண்ட ரிஷி,

“நீ பயப்படறது போல எதுவும் நடக்காது. ஏன் இவ்வளோ டென்ஷன்.அதுவும் நம்ம வீட்டு ஆளுங்க வீட்டுக்கு வந்தவங்களை கஷ்டப்படுத்தி பார்க்கவே மாட்டாங்க. புரியுதா?…” என தேற்ற அனய்யும் புன்னகைத்தான்.

ரிஷியின் பேச்சில் நம்பிக்கை தான்.ஆனாலும் அப்புன்னகை ஒட்டாத தன்மையோடு இருந்தது.

அவனே அங்கு வந்து பார்த்து புரிந்துகொள்ளட்டும் என நினைத்து அமைதியாக காரை செலுத்தினான். பின் சீட்டில் மலரும்வருணியும் உறங்கிவிட்டிருந்தனர்.

மூன்று நாட்கள் முழுதாய் மூன்று நாட்கள் ஆகிற்று.ரிஷியின்மொத்தகுடும்ப உறுப்பினர்கள் வீட்டிற்கும் சென்று அழைப்பு சொல்லிவர. அவர்களோடுரிஷியும் நேத்ராவும் உடன் வர அபினவ்க்கோ வருணியை விட முடியவில்லை.

ஒருவாறாய் சோர்ந்துதான் போனான் அனய்.முழிபிதுங்கி பார்க்கவே பரிதாபமாய் இருந்தான். அவன் பயந்ததை போல எந்த ஒரு பேச்சும்அவர்களை வருத்தம் கொள்ள செய்வது போல இல்லை.ஓரளவிற்கு மகிழ்வாகவே வந்தவர்களை வரவேற்று உபசரித்து அனுப்ப நிம்மதியானான் அனய்.

ரிஷியிடம் அதை மகிழ்ச்சியோடு தெரிவிக்க அதை புன்னகையோடு ஏற்றுக்கொண்டவன்,

“நான் தான் சொன்னேனே உன் பயம் அவசியமில்லாததுன்னு….” என கூற அவனை அணைத்துக்கொண்டான் அனய்.

நாயகியம்மாவுக்கு உடல்நிலை அந்தளவிற்கு சொல்லிக்கொள்ளும் விதமாக இல்லாததால் துரைச்சாமி தாத்தா முதலிலேயே மறுத்துவிட்டார். அதில் அனய்க்கு வருத்தம் ஏதும் இல்லை தான். சூழ்நிலையை புரிந்துகொண்டான்.

ரிஷியின் குடும்பம் பெரிது என்பது முன்பே மலருக்கு தெரியும்.அவர்கள் அனைவரையும் நேத்ராவின் திருமணத்தில் கண்டிருக்கிறாள் தானே. அவர்களை அத்தனை பிடிக்கும் மலருக்கு.

எப்படி ஒரு குடும்பம் என்று வியந்திருக்கிறாள். அப்படிப்பட்ட குடும்பத்தில் இனி தானும் ஒருத்தி என நினைக்கும் பொழுதே மகிழ்ச்சியாக இருந்தது மலருக்கு.

அதிலும் அபினவ். அவர்களை ஊருக்கு கிளம்புவதற்கே அனுமதிக்கவில்லை.அத்தை அத்தை என்று மலரையே சுற்றி வர வருணி அண்ணா என அபினவ்வை சுற்றி வந்தாள்.

கொழுகொழுவெனபொம்பை போல் இருக்கும் குழந்தையின் விரல் பிடித்து அவளுக்கு கஹை சொல்லும் தமையனாகவே தன்னை எண்ணிக்கொண்டவன் அப்படி பாதுகாத்தான் வருணியை.

ஒரு வழியாக அங்கிருந்து கிளம்பியவர்கள்கோவிலுக்கு செல்வதற்கான வேலைகளை கவனிக்க ஆரம்பித்தனர்.

முதல்நாள்சென்று இரவு தங்கி இருந்து மறுநாள் மொட்டை போட்டு காதுகுத்தி பூஜைமுடித்து வரலாம் என முடிவு செய்யப்பட்டது.

 காட்டைஒட்டி ஊருக்கு வெளியே இருக்கும் கோவில் என்பதால் குளிப்பதற்குமற்றஅத்தியாவசிய தேவைக்கு தன்னுடைய கேரவன் ஒன்றையும் எடுத்து செல்லலாம் என முடிவு செய்தான் அனய்.

அதன்படிமறுவாரம் திருவாரூர் கிளம்பினார்கள். ஊருக்கு வெளியே காட்டை ஒட்டி அமைத்திருந்த கோவிலை வந்தடைந்தனர்.

வேனில் இருந்து இறங்கியமலருக்கு அப்பூமியில் பாதம் பட்டதுமே ரத்த ஓட்டம் அதிகரித்தது.

ஊர்மக்கள் ஏற்கனவே கோவிலுக்கு வந்துவிட்டிருந்ததால் இவர்களையேபார்த்தபடி நிற்க மலரின் உடல் வெடவெடக்க தொடங்கியது. அவளின் நடுக்கம் புரிந்தவன் அவளருகில்நின்றுஅவளோடு கை கோர்த்துக்கொண்டான் அவன்.

வனமலரின் கணவன். அவனை நிமிர்ந்து பார்த்தவளின் முகத்தில் ஆயிரமாயிரம் உணர்ச்சி பிரவாகம்.

 

புன்னகை ஜீவிக்கும்…