புன்னகை– 25

ஒருவருடம் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. அவன் யுஎஸ் வந்து நாட்கள்சடுதியில்ஓடியே விட்டது. அலுவலகம் சம்பந்தமாக வந்தவன்அங்கேயேதன்னுடைய வேலையை நீட்டித்து இருந்துகொண்டான்.

மீண்டும் சென்னை வரும் உத்தேசமோ யாரையும் பார்க்கும் தைரியமோ எழவே இல்லை.எதற்குமே விருப்பப்படவில்லை.

“வேண்டாம், எதுவும் வேண்டாம். வாழ்வில் முக்கியமானதையே இழந்துவிட்டேன். இனி எது இருந்தால்என்ன இல்லாவிட்டால் என்ன?…” என்னும் மனநிலைக்கு வந்துவிட்டிருந்தான் அங்கிருந்து கிளம்பும் முன்பாகவே.

ஆனால் மலர் மட்டும் அவனின் மனதில் நீக்கமற நிறைந்து இருந்தாள். நீருபூத்த நெருப்பென அவனின் மனதில் அமர்ந்துகொண்டு முனுமுனுவெனும் ஒருவித இம்சையை தந்துகொண்டே தான் இருந்தாள்.

அனய்அவள் விஷயத்தில் மிக தெளிவாய் இருந்தான்.

“நான் காதலித்த பெண்ணிற்கும் திருவாரூர் வனமலருக்கும் ஆயிரமாயிரம் வித்தியாசங்கள். திருமணம் ஆனது அவள் குடும்பத்தின் பொம்மைக்கு தானே தவிர உயிர்ப்பான தன்னுடைய வனமலருக்கு இல்லை…”

“என் ரோஸ்பட் இன்னும் என் மனதில் பத்திரமாய் இருக்கிறாள். அவளை இந்த உலகம் மரிக்கும் வரை காதலிப்பேன். அதற்கு பின்பும் கூட. சரவணனின் மனைவி எனக்கு வேண்டாம். ஆனால் என் காதலை எந்த சூழ்நிலையிலும் நான் இழக்க மாட்டேன்…”

அவனுக்கு அவனே சங்கல்பம் எடுத்துக்கொண்டதை போல தான் நடந்துகொண்டான். சென்னையை விட்டு வந்ததிலிருந்து சில நாட்கள் வீட்டிற்கு பேசாமல் இருந்தவன் ஒருகட்டத்திற்கு மேல் ரிஷியையும் நேத்ராவையும் ஒதுக்கமுடியாமல் போனது.

அதன் பின் மெல்ல மெல்ல பாலகிருஷ்ணனிடம்மட்டும் பேச ஆரம்பித்தவன் ஆண்டாளிடம் பேசவே விரும்பவில்லை. அத்தனை கோபம் இருந்தது அவனுக்கு.

அதன் பின் எத்தனையோ வற்புறுத்தலுக்கு பின் ஆண்டாள்பேச கேட்டுக்கொள்ள மட்டுமே செய்வானே தவிர்த்து பதில் பேச மாட்டான்.

மீண்டும்மீண்டும் அவனை கோபம் படுத்தும் விதமாக அவனுக்கு பெண் பார்க்கவென ஆரம்பித்தவர் அவனின் பிடிவாதத்தில் அரண்டுதான் போனார்.

ரிஷியிடம் சொல்லியும் பேச சொல்ல அனய்யிடம் எதுவும் எடுபடாமல் தான் போனது. அந்தசமயத்தில் தான் அவனின் வாழ்க்கையும் திசை மாற ஆரம்பித்தது.

தன்னுடைய நண்பன் ஒருவனை காண சென்ற இடத்தில் தெலுங்குபட தயாரிப்பாளர் ஒருவரின் பழக்கம் ஏற்பட்டு நட்பாகி இருக்க அவருக்கும் தானே இயக்கி தயாரிக்கும் தன்னுடைய புதிய படத்தில் புதுமுகம் ஒருவனை அறிமுகப்படுத்த தேடிக்கொண்டிருக்கஅனய்யின் மீது அவனின் எண்ணம் வந்து நின்றது.

அவனைநடிக்க வைக்கும் அபிப்ராயம் ஏற்பட அவனிடமும் பேசியவர் முதலில் மறுத்தவன் யோசித்து சொல்வதாகி சொல்லி வர நேத்ராவிடமும்ரிஷியிடமும் இதை பகிர்ந்தான்.

அவர்கள் அவனின் விருப்பம் என்றுவிட ஆண்டாளுக்கு தான் பொறுக்கமுடியவில்லை. போனில் அவனை காய்ச்சி எடுத்துவிட வேண்டுமென்றே அப்படத்தில் நடிப்பதாக உறுதிகொண்டவன் தனக்கும் ஒரு மாற்றம் தேவை என விரும்பினான்.

பொழுதுபோக்காக ஆரம்பித்த ஒரு மாற்றத்திற்கென நடிக்க ஆரம்பித்த அனய்அங்கே ஆதித்யவர்மாவாய் உருமாறினான். முதல் படமே வெற்றிப்படமாகி அவனை இளைஞர்கள் கொண்டாட சினிமாஉலகம் வாரி சுருட்டிக்கொண்டது.

கொஞ்சம் கொஞ்சமாய் அதில்மூழ்கியவன் மொத்தமாய் தன்னுடைய முழு கவனத்தையும் கலையுலகில் செலுத்தினான். அதிலும்அவனின்சுபாவமும் அழகும் அவனுடன் நடிக்கும் பெண்கள் யாரையும் நெருங்கவைத்தது.

அவனிடம் பழகவைத்தது.அதன் காரணமாகவே பத்திரிக்கையில் அதிகளவில் கிசுகிசுக்கப்பட்டான் அனய். அப்படி வரும் வதந்திகளை கண்டு ஆண்டாள் எங்கே ஏதாவது ஒரு நடிகையை கட்டிக்கொண்டுவிடுவானோ என அஞ்சாத நாளில்லை.

“பொண்ணை பெத்து தங்கமா கட்டிகுடுத்துட்டேன்.இவனை பெத்துட்டு இத்தனை வருஷம் கழிச்சு இப்படி அவஸ்தை படறேன்…” என பாலகிருஷ்ணன் காதில் ரத்தம் வரும் அளவிற்கு புலம்புவார்.

அவரின் புலம்பலிலும் தவிப்பிலும் எங்கே உடம்பிற்கு வந்துவிடுமோ என பயந்து பாலகிருஷ்ணன் நேத்ராவை அழைக்க நேத்ரா அனய்யை ஒரு பிடி பிடிப்பாள்.

ஆனால் அனய்யின் போக்கில் எந்த மாற்றமும் இல்லை. இப்படியே மேலும் இரண்டு வருடம் செல்ல ஆண்டாளின் வீட்டிற்கு அனய் வருவதாகவே தெரியவில்லை.

படங்களில் நடிக்க ஆரம்பித்த பிறகு ஆந்திராவில் இருந்தவன் சென்னை வந்தாலும் தனக்கென ஒரு வீட்டை வாங்கி அங்கே தான் இருப்பான்.

அவனுக்கு கோபம். ஆண்டாள்நினைத்திருந்தால் நிச்சயம் மலர் தன் வாழ்வில் தன் மனைவியாக இருந்திருப்பாள் என.தன்னுடைய காதல் பற்றி தெரிந்தும் மலரின் திருமண விஷயம் அறிந்தும் அதை மறைத்து பிரச்சனையன்றுஅவரேமலரை தவறாகபேசியதை ஏற்கவே முடியவில்லை.

அதனாலேயே அவருக்கு பிடிக்காத விஷயங்களை மாற்றிக்கொள்ள விரும்பவே இல்லை.

ஆண்மகனான அவனுக்கென்று ஆசைகள் இருந்தும் அவனின் துறையில் அதை மீறுவதற்கான சந்தர்ப்பங்கள் ஏராளம் இருந்தும் அதை தன்னுடைய காதல் கொண்டு கண்ணியம் காத்தான்.

பெண்களின் பழக்கவழக்கத்தை அளவோடு ஒரு எல்லைக்குள் வைத்துக்கொண்டான். தனக்கென ஒரு தடைவிதித்து அதை தாண்டி யாரும் வந்துவிடாமல் பார்த்துக்கொண்டவன்நாளுக்கு நாள் இமயம் என வளரத்தான் செய்தான்.

திரையுலகில் குறுகிய காலத்திலேயே முக்கியமாணவனாகவும், அனைவரும் விரும்பப்படும் கதாநாயகனாகவும் கோலோச்சிக்கொண்டிருந்தான்.

மலர் அவள் வாழ்க்கையில் நிம்மதியாக சந்தோஷமாக இருக்கிறாள். எனக்கென்று ஒரு பாதை. நிம்மதியாகஇருக்கிறேன். அதை தாண்டி திருமணம், குடும்பம் என யோசிக்க என்றுமே விருப்பம் கொள்ளவில்லை.

நேத்ரா அவனின் திருமணம் பற்றி கேட்ட போதும்,

“இன்னும் நூறு ஜென்மம் ஆனாலும் அவள் மேல நான் வச்சிருக்கிற காதலே என்னை சந்தோஷமா வாழவைக்கும்.இப்ப இருக்கிற நிம்மதியை தொலைச்சு  சந்தோஷத்தை பறிச்சு நான் நடைபிணமாகி இன்னொரு பொண்ணோட வாழ்க்கையையும் சூனியமாக்க சொல்றியா நேத்ரா?…” எனகேட்டு வாயடைக்க வைத்தான்.

அனய்யின் காதலை கண்டு மலைத்துத்தான் போனாள் நேத்ரா. இப்படி ஒரு காதலோடு வாழ மலருக்குத்தான் கொடுத்துவைக்க வில்லை என நினைத்து அதற்கு தன்னையே நிந்தித்துக்கொண்டாள் அவள்.

“என்ன நினைப்பு இது? கல்யாணம் ஆகி இத்தனை வருஷம் ஆச்சு அவளுக்கு. இன்னும் நான் எப்படி நினைக்கிறேன்?…” என தன்னையே திட்டிக்கொண்டாள்.

மலர் திருமணத்திற்கு பின் தன் தோழிகள் யாரோடும் தொடர்பில் இல்லை. அதை வேண்டுமென்றே தான் துண்டித்துக்கொண்டாள். நேத்ராவும்வலிய சென்று பேச வேண்டாம். அவள் நிம்மதியாக இருக்கட்டும் என விட்டுவிட்டாள்.

ஆனால் அனய்யும் அதை போல இருக்கமுடியுமா?

கடவும்இன்னாருக்கு இன்னார் என்று படிக்கும் பொழுதே அனய்யின் பெயருக்கு நேராகவனமலரின் பெயரை எழுதி இருக்கஅதை மனிதர்கள் நினைத்தாள் மாற்றிவிடமுடியுமா?

மீண்டும் அவளின் வாழ்வில் அனய்யை பிணைக்கவிதி தன்னுடையவேலையை மிக சரியாக செய்தது. அது அனய்யே எதிர்பாராதது தான்.

அதிகாலைவந்த செய்தியை நம்பமுடியாமல் தன் காரில் கிளம்பி திருவாரூர் சென்றுகொண்டிருந்தான் அனய்.

ஆம், சரவணன் இறந்துவிட்ட செய்தி அனய்யை வந்தடைந்தது.

மலரின் வாழ்க்கை இப்படியாகும் என கனவிலும் எதிர்பாராதது.அவன் நினைத்திருந்தால் எப்படிவேண்டுமென்றாலும் மலரை தன்னுடைய மனைவியாக்கியிருக்கலாம் அவளின் விருப்பம் இல்லைஎன்றாலும்.

ஆனால்அதை அவன் விரும்பவில்லை. இன்றுஅவளின் நிலையை எண்ணி அத்தனை வருந்தினான்.அப்பொழுது கூட மலரின் வாழ்க்கைக்குள் தான் நுழைய எந்த எண்ணமும் இல்லை.

சரவணனின் இறுதிசடங்கில் யாரோ ஒருவனை போல கூட்டத்தில் ஒருவனாக நின்றுவிட்டுகிளம்பி வந்துவிட்டான். அவனால்மலரை அந்த நிலையில் பார்க்கவே முடியவில்லை.

மீறி நின்றால் எங்கே தன்னை காட்டிக்கொள்ள நேர்ந்துவிடுமோ? தன்னை இப்படி ஒரு சூழ்நிலையில் பார்த்தால் அவளுக்கு எப்படி தோன்றுமோ என அஞ்சியே அங்கிருந்து கிளம்பிவிட்டான்.

அதிலும் ஐந்துமாத கர்ப்பிணியாக அவளின் கோலம்மனதை பிசைந்தது. ஒரு பருத்தி புடவையில் உடை கசங்கி தலை முடிகலைந்து அழுது ஓய்ந்த விழிகளோடு நிராதரவான தோற்றம்அவனின் உயிரை வெட்டி சாய்த்தது.

ஓவென கதற துடித்த மனதை அடக்கிக்கொண்டு கசிந்த விழிகளோடு புறப்பட்டுவிட்டான் அனய்.இனி அவளின் எதிர்காலம் தான் என்ன? என்று யோசித்தவன் தனக்கு சொந்தமாக்கிக்கொள்ள வெறும் என்று நினைக்கவும் இல்லை.

ஆனால்அடுத்தஒன்றரை மாதத்திலேயே அவளிடமே அதை சொல்லு சூழ்நிலைக்கு சென்றான் அனய்.

——————————————————————

திருமணம் முடிந்ததிலிருந்து சிறுபிள்ளை போல தன்னை பாவிக்கும் சரவணனிடம் எந்த குறையும் சொல்லமுடியாத அளவிற்கு தன்னுடைய மன ரணங்களை காட்டிக்கொள்ளாமல் இயல்பாக பழகஆரம்பித்தாள்வனமலர்.

ஒருதம்பதிகளுக்குள் வேண்டிய எந்த நெருக்கமும் ஏற்படாமல் தன்னை சங்கடத்திற்கு ஆளாக்காமல் சரவணன்நடமாடஅதில் இன்னமும் அவனின் மேல் அன்பு வைத்தாள் அவள்.

எந்தவிதமான எதிர்பார்ப்பும் இன்றி பழகும் அவனுக்கு தான் எந்த விதத்தில் நன்றி செலுத்த போகிறோம் என்று தெரியாமல்தவித்தவள்அனய்உண்டாக்கிய வலியை முற்றிலும் மறந்துதான் போனாள்.

ஒரு வழியாக தன் மனதை தேற்றி அவனோடுவாழும் முடிவிற்கும் வந்துவிட்டாள்.ஆனால் அதற்குள் அவள் இழந்தது தான் அதிகம்.

ஆம், தந்தையும் தாயையும் ஒரே நாளில் பறிகொடுத்தாள் அவள்.திருமணமாகிநான்கேமாதத்தில் தந்தை உடல்நிலையின்றி இறந்துவிட அதற்கு சென்றவளை ஆனந்தி திரும்பியும் பார்க்கவில்லை.

ஏற்கனவே ஊர்காரர்கள் மகளின் மீதான அவரின்கோபத்தை வற்றவிடவில்லை.

அவருக்கு அத்தனை ஆத்திரம். அவளால் தான் தன் கணவன் உடல்நிலை குன்றி மனநிம்மதி இன்றி இறந்துவிட்டார் என்று நம்பியவர்துக்கத்திற்கு வந்த மகளை தன் அருகில் கூட நெருங்கவிடவில்லை.

அப்படி அழுது கரைந்தவர் கணவரை இடுகாட்டிற்கு எடுத்து சென்றுதகனம் செய்து வரும் பொழுது ஆனந்தியும் தனது உயிரை விட்டிருந்தார்.

ஊரார் மொத்தமும் வனமலரைதான் சாடியது.யாரிடமும் எந்த பதிலும் பேசாமல் திக்ப்ரம்மை பிடித்தவளை போல இருந்தவளைசரவணனுக்கு பார்க்கவே பொறுக்கவில்லை.மறுநாளே விசேஷம் வைத்து அவளை அழைத்துக்கொண்டு உடனேகிளம்பிவிட்டான்.

இயற்கையிலேயே நல்ல குணம் கொண்டவன் தான் சரவணன். மலர் மீது தீராத அன்பும், பாசம் கூட.காதல் உள்ளதா என கேட்டால் சத்தியமாக இல்லை என்றுதான் சொல்லுவான்.

அழுதுஅழுது கரைந்தவளை தாயைப்போல் மடிதாங்கியவன்அவளை தேற்றவே படாதபாடு பட்டான். ஆனாலும் மிக பொறுமையாகவே அவளை கையாண்டான். மலரின்கஷ்டங்களை எண்ணியே தள்ளியிருப்பதை போல் தங்களுடைய தாம்பத்திய வாழ்க்கையை ஆரம்பிக்காமலே மலருக்கே அந்தநினைப்பு வராத அளவிற்கு மிக சாதுர்யமாக நடந்துகொண்டான்.

குற்றவுணர்ச்சியில் இருந்தவனுக்கு அனய்யின் பேச்சு உதாசீனம் செய்வதை போல் இருக்க அதனால் உண்டான கோபத்தில் தான் மலரை கைபிடித்தது. ஆனால் அதற்கு பின் எத்தனையோ நாட்கள் அவன் வருந்தியதும் உண்டு. நிம்மதியடைந்ததும் உண்டு.

இருவேறு மனநிலையில் தான் அன்றுவரை நாட்களை கடத்திக்கொண்டிருந்தான். ஆனால் எத்தனை நாள் அவன் வேதனையில் இருக்கிறாள் என்று சொல்லியே நாட்களை நகர்த்துவது.

அது முடிவுக்கு வரும்நாளும் தானாகவே அமைந்தது. ஊர் திருவிழாவிற்கென வந்தவர்களை சொந்தபந்தங்கள் அனைத்தும் பிடித்துக்கொண்டனர்.

திருமணம் முடிந்து ஒன்றரை வருடங்கள் கடந்துவிட்ட பின்னரும் இன்னமும் நல்லசெய்தி எதுவும் சொல்லவில்லை என அக்கறையாக சிலரும், அனய்பற்றி கூறி அப்படி இருக்கும் பெண்ணை எப்படி ஏற்றுகொள்வான்இவன் என்றும் சிலரும் பேசிவிட நிலைகுலைந்து போனதென்னவோ மலர் தான்.

உண்மையில் சரவணன் அந்த நினைப்போடு தான் தன்னை நெருங்கவில்லையோ என மனைவியாக யோசிக்க ஆரம்பித்தாள்.ஊரிலிருந்து வந்த பின்னும்அவன் அப்படியே நடந்துகொள்ள அதைகேட்கவும் செய்துவிட்டாள்.

“மாமா, நிஜமாவே என்னை உங்களுக்கு பிடிச்சுதான் கட்டிக்கிட்டீங்களா? இல்லை…”என்று கண்கள் கலங்க கேட்கும் முன்னரே செத்துக்கொண்டிருந்தாள்.

எங்கே அவன் ஆமாம் என சொல்லிவிட்டால்? அப்படி பயந்து நின்றாள் அவனின் முகம் பார்த்து. அவளின்கலங்கிய தோற்றம் இதற்கு மேல் உண்மையை மறைக்கமுடியாமல் சொல்லிவிடவும் சொல்லமுடியாமலும் தவித்தான்.

அதன் பின் அவளை நெருங்க முயன்று நெற்றி முத்தத்தை தவிர முன்னேற முடியாமல் விலகுபவனை என்னவென்று நினைக்க என மலர் தான் பொறுமையாக இருந்தாள். ஏனோ அதுவே ஒருவித நிம்மதியாகவும் இருந்தது அவளுக்கு.

ஒருவேளை சிறுவயதிலிருந்து உடன் வளர்ந்ததால் ஏற்றுக்கொள்ள தயக்கமோ என தனக்குதானே எண்ணிக்கொண்டவள் அவனே மனம் மாறட்டும் என அமைதிகாத்தாள்.

வீட்டிலேயே இருப்பதனால் தேவையில்லாமல் எதையாவது நினைத்து குழம்புவாள் என நினைத்த சரவணன் அவளை அருகில் இருந்த தொடக்கப்பள்ளியில்வேலைக்கு அனுப்பி வைத்தான். அவளுக்கும் ஒரு மாற்றமாக இருக்கும் என்று.

ஆனால்மூன்றாம் வருடமும் தொடங்கிவிட ஊருக்கு செல்லவே அச்சமாக இருந்தது வனமலருக்கு. அதனால் அங்கு செல்வதையே குறைத்துக்கொள்ள வைத்தியநாதனும் காமாட்சியுமே வந்து சென்றனர்.

சரவணனின் அன்பும் பாசமும் மலரை எதை பற்றியும் சிந்திக்கவிடாமல் செய்ய சரவணனின் பெற்றோர் மூலம் மீண்டும் நெருக்கடி ஏற்பட்டது.

காமாட்சி சரவணனிடம் அவர்களுக்குள்எதுவும் பிரச்சனையா?ஏன் இவ்வளவு தாமதம் குழந்தை உண்டாக? எனகேட்டுமருத்துவரை சென்று பார்க்குமாறு கூறி செல்ல வேறு வழியின்றி ஒரு முடிவிற்கே வந்துவிட்டான்.

அதுதான் அவனின் சுயநலத்தின் உச்சம்.

அனைத்திற்கும் ஏற்பாடு செய்துவிட்டு அன்று வீடு திரும்பியவனின் முகமே பொலிவிழந்து காணப்பட்டது. லேசாக அவனின் முகம் வருந்தினாலே பொறுக்காதவள் வனமலர். இதை தாங்கிக்கொள்வாளா?

“எதுவும் பிரச்சனையா மாமா?…” என்று காபி கொடுத்துவிட்டு கேட்க,

“மலர் எனக்காக ஒன்னு செய்வியா? எனக்கு வேற வழி தெரியலைடா. அதான்…”

“மாமா உங்களுக்காக என்னோட உயிரை கூட குடுப்பேன். என்னவேணாலும் கேளுங்க.உங்களுக்கு செய்யாமலா?…” என்றுஅவனின் வருத்தத்தை போக்கிவிடும் வேகத்தில் கேட்க அவனின் நெஞ்சறுத்தது அவளின்வெள்ளந்தியானகுணமும், தன் மீதான அப்பழுக்கற்ற அன்பும் பாசமும்.

ஆனால்வேறு வழியில்லையே தனக்கு என தன்னை சமாளித்துக்கொண்டு,

“நாம ஏன் டெஸ்ட்ட்யூப் பேபி பெத்துக்க கூடாது?…” என்றதும்அதிர்ச்சியில்கையிலிருந்த காபி கப்பை நழுவவிட்டாள் வனமலர்.

“மாமா…”குரல் நடுங்க அவனை பார்க்கஅவளின் பாதத்தின் கீழ் பூமியே நழுவியது.

“எனக்கு வேற வழி தெரியலை மலர். என்னாலஉன்னை அப்படி நினைக்க முடியலை. ஆனா நிச்சயம் என்னோட மனசு மாறும். உனக்காக கொஞ்சம் கொஞ்சமா என்னை நான் மாத்திப்பேன். ஆனா அதுக்குள்ளே நம்ம வீட்லயும் ஊர்லயும் பேசியே சாகடிச்சுடுவாங்க…”

தலையை பிடித்துக்கொண்டு அவன் சொல்ல இன்னமும் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் அவனையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தாள் அவள்.

“ப்ளீஸ் மலர் மாட்டேன்னு மட்டும் சொல்லிடாதடா. மாமாக்காக. சரின்னு சொல்லுடா…” என்றவன் கெஞ்சி போராடி அவளின் சம்மதத்தையும் ஒருவழியாக பெற்றுக்கொண்டான்.

அடுத்த இரண்டு நாளில் அதற்கான ஏற்பாடுகள் சத்தமின்றி நடைபெற்றுமலரைஅவளின் உடல்நிலையை பரிசோதித்துஅவளுக்குள்உயிரை செலுத்தினார்கள்.

சரவணனிற்காகஅரைமனதோடு சம்மதித்தவளின் மணிவயிற்றில் சிசுவளர ஆரம்பித்ததுமே ஒரு தாயாக அதன் வரவை முழுமனதோடு ரசிக்க ஆரம்பித்தாள். ஒவ்வொரு நாளும் அவ்வுணர்வைஅனுபவித்து வாழ்ந்தாள்.

வீட்டில் அவளை கொண்டாடி தீர்த்தனர். வைத்தியநாதன் ஊருக்கே இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை அனைவரிடமும் பகிர்ந்து ஆர்ப்பரித்தனர்.

மாதங்கள் கடக்க நித்தமும் மலர் குழந்தையை பற்றி அவனிடம்ஆணா?, பெண்ணா?, என கேட்டும் அதற்கு என்ன பேர்? வைக்கலாம் என்றும் தொனதொனத்தும் அவனைஒருவழி ஆக்கிவிடுவாள்.

அதை அனைத்தையும் தாண்டி குழந்தை அவனை போன்று இருக்குமா? தன்னை போன்றா? என்றுகேட்டு அதற்கு அவளே பதில் கூறவும் செய்வாள். அதில் அவனின் முகம் தான் வெளிறிப்போகும்.

இந்த குழந்தையை உண்டான பின்பு திருமணத்திற்குமுன் இருந்த வனமலர் திரும்பிவிட்டதாக நினைத்தவன் அவளின் இந்த மகிழ்ச்சியை என்றைக்கும் வாடவிடவே கூடாது என்று முடிவெடுத்தான்.

அதற்கு அவளுக்கு உண்மை எந்த சூழ்நிலையிலும் தெரிந்துவிடவே கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தான்.அந்த யோசனையிலேயே இருந்தவனுக்கு தன்னுடைய உடல்நிலை பற்றி தெரியாமலேயே போனதுதான் கொடுமை.

மலரின் சந்தோஷம் முழுதாய் ஐந்து மாதங்கள் கூட நீட்டிக்கவில்லை. சரவணின் மரணம் அவளை அதிர்ச்சியின் உச்சத்திற்கே அழைத்துச்சென்றது.

ஆம்,இதயம் பலவீனமாய் இருந்தவனுக்கு ஓரிரவில்உறக்கத்திலேயேஉயிர்பறவை பறந்திருந்தது.மாரடைப்பு.

ஞாயிறுவிடியலில் தனக்கு முன்னே எழுந்துகொள்ளும் கணவன் இன்னமும் எழாமல் இருக்கஉறங்கட்டும் என்று அவளும் காலை கடன்கள் அனைத்தையும் முடித்து குளித்து உணவு தயாரித்து என அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டுவந்தும் அவன் எழாமல் இருக்க உடல்நிலை சரியில்லையோ என பயந்து பார்த்தாள்.

அவன் எழாமலே இருக்கவும் தனக்கு உதவிக்காக வந்திருந்த காமாட்சியை அழைக்க அவருக்கு வந்து பார்த்ததுமே புரிந்துவிட்டிருந்தது. உடனடியாகசொந்த ஊருக்கு அவனின் உடலை எடுத்து செல்ல மலரின் நிலையை சொல்லவும் வேண்டுமா?

அடுத்தடுத்தாகதான் அன்புகொண்டவர்கள் அனைவரும் தன்னை விட்டு ஒவ்வொருவராக செல்ல உருகுலைந்துதான் போனாள்.

சரவணனின் அடக்கம் முடிந்து முழுதாய்ஒரு மாதங்கள் கடந்துவிட்டிருந்தது.அதற்குள்ஊரார்அவர்கள் குடும்பத்தில் நடந்த தொடர் மரணங்கள் குறித்தும் மலரின் ராசியையும், பிறக்கவிருக்கும் குழந்தையையும் சம்பந்தப்படுத்தி வாய்க்கு வந்தபடி பேச வெறுத்துபோனாள் மலர்.

ஏற்கனவே வாழும் ஆசையற்று இருந்தவளுக்குஅவர்களின் பேச்சு விரக்தியின் எல்லையில் கொண்டு நிறுத்தியது.

அதில் பயந்துபோன வைத்தியநாதன் இனி இங்கிருந்தால்வனமலரை காக்க முடியாது தவறாக ஏதும் முடிவுக்கு வந்துவிடுவாளோ என நினைத்து வேலூருக்கே வந்துவிட தொடர்ந்து அவளை வேலைக்கு அனுப்ப முடிவு செய்தனர்.

சோதனைகள் முடியாவண்ணம் அடுத்த செக்கப்பிற்கு செல்லும் நாளும்வந்தது.மிகுந்த பேரிடியை தாங்கிக்கொள்ளவேண்டிய சூழ்நிலைக்கு ஆளானார் வைத்தியநாதன்.

மலரை அழைத்துக்கொண்டு செக்கப்பிற்குசெல்ல எப்படி இந்த குழந்தையை தனியாக வளர்த்து ஆளாகக் போகிறோம் என்று எண்ணி அங்கேயே மயங்கி விழுந்தாள் வனமலர்.

அவள் மிக பலகீனமாக இருப்பதாக சொல்லி அவளை ஓய்வெடுக்க வைக்க மலர் கண்விழிக்கட்டும் என வெளியே காத்திருக்க ஆரம்பித்தவர்மெதுவாக நடக்க அதே நேரம் அவரின் காதுகளுக்கு மலரின்குழந்தை சம்பந்தமாக யாரோ பேசுவதை கேட்க நேரவேரறுந்த மரமாகி நின்றார்.

“அம்மாடி…” என அந்த பெண்ணை அழைக்க,

“சொல்லுங்கைய்யா…” என்றுவந்துபயத்தோடுநின்றார் அந்த செவிலியபெண். அதுவரைகூடஇருந்தபெண்ணோ நகர்ந்துவிட,

“நீங்க சொன்னது உண்மையாம்மா?…” குரல் நடுங்க கேட்டவரை பார்த்து பயந்தவர்,“இல்லைங்க….இல்லைங்க….” என்று தடுமாற,

“இப்ப நீங்க சொல்லலைனா நடக்குறதே வேற.நீங்க இதுவரை பேசுன வனமலர் என்னோட மருமகப்பொண்ணு.உண்மையை சொல்லும்மா…”

கோபத்தில் அவர் இரைய எங்கே கூட்டம் கூடிவிடுமோ என அஞ்சிய அப்பெண்,

“ஆமாங்கையா, உண்மை தான்.இப்ப உள்ள போச்சே அந்த பொண்ணோட வீட்டுக்காரர்சராசரி குடும்ப வாழ்க்கையை வாழ முடியாது.அவருக்கு குறை இருக்கு. ஆனாலும் உங்க மருமகபெரிய மனசோட தாம்பத்திய வாழ்க்கை வேண்டாம்.இந்த மாதிரி குழந்தை பெத்துக்கலாம்னு சொல்லி இங்க வந்திருக்கு…”

“இன்னும் நீ முழுசா சொல்லலை. சொல்லு…” என்று மிரட்ட,

“ஆனா உங்க வீட்டு பொண்ணுக்கு முழு விஷயமும் தெரியாதுங்கய்யா. எங்க டாக்டருமே உங்க பொண்ணு முழுசா சம்மதிச்சுதான் வந்திருக்குன்னு நினைச்சிட்டு இருக்காங்க.உங்க பையன் அவங்களைஏமாத்திட்டாருங்க…”

“அந்த பொண்ணு நினைச்சிட்டு இருக்கு குழந்தை உங்க பையனோடதுன்னு. ஆனா அவர் வேற ஒருத்தர் தானமா கொடுத்ததை தான்…” என்று சொல்ல அத்தோடு அதை கேட்க முடியாமல் நெஞ்சை பிடித்துக்கொண்டு அவர் சரிய அவரைதாங்கிக்கொண்டான்அனய்.

“நர்ஸ் சீக்கிரம் ஸ்ட்றேக்ச்சர் கொண்டுவாங்க…” என்றவன் தாமதியாமல் தன் கைகளில் அவரை அள்ளிக்கொள்ள நெஞ்சைபிடித்துக்கொண்டு,

“எ…எ…என்னனைம்ம்மன்ன்னிச்ச்சுடுப்பா…” என்றுஅவனைகண்டுகொண்டுசொல்லமனது கொதித்துக்கொண்டிருந்தாலும் கண் முன் அவர் படும் துயரை பார்க்க முடியாமல் உதவி செய்தான்.அவரை உள்ளே அனுப்பிவிட்டு வெளியில் வந்தவன்,

“நர்ஸ், இவரோட வந்த பொண்ணுக்கிட்ட இவருக்கு இதுமாதிரி ஆகிடுச்சுன்னு எதுவும் சொல்லிட வேண்டாம். சும்மாஅவனக்ளுக்கு வேண்டிய செக்கப்பை நீங்க முடிங்க…” என சொல்லி அனுப்பி வைத்தியநாதனுக்கு என்னவாகிற்று என பார்க்க அவரை சோதித்த பின் டாக்டர் வெளியில் வந்தார்.

“ஏதோ அதிர்ச்சியில் தான் நெஞ்சுவலி வந்திருக்கு.இன்னும் கொஞ்ச நேரத்துல கண்முழிச்சிடுவார்…” என்று மேலும் சில விவரங்கள் சொல்லி நகர்ந்துவிட நிம்மதியானவனுக்குநர்ஸ் சொன்ன விஷயங்கள் ஞாபகத்திற்கு வர அவனின் ரத்தம் கொதித்தது.

“டேய் நீ மட்டும் இப்ப உயிரோட இருந்திருந்தா எனக்கிருக்கிற வெறிக்கு உன்னை கண்டம் துண்டமா வகுந்திருப்பேண்டா…”நினைத்து குமுறிக்கொண்டிருந்தான்.

அத்தனைகோபமும் ஆத்திரமும் ஆவேசமும் அவனை கட்டுகடங்காமல் பொங்கவைத்தது.பொதுவெளியில் தன்னுடைய கோபத்தை காட்டமுடியாமல் வைத்தியநாதன் இருந்த அறைக்குள் வரஅவரை பார்த்து இன்னமும் கோபம்கொண்டான்.

ஏனோ மலரை பார்க்கவேண்டும் போலிருக்க அவளை தேடி வேலூருக்கு வந்தவன் அவளின் பின்னாலேயே ஹாஸ்பிடலும் வந்திருந்தான்.

என்ன செய்ய ஏது செய்ய என புரியாமல்அரைமணி நேரம் குறுக்கும் நெடுக்குமாய் நடந்தவன் இறுதியாகநேத்ராவிற்கு அழைத்தவன் அனைத்தையும் சொல்லி புலம்ப அங்கு கேட்டுக்கொண்டிருந்தவளுக்கோ அழுகை கட்டுகடங்காமல் பெருகியது.

ஆனால் உணர்சிவேகத்தில் இருக்கும் தன் அண்ணனை சமாதானம் செய்வதே இப்பொழுது உசிதமாக பட,

“அண்ணா, ரிலாக்ஸ். முதல்ல நீ அமைதியா இரு…” என சொல்ல,

“என்னால முடியலை நேத்ரா. இதுக்காகவா அவளை விட்டுகொடுத்தேன். எத்தனை பெரிய துரோகம் செஞ்சிருக்கான் அவன். பொருக்கி நாய். அவனோட சுயநலத்துக்காக…” ஆண்மகன் அவன் கதறிவிட மறுபுறம் செய்வதறியாது தவித்தாள் தங்கை அவள்.

“அண்ணா அண்ணா…” என நேத்ரா அழைத்தது எதுவும் அவன் காதுகளில் எட்டவே இல்லை.

“நீ வை நேத்ரா. இதுக்கு நான் ஒரு முடிவு செஞ்சுட்டு தான் வருவேன்…” என்றவன் மொபைலை அணைத்துவிட்டு வைத்தியநாதனை பார்க்க அவரும் விழித்து அவனைத்தான் பார்த்திருந்தார்.

“இப்ப உங்களுக்கு சந்தோஷமா? இதுக்குத்தான் அத்தனை அவசரமா அவளுக்கு கல்யாணம் செஞ்சு வச்சீங்களா?…” என கோபமாய் கேட்க,

“என் பையனுக்கு…” என்றவர்,

“அவனுக்குஎப்படி இப்படி ஒரு புத்தி வந்துச்சுன்னே எனக்கு தெரியலைதம்பி.முன்னாடியேதெரிஞ்சிருந்தா நான் நிச்சயம் மலரோட வாழ்க்கையை பாழாக்கிருக்க மாட்டேன். வேற நல்ல பையனை பார்த்து…” அனய்யின் கூர்மையான பார்வையில் பேச்சை நிறுத்த,

“அப்ப கூட வேற ஒரு பையனை பார்ப்பீங்க. ஆனா அவளை உயிரா விரும்பறவனுக்கு குடுக்க மாட்டீங்க. அப்படித்தானே? அப்படி என்னங்க உங்களுக்கு கவுரவமும், ஊர் மரியாதையும் பெருசா போச்சு? இன்னைக்கு அந்த ஊர் என்ன செஞ்சுச்சு? உங்க குடும்பத்தை அங்க நிம்மதியா வாழ வச்சுச்சா?…”

அவனின்கேள்வி ஒவ்வொன்றும் அவரைசாட்டையாய் சுழற்றி அடிக்ககண்களை வலியோடு மூடிக்கொண்டவர் ஒரு முடிவோடு திறந்தார்.

“சரிங்க தம்பி. இப்ப நீங்க எங்க பொண்ணை இந்த நிலையிலையும் கட்டிப்பீங்களா?ஏனாஇப்பஅவ ஒரு குழந்தைக்கு தாயாக போறா. என்ன சொல்றீங்க?. அந்த குழந்தையை…” அவர் கேட்டதும் சற்றும் யோசிக்காமல்,

“சோ வாட்?எப்பவுமே எனக்கு மலர் மட்டும் தான். இந்த சில வருஷங்கள் நடந்த விஷயங்கள்ள அவ மேல எந்தவிதமான் தவறும் இல்லை.நான் ஏன் அவளை மறுக்கனும்? என்னை என்ன உங்க புள்ளை மாதிரி சுயநலவாதின்னு நினைச்சீங்களா?…”

அவன் முதலிலேயே முடிவிற்கு வந்துவிட்டான். தகுதியே இல்லாத ஒருவனுக்காக தன்னவள் ஏன் சிலுவை சுமக்கவேண்டும் என்று. இனி மலரே விரும்பவில்லை என்றாலும் விலகசொல்லி மிரட்டினாலும் அவளுக்கு நான் தான். கணவனாக இல்லைஎன்றாலும் ஒரு பாதுகாவலனாக.

“அந்த குழந்தை?அது என்ன பாவம் செஞ்சுச்சு?அது பிறக்கிறப்போ என் பொண்ணுன்ற அடையாளத்தோட தான் பிறக்கும்.அதை நான் முடிவு பண்ணி ரொம்ப நேரமா ஆச்சு…”என்றவன்,

“உங்க பையன் மட்டும் இந்நேரம் உயிரோட இருந்து இந்த விஷயம் எனக்கு தெரிஞ்சிருந்தா அவனுக்கு எமன் நான் தான். என் கையாலையே அவனை கொன்னு போட்ருப்பேன் அங்கிள்…” என்றுஆக்ரோஷமாய் கத்தி சொல்ல,

“அப்பான்னு சொல்லுப்பா…” என்றுபரிதாபமாய்அவர்கை நீட்டி கேட்க அத உருகியேவிட்டான் அனய்.

“அப்பா…” என அவரின் கை பிடித்துக்கொண்டவன்,“இனிமே நானும் உங்களுக்கு அனய் இல்லை. ஆதி, ஆதித்யவர்மன்.புரிஞ்சதா?…” என்றுகூறமெலிதாய் புன்னகைத்தவரின் மனதில் சரவணன் ஏற்படுத்திவிட்டு போன ரணம் தீயாய் எரிந்துகொண்டே இருந்தது.

———————————————–

பழைய நினைவுகளின் தாக்கத்தில் வந்த வேலையை மறந்துவிட்டிருந்த அனய்யை அவனின்பிஏசெல்வா தான் தட்டி அழைத்தான்.அவனின் கவனமின்மையை கவனித்த ரிஷி,

“அனய்ஆர் யூ ஆல்ரைட்?…” என கேட்க,

“நத்திங் நத்திங்…” என சமாளித்தவன்,“நான் வீட்டுக்கு போகட்டுமா?…” என்றான்.

அவனின் மனம் ஏனோ பழையநினைவுகளின் சுழலிலிருந்து வெளிவரவே இல்லை. உடனே மலரை பார்க்கவேண்டும் போல இருக்க கிளம்பிவிட துடித்தான் அனய்.

அவனை ஒரு மென்னகையோடு பார்த்திருந்த ரிஷி சரி என்பதை போல தலையசைக்க அதில் திருப்தி கொள்ளாத அனய்யோ,

“வாயை திறந்து சொல்லுங்களேன்…” என,

“ஏன் நான் என்ன நினைக்க போறேன்? அதான் தலையாட்டிட்டேனே.உன் தங்கச்சியை மேரேஜ் பண்ணினதில இருந்து நான் உங்க குடும்பத்துக்கு செய்யற ஒரே வேலை தலையாட்டறது தான். இதிலும் நீ சந்தேகப்பட்டா எப்படி? இரு நேத்ராவை விட்டு சொல்ல சொல்றேன்…”

ரிஷி தன்னை கேலி செய்கிறான் என்று புரிந்த போதும் வேலை இருக்கும்பட்சத்தில் இப்படி கிளம்புகிறோம் என்பது அவனுக்கு சங்கடமாகவே இருந்தது.

“வேலை நாளைக்கு கூட பார்த்துக்கலாம். யூ நோ, எனக்குமே டயர்டா தான் இருக்கு. கிளம்பு. நானும் தூங்கனும்…” என சொல்லி அவனை புரிந்தவனாகஉடனேஅனுப்ப அனய்யும் விட்டால் போதும் என கிளம்பிவிட்டான்.

அவன் கிளம்பியதும் தன்னறைக்கு வந்தவன் நேத்ராவிற்கு அழைத்தான்.

“தக்காளி, க்விக்காபிக் அப் பண்ணு…” ரிங் போகும் முன்னே அவளின் நாமத்தை முணங்க ஆரம்பித்தான் ரிஷி.

புன்னகை ஜீவிக்கும்…