Advertisement

அத்தியாயம் 13


விமான நிலையத்தில் இறங்கியதும், தங்கள் உடமைகளைஎடுத்துக் கொண்டு நடக்கும் போது, நியதி நிருபனின்கைபிடித்து நிறுத்தினாள்.


அவன் எதற்கோ என நினைத்து பார்க்க, “சாரி, நான்அப்படிப் பேசி இருக்கக் கூடாது.” என்றாள்.


அப்போதைக்கு அந்தப் பேச்சு பிடிக்காதது போல…இப்பஇங்க நிறைய வேலை இருக்கு அதைப் பார்க்கலாமா.”என்றான்.


விமான நிலையத்திற்குள் சென்று, அங்கு முடிக்க வேண்டியவேலைகள் முடித்து, இருவரும் விமானத்திற்காகக்காத்திருந்த போது, ஆளுக்கொரு பக்கம் உட்கார்ந்துஇருந்தனர். அருகருகே உட்கார இருக்கைகளும் இல்லை.


விமானதில் ஏறிய பிறகும், நிருபன் நியதியோடு பேச ஆர்வம்காட்டவில்லை. அவன் உடனே தூக்கத்தைத் தழுவ, நியதியும் சிறிது நேரத்தில் உறங்கி விட்டாள்.


விழித்து இருந்த நேரத்திலும் நிருபன் ஆங்கிலப்படங்களைப் பார்த்துக் கொண்டு வர… நியதி அமைதியாகஉட்கார்ந்து இருந்தாள். அவர்களோடு இன்னொருவரும்உட்கார்ந்து இருந்ததும் காரணம்.


ஒரு நாள் முழுக்கப் பயணத்தில் சென்றுவிட, ஞாயிறுநள்ளிரவில் வீட்டை அடைந்தனர். இருவரும் நியதி தங்கிஇருந்த வீட்டிற்குத் தான் சென்றனர்.


நீ இங்க குளி. நான் அங்க போய்க் குளிச்சிட்டு வரேன்.”என நிருபன் சொல்ல,


ஒன்னும் வேண்டாம், நீங்க முதல்ல குளிங்க, எனக்குஒன்னும் அவசரம் இல்லை.” என்றாள்.


நான் அதுக்காகச் சொல்லலை… இப்ப பெட்டியை பிரிச்சுடிரஸ் எல்லாம் வெளிய எடுக்கணும்.” நிருபன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, நியதி அவனது பெட்டியை திறந்துஉடைகளை எடுத்துக் கொடுக்க, அவளை முறைத்தாலும்உடைகளை வாங்கிக் கொண்டு குளிக்கச் சென்றான்.


அவன் வருவதற்குள் படுக்கை அறையைச் சுத்தம் செய்து, படுக்கை விரிப்புகளை மாற்றி வைத்தவள், நிருபன்வெளியில் வந்ததும், தான் குளிக்கச் சென்றாள்.


அவள் வரும்போது நிருபன் அந்தப் பக்கம் திரும்பிப் படுத்துஇருக்க, அவன் உறங்கி விட்டான் என நினைத்து, நியதியும்படுத்துக் கொண்டாள்.


காலையில் சீக்கிரமே எழுந்த நிருபன், பல் துலக்கி முகம்கழுவிக்கொண்டு வர…. அந்தச் சத்தத்தில் நியதியும்எழுந்திருந்தாள்.


நிருபன் முன்பு அவன் இருந்த வீட்டிற்குச் சென்றுதன்னுடைய பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்துக்கொண்டு வர, நியதியும் சென்று அவனுக்கு உதவினாள்.


இருவரும் சேர்ந்து நியதியின் வீட்டிலேயே இருந்துகொள்ளலாம் என முடிவு செய்து, மற்றொரு வீட்டை காலிசெய்வதாக ஊரில் இருந்த போதே தகவல் கொடுத்துஇருந்தனர்.


நிருபனின் உடைமைகள் கொஞ்சம் தான். வேலைசீக்கிரமே முடிந்து விட, நிருபன் குளித்து விட்டு அலுவலகம்செல்ல கிளம்பி வந்தான்.


நான் ஜேன்னுக்குப் போன் செஞ்சிருக்கேன், இப்ப சாப்பாடுவரும் சாப்பிட்டு போங்க.” நியதி சொல்ல,


இல்லை…. நான் ஆபீஸ்ல சாப்பிடுகிறேன்.” எனச்சொல்லிவிட்டு நிருபன் அலுவலகத்திற்குச்சென்றுவிட்டான்.


அப்போது கூட நிருபன் கோபமாக இருக்கிறான் என அவள்நினைக்கவில்லை. அவள் கேட்டதற்குப் பதில்சொல்லத்தான் செய்தான். ஆனால் அவனாகப் பேசவில்லை.ஊரில் இருந்து வந்த களைப்பு, மற்றும் அலுவலகவேலையால் அப்படி இருக்கிறான் என நினைத்துக்கொண்டாள்.


நியதி புதன் கிழமையில் இருந்து தான் அலுவலகம்வருவதாகச் சொல்லி இருந்தாள். ஜேன் கொண்டு வந்தஉணவை உண்டு விட்டு வீட்டை சுத்தம் செய்யஆரம்பித்தாள்.


காலையில் நிருபனுக்கு வாங்கிய உணவு இருக்க, அதையேமதியம் உண்டு விட்டு, கடைக்குச் சென்று அந்தவாரத்திற்குத் தேவையான மளிகை மற்றும் தேவையானஅளவு பால் தயிர் எல்லாம் வாங்கிக் கொண்டு வந்தவள், இரவுக்கு அவளே சமைத்தும் வைத்தாள்.


எட்டு மணி ஆகியும் நிருபன் வராததால் நியதி அவனின்கைபேசிக்கு அழைத்தாள்.


எப்ப வருவீங்க?”


நிறைய வேலை இருக்கு நியதி. நான் வர லேட் ஆகும். நீசாப்பிட்டு தூங்கு.”


சரி, ஆனா வீட்ல சமைச்சு இருக்கேன். நீங்க இங்க வந்துசாப்பிடுங்க.”


ம்ம்.. சரி.” என்றவன், அலுவலக வேலையில் கவனம்செலுத்தினான். உண்மையில் வேலை அதிகம் தான். இந்தவார வியாழன் அன்று அவனுடைய ப்ராஜக்ட் ரிலீஸ்இருக்கிறது.


நிருபன் பத்து மணிக் எல்லாம் வீட்டிற்கு வந்துவிட்டான்.ஆனால் அவன் வர தாமதமாகும் என நியதி ஒன்பதுமணிக்கே படுத்து உறங்கி இருந்தாள். அவளுக்கும் இன்றுமுழுவதும் வேலை அதிகம். அதனால் களைப்பில் உறங்கிஇருந்தாள்.


முகம் கைகால் கழுவ அறையில் இருந்த பாத்ரூம்சென்றவன், வெளியில் வந்து உறங்கும் மனைவியின்அழகை சிறிது நேரம் நின்று ரசித்தான். பசி வயிற்றைக்கிள்ள சாப்பிட சென்றான்.


ஹட்பாக்சில் சாதம் சூடாக இருக்க, மிளகு கோழியும், தக்காளி ரசமும் செய்து வைத்திருந்தாள். நன்றாகவயிற்றுக்குச் சாப்பிட்டவன், தனது மடிக்கணினி எடுத்துவந்து ஹாலில் உட்கார்ந்து வேலைப் பார்க்க ஆரம்பித்தான்.


ஒரு ஒரு மணி நேரம் வேலைப் பார்த்து விட்டு, அதற்கு மேல்விழித்து இருக்க முடியாமல், நியதியின் அருகே சென்றுபடுத்ததும் உறங்கி விட்டான்.


நியதி காலையில் சீக்கிரமே எழுந்து கொண்டாள். நேற்றுபோல இன்றும் சாப்பிடாமல் சென்று விடப் போகிறான் எனவேகமாகச் சமைக்க ஆரம்பித்தாள்.
நிருபன் எழுந்து கிளம்பி வருவதற்குள் காலை மதியம் இருவேலைக்கும் சமைத்து தயாராக வைத்து இருந்தாள்.


சாரி உனக்கு ஹெல் பண்ண முடியலை. இன்னும் ரெண்டுநாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ.” என்றான்.


ஹலோ, என்ன இன்னும் முன்னாடி இருந்த மாதிரியேநினைச்சிட்டு இருக்கீங்களா… நமக்கு இப்ப கல்யாணம்ஆகிடுச்சு. நியாபகம் இருக்கா…” நியதி அழகாகத் தலைசரித்துக் கேட்க,


எனக்கு நியாபகம் இருக்கு. உனக்கும் இருந்தா சரிதான்.”என்றவன், நிற்காமல் சென்று விட…


அவன் என்ன சொல்ல வருகிறான் என நியதிக்குபுரியவில்லை. அன்று இரவும் நியதி சமைத்து வைத்து விட்டு, மறுநாளில் இருந்து அலுவலகம் செல்ல வேண்டும்என்பதால்… சீக்கிரமே படுத்து உறங்கி விட்டாள்.


அன்றும் இரவு சாப்பிட பிறகு நீண்ட நேரம் வேலைப் பார்த்துவிட்டே நிருபன் உறங்கினான்.


மறுநாளில் இருந்து நியதியும் அலுவலகம் செல்லஆரம்பித்தாள். இருவரும் பேசிக்கொள்வது காலைநேரத்தில் தான்.


வியாழன் அன்று நிருபன் வீடு திரும்ப வெகு நேரம் ஆகும்என்பதால்… இரவு உணவு செய்ய வேண்டாம் எனச்சொல்லிவிட்டுச் சென்றான். அவனின் ப்ராஜக்ட் வேலைஅன்றோடு முடிந்தது.


மறுநாள் காலை அவன் தாமதமாக எழுந்து வர…நான்ஆபீஸ் கிளம்பனும் டைம் ஆகிடுச்சு.” என்றவள், அறைக்குள்சென்று கதவடைத்துக் கொண்டாள்.


வீடு முழுவதும் ஊதுபத்தியின் மனம். ஹாலின் மூலையில்இருக்கும் சிறு மேஜையில், விநாயகர் மற்றும் லட்சமிபடங்கள் இருக்க, அங்கே விளக்கேற்றி வைத்து இருந்தாள்.


சிறிது நேரத்தில் அலுவலகம் செல்ல கிளம்பி வந்தவள், புடவை அணிந்து இருந்தாள். அதற்குப் பொருத்தமானஅணிமணிகள் வேறு….வெகு அழகாக இருந்தாள்.


நிருபனுக்கு அவளிடமிருந்து பார்வையைத் திருப்புவதுசிரமமாகத்தான் இருந்தது. நியதி தன்னைப் பார்ப்பதுதெரிந்ததும், பார்வையை மாற்றிக் கொண்டான்.


இன்னைக்கு நாம கோவிலுக்குப் போகலாமா?” நியதிகேட்க,


இன்னைக்கா நாளைக்குப் போகலாமே….” என்றான்.


சரி என்றாலும் நியதியின் முகம் வாட…அதை பார்த்தவன், “இன்னைக்குப் போகணும்னா போகலாம்.” என்றான். அவள்ஒவ்வொன்றும் பார்த்து பார்த்துச் செய்ய, அவனால்கோபத்தைப் பிடித்து வைக்க முடியவில்லை.


சரி, அப்ப சாயங்காலம் நாலு மணிக்கு என்னோட ஆபீஸ்முன்னாடி இருக்கிற ஸ்டாபிங் வந்திடுங்க. நாம அங்கஇருந்தே கோவிலுக்குப் போயிட்டு வீட்டுக்கு வந்திடலாம்.”என நியதி ஆர்வமாகத் திட்டமிட்டவள், அவனிடம்சொல்லிக் கொண்டு அலுவலகம் சென்றாள்.


நிருபன் நிதானமாகக் கிளம்பி அலுவலகம் சென்றான்.அன்று அவனுக்கு எதுவும் பெரிய வேலை இல்லை. நியதிமதியம் ஒருமுறை அழைத்து நினைவுப்படுத்த, சொன்னதுபோல நான்கு மணிக்கு அவள் அலுவலகம் முன்பு இருந்தான்.


அங்கிருந்து ஒரு மணி நேர பயணத்தில் இருந்த பாலாஜிகோவிலுக்குச் சென்றனர். முழுவதும் சலவைக்கல்லால்பளபளத்தது கோவில்.


பிராத்தனை முடிந்து, பிரசாதம் வாங்கிக் கொண்டுஇருவரும் வெளியே வந்தனர். வெளியே இருந்ததோட்டத்தில், நிருபனின் கையைப் பிடித்துக்கொண்டுநியதி அவனின் தோள் சாய்ந்து, வருவோர் போவோரைவேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தாள்.


நிருபன் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான்.என்னஎன்னைப் புதுசா பார்க்கிற மாதிரி பார்க்கிறீங்க?”


முன்னாடி இருந்த நியதிக்கும் இப்ப இருக்கிற நியதிக்கும்எவ்வளவு வித்தியாசம் தெரியுமா?”


நீ என்ன அப்படிப் பார்த்துக்கிற. இத்தனை நாள்இதெல்லாம் எங்க இருந்தது?” அவன் கேட்க,


நமக்குக் கல்யாணம் ஆகிடுச்சு, இப்ப நீங்க என்னோடகணவர், நான் உங்களைப் பார்த்துக்காம, வேற யார்உங்களைப் பார்த்துப்பா.” என்றாள் இலகுவாக.


இந்த அக்கறை ஏன் முன்னாடி இல்லைன்னு தான்கேட்கிறேன்.”


அக்கறை இல்லைன்னு உங்களுக்குத் தெரியுமா? இப்பஇருக்கிற உரிமை அப்ப எனக்கு இருந்ததா என்ன?”

நிஜமா நீ எல்லாம் அருங்காட்சியகத்தில வைக்க வேண்டியபீஸ். இப்படித்தான் இருப்பேன்னு ஒரு ரூல்ஸ் போட்டுஇருக்க, என்னால அதெல்லாம் முடியாது.”


நீங்க சொல்ற அளவுக்கு எல்லாம் இல்லை. எனக்குஉங்களை முன்னாடியே ரொம்பப் பிடிக்கும்.”


எனக்கும் தான் உன்னைப் பிடிக்கும்.”


அப்படி இல்லை.” என்றவள், சிறிது நேரம் பேசாமல்எழுந்து இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் நடந்துகொண்டிருந்தாள்.


எனக்கு உடம்பு சரி இல்லாத போது, நீங்க வீட்ல இருந்துவேலைப் பார்த்தீங்க. நான் அப்ப சமையல் பண்ணிட்டுஇருந்தேன், நீங்க ஹால்ல உட்கார்ந்து வேலைப் பார்த்திட்டுஇருந்தீங்க.”


அந்த நிமிஷம் எனக்கு நாம இப்படியே எப்பவும் இருக்கக்கூடாதுன்னு தோணுச்சு. எனக்கே அது ரொம்ப அதிர்ச்சியாஇருந்தது. அப்பதான் உங்க அம்மாகிட்ட நீங்க பொண்ணுபார்க்க ஓகே சொன்னீங்க.”


திடிர்ன்னு என் மனசு போற போக்கை பார்த்து எனக்கேபயமா இருந்தது. அதுதான் உங்ககிட்ட இருந்து நான் விலகஆரம்பிச்சேன்.”


என்கிட்டே சொல்லி இருக்கலாம் இல்ல…”


எனக்கு எங்க வீட்டை நினைச்சு யோசனையா இருந்தது.”


எனக்குக் கல்யாணம் பண்ண அவங்களா எந்த முயற்சியும்எடுக்கலை.. நமக்கு அதெல்லாம் அமையாதுன்னு நானும்மனசுல பதிய வச்சிருந்தேன். நீங்களும் என்கிட்டேபிரண்டா மட்டும் தானே பழகினீங்க. அப்புறம் எப்படிச்சொல்றது?”


உன் வீட்டை பத்தி நினைச்சு நினைச்சுதான் நீ நாசமாபோற சொல்லிட்டேன். எல்லோரும் உன்னை மாதிரிதான்இருக்காங்களா?”


நான் ஏன் உன்னை அந்த மாதிரி பார்க்கலைனா… நீதான்என்னை ஆரம்பத்திலேயே மிரட்டி வச்சிருந்தியே…இருக்கிற பிரண்ட்ஷிப்பும் போயிட கூடாதுன்னு தான், அந்தமாதிரி எல்லாம் யோசிக்கவே இல்லை.”


சரி அதை விடு, நானே கல்யாணத்துக்குக் கேட்ட பிறகும், நீ என்ன சொல்லிட்டு இருந்த, இந்தக் கல்யாணம்வேண்டாம்ன்னு சொல்லலை…”


அது நம்ம ரெண்டு வீட்டையும் நினைச்சு சொன்னேன்.அப்புறம் பொண்ணு பார்க்க வந்த அன்னைக்கு நடந்தகலாட்டா வேற… அதோட உங்க அம்மா முகமே சரிஇல்லை. உங்க வீட்டல விருப்பம் இல்லாம இந்தக்கல்யாணம் நடக்க வேண்டாம்ன்னு நினைச்சேன்.”


இதெல்லாம் காரணம் இல்லை நியதி. நான்சொல்லட்டுமா… நீ இந்தக் கல்யாணம் நடக்காதுன்னு முடிவுபண்ணிட்ட.” நிருபன் சொல்ல… நியதி மறுக்காமல் ஆமாம்என்றாள்.


எனக்கு நமக்குக் கல்யாணம் ஆனப் பிறகு கூட நம்பமுடியாமத்தான் இருந்தது.”


இப்படிச் சொல்பவளை என்ன செய்வது என்பது போலப்பார்த்தவன், “போடி…. உன்னைப் பார்க்கவே எரிச்சலாஇருக்கு.” எனச் சொல்லிவிட்டுச் சென்றான்.


நியதி விரைந்து சென்று, அவனோடு இணைந்து நடந்தாள்.இருவரும் மீண்டும் பேருந்தில் ஏறி அமர்ந்தனர். நியதி பேசமுயன்றாலும், நிருபன் அதற்கு இடம் அளிக்காததால்…. வீடுவந்து சேரும் வரை எந்தப் பேச்சும் இல்லை.


வீட்டிற்கு வந்ததும், நியதி இரவு உணவு தயார் செய்துவைத்து விட்டு நிருபனை சாப்பிட அழைக்க….

நான் வந்து பண்ண மாட்டேனா…. ஏன் எல்லாமே நீயேபண்ற?” என்றவன்,


இதெல்லாம் நல்லா பண்ணு. ஆனா எது முக்கியமாபண்ணணுமோ அதைப் பண்ணாத.” என்றான் கோபமாக.


சாப்பிடலாமா எனக்குப் பசிக்குது.” என நியதிசொன்னதும்,ேலும் பேச்சை வளர்க்காமல் சாப்பிடஉட்கார்ந்தான். சாப்பிட்டு முடித்து நியதி எழுந்திருக்க,


நீ பேசாம உட்காரு.” என அதட்டியவன், அவர்கள்சாப்பிட்ட தட்டு மற்றும் மற்ற பாத்திரங்களைக் கழுவிவைத்துவிட்டு, அடுப்பு மேடையைச் சுத்தம் செய்யஆரம்பித்தான்.


எனக்குத் தெரிஞ்ச நியதி எப்படித் தெரியுமா? மனசுலஇருக்கிறது பேசிடுவா? எனக்கு அந்த நியதியைதான்பிடிக்கும்.” என நிருபன் சொன்னதும்,


அப்ப என்னை இப்ப பிடிக்கலைன்னு சொல்றீங்களா? எனக்கே என்னைப் பிடிக்கலை தான்.”


நான் உங்களுக்கு மட்டும் இல்லை. என் வீட்டினருக்கும்உண்மையா இல்லை.”


என்னோட சுயநலத்துக்காக அவங்களை நான் வீட்டைவிட்டுப் போகச் சொல்லிட்டேன்.” என நியதி தேம்பித்தேம்பி அழ ஆரம்பிக்க,


எவ்வளவு நிமிர்வாக இருந்த பெண், தன் முன் அழுததும்நிருபனுக்குத் தாங்கவே முடியவில்லை.


இப்ப நீ இப்படி அழுகிற அளவுக்கு என்ன ஆச்சு? முதல்லஅழுகையை நிறுத்துறியா?” என அவன் அதட்ட, நியதிஎழுந்து அறைக்குள் சென்றுவிட,


கடவுள ! கல்யாணம் ஆகி கொஞ்ச நாள் கழிச்சு தானேபிரச்சனை வரும்ன்னு சொல்வாங்க. நமக்கு என்னஆரம்பமே தகறாரா இருக்கு.” என நிருபன் நொந்துகொள்ள,


அவனின் பாட்டி சொன்னதை நினைத்து, நியதிக்கும்அச்சமாக இருந்தது.


வாழ்க்கையை இன்னும் ஆரம்பிக்கவே இல்லை. அதற்குள்இருவரும் நிறைய வார்த்தைகளை விட்டு இருந்தனர்.


நிருபன் ஹாலிலேயே படுத்துக்கொள்ள, நியதி அறைக்குள்படுத்து இருந்தாள். ஆனால் இருவருமே உறங்கவில்லை.ஆழ்ந்த சிந்தனையில் இருந்தனர்.



Advertisement