அத்தியாயம் 23

டிவியில் ஓடிக்கொண்டு இருந்த மாயா நடித்த விளம்பரத்தை பார்த்ததும் துஷ்யந்தின் உடல் இறுக, கண் எடுக்காமல் டிவியை பார்த்துக்கொண்டு இருந்தவன், “யாரு இது மந்த்ரா ??” என்று கடின குரலில் கேட்க, அவளோ பதில் சொல்லாமல் டிவி திரையை வெறித்துபார்த்துகொண்டு இருக்க, “மந்த்ரா உன்னை தான் !! யாரு இது ??  ஏன் இப்படி பார்த்துட்டு இருக்க ?!!” என்று மீண்டும் கொஞ்சம் சத்தமாக கேட்க,

“ஹான், என்ன கேட்ட துஷ்யந்த் ??”

“ஃவூ இஸ் ஷீ ?? இப்படி பார்த்துட்டு இருக்க ??!!!”

“இவளா, She is the antagonist of my story, villain of my movie.” – என்றவளின் குரலில் அவ்வளவு கொரூரம், காழ்புணர்ச்சி.

அவளின் பேச்சில் இருந்த தீவிரத்தை பார்த்து, அவள் எதிரில் இருந்த சோஃபாவில் வந்து அமர்ந்த துஷ்யந்த், “என்ன ஆச்சு மந்த்ரா ?? ஏன் இவ்ளோ கோபம் ??!!” என்று கேட்க,

நடந்ததை சுருக்கமாக சொன்னவள், “இந்த இண்டஸ்ட்ரில ராணி மாதிரி இருந்தேன் துஷ்யந்த். க்யுன் ஆஃப் தமிழ் பில்ம் இண்டஸ்ட்ரி. என் டேட்ஸ் வாங்க டைரக்டர்ஸ் கியுல நின்னாங்க. என் கூட நடிக்க, ஹீரோஸ் தவம் கிடந்தாங்க. நான் எவ்ளோ கேட்டாலும் ஒரே செக்ல பணத்தை கொடுக்க ப்ரொடியுசர்ஸ் ரெடியா இருந்தாங்க. அப்படி இருந்தவ, இன்னைக்கு ஒரு படம் கூட இல்லாம, திரும்பி பாக்க ஆள் இல்லாம, ஒரு மூலையில முடங்கி கிடக்கேன்.” என்று சொல்லி இடைவெளி விட்டவள்,

“இதோ, இவ தான் அதுக்கெல்லாம் காரணம். இவதான் என்னோட இடத்தை பறிச்சிட்டா. என்ன பண்ணானே தெரியல துஷ்யந்த்,அட்வான்ஸ் கொடுத்து புக் பண்ணவங்க கூட, கேன்சல் செஞ்சுட்டு போய்ட்டாங்க. ஆன் ஸ்க்ரீன்ல எண்ணத்தை காட்டி மயக்கி வச்சு இருக்களோ தெரியல, நானும் எவ்வளவோ ட்ரை செஞ்சு பார்த்துட்டேன். மூஹூம் நோ யுஸ். அவளை பார்க்க பார்க்க அப்படியே பத்திகிட்டு வருது. கொன்னு போட்டுடலாமான்னு கூட சில சமயம் தோணுது…” என்று கோபமாக சொன்னவள் ஆத்திரத்தில், தன் முன் இருந்த, கண்ணாடி டேபிளை கைகளால் குத்த, அதுவோ, சில்லுசில்லாக உடைந்து நொறுங்க, மந்த்ராவின் கையில் இருந்து ரத்தம் வழிய ஆரம்பித்தது.

அதை பார்த்து பதறி, எழுந்து அவள் அருகில் வந்த துஷ்யந்த், “ஹே !! மந்த்ரா கூல் !! கூல் !! உன் கோபத்தை டேபிள்லையா காட்டுவ, இங்க பாரு எவ்ளோ ரத்தம்.” என்றவன் அவளிடம் கேட்டு, முதலுதவி பாக்ஸை எடுத்துவந்து, அவள் கையை சுத்தம் செய்து, கட்டு போட்டுவிட்டான்.

பின் அவள் அமைதியானதும், அருகில் அமர்ந்தவன், “எந்த ஒரு விஷயத்துக்கும், கோபம் தீர்வாகாது மந்த்ரா. நான் கூடத்தான் இவளால பாதிக்கபட்டு இருக்கேன். அதுக்காக உன்னை மாதிரி கோபமாபடுறேன்.” என்று துஷ்யந்த் சொன்னதும், குழப்பமும், அதிர்ச்சியும் ஏற்பட, நிமிர்ந்து அவனை பார்த்தாள் மந்த்ரா.

“யு.எஸ்ல ஒரு பொண்ணு என்னை மாட்டிவிட்டா சொன்னேனே, அது இவதான். அப்போ அவ பேரு என்னன்னு எனக்கு தெரியாது. சம் இந்தியன் பிள்ம் ஆக்ட்ரஸ்ன்னு நினைச்சேன். இப்போ நீ சொல்லித்தான் இவ யாருன்னே தெரியும்.” என்றான், அவள் பார்வை உணர்ந்து.

துஷ்யந்த் சொன்னதை கேட்டவள், ஆத்திரத்தோடு, “ரொம்ப திமிர் அவளுக்கு. அவளை ஏதாவது செய்யணும் துஷ்யந்த்.” என்று சொல்ல,

“ம்ம் !! நிச்சயமா !!” என்றான் அழுத்தமான குரலில். பின் “நமக்கு ஏதாவது சேன்ஸ் கிடைக்கும் மந்த்ரா. நீ எதுவும் கொலை அது இதுன்னு அவசரபட்டு எதுவும் செஞ்சுடாத.” என்று கூறிவிட்டு, சில மணிநேரங்கள் இருந்துவிட்டு, தன் வீட்டுக்கு கிளம்பி சென்றான் துஷ்யந்த்.

துஷ்யந்த் அவசரப்பட வேண்டாம் என்றும் சொல்லியும், மந்த்ரா கேட்கவில்லை. அவள் செய்த செயல் திரையுலகில் மட்டுமில்லாமல், ரசிகர்கள் மத்தியிலும் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது.

நல்ல தூக்கத்தில் இருந்த மாயா, மொபைல் ஃபோன் அழைப்பு சத்தத்தில் புரண்டு படுத்தபடியே, மொபைலை ஆன் செய்து காதில் வைக்க, “ஹலோ மாயா, நான் ஷர்மி பேசுறேன் டி.” என்ற தோழியின் குரலில் உற்சாகமாக எழுந்து அமர்ந்தவள்,

“ஹே !! ஹாய் டி. எவ்ளோ நாள் ஆச்சு பேசி. எப்படி இருக்க ?? வீட்டில எல்லோரும் எப்படி இருக்காங்க ?? பாப்பா எப்படி இருக்கா ??” என்று வரிசையாக கேள்விகளை கேட்டுகொண்டே போக,

“எல்லோரும் நல்லா இருக்கோம் டி. என்னடி அங்க நடந்துட்டு இருக்கு ?? ஏன் இப்படி எல்லாம் ரூமர்ஸ் கிளப்புறாங்க ??”

“என்ன சொல்ற ஷர்மி ?? என்ன ரூமர் ?!!” என்று குழப்பமாக மாயா கேட்க,

“உனக்கு விஷயம் தெரியாதா !!!” என்று ஆதிர்ச்சி அடைத்த ஷர்மி, “கிருஷ் சாரும், மந்த்ராவும் லவ் செஞ்சுட்டு இருந்தாங்க, கூடிய சீக்கிரம் கல்யாணம் செஞ்சுக்க போறாங்கன்னு நியுஸ் இருந்துச்சுல, நீ கூட ஆமாம் சொன்னியே…”

“ஹா….ஆமாம்…”

“ம்ம், அது சம்பந்தமா நேத்து என் ஆஃபிஸ் ப்ரெண்ட் ஒரு விஷயம் சொன்னா, இப்போ அவங்க ரெண்டு பேரும் சண்டை போட்டு பிரிஞ்சுட்டாங்கலாம். அதுக்கு காரணம் நீ தான்னு ரூமர் பரவி இருக்கு. என்ன டி ஆச்சு ??”

தோழி சொன்னதை கேட்டு அதிர்ந்து போய் அமர்ந்திருந்த மாயாவிற்கு, மந்த்ரா வீட்டில் நடந்தவை நியாபகம் வர, அதில் மூழ்கி போய் அமர்ந்திருந்தவள், தோழியின் அழைப்பில், “அப்படி எல்லாம் எதுவும் இல்ல டி. ஏன் இப்படி ஒரு ரூமர் ஸ்பெரெட் பண்றாங்கன்னு தெரியல. இப்படி எல்லாம் யாரு இவங்களுக்கு சொன்னா !! ச்சேய் கொஞ்சம் கூட யோசிக்க மாட்டாங்களா ? ம்ப்ச் !!” என்றவளுக்கு தலைவலிக்க ஆரம்பித்தது.

பின் சில நொடிகள் கழித்து, “ வேற எதுவும் சொல்றாங்களா ஷர்மி ??” என்று கேட்க,

பதில் சொல்ல தயங்கி ஷர்மி, பின் மெதுவா, “அது….அது வந்து, சொன்னா கோபபடாத மாயா. வந்து, நீயும் கிருஷ்சாரும் கூடிய சீக்கிரம் கல்யாணம் செஞ்சுக்க போறதாகவும், சிலர் கல்யாணமே முடிஞ்சிட்டதாகவும் சொல்றாங்க.” என்று சொல்லி முடிக்க,

“கடவுளே !!” என்றபடி தலையில் கை வைத்துகொண்டாள் மாயா. “ஒரு பையனும் பொண்ணும் க்ளோசா பழகுனா, அது காதல் மட்டும் தான்னு ஏன் இவங்க எல்லாம் நினைகிறாங்கன்னே தெரியல ஷர்மி. அவர் எனக்கு அண்ணன் மாதிரி. அவரும் என்னை அப்படிதான் பார்க்கிறார். இண்டஸ்ட்ரி வந்த புதுசுல, இப்படி தான் ரூமர் கிளம்புச்சு. அதை சமாளிக்கிறதுகுள்ள போதும்போதும்னு ஆச்சு. எல்லா இண்டர்வியுலையும் அதே கேள்வி. பதில் சொல்லி புரியவைக்குறதுகுள்ள நொந்து போயிட்டேன் டி. இப்போ மறுபடியும் அதே ரூமர். யாரு டி இப்படி எல்லாம் ரூமர் கிளப்புறது. வேறே வேலை இல்லையா அவங்களுக்கு எல்லாம். அவன் வீட்டில என்ன நடக்குது, இவன் வீட்டில என்ன நடக்குது இதை பார்க்கிறது தான் அவங்களுக்கு வேலையா !! ச்செய் !!” என்று கோபமாக பேசியவளை, சமாதானம் செய்த ஷர்மி,

“கொஞ்சம் டாப்க்கு போய்ட்டா, இப்படி எல்லாம் பேசிறது சகஜம் தான் மாயா. நீ இது எதையும் காதுல போட்டுக்காத. உன் வொர்க் பாரு. பதில் சொன்னாலும் நம்ப மாட்டாங்க. மறுபடியும் மறுபடியும் கிளப்பிகிட்டே தான் இருப்பாங்க.” என்று சொன்னவள், சிறிது நேரம் பேசிவிட்டு ஃபோனை வைத்துவிட, கிருஷ்ஷிடம் சொல்லலாமா வேண்டாமா என்று யோசித்த மாயா, பின் வேண்டாம் என்று முடிவு செய்துகொண்டு, தன் வேலையை பார்க்க சென்றாள்.

இவள் சொல்லாமலே கிருஷ்க்கும் விஷயம் தெரிந்து போனது. மாயா போலவே தான் அவனும், பதில் சொல்லி சொல்லி ஓய்ந்து போயிருந்தான். “முடியல டா உங்களோட !! எத்தனை தடவை தான் சொல்றது.” என்று அலுத்துகொண்டவனுக்கு, மந்த்ரா வீட்டில், அவளின் அருவருக்கதக்க வார்த்தைகளை கேட்டு, அதிர்ந்து போய் நின்ற மாயாவின் நியாபகம் வந்தது.

“பாவம் மாயா, அன்னைக்கு மந்த்ரா பேசுனதுக்கே ஷாக் ஆகி நின்னுட்டா. இப்போ கல்யாணம் அது இதுன்னு ரூமர் நியுஸ் கேள்விபட்டா, மனசு உடைஞ்சு போய்டுவா. அவ கிட்ட சொல்ல வேண்டாம். எதுனாலும் நாம பதில் சொல்லிக்கலாம்.” என்று நினைத்தவன், மாயாவிடம் விஷயத்தை சொல்லவில்லை.

பாவம் மாயாவுக்கு விஷயம் தெரியும் என்று அவனுக்கு தெரியாது. இப்படி இருவருமே, மற்றவரிடம் விஷயம் சொல்லாமல் இருந்ததோடு, வதந்திக்கு விளக்கமும் கொடுக்காமல் இருந்திட, பின்னாடி இருவரும் கூட்டாக பேட்டி கொடுக்கும் நிலைமைக்கு விஷயம் போகும் என்று அவர்கள் அப்போது எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்..

இப்படி இரண்டு தினங்கள் சென்றுவிட, காரில்எங்கோ சென்றுகொண்டு இருந்தாள் மந்த்ரா. அப்பொழுது மொபைல் ஃபோன் அடிக்கவும், டேஷ்போர்டில் இருந்து மொபைலை எடுத்தவள், ஆன் செய்து காதில் வைக்க,

“நீ தான மந்த்ரா, அந்த ரூமரை ஸ்பெரெட் பண்ணது ?!!” என்று எடுத்தஎடுப்பில் அந்த பக்கம், துஷ்யந்த் கேட்க, பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தாள் இவள்.

“உன்னை தான் கேட்கிறேன் மந்த்ரா ??” என்று அவன் சற்றே அழுத்தமான குரலில் கேட்க, “ம்ம்” என்றாள் பதிலுக்கு.

அவள் பதிலில் எரிச்சல் அடைந்த துஷ்யந்த், “அன்னைக்கு நான் என்ன சொன்னேன். இப்போ அவசர படாத, அமைதியா இரு. நமக்கு ஒரு சேன்ஸ் கிடைக்கும்ன்னு சொன்னேன்ல. அப்புறம் ஏன் இப்படி செஞ்ச.” என்று கத்த,

“நான் இங்க கஷ்டபட்டுட்டு இருக்கேன், நேத்து என்னடானா கிருஷ் கூட சேர்ந்து டிவில பேட்டி கொடுத்துட்டு இருக்கா. அதான் எரிச்சல் ஆகிடுச்சு.”

“அதுக்கு இப்படியா செய்வ. இதால உன்னோட கேரியரும் பாதிக்கும் மந்த்ரா.”

“ஆமாம் இங்க கேரியரே இல்லை. இதுல பாதிச்சா என்ன பாதிக்காட்டி என்ன !!” என்று அவள் அலுத்துக்கொள்ள,

“உன்னை !!! தயவு செஞ்சு இனி எந்த முட்டாள் தனத்தையும் பண்ணாத.” என்று சொல்லிவிட்டு அவன் வைத்துவிட,

“ஆமாம், இவனுக்கு என்ன, சொல்லிடுவான். நான் தான இங்க சேன்ஸ் இல்லாம நடுத்தெருவுல நிக்குறது.” என்று எரிச்சலுடன் சொன்னவள், வண்டியின் வேகத்தை கூட்டினாள்.

ஆனால், விஷயம் அவ்வளவு எளிதாக அடங்கிவிடவில்லை. கிசிகிசுவில் ஆரம்பித்த விஷயம், பத்திரிக்கை, மாத, வார இதழ்களில் தனி ஆர்ட்டிக்களாக பிரசுரிக்கபட, இதற்கு எல்லாம் மேலே, டிவி நியுஸில் தனி செய்தியாக போடுமளவுக்கு ஊதி பெரிதாக்கபட்டது.

விஷயம் கேள்விப்பட்டு, திரைத்துறை, நண்பர்கள் வட்டம், தெரிந்தவர்கள், என அனைவரும் மாயா மற்றும் கிருஷ்க்கு ஃபோன் மேல் ஃபோன் போட, போகும் இடம் எங்கிலும், தொலைக்காட்சி பத்திரிக்கை நிருபர்கள் சூழ்ந்துக்கொண்டு,

“உங்க ரெண்டு பேருக்கும் கூடிய சீக்கிரம் கல்யாணமாமே ?”

“கிருஷ், மந்த்ரா பிரிஞ்சதுக்கு நீங்க தான் காரணமாமே ?!!”

“மந்த்ரா மேம் கேரியர் ட்ராப் ஆனதுக்கும், நீங்க தான் காரணம், அவங்களுக்கு கிடைச்ச சேன்சை, நீங்க தட்டி பரிச்சிட்டதா சொல்றாங்களே?!!”

போன்ற கேள்விகளை கேட்க, கிட்டத்தட்ட வெறுத்து போனாள் மாயா.

இந்த நேரத்தில் தான், ஏதோ விழாவுக்கு வந்த மந்த்ராவை பத்திரிகையாளர்கள் சூழ்ந்துகொண்டு, கேள்விகளை கேட்க, அவளோ

“நீங்க கேள்விபட நியுஸ் உண்மை தான். மீ அண்ட் கிருஷ் வாஸ் இன் ரிலேஷன்ஷிப். We Even planned to get married soon. But unfortunately we ended in breakup. இப்போதைக்கு இது போதும். நாங்க பிரிஞ்சதுகு யார் காரணம், இதெல்லாம் சொல்ல விருப்பபடல. Also, என்னோட கேரியர் அவ்ளோதான், முடிஞ்சுச்சுன்னு சிலர் சொல்றாங்க. நாட் லைக் தட். கிட்டத்தட்ட பத்து வருஷம் இந்த இண்டஸ்ட்ரிலல இருக்கேன். I was working continiously.  So I have decided to take a break. அதனால தான் இந்த இடைவெளி. கூடிய சீக்கிரம், மறுபடியும் படங்கள்ல என்னை பார்க்கலாம்.” என்று கெத்துக்காக கூறி சமாளித்தவள், துஷ்யந்தின் அறிவுரையின் பெயரில், மாயாவின் பெயரை எங்கும் குறிப்பிடவில்லை.

மந்த்ராவின் இந்த பேட்டிக்கு பிறகு, கிருஷ்ஷின் நிலைமை மிக  மோசமானது. ஏதோ அவன் ஒரு பெண்ணை காதலித்து, ஊர் சுற்றி, ஏமாற்றி கைகழுவிவிட்டது போல, அவனை வைத்து மீம்ஸ், ட்ரோல் என வறுத்தெடுத்தனர். ஒரு சிலர் மாயாவையும் விட்டுவைக்கவில்லை. ‘கீப்’ என்பது போன்ற அருவருக்க தக்க சொற்களை பயன்படுத்தி, அவளை ட்ரோல் செய்து பரப்பினர்.

வெளியே தான் அப்படி என்றல், ஷூட்டிங் போன இடத்திலும், இதே கேள்விகள் மாயா, கிருஷ் இருவரையும் சூழ்ந்துகொள்ள, பொறுத்து பொறுத்து பார்த்தவர்கள், வேறு வழியின்றி, ப்ரெஸ் மீட்டுக்கு ஏற்பாடு செய்தனர்.

இதற்காகவே காத்திருந்தது போல, இந்தியா முழுவதிலும் இருந்து, பத்திரிக்கை, தொலைக்காட்சி நிருபர்கள் என கிட்டதட்ட ஒரு கூட்டமே வந்திருந்தது. இவர்களை பார்க்கும்பொழுது, ‘கேமரா வெளிச்சத்தை திருப்பவேண்டிய எவ்வளவோ உருப்படியான விஷயங்கள் நாட்டில இருக்கும்பொழுது, ஒரு தனி மனிதனோட வாழ்கையில இருக்கிற கிசுகிசுவ கேக்குறதுக்கு எவ்வளோ கூட்டம். இவங்க எல்லாம் பத்திரிக்கையாளர்கள் தானா ?? இவங்களை போய், அரசியலமைப்பின் நாளாவது தூண்ன்னு சொல்றாங்களே !!’ என்று நினைத்து வருத்தப்பட்டு கொண்டாள் மாயா.

புறப்படுவதற்கு முன்பே, “நீ பேச வேண்டாம் மாயா. நானே எல்லாத்துக்கும் விளக்கம் சொல்லிகிறேன். ஒன்ஸ் நான் பேசி முடிச்சதும், பத்திரிக்கைகாரங்க, துருவி துருவி எதையாவது கேட்பாங்க. அவங்க  கேட்கிறது உண்மையாவும் இருக்கலாம், பொய்யாவும் இருக்கலாம். ஆனா அவங்க எது கேட்டாலும், பொறுமையா பதில் சொல்லு. பதில் சொல்ல பிடிக்காதமாதிரி கேள்வி கேட்டா, சிரிச்சிட்டே, நோ கமெண்ட்ஸ் சொல்லிடு. எந்த நேரத்திலும் கோபப்பட்டு பேசிடாதா மாயா, ஈவன் அவங்க அசிங்கமா எதாவது கேள்வி கேட்டாலும் டெம்பர் ஆகாத. சரியா ??” என்று கிருஷ் அறிவுரை வழங்கி இருந்ததால், மாயா அமைதியாக அமர்ந்திருக்க, கிருஷ் தான் பேச, ஆரம்பித்தான்.

“இங்க வருகை தந்திருக்கும், பத்திரிக்கை தொலைக்காட்சி நண்பர்களுக்கு வணக்கம். கடந்த சில தினங்களாவே, என்னையும் மாயாவையும், மந்த்ராவையும் வச்சு நிறைய நியுஸ், ரூமர்ஸ் போகுது. அதற்கான விளக்கம் தருவதற்கு தான் இந்த ப்ரெஸ் மீட். மொதல்ல நான் பேசி முடிச்சிடுறேன். அப்புறம் உங்க கேள்விகளை நீங்க கேட்கலாம்.” என்று சொல்லி இடைவெளிவிட்டவன்,

“நானும் மந்த்ராவும் கடந்த சில வருஷங்களுக்கு முன்னாடி முதல் படம் ஜோடியா நடிச்சப்போ, ப்ரெண்ட்ஸ் ஆகி, அப்புறம் நாட்கள் போக போக, ஒருத்தருக்கு ஒருத்தர் பிடிச்சு போய் லவ் பண்ண ஆரம்பிச்சோம். ரெண்டு பேரோட கேரியர் காரணமா உடனே கல்யாணம் செய்துக்க முடியல. சோ கொஞ்ச நாள் கழிச்சு, மேரேஜ் செஞ்சுக்கலாம்னு முடிவில இருந்தோம். இந்த நிலையில தான், கொஞ்ச நாளைக்கு முன்னாடி, எங்களுக்குள்ள சின்ன கருத்து வேறுபாடு வந்து, அது பெருசாகி வேற வழியில்லாம பிரிய வேண்டியதா போச்சு.” என்று சொன்னவனின் குரல் லேசாக கலங்க, ஆறுதலாக அவனது கைகளை பிடித்துகொண்டாள் மாயா.

பின் தன் குரலை செருமிகொண்டவன், “இந்த பிரிவுக்கு எங்க ரெண்டு பேரை தவிர வேற யாரும் காரணம் இல்லை. நாங்க பிரிஞ்சதுகு மாயா தான் காரணம், கூடிய சீக்கிரம் மாயாவுக்கும் எனக்கும் கல்யாணம், இப்படி வர்ற நியுஸ் எல்லாம் உண்மையில்லை. They are all just baseles rumours. யாரோ கிளப்பிவிட்ட வதந்தி. எனக்கும் மாயாவுக்கும் இடையில இருக்கிறது காதல் எல்லாம் கிடையாது. அவ எனக்கு சிஸ்டர் மாதிரி. எங்களுக்குள்ள ஒரு பிரதர் சிஸ்டர் ரிலேஷன் மட்டும் தான் இருக்கு. அதை தாண்டி எங்களுக்குள்ள எதுவும் இல்லை.”

“அண்ட் மீம்ஸ் ட்ரோல் போடுறவங்க எல்லோருக்கும் ஒரு சின்ன வேண்டுகோள். ஒரு விஷயம் உண்மையா பொய்யான்னு தெரியாம, மீம்ஸ் போடுறதோ, ட்ரோல் செய்றதோ தயவு செஞ்சு செய்யாதீங்க. நீங்க விளையாட்டுக்கு, செய்றதுனால எவ்வளவு பேர் ஹர்ட் ஆவாங்கன்னு கொஞ்சம் யோசிச்சு பாருங்க. இந்த விஷயத்தில நான் மட்டும் இல்லை. மாயா, மந்த்ரான்னு ரெண்டு பொண்ணுங்க சம்பந்தப்பட்ட விஷயம். ரெண்டு பேருக்குமே குடும்பம், கேரியர் இருக்கு. அதனால தயவு செஞ்சு, இனி இந்த மாதிரி பொய்யான ரூமர்ஸ் ஸ்ப்ரெட் செய்யாதீங்க. ப்ளீஸ்.” என்று அவன் பேசிமுடிக்க,

பத்திரிக்கையாளர்கள் சலசலவென கேள்விகளை கேட்க ஆரம்பித்தனர். அவர்களின் கேள்விகளுக்கு இருவரும் பதில் சொல்ல ஆரம்பித்தனர்.

“சர், உங்களுக்கும் மந்த்ரா மேமுக்கும் சின்ன மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் சொன்னீங்களே, அதுக்கு காரணம் மாயா மேமா ??”

“இல்லை நிச்சயமா இல்லை. அவங்களுக்கும் எங்களுக்குள்ள வந்த இஸ்சியுக்கும் சம்பந்தம் இல்லை. தட் வாஸ் ஜஸ்ட் எ மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்.”

“உங்களுக்குள்ள மாயா சம்பந்தபடலனா, ஏன் பர்டிகுலரா மாயா மேம் பேரு இந்த விஷயத்தில அடிபடனும் ?? ஏன் நீங்க நிறைய பேர் கூட தான் நடிச்சு இருக்கீங்க, பிரெண்டா பழகி இருக்கீங்க.”

“தெரியல, அதை நீங்க ரூமர் ஸ்ப்ரெட் பன்னவங்களை தான் கேட்கணும்.”

“நீங்களும் மாயா மேமும் மந்த்திரா மேம் வீட்டுக்கு போனதாகவும், மாயா மேம் வந்தது பிடிக்காம, அங்க வச்சு தான் உங்க ரெண்டு பேருக்கும் சண்டைன்னு ஒரு ரூமர் அடிபடுதே ?!!”

இந்த கேள்வியை கேட்டு உள்ளுக்குள் லேசாக அதிர்ந்து தான் போனான் கிருஷ். ‘எங்கிருந்து தான் இவனுங்களுக்கு எல்லாம் நியுஸ் கிடைக்குதோ தெரியலையே !! விட்டா இத்தனை மணிக்கு நீங்க குளிச்சீங்க, இத்தனை மானிக்கு சாப்பிட்டீங்க, அதுவும் இதனை இட்லி சாப்பிட்டீங்கன்னு கூட கரெக்டா சொல்லுவானுங்க போலையே !!’ என்று உள்ளுக்குள் நினைத்துகொண்டவன்,

“மாயவும் நானும் நடிச்ச படத்தோட ப்ரிவியு ஷோக்கு இன்வைட் பண்றதுக்கு தான், அவங்க என்கூட மந்த்ரா வீட்டுக்கு வந்தாங்க. மத்தபடி, அவங்களால எங்களுக்குள்ள எந்த சண்டையும் இல்லை. அவங்களுக்கு நாங்க லவ் பண்ற விஷயமே சமீபமா தான் தெரியும்.”என்று அவன் சொல்லிக்கொண்டு இருக்க,

அந்தநேரம், “நெருப்பில்லாம புகையுமான்னு ஒரு பழமொழி உண்டே சர்?!!” என்று ஒரு நிருபர் இடைபுகுந்து நக்கலாக கேட்க, அதுவரை அமைதியாக அனைத்தையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த மாயா, சட்டென்று கிருஷ் முன்பு இருந்த மைக்கை தன் பக்கம் நகர்த்தி, 

“சர், எங்கயும் அதுவா நெருப்பு பிடிக்காது, யாராவது பத்த வச்சா தான் நெருப்பு பிடிக்கும், புகையும் வரும். சோ நெருப்பு யார் வச்சாங்கன்னு கண்டுபிடிச்சு அவங்ககிட்ட இந்த கேள்வியை நீங்க கேட்கலாம். ஒருவேளை அவங்களுக்கு அதற்கான பதில் தெரிஞ்சு இருக்கலாம்.” என்று சொல்லும்பொழுதே, தனக்கு நேர் எதிரில் இருந்த கேமராவை, அவள் கூர்மையாக பார்க்க,

இங்கே தன் வீட்டில் இவர்களின் பேட்டியை பார்த்துகொண்டு இருந்த மந்த்ரா பற்களை கடித்தாள். “ரொம்ப திமிரு டி உனக்கு. எவ்வளவு கொழுப்பு இருந்தா, நக்கலா பதில் சொல்றதும் இல்லாம, கேமராவை முரைச்சு பார்ப்ப.” என்று தனக்குள் சொல்லிகொண்டவள், கோபத்தில் தொலைகாட்சியை ஆஃப் செய்துவிட்டு எழுந்துசென்று விட,

துஷ்யந்த் வீட்டிலோ, மாயாவின் நறுக்கென்ற பதிலை ரசித்து கேட்ட துஷ்யந்த், “கிளெவர் அண்ட் போல்ட் சிக் !” என்று சொல்லிகொண்டவனின் மனதுக்குள், ‘கூடிய சீக்கிரம், நம்ம திட்டத்தை ஆரம்பித்துவிட வேண்டியது தான்.’ என்ற எண்ணம் வலுபெற்றது.

ப்ரெஸ் மீட்டிங் ஒரு வழியாக முடிய, அடுத்த சில வாரங்களில், ஷூட்டிங்கில் இருந்த மாயாவிற்கு, சண்முகம் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து, புதிய படத்தில நடிக்க அழைப்பு வந்தது.