Advertisement

                           ஓம் நமச்சிவாய
அத்தியாயம் 6
வேலுவுடன் சண்டை போட்டு ஒரு வாரம் ஆகியும் இன்னும் குறிஞ்சியின் கோபம் மட்டும் குறைய வில்லை. அவன் பேசியதை நினைக்க நினைக்க இன்னும் கோபம் தான் அதிகம் ஆனது குறிஞ்சிக்கு
அன்று இருவரும் எதிர் எதிராய் நிற்கும் போதே விசாக குறிஞ்சியை தேடி வந்து விட அவர்களின் பேச்சு அப்படியே நின்று போனது.
விசாக வரவும் குறிஞ்சி கோபத்தை கட்டு படுத்த “என்ன குறிஞ்சி இங்க நிக்குற??” வேலுவை பார்த்து கொண்டே குறிஞ்சியிடம் கேட்டாள்.
“தறிய சுத்தி பாக்க வந்து எந்த வழியா உள்ள வரன்னு தெரியாம நிக்குறாங்க” வேலு தான்  பதில் சொன்னான். நிஜத்திலும் அந்த தறி கூடம் பெரிது தான். கிட்ட தட்ட மூன்று ஏக்கர் சுற்றளவு கொண்டது தறி போட்டு இருக்கும் கட்டிடம் மட்டும். மீதம் இருந்தவற்றில் புடவைகள் வைக்க, நூல் வைக்க, பட்டு வைக்க என்று  கட்டிடங்கள்  தனிதனியாக இருந்தது. அவைகள் போக மீதம் இருந்தவை அனைத்தும் காலி இடங்கள்.
நான்கு ஐந்து வழிகள் இருக்கும் புதியவர்கள் வந்தால் வழி தெரியமல் நிற்க தான் வேண்டும் அங்கு. விசாகாவும் வேறு வழியில் சொன்று இங்கு வந்ததால் “சரிண்ணா” என்றவள் குறிஞ்சியை அழைத்து கொண்டு போக அவள் இவனை முறைத்த படி தான் சொன்றாள்.
“அராத்து… கோபமா பேசுறேன் கொஞ்சமும் பயம் இல்லாம என்னம்மா வயாடுறா!! மத்தவங்க மரியாதை குடுத்தா தான் மரியாதை குடுப்பியா நீ.. சரியாதான் சொல்லுது வாயாடி…” மனதில் அவளை திட்டினான?? கொஞ்சினானா?? ஏதோ ஒன்று  அவர்கள் பின்னால் சொன்றான் அமைதியாக.
விசாகாவிடம் எதையும் காட்டிக்கொள்ள வில்லை என்றலும் “பேசுனது அவ.. இவருக்கு மத்தவங்க பதில் சொல்லனுமா?? இவங்க இஷ்டத்துக்கு  கேள்வி கேக்கலான்னு தான் வசதி இல்லாட்டியும் நல்ல இடம் நாம எது சொன்னாலும் பதில் பேச மாட்டாங்கனு கல்யாணம் சொய்றாங்களா… இவருக்கு  இவங்க தங்கச்சி பெரிசுனா எனக்கு எங்க வீடும் ஆளுங்களும் தான் பெரிசு… இனி வசதிய பத்தி ஏதாச்சும் பேசட்டும் இருக்கு” மனதில் திட்டிய படி இருந்தாலும் முகத்தில் எதையும் காட்டிக்கொள்ள முடியவில்லை குறிஞ்சியால் காரணம் தாமரை.    
வெளில் இருந்து வந்ததில் இருந்து அவள் முகத்தை தான் பார்த்து இருந்தார் தாமரை. அதனாலேயே அவள் முகம் மாறாமல் இருக்க வேண்டியதாகியது அவளுக்கு.
இளம் சாம்பல் வண்ண சுடிதாரில் பிங்க் துப்பட்டாவை பின் செய்தவள் வேலுவை திட்டிக்கொண்டே வர, வந்தவளை சங்கரன் தான்  நிறுத்தினார். “எங்கம்மா  போற?? இவ்வளவு சீக்கிரமா கிளம்பிட்ட??”
“ம்ம் ப்பா எங்க பிரின்சி ஊருக்கு போறாங்க அடுத்த வாரம் ஊர்ல இருக்க மாட்டாங்க அது தான் அவங்களுக்கு  பத்திரிக்கை வச்சுட்டு வந்துடுறேன்… அப்படியே மத்த ஃபிரண்ட்ஸ்க்கும் இன்னிக்கே பத்திரிக்கை வைச்சுட்டா எனக்கும் ஃபிரி..” என்றவள் அங்கிருந்த பத்திரிக்கையை எடுத்து சரி பார்த்தாள்.
“அதுக்குன்னு முடிய இப்படி விரிச்சு போட்டுடு தான் போவியா??” தாமரை
“ம்மா முடி இன்னும் காயல… நான்  காய வச்சு பின்னல் போட்டு போறதுகுள்ள அவங்க ஊருக்கே போயிடுவாங்க… அது தான்  கிளிப்போட்டு இருக்கேன்ல..” என்றவள் அடுத்து தாமரையின் பேச்சை கேட்க அங்கு நிற்க வில்லை.
“பாருங்க நான் பேசிக்கிட்டே இருக்கேன் அப்படியே போறா பாருங்க..” தாமரை சங்கரனிடம்  
“நீ பேசிகிட்டு மட்டும் தான் இருப்ப.. அடுத்தவங்கள பதில் சொல்ல விட மாட்ட.. அவ உன் பொண்ணு… அது தான் நேக்கா ஓடிட்டா நான் மாட்டிக்கிட்டேன்” பதில் சொல்லியவரை தாமரை முறைக்க, வராத போனை காதில் வைத்து கொண்டு வாசலுக்கு சென்று விட்டார் சங்கரன். 
அவருக்கு பாதுகாப்பான இடம் வாசல் தான். வெளியில் பேச்சு சத்தம் கேட்கும் என்பதால் தாமரை அங்கு வந்து எதுவும் பேச மாட்டார்.அதனால் தாமரையிடம் இப்படி பேசும் போது மட்டும் வெளியில் வந்து நின்று விடுவார். பிறகு சாப்பாட்டிற்கு தான் உள்ளே போவது. அதற்குள் தாமரையும் இவர்  பேசியதை மறந்து விடுவார்.  
“மேம் கண்டிப்பா கல்யாணத்துக்கு வந்துடனும்” குறிஞ்சி அவர்கள் பள்ளி பிரின்ஸியை அழைக்க “கண்டிப்பா வந்துடுறேன் உனக்காக அன்னிக்கு எல்லாருக்கும் ஹாப் டே பர்மிசன்.. என்ன சந்தோசமா!!” அவர் கேட்க சிரித்தவள் அவருக்கு நன்றி சொல்லி வெளியில் வந்தாள்.
தன் ஸ்கூட்டியை எடுத்தவள் வீதி முனைக்கு வர அவளை வழி மறைத்தது போல் வந்து நின்றது அந்த மகிந்ரா மோஞ்சோ. 
மோஞ்சோ வந்த வேகத்தில் ஸ்கூட்டின் பிரேக்கை வேகமாக குறிஞ்சி அழுத்தி இருக்க வண்டியில் லேசாக முட்டிக்கொண்டாள் வண்டியில். வண்டியை நிறுத்தியவள் “டேய் அறிவுகெட்டவனே நீ ஷோ காட்ட என் வண்டி தான் கிடைச்சுதா.. மூளைகெட்ட முண்டம்… வண்டி  ரிப்பேர் ஆனா சரி பண்ண உங்க அப்பனா கொடுப்பான்..??” கோபத்தில் மூச்சு இறைக்க பேச.,
“ஆமா நா இடிச்சி நீ சரிபண்ணா எங்க அப்பா தான் தருவாறு.. பின்ன உங்க அப்பா சேத்து வைச்ச காசையா எடுத்து நீட்டுவாரு சங்கரன் பெத்த குறிஞ்சியே… எப்படி நீ சரியான கேள்விய எப்பவும் தப்பாவே கேக்குற..” கேட்டபடி ஹெல்மட்டை கலட்டியவன்  குறிஞ்சியை பார்த்து சிரித்தான்.
“டேய் மாதவா எப்படா வந்த!!??” ஆச்சர்யமாய் அவனை பார்த்தபடி கேட்டாள்.
“வந்து ஒரு வாரம் ஆச்சு..”
“ஏண்டா வந்து ஒரு வாரம் ஆச்சு இப்ப  தான் பாக்க வர தெரிஞ்சதா??”
“இப்பாவாவது வந்தேனேன்னு சந்தோசப்படு…” அவளை பார்த்து மாதவன் சிரிக்க…
“சர் அவ்வளவு பிசின்னா கிளம்புறது டிராபிக் ஜாம் ஆகுதுல..” அவள் நக்கலாக பார்க்க…
“போதும்” கை நீட்டியவன் “உன் வண்டிய அப்படி நிறுத்திட்டு வா.” மாதவன் சொன்னதும்  பக்கத்தில் இருந்த மர நிழலில் ஸ்கூட்டியை நிறுத்தியவள் நடக்க ஆரம்பித்தாள்.
“எங்க மேடம் இப்படியே ஐம்பது கிலோமீட்டர் தூரம் நடந்து வர போறீங்களா??!!” மாதவன்.
திரும்பியவள் “என்டா சொல்லுற…??”
“மதுரைக்கு போகனும் குறிஞ்சி… இப்படியேவா போக முடியும்… வா வந்து வண்டியில ஏறு..” என்றவனை தான் முறைத்து பார்த்தாள்.
“ஏன்டா வர்றதுக்கு முன்னாடியும் போன் பண்ணல.. இப்ப நடுரோட்டுல வந்து நின்னுகிட்டு மதுரைக்கு போகனும் சொன்னா எப்படி.??அம்மா கிட்ட பத்திரிக்கை வச்சுட்டு வர்றதா தான் சொல்லிட்டு வந்து இருக்கோன்..இது தாமரைக்கு தெரிஞ்சா இன்னிக்கு அடுப்புல குறிஞ்சி குழம்பு தான் கொதிக்கும்”
“அதுக்கு முதல்ல நாங்க போன் பண்ணுனா நீ எடுக்கனும். எத்தனை கால்சுன்னு பாரு… காலையில இருந்து உன்ன பிடிக்க டிரை பண்ணுனா நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்குற குறிஞ்சி… ஃபோன் பிக் பண்ணாம..??” மாதவன் கத்தியே விட்டான். அவ்வளவு கோபம் அவள் மீது. காலையில் இருந்து அத்தனை முறை முயற்சித்து விட்டான் அவளுக்கு.  
அவசரமாக ஃபோனை திறந்து பார்க்க அத்தனை அழைப்புகள் இவர்கள் குழுவில் இருந்து “ஐய்யோ சரிடா ரித்து முழிச்சுக்குவான்னு சைலண்ட்ல போட்டேன் எடுக்க மறந்துட்டேன்” என்றவள் காதை பிடித்தாள் குறிஞ்சி.
“ம்ம் விடு..” சமாதானம் ஆனாவன் “நீ எல்லார் வீட்டுக்கு போக எப்படியும்  ரெண்டு மூனு மணி நேரம் ஆகும் தான அதுக்குள்ள மதுரைக்கு போயிட்டு வந்துடலாம் வா..”
குறிஞ்சி யோசித்தவள் சங்கரனுக்கு ஃபோன் செய்ய அவர் எடுக்க வில்லை என்பதால் மெசேஜ் அனுப்பினாள். சங்கரன் அதை பார்த்தது தெரிந்ததும், “சரி வா”  என்றவள் வழியில் சென்ற ஆட்டோவை நிறுத்த “குறிஞ்சி என்ன பண்ணுற??” மாதவன்.
“என்டா இப்ப தான் மதுரைக்கு போகனும் சொன்ன… அதுக்கு வண்டி  வேண்டாமா?? அதுக்கு தான் நிறுத்துறேன்.
“அது வண்டின்னா இதுக்கு பேர் என்ன??” கேட்டான் தன் மோஞ்சோவை காட்டி.
“டேய் இதுல சீட்டே இல்ல.. நீயே படுத்துகிட்ட தான் வர்ற.. உன் கூட இதுல வந்தா நான் உருண்டுகிட்டு தான் வரனும்… போடா” என்றவள் மீண்டும் தன் ஸ்கூட்டியை பார்த்து போக.. 
அவளை பார்த்து சடைத்தவன் “இரு குறிஞ்சி  கார் வர சொல்றேன்..” என்றவன் ஃபோனை எடுத்து காருக்கு சொன்னான்.
“கார் மதுரை நெடுஞ்சாலையில் வேகம் எடுக்க கைகள் ஸ்டியரிங்கில் தாளமிட “இன்னும் நீ மாறல குறிஞ்சி!!” என்றான் ரிவர் மிரர் வியூவில் அவளை பார்த்தபடி…
“எதுக்கு மாதவா நான் மாறனும்..??” கேட்டவள் கண்கள் சாலையில் தான் இருந்தது.
“எதுக்கு மாறனும்னா… இதோ இப்ப செஞ்சியே அதுக்கு தான்… நான் உன் ஃபிரண்டு தான என் கூட பைக்குல வர உனக்கு என்ன தயக்கம் குறிஞ்சி..??”
“இது தயக்கம் இல்ல மாதவா… நான் உன் ஃபிரண்டுன்னு எனக்கு தெரியும் உனக்கு தெரியும். எங்க வீட்டுல எங்க அம்மாவையோ அப்பாவையோ கேக்குறவங்களுக்கு தெரியாது… அவங்க கிட்ட அவங்க பொண்ண பத்தி விளக்கம் சொல்லுற வேலைய நான அவங்களுக்கு கொடுக்க விரும்பல… அவ்வளவு தான்” என்றவள் வார்த்தையில் எப்போதும் இருக்கும் தெளிவு. அவளை எப்போதும் பார்க்கும் பிரமிப்பான பார்வை தான் அவனிடம் இப்போதும்.
ஆறு வருட நட்பு. கல்லூரியில் ஆரம்பித்தது. விபரங்கள் தெரியாத விடலை பருவத்தில் அவள் சொன்ன அதே வார்த்தைகள் இன்று வளர்ந்து தன் சுயம் தெரிந்த பின்னும் சிறு பிசிறும் இல்லை அவள் வார்த்தைகளில்.
“நான் மாறுறது இருக்கட்டும்… உன்கிட்ட நிறைய வித்தியாசம் தெரியுதே.. என்ன விசயம்..” அவளுக்கு என்று அனுமானம் இருந்தாலும் அதை உறுதி படுத்த குறிஞ்சி கேட்டாள் மாதவனிடம்.
“அவ்வளவு அப்பட்டமாவா தெரியுது..” அவன் நம்பாமல் கண்ணாடியில் முகம் பார்க்க… “கொஞ்சம் வலது பக்கமா வழியுது பாரு… தொடச்சிக்க..” என்றதும் அவன் முகத்தில் லேசான சிவப்பு வண்ணம்.

Advertisement