Advertisement

விசாகா அவளை பார்த்து முறைத்தவள் “ஏன்டி நீயே வம்ப விலைக்கு வாங்குற… தாரணிய அண்ணனுக்கு பேசி இருக்காங்கனு சொன்ன பின்னாடி தான் உங்க அம்மா முகத்துல சிரிப்பே இருக்கு… இப்ப நீ அவங்கள பாக்குறது தெரிஞ்சது அவ்வளவு தான் உன்ன ஒரு வழி ஆக்கிடுவாங்க”
“அண்ணி…” பல்லை கடித்தவள் “ நான் பாக்கறேன்னு தான் சொன்னேன் சைட் அடிக்குறேன்னு சொல்லலை… அங்க பாருங்க உங்க உடன் பிறப்பை கல்யாணம் பண்ணிக்க போற பொண்ண எப்படி கல்லையும் மண்ணையும் பாக்குற மாதிரி பாத்து வைக்குறாறுன்னு.. இவரு எப்படி அண்ணி அந்த வியசத்துக்கு சரி பட்டு வருவாறு..!!”
விசாக அவள் பேச்சில் விக்கித்தவள்….அவசரமாக குறிஞ்சி பேசியது மற்றவர் காதில் விழுந்ததா என பார்க்க நல்ல வேளை அனைவரின் கவனமும் புடவையில் தான் இருந்தது.
“அடியேய் வாயிலையே அடிக்க போறேன் பாரு…”
“எதுக்கு அண்ணி?? நான் என்ன சொன்னேன்…கட்டிக்க போற பொண்ண கொஞ்சம் ரொமாண்டிக்கா பாக்காம இப்படி தள்ளி வைச்சா, பாக்குறவங்க என்ன நினைப்பாங்க?? அவருக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லையின்னு தான… அத தான் நான் சொன்னேன் இவரு இந்த கல்யாணத்துக்கு சரிபட்டு வருவாறான்னு கேட்டேன் நீங்க என்ன நினைச்சீங்க??” என்றாள் விசாகாவின் முகம் பார்த்து..
“நான் எதையும் நெனைக்கவும். இல்ல காயப்போடவும் இல்ல.. நீ இப்படியே பேசிக்கிட்டு இருந்தா நம்ம ரெண்டு பேத்தையும் உங்க அம்மா உறவைச்சு தெவச்சு காயபோட்டுவாங்க” என்றவள் புடவைகளை பார்க்க குறிஞ்சியும் வாயை மூடிக்கொண்டாள்.     
குறிஞ்சி  பார்ப்பதை பார்த்து அவனுக்கு தான் ஒரு மாதிரி இருந்தது. ‘அவள் மனதில் தன்னை பற்றி தவறாக ஏதும் நினைத்து இருக்கு கூடுமோ…’ என்று நினைத்தவன் “காலையில அத்தை பேசும் போதே பேச்சமுறிச்சு விட்டு இருக்கனும்..” என்று இப்போது கவலை பட்டான். 
அவன் பதின் பருவம் இல்லையே அவனுக்கு குறிஞ்சியின் மீதான உணர்வு என்ன?? என்று தெரியாமல் இருக்க!! தன்னையும் தாரணியையம் குறிஞ்சி ஆச்சர்யமாக பார்க்கவும் தான் அவன் தாரணியை “எழுந்து போ” என்றது. 
அவள் மனதில் தன்னுடன் தாரணியின் பிம்பம் பதிய கூடாது என்று தான் நினைத்தான் அதுவே இன்னும் சிறிது நேரத்தில் தவறாக பதிய போவது தெரிந்து இருந்தால்  அவன் வேண்டுதல் தன் பிம்பம் தாரணியுடன் இல்லாமல் நல்ல விதமாக பதியட்டும் என்று  நினைத்து இருப்பான்.
“எழுந்து போ” என்று சொல்லியும் தாரணி அவனை விட்டு நகராமல் இருந்தது வேறு அவஸ்தையாய் இருக்க அந்த இடத்தை விட்டு அவனே எழுந்து விட்டான். அவன் எழுந்த வேகத்தில் “என்ன மாப்பிள்ள??” நந்தீசன் கேட்க..
“சரக்கு வந்து இருக்குடா இறக்கிட்டு வந்துடுறேன்..”  சொல்லிவிட்டு இடத்தை விட்டு சென்று விட்டான்.
அனைவரும் புடவையில் கவனமாக இருக்க புவனா மட்டும் குறிஞ்சி எடுத்த புடவைகளையே “தனக்கும் நன்றாக இருக்கும்” என சொல்லி வாங்கி கொண்டு இருந்தாள்.
காலையில் தாரணி வேலு கல்யாண பேச்சில் தன்னை மறந்து இருந்த குறிஞ்சிக்கு புவனாவின் செயல்கள் புரியாமல் போனது.
கிட்ட தட்ட இரண்டு மணி நேரம் ஆகியும் இன்னும் இவர்களின் தேடல் முடியாமல இருக்க… குறிஞ்சிக்கு சலித்து விட்டது… விசு அவள் முகத்தை பார்க்க “ண்ணா முடியலை..” என்றவள் அவர்களை விட்டு தள்ளி வந்தாள்.
வெளியில் பவனுடன் குழந்தைகள் விளையாடிய படி இருக்க இவளை பார்த்ததும் “அத்தை வா விளையாடலாம்..” என் காலை கட்டிக்கொண்டான் ரித்து.
குறிஞ்சி வெளியில் வரவும் அவள் பின்னால் தாரணியும் வர “என்ன குறிஞ்சி புடவை எடுக்காம வெளிய வந்துட்ட..??”கேட்டாள் தாரணி.
குறிஞ்சி காலை கட்டிக்கொண்ட ரித்துவை தூக்கி கொண்டவள் “எனக்கு அம்மாவும் அண்ணியும் எடுத்துடுவாங்க தாரணி” என்றவளை “அப்படியா” என பார்த்தாள் தாரணி.
“ஏன் உனக்கு உங்க அம்மா எடுத்தா பிடிக்காதா??” தாரணியை கேட்க..” “பிடிக்காது இல்ல அவங்களுக்குன்னு ஒரு ரசனை இருக்குல…” என்றவள் எதையே யோசித்தபடி “ஆமா புவனாவை கட்ட உங்க வீட்டுல எப்படி சம்மதிச்சாங்க??” என்றாள்.
தாரணியின் கேள்வியில் குறிஞ்சி அவளை பார்க்க அதில் “உன் கேள்வி எனக்கு பிடித்தம் இல்லை” என்றது.
குறிஞ்சி அமைதியாக இருக்க “அது புவனாவுக்கு கொஞ்சம் ஹெட்வெயிட் அதிகம்.. எப்பவும் தான் நினைச்சது தான் நடக்கனும் அப்படின்னு அடம் பண்ணுவா..இப்ப கூட பாரு அவங்கள விட நீங்க வசதியில ரொம்ப சுமார் தான்” என்றதும்..
கை காட்டி அவள் பேச்சை நிறுத்தியவள் “ஏன் எங்க வசதிக்கு என்ன?? எங்க அண்ணாவும் கம்மியா எல்லாம் சம்பாதிக்கல.. அவங்கல நம்பி வர்ற பொண்ண நல்ல வச்சுகுற அளவுக்கு தான் சம்பாதிக்குறார்.. அதை பத்தி நீங்க கவலை பட வேண்டாம்..” குறிஞ்சியின் பேச்சில் அத்தனை கோபம்.
தாரணி அவர்களின் வசதியை பற்றி பேசியதில் அத்தனை கோபம் அவளுக்கு “என்ன தெரியும் இவளுக்கு எங்களை பற்றி வாய் இருந்தா எதையும் பேசிடுவாளா??” என்று.
குறிஞ்சி தாரணியை கேட்கவும் “இல்ல குறிஞ்சி நான் அப்படி சொல்லல நீங்க எங்க பாவா வீட்ட விட வசதியில கம்மிதான்னு சொன்னேன்” என்று அவள் மீண்டும் அதை சொல்ல…
“அதுக்கு இப்ப என்ன பண்ணலாம்..!!” கேட்ட குறிஞ்சியின் தேரணையிலேயே தாரணி தான் ஏதோ பேச போய் அது தவறாக முடிந்து உள்ளது என்று மட்டும் புரிந்து கொண்டாள்.
“இல்ல குறிஞ்சி அது..” தாரணி என்ன பதில் சொல்ல என தெரியாமல் இழுக்க “வேணுன்னா உங்க பாவாகிட்ட சொல்லி கல்யாணத்தை நிறுத்த சொல்லாமா..??” குறிஞ்சி நக்கலாக கேட்கவும்…
“வாய மூடு குறிஞ்சி..” அவர்களுக்கு பின்னால் இருந்து வந்த சத்தத்தில் தாரணி மிரண்டு போய் பார்த்தாள் என்றாள் குறிஞ்சி “வாய மூடலையின்ன என்ன பண்ணுவீங்க..” என பார்த்தாள்.
வேலு தாரணியிடம் இருந்து எழுந்து சென்றவன்  நேராகா அவன் ரூமில் சென்று அமர்ந்து கொண்டான். ஏனோ குறிஞ்சி தன்னை அப்படி குறுகுறுவென பார்த்தது அவனுக்கு பிடிக்கவில்லை. “இந்த தாரணி லுசா என்ன தான் பண்ணுறது இவள..??” நினைத்த படி இருந்தவன் ஜன்னல் வழியே பார்க்க அங்கு குறிஞ்சி ரித்விக்கை தூக்குவது தெரிந்தது. 
“எல்லாம் அங்க இருக்கும் போது இவ இங்க என்ன பண்ணுற??” யோசித்தவன் அவளை தனியாக பார்க்கும் சந்தர்பத்தையும் விட முடியவில்லை. அவன் ஜன்னல் வழியே பார்த்தால் அவள் எதிரில் நின்று இருந்த தாரணி அவனுக்கு தெரியவில்லை. 
அவளுடன் பேசும் எண்ணம் எல்லாம் இல்லை என்ன செய்கிறாள் பார்க்கலாம் என்று தான் அவன் வந்தது. அவன் வரும் போதே தாரணி பேச்சை முடித்து விட அவன் கேட்டது குறிஞ்சியின் பேச்சை மட்டும் தான்.
 
“பாவா..” தாரணி பயந்து போய் அவனை பார்க்க “நீ உள்ள போ தாரணி..” என்றான். தாரணிக்கு நன்கு தெரியும் வேலு எந்த அளவுக்கு அமைதியோ அதே அளவிற்கு கோபமும் வரும் என்று. இப்போது அவன் வார்த்தையில் இருந்தே அவன் கோபத்தின் அளவை கண்டவள் குறிஞ்சியை பார்த்த படி மெதுவாக நடக்க, அவளே அவனை “நீ எல்லாம் எனக்கு ஒரு ஆளா??” என்று தான் நின்று இருந்தாள்.   
 
“இப்ப சொல்லு எதுக்கு கல்யாணத்தை நிறுத்தனும்??” வேலு  குறிஞ்சியை பார்க்க..
“அத எதுக்கு என்கிட்ட கேக்குறீங்க உங்க வருங்காலத்துகிட்ட கேக்க வேண்டியது தான?? வந்ததும் பத்திரமா அவங்கள அனுப்பிட்டு என்ன கேட்டா?? யார் ஆரம்பிச்சாங்களோ அவங்கள கேளுங்க..” என்றாள் முகத்தை உம்மென வைத்து 
“யார் வருங்காலம் அவளா!!.. அதை நான்தான முடிவு செய்யனும்.. என் முடிவ இப்ப இருந்தே நீ எடுக்க ஆரம்பிச்சிட்டியா” என்றவன் கோபமும் அவள் பேசிய பாவனையில் கொஞ்சம் குறைந்து இருந்தது. இருந்தும் முகத்தில் எதுவும் காட்டதவன்   “யார் ஆரம்பிச்சா என்ன?? நீ எப்படி சொல்லாம் அந்த வார்த்தைய..”
“ஏன் சொன்னா என்ன தப்பு…அவங்க மட்டும் இஷ்டத்துக்கு பேசலாம்.. அதுக்கு நான் பதில் சொன்னா என்னையே கேள்வி கேப்பீங்களா?? போங்க போய் அவங்க கிட்ட பேசுங்க அத விட்டு என்னைய மிரட்டுற வேலை வேண்டாம்” அவள் சொன்ன தோரணையில் அவளை மேலிருந்து கீழாகா ரசனையாக பார்த்தவன்…..      
“யாரு மிரட்டுறா… கேள்வி கேட்டா பதில் சொல்லனும்.. நாளைக்கு என் தங்க வந்தலும் இப்படி தான் பேசுவியா நீ??” தொனி மாறாமல் அவன் கேட்டதில் கோபம் இல்லை சீண்டல் மட்டும் தான் இருந்தது.
குறிஞ்சிக்கு இருந்த கோபத்தில் அது அவளுக்கு தெரியவில்லை “அது உங்க தங்கச்சி என்கிட்ட நடந்துகுறத பொறுத்து இருக்கு…” என்றால் அதே குரலில்
குறிஞ்சி சொன்னதும் அவளை தான் உற்று பார்த்தான் வேலு. அவனுக்கு யார் எப்படி பேசினாலும் குறிஞ்சி மட்டும் தவறாக வார்த்தை விட கூடாது என்று எண்ணத்தில் பேச, குறிஞ்சிக்கோ  அடுத்தவர் தரும் மரியாதையை கொண்டுதான் என் பேச்சும் இருக்கும் என்று பேச… இருவரும் முட்டிக்கொண்டு நின்றனர்……….
 

Advertisement