Advertisement

                           ஓம் நமச்சிவாய
அத்தியாயம் 5
இன்று மூகூர்த்த புடவை எடுக்க போவதால் குறிஞ்சி வீட்டில் அனைவரும் தயாராக…
குறிஞ்சி “அண்ணி புடவை  எந்த கடையில எடுக்க போறாங்க??” கேட்டாள் விசாகவிடம்.
“கடையில இல்ல குறிஞ்சி அவங்க தறிக்கே போக போறோம்..” என்றவளிடம் “என்ன அவங்க தறிக்கா..??  எதுக்கு அண்ணி?? நல்லி இல்லன்னா குமரனுக்கு போகலாம்ல.. நிறைய கலெக்சன்ஸ் இருக்கும்.. நாமலும் நமக்கு புடிச்சதை வாங்கலாம்”
“ஏய்  அவங்க தறியில இருந்து தான் அந்த கடைக்கே போகுது… நீ கடைக்கு போக சொல்லுற..”
“ஓஓஓ…” அத்துடன் அந்த பேச்சை முடித்துக்கொண்டாள். விசாக “தறி” என்றதும் வேலுவின் முகம் தான் அவள் நினைவில் வந்தது, உடன் தாமரையின் பயந்த முகமும். ஏனோ இத்தனை நேரம் இருந்த பரபரப்பு காணாமல் போனது போல் இருந்தது குறிஞ்சிக்கு.
“என்ன குறிஞ்சி யோசனை??” கேட்டாள் விசாகா ரித்விக்கை தயார் செய்த படி….  
“ஒன்னும் இல்ல அண்ணி..” என்றவள் ரித்விக்கை அழைத்து கொண்டு கீழே வர, வினாயகம் அனைவரையும் வண்டியில் ஏறச் சொல்லிக்கொண்டு இருந்தார்.
குறிஞ்சி ரித்விக்கை வைத்துக்கொண்டு ரஞ்சனிடம் அமர்ந்து கொள்ள, விசுவும் விசாகாவும் அடுத்து அடுத்து அமர அவர்கள் சென்றது வேலுவின் வீட்டிற்கு தான். குறிஞ்சி ரித்விக்குடன் விளையாடிய படி வந்ததால்  அவர்கள்  எங்கு வந்து இருக்கிறார்கள் என அவள் கவனிக்க வில்லை.
“அம்மு ரித்தியை கொடு” என விசு ரித்விக்கை தூக்கி கொண்டு இறங்கும் போது தான் கவனித்தாள் அவர்கள் வந்த இடத்தை. “அண்ணி அவங்க தறிக்கு போறோம்னு சொல்லிட்டு அவங்க வீட்டுக்கு வந்து இருக்கோம்.. இங்க எதுக்கு அண்ணி நோர அங்கயே போயிருக்கலாம்ல…” 
கீழே இறங்கி கொண்டு இருந்த விசாக அவளின் பேச்சை கவனித்தாலும் அவள் குரலில் இருந்த மாறுபாட்டை கவனிக்கவில்லை. “என்ன கேக்குற குறிஞ்சி அதுக்காக நோரா அங்கயேவா போக முடியும் வீட்டுக்கு வந்துட்டு அங்க போகலாம்னு செல்வம் சித்தப்பா சொல்லிருந்தாங்க அது தான்… இறங்கு கீழ…” என்றவள் இறங்கி சென்று  விசுவுடன் சேர்ந்து கொள்ள…
“எங்க குறிஞ்சி??” விசு
“வர்றா..” விசாக பதில் சொல்ல, வண்டியில் இருந்து இறங்கி கொண்டு இருந்தவளை தான் அவன் அறையில் இருந்து பார்த்து கொண்டு இருந்தான் வேலு.
வியாபார விசயமாக வெளியூர் சென்று இருந்தவன் இன்று அதிகாலையில் தான் திரும்பி இருந்தான். இரண்டு நாட்கள் உறங்காமல் கண்கள் சிவந்து போய் இருக்க, குறிஞ்சி வீட்டில் இருந்து வர நேரம் இருப்பதால் தூங்க சென்றவன் படுக்கையில் விழுந்தும் தூக்கம் மட்டும் இமை தழுவ மறுத்தது.
“டேய் அவ வரும் போது இப்படிய நிப்ப… பாரு அவ ஏற்கனவே வேலுதம்பின்னு  உன்ன ஓட்டுறா.. நீ இப்படி போயி நின்னா வேற எதாவது சொல்லிட போறா..” அவன் மனம் சொல்ல, கண்ணாடியில் வேலு முகம் பார்க்க அவன் முகத்தின் சோர்வை அது காட்டியது. குறிஞ்சியை நினைத்ததும் சோர்வை மீறி ஒரு மலர்ந்த புன்னகை அவன் முகத்தில்.
நேரம் பார்க்க அது ஏழை காட்ட ”வந்துடுவாங்க” சொன்னவன் குளித்து வரவும்  குறிஞ்சி வந்த வண்டியின் சத்தம் கேட்க அறை ஜன்னாலில் இருந்து தான் பார்த்தான் அவளை. குறிஞ்சியை பார்த்ததும் அவனுக்கு தோன்றியது “அராத்து’ என்று தான். வண்டி நின்றது கூட தெரியாமல் ரித்துவுடன் வாய் பேசுபவளை எப்படி சொல்ல??.
அவசரமாக உடை மாற்றி வந்தவன் அனைவரையும் அழைக்க குறிஞ்சி மட்டும் அவனை பார்ப்பதை தவிர்த்து விட்டாள். ரித்துவுடன் வினோவும் அவளுடன் இருக்க அவள் கவனிக்காதது வேலுவுக்கு வித்தியாசமாக ஏதும் தெரியவில்லை.
“அனைவரும் காலை ஆகாரத்தை முடித்துக்கொண்டு  புடவை எடுக்க போகலாம்” என செல்வம் சொல்ல வினாயகம் “சரி” என்றார்.
சாப்பிட்டு அனைவரும் கிளம்பும் நேரம் சரியாக வந்தார் தேவிகா மகள் தாரணியுடன். “வா தேவி வாம்மா தாரணி..” பொன்னு வரவேற்க்க “ம்ம்..”என்ற சத்தம் மட்டும் தான் அவரிடம். தாரணியிடம் அதுவும் இல்லை. அங்கு இருந்தவர்கள் யாரையும் கண்டு கொள்ளாமல் அவள் நேராக சென்றது “பாவா எப்படி இருக்கீங்க??” என்ற படி வேலுவிடம் தான்.
வேலுவும் தேவிகாவை “வாங்க அத்தை” என்றவன் தாரணியிடமும் “வா தாரணி..” என்றான் 
“இவங்க என் நாத்தனார் இது அவங்க பொண்ணு” என் தேவிகாவையும் தாரணியையும் பொன்னு அனைவருக்கும் அறிமுகம்  செய்ய, வந்திருந்தவர்களை மித்தப்பாக ஒரு பார்வை பார்த்தவர் “என்ன அண்ணி… பொதுவா நாத்தனார் சொல்லிட்டீங்க?? நான் தான் வேலுவுக்கு பொண்ணு கொடுக்குற சம்பந்தின்னு சொல்லுங்க அண்ணி” 
தேவிகா சொன்னதும் மனதில் இருந்த ஏதோ ஒரு அழுத்தம் இறங்கியது போல் இருந்தது குறிஞ்சிக்கு. குறிஞ்சி வேலுவை குறும்பாக பார்க்க தாமரை “அப்பாடா..” என பெருமூச்சு விட்டார் யாருக்கும் தெரியாமல்.
“அப்ப வேலுக்கு பொண்ணு சொந்தத்துல இருக்கா..அதுவும் நல்லது தான்..” செல்வி சொல்ல “அதெல்லாம் இன்னும் பேசக்கூட இல்லை அதுக்குள்ள என்னக்கா பேச்சு இது..??” கமலம் தான் கடுகடுத்தார்.
“அதென்ன கமலா அப்படி சொல்லிட்ட என் பொண்ணு பொறந்தப்பவே வேலுவுக்கு தான்னு முடிவு பண்ணுனது தான… எங்க அண்ணா இல்லையின்னா அது இல்லையின்னு ஆகிடுமா??” தேவிகா இப்போதே வேலுவுக்கும் தாரணிக்கும் கல்யாணத்தை நிச்சயம் செய்து விடும் வேகத்தில் பேச…
புவனா “அத்த… கல்யாணம் எங்க அண்ணனோட விருப்பம் அவர் சொல்லும் போது இந்த பேச்ச ஆரம்பிக்கலாம் இப்ப எதுக்கு தேவையில்லாத பேச்சு”
புவனாவிற்கு தேவிகாவையும் தாரணியையும் பார்த்தாலே ஆகாது. அதிலும் தாரணி வேலுவுக்கு தான் என்று தேவிகா சொல்லிவிட்டாள்…. அவளின் கோபம் உச்சிக்கு வந்துவிடும். புவனா அவளுக்கே தெரியாமல் செய்யும் நல்ல விசயம் என்றால் அது வேலு தாரணி கல்யாணப் பேச்சை எடுத்தால் அதை வெட்டுவதை போல் பேசுவது தான். 
“எது தேவையில்லாத பேச்சு..??” தேவிகா புவனாவுடன் சண்டைக்கு போக…
அங்கு இருந்த மற்றவர்களுக்கு தான் “என்ன இது..” என்ற சங்கட நிலை என்றால் பொன்னுவுக்கும் கமலத்திற்கும் தேரை இழுத்து விட்டுக்கொண்டது போல் இருந்தது.
தேவிகாவை வாயை மூட சொல்லவும் முடியாமல் புவனாவை சும்மா இரு என்று சொல்லவும் முடியாமல் மலங்க மலங்க முழித்த படி நின்று இருந்தனர்
கல்யாணப் பெண், மாப்பிள்ளை வீட்டினர் வந்து இருக்கும் போது சண்டை என்று இல்லா விட்டாலும்  இப்படி முகத்தில் அடித்த படி பேசுவது பொன்னுக்கும் சற்று அதிர்ச்சியாகத் தான் இருந்தது.
வேலுவுக்கோ பெண்கள் பேசும் போது தான் ஏதாவது சொன்னால் அதையே காரணமாக கொண்டு தேவிகா அடுத்த பேச்சை ஆரம்பிப்பார் என்பதாலேயே அவன் அமைதியாக இருந்தான்.
 
கமலம் பேசி விடுவார் தான் தேவிகாவை பேசினால் செல்வம் எதுவும் சொல்ல மாட்டார் என்றலும் இப்போது ரஞ்சன் வீட்டினர் முன் தேவையில்லாதா வாக்கு வாதம்  என்பதால் தான் அவரும் அமைதியாக இருந்தார்.
“எல்லாம் இந்த அண்ணிய சொல்லனும்… முதல்ல இருந்தே அவங்க அடக்கி வைச்சு இருந்தா இப்பிடி எல்லார் முன்னாடியும் விவஸ்தை இல்லாம பேசுமா?? அப்படி என்ன தான் பயமோ இவங்களுக்கு அமைதியா இருந்தே அடுத்தவங்கள ஆட்டி வைக்குறது” மனதில் பொன்னுவை வறுத்த படி செல்வத்தை பார்க்க அவரும் அதே நிலைமையில் தான் நின்று இருந்தார்.
 
வினாயகம் தான் “செல்வி நேரம் ஆச்சு பாரு… இன்னும் என்ன அங்க பேச்சு… நல்ல நேரம் முடியறதுகுள்ள புடவை எடுக்க வேண்டாம்மா..” சத்தம் கொடுக்க செல்வம் அவரை நன்றியாக ஒரு பார்வை பார்த்தார்.
“அடேய் பொம்பளைங்க ஒன்னா சேந்தா இப்படி பேச்சு எல்லாம் வர தான் செய்யும்… போ எல்லாரையும் வண்டியில ஏற சொல்லு..” என்று செல்வத்தை சமாதானம் செய்தவர் அவரும் ஏறிக்கொண்டார்.  
தேவிகா பேச ஆரம்பித்தில் இருந்து எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கும் வேலுவை முறைத்த படி வந்தான் நந்தீசன் “என்ன மாப்பிள்ள அப்ப இருந்து வச்ச கண்ணு மாறாமா என்னையே பாக்குற… அந்த பக்கம் திரும்பி பாருடா மலரு உன்னைய முறைச்சு பாக்குது..” வேலு
“அவ எதுக்கு முறைக்குறான்னு எனக்கு தெரியும்.. அத எப்படி சரி செய்றதுன்னும் எனக்கு தெரியும்..”
“எப்படிடா மலரு முறைக்குறத சரி செய்வ… எனக்கும் கொஞ்சம் சொல்லு நாளைக்கு உன் தங்கச்சி வந்தா சரி செய்ய எனக்கும் தோதா இருக்கும்..” குறிஞ்சியை பார்த்த படி நந்தீசனிடம் கேட்க…
“இப்ப உன கழுத்துல என் கைய வச்சு ஒரு அழுத்து அழுத்தி உன் கண்முழி பிதுங்கி வெளிய வந்துச்சினா உன் தங்கச்சி முறைக்குது சரியா போகும் இப்ப அவ முறைப்புக்கு அது தான் வைத்தியம்…”
அவன் பதிலை கேட்டவன் வாய்குள் சிரிப்பை அடக்கி “எதுக்குடா இந்த கொலை வெறி..” என்றான் தெரிந்து இருந்தும்.
“எப்படிடா எல்லாம் தெரிஞ்சும் எதுவும் தெரியாதவன் போலவே இருக்குற… உங்க அத்தை வரும் போது எல்லாம் நீ தான் மாப்பிள்ளன்னு ஏலம் போடாத குறையா சொல்லுறாங்கள… அதுவும் இப்ப வந்து இருக்குறவங்க முன்னாடி பேசுறாங்க…”
“நீ புடிச்சு வைச்ச பிள்ளையாரா நிக்குற…அந்த வாய தொறந்து பேச்ச நிறுத்துங்கன்னு சொன்னா  உள்ள வைச்சு இருக்குறது ஏதும் வெளிய கொட்டிடுமா??” 
“அதுக்கு ஏன்டா எதுவும் பதில் சொல்ல மாட்டீங்குற…உனக்கு தான் தாரணிய புடிக்காதுல.. அப்ப பட்டுன்னு சொல்லிட வேண்டியது தான… எனக்கு தாரணிய கல்யாணம் செய்ய பிடிக்கலையின்னு…சும்மா அந்த பொண்ணு மனசுலயும் ஆசைய வளக்காத வேலு… அது உன்னையே சுத்தி சுத்தி வருது..” நந்தீசன்  
‘யாரு அவ என்ன சுத்தி வர்றாளா??’ மனதில் நினைத்தவன், “ அப்பா வழியில செந்தம்ன்னு இருக்குறது அத்தை மட்டும் தான் அவங்க கிட்ட அப்படி முகத்துல அடிச்ச மாதிரி பேச முடியாதுடா…”
“அப்ப தாரணியை கல்யாணம் செஞ்சுகிறியா??”
“நான் எப்ப அப்படி சொன்னேன்…?? கொஞ்சம் நாள் போகட்டும் நானே தாரணிக்கு அவங்க எதிர் பாக்குறது போல மாப்பிள்ளை பாத்துட்டு பேசுறேன்… அது வரைக்கும் அவங்க பேச்சை கண்டுக்காம இருக்கலாம்..”
“அதுக்குள்ள உங்க அத்தை தாலிய எடுத்துட்டு உன் முன்னாடி நின்னு என் பொண்ணு கழுத்துல கட்டுன்னு சொல்லாம இருந்தா சரி தான்..” என்றவன் மனம் மட்டும் “அவங்களுக்கு உன் அளவுக்கு சொத்து வேணும் அதுக்கு எங்க போய் நீ மாப்பிள்ளை பாப்ப போடாங்க…” என வேலுவை திட்டிக்கொண்டு இருந்தது.
வேலு “மாப்பி நீ திட்டுறது தான் திட்டுற கொஞ்சம் நல்ல வார்த்தைய போட்டு திட்டு.. செத்து போன பாட்டி கூட வறுத்த படுது இல்ல” நந்தீசனை பார்க்க “மூடுறா போதும் திட்டுறதுல கூட நல்ல வார்த்தை வேணுமா உனக்கு.. வர சொல்லுடா அந்த கிழவிய உன்ன போல ஒருத்தன கொடுத்ததுக்கு திரும்ப கொன்னு புதைச்சு வைச்சுடுறேன்..” .
“அவ இவன சுத்தி வருவாளாம் இவரு அவங்களுக்கு மாப்பிள்ளை பாத்து கல்யாணம் பண்ணிவைப்பாறாம்….” நந்தீசன் பேசிக்கொண்டு வர தறி கூடம் வந்து விட்டனர்.
“நல்ல நேரம் போறதுகுள்ள முதல்ல முகூர்த்த புடவை எடுத்திடலாம் அப்பறம் மத்ததுக்கு எடுக்கலாம்…” செல்வி சொல்ல புவனா ரஞ்சனை தான் தேடினாள். வந்ததில் இருந்து அவன் முகத்தை கூட சரியா பார்க்காமல் இருந்தவள் செல்வி சொன்னதும் அவனை தேட…
“அப்பா ஒரு வழியா என்னைய தேடிட்டியா!!” என்ற படி அவள் அருகினில் சென்று அமர்ந்து கொண்டான். ரஞ்சன் புவனாவிடம் அமர்ந்ததும் ரித்து, வினோ, பவன், தாரணி, மலர், விசாகா, மஞ்சரி உடன்  குறிஞ்சியும் “ஓஓஓஓஓ” என கத்த  ரஞ்சன் சிரிக்க, புவனாவின் முகத்தில் வெட்க சிரிப்பு.
சிறியவர்கள் அவர்களை சூழ்ந்து கொள்ள செல்வி “பசங்களா நேரம் போறதுகுள்ள புடவைய எடுத்துடுங்க அப்பறம் உங்க பேச்ச வைச்சுக்குங்க..” என்றவர் வேலை ஆட்கள் கொண்டு வந்த புடவைகளை பார்க்க  ஆரம்பித்தார்.
மலருடன் நந்தீசனும் விசுவுடன் விசாகாவும் அமர்ந்து கொள்ள வேலுவுக்கு அருகில் இருந்த இடத்தில் வாகாக அமர்ந்து கொண்டாள் தாரணி. 
வேலு அவளை முறைத்தவன் “தாரணி எழுந்து அத்தை கிட்ட போ இல்லையின்னா அம்மா கிட்ட போ..” வார்த்தையில் இருந்த கோபத்தை முகத்தில் காண்பிக்க வில்லை அவன். தாரணி அவனிடம் அமர்ந்ததும் சட்டென அவன் பார்த்தது குறிஞ்சியை தான். அவளும் இவர்களை தான் ஆர்வமாக பார்த்து கொண்டு இருந்தாள்.
“என்ன குறிஞ்சி புடவைய பாக்காம அங்க என்ன பாக்குற??” விசாக அவள் காதில் கேட்க, “வேலுதம்பிய தான் பாத்துகிட்டு இருக்கேன் அண்ணி..”

Advertisement