Advertisement

அத்தியாயம் எட்டு:

ப்ரீத்திக்கு மனம் பட படவென்று அடித்துக் கொண்டது….. ஹரி அவளின் இதழ்களைத் தொட்டு அதை மூடி விட்ட போது, “ஐ டோன்ட் லைக் திஸ்”, என்று அவளின் கண்கள் ஹரியை பார்த்து சொல்ல, அதை கவனியாதவன் போல நிதினை அனுப்ப முனைந்துக் கொண்டிருந்தான்.

ஹரியின் முன் சென்று நின்றவள், கையை நீட்டினாள் சாவிக்காக, வாய் திறந்து கேட்காமலேயே,

தான் தொட்டது ப்ரீத்தியை மிகவும் டென்ஷன் செய்து விட்டதை உணர்ந்த ஹரி, நிதினை போகுமாறு சைகை செய்தான்.

அவனும் உடனே கிளம்பிவிட்டான்.

ப்ரீத்தியின் அருகில் இன்னும் ஹரி நெருங்கி வர, பின்னடந்தாள் ப்ரீத்தி.

“உனக்கு குட் டச், பேட் டச் தெரியாதா? இது என்ன பேட் டச்சா? நீ இவ்வளவு டென்ஷன் ஆகற அளவுக்கு”, என்றான்.

“லிப்ஸ் தொடறது எல்லாம் ஓவர். இப்படி எல்லாம் பண்ணாதீங்க. you should know your limits”, என்றாள் கோபமாக ப்ரீத்தியும்.

“i dont find any limits withyou”, என்றான் தைரியமாக ஹரியும், “என்னவோ பெரிய அப்பா டக்கர் மாதிரி ஹலோ சீனியர்ஸ்ன்னு பார்த்த முதல் நாளே என்னை பார்த்து வந்த, இப்போ என்ன?”, என்றான்.

“ஹலோ சீனியர்ஸ்ன்னு வந்தா நீ என் லிப்ஸ் தொட்டுடுவியா”,

“கைல தானே தொட்டேன், அதுக்கு எதுக்கு இவ்வளவு டென்ஷன்……”,

“என்ன?”, என்று இன்னும் அதிர்ந்த ப்ரீத்தி, “என்ன சொல்ற நீ”, என்றாள். கேட்ட விதமே விட்டால் அடித்து விடுவாள் போல தோன்றியது. அது இன்னும் ஹரியை உசுப்பேற்ற…..    

“ம், கைல தானே தொட்டேன்! என்னோட லிப்ஸ்லையா தொட்டேன்!”, என்று கூலாக கண்ணடித்து சொல்லவும்,

“ஹேய், திஸ் இஸ் யுவர் லிமிட், ஜஸ்ட் ஃபிரண்ட்ஷிப்பா பேசினா, நீ இப்படி எல்லாம் பேசுவியா”, ப்ரீத்தியின் முகம் ஆத்திரத்தில் சிவந்து விட்டது.   

“நான் உன்கிட்ட எப்பவாவது நான் உன் ஃபிரண்ட்ன்னு சொன்னனா, நீயா நினைச்சா அதுக்கு நான் என்ன பண்ண முடியும்”, என்று ஹரி அலட்சியமாக தோளைக் குலுக்கினான்.

“you are really disgusting, how can you talk to me like this”, இதை சொல்லும் போது ப்ரீத்தியின் குரல் கோபத்தில் நடுங்கவே ஆரம்பித்தது.  

“so what, எனக்கு உன்கிட்ட இப்படி பேச தான் பிடிச்சிருக்கு”, என்று அப்போதும் ஹரி கூலாகவே நின்றான்.  

ப்ரீத்தி மிகவும் டென்ஷனாகிவிட்டாள், அவளின் கட்டுப்பாட்டை இழந்து கொண்டிருந்தாள். கையில் இருந்த ராக்கெட்டை அவன் மீது வீசலாமா என்பது போல யோசிக்க……. 

ப்ரீத்தியின் கட்டுப்பாடற்ற கோபம் புரிந்தவன், 

“ஓகே ஹனி, கூல். நாம இது பத்தி இப்போதைக்கு பேச வேண்டாம். ஓகே”, என்று சமாதானம் பேசியவன், “லெட்ஸ் திங்க்ஸ் கோ லைக் திஸ். உனக்கு என்னோட ஃபிரண்டா மட்டும் தான் இருக்கணும்னா ஓகே”,  

இப்போதைக்கு அது மட்டும் இருக்கட்டும் என்று ஏதோ பெரிய மனது பண்ணியவன் போல சொல்ல,

“எனக்கு தேவையேயில்லை”, என்று சொல்லி, “சாவியே வேண்டாம்”, என்பது போல ப்ரீத்தி வேகமாக அவளின் ராக்கெட் ஷோல்டர் பேகோடு நடக்க…….

“அதான் செய்ய மாட்டேன்னு சொல்றேன் இல்லை”, என்று அவள் முன் வேகமாக போய் நின்றான்.

“என்ன செய்ய மாட்ட?”,

“இப்படி உனக்கு பிடிக்காத மாதிரி I swear”, என்று கழுத்தில் கையை பிடித்து நிற்க……..

“நீ நல்லவனா? கெட்டவனா?”, என்பது போல ப்ரீத்தி ஒரு லுக் விட்டாள்.

காதை பிடித்து தோப்புகரணம் போடுவது போல ஹரி ஒரு பாவனை கொடுத்தான்.

அதற்கும் அசருவேணா என்பது போல ப்ரீத்தி நிற்க, தோப்புக்கரணமே போடவும்,    

ப்ரீத்திக்கு தானாக முகத்தில் புன்னகை மலர்ந்தது.

“நீங்க ஏன் இப்படி பண்றீங்க?”, என்றாள்.

ஒருமையில் இருந்து பன்மைக்கு அழைப்பு மாறியதை தொட்டு அவள் கோபம் குறைந்து விட்டது என்றுணர்ந்த ஹரி,

“எப்படி பண்றேன்?”, என்று வசீகரமாய் ஒரு புன்னகை புரிந்தான்.  

ஹரியின் புன்னகை ப்ரீத்தியை வெகுவாக கவர்ந்தது, என்ன சொல்வது என்று தெரியாமல், “சாவியைக் குடுங்க”, என்றாள்.

“நீ எனக்கு லிஃப்ட் குடுத்தா சாவி குடுக்கறேன்”, என்று ஹரி டீல் பேசினான்.  

“அய்யோடா, அது என் வண்டி சாவி”,

“நான் எப்போ என்னதுன்னு சொன்னேன்”, என்று ஹரி சீரியசாக கேட்க,

ப்ரீத்திக்கு நன்றாகவே சிரிப்பு வந்தது…..

“லிஃப்ட் குடுக்கறேன் சாவி குடுங்க, ஆனா ஒரு கண்டிஷன். வீடு வரைக்கும் வந்து இறங்கணும். அதை விட்டுட்டு இந்த தெரு முனையில் இறங்கறது எல்லாம் எனக்கு ஆகாது. என்னால அப்படி எங்க வீட்டுக்கு தெரியாம எந்த வேலையும் செய்ய முடியாது”,

“ஒருவேளை உங்க வீட்ல இருக்குறவங்களுக்கு பிடிக்கலைன்னா”,

“அப்படி எல்லாம் எங்க அம்மா அப்பா கிடையாது. ஒரு வேளை அவங்களுக்கு பிடிக்கலைன்னா நான் செய்ய மாட்டேன் thats for sure”,

“ஒருவேளை அவங்களுக்கு பிடிக்கலை, உனக்கு பிடிச்சதுன்னா”,

“அவங்களுக்கு சொல்லிப் புரியவைப்பேன், புரிஞ்சிக்குவாங்க”, என்றாள் நம்பிக்கையாக.

“ஓகே நம்பறேன்”, என்றான் ஹரி.

“எதை”,

“உனக்கு பிடிச்சா எப்படியும் நீ செய்வேன்றதை”, என்று புன்னகையோடு சொன்னான்.  

“நீங்க பேசறது எனக்குப் புரியவேயில்லை”,

“மெதுவா புரிஞ்சிக்கலாம். ஒன்னும் அவசரமில்லை. இன்னும் நமக்கு நிறைய டைம் இருக்கு”,  

ப்ரீத்தி புரியாமல் பார்க்கவும், “இன்னைக்கு இது போதும் ஹனி”, என்றான் ஹரி.  

ப்ரீத்தி முறைக்கவும், “ஓகே ஹனி வாபஸ், ப்ரீத்தி”, என்று திருத்தினான்.

பின்பு ப்ரீத்தி வண்டியை எடுக்க, அவளின் பின் அமர்ந்தான். ப்ரீத்தி வண்டியை சென்னை ட்ராஃபிக்கிலும் நன்றாக ஓட்டினாள்.

“காஃபி கேட்டேனே”, என்றான் மெதுவாக, “குடிச்சா பரவாயில்லை, ஐ அம் டயர்ட்”, என்றான் மனதை மறையாது.

பின்பு ப்ரீத்தி வழியில் இருந்த காபி ஷாப்பில் நிறுத்த, அவளோடு சென்று காபி சொன்னான்……

“உனக்கு என்ன சொல்லட்டும்”,

“நான் காஃபி குடிக்க மாட்டேன்”,

“ஹாட் இல்லைன்னா கூல் காபி, கேப்பிச்சினோ”,

“நோ, கேஃப்பைன் எடுக்க மாட்டேன்….”,

“ஓஹ், அப்போ எதுக்கு வந்தோம், போகலாமா”,  

“சொல்லிட்டோம்ல, குடிச்சிடுங்க, நான் இருக்கேன், ஒன்னும் பிரச்சனையில்லை”, என்று சொல்லி அமர்ந்திருந்தாள்.

ஹரி காஃபியை குடித்துக் கொண்டிருக்க, பார்வையை சுற்ற விட்டுக் கொண்டிருந்தாள் ப்ரீத்தி. ஆனால் ஹரி பார்வையை அகற்றவேயில்லை அவளை மட்டுமே பார்த்துக் கொண்டு காஃபியை வெகுவாக ரசித்து குடித்துக் கொண்டிருந்தான்.

அப்போது பக்கவாட்டில் அமர்ந்து காபி குடித்துக் கொண்டிருந்த இளவயது பையன்கள் இருவர்…… அவர்களுக்கு எதிரில் அமர்ந்து காபி குடித்துக் கொண்டிருந்த பெண்கள் இருவரை, அவர்களுக்கு தெரியாமல் செல்லில் போட்டோ எடுத்துக் கொண்டிருக்க, அது ப்ரீத்தியின் கண்களுக்கு பட்டது.

சட்டென்று அவளின் முகம் கோபத்தை பூச, ப்ரீத்தியையே பார்த்து கொண்டிருந்த ஹரியின் கண்களுக்கு அது படவும், “என்ன?”, என்றான்.

நடப்பதை ப்ரீத்தி காட்டவும், ஹரியின் முகமும் கோபத்தை பூசியது. ப்ரீத்தி எழப் போக, “உட்காரு”, என்பது போல சைகை செய்தவன், எழுந்து சென்று அந்த பையன்களின் கையில் இருந்த செல்லை பிடிங்கினான்.

அதை எதிர்பார்க்காத அந்த பையன்கள் அதிர்ந்து எழ, “என்னடா பண்றீங்க”, என்றான்.

“ஒன்னுமில்லை”, என்று அவர்கள் பதட்டப்பட, தரையில் அந்த செல் போனை வேகமாக போட்டு உடைத்தான்.

அதிலிருந்து தெரித்த மெமரி கார்டை ப்ரீத்தி எடுத்துக் கொண்டாள்.

பார்த்துக் கொண்டிருந்த ப்ரீத்திக்கு நிம்மதியாக இருந்தது. என்னவோ ஹரியின் புறம் மனம் சென்று கொண்டே இருந்தாலும், அவனைக் கோவையில் பார்த்த போது தங்கையிடம் ஒருவன் தவறாக நடந்தும் அவனை ஒன்றும்செய்யமல் விட்டது ப்ரீத்திக்கு பிடிக்கவேயில்லை.

அது ஒரு ஓரம் மனதில் உறுத்திக்கொண்டே தான் இருந்தது. அந்த பையன்களை வார்ன் செய்து ஹரி வந்த போது எதுவும் பேசாமல் அவனுடன் நடந்தவள், வெளியே வந்து வண்டி எடுத்த போது,

“உங்க சிஸ்டர் கிட்ட ஒருத்தன் மிஸ்பிகேவ் பண்ண போது அவனை நீங்க எதுவுமே பண்ணலை”, என்று கேட்டாள். 

ஹரி அவளை பார்க்க, “எனக்கு உங்களோட அந்த ஆட்டிட்யுட் பிடிக்கவேயில்லை”, என்றாள்.

அதற்கு பதில் சொல்ல ஹரியால் முடியும் என்றாலும், பழையக் கசப்பான நினைவுகளை கொண்டு வர ஹரிக்கு விருப்பமில்லை. புன்னகைத்து அமைதியாகவே இருந்தான்.  

ஏதாவது சொல்லுவான் என்று நினைத்த ப்ரீத்தி அவன் பதில் சொல்லாததை ஒரு முக்கியமான விஷயமாக பார்க்க…. ஹரி அலட்டிக் கொள்ளவேயில்லை.

“போகலாமா”, என்று ஹரி கேட்கவும்,

“நான் கேட்டதுக்கு நீங்க பதில் சொல்லவேயில்லை”,

“அப்போ பதில் சொல்ல விருப்பமில்லைன்னு அர்த்தம்”, என்றான் பளிச்சென்று.

“என்னடா திமிரா எந்த பேச்சுமே காணோமேன்னு பார்த்தேன்”, என்று ப்ரீத்தி சொல்லவும்,

“தேங்க்யூ ஃபார் தி காம்ப்ளிமென்ட்”, என்றான் சற்று தலை குனிந்து.

எரிச்சலான ப்ரீத்தி, “அப்படியே இந்த தலையில குட்டனும் போல தோணுது”, என்று கடுப்பாக சொல்லவும்,

“ஐயோ, நான் சீப்பு எடுத்துட்டு வரலை, என் ஹேர் ஸ்டைல் கலைஞ்சிடும்”, என்றான் பாவம் போல.

“ஐயோ, என் மொக்கையே பரவாயில்ல போலவே”, என்றாள்.

ஹரி சிரிக்கவும்,

ப்ரீத்திக்கு இன்னமும் நம்பிக்கையே இல்லை, அவன் தன் பின்னால் சுற்றுகிறானா என்று. அமைதியாக டியோவை கிளப்ப, ஹரியும் மேலே பேசாமல் அவளின் பின் அமர்ந்தான்.

பதினைந்து நிமிட பயணம், குளிர் காற்று முகத்தில் பட பட, “லைட்டா குளிருது, உன்னை பிடிச்சிக்கட்டா”, என்று ஹரி கேட்கவும்,

“ஏதாவது வேண்டுதலா, இப்படியே பேசி என்னை டென்ஷன் பண்ணனும்னு”, என்றாள் அமைதியாக ப்ரீத்தி.

ஹரிக்கு புன்னகை மலர, “ஓகே பேசலை”, என்று உடனே விட்டுக் கொடுத்தான்.

வீடு வரும் வரைக்கும் பிறகு பேச்சுக்கள் இல்லை. வீடு வந்ததும் ஹரி இறங்க…..

“வாங்களேன் வீட்டுக்கு, அம்மாகிட்ட இன்ட்ரொடுயுஸ் பண்றேன்”,

“இன்னைக்கு வேண்டாம், இன்னொரு நாளைக்கு, எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு”, என்று சொல்லிச் சென்று விட்டான்.

ப்ரீத்திக்கு அவனின் நடவடிக்கைகள் எல்லாம் பார்த்து மிகவும் குழப்பமாக இருந்தது. தன்னிடம் மிகவும் உரிமை எடுத்துக் கொள்கிறான்.

என்ன எண்ணத்தில் இருக்கிறான் என்று யோசனையோடே படியேறினாள்.

வீடு பூட்டியிருந்தது….. எங்கே போயிருப்பார்கள் என்று தெரியாமல் மொபைல் பார்க்க, அது சார்ஜ் இல்லாமல் ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருந்தது.

கீழ் வீட்டுக்காரர்களிடம் கேட்கலாம் என்றால் அவர்கள் வீடும் பூட்டி இருந்தது.

தனிமை எப்போதும் ப்ரீத்திக்கு பிடிக்காத ஒன்று, அவள் வீடு வரும் போது எப்போதும் யாராவது இருக்க வேண்டும். 

“ப்ச்”, என்று தன்னையே நொந்து கொண்டு பால்கனியில் லைட் போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தாள். அரை மணிநேரம் ஆகியும் வராததால் என்னவோ தெரியவில்லையே, இப்படி சொல்லாமல் போனதே இல்லையே என்று கவலையாக இருந்தது.

இவள் பால்கனியில் அமர்ந்திருந்தை நிதின் முன்பே பார்த்திருந்தான். சிறிது நேரம் கழித்து மீண்டும் பார்த்தவன், “இங்க ஏன் உட்கார்ந்து இருக்க”,  என்று அவனின் வீட்டில் இருந்தபடியே கேட்டான்.

“வீடு பூட்டியிருக்கு, போன்ல சார்ஜ் இல்லை, எங்க போயிருக்காங்க தெரியலை”,

உள்ளே சென்று லேபில் வேலை செய்துக் கொண்டிருந்த ஹரியிடம் கூறினான். ஹரி வெளியே வரவேயில்லை, அதனால் அவனுக்கு தெரியவில்லை.

வெளியே வந்தவன், “தனியா உட்கார்ந்து என்ன பண்ற, இங்க வரவேண்டியது தானே, இல்லை எங்களை கூப்பிட்டு இருக்கலாம் தானே”,  என்று கடிந்து கொண்டு, “எங்க போன்ல இருந்து பேசு”, என்று சொல்லவும், அவள் வீட்டு மாடிப்படிக்கு வந்து கை நீட்ட ஹரி போனை கொடுத்தான்.

அம்மாவின் போனிற்கு அழைத்தாள். எடுத்தது ரகு, “எங்கடா இருக்கீங்க”, என்று ப்ரீத்தி கேட்கவும்,

“அம்மாக்கு உடம்பு சரியில்லை ப்ரீத்தி, ஹாஸ்பிடல் வந்தோம், இங்க லேட் ஆகுது, ஸ்கேன் எடுக்க சொல்லியிருக்காங்க, உனக்கு போன் பண்ணினோம், ஸ்விட்ச் ஆஃப், கீழ சாவி குடுக்க யாரும் இல்லை”, என்று சொல்லவும்.

ஏற்கனவே காலியில் இருந்து அம்மா வயிறு வலி சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. மாலை கேட்ட போது பரவாயில்லை என்று தானே சொன்னனர்கள்.

“எந்த ஹாஸ்பிடல்?”, என்று அவள் கேட்டு, “நான் வர்றேன்”, என்று மறுபடியும் கிளம்பவும்…..

“என்ன”, என்று விவரம் கேட்ட ஹரி, “இரு, நான் வர்றேன்”, என்று கூட கிளம்பினான்.

ப்ரீத்தி அவளின் டூ வீலர் எடுக்கவும், “வேண்டாம், என்னோட வா, இப்போ தானே நீ ட்ரைவ் பண்ணி வந்த”, என்று அவளை அழைத்துக் கொண்டு கிளம்பினான். 

சற்று தூரம் ஹாஸ்பிடல், சென்று உள்ளே அவர்களை தேடவும், ஸ்கேன் எடுக்கும் இடத்தின் வாசலில் ரகு அமர்ந்திருந்தான் கவலையாக.

“நீ ப்ராக்டிஸ் போனதும் அம்மாக்கு ரொம்ப வயிறு வலி ப்ரீத்தி, உனக்கு போன் பண்ணினா ஸ்விட்ச் ஆஃப், அம்மா தான் உடனே ஹாஸ்பிடல் போகலாம்னு சொன்னாங்க, நானும் அம்மாவும் வந்தோம்”, என்று ரகு விளக்கம் கொடுத்தான்.  

“என்ன சொல்றாங்க”,

“தெரியலை ப்ரீத்தி, இன்னும் ஒன்னும் சொல்லலை”,

“அப்பாக்கு போன் பண்ணலாமா”, என்று ப்ரீத்தி சொல்ல,

“வேண்டாம்”, என்று சொன்னது ஹரி, ப்ரீத்தி அவனை பார்க்க, “என்ன ஏதுன்னு தெரியாம எதுக்கு அவரை டென்ஷன் பண்ற ப்ரீத்தி. ஒன்னும் இருக்காது, அவசரப்படாத, தேவைன்னா கால் பண்ணலாம்”, என்றான்.

ரகுவிற்கும் அதே சரி என்று தோன்ற, “எஸ் ப்ரீத்தி, அப்பா ரொம்ப டென்ஷன் ஆவார், வேண்டாம்”, என்றான்.

ப்ரீத்தியின் முகத்தில் கவலை, அதே சமயம் கோபம் கூட…..

கவலை சரி, கோபம் எதற்கு என்று ஹரிக்கு புரியவில்லை…..

மாலினி வருவதற்காக காத்திருக்க, அரை மணிநேரம் கழித்து வந்தவர், அப்போதும் வலியில் அமர்ந்துவிட்டார்.

சிறிது நேரத்திலேயே அது கிட்னி ஸ்டோன் என்று கண்டுபிடிக்கப்பட்டது. அவரை பார்த்த டாக்டர், “ரொம்ப வலியிருந்தா அட்மிட் ஆகிடுங்க, கொஞ்சம் ட்ரிப்ஸ்ல மருந்து ஏத்தினா வலி குறையும். அதுக்கு அப்புறம் என்ன பண்றதுன்னு பார்க்கலாம்”, என்று சொன்னார்.

அட்மிஷன் என்றதும் ப்ரீத்தியும் ரகுவும் பயந்து விட்டனர். அவர்கள் இருவரும் பயப்படுவதை பார்த்து மாலினி, “இல்லை டாக்டர், நீங்க பெயின் கில்லர் குடுங்க, நான் வீட்டுக்குப் போறேன்”, என்று சொன்னார்.

சொல்லும் போதே அவரின் முகத்தில் அத்தனை வலி…..

“நீங்க டாக்டர் என்ன சொல்றாங்களோ அதை செய்ங்க ஆன்ட்டி, வலி குறையணும்”, என்று ஹரி சொல்லவும் தான், யார் இவன் என்பது போல மாலினி அவனை கவனித்தார். அதுவரை இருந்த வலியில் ஒன்றும் தெரியவில்லை.

“என் ஃபிரண்ட் தான்மா, நம்ம பக்கத்து வீட்ல இருக்காங்க, அன்னைக்கு காட்டினேனே, இப்போ கூட துணைக்கு வந்தாங்க”, என்று ப்ரீத்தி சொல்லவும்,

மணி அப்போதே ஒன்பது……

ஹரியின் மரியாதையான தோற்றமும் அவரை கவர,

“இவங்க பயப்படறாங்க”, என்று பிள்ளைகளை காட்ட,

“நான் இருக்கேன், நான் பார்த்துக்கறேன், நீங்க டாக்டர் என்ன சொல்றாங்களோ செய்ங்க, டோன்ட் டேக் ரிஸ்க்”, என்று ஹரி சொன்னான்.

“சொல்லு ப்ரீத்தி”, என்று ப்ரீத்தியிடமும் சொல்ல,

“எஸ் மா, டாக்டர் சொல்றபடி செய்யலாம்”, என்றாள்.

பிறகு மாலினி அப்போதே அட்மிட் ஆக, ரகுவை துணைக்கு நிறுத்தி, ப்ரீத்தியை வீட்டிற்கு அழைத்து வந்து, அவர்களுக்கு தேவையானதை எடுத்து போய் கொடுத்து, பின்பு ப்ரீத்தியை ரகுவை சாப்பிட வைத்து, ப்ரீத்தியை அம்மாவுடன் விட்டு, ரகுவை அழைத்து வந்தான்.

நேரம் பதினோன்றை தாண்டியது. ஹரியும் நிதினும் ரகுவை அவர்களுடனே தங்க வைத்துக் கொண்டனர்.

அதன் பிறகு தான் ஹரிக்கு யோசிக்க நேரம் கிடைக்க, யோசனையில் வந்தவள் ப்ரீத்தி தான். ஏனோ ப்ரீத்தி சரியில்லை, ஏதோ கோபமாக இருப்பது போலவே ஹரிக்கு தோன்றியது.

அவளை வீடு அழைத்து வந்த போது கேட்கவும் செய்தான்.

அதற்கு பதில் சொல்லாமல், “போகலாமா”, என்று ப்ரீத்தி சொல்ல,

“நான் கேட்டதுக்கு நீ பதில் சொல்லலையே”,

“அப்போ பதில் சொல்ல விருப்பமில்லைன்னு அர்த்தம்”, என்று அவன் சொன்னது போலவே பளிச்சென்று சொன்னாள்.

இந்த பெண்ணிற்கு மிகுந்த பிடிவாதம் என்று அவளை முதல் முறை கோவையில் பார்த்த போது தோன்றியது, இப்போது ஹரிக்கு தோன்றியது. கூடவே சிறு விஷயமும் இவள் மறப்பது இல்லை. அவன் சொன்னது போல அன்றே சொல்லியது மிகுந்த ஆச்சர்யமாக இருந்தது.

“இது என்ன டிட் ஃபார் டேட்டா”,

“நீங்க எனக்கு பதில் சொல்லியிருந்தா மே பீ நானும் சொல்லியிருப்பேன். அப்போ கூட சுயூர் கிடையாது. நீங்க சொல்லாத போது நான் ஏன் சொல்லணும்”, என்று சொல்லி முன் செல்ல….

இவளை ஹேண்ட்ல் செய்வது மிகவும் கடினம் என்று ஹரிக்கு தோன்றியது.

ஆனாலும் அவள் பின் செல்ல தான் தோன்றியது. இப்போது மனதில் அதை அசை போட்டபடி அமர்ந்திருந்தான். முகத்தில் பெரிதாக ப்ரீத்தியை நினைத்துப் புன்னகை.

Advertisement